You Are Here: Home » Featured, Happenings » மரபணு பாதிப்பு குழந்தைகள் மறுவாழ்வு அமைப்பின் துவக்க விழாவில் ரஜினி! நெகிழ்ச்சியான சில தருணங்கள்! Excl.Pics!!

‘சிஸ்டினாசிஸ்’ எனப்படும் மரபணு குறைப்பாடு சம்பந்தப்பட்ட நோய்க்கான மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான இந்தியப் பிரிவு ஐ.ஐ.டி. இயக்குனர் டாக்டர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலையில் நேற்று சென்னையில் துவக்கப்பட்டது. பிரபல சிறுநீரகவியல் மருத்துவர் டாக்டர் ராஜன் ராமச்சந்திரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

இந்த குறைப்பாடு உள்ள குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதே இந்த பிரிவின் நோக்கமாகும். மேலும் இந்த சிகிச்சைக்காக தேவைப்படும் மிக காஸ்ட்லியான ‘சிஸ்டியாமைன்’ எனப்படும் மருந்தையும் இருக்குமதி செய்து இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கவும் இந்த பிரிவி முயற்சிகளை மேற்கொள்ளும்.

‘சிஸ்டினாசிஸ்’ எனப்படும் இந்த நோயை கண்டறிவது மருத்துவர்களுக்கு மிகக் கடினமான விஷயமாகும் என்று கூறுகிறார் டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்.

இந்த நோய் தாக்கும்போது குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். பின்னர் கண் பார்வை மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படும்.

தற்போதைக்கு தமிழகத்தில் நான்கு குழந்தைகளும் ஆந்திரத்தில் ஒரு குழந்தையம் மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு குழந்தையும் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

உலகம் முழுதும் இந்த நோயால் சுமார் 2000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கெல்லாம் உதவவும், மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கவும் பல்வேறு அமைப்புக்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அது போல அமைப்புக்கள் எதுவும் இல்லை. அந்த குறையை போக்க, Sapiens Health Foundation என்ற தன்னார்வ அமைப்பு முன்வந்துள்ளது. இதற்காக CYSTINOSIS CHAPTER OF INDIA என்ற தனிப் பிரிவை மேற்படி அமைப்பு துவக்கியுள்ளது.

இப்போ உன்கிட்டே யாரு கைகொடுத்தாங்க தெரியுமா?

முன்னதாக சூப்பர் ஸ்டார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல நெகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெற்றன. சஞ்சய் என்றார் 9 வயது குழந்தைக்கு சூப்பர் ஸ்டார் கைகொடுத்தபோது, தன்னிடம் கைகொடுப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது அந்தக் குழந்தைக்கு தெரியாது. அந்த குழந்தயின் அம்மா சுஜாதா என்பவர், அவனிடம், “இப்போ உன்கிட்டே யாரு கைகொடுத்தாங்க தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கிள்!” என்று எடுத்துக்கூறிய போது சஞ்சய் உற்சாகத்தின் விளிம்பிற்கே சென்றான். “ரஜினியை அவன் பல முறை திரையில் பார்த்திருக்கிறான். பரவசப்பட்டிருக்கிறான். தொலைக்காட்சிகளில் கூட பார்த்திருக்கிறான். ஆனால், மேக்கப் இன்றி அவரது யதார்த்தமான தோற்றத்துடன் அவரை நேரில் பார்த்ததில்லை. தற்போது அது நிறைவேறியது மகிழ்ச்சியளிக்கிறது.” என்கிறார்.

ரஜினியிடம் பெயரை எழுதிக்காட்டி சந்தோஷப்பட்ட சிறுவன்!

சிவகங்கையில் இருந்து வந்திருந்த மற்றொரு குழந்தை தனது பெயரை எழுதி ரஜினி அவர்களிடம் காண்பித்து காண்பித்து சந்தோஷப்பட்டது. காரனமில்லாமில்லை. வயது 10 ஐ எட்டிவிட்டாலும் சில மாதங்களுக்கு முன்புவரை அக்குழந்தையால் தனது சொந்தக் கைகளில் எழுதுவது என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது.

வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் அக்குழந்தைகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் சிறிது நேரத்தை செலவழிக்க முடிந்ததில் அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவர்களை விட ரஜினிக்கு அதிக மகிழ்ச்சி + நெகிழ்ச்சி!

————————————————————————————-
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து சூப்பர் ஸ்டார் நலமுடன் தாயகம் திரும்பியதை கொண்டாடும் வகையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ‘Guild of Service - Home for Differently Abled Children’ இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவளித்து, அவர்களுடன் நேரத்தை செலவிட்டோம்.

அங்கு, இருந்த ஒரு மாணவியும் ஒரு வகையில் மேற்படி மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் தான். சூப்பர் ஸ்டாரைப் பற்றி அனேக விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கும் இந்த மாணவியின் பெயர் முருகலக்ஷ்மி (வயது 30).

Full Article @ http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11965
————————————————————————————-

———————————————————————————————————

An Appeal

To spread the message of Early Disease Programme, to every nook and corner of the Indian
population and thereafter world population, requires enormous support of organisations and financial big wigs. This will also include powerful media barons. The Foundation welcomes support of any kind. Cheque/DD be issued in name of “SAPIENS HEALTH FOUNDATION”.

http://www.dialysisindia.com/

http://www.sugarbp.org

—————————————————————————————————

[END]

முருகலக்ஷ்மி

14 Responses to “மரபணு பாதிப்பு குழந்தைகள் மறுவாழ்வு அமைப்பின் துவக்க விழாவில் ரஜினி! நெகிழ்ச்சியான சில தருணங்கள்! Excl.Pics!!”

 1. Sridhar Sridhar says:

  உண்மை - கண்கள் கலைங்கியது. தலைவா யு ஆர் தி பெஸ்ட்.

 2. sathish sathish says:

  தலைவா ..வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன்

 3. Heart touching. Thalaivar ithu ponra nigalchikalil athigam kalanthu kolla vendum.

 4. Mohamedamhar Mohamedamhar says:

  குழந்தைகளின் சூப்பர்

  ஸ்டார்

  கோடானகோடி மக்களின்

  தலைவர் :-)

  The most loved star by the kids,

  The Ruler of the lovely hearts :-

 5. ramasamy ramasamy says:

  Thalaiva

  You are our inspiration.I cant express..

  Rajini the lesson for all youngsters..We all should follow rajinis way showing humbleness and kindness to the mankind…

  Now i feel proud to be rajini fan…

  Thalaiva nee valga

 6. Sankaranarayanan Sankaranarayanan says:

  நல்ல விஷயத்திற்கு நம் தலைவர் எப்போதும் உடன் இருப்பார். அதனை நம் சுந்தர்ஜி அவர்களும் நமக்கு உடனுக்கு உடன் தெரிவிப்பார்.

  எல்லா குழந்தைகளும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவனை நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

 7. m nagendra rao m nagendra rao says:

  தலைவா வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன்!

 8. arivalagan arivalagan says:

  salute thalaivaaaaaa.we know u r really like tamil peoples.JAI HIND.

 9. RAJA RAJA says:

  இனி ஒரு குழந்தை கூட இந்த பூமியில் இந்த நோயால் பிறக்க வேண்டாம் இறைவா

 10. Anonymous says:

  இந்த மாதிரி நிகழ்சிகளில் தலைவரை பார்க்கும் போது மனதிற்க்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது!! தலைவர் வர வர ஸ்டைல் கூடி கொண்டே போகிறது :) என்ன ஒரு அழகு ஸ்டைல் சிரிப்பு!!! பிள்ளை உள்ளம் கொண்ட தலைவர் பிள்ளைகளுடன் உள்ளதை பார்க்கும் போது ஆனந்தமாக உள்ளது!!!

 11. dr suneel dr suneel says:

  கனக்கிறது ஜி, இவ்வகையான அபூர்வ வியாதிகளுக்கு பொதுவாக மருந்துகள் கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்கள் முயல்வதில்லை..காரணம் சந்தை இல்லை என்பதே, அதனால் தான் லட்ச கணக்காகிறது..வாழ்வின் அர்த்தமின்மை இவர்களை போன்ற குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் தோன்றி மனதை வாட்டும்..

 12. Lactif Lactif says:

  நம்மால் முடிந்த உதவிகளை இவர்குளுக்கு செய்வோம் . பணத்தாலும் பொருளாலும் .

 13. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  தலைவா… வார்த்தைகள் இல்லை … வணங்குகின்றோம்…

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 14. arul dinesh arul dinesh says:

  நல்லவனுக்கு நல்லவனே வாழ்க பல்லாண்டு

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates