









You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 68: கோச்சடையானில் முப்பது வயது இளம் ரஜினி - டெக்னிகல் டீம் மும்முரம் & நண்பரை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த சூப்பர் ஸ்டார்!
1) சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்படும் ஐ.பி.எஸ். அதிகாரி!
பீகாரை சேர்ந்த சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் நடிகராகி இருக்கிறார். மே 10 ஆம் தேதி அவர் நடித்த படம் ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த அதிகாரி.
ரவீந்திரன் சங்கரன் என்ற அந்த அதிகாரி நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கோவையில் கல்வி பயின்ற அவர், கடந்த 16 ஆண்டுகளாக பீகாரில் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான இவர், கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் செயலாளராக வலம் வந்தவர். “ரஜினி மீது நான் பேரன்பு வைத்திருக்கிறேன். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிடவேண்டும் என்பதை கனவாக கொண்டிருக்கிறேன்!” என்கிறார் இந்த ஐ.பி.எஸ்.
கோவையில் பீளமேடு பகுதியை சேர்ந்த இவர், அங்குள்ள புகழ் பெற்ற பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்தவர். “கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே நாடகங்களில் ஈடுபாடு உண்டு எனக்கு. கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் தோன்றி நடித்திருக்கிறேன். நக்ஸலைட்டுகளுடன் தீவிரமாக போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் கூட எனக்கு மேடை நாடகம் மற்றும் நடிப்பு மீதான ஆர்வம் குறையவில்லை. அது தொடர்பான பட்டறைகளில் கலந்துகொண்டுள்ளேன்.” என்று கூறுகிறார் ரவீந்திரன்.
தற்போது பீகாரில் டி.ஐ.ஜி. அந்தஸ்த்தில் இருக்கும் இவர், ஒரு டீ.வி.நிகழ்ச்சியில் தோன்றியபோது தயாரிப்பாளர் ஒருவர் கண்ணில் பட, அப்புறம் என்ன? DEVARA PE MANVA BOLE என்ற போஜ்புரி படத்தில் ஹீரோவாகிவிட்டார். படத்தில் தூள் பறக்கும் ஆக்க்ஷன் காட்சிகளும் டூயட் காட்சிகளும் உண்டாம்.
(‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் பத்தி என்ன நினைக்கிறீங்க ரவீந்திரன் சார்?)
2) நடிக்க வந்திருக்கும் நடிப்பு பல்கலைக்கழக குடும்ப உறுப்பினர் - வாழ்த்தை பதிவு செய்த சூப்பர் ஸ்டார்!
பொதுவாகவே படங்களுக்கான ப்ரோமோ வீடியோவில் ரஜினி அத்துனை சுலபத்தில் தலையை காட்டமாட்டார். அப்படியே தலையை காட்டினாலும் பேசமாட்டார். ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவில் ரஜினி தோன்றியது மட்டுமல்லாமல் உற்சாகமாக பேசியும் வேறு இருக்கிறார். (இது ஜூ.வி. செய்திங்க!)
நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம், பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது இப்படம். பிரபு சாலாமனின் முந்தைய படமான ‘மைனா’ பிரமாதமாக ஓடியதால், ‘கும்கி’க்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் திலகத்தின் வீட்டு வாரிசு வேறு நடித்திருப்பதால், படம் குறித்த கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், தனது மகனை சூப்பர் ஸ்டாரிடம் அறிமுகப்படுத்தி அவரது ஆசி பெற வைத்து, அவரது ஆசிகளை பாராட்டுக்களை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார் பிரபு. பொதுவாக இது போன்ற ப்ரோமொக்களை தவிர்த்துவிடும் ரஜினி, சிவாஜி குடுமபத்தின்ர் மீது தாம் வைத்திருக்கும் மதிப்பு & மரியாதையின் காரணமாகவே சூப்பர் ஸ்டார் இதை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்த்தக்கது. ‘கும்கி’ படம் ரிலீசுக்கு தயாரானவுடன் ப்ரோமோ வீடியோ வெளியிடப்படும் என்று தெரிகிறது. ரஜினி தவிர கமல் மற்றும் வேறு சில முக்கிய நடிகர்களின் வாழ்த்துக்களையும் பதிவு செய்திருக்கிறாராம் பிரபு.
[கும்கி என்றால் என்ன? காட்டு யானைகளை அடக்க வல்ல, பயிற்சி பெற்ற யானைகளுக்கு கும்கி என்று பெயர்.]
(சூப்பர் ஸ்டார் என்ன பேசியிருப்பாருன்னு தெரிஞ்சுக்க இப்போவே ஆவலாயிருக்கு!)
3) நண்பரை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி!
இதுவும் சூப்பர் ஸ்டார் பேசிய வீடியோ பற்றிய செய்தி தான்.
பிரபல நடன இயக்குனர் மாஸ்டர் ரகுராம் அவர்களின் பொன் விழா சமீபத்தில் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுக்கவேண்டியும், இல்லையென்றால் அவரது வாழ்த்து செய்தியையாவது வீடியோ பதிவு செய்ய வேண்டியும் ரஜினியை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்தார் ரகுராம். சூப்பர் ஸ்டார் அப்போது ‘கோச்சடையான்’ படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். எனவே ரகுராமிடம் தாம் திருவனந்தபுரம் செல்லும் பரபரப்பில் இருப்பதாகவும் இல்லையெனில் மேற்படி பொன்விழாவுக்கு தான் நிச்சயம் வருவேன் என்றும் கூறிவிட்டு சென்றுவிட்டார் சூப்பர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டார் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், விழாவில் பங்கேற்ற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் விழா சிறப்பாக நடைபெறவேண்டி வாழ்த்துக் கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பியிருந்தார். அதை விழா மேடையில் படித்துக் காட்டும்படியும், அதுவும் தனது குருநாதர் கே.பாலச்சந்தர் தாம் அதை படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் ரஜினி. கே.பாலச்சந்தரும் பலத்த கைதட்டல்களுக்கிடையே அதை படித்துக்காட்டினார்.
பின்னர் அடுத்த சில நாட்களில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு முடிந்து சூப்பர் ஸ்டார் சென்னை திரும்பிவிட இயக்குனர் ரகுராமை போனில் தொடர்புகொண்டு, விழா எப்படி நடந்தது உள்ளிட்ட விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டார். அப்படி பேசும்போது ஜெயா. டீ.வி.யில். மேற்படி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருப்பதை தெரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார்…. “நிகழ்ச்சி தான் டீ.வி.இல இன்னும் டெலிகாஸ்ட் பண்ணலியே. நான் வேற ஷூட்டிங் முடிச்சு வந்துட்டேனே. கூப்பிடுங்க ஜெயா.டீ.வி. வீடியோ டீமை. ரகுராம் சாருக்கு நான் வாழ்த்து சொல்லிடுறேன். அதை ஷூட் பண்ணி வீடியோவாகவே போடட்டும் ப்ரோக்ராம்ல” என்று கூற அடுத்த சில மணித்துளிகளில் ஜெயா.டீ.வி. டீம் ராகவேந்திரா மண்டபம் வந்திறங்க, டான்ஸ் மாஸ்டர் ரகுராமை வாழ்த்தி சூப்பர் ஸ்டார் பேசியது ஷூட் செய்யப்பட்டது. இது அத்துனையும் ரகுராம் அவர்களுக்கு தெரியாமலே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. “மாஸ்டருக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும். தெரியவேண்டாம் அவருக்கு” என்பது சூப்பர் ஸ்டார் யுட்ட கட்டளையாம். கடைசியில் தொலைகாட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது தான், ரகுராம் இதை கண்டாராம். நெகிழ்ச்சியில் ஒரு கணம் அவரது கண்கள் கலங்கிவிட்டதாம். நட்புக்கு அந்தளவு மரியாதை தருபவர் ரஜினி என்று கூறி சிலிர்க்கிறார் ரகுராம்.
(சமீபத்தில் ராஜ். டீ.வி. ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மாஸ்டர் ரகுராம் கூறியது இது!)
[ரகுராம், சூப்பர் ஸ்டாரை வைத்து 'பாக்ய தேவதா' என்ற வங்காளி மொழி படமொன்றை இயக்கியிருக்கிறார். மிதுன் சக்ரவர்த்தி ஹீரோவாக நடித்த அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி வங்காள புரட்சிக் கவிஞராக நடித்திருப்பார். 1995 ஆம் அரசியல் பரபரப்பு மிக்கதொரு காலகட்டத்தில் இப்படம் வெளியானது. இப்படம் டப்பிங் வடிவிலோ அல்ல வீடியோ வடிவிலோ வெளியாகவில்லை. எனவே, நிறைய ரசிகர்கள் இப்படத்தை பார்க்கவில்லை.]
4) ரஜினி குடும்பத்தினருடன் நெருக்கமாகியுள்ள தீபிகா!
சினிமாவில் தான் ரஜினியுடன் தீபிகா டூயட்டெல்லாம் பாடுகிறார். நிஜத்தில் அவரை ‘அப்பா’ என்றே அழைக்கிறார். கோச்சடையானில் படப்பிடிப்பில் பங்கேற்க சமீபத்தில் திருவனந்தபுரம் வந்திருந்த தீபிகாவை படத்தின் இயக்குனர் சௌந்தர்யா நன்றாக கவனித்துக்கொண்டாராம். மேலும், முற்றிலும் வித்தியாசனமான முறையில் நடிக்கவேண்டிய காட்சிகளை, தீபிகாவுக்கு சிரமம் தெரியாமல் மிக மிக அவர் சௌகரியமாக உணரும் வகையில் எடுத்தாராம் சௌந்தர்யா. இதனால் சௌந்தர்யா மீது தீபிகாவுக்கு தனி மதிப்பே வந்துவிட்டதாம்.
முன்னதாக சௌந்தர்யா செய்திருந்த டுவீட்டில், “நண்பர்களே, கோச்சடையான் இரண்டாவது ஷெட்யூலை முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டேன். தீபிகாவுடன் பணிபுரிந்தது அருமையான ஒரு அனுபவம். அவர் ஒரு இனிமையான டார்லிங்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
பதிலுக்கு டுவீட் செய்த தீபிகா, “என்னை மிக மிக சௌகரியமாக நடத்தியமைக்கு நன்றி. நீங்கள் உண்மையில் ஒரு அற்புதமான இயக்குனர். உங்களிடம் பணிபுரிந்தமைக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னது அன்பை சொல்லுங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்று டுவீட் செய்தாராம்.
இதற்க்கு பதிலளித்த சொந்தர்யா, “உங்களை இயக்கியது மிகவும் இனிமையான ஒரு விஷயம். சீக்கிரம் உங்களை மறுபடி சந்திக்கிறேன். அப்பா, அம்மா மற்றும் யூனிடாரிடமிருந்து உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.”
(பார்த்தீங்களா… நம்ம தீப்ஸ் பண்ற மேஜிக்கை?)
5) கோச்சடையானில் முப்பது வயது இளம் ரஜினி - டெக்னிகல் டீம் மும்முரம்!
கோச்சடையானில் சூப்பர் ஸ்டாரின் தோற்றம் மிக சிறப்பான முறையில் அமைய படத்தின் டீம் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
படத்தில் ரஜினி முப்பது வயது குறைந்து முற்றிலும் புதிய பொலிவுடன் காணப்படுவாராம். தன்னுடைய வயது குறைந்து காணப்படுவது போல அவர் இதற்க்கு முன்பு பல படங்களில் தோன்றியிருந்தாலும், கொச்சடையானை பொறுத்தவரை, 30 வயது ரஜினியை கண் முன் நிறுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
இது பற்றி தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுவதாவது : “ரஜினியை வயது குறைந்தவராக காட்டுவதற்காக நாங்கள் அவரது தோற்றத்தை மாற்றுகிறோம் என்று என்றில்லை. நாங்கள் படத்தில் பயன்படுத்தும் PHOTO REALISTIC PERFORMANCE CAPTURING TECHNOLOGY அடிப்படையிலேயே நடிகர்களை இளமையாகவும் கச்சிதமாகவும் காட்டும் தன்மை கொண்டது. இதற்க்கு முன்பு வந்த இது போன்ற மோஷன் காப்ச்சரிங் படங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், இந்திய சினிமாவில் இது இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து தான் என்பதை மட்டும் உறுதியுடன் சொல்வேன்” என்கிறார் முரளி மனோகர்.
(மே 1 அன்னைக்கு கோச்சடையான் ஸ்டில் ஒன்னே ஒன்னு விட்டுருக்ககூடாதா? ஹூம்… எங்க ஏக்கம் உங்களுக்கு எங்கே புரியப்போகுது?)
————————————————————————————————————————
எமனிடம் ஆசிபெற்ற சூப்பர் ஸ்டார்!
எமனிடம் ஆசிபெறவேண்டும் என்றாலோ எமனை பார்க்கவேண்டும் என்றாலோ அதற்கு ஒருவர் முதலில் ‘மேலே’ போனால் தான் உண்டு. ஆனால், சூப்பர் ஸ்டார் தாம் வாழும் காலத்தில் எம தர்மராஜனை பார்த்து அவரது கால்களில் வீழ்ந்து அவனிடமே ஆசிபெற்ற அதிசய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. (அதனால தான் மரணத்திற்கே டாட்டா காட்டிட்டு திரும்பவும் வந்துட்டாரோ நம்மாளு?)
நான் சொல்றது முற்றிலும் உண்மைங்க. உண்மை சம்பவங்க. கொஞ்சம் கூட கலப்படமில்லாத உண்மை செய்திங்க இது!!
சரி… எங்கே நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? தலைவர் எங்கே வெச்சு எம தர்மராஜனை பார்த்தாரு?
விரைவில் - விரிவான - அசத்தலான - ஒரு பதிவிற்கு காத்திருங்கள்……!!
————————————————————————————————————————
[END]
ஐபிஎஸ் அதிகாரி ஆசைபடுவதில் ஒன்றும் பெரிசில்லை!! தலைவருடன் நடிக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு தான்!! எனி வே உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள் சார்!!!
"கும்கி" படம் பெயரே வித்தியாசமாக உள்ளது!! படமும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். தலைவருடன் அளவில்லா பாசம் வைத்திருப்பவர் நம் பிரபு அவர்கள். அவர் மகனுக்கு தலைவருடைய ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்.
"ரகுராம்" மாஸ்டர்கு எனது வாழ்த்துக்கள்!!! தலைவர் சும்மா கலகிட்டார்ல!!! அந்த வீடியோவை மிஸ் செய்து விட்டேனே
எப்படியாவது தேடி பிடித்து பார்க்க வேண்டும்!!!
"தீப்ஸ்" "சௌந்தர்யா" இருவரும் ராணா படத்தின் பிரஸ் மீட் அப்போவே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள் என்று நான் படித்தேன், இப்போது ட்வீட் மூலமாகவே தெரிந்துவிட்டது!!!!
"கோச்சடையான்" தலைவர் தரிசனம் மிக விரைவில்!! கூடிய சீக்கிரம் படத்துடைய 0:58 seconds Teaser ready ஆகிவிட்டது எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் ஆகலாம்!!! காத்திருப்போம்!!!
//எமனிடம் ஆசிபெற்ற சூப்பர் ஸ்டார்!// - ஆவலுடன் காத்துக் கொண்டிருகின்றோம் .. சீக்கிரம் போடுங்க சுந்தர் அண்ணா …
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
சூப்பர் ஸ்டார் சூப்பர் டான்
Waiting to see Thalaivar's animation image.
செய்திகள் அணனத்தும் அருமை ,எமனிடம் ஆசிபெற்ற சூப்பர் ஸ்டார்!தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது …
இவர் புகழில் இமயம்
கண்டாலும் ,
இவர் இதயம் புனிதமே !
உணர்ச்சி வெளிப்பாட்டிலும்
நீயே சூப்பர் ஸ்டார் !
மேடையில் மிடுக்கனாக
நடந்து ,
மேடையில்
என்றுமே புன்முறுவல்
படர்ந்து ,
மேடையில்
இரு கை தூக்கி நன்றி சொல்லி ,
மேடையில்
ஒரு குட்டி கதை சொல்லி ,
மேடையில்
ஒரு கருத்து பரிமாறி ,
மேடையில் பல
பரிமாணங்களை எடுத்து ,
மேடையில் நீ நடிக்காமல் ,
மேடையில் நீ பல
நல்லதை சொல்லி ,
மேடையில்
உண்மையை பேசி ,
மேடையில்
வஞ்சபுகழ்ச்சி அணி சூடாமல்,
மேடையில் யார்
மனதையும் வஞ்சமால் ,
மேடையில்
உணர்ச்சி பொங்கும் ,
சூப்பர் ஸ்டார் - ரஜினி
நீ ஒரு மாமேதையே !…
கும்கி படத்தை காட்டிலும் தலைவர் பேசி இருக்கும் வீடியோ பார்க்க மிக ஆவலாக உள்ளது.
என்ன சுந்தர்ஜி, வர வர தீப்ஸ்க்கு நீங்க போடுற ஸ்டில் பார்த்தா next news படிக்க முடியாது போலயே…!!!!
'பாக்ய தேவதா' படத்தில் தலைவர் கதர் குர்தா, கருப்பு நிற வட்ட கண்ணாடி அணிந்த தோற்றத்தில் (அப்போது தலைவர் சில விழா மேடைகளிலும் அதே தோற்றத்தில் வந்திருப்பார்) அப்போது ஒரு photo பார்த்ததாக நியாபகம்.
பாஸ்,
Whether this movie is completely motion capturing or real life sequence are also there? Please clarify.
————————————————
Movie is completely Motion Capturing Animated movie. But some real life sequences will be there.
- Sundar
hi …konjam mistake first line la …IAS athigarinnu ezhudi irukeenga..heading IPS nnu iirukku …he s not the hero in the movie ..jst got a role in that movie . anyway congrats…here is the poster
.. .http://bhojpuriyacinema.com/first_look/devra-pe-manwa-dole/devra-pe-manwa6.jpg
edharkku 30 vayasu ….thalaivar …moondru mudicchu padathula vandha maathiri vandha inum supera irukkum
..sivaji la ..shankar try panna getup
3D THERINJA NAMMA PASANGA YAARUM ILLAYA INDHA WEBSITE LA …..NAAMALAE CREATE PANNI PODALAM VARAM ORU STILL
************************ THALAIVAR ROCKS ***********************
kochadaiyaan movie 100% complet pannina piaku '' Rana '' movie start pannunga kochadaiyaan movieode atthe tecnolagy use pannalam padathee seekram modikkalam ??? Kochadaiyann latest still / poster release pannuga sir
ரானா …படத்தின் கரு கோச்சடையான் இறுதிகாட்ச்யில் ஆரம்பிக்கும் என்று தோன்றுகிறது
IAS முதல் ஐஸ் கிரீம் விக்ரவங்க என்று எல்லா இடத்தில நிறைஞ்சு இருப்பவர் நம்ம தலைவர்
தலைவர் வாழ்த்து சும்மாவா …