You Are Here: Home » Featured, Role Model » அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

ஜினி அவர்களை பற்றிய செய்திகளை மட்டும் தெரிந்துகொள்வதோடு அல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்களை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும், பயன்பெறவேண்டும் என்பதே எனது குறிக்கோள். வாழ்க்கையில் சோதனைகளை தாண்டி சாதனை படைத்திருக்கும் சாதனையாளர்களை - அதாவது நிஜ வாழ்க்கையில் உள்ள ஹீரோக்களை - தேடி நமது புதிய பயணம் துவங்கியிருக்கிறது. முதலில் திரு.இளங்கோ அவர்களைப் பற்றிய பதிவை படித்தீர்கள்.

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14207

அந்த பதிற்கு கிடைத்த வரவேற்ப்பும் உற்சாகமும் என்னை இது போன்று அடுத்தடுத்த சந்திப்புக்களுக்கு தூண்டியது. ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

இதோ மற்றுமொரு சாதனையாளரை தேடி நமது பயணம்…

பொதுவாக இன்று நம்ப முடியாத சாதனைகள் பலவற்றை படைத்து நம் முன் சாதனையாளர்களாக வலம் வரும் அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் மிகப் பெரிய அவமானத்தை (அல்லது அவமானங்களை) சந்தித்திருப்பார்கள். ஏளனத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்களது சுயமரியாதை உரசிப் பார்க்கப்பட்டிருக்கும். அதன் எதிரொலியாக “நிச்சயம் வாழ்ந்துகாட்டவேண்டும்” என்ற வைராக்கியம் அவர்களுக்குள் எழுந்து அது அவர்களை வழி நடத்தியிருக்கும். இதற்க்கு எவரும் விதி விலக்கல்ல.

இப்போது நாம் பார்க்கப்போகும் சாதனையாளர் ஒருவரும் அப்படித் தான்.

வானமே தாழலாம்… தாழ்வதில்லை தன்மானம்!

கணவன், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய குடும்பம் அது. அது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து, உறவுக்காரர்களின் சூழ்ச்சி மற்றும் தவறான குடும்ப நிர்வாகம் ஆகியவற்றால், ஒரு வேளை சோற்றுக்கே கஷடப்படும் அளவிற்கு பிற்காலத்தில் வந்துவிட்டனர். வசதியே இல்லாம வாழ்ந்துடலாம். ஆனா வசதி வந்துட்டு மறுபடியும் போனா அதை தாங்கிக்க யாராலையும் முடியாது.  மூன்று வேளை சாப்பாடு என்பது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு வேளை தான். அதுவும் பெரும்பாலும் பழைய சோறு மற்றும் கூழ் தான். குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வசதியில்லை. ஆங்காங்கு கிடைத்த நகராட்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடிந்தது.

அந்த குடும்பத்தில் இரண்டாவது வாரிசு அவன்…. கான்வென்ட்டில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தும் கார்பரேஷன் பள்ளி ஒன்றில் தான் 6 வது சேர்க்க முடிந்தது. ஆசையோடு பள்ளிக்கு கிளம்பும் மகனுக்கு சீருடை கூட வாங்கி கொடுக்க வழியில்லாது…. கணவரின் நல்ல வேட்டி ஒன்றை எடுத்து கத்திரித்து, அதில் சட்டை தைத்து தருகிறாள் மனைவி. மகனும் ஆவலோடு பள்ளிக்கு செல்கிறான். இப்படியாக வறுமையின் போராட்டங்களுக்கு நடுவே பள்ளி படிப்பு ஒரு வழியாக முடிகிறது.

கல்வி மீதிருந்த ஆர்வத்தால் அதற்கு பிறகு ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டபடிப்பு சேர்கிறான். படிக்கும் காலத்தில் தங்களது உறவினர் வைத்திருந்த ஹோட்டல் ஒன்றில் மாலை வேளைகளில் பில்போடும் வேலை கிடைத்தது. காலை கல்லூரி. மாலை ஓட்டல் வேலை என்று நகர்ந்தது வாழ்க்கை.

படிப்புக்கிடையே இவர் வேலை பார்த்து வந்த அந்த ஓட்டலில் ‘மீன் குழம்பு’ ரொம்ப பேமஸ். அங்கு பணிபுரிபவர்களுக்கு ஏதாவது ஒரு வேளை தோசையும் மீன் குழம்பும் சாப்பிட தருவது வழக்கம். (இதை STAFF CURRY என்பார்கள்.) இவரது நண்பர்கள் சிலருக்கு அந்த மீன் குழம்பை ருசிக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. இவரிடம் சொல்ல, “ஃபூ… இதென்ன பிரமாதம். நாளைக்கே பார்சல் எடுத்திட்டு வர்றேன்.” என்று சொல்லி,  அடுத்த நாள், தனது பங்கை அங்கு சாப்பிடாமல், அதை பார்சல் கட்டிக்கொண்டு வருகிறார். நண்பர்களும் சப்புக்கொட்டி சாப்பிடுகின்றனர். சிலாகித்து பேசுகின்றனர்.

இவர் பார்சல் கட்டிக்கொண்டு சென்ற விபரத்தை உரிமையாளரிடம் சிலர் போட்டுகொடுத்துவிட  அது ஒரு பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. “நீ எப்படி பார்சல் கட்டிக்கிட்டு போகலாம்?” என்று இவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கின்றனர். “எனக்குன்னு நீங்க சாப்பிட கொடுக்குறதை தான் நான் எடுத்துகிட்டு போனேன். எக்ஸ்ட்ரா எதையும் நான் எடுக்கலே” என்று இவர் சமாதானம் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. விசாரணை கமிஷன் ரேஞ்சுக்கு இவரை நிற்க வைத்து கேள்வி கேட்க, இவருக்கு என்னவோ போலாகிவிடுகிறது.

அத்துடன் அந்த ஹோட்டல் வேலையை உதறிவிட்டு, மறுநாள் வேறொரு ஓட்டலில் சென்று வேலைக்கு சேருகிறார். முந்தைய தினம் தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து தவியாய் தவிக்கிறார். அதுவும் உறவுக்காரங்க ஓட்டல்ல ஏற்பட்ட அவமானம் என்பதால் அவரால் லேசில் மறக்க முடியவில்லை. மனதுக்குள் வைராக்கியம் எழுகிறது. “இதே போல நானும் ஓட்டல் ஆரம்பிச்சு… அதுல வேலை செய்றவங்க தாராளமா நினைச்சதை சாப்பிடுற நிலைமையை ஏற்படுத்துவேன்” என்று சபதம் செய்கிறார். இது நடந்தப்போ அவருக்கு வயது 25.

காலங்கள் உருண்டோடுகின்றன. அன்று தன் பங்கு உணவை பார்சல் கட்டி எடுத்துச் சென்றதால் அவமானப்படுத்தப்பட்ட அவர், இன்று ஒரு மிகப் பெரிய ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர். பல தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில்துறை சக்கரவர்த்தி. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, அவமானங்களை எல்லாம் இறைவன்  இட்ட உரங்களாக கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து, இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்.

MADURAI APPU GROUP OF RESTAURANTS, R C GOLDEN GRANITES, SHRI SABARI BHAVAN, BLITZ BAKERY & CONFECTIONARY, BARBEQUE BISTRO என்று சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆர்.சந்திரசேகர்.

ரூ.850/- மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய இவர் இன்று பல கோடிகளை ஒவ்வொரு மாதமும் அனாயசமாக TURN-OVER செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் கூடவே கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எப்பேற்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்று கூறும் இவரது வரலாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

எப்படி இவற்றை இவர் சாதித்தார்? அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன? உழைத்த விதம் என்ன? பட்ட அவமானங்கள் என்ன? சந்தித்த துரோகங்கள் என்ன? அனைத்தையும் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.

இவரது பேட்டிக்காக, இவரை நான் தொடர்பு கொண்டபோது, செங்கல்பட்டு அருகே உள்ள இவரது கிரானைட் தொழிற்சாலை அலுவலகத்தில் வைத்து சந்திப்பது என முடிவானது. அவருடன் பேசிக்கொண்டே அவரது விலை உயர்ந்த காரில் செங்கல்பட்டு பயணித்தேன்.

பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டே வந்தோம். ஜி.எஸ்.டி. ரோட்டில் கார் பறந்துகொண்டிருந்தது. ஒரு மணி நேரம் பயணத்தை அடுத்து, செங்கல்பட்டில் உள்ள அவரது தொழிற்சாலை அலுவலகத்துக்குள் கார் நுழைந்தது.

நம்முடன் நம் தள வாசகர் நண்பர் சாய் பாலாஜியும் வநதிருந்தார். சந்திப்புக்காக அவரையும் அழைத்து வந்திருந்தேன். அவரது தொழிற்சாலையில் உள்ள முக்கிய அலுவலர்களை அழைத்து நம்மிடம் அறிமுகம் செய்துவைத்தார். தொழிற்சாலையை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரது அறைக்கு திரும்பினோம்.

தயாராக கொண்டு சென்றிருந்த பொக்கேவை அவருக்கு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தேன். “உங்களை போன்ற சாதனையாளர்களை சந்திப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. உங்கள் பொன்னான நேரத்தை எங்கள் தள வாசகர்களுக்காக ஒதுக்கியமைக்கு உங்களுக்கு மிகப் பெரிய நன்றி!” என்று கூறினேன்.

உரையாடல் துவங்கியது…..!

நாம் : “மிக மிக சாதாரணமாக உங்கள் பயணத்தை துவக்கிய நீங்கள் இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜியத்த்க்கு அதிபதி. ஆயிரக்கணக்கானோர் உங்களிடம் வேலை பார்க்கின்றனர். எப்படி இது சாத்தியமாயிற்று? இதற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே? எப்படி?”

திரு.சந்திரசேகர் : “வாழ்க்கையில நம்மளை ஜெயிக்க வைக்கிறதே நம்ம எதிரிகள் தான் சுந்தர். நான் இன்னைக்கு இந்தளவு வந்திருக்கேன்னா அதுக்கு காரணம் என் எதிரிகள் தான். எதிரி என்று ஒருத்தன் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கையே இல்லை அவுட்னு சொல்லிடலாம். எனக்கு அப்படி நிறைய எதிரிகள் உண்டு…. எப்படி இருக்காங்க… ஏன் இருக்காங்க… ஏன் உருவாகுறாங்க இதெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஐயப்பனோட பக்தன். அதுனால நினைச்சுக்குவேன்… “ஐயப்பா…. நான் ஓடனும் என்பதாலேயே நீ யாரையோ விட்டு என்னை துரத்துறே” அப்படின்னு. அவன் அப்படி எதிரிகளை விட்டு என்னை துரத்தலேன்னா நான் இந்த அளவு இன்னைக்கு மேலே வந்திருக்க மாட்டேன். கீழேயே நின்னுகிட்டிருப்பேன். ‘நான் ஓடனும்…. ஒரே இடத்துல நின்னுவிடக்கூடாது’ என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் ஆண்டவன் என்னை யாரையோ விட்டு துரத்துறான்னு நினைக்கிறேன்.” — திரு.சந்திரசேகர் மேற்படி வார்த்தைகளை நம்மிடம் கூறியபோது நம்மையறியாமல் நாம் எழுந்து நின்று கைதட்டினோம்.

வாழ்க்கையில நம்மளை ஜெயிக்க வைக்கிறதே நம்ம எதிரிகள் தான் சுந்தர். நான் இன்னைக்கு இந்தளவு வந்திருக்கேன்னா அதுக்கு காரணம் என் எதிரிகள் தான். எதிரி என்று ஒருத்தன் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கையே இல்லை அவுட்னு சொல்லிடலாம். எனக்கு அப்படி நிறைய எதிரிகள் உண்டு…. எப்படி இருக்காங்க… ஏன் இருக்காங்க… ஏன் உருவாகுறாங்க இதெல்லாம் எனக்கு தெரியாது.

(அவர் சொன்னது உண்மையிலும் உண்மை. அனுபவப் பூர்வமான உண்மை. என்னை ஏன் ஆண்டவன் சிலரை விட்டு துரத்தோ துரத்துன்னு துரத்தினான்னு இப்போ எனக்கு புரிஞ்சதுங்க. அவன் அப்படி துரத்தலேன்னா நான் எங்கேயோ  நின்னிருப்பேன். ஒரு கிணத்து தவளையா தான் என்னை நீங்க இப்போ பார்த்துட்டு இருப்பீங்க. இப்படி ஒரு மிகப் பெரிய மனிதர் ஒருத்தர் கூட அவரோட மெர்சிடிஸ் பென்ஸ்ல பேசிக்கிட்டே போற வாய்ப்பு கிடைச்சிருக்குமா? இல்லே அதை பத்தி தான் நான் யோசிச்சாவது பார்த்திருப்பேனா?)

உழைப்பு, விதி, தெய்வம், விடாமுயற்சி, சாதனை, பணம், அந்தஸ்து ….. இப்படி பல விஷயங்களை திரு.சந்திரசேகர் நம்முடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

ஒவ்வொன்றும் கிடைப்பதர்க்கரிய அனுபவ முத்துக்கள். நம் எல்லோர் வாழ்க்கையிலும் பொருந்தக்கூடியது. விரைவில்… திரு.ஆர்.சந்திரசேகர் அவர்களுடனான நமது சந்திப்பு பற்றிய விரிவான பதிவை எதிர்பாருங்கள்….

அது சரி… எனக்கு எப்படி இவரோட அறிமுகம் கிடைச்சது ? எப்படி சாத்தியமாச்சு? என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பாகத்துல சொல்கிறேன். அதுல உங்களுக்கு மிகப் பெரிய படிப்பினையே அடங்கியிருக்கு!

—————————————————————————-
சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி…

உழைப்பால் உயர்ந்த நம் சூப்பர் ஸ்டார் பற்றி இந்த சாதனையாளர் கூறுவது என்ன? என்பதை பற்றியும் தெரிஞ்சிக்க போறீங்க. அவருடன் திரைப்படங்களில் நடித்தவர்கள் கூறும் சில வார்த்தைகளுக்கும், இவரைப் போன்ற அவருடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லாத ரியல் ஹீரோக்கள் கூறும் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்குங்க. இவர் சூப்பர் ஸ்டார் பத்தி சொல்றதை கேளுங்க. ஆச்சரியப்படுவீங்க!
—————————————————————————-
….. to be continued

20 Responses to “அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!”

 1. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

  சுந்தர், இது போன்ற சந்திப்புகள் பேட்டிகள், அதன் மூலம் கிடைக்கும் நல்ல பயனுள்ள விஷயங்கள் மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லோரும் பயன் பெறவேண்டும் என்ற உங்களுடைய நல்லெண்ணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

 2. P.Sankaranarayanan P.Sankaranarayanan says:

  ஆரம்பமே அசத்தல். ஆவலுடன் காத்துகொண்டிருகிறோம்.

  நன்றி சுந்தர்ஜி.

 3. Somesh Somesh says:

  Sundarji.. Nowadays we are seeing very unexpected and pleasant surprise presentations from you. Waiting eagerly. His secret for success particularly the way he has put it..is really amazing.

 4. murugan murugan says:

  உணர்வுபூர்வமான சந்திப்பு !!!

  சோதனைக்கு பின் தான் சாதனைன்னு தலைவர் சொன்னது எவ்வளவு உண்மைங்கறது பல பேரோட வாழ்க்கைல இருக்குற நிதர்சனமான உண்மை !!!

  சந்திப்புக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!!

  தொடர்ச்சிக்காக காத்திருக்கிறோம் !!!

 5. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Great work na.. such people's interviews inspirational for us.

  This week Punch tantra super. Mr.Elango sir's singing, speech fantastic.

 6. RAJA RAJA says:

  தலைவர் தன் படங்களில் ஒரு பாடலில் முன்னேறுவதை காட்டுவதை பார்த்து சிலர் கேலி செய்வார்கள் ஆனால் அவர்கள் அதில் ஒன்றை மறந்து விட்டார்கள் தலைவர் முன்னேறி வந்த பிறகு வயதான தோற்றத்தோடு தான் வருவார் அதாவது குறைந்தது பாத்து முதல் பதினைத்து வருடம் கடின உழைப்பால் வந்தது இது என்று காட்டுவார்.அதை சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள் அதே போல் தான் இன்றும் பல பேர் தன் கடின உழைப்பால் முடியாததை முடித்து காட்டி உள்ளார்கள் திரு சந்திர சேகர் அவர்களும் அதில் ஒருவர் என்று இந்த சிரியா பகுதி பேட்டி புரிய வைத்துள்ளது காத்து கொடு இருக்கிறோம் பாகம் இரண்டிட்காக

 7. ps ps says:

  மிகவும் அருமையாக உள்ளது. இதை போன்று பேட்டியை படிக்கும் பொது உள்ளுக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது.

 8. Anonymous says:

  தடைகள் இல்லையென்றால் முன்னேற்றம் இல்லை…..ஆனால் தடைகள் வரும்பொழுது சோர்ந்து போனால் வாழ்க்கை இல்லை…..! அது போன்ற நேரங்களில் திரு. சந்திரசேகர் போன்றவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு உற்சாக டானிக்….!

  ***

  இவரைப் போன்ற சாதனையாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் சீரிய முயற்சி, இன்னும் பல வெற்றியாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன்…..!

  "வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

  தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா "

  -௦-

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 9. Santhosh Santhosh says:

  மிகவும் அருமையாக உள்ளது. இதை போன்று பேட்டியை படிக்கும் பொது உள்ளுக்குள் ஒரு வேகம் பிறக்கிறது.. அடுத்த பதிப்பு விரைவில் பதியவும் ..

 10. **Chitti** **Chitti** says:

  My dear Rajni Aficionados,
  ********************************
  hope all of you are doing fine and excellent.
  ***
  நிதர்சனமான உண்மை - வாழ்க்கையில் பல அவமானங்களை கண்டவர்கள் தான் இன்று வெற்றிக்கனியை பறித்திருக்கிறார்கள். பதிவின் ஆரம்பம் மிக நன்றாக உள்ளது.
  ***
  "வாழ்க்கையில நம்மளை ஜெயிக்க வைக்கிறதே நம்ம எதிரிகள் தான் சுந்தர். நான் இன்னைக்கு இந்தளவு வந்திருக்கேன்னா அதுக்கு காரணம் என் எதிரிகள் தான். எதிரி என்று ஒருத்தன் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கையே இல்லை அவுட்னு சொல்லிடலாம். எனக்கு அப்படி நிறைய எதிரிகள் உண்டு"
  *****
  மனதின் நிலையை அருமையான பிரதிபலித்து இருக்கிறார். இது வரை கண்ட பேட்டிகளில் விட, அதில் வந்த பதில்களை விட, இந்த பதிலில் நான் நூறு சதவிதம் நிறைவடைந்தேன் என்றால் மிகையாகாது.
  *****
  "நான் ஓடனும்…. ஒரே இடத்துல நின்னுவிடக்கூடாது’ என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் ஆண்டவன் என்னை யாரையோ விட்டு துரத்துறான்னு நினைக்கிறேன்"
  ***
  என்ன ஒரு மனப்பக்குவம். இவர் இறை பக்தியிலும் சரி, தன்னம்பிக்கையிலும் சரி - இரண்டிலும் உயர்ந்து நிற்கின்றார்.
  ***
  உண்மையிலேயே இவரின் பேட்டியையும், பதில்களையும் எதிர்ப்பார்கிறேன்.
  *****
  மேலும், இந்த மாதிரி தன்னம்பிக்கை பதிவுகளை home page -ல் ஒரு தனியான column -தில் போடலாம். புது வாசகர்கள் (விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, LIVINGEXTRA.COM ரிஷி போன்ற ரஜினியுடன் அவ்வளவாக தொடர்பு இல்லாதவர்கள்) அவர்களுக்கு படிக்க வசதியாக இருக்கும். நம் தளமும் எங்கோ சென்று விடும்.
  ***
  @சுந்தர்ஜி அவர்களுக்கு, உங்களின் வாழ்கையும் தளமும் முன்னேற வாழ்த்துக்கள்.
  *****
  **சிட்டி**.
  ஜெய் ஹிந்த்!!!
  Thoughts becomes things.
  Dot.

 11. uday uday says:

  திரு சுந்தர் அவர்களுக்கு நன்றி.. ஆனால் எந்த ஒரு பதிவையும் முழுவதுமாக முடித்தவுடன் அடுத்த பதிவுக்கு போகவும்.. தலைவர் வழியில் வாழ்வோம்.

  ——————————————————-
  மன்னிக்கவும் நண்பா. எனக்கிருக்கும் நேரப் பிரச்னை தான் காரணமே தவிர வேறு ஒன்றுமில்லை. மேலும் இது போன்ற சந்திப்புக்களை பதிவாக எழுத நிறைய நேரம் பிடிக்கிறது. அப்படி எழுதும்போது இடையில் வேறு எதுவும் எழுத முடிவதில்லை. பொதுவாக ஒய்வு நேரத்தில் எல்லாரும் ஓய்வெடுப்பாங்க. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒய்வு நேரம் என்பதே நான் இந்த தளத்திற்காக எழுதுவது தான். அந்தளவு நேசித்து ஒவ்வொரு வார்த்தையையும் எழுதிகிறேன். ஒரு அளவுக்கு மேல் எழுதியவுடன், மேற்கொண்டு எழுதுவது சிரமாக இருக்கும். "பேசாம எழுதியவரைக்கும் ஒரு பதிவா போட்டுடலாம். ஒரு ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறம் அடுத்த பாகத்தை எழுதலாம்" என்று தான் தோணும். இது தவிர்க்க முடியாதது.

  இருப்பினும் அடுத்த பகுதியை ஒரே முழு பதிவாக தருகிறேன். நன்றி.

  - சுந்தர்

 12. Sudhagar_US Sudhagar_US says:

  கலக்கலானா முன்னுரை…..இப்பொழுதே முழு தொகுப்பையும் படிக்கும் ஆவல் தூண்டுகிறது!!!

 13. harisivaji harisivaji says:

  ஏழ்மை காலத்திலும் படிக்கவைத்த அந்த பெற்றோரே இதற்கு வித்திட்டவர்கள் ..அந்த வைராக்யியம் இவர் கூடவே பிறந்திருக்கிறது ….இருபினும் இப்போ காலத்தில் சம்பாதித்த பின் சிலபேர் ..பெற்றோரை மதிபதில்லை

  உன்ன விட நான் அதிகமா சம்பாதிறேன் என்று கேவலபடுதிரார்கள்

 14. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி, தங்களுடைய ட்விட்டரில் இருந்த லிங்கை மூலம் திரு.சந்திரசேகர் அவர்களின் குடும்ப நிலை குறித்து தெரிந்து கொண்டேன். well written ஜி, அவர் வாழ்ந்த வாழ்கையை எழுத்துகளையும் தண்டி ஒரு visual - அக பார்க்க முடிந்தது.வாழ்த்துக்கள் ஜி.

  .

  திரு.சந்திரசேகரின் வாழ்கையில் மற்றவர்கள் இருந்திருந்தால், இந்நேரம் அவர்கள் இருக்கும் இடம் வேறு.சுந்தர்ஜி, அடுத்த பதிவிகளுக்கு எதிர்பார்கிறோம். இந்த புதிய அங்கதை தொடங்கியதற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

  .

  rajni will rule tamil nadu

 15. Mano Mano says:

  Sundar your writing is such a pleasure to follow of course the matter given to us is also so motivating. Way to go bro. My prayers to your success in life. Thalivar is indeed a great soul to have fans like u.

 16. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  //“ஐயப்பா…. நான் ஓடனும் என்பதாலேயே நீ யாரையோ விட்டு என்னை துரத்துறே”//

  - உண்மை வரிகள்…

  கலக்கிடீங்க சுந்தர் அண்ணா .. முழு பதிவை எதிர்பார்த்து காத்திருகின்றோம்..

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 17. Selvaraj Selvaraj says:

  வணக்கம்!
  நான் செல்வராஜ். நான் பிரான்சில் இருக்கிறேன். நான் திரு. சந்திரசேகர் அவர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். மிகவும் நன்று. தயவு செய்து திரு.சந்திரசேகர் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்ற விபரத்தை தருவீர்களா?
  நன்றி.

  ——————————————————-
  I will mail you the details how to contact him. Please follow that.
  - Sundar

 18. balajiv balajiv says:

  One of the best moment in my life that i got a wonderful opportunity to met mr.chandrasekar.

  Thanks for providing such a great opportunity to mr.sundar..

  god bless u…take care,

  cheers,

  balaji

 19. Tarun Krishnanath Tarun Krishnanath says:

  What an inspirational real time story. Iam not saying this because i know chandrasekar sir. I have always admired and inspired by his work ethics which he follows. He has been my rolemodel ever since i saw sir five years ago. I am proud that i have got an opprtunity to work with a wonderful human being like him. I would be more than happy in my life if i can emulate atleast 5% of what he has done to his business empire ..I wish you sir to scale more heights in the coming years…Iam very proud of you sir…

  I have few friends in onlysuperstar.com. I would also like to thank Mr. VijayaKumar of pollachi in person because he read me this article as i dont know to read tamil. Thank you Onlysuperstar.com for posting my thoughts.

  Warm Regards
  Tarun Krishnanath

  ——————————————————-
  Thank you friend for visiting and dropping a comment.
  I am sure that everybody will be astonished once they read second part which i am writing now.
  - Sundar

 20. r.vivekanandan r.vivekanandan says:

  நன்றி,ரொம்ப ரொம்ப நன்றி

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates