









You Are Here: Home » Featured, Rajini Lead » சூப்பர் ஸ்டார் சமீபத்தில் ரசித்த ஹாலிவுட் படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினி அளவிற்கு திரையுலகின் லேட்டஸ்ட் டிரென்ட்டை தெரிந்துவைத்திருப்பவர்கள் தமிழ் சினிமாவில் எவரும் இருக்க முடியாது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து கனவுத் தொழிற்சாலைகளின் லேட்டஸ்ட் ஹிட்களும் பிளாப்களும் இவருக்கு அத்துப்படி. 35 வருடங்களுக்கும் மேல் தனது சூப்பர் ஸ்டார் நாற்காலியை இவர் தக்க வைத்துக்கொண்டுள்ளதர்க்கு இப்படி இவர் அப்டேட்டாக இருப்பதும் ஒரு காரணம்.
எந்த ஒரு சக நடிகரின் படமும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டால், சிறிதும் ஈகோ பார்க்காது அந்தப் படத்தை பார்த்துவிடுவார். இந்த வழக்கம் பெரும்பாலான நடிகர்களிடம் கிடையாது. ஆகவே தான் ஒரே சாயல் கொண்ட படங்களை சில நடிகர்கள் நடிக்க நேர்ந்துவிடுகிறது. (நம்மளை சுத்தி நடக்குற விஷயம் என்னன்னு தெரிஞ்சா தானேங்க சர்வைவ் பண்ணமுடியும்?)
அவர் படம் பார்ப்பதற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பெரும்பாலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம் திரையரங்கில் தான் அவர் படம் பார்ப்பது வழக்கம். ஃபோர் பிரேமில் அவர் படம் பார்க்கிறார் என்றால், குறைந்தது அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், அவர் தம் குடும்ப உறுப்பினர்கள் என குறைந்தது 20 பேராவது அவருடன் படம் பார்ப்பார்.
அடுத்து, மாறு வேடம். குறிப்பிட்ட ஒரு படத்தினுடைய பொது மக்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினால் - அது எந்த நடிகரின் படமாக இருந்தாலும் சரி - மாறுவேடத்தில் மக்கள் அதிகளவு வரும் பிரபல திரையரங்கம் ஏதாவது ஒன்றுக்கு சென்று மக்களோடு மக்களாக படம் பார்ப்பார். இந்த மாதிரி நேரத்தில் அவருடன் அவரது நெருங்கிய நண்பர் எவராவது ஒருவர் உடன் செல்வது வழக்கம். அவரும் மாறுவேடத்தில் தான் இருப்பார் என்பது தான் இங்கு சுவாரஸ்யமான விஷயம்.
அடுத்து இன்னொரு ஸ்டைல் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு திரையரங்கில் ஒரு படத்தை அதன் பக்கா எபக்ட்டோடு பார்க்கவேண்டும் என்று விரும்பினால் - அவர் கையாளும் முறை. படம் துவங்குவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட் திரையரங்கிற்கு சென்றுவிடுவார். அவர் வருவது திரையரனின் உரிமையாளருக்கோ அல்லது நிர்வாகிக்கோ மட்டும் தான் தெரியப்படுத்தப்படும். அவர்கள் ஒரு நல்ல மூலையில், ஒரு நான்கைந்து சீட்டுக்களை கார்னர் செய்துவைத்துவிடுவர். இவர் படம் துவங்குவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த திரையரங்கிற்கு சென்று ஓரமாக அமர்ந்துவிடுவார். படம் துவங்கியப்பினர் முழு படத்தையும் ரசிப்பார். மற்றவர்கள் படத்தை ரிசீவ் செய்யும் விதத்தையும் கவனிப்பார். படம் முடிவதற்கு சற்று முன்னர் வந்து சுவடு தெரியாமல் கிளம்பிவிடுவார்.
மிகப் பெரிய வி.வி.ஐ.பி. ஒருத்தரு நம்மோட உட்கார்ந்து படம் பார்த்திருக்காரு என்கிற விபரமே அந்த ஆடியன்ஸ்க்கு கடைசி வரைக்கும் தெரியாது. (இப்படி அவர் படம் பார்க்கும்போது ஒரு சிலர் அவரை கவனித்துவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.)
சூப்பர் ஸ்டார் இந்த கடைசி ஸ்டைலில் சமீபத்தில் பார்த்த படம் - பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி, சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம் - THE AVENGERS. படம் பார்த்த திரையரங்கம்… சத்யம் வளாகத்தில் உள்ள சாந்தம்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் - படம் துவங்குவதற்கு முன் வந்தவர் ஓரமாக சென்று அமர்ந்துகொண்டார். முழு படத்தையும் ரசித்தவர், படம் முடிவதற்கு சற்று முன்னர் கிளம்பிச் சென்றார். அந்தக் ஷோவை ரசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு மிகப் பெரிய புள்ளி ஒருவர் நம்முடன் படம் பார்த்துக்கொண்டிருந்தார் என்ற விபரம் கடைசி வரை தெரியாமலே போனது.
அது சரி… தலைவர் ஏன் AVENGERS படத்தை பார்த்தாரு?
படத்தை நீங்க ஒரு தடவை பாருங்க. புரிஞ்சுக்குவீங்க!
[END]
தலைவரின் success formula வுக்கு சிறந்த உதாரணம் அவர் AVENGERS படம் பார்த்தது எனலாம்! அவர் வெறுமனே பொழுதுபோக்கிற்காக படம் பார்ப்பவர் அல்ல, இனி வரும் காலங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் இந்தியாவை பொறுத்தவரை மிக தகுதியானவர் அவரே! ஏறக்குறைய சிட்டி கதாப்பாத்திரம் அதனுடைய முன்னோட்டம் எனலாம். ஷங்கர் சார் இயக்கத்தில் தலைவர் இப்படி ஒரு படம் செய்தால்….நினைத்தாலே இனிக்கிறது! பார்போம் எதுவும் நடக்கும்.
சூப்பர் ஸ்டார்
ரஜினி அளவிற்கு திரையுலகின்
லேட்டஸ்ட்
டிரென்ட்டை தெரிந்துவைத்திருப்பவர்கள்
தமிழ் சினிமாவில் எவரும்
இருக்க முடியாது.
நான் சென்ற ஞாயிறு பார்த்து விட்டேன் !!! படம் சூப்பர்!!! HULK தான் மாஸ்!!!
Sundar, do u have any update the when the Kochadaiyaan trailer is going to release or any hint…
தலைவர் ஒரு படத்த பார்த்த கண்டிப்பா அதில எதாவது இருக்கும் ,நானும் விரைவில் பார்ப்பேன் .இப்படிப்பட்ட படங்க்களைத்தான் உலகம் முழுவதும் மக்கள் ரசிக்கிறார்கள் .
Thalaivar last a padam patha technique a ippathan therinjukiren. Old interview la sonna mathiri padam mudiyum munnadi kilambitar. Thanks na
அவேன்ஜெர்ஸ் பார்க்கும் போது உண்மையில் சித்தியும் அந்த க்ரூப்பில் இருந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும் என்று தோன்றியது
சுந்தர் அண்ணா நலமா?
உங்கள் விடாமுயற்சிக்கும், அயராமல் நம் தள வாசகர்களுக்கு நிறைய உண்மைகள், சாதனைகள், வாழ்க்கையில் ஜெயித்த மனிதர்களை எங்களுக்கு தருவதற்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் அனைத்து பதிவுகளையும் இன்று தான் படித்தேன். ஒவ்வொன்றும் இனிமை. அவென்ஜெர்ஸ் படத்தை பார்க்க தூண்டிவிட்டீர்கள்.
உங்கள் உடல் நலம் எங்களுக்கு மிக முக்கியம். நீங்கள் இல்லையேல் நிறைய விஷயங்களை எங்களால் தெரிந்து கொள்ள முடிந்திருக்காது.
நன்றி அண்ணா..
அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
THE AVENGERS படம் நானும் முதல்நாள் பார்த்துவிட்டேன்…..எல்லோரும் ரசிக்ககூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்…..! தலைவரும் இந்த படத்தை பார்த்தார் என்ற செய்தி கேள்விப்பட்ட உடன் நான் ஏன் அந்த நேரத்தில், அந்த திரையரங்கில் இருந்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது….!
-
எல்லாம் சரி….தலைவர் ஏன் அந்த படத்தை பார்த்தார் தெரியுமா?…….தன்னுடைய சீடர்கள் எப்படி அவர் கற்றுக் கொடுத்த வித்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கத் தான்……!
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்