









You Are Here: Home » Fans' Corner, Featured » இறைவன் கொடுத்த கொடை - நம்மை தேடி வந்த கௌரவம்!
அஷ்ட ஐஸ்வர்யங்களை மனிதர்கள் நமக்கு கொட்டிகொடுத்தாலும் அந்த ஆண்டவன் நமக்கு போடும் ஒரு சிறிய பிச்சைக்கு அது ஈடாகுமா?
இன்றைய தினத்தந்தியில் வெளியாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படத்தின் விளம்பரத்தில் நமது புகைப்படம், நமது தளத்தின் வார்த்தைகள், பேனர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. தமிழகம் முழுதும் உள்ள பதிப்புக்களில் இந்த விளம்பரம் வெளியாகியிருப்பது கூடுதல் சிறப்பு. இறைவனின் செயலேயன்றி வேறு என்னவாக இது இருக்கமுடியும்?
என்னை பொறுத்தவரை - நம் தள வரலாற்றில் - இது மிகப் பெரிய மைல்கல். சாதனை.
என்ன நடந்துச்சு? எப்படி சாத்தியமாச்சு?
இந்த கௌரவத்தை நான் தேடி போகலே. அது என்னை தேடி வந்தது என்பது தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.
மார்ச் மாசம் 16 தேதி நான் கர்ணன் படத்தைப் பற்றி போட்டிருந்த பதிவை குறித்து யாரோ திரு.சாந்தி சொக்கலிங்கம் கிட்டே சொல்லியிருக்காங்க. உடனே அவர் ஆர்வத்தோட நம்ம சைட்டை பார்த்து அந்தப் பதிவை தேடி பிடிச்சி படிச்சிருக்கிறார்.
———————————————————-
படம் பார்க்குறதுக்கு முன்பு போட்ட பதிவுக்கு @ http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14169
பார்த்துட்டு வந்து நான் சொன்ன விஷயம் @ : http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14192
———————————————————-
ரெண்டு நாள் முன்னாடி ஒரு நாள் நைட் ஒரு 10.30 இருக்கும். சாப்பிட்டுட்டு கம்ப்யூட்டர்ல ஆர்.சந்திரசேகர் சாரோட ஆர்டிகிள் டைப் பண்ணிட்டு இருக்கும்போது ஒரு ஃபோன் வந்திச்சு.
எதிர்முனையில் பேசுகிறவர், “சார் நான் சாந்தி சொக்கலிங்கம் பேசுறேன்” அப்படின்னார். எனக்கு ஒரு சில வினாடிகள் யாரு என்னன்னு புரியலே.
“சார்… கர்ணன் படத்தை நான் தான் சார் ரிலீஸ் பண்ணியிருக்கேன்” என்று கூறியவுடன் தான் தாமதம்….எனக்கு உடனே புரிந்துவிட்டது. “ஒ…. சாரி சார். சாரி சார். உங்களை பற்றி எனக்கு தெரியும். உங்க பேரை கேள்விப்பட்டிருக்கேன். பார்த்திருக்கேன். எனக்கு திடீர்னு நீங்க ஃபோன் பண்ணி நான் தான் சாந்தி சொக்கலிங்கம் அப்படின்னு சொன்னவுடனே எனக்கு ஸ்ட்ரைக் ஆகலே… தப்பா நினைக்காதீங்க. வெரி சாரி வெரி சாரி!” அசடு வழிகிறேன்.
“கர்ணன் படத்தை பத்தி உங்க வெப்சைட்டுல எழுதியிருந்ததை பார்த்தேன். பிரமாதமா எழுதியிருக்கீங்க. ரொம்ப நன்றி!”
“நாங்க தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லணும். இப்படி ஒரு படத்தை ஸ்க்ரீன்ல பார்க்குற ஒரு அரிய வாய்ப்பை எங்களுக்கு கொடுத்ததுக்காக!”
“நல்லா எழுதியிருந்தீங்க. ————-”ரஜினி ரசிகன், கமல் ரசிகன், எம்.ஜி.ஆர். ரசிகன், போன்ற பாகுபாடுகள் இன்றி - நல்ல சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் - அவர்கள் எந்த நடிகருக்கு ரசிகர்களாக இருந்தாலும் - பார்க்கவேண்டிய படம் இது!” அப்புறமா…. “‘கர்ணன்’ என்றால் ஏதோ கொடைக்கு மட்டுமே சொந்தக்காரன் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல… நன்றி மறவாமை, வாக்கு தவறாமை, வீரம், மானம், அறிவு, காதல் இப்படி பல குணங்களுக்கு சொந்தக்காரன் ‘கர்ணன்’.”————- நல்ல அருமையான வார்த்தைகள்.”
நமது பதிவைப் பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு போனார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “கர்ணன் படத்தை பற்றி என் தளத்தில் சொல்வதை நான் என் கடமையாக கருதினேன் சார். அடிப்படியில் ரஜினி சாரின் கடைக்கோடி ரசிகன் நான் என்பதாலோ என்னவோ சிவாஜி சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குறிப்பா அவர் நடிச்ச DEVOTIONAL CLASSICS படங்களுக்கு மிகப் பெரிய ரசிகன் நான். அதுவும் ‘கர்ணன்’ படத்தை எத்துனை முறை நான் எனது வீட்டில் பார்த்திருப்பேன் என்றே எனக்கு தெரியாது. அந்தளவு அந்தப் படத்தின் மிகப் பெரிய விசிறி நான். So, அந்தப் படம் டிஜிட்டலைஸ் பண்ணி ரிலீஸ் ஆனப்போ நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவேயில்லை. படத்தை தியேட்டரில் பார்க்க முடிவு செய்து, நாம் பெறும் இன்பம் என் நண்பர்களும் பெறட்டும் என்று என் நண்பர்களையும் கூட்டிகிட்டு போனேன். படத்தை பார்த்’தேன்’, ரசித்’தேன்’, சிலிர்த்’தேன்’, மெய்மறந்’தேன்’” என்றேன்.
“படத்தோட 75 வது நாள் விளம்பரம் ரெண்டு நாள்ல வருது… அதுல நீங்க போட்டிருக்குற ஆர்டிகிளோட EXTRACT ஐ எடுத்து போடப்போறேன். உங்க ரீசன்ட் ஃபோட்டோ ஒன்னையும் எனக்கு மெயில் அனுப்புங்க.” என்றார்.
திரு.சாந்தி சொக்கலிங்கம் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் அதிர்ச்சியிலிருந்தே நான் மீளாத நிலையில் இப்படி மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியா என்று நினைத்துக்கொண்டேன்.
“கண்டிப்பா அனுப்புறேன் சார்… என் பாக்கியம்” என்று கூறினேன்.
அப்புறம் வேறு சில பொதுவான விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அண்மையில் டி.எம்.எஸ். அவர்களை சந்தித்து ஆசி பெற்றதை பற்றி கூறினேன். மிகவும் சந்தோஷப்பட்டார் திரு.சொக்கலிங்கம். தனது அலுவலகத்துக்கு ஒரு நாள் வருமாறு அழைத்திருக்கிறார்.
சரி… எப்படி இது சாத்தியமாச்சு?
சரித்திர வீரர்களாகட்டும், யுக புருஷர்களாகட்டும், இவங்களை மானசீகமா நாம ஃபாலோ பண்ணி அவங்க வார்த்தைளை கடைபிடிச்சிட்டு வந்தோம்னா இக்கட்டான நேரங்கள்ல நிச்சயம் நமக்கு அந்த ஆன்மா வழிகாட்டும். இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாமி விவேகானந்தர் இப்படி பல முறை எனக்கு வழிகாட்டியிருக்கிறார். இதோ தற்போது அந்த மாவீரன் கர்ணன். கடவுளுக்கே கொடையளித்த வள்ளலாயிற்றே அவன். இந்த ஏழைக்கு இரக்கப்படமாட்டானா என்ன?
நல்லா புரிஞ்சிக்கோங்க. இந்த பதிவை நான் போட்டு 70 நாளுக்கு மேல இருக்கும். நான் இதை போடும்போது, இப்படி விளம்பரத்துல நம்ம பேர் ஃபோட்டோ இதெல்லாம் வரும் நினைச்சி போடலே. “நல்ல படம். நம்மால முடிஞ்ச அளவு அதோட பெருமையை நாலு பேருக்கு சொல்வோம்..!” அப்படின்னு நினைச்சி தான் செய்தேன்.
Print edition scan image
(மேற்படி விளம்பரத்தில் காணப்படும் நமது தளத்தின் பேனர் இமேஜ், ஒரிஜினல் தினத்தந்தி விளம்பர டிசைனிலேயே உள்ளதாகும்.)
அடுத்தடுத்து நம்மை தேடி வரப்போகும் நல்ல விஷயங்களுக்கு இது ஜஸ்ட் ஒரு ஆரம்பம் என்று தான் நான் கருதுகிறேன். ஏன்னா ஆண்டவன் கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் பல நூறு நல்ல விஷயங்களை ஒருங்கே இழுத்துக்கொண்டு வரும்.
இந்த தருணத்தில் ‘கர்ணன்’ திரைப்படத்தை காண என்னுடன் வந்திருந்த நண்பர்களுக்கும், நம் தளத்தின் மேல் அதன் முன்னேற்றத்தின் மேல் அக்கறை கொண்டவர்களுக்கும் - நான் செய்யும் தவறுகளை சகித்துக்கொண்டு என் மீது பரிவும் பாசமும் என்றும் காட்டும் என் நண்பர்களுக்கும் - பல முகம் தெரியாத நலம் விரும்பிகளுக்கும், எல்லாவற்றுக்கும் மேல், நம்மையெல்லாம் இணைக்கும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும் என் நன்றி.
‘கர்ணன்’ படத்தை பற்றிய பதிவை நாம் வெளியிட்டு அந்த படத்தை பார்த்தது பற்றி நம்முடன் வியட்நாமிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய திரு.கோபால், மற்றும் மதுரையிலிருந்து ஒரு அன்பர் மற்றும் பல வெளியூர் வெளி மாநில நண்பர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது சிறிய ஊக்கம் எனக்கு மிகப் பெரிய உற்சாகமாக அமைந்தது.
இறுதியாக இந்த விளம்பரத்தை வெளியிட்ட திரு.சாந்தி சொக்கலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
“நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க.. என்ன கொஞ்ச நேரம் ஆகும். அவ்ளோ தான்.”
[END]
வாழ்த்துக்கள் சுந்தர். You Deserve it.
Sundarji,
Congrats, I'm Sure you really deserve for this.. Continue your work with same spirit.
I know its how much hard to maintain this site /appointments as a part time along with your work…
EXACT WORDS from THALIVAR which i used to remember and you end with that same PUNCH
“நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க.. என்ன கொஞ்ச நேரம் ஆகும். அவ்ளோ தான்.”
நம் தளத்தின் முகப்பில் உள்ள புதிய வாசகங்கள் Beyond Entertainment In Search Of True Values மிகவும் அருமை. அதிலும் திருவள்ளுவர், விவேகனந்தர் & மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவம் மேலும் அதற்க்கு சரியான பொருளை தருகிறது. கர்ணன் படத்தின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். நம் தளத்தின் பெயரும் உங்களின் விமர்சனமும் விளம்பரத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
இந்த தளத்தின் வாசகனாக இருபது பெருமையாக இருக்கிறது ..
ரொம்ப மன நிறைவ இருக்கு சுந்தர்ஜி…..
உங்களுக்கு நம் தளத்திற்கு கிடைத்த இந்த பெருமை பன்மடங்கு கிடைக்க பெற எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றலை பிரார்திகின்றேன்.
இது தான் தலைவர் சொன்னது "கடமையை செய் பலனை எதிர் பார் "
ஆனால் இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு பலனை எதிர்பார்த்து கடமையை செய்கிறார்கள் ,அப்படி செய்தால் அவர்களுக்கு வாழைபழம் கூட கிடைக்காது
நாம் நம் கடமையை செய்து கொண்டே போனால் பலன் நம் பின்னால் வந்து கொண்டே இருக்கும்
கலக்குங்க சுந்தர் மேலும் கடமையை செய்து கொண்டே இருங்கள் ,வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சுந்தர் sir
Great na kalakunga.. Morning paperla pathen. Mannan la santhi theatre manager a varavar thane?
காலையில் தந்தி பேப்பரை பார்த்த உடன் மிகுந்த
மகிழ்ச்சி அடைந்தேன்
வாழ்த்துக்கள்
தலைவரின் ஆசி உங்களை பல சிகரங்கள் தொட வைக்கும்…!!
வாழ்த்துகள்…!!1
Congrats Sundar Ji !!!
வாழ்த்துக்கள்!
“நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க.. என்ன கொஞ்ச நேரம் ஆகும். அவ்ளோ தான்.”….
சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
இது ஒரு மிகப்பெரிய மைல்கல் தான்!!!
நம்ம தளத்தோட இந்த வெற்றி மென்மேலும் படிப்படியாக வளர என் அன்பான வாழ்த்துகள் சுந்தர் அண்ணா…
நமது தளம் ரஜினி ரசிகர்களையும் தாண்டி மற்றவர்களாலும் ரசிக்கப்படுகின்றதென்றால், இது தான் நம் வெற்றி…..!
-
"நல்லதே செய்; நல்லதே நினை; நல்லதே நடக்கும் " -ன்னு சும்மாவா சொன்னாங்க….! அவங்க அவங்க செய்யுற வேலைக்கும், உழைப்புக்கும் பலன் கண்டிப்பா கிடைச்சே தீரும்…!
-
உங்கள் முயற்சி, உழைப்பு மென்மேலும் பல பெருமைகளை, வெற்றிகளை உங்களுக்கு வழங்கட்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்….!
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார்"
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
Wow!! That's a huge recognition for your efforts. Very well done Sundar.
All the very best to continue your good work.
Regards,
JS
சுந்தர்
i am regular visitor of this site Keep going man. You deserve it
Venkat
This is a well deserved recognition for your dedication. This will definitely be read by the top notch people in the industry. . As you had mentioned this is just the beginning. Miles to Go Sundarji. I am eagerly expecting a day wherein you will be invited by our very own SS to meet you. That will happen Sundarji..
Much much more accolades are waiting for you dear brother…… Congrats… As thalivar says no pain no gain. Kadamayai sei palanai aathirpar
வாழ்த்துக்கள் சுந்தர்.
வாழ்த்துகள் சுந்தர்
டியர் சுந்தர், வாழ்த்துக்கள்..உங்களது பயணம் வெற்றிகரமாக தொடர ஆண்டவன் துணை புரியட்டும்.
Cool. all the best for your future. God will give you the things you want.
Chitti
சத்தியமாக நான் இதை எதிர்பார்கவில்லை!! சூப்பர் சூப்பர் அண்ணா! ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது!!
Sir,
Today morning i saw the news paper, I felt so happy.
Regards,
Tharun
நல் வாழ்த்துக்கள் சுந்தர் அண்ணா
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.. சுய நலம் இல்லாத உங்கள் சேவைக்கு கிடைத்த பரிசு..
சிம்ப்லி சூப்பர் சுந்தர்.
வாழ்த்துகள் சுந்தர்
இப்படிக்கு,
உங்கள் நலன் விரும்பி
கண்ணன் . வை
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி. ரஜினி ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தாங்கள் வாழ்ந்து காட்டுகிறீர்கள். ரசிகர்கள் நடத்திவரும் இணையதளங்களில் நமது தளம் மாறுபட்டு விளங்குகிறது. இதற்க்கு ஒரே காரணம் நமது ரசிகர்களுக்காக சீரிய சமுதாய பார்வையுடன் நீங்கள் எழுதும் எழுத்துக்கள் தான்.தலைவரை இதை பார்த்தால் நிச்சயம் மகிழ்வார்.
.
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி
.
rajni will rule tamil nadu
————————————————-
வஸி… நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. அதற்கு தலை வணங்குகிறேன். ஆனால் வாழ்ந்துகாட்டுறேன்… அப்படி இப்படி எல்லாம் சொல்றது ரொம்ப ஓவர். அபத்தம். உண்மையை சொல்லனும்னா தலைவர் பக்கத்துல நிக்கிறதுக்கான தகுதியை நான் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அவ்ளோதான். அது ரொம்ப கஷ்டம். இருந்தாலும் முயற்சி பண்ணிக்கிட்டுருக்கேன். (கவனிக்க: வாய்ப்பை அல்ல. தகுதியை!).
- சுந்தர்
sundar… You are great….ungada ulaippukku kidaittha parisu…ungal payanam menmelum thodara valtthukkal….. உலக சூப்பர் ஸ்டாரின்
முரட்டு பக்தன……Amhar…..
வாழ்த்துக்கள் ஜி………நம்ம எல்லோருக்கும் ஒரு பெருமையான தருணம் இது……இது ஒரு சாம்பிள் தான்……..இன்னும் நெறைய காத்துட்டு இருக்கு ஜி……'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு……சிகரத்தை அடைந்தாள் வானத்தில் ஏறு…..'
தலைவர் சொன்னார் தன் ரசிகர்களுக்கு சமுதாயத்தில் நல்ல அங்கீகாரம் கெடைக்கும் என்று …அது சுந்தர் சாருக்கு இன்று கிடைத்திருப்பது அணைத்து தலைவர் ரசிகர்களையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் கொடுக்கின்றது ….
———————————————
பெரிய வார்த்தைகள் வேண்டாம் பிரதர். இதை நான் அப்படி நினைக்கவில்லை. நல்ல முயற்சிக்கு கிடைத்த ஒரு சிறு உற்சாகம். அவ்வளவே.
பாலைவனத்துல சுத்திகிட்டுருந்த ஒருத்தனுக்கு குடிக்க ஜில்லென்று தண்ணீர் கிடைத்தால் அவன் அடையக்கூடிய சந்தோஷத்தை இது கொடுத்தது எனக்கு. அதனால், கொஞ்சம் ஓவரா EXCITE ஆயிட்டேன் நான். வேற ஒண்ணுமில்லே.
- சுந்தர்
வாழ்த்துக்கள் சுந்தர், வெற்றியின் ஆரம்பம்…!!!
வாழ்த்துக்கள் சுந்தர்
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி !
நீங்க எதையும் எதிர்பார்த்து செய்யலே..அதனால எல்லாமே உங்கள தானா தேடி வரும்
Congrats …Keep Going Sundar
I consider myself a very passive reader of this great site. I myself feel so happy about this recognition. I can imagine how much happiness this unexpected surprise would have brought to you. Kudos to your hardwork and dedication to post good things in your website dedicated for the great man, our Thalaivar. Congratulations bro !
சுந்தர்ஜி உங்களால் நானும் தலைவர் மேல் ஒரு blog எழுத முடிவு பண்ணிவிட்டேன்.. கூடிய விரைவில்..
இந்த blog நோக்கம் நான் தலைவர் படங்களில் ரசித்த மற்றும் கற்றுக்கொண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள.. உங்கள் வாழ்த்துக்கள் தேவை.. முதல் பதிவை "எந்திரன்" தொடங்குகிறேன்.
——————————————-
வாழ்த்துக்கள்.
நல்லதை நினையுங்கள். நல்லதை எழுதுங்கள். நல்லதே நடக்கும்.
- சுந்தர்
Congrats Sunder, appropriate recognition for your hardwork.
Cheers
Dev.
வாழ்த்துகள் நண்பா
அனுபவம் ..!
வெற்றிக்கு தோல்வி என்பது
வாயில் படி ..!
வெற்றி எனும் வீட்டினுள்
நுழைய
தோல்வியை முதலில்
படி..!!
வெற்றியையும்
தோல்வியையும்
அணு அணுவாய்
அனுபவித்துப் படி .!
இரண்டும் ஒன்றே என்ற
நிலைக்கு
மனதை பக்குவபடுத்தும்
அனுபவத்தைப் படி ..!!
ஒருமுறை செய்த
தவற்றை மீண்டும்
செய்யாதிருக்க
அனுபவத்தை படி..!!
அகந்தையை அடியோடு
துடைத்து எறி..!!
படி படியாய்
திட்டமிட்டு வெற்றியை
கெட்டியாய் பிடி .!!!
ரோஜாவுடன் முள்
என்பது
இயற்கையின் நியதி ..!
வெற்றியும் தோல்வியும்
என்பது
மனித வாழ்வியல் விதி ..!!
வெற்றியும் தோல்வியும்
மனிதனாக
ஏற்படுத்திக் கொள்ளும்
சங்கதி ..!
இதில்
இல்லை இயற்கையின்
சதி..!! —
—————————————————
அட…. தூள் கிளப்பிடீங்க போங்க. இந்த கவிதையை தலைவரோட அடுத்த படத்துக்கே இன்ட்ரோ சாங்கா வைக்கலாம் போல…
- சுந்தர்
வாழ்த்துகள்!!
btw, I like the new banner
கலக்கிடீங்க சுந்தர் சார்….. மரியாதை தானா தேடி வர ஆரம்பிச்சிருக்கு… எல்லாம் நன்மைக்கே
Congrats Sundarji; you deserve more than what you have achieved right now. God & Thalaivar blessings will be there for you always.
Dear Sundar,
You truly deserve this! We are all proud of you! I am yet to come across a selfless, humble human being as yourself!
Humility - thy name is Sundar!
———————————————-
Exaggeration. I am an ordinary human being with plus and minuses yet.
- Sundar
சுந்தர்…..
வாழ்த்துக்கள்
Congrats sundar! Very Good! Keep it up! In real life, a person who honours us the most is not the one whom we help! It would be someone out of the blue! That's what has happened here! Good luck and take care!
சூப்பர் சுந்தர் அண்ணா.. இன்று காலை தான் நான் பார்த்தேன். இந்த விளம்பரத்தை பார்த்த தருணம் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை … கிரேட் ணா.. இதே போல் நம் தலைவரின் கோச்சடையான் நூறாவது நாள் போஸ்டரிலும் நமது தளத்தின் பெயருடன் வாசகங்கள் இடம் பெற இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்…
"ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்"..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
வாழ்துக்கள் சுந்தர்ஜி !
வாழ்த்துக்கள் சுந்தர் ஜி !!!
இறைவனின் அருளால் உங்கள் புகழ் மேன் மேலும் வளர வாழ்த்துகிறோம் !!!
நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள் இப்போது அதற்க்கான கனியை சுவைக்கிரீர்கள் !!!
தொடர்க உங்கள் நற்பணி …
கண்டிப்பா ,இது சுந்தரின் கடமைக்கு கிடைத்த வெற்றி ,தலைவர் சொன்னது போல் கடமையை செய்யுங்க பலன் தான வரும் ,இது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டியதுதான் வாழ்த்துக்கள் சுந்தர் ,
Hi Sundar! A small recognition for a BIGGER things to come!!!
Today i saw the newspaper about this karnan ad..really very very happy to see u sundar in daily thanthi…U should achieve more and more in ur life…
god bless u…
Cheers,
Balaji .V
ஆஹா,…… எடிட்டிங்க்ல கில்லியா இருக்கீங்களே
சுந்தர் இந்த PHOTO நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
CONGRATS Mr.Sundar, this is what I am looking for (you)…
நல்லதே நடக்கட்டும்..எந்த ஓர் பணியை நாம் ஆசையோடு தொடங்கினாலும் இடையில் நாம் யாருக்காக செய்கிறோமோ அவர்கள் அதை கவனிக்காமல் போகலாம், அப்பொழுது விரக்தியும் ஏமாற்றமும் குடிகொள்ளும், பாளை எதிர்பாராது கடமையை முழு மன திருப்திக்காக செய்யும் பொழுது அதில் கிடைக்கும் திருப்தியே அலாதி…
நீங்கள் தொடர்ந்து இதைபோல் பல வெற்றிகளை கான எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகுறேன்….உங்களின் இந்த முயற்சிக்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்…
.
அன்புடன்
மாரீஸ் கண்ணன்
Excellent Sundar, feel happy for you and your work. Rewards will always chase the deserving.
——————————————-
Thank you very much sir. Very happy to see your appreciation here.
- Sundar
Congrates sundar.. I feel very happy for u.. Cheers..
Power of your positive thinking Sundar! Congratulations!!
From Simple Sundar (Yahoo Groups member) to where you are today, I feel very proud (though I don't have any part in your success) as a thalaivar's fan.
——————————————————
அப்படி அல்ல. உங்களைப் போன்ற முகம் தெரியாத எத்தனையோ நண்பர்களின் வாழ்த்துக்களும் நல்லெண்ணங்களும் கூட இதற்க்கு காரணம்.
- சுந்தர்
Awesome சுந்தர்! you are going go places man .
கன்க்ராட்ஸ் சுந்தர் !!!!