









You Are Here: Home » Featured, Rajini Lead » கேள்வியாய் வாழ்கிறான் மௌனத்தை ஆள்கிறான்!
ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் வற்றி நீண்ட காலமாகிவிட்ட நிலையில், ரஜினி ரசிகர்களிடம் கூட அது குறித்த எதிர்பார்ப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
“அவர் அரசியலுக்கு வந்தே தீரவேண்டும்!” என்று தீவிர நிலைப்பாடு எடுத்திருந்த ரசிகர்கள் கூட, சென்ற வருடம் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்ததையடுத்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டனர். “அவர் அரசியலுக்கு வர்றாரோ இல்லையோ… நல்லா ஆரோக்கியமா சந்தோஷமா இருந்தா அது போதும்” என்று அவர்கள் கருதுகின்றனர். (ரசிகன்டா!)
இருப்பினும் இன்னும் சில ரசிகர்களுக்கு அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இது சுயநலத்தினால் அல்ல. அப்படியாவது இந்த நாடு நல்லாயிருக்கட்டுமே என்கிற ஒரு எண்ணம் தான்.
அவர்களின் இந்த எண்ணங்களை போஸ்டர்கள் பேனர்கள் வடிவங்களில் ஒரு சில இடங்களில் பார்க்க நேரும்போது நமக்கு ஒரு மாதிரி ஏக்கமா இருக்கு.
இதோ சமீபத்தில் கோயம்பேடு அருகே ஒரு ஆம்னி வேனின் பின்புறத்தில் கண்ட போஸ்டர். (இதை நமக்கு அனுப்பியது நண்பர் மணிகண்டன் என்பவர்!).
இந்தப் பதிவை நான் கொஞ்ச நாள் முன்னாடி காலைல ரெடி பண்ணிகிட்டுருக்கும்போது தற்செயலா ரிமோட்ல டி.வி. சானல் மாத்திகிட்டே வந்தேன். சன் மியூசிக்ல ஜஸ்ட் அப்போ தான் “ராஜ்யமா இல்லை இமயமா..” ஸாங் ஸ்டார்ட் ஆகி போய்கிட்டிருக்கு. இது எப்படி இருக்கு?!
நம்ம கேள்விக்கு விடை கிடைச்ச மாதிரி ஒரு திருப்தி! பார்க்கலாம்!!
[END]
ஆசை இருக்க தான் செய்கிறது, தலைவர் விரும்பாத ஒரு செயலை வற்புறுத்தவும் கூடாது என ஆசையை வெளிபடுத்தாமல் இருந்து வருகிறோம்,,
ஆனால், டப்பா நடிகர்கள் மக்கள் மன்றம் தொடங்கி சீன் போடும் பொது மனம் ஏங்குகிறது,
ஜி
தலைவரிடம் சில மாற்றங்கள் சமீபத்தில் காண முடிகிறது அதுவும் அவரது உடல் மீள்வுக்குபின்.பொது வாழ்க்கைக்கு அருகில் வர முயற்சிகள் மேற்கொள்வதாகவே படுகிறது.அது அரசியல் இல்லாத பொது அமைப்பாகவும் இருக்கலாம்.ஆனால் எஞ்சிய வாழ்கையை எல்லோரும் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய அளவில் உதாரணபுருஷராக முன்னுதாரணமாக வாழ முயல்வார் என்பது திண்ணம் .
தங்க யு சுந்தர்ஜி..
சுந்தர்ஜி, எந்திரன் முடித்த பிறகு நாம் அனைவரும் உட்காந்து பேசி அரசியல் பற்றி முடிவெடுப்போம் என்று தலைவர் கூறினார். ஆனால், அதற்குள் தேர்தல் வர தலைவர் அமைதி காத்தார். பிறகு ராணவை தலைவர் அறிவித்து முழுவிச்சில் இறங்கினார். அந்த சமயத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி தலைவர் சந்தித்து அரசியலை பேசினார். அப்பொழுது தலைவர் ராணாவை முடித்த பிறகு 2014 இல் அரசியலில் இறங்கபோவது உறுதி என்று தன்னிடம் கூறியதாக நிதின் அறிவித்தார். இப்படி அனைத்தும் சரியாக நடைபெற ஆரம்பித்த சமயத்தில் அடுத்த சிலநாட்களில் தமிழகமே அதிர வாய்த்த சம்பங்கள் நடைபெற்று இறைவன் அருளால் மீண்டு வந்தார்.
.
தன்னுடைய உடல் நிலையின் எல்லை தொடும்பொழுது கூட "உங்கள் அனைவரையும் தலைநிமிர்ந்து வாழும்படி நடக்கும் படி நடந்துக்குவேன் கண்ணுகள!" என்று கூறினார். இந்த வார்த்தைகள் வெளிபடுத்திய ஆழமும், உணர்ச்சியும், அர்த்தங்களும் ஆயிரம், இதை சதரனமனவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தனக்கு நடிகன் என்ற பாத்திரத்தையும் தாண்டிய வேறொரு முகம் இருக்கிறது என்பதை தலைவருக்கு நன்றாக தெரியும்.ரசிகர்கள் மனதில் உள்ள எண்ணங்களும் உணர்வுகளும் அவருக்கு தெரியும். தன் மீது உள்ள அரசியல் எதிர்பர்புக்களும் அவருக்கு தெரியும்.
.
ரஜினி ரசிகர்கள் என்றால் நம்பிக்கை என்று பொருள். நாம் அனைவரும் நம்பிகையை இழக்க கூடாது. ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைத்து தலைவருடன் ஒரு சந்திப்பை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குசேலன் சமயத்தில் இது போல தான் நடந்தது. தலைவர் என்ன நினைக்கிறார் என்று நாம் தெரிந்து கொள்வது ரசிகர்களான நமக்கு இருக்கின்ற உரிமை. வெகு விரைவில் ரசிகர்களை தலைவர் சந்திக்க வேண்டும், இது நடந்தால், அனைத்திற்கும் விடை நிச்சயம் கிடைக்கும்.
.
நல்லதோர் வீணை செய்தி இறைவன் புழுதியில் எரிவதில்லை
.
rajini will rule tamilnadu
Thalaivar ipo rempa otungitar, ethavathu oru film function la oru speech kuduthar na konjam namakum reacharge ana matri irukum
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதித்தாலும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்.
தோழ்வியையும் அவமானத்தையும் சந்திக்கும் மனபக்குவம் அவருக்கு இல்லை.
வெற்றியை மட்டுமே சந்தித்து பழக்க பட்டவர் ரஜினி. அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது.
தமிழ் நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் இடை தேர்தலில் நிற்காமல் ஒதிங்கினாலும்
தோற்றுவிடுவோம் -டெபாசிட் இழந்து விடுவோம் என்று தெரிந்தாலும் போட்டியிடும்
விஜயகாந்தின் தைரியம் ரஜினி அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. தனிமை
விரும்பியான ரஜினி மக்களோடு மக்களாக இணைய முடியாது. நாட்டில் அநியாயம்
நடக்கும் போது தட்டிகேட்கும் எண்ணம் கொண்டவரல்ல ரஜினி. தன் மன நிம்மதி ஒன்றையை
முக்கியமாக நினைக்கும் ரஜினி ஒரு சுயநலவாதி என்பதே உண்மை.. இப்போது உடல் நிலையும்
பாதிக்கப்பட்டு இல்லாததால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. மக்கள் இவர் வருவார்
வருவார் என்று எதிர்பார்த்து வெறுத்து போய்விட்டார்கள்.
மணி அவர்களே,
.
தங்களிடைய கருத்தில் உள்ள விஷயங்கள் ஒரு பார்வையாளனாக சரியானவையே. அது குறித்து நான் வீண் வாதம் செய்ய விரும்பவில்லை.
.
ஆனால், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை யாராலும் திட்டவட்டமாக கூறிவிட முடியாது. மக்கள் மனதில் அவருக்கு உள்ள இடம் மிக ஆழமானவை, அரசியல் எதிர்பார்ப்புடன் உள்ள அவர்கள், ரஜினியின் மௌனத்தை கண்டு விரக்தியில் உள்ளதும் உண்மை. ஆனால், நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழக மக்கள் மத்தியில் மிகபெரிய மறுமலர்ச்சியும் எழுச்சியும் பிறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏன் என்றால் ரஜினி என்ற brand -கே உள்ள தனித்துவம் அது.
.
திரு. விஜகாந்த் அவர்கள் பற்றி நான் குறை கூறவில்லை.எதார்த்தமாக பார்த்தால் அவர் தலைமையில் காங்கரஸ், கம்முனிஸ்டு,மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் மிக மிக சொற்ப அளவிலேயே வெற்றியிட்ட முடியும்,
.
தைரியம், பலம் என்பதை விட. ஸ்ரீராமனை போன்ற பொறுமையும், விவேகமும், ஏற்றமோ இரக்கமோ இரண்டையும் ஏற்கும் தன்மை இருந்தால் தான் அரசியலில் சாதிக்க முடியும்.இந்த குணம் ரஜினியிடம் உள்ளது. நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார்.அரியணை ஏறுவார்.
.
rajini will rule tamilnadu
——————————————————-
இதை இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். வெல்டன் வஸி.
- சுந்தர்
.
தலைவர் நிச்சயம் வருவார் வருவார் வருவார்!!!! பாபா படத்தை நன்கு புரிந்தவருக்கு தெரியும்
ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்
தலைவருக்கு நாட்டின் மேலும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை மிகவும் அதிகம்!! சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் அவலங்களையும் மக்களின் வேதனையும் நிச்சயம் தலைவர் புரிந்து இருப்பார்!! நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம்!!
நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழக மக்கள் மத்தியில் மிகபெரிய மறுமலர்ச்சியும் எழுச்சியும் பிறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏன் என்றால் ரஜினி என்ற brand -கே உள்ள தனித்துவம் அது……
திரு வஸி அவர்களே நீங்கள் சொல்லும் அந்த Brand எல்லாம் 1996 காலம். தற்போது நாம் ரசிகர்கள் என்ற முறையில் இல்லாமல் தமிழக அரசியல் பார்வையில் தலைவருக்கு ஆதரவு குறைவு தான்..இன்று நண்பர்கள் நாளை எதிரிகள் என்ற போர்களத்தில் (அரசியல்) தலைவரின் குழந்தை மனம் பாதிக்கபடும்..தலைவருக்கு அரசியல் வேண்டாம் என்பதே ரசிகர்களின் அன்பு வேண்டுகோள் …
மேலே தனது கருத்தினை வெளியிட்ட நண்பர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் ரஜினிக்கு என்று அரசியலில் தனி செல்வாக்கு உண்டு.
கடந்த பொது தேர்தலில் கூட அணைத்து கட்சியினரும் சென்று தலைவரை சந்தித்தது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
***
அது மட்டும் இல்லாமல், இதற்கு தலைவரின் பதில் தான் உங்களுக்கும். "பாபா சரியா போகல, அண்ணன் ஆடிட்டாரு, அசந்துட்டாரு, நான் யானை இல்ல, குதிரை. யானை விழுந்தா எழுந்திரிக்கிறதுக்கு ரொம்ப டைம் ஆகும். நான் குதிரை - டக்குனு எழுந்திரிப்பேன்".
***
நீங்க கடந்த கால அரசியலில் ரஜினிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை வைத்து கூறுகிறிர்கள். ஆனால், கண்டிப்பாக அவர் வருவார். வெல்வார்.
***
இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு.
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!
dot .
மேலும் மணி அவர்களுக்கு எனது தாழ்மையான பதில்:
***
என்ன சொன்னீங்க, தோல்வியும் அவமானத்தையும் சந்திக்கும் மனபக்குவும் இல்லை என்றா???
அவர், இப்படி திரை துறைக்கு வந்து சாதிச்சதே பல தோல்விகளையும், அவமானங்களையும் சந்திச்ச பிறகு தாங்க. அவ்வளவு ஏன், பாபா படம் கூட தோல்வி தான். அதில் இருந்து மீண்டு வரவில்லையா???
***
மற்றும் நீங்கள் சொன்ன குற்ற சாட்டுகள் பலவற்றுக்கு, நான் பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை. நீங்களே, ரஜினியின் ஆரம்ப கால வாழ்கையை புரட்டி பார்த்தால் உங்களுக்கு விடை புரியும்.
***
நாமெல்லாம் நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு வெறும் பேச்சில் மட்டும் (அப்படி இருப்பவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். மற்றவர்கள் மன்னிக்கவும்) எதிர்ப்பு தெரிவிப்போம். மற்ற எதையுமே பண்ண மாட்டோம். ஆனால், நம்மை போல சாதாரணமானவனாய் இருக்கும் போதே, ரஜினி பேசுவது இல்லாமல் அதையும் தாண்டி செய்து உள்ளார். இப்போ இந்த அளவிற்கு, ஒரு சக்தி அவருடன் இருக்கும் போது, அதை வீணாக்குவார??? கண்டிப்பாக மாட்டார். அரசியலுக்கு வருவார். வெல்வார் (எங்களுக்கு அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறது). அப்படி அவர் தன்னால் வர முடியவில்லை என்றாலும், தன்னை வளர்த்த மக்களுக்கு கண்டிப்பாக ஏதேனும் செய்வார். இதில் மாற்றமே இல்லை.
***
மேலும், கண்ணா, அவரின் மறுபிறவி இப்பூவுலகில் எதற்கு? ஆண்டவன் அவரை மக்களுக்கு நல்லதை (நல்லாட்சியை) செய்யவே அனுப்பி உள்ளான்.
***
மேல சொன்னது ஒரு வகையான பதில். இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால், நல்லோர்கள் தங்களின், தாங்கள் ஈன்றதை (புண்ணியங்களை) மற்றவர்களுக்கு தந்துவிட்டு தான் பகவானுடன் சென்று அடைய முடியும் (ஆதாரம் - ஸ்ரீ ராகவேந்திர மகிமை). அந்த நம்பும் ரஜினி, அதாவது மறு பிறவி வேண்டாம் என்றால், கண்டிப்பாக அவர் எல்லாவற்றையும் தன் மக்களுக்கு தந்து விட்டு தான் நம்மை விட்டு பிரிவார் (உடலால்).
***
so, in whatever way, in the end, Rajni definitely would have done something good to the people who had developed him. There is no doubt in it.
***
இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு.
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!
dot .
And also please remember,
***
before going to singapore while he was ill, what he said. It's not just the words came for managing that situation but all came from his heart. He has seen all the prayers and support extended by his fans and common people during that time.
DEFINITELY,
HE WILL DO WHAT HE SAID LIKE HE ALWAYS DID!!!
***
**Chitti**.
Jai Hind!!!
Dot.
மணி அவர்களே,
தன்னம்பிக்கையின் அடையாளம் தலைவர் அவர்கள்..
சினிமா உலகில் நிறத்துக்கு மட்டும் மதிப்பு கொடுக்கப்பட்ட காலத்தில், தன் ஸ்டைல் திறமை மூலம் பல சவால்களை சந்தித்து வில்லனாக பிறகு ஹீரோவாகி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றவர் தலைவர்.. அந்த சமயத்தில் அவர் சந்திக்காத தோல்வி, அவமானம்களா…
In 1996, in spite of creating a major impact in Politics and after the same, in 1998, with wrong interpretation of the words by few mediapersons.. when people (not his true fans) ditched him in Politics and subsequent elections.. During that period is it not that he has experienced the bitterness.. however he has bounced back in the same world of politics that the same media started asking whom "will this time Rajinikanth support".. understanding the situation that these politicians shall exploit their fans (and certainly not him as he cannot be).. provided the right advice and made himself away from the Politics..
In spite of the good message "Known is a drop; unknown is an ocean" in the movie "Baba", because of much hype and few media folks and political cunningness, the movie did not go well (as per the BOX Office though I do not agree.. it is the greedy distributors).. he has experienced but he bounced back in chandramukhi.. continued in Sivaji & with Endhiran he has reached to a stage where no one can reach to that stage..
Even today, lot of people think it is only thalaivar can bring the subsequent purity in Politics.. because by nature he is pure (one who openly communicates and accepts his childhood mistakes can be pure after that throughout.. if possible read the article "avar ellamaal naan illai from thalaivar published in Thaai magazine which is not in circulation now)..
Hence i would say.. your personal opinion is fine.. but before stating it.. if possible.. see whether the relevance of the same..
Thanks,
Ramji R
—————————————————-
///Even today, lot of people think it is only thalaivar can bring the subsequent purity in Politics.. because by nature he is pure///
Excellent sentence.
- Sundaar
Hope Thalaivar watches this article.
நண்பர் மணிகண்டன் அவர்களே ,
நீங்கள் சொன்ன கருத்துக்கள் பல உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள்,ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் சொல்லியதை போல் தலைவர் அரசியலுக்கு வர தயங்குகிறார் ஆனால் நீங்கள் சொன்னதை போல் வெற்றியை மட்டும் ருசிததனால் அல்ல ,ஏன் என்றால் தலைவரை பற்றி அறிந்தவர்கள் பலருக்கு தெரியும் தலைவர் எவ்வளவு தோல்விகளை தாங்கியவர் என்று அதே போல் தலைவர் ,அடுத்தவர்களுக்கு சினிமா உலகில் ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக போய் நிற்கிறார் ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை என்ற பொழுது யாரும் அவருடன் வருவது இல்லை தனி ஆளாய் தான் சமாளிக்கிறார்.இருந்தும் அவர் அரசியலுக்கு வர தயங்குவது அவர் நினைக்கும் அரசியல் வேறு இங்கு நடக்கும் அரசியல் வேறு
அடுத்து நீங்கள் சொன்ன சுயநல வாதி என்ற வார்த்தை சுயநல வாதி என்ற வார்த்தைக்கு முதலில் அர்த்தம் தெரிந்து கொண்டு வரவும் சுயநலமாக அவர் இருந்து இருந்தால் பாபா படத்தில் லாபத்திலும் நஷ்ட கணக்கு காட்டியவர்களுக்கு பாத்து பைசா கூட கிடைத்திருக்காது ,அதே போல் ஒரு மனிதன் தன் மன நிம்மதி வேண்டுவது சுயநலம் என்றால் ,உலகத்தில் உள்ள அனைவருமே சுயநலவாதிகள் தான் உங்களையும் என்னையும் சேர்த்து .
அதனால் தயவு செய்து எதோ பேசுகிறோம் நமக்கு எல்லாம் தெரியும் என்பது போல் கருத்து பதிவதை விட்டு விட்டு நியாமான கருத்தை பதிவு செய்ய முற்படுங்கள் .
Dear Mr. Mani,
I request you to not to compare anyone with our thalaiver, he is not normal man, If he is a normal man he will entered poltics in 1996, apart from normal creature so dont compare with vijaya kanth and others, i hope what happen to chiru in AP, today his position his very bad, we need our to be live for 100 years peacefully, i hope all our fans prayers also the same thing
நண்பர்களே !
நான் super star பற்றி எழுதிய கருத்துக்கள் யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால்
அதற்காக வருந்துகிறேன். கடந்த 37 ஆண்டுகளாக அவரை அதிகமாக நேசிக்கும் மனிதன் நான்.
அப்பழுக்கற்ற ஒரு தலைவன்
அரியணை ஏறினால் லட்ச கணக்கான ஏழைகள் பயனடைய வாய்ப்புள்ளது. நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பார்க்கிற போது
ஒரு நல்ல மனிதன் நாடாட மாட்டாரா என்ற ஏக்கம் நல்லோர் எல்லோர் மனதிலும் இருக்கிறது.
கடவுள் அளவுக்கு அதிகமான மக்கள் சக்தியை ரஜினி அவர்களுக்கு கொடுத்ததும் அதை அவர் பயன் படுத்தாமல் இருக்கிறாரே என்ற வருத்தம் நாட்டில் அதிகமான பேருக்கு உண்டு. அந்த வருத்தத்தின் வெளிப்பாடு தான் என் கடிதம்.
அவர் உடல் நலம் குன்றி இருந்த போது நான் ஆண்டவனிடம் வேண்டியது இதுதான்:
கடவுளே ! சினிமாவிலும் அவர் நடிக்க வேண்டாம். அரசியலுக்கும் அவர் வர வேண்டாம்.
இந்த உலகத்தில் எதாவது ஒரு மூலையில் அவர் சந்தோசமாக இருந்தால் அது போதும். அவருக்கு
உயிர் பிச்சை கொடு என்று வேண்டிக்கொண்டேன். உடல் நலம் பெற்ற பின் அவராக இஷ்டப்பட்டு
அரசியலுக்கு வந்தால் சந்தோசம். வராவிட்டால் ஒரு சிறிய வருத்தம் அடி மனதில் இருந்து கொண்டேதான்
இருக்கும். I revoke my statement on Super Star. I appologise to everyone
Hello Mr. Mani,
*****
you don't need to apologize to us. You have expressed your views on the thalaivar's still nature on politics. I understood your feelings.
***
But don't need to worry.still the chances are there for him to enter into politics.
And more over, we feel the second chance given to him by God was not merely for his own sake. But for us too and for us only mainly.
***
I would tell my belief based on my religious views and also based on my belief and confidence on SRI RAGHAVENDRA SWAMI.
And that's,
அவர் ஸ்ரீ ராகவேந்தர்ரால் உருவாக்கப்பட்டவர். அவரால், உருவாகியவர்கள் எல்லோரும் மக்களுக்கு மேன்மேலும் நல்லது செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு ஆதாரம் "ஸ்ரீ ராகவேந்திர மகிமை" என்னும் நூல் தான். அதில், குருவின் அருள் பெற்ற பலர் மக்களுக்கு பல நல்லதை செய்ததை, செய்து வருகின்றதை எடுத்து கூறி உள்ளார் ஆசிரியர் அம்மன் சத்தியநாதன் அவர்கள். அந்நூலில் நம் சிவாஜி ராவை பற்றியும் வந்துள்ளது (முதல் பாகத்திலும், மூன்றாம் பாகத்திலும்).
அது மட்டும் இல்லாமல், அவரின் மறு பிறவி சாதாரண வாழ்க்கைக்காக இருக்காது என்றே எனக்கு தோன்றுகிறது. கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார். வெல்வார்.
ஒரு வேளை,
அவர் வரா விட்டாலும், மக்களுக்கு ஒரு மிக பெரிய நல்லதை ஒரு அமைப்பாகவோ செய்து விட்டு தான் போவார். அதில் எள்ளவும் ஐயமில்லை.
***
எனவே, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். என்னுடைய கருத்து தங்களை வருத்த பட வைத்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
***
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!
Dot .