You Are Here: Home » Featured, Moral Stories » உலகமே உங்க காலடியில் கிடக்கணுமா? இதோ அதுக்கு ஒரு எளிய வழி! — அன்னையர் தின ஸ்பெஷல்!!

த்துனை பேர் இந்த பதிவை முழுசா படிப்பீங்கன்னு தெரியலே. இருந்தாலும் ஒரு நூறு பேராவது படிச்சி அதுல ஒரு பத்து பேராவது இதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சீங்கன்னா அதுவே எனக்கு பெரிய வெற்றி தான்.

ன்று ‘அன்னையர் தினம்’. நம்மை பத்து மாசம் பெத்து, எத்தனையோ தியாகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் நடுவே நம்மளை வளர்த்து ஆளாக்கிய அந்த தாயோட தியாகத்தை நினைவு கூர வேண்டிய நாள்.

உங்க பெத்தவங்களை சந்தோஷமா நீங்க வெச்சி அவங்களை மதிச்சி நடந்து வந்தாலே போதும்… உலகம் உங்க காலடியில என்பதை உணர்த்துவதற்கு - அன்னையர் தினமான இன்னைக்கு ஒரு கதை சொல்லனும்னு ஆசைப்படுறேன்.

தாய் தந்தையரை துதியுங்கள் - உலகம் உங்கள் காலடியில்!

ஜத்வா, சாத்யகி என்ற இரு நடுத்தர வயது கணவன் மனைவி வடநாட்டில் வாழ்ந்துவந்தனர். பக்தியும் ஒழுக்கமும் நிரம்பிய அவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு புத்திரப் பேறு இல்லை. ஸ்ரீமன் நாராயணனை அனுதினமும் இதற்காக உருகி உருகி பிரார்த்தனை செய்ய, இவர்களது பிரார்த்தனைக்கு மனமிரங்கிய இறைவன் அருளால் சாத்யகி கருத்தரிக்கிறார். சில மாதங்களில் அழகான ஆண் குழந்தை ஒன்று தம்பதிகளுக்கு பிறக்கிறது.

அக்குழந்தைக்கு ஹரி என்று பெயர் சூட்டுகிறார்கள். ஹரியை தம்பதிகள் இருவரும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். சகல சாஸ்திரங்களையும் அவனுக்கு கற்றுத்தருகிறார்கள். ஆனால், வயது கூட கூட, ஹரிக்கு  படிப்பு ஏறாமல், கூடா சகவாசத்தால் தீய வழிகளில் செல்லத் துவங்குகிறான். ஆகையால் கவலை கொண்ட பெற்றோர்கள் அவனுக்கு கால்கட்டு போட விரும்பி தங்கள் குலத்தில் ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இவர்கள் நேரம், வந்த மருமகளும் போகப் போக தனது வேலையை காட்டுகிறாள். நாம் நன்றாக தனிமையில் சந்தோஷமாக இளமையை கழிக்கவேண்டிய இந்த சமயத்தில் இந்த இரண்டு கிழங்களும் ஏன் வீட்டில் இருக்கவேண்டும் என்று அவளுக்கு தோன்றுகிறது. தலையணை மந்திரத்தை கணவனுக்கு ஓதி, பெற்றவர்கள் பால் அவனுக்கு வெறுப்பு ஏற்படும்படி செய்கிறாள்.

ஏற்கனவே பெற்றவர்களை மதிக்காத அவன், மனைவியின் பேச்சை கேட்டு, அவர்களை இன்னமும் கொடுமைப் படுத்துகிறான்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

என்ற குறளுக்கேற்ப, அன்பு மகனின் சுடு சொற்கள் தாங்க முடியாது, வீட்டை விட்டு வெளியேறி காசிக்கு சென்று அங்கேயே தங்களது இறுதி காலத்தை கழித்துவிடுவது என்று முடிவு செய்து, இருவரும்  வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அந்த நிலையிலும் அவர்கள், மகனை சபிக்கவில்லை. “நீ எந்தக் குறையும் இல்லாம நல்லாயிருக்கனும்” என்று கூறி வாழ்த்திவிட்டு தான் செல்கின்றனர்.

கண்டிக்கவும் புத்திமதி கூறவும் இருந்த பெற்றோர்களே போய்விட்ட பிறகு ஹரியை பற்றி கேட்கவேண்டுமா என்ன. உள்ளூர் வேசி ஒருத்தியிடம் அவனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அவள், ஹரிதாஸ் ஓரளவு வசதிமிக்கவன் என்று தெரிந்துகொண்டு அவனுடைய சொத்து மற்றும் அவன் மனைவி சீதனமாக கொண்டுவந்துள்ள பொருட்கள் ஆகியவறை மனதில் வைத்து ஹரியை தனது காம வலையில் வீழ்த்துகிறாள். அதன் பயனாக வீட்டை மறந்து தாசியின் காலடியே கதி என்று ஹரி கிடக்கலானான். அங்கு ஹரியின் மனைவி, தனது மாமனார் மாமியாரை விரட்டிவிட்டது எவ்ளோ பெரிய தவறு என்று புரிந்து வருத்தப்படுகிறாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது.

ஒரு நாள் அந்த தாசி, ஹரி காமத்திலும் போதையிலும் திளைக்கும் சமயத்தில் அவனது சொத்துக்களை எழுதி வாங்கிவிடுகிறாள். பின்னர் அவனது வீட்டிலிருந்தே உள்ளூர் பஞ்சாயத்தார் மூலம் விரட்டிவிட்டுவிடுகிறாள்.

ஹரிக்கு முதன் முறையாக நாம பண்ணின பாவத்துக்கு இது தண்டனை போலும் என்று உரைக்கிறது. அப்போது கூட அப்பா அம்மாவை அவன் கொடுமைபடுத்தியதை எண்ணி அவன் வருந்தவில்லை. தன் சொத்துக்கள் போய்விட்டதே என்று தான் வருந்துகிறான். இந்நிலையில், ஊர் அரசனுக்கு ஹரிதாஸ் தாசியால் வஞ்சிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்த விஷயம் தெரிந்து, தாசியை சிறையிலடைத்துவிட்டு ஹரியிடம் சொத்துக்களை மீண்டும் ஒப்படைக்கிறான்.

மீண்டும் வீட்டுக்கு வரும் ஹரிக்கு புதிய ஞானோதயம் ஒன்று ஏற்படுகிறது. தாசியிடம் சகவாசம் வைத்துக்கொண்ட பாவம் தீர காசிக்கு போய் குளித்தால் தான் ஆச்சு என்று தோன்றுகிறது. உடனே காசிக்கு கிளம்புகிறான். அவனது மனைவியும் உடன் வர பிரியப்பட, அவளையும் கூட்டிக்கொண்டு புறப்படுகிறான். தேவையான உணவுப் பண்டங்கள் மளிகை பொருட்கள் முதலியவற்றை எடுத்துக்கொண்டு கணவன் மனைவி இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு காசிக்கு கிளம்புகிறார்கள்.

அங்கே பல நூறு மைல்களுக்கு முன்னே அவனது பெற்றோர்கள் கால்நடையாக பஜனை கோஷ்டி ஒன்றுடன் காசிக்கு நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இங்கே அவர்களது அருமை மகன் மனைவியுடன் குதிரையில் கிளம்புகிறான்.

காசிக்கு செல்லும்வழியில் ஒரு நாள் மாலை கானகத்தின் நடுவே ஒரு சிறிய ஓடைக்கு அருகே குடிசை போன்ற ஒரு சிறிய ஆஸ்ரமத்தை காண்கின்றனர். அந்த ஆஸ்ரமம், குக்குடன் என்ற ஒருவனுக்கு சொந்தமானது. அவனிடம் சென்று, “காசி இன்னும் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கிறது?” என்று கேட்கிறான். அதற்க்கு குக்குடன், “காசியா…? அது ஏங்கே இருக்கிறதென்று எனக்கு தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் இங்கே தான் இருக்கிறேன். கண் தெரியாத என் அம்மாவையும், கால்கள் இல்லாத என் அப்பாவையும் உடனிருந்து கவனிக்கவேண்டியிருப்பதால் இந்த காட்டை விட்டு நான் வெளியே கூட சென்றதில்லை இதுவரை!” என்கிறான்.

சரி தான். இவன் ஒரு அப்பாவி. எனவே இவன் வீட்டருகே இரவு தங்குவது தான் பாதுகாப்பானது என்று கருதி ஆஸ்ரமத்துக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ஹரியும் அவன் மனைவியும் தங்குகின்றனர்.

உணவை சாப்பிட்ட களைப்பில் மனைவி உறங்கிவிடுகிறாள். இவர்களுடன் வந்தவர்கள் பக்கத்து மரத்தடியில் உறங்கிவிடுகின்றனர்.

ஆனால் ஹரிக்கு மட்டும் தாசி தனக்கிழைத்த துரோகத்தை எண்ணி எண்ணி உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். அதிகாலை இருக்கும். ஏதோ ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்க்கிறது. எழுந்து சென்று என்னவென்று பார்க்கிறான். சற்று தொலைவில் அந்த ஆஸ்ரமத்தை நோக்கி மூன்று பெண்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். மூவரும் கிழிந்த கந்தலான ஆடைகள் அணிந்துகொண்டு தொழுநோயால் பீடிக்கப்பட்ட முகத்துடன் அருவருப்பாக காட்சியளிக்கின்றனர். மூவரும் சென்று அந்த ஆஸ்ரமத்தை கூட்டி பெருக்கி, சாணம் தெளித்து கோலமிட்டு, பல்வேறு பணிவிடைகள் செய்கின்றனர். பின்னர் அந்த ஆஸ்ரமம் வாயிலில் விழுந்து வணங்குகின்றனர். அவர்கள் தோற்றம் உடன தேவலோக குமரிகள் போல அழகாக மாறிவிடுகிறது.

இதை தூரத்தில் இருந்து காணும் ஹரிக்கு ஒரே வியப்பு. சந்தேகம். பொண்ணுங்க ஏன் அங்கே போறாங்க என்று. (புத்தி அப்படி!). உடனே அந்த பெண்கள் முன்னாடி ஓடிப் போய் நிற்கிறான். இவனை பார்த்தவுடன் அவர்கள் திடுக்கிட்டு சாக்டையில் இருந்து வரும் பன்றியை எதிரே பார்த்தால் விலகிப் போவோமே அப்படி பதறி விலகுகிறார்கள். “அய்யோ இவனையா பார்த்தோம்? மகா பாபியல்லவா இவன். பாபங்களின்  பிறப்பிடமல்லவா இவன்?” என்று அலறுகின்றனர்.

ஹரிக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் எல்லாம் யார்? வரும்போது பிச்சைக்காரிகளை போல வந்தீர்கள்… போகும்போது இப்படி இத்துனை அழகாக போகிறீர்களே?” என்று கேட்கிறான்.

இவனுக்கு பதிலளிக்க அவர்கள் விரும்பாமல் இவனை கடக்க எத்தனிக்க, “எனக்கு பதில் சொல்லாமல் நீங்கள் இங்கிருந்து போகமுடியாது” என்று அவர்களை மறிக்கிறான்.

தாயிற்ச் சிறந்த கோவிலுமில்லை - ‘அகத்தியர்’ படப் பாடல் வீடியோ


Video URL : http://youtu.be/y6siMElVT8k

இவனுக்கு பதில் சொல்லிவிட்டு சீக்கிரம் இவனது பார்வையில் இருந்தே தொலைந்துவிடவேண்டும் என்று முடிவு செய்த அவர்கள் ஹரியிடம், “நாங்கள் கங்கா, யமுனை, சரஸ்வதி, ஆகிய புண்ணிய நதிகள். மக்கள் அன்றாடம் அவர்களது பாவங்களை எங்களிடம் நீராடி போக்கிக்கொள்வதால், நாங்கள் குரூரமான உருவத்தை அடைகிறோம். இந்த ஆஸ்ரமத்தில் உள்ள குக்குடன் என்பவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் இருக்கும் திசையை வணங்கி மீண்டும் எங்கள் சுய உருவத்தை பெறுகிறோம்.”  என்கிறார்கள்.

இவன் நம்பமுடியாமல் அவர்களை பார்க்கிறான்.

“நீங்கள் சொல்வது உண்மையென்றே வைத்துக்கொள்வோம், புண்ணிய நதிகள் நீங்கள வந்து பணிவிடைகள் செய்து உங்கள் பாவத்தை போக்கிக் கொள்ளுமளவுக்கு  இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவன் என்ன அவ்வளவு பெரிய புனிதனா? காசி எங்கே இருக்கிறதென்று கூட தெரியாத மடையன் ஆயிற்றே அவன்?”

“அடே…பாவி. எங்கள் பாவங்களை போக்கும் தெய்வம் அவர். அவரை மரியாதையின்றி பேசாதே. கண்களும் கால்களும் அற்ற பெற்ற தாய் தந்தையரையே உற்ற துணையாக கொண்டு, அவர்களுக்கு பணிவிடைகள் செய்து அவர்களை பூஜித்து வாழ்ந்து வருபவர் அவர். அவருக்கு பணிவிடைகள் செய்து அவர் இருக்கும் திசையை வணங்கினால் அன்றாடம் மக்கள் எங்களிடம் கழுவும் எங்கள் பாபங்கள் தொலையும், எங்களுக்கு ஏற்படும் அருவருப்பான உருவம் நீங்கி மீண்டும் சுய உருவத்தை பெறுவோம் என்று அகத்திய மகரிஷி எங்களுக்கு அருளியுள்ளார். ஆனால் உன்னைப் போன்ற துராத்மாக்களின் நிழல் கூட எங்கள் மீது பட்டால் எங்களுக்கு தீங்கு தான். இதோ பார்….!” என்று கூறி ஹரியின் நிழலில், மூவரும் ஒரு நொடி நிற்க, மீண்டும் அருவருப்பான உருவம் பெற்றுவிடுகின்றனர். “பார்த்தாயா… உன் நிழலின் ஸ்பரிசத்தால் எங்களுக்கு நேர்ந்த கதியை? இதனால் தான் நாங்கள் உன்னைக் கண்டவுடன் விலகி சென்றோம்.” என்று கூறி, மீண்டும் குக்குடன் இருக்கும் ஆசரமம் இருக்கும் திசையை நோக்கை விழுந்து வணங்குகின்றனர். மீண்டும் தங்கள் அழகிய உருவத்தை பெறுகின்றனர்.

(கெட்டவங்க நிழல் கூட நம்ம மேல படக்கூடாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்போ புரியுதா?)

நடப்பதை எல்லாம் பார்த்த ஹரிக்கு ஒரு கணம் தலை சுற்றுகிறது. “அப்பா அம்மாவுக்கு பணிவிடைகள் செய்து வரும் ஒருவன் இருக்கும் இடத்தை கூட்டி பெருக்கி, அவன் இருக்கும் திசையில் விழுந்து வணங்கினால் இத்துனை பெருமை என்றால் அதை அனுஷ்டித்து வரும் குக்குடன் எவ்ளோ பெரிய பேறு பெற்றவன் என்பதை புரிந்துகொள்கிறான். அன்றாடம் லட்சகணக்கான மக்கள் நீராடி தங்களின் பாவத்தை போக்கிக்கொள்ளும் புண்ணிய நதிகளே தங்கள் பாவத்தை இவனிடம் தீர்க்கிறதே என்றால் குக்குடன் எந்தளவு பெருமை பெற்றவர் என்று புரிந்துகொள்கிறான். மேலும், தன் பெற்றோருக்கு தான் செய்த கொடுமைகள் கண் முன்னே நிழலாடுகின்றன. கண்ணீர் வடிக்கிறான். கங்கை யமுனை சரஸ்வதி ஆகியோரின் கால்களில் “என்னை மன்னித்து விடுங்கள் தாயே. இந்தப் பாவியை மன்னித்துவிடுங்கள் தாயே” என்று கதறியபடி விழுகிறான்.

“நீ விழவேண்டியது எங்கள் கால்கள் அல்ல… உன் பெற்றோரின் கால்கள். இனியாவது உன் பெற்றோர் மனம் குளிரும்படி நடந்துகொள்.” என்று கூறிவிட்டு மறைகின்றனர் அவர்கள்.

ஹரி, உடனே தனது மனைவியை எழுப்பி அவளை அழைத்துக்கொண்டு நடந்ததை கூறி பெற்றோரை தேடி செல்கிறான். அவர்களை காசிக்கு முன்னதாக கண்டுபிடித்து, அவர்கள் காலில் விழுகிறான். தன்னை மன்னிக்கும்படி கதறுகிறான். மகனுக்கு இப்போதாவது புத்தி வந்ததே என்று மகிழ்ந்த அவன் பெற்றோர் அவனை வாரியணைத்து முத்தமிடுகின்றனர்.

அவர்கள் உடனிருந்து காசி முதலான் புண்ணிய ஷேத்ரங்களை தரிசிக்க செய்துவிட்டு அந்த புண்ணிய பூமியிலேயே அவர்களுடன் எஞ்சியுள்ள காலத்தை கழிக்க விரும்பி, அங்கேயே ஒரு குடிசையை கட்டிக்கொண்டு தங்குகிறான்.

ஒரு நாள் பாயில் படுத்திருக்கும் பெற்றோர்களுக்கு கால்கள் அமுக்கி பணிவிடை செய்துகொண்டிருக்கிறான். அப்போது வாசலில் இருந்து ஒரு குரல் கேட்கிறது… பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குக்குடன் வேடத்தில் வந்து கூப்பிடுகிறார். “ஹரி… நான் குக்குடன் வந்திருக்கிறேன். ஒரு நிமிடம் எழுந்து வா வெளியே…” என்று.

ஆனால், ஹரியோ, “என்ன சுவாமி… வந்திருப்பது யார் என்று எனக்கு தெரியாதா? என் கண்ணனை நான் அறியமாட்டேனா?” என்று பதிலளிக்கிறான்.

அங்கே சாட்சாத் பகவான் கிருஷ்ணர் இவன் குடிசை வாசலில் வாயில் புல்லாங்குழலும், தலையில் மயிற்பீலி அணிந்தும் இடுப்பில் கைவைத்து அழகாக நின்றுகொண்டிருக்கிறார்.

“ஹரி.. சற்று வெளியே வா” என்று அண்ட சராசரங்களையும் கட்டி காப்பவன் கூப்பிட, ஹரி மறுக்கிறான். “மன்னிக்கவும் கிருஷ்ணா. என் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறேன். இப்போது நான் எழுந்தால் அவர்களது உறக்கம் தடைபடும். அவர்கள் விழித்த பின்னர் வருகிறேன். அது வரை இந்த கல்லின் மீது நின்றுகொண்டிரு” என்று கூறி செங்கல் ஒன்றை எடுத்து போடுகிறான்.

கிருஷ்ணர் புன்னகைத்தபடி, “உன் பெற்றோரை நான் எழுப்புகிறேன். கவலைப்படாதே”. என்று கூறி தனது புல்லாங்குழலை இப்படி அப்படி அசைக்க, உறக்கத்திலிருந்து விழிக்கும் அவன் பெற்றோர் பரம்பொருள் வெளியே நிற்பதை பார்த்து பதறியடித்தபடி ஓடிவருகின்றனர்.

“என்ன அபச்சாரம் செய்துவிட்டாய் ஹரி… ஆண்டாண்டுகாலம் தவம் செய்தாலும் பார்க்கமுடியாத மணிவண்ணனை இப்படி எங்கள் பொருட்டு வெளியே காக்க வைத்துவிட்டாயே?” என்று பதற, அதற்கு கிருஷ்ணர், “இந்த உலகில் கண்கண்ட தெய்வங்கள் என்றால் அது பெற்ற தாய் தந்தையரே. அவர்களை பூஜித்து அவர்களுக்கு ஒருவன் பணிவிடை செய்துவந்தாலே என்னை பூஜித்து வந்ததாக கருதி மகிழ்வேன். தாய் தந்தையரான உங்களுக்கு பணிவிடை செய்து பூஜித்து வந்த காரணத்தினால் தான் ஹரிக்கு நாம் தரிசனம் தந்தோம். ஹரி செங்கலை போட்டு எம்மை நிற்கச் சொன்ன இந்த இடத்திலேயே நாம் நிரந்தரமாக கோவில் கொண்டு பண்டரிநாதனாக பக்தர்களுக்கு அருள் பாலிப்போம். இந்த திவ்யதேசமும் பண்டரிபுரம் என்று இனி வழங்கப் பெறும்.” என்று கூறி அப்படியே பகவான் சிலையாகிவிடுகிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் இன்னைக்கும் இருக்குங்க இந்த கோவில்.

(இந்தக் கதை தாங்க, எம்.கே.தியாகராஜா பாகவதர் நடிச்ச ‘ஹரிதாஸ்’ படமா வந்து மூணு தீபாவளி தாண்டி ஓடிச்சி.)

மேற்படி (உண்மை) சம்பவத்துல இருந்து நாம் தெரிஞ்சிக்க வேண்டிய நீதி என்ன?

  • தாய் தந்தையரை போற்றி வணங்கி வருதல் இறைவனுக்கு செய்யும் தொண்டை விட மேன்மையானது.
  • பெத்தவங்கள மதி, உன்னை தேடி எல்லாம் வரும்.
  • கங்கை யமுனை சரஸ்வதி முதலிய நதிகளே தங்கள் பாவங்களை போக்கிக்க அப்பா அம்மாவுக்கு பணிவிடைகள் செய்கிற ஒருத்தருக்கு பதில் பணிவிடைகள் செய்யுறாங்கன்னா அப்பா அம்மாவை கண் கலங்காமல் கவனித்துக்கொள்வது எத்துனை பெரிய பேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  • பெற்றோரை மதிக்காது அவர்களை கண்கலங்க வைக்கும் ஒருவனின் நிழல் ஸ்பரிசம் கூட நமக்கு மிகவும் ஆபத்தானது.
  • இன்னைக்கு அன்னையர் தினம். எத்தனையோ கஷ்டத்துக்கு நடுவுல உங்களை வளர்த்து ஆளாக்கி, இன்னைக்கும் உங்களைப் பற்றி கவலைப்படுற உங்க அம்மாவை முதல்ல விழுந்து கும்பிடுங்க.

அப்பா அம்மாவை மதித்து நடக்கவேண்டிய இந்த விஷயத்தை எல்லா மதங்களும் வலியுறுத்துது:

“அன்னை தந்தையருக்கு சேவை செய்பவரது தரிசனம் ஆண்டவன் தரிசனம்”ன்னு அகத்திய முனிவர் சொன்னார்.

“சொர்க்கம் தாயின் காலடியில் கிடக்கிறது”ன்னு நபிகள் நாயகம் சொன்னார்.

The Bible says, “Honor your father and mother”—which is the first commandment with a promise—”that it may go well with you and that you may enjoy long life on the earth” (Ephesians 6:2-3).

அப்பா அம்மாவோட மதிப்பும் அருமையும் அவங்க இருக்கும் போது நமக்கு புரியாது. அதுவும் அம்மாவோட அருமை, அவங்க இல்லாதவங்களுக்கு தான் புரியும்.

http://onlysuperstar.tamilmovieposter.com/wp-content/uploads/2011/02/IMG_5392.jpg

(இந்த படத்தை ஏற்கனவே நான் ஒரு தடவை சைட்டுல போட்டிருக்கேன். இருந்தாலும் மறுபடியும் பாக்கதவங்களுக்காக போடுறேன்.சென்னை வடபழனி அருகே சிக்னலுக்கு நின்றிருந்தபோது எதிரே நின்ற வாகனம் ஒன்றில் கண்ட வாசகம் இது. அந்த நொடியில் அவசர அவசரமாக காமிராவை எடுத்து க்ளிக்கியது இந்தப் படம். )

‘தீ’ படத்துல ஒரு டயலாக் வரும்…. தம்பி சுமன் கிட்டே ரஜினி கேட்பாரு: “என்னடா பெரிய உத்தியோகம் பாக்குறே…. நைட்டும் பகலும் நாயா அலைஞ்சி கஷ்டப்படுறே. என்ன இருக்கு உன்கிட்டே? என்கிட்டே பாரு… பீரோ நிறைய பணம்… காரு…பங்களா…. சொடுக்கு போட்டா ஓடி வர்ற வேலைக்காரங்க…. உன்கிட்டே?” அப்படிம்பார் ஏளனமா.

அதுக்கு சுமன், “என் கிட்டே அம்மா இருக்காங்க!” என்று கூறுவார்.

‘தீ’ படத்துல ஒரு டயலாக் வரும்…. தம்பி சுமன் கிட்டே ரஜினி கேட்பாரு: “என்னடா பெரிய உத்தியோகம் பாக்குறே…. நைட்டும் பகலும் நாயா அலைஞ்சி கஷ்டப்படுறே. என்ன இருக்கு உன்கிட்டே? என்கிட்டே பாரு… பீரோ நிறைய பணம்… காரு…பங்களா…. சொடுக்கு போட்டா ஓடி வர்ற வேலைக்காரங்க…. உன்கிட்டே?” அப்படிம்பார் ஏளனமா.

அதுக்கு சுமன், “என் கிட்டே அம்மா இருக்காங்க!” என்று கூறுவார்.

ரஜினி பதில் சொல்ல முடியாம ஒரு மாதிரி ஆயிடுவார். மனசளவில் செத்தே போய்விடுவார்.

நீங்க தாங்க முடியாத வறுமையில இருக்கலாம். எத்தனையோ கஷ்டப்படலாம்…. நீங்க இதுவரை கேட்டது எதுவுமே வாழ்க்கைல கிடைக்காம இருக்கலாம். ஆனா, உங்க மேல பரிவும் பாசமும் காட்ட உங்க அம்மா கூட இருக்காங்கல்ல? அப்புறம் என்ன. அம்மாவுக்கு பதிலா, அவங்களை எடுத்துகிட்டு நீங்க கேட்கிற எதுவேணும்னாலும் தரத் தயாரா இருக்கான் ஆண்டவன். நீங்க ரெடியா? ஒத்துக்குவீங்களா? மாட்டீங்கல்ல? அப்புறம் என்ன? ஏன் “அது இல்லே… இது இல்லே”ன்னு கண்ணை கசக்கனும்.  உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உண்மையா கவலைப்படுற, கண்கலங்குற அப்பா அம்மா இருக்காங்க இல்ல? வேற என்னங்க வேண்டும் உங்களுக்கு?

நீங்க தாங்க முடியாத வறுமையில இருக்கலாம். எத்தனையோ கஷ்டப்படலாம்…. நீங்க இதுவரை கேட்டது எதுவுமே வாழ்க்கைல கிடைக்காம இருக்கலாம். ஆனா, உங்க மேல பரிவும் பாசமும் காட்ட உங்க அம்மா கூட இருக்காங்கல்ல? அப்புறம் என்ன. அம்மாவுக்கு பதிலா, அவங்களை எடுத்துகிட்டு நீங்க கேட்கிற எதுவேணும்னாலும் தரத் தயாரா இருக்கான் ஆண்டவன். நீங்க ரெடியா? ஒத்துக்குவீங்களா?

இந்த உலகத்துலயே சுயநலம் இல்லாம கிடைக்கிற ஒரே ஒரு விஷயம் தாயன்பு மட்டும் தாங்க. மத்தவங்க எல்லாம் காட்டுற அன்புல நிச்சயம் சுயநலம் இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, எத்தனையோ படத்துல வேலைக்கு போறதுக்கு முன்னாடி அம்மா காலை தொட்டு கும்பிடுற மாதிரி காட்சி வரும். அது ஏதோ லேடீஸ் செண்டிமெண்ட்டுக்காக வெச்ச காட்சி இல்லே. நம்மோட ஒவ்வொரு அசைவையும் ஃபாலோ பண்ற நம்ம ரசிகர்கள் இதையும் பாலோ பண்ணட்டுமே என்கிற எண்ணம் தான்.

Mannan - Amma Enrazhaikkaadha Song


Video Link : http://youtu.be/Lhy915oczQY

அப்பா அம்மாவை துதிங்க. மத்தது எல்லாம் உங்களை தேடி வரும். இது சத்தியம்!

எனக்குன்னு இந்த தளம் மூலமா அறிமுகம் ஏற்பட்ட நண்பர்கள் வட்டம் ஒன்னு இருக்கு. அதை தான் நான் டீம்னு சொல்றேன். இதுல பெரிய ஆளுங்களோ இல்லே லட்ச லட்சமா சம்பாதிக்கிறவங்களோ, வெட்டித் தனத்துக்கு காசை அள்ளி விடுறவங்களோ, கிடையாது. எனக்கு தெரிஞ்சி என் கூட இருக்கிறவர்கள் எல்லாம் அப்பா அம்மாவை மதிக்க தெரிந்தவர்களும், அவர்களை கண்ணுக்கு கண்ணா பார்த்துக்கிறவங்களும் தான். எனக்கு அது ஒன்னு போதும்.

என்னோட டீம் நண்பர் ஒருத்தர். ரொம்ப வசதியானவ்ரு கிடையாது. மிடில் கிளாஸ் தான். அவரோட அம்மாவுக்கு வலது கால்ல ஏதோ பிரச்னை வந்து படுத்த படுக்கையா இருக்காங்க. கூடப் பிறந்தவங்க இருந்தும் என் நண்பர் தான் அவங்களை உடன் இருந்து கவனிச்சிக்கிறாரு. நாலு இடத்துக்கு போய் வந்து என்ஜாய் பண்ண வேண்டிய வயசுல, ஆபீஸ், வீடு, அப்புறம் அம்மா கூட ஹாஸ்பிடல்னு மாசக்கணக்கா அலைஞ்சிகிட்டுருக்காரு. ஆனா அதுக்காக அவரு துளியும் வருத்தப்படலே. தன்னோட கடமையா நினைச்சி அதை செய்றாரு. இப்போ சொல்றேங்க… ஆண்டவனோட அருளால ஏறும் என்னோட ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் அந்த நண்பர் என் கூட இருப்பாரு.

டிசம்பர் மாசம் நான் நடத்தின் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வர்றேன்னு சொன்ன எத்தனையோ பேர் கடைசி நேரத்துல வரலே. நான் அதுகெல்லாம் கவலைப்படலே. அலட்டிக்கவும் இல்லே. ஆனா நான் மேலே சொன்ன அந்த நண்பர் அந்த ஈவென்ட்டுக்கு வந்தாரு. கடைசி வரைக்கும் என் கூட இருந்தாரு. எனக்கு அது போதும்.

டிசம்பர் மாசம் நான் நடத்தின் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வர்றேன்னு சொன்ன எத்தனையோ பேர் கடைசி நேரத்துல வரலே. நான் அதுகெல்லாம் கவலைப்படலே. அலட்டிக்கவும் இல்லே. ஆனா நான் மேலே சொன்ன அந்த நண்பர் அந்த ஈவென்ட்டுக்கு வந்தாரு. கடைசி வரைக்கும் என் கூட இருந்தாரு. எனக்கு அது போதும்.

லட்ச லட்சமா நீங்க சம்பாதிச்சாலும் இந்த உலகத்தையே ஜெயிச்சாலும் அப்பா அம்மாவுக்கு ஒரு நல்லா பிள்ளையா நாம நடந்துக்குறோமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க. இல்லேன்னு உங்க மனசாட்சி சொல்லிச்சினா உடனே உங்களை மாத்திக்கோங்க.

நீங்க அடிக்கடி சினிமா, பீச், ஹோட்டல், நண்பர்கள் கூட ட்ரீட்னு லைப்பை என்ஜாய் பண்றீங்க. ஓகே தான். ஆனா உங்க வீட்டுக்குள்ளேயே வீட்டு வேலை பார்த்துகிட்டு அடைஞ்சி கிடக்குறாங்களே உங்க அம்மா… அவங்களை பத்தி எப்போவாவது யோசிச்சி பாக்குறீங்களா?

இனி மாசம் ரெண்டு தடவையாவது அட்லீஸ்ட் ஒரு தடவையாவது உங்க அப்பா அம்மாவை வெளியே கூட்டிகிட்டு போங்க. அவர் விரும்புற இடத்துக்கு கூட்டிகிட்டு பொங்க. அது கோவிலா இருக்கலா… சினிமாவா இருக்கலாம்… பீச்சா இருக்கலா…. இல்லே குவீன்ஸ்லான்ட், எம்.ஜி.எம். இந்த மாதிரி பொழுதுபோக்கு பூங்காக்களாக இருக்கலாம். அவங்களை நல்லா என்டர்டெயின் பண்ணுங்க.

பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டுல இருக்குற நண்பர்கள், அடிக்கடி அவங்க கூட ஃபோன்ல பேசுங்க. அவங்க தேவைகளை கேளுங்க. நீங்க கூடவே இருக்குற மாதிரி ஒரு உணர்வை அவங்களுக்கு கொடுங்க. அவங்களுக்கு ஏதாவது தேவையா? தயங்காம என்கிட்டே சொல்லுங்க. நான் செய்றேன். (in Sundays).

ஏற்கனவே வெளிநாட்டுல இருக்குற நண்பர்கள் நிறைய பேர் அவங்க அப்பா அம்மாவை அவங்க எங்கே இருந்தாலும் நல்லா கவனிச்சிக்கிறாங்க. அது எனக்கு தெரியும். இருந்தாலும் நான் சொல்றது வேற சிலருக்கு.

அவங்களோட தேவைகளை நல்லா கவனிச்சிக்கோங்க. முக்கிய முடிவுகளை எடுக்குறதுக்கு முன்னாடி அவங்களை கூப்பிட்டு சொல்லி அவங்களோட அபிப்ராயத்தை ஒரு ஃபார்மாலிட்டிக்காகவாவது கேளுங்க.

சமீப காலமாக என்னோட லைஃப்ல ஏற்பட்டிருக்குற முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமா நான் நினைக்கிறது என்ன தெரியுமா? கடவுள் அருள், உழைப்பு, அதோட பலன் - இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் நினைக்கிற காரணம் என்ன தெரியுமா? நான் வேலைக்கு போறதுக்கு முன்னாடி தினமும் எங்க அப்பா அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு தான் போறேன். அப்பா வெளியே போயிருந்தாருன்னா அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவேன். அதே மாதிரி எங்கே வெளியே போனாலும் “இன்ன இடத்துக்கு போறேன். இந்த வேலையா போறேன்”னு சொல்லிட்டு தான் போவேன். பெரும்பாலும் அந்த வேலை சக்சஸ் ஆயிடும். இன்னைக்கு நிறைய பேர் வெளிய போகும்போது மரியாதைக்கு கூட அப்பா அம்மா கிட்டே சொல்லிட்டு போறதில்லே.

நான் ரொம்ப காலத்துக்கு முன்னாடி அப்பா அம்மாவை நமஸ்காரம் பண்ணிட்டு தான் வேலைக்கு போய்கிட்டுருந்தேன். பரபரப்பான உலகத்துல அந்த பழக்கம் அப்புறம் விட்டுபோச்சு. இப்போ சமீப காலமா (ஒரு ரெண்டு மாசமா) அதை மறுபடியும் செஞ்சிட்டு வர்ரேன். அதோட பலன்களை தான் நீங்க பாக்குறீங்கல்ல…? நானும் ஒரு காலத்துல அப்பா அம்மா கூட நேரத்தை செலவு பண்ணாம திண்ணைப் பேச்சு, வெட்டிபேச்சுன்னு நேரத்தை வீணடிச்சவன் தான். ஆனா ஆண்டவனோட அருளால மாறிட்டேன். புத்தி வந்துடுச்சு.

நீங்களும் இனிமே வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி உங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஜஸ்ட் தொட்டுட்டு போங்க. அதையே வழக்கமா வெச்சிக்கோங்க. அப்புறம் பாருங்க நீங்க எந்த உயரத்துக்கு போறீங்கன்னு. இது சத்தியமான சத்தியமுங்க. இதை மட்டும் நீங்க வழக்கமா வெச்சிக்கிட்டீங்கன்னா போதும். எந்த கோவில் குளத்துக்கும் போகவேண்டாம். எந்த சாமியையும் கும்பிடவேண்டாம். எப்பேர்ப்பட்ட எதிர்ப்பும் சரி துரோகமும் சரி… உங்களை ஒன்னும் பண்ண முடியாது.

அப்பா அம்மாவை ஒரு தரம் சுத்தி வந்து நமஸ்காரம் பண்ணா உலகில் உள்ள அத்துனை தெய்வங்களையும் வணங்கின பலன் கிடைக்குமாம். நீங்க சுத்தி வந்தெல்லாம் நமஸ்காரம் பண்ணவேண்டாம். ஜஸ்ட் முதுகு வளைஞ்சி அவங்க காலை தொட்டு கும்பிட்டுட்டு போங்க. கூச்சமா இருக்குமோ? அப்படித் தானே யோசிக்கிறீங்க. வாழ்க்கையல நாம எது எதுக்கோ எவன் எவன் கால்லயோ விழுந்திருக்கோம். விழுறோம். நம்மளை பெத்த அப்பா அம்மா கால்ல விழுறதுக்கு எதுக்கு வெட்கப்படனும்? வெட்கப்படவேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்குங்க நம்ம கிட்டே. ஆனா இது வெட்கப்படவேண்டிய விஷயம் இல்லே. பெருமைப்படவேண்டிய விஷயம்.

From our archives:
——————————————————————————
கோவிலில் இடம் பெற்ற ரஜினி பட பாடல் – அன்னையர் தின ஸ்பெஷல் கவரேஜ்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=3655
——————————————————————————

[END]

21 Responses to “உலகமே உங்க காலடியில் கிடக்கணுமா? இதோ அதுக்கு ஒரு எளிய வழி! — அன்னையர் தின ஸ்பெஷல்!!”

  1. murugan murugan says:

    அருமையான கதை !!!

    உன்னதமான கருத்துக்கள் !!!

    அனைவரும் அறிந்துகொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை !!!

    அன்னையை வணங்குவோம் !!!

    அன்பை போற்றுவோம் !!!

  2. **Chitti** **Chitti** says:

    நீங்கள் மேல சொன்ன கதை - எங்கோ கேட்டிருக்கிறேன். மறுபடியும், அதுவும் இன்று, உங்களால் நினைவுப்படுத்தப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ***

    நம்ம டீம்-இல் அந்த நபரை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ***

    சுந்தர்ஜி, நீங்கள் சொன்னது போல் இப்படிப்பட்ட நபர்களுடன் இருந்தால் எல்லாம் நல்லதே நடக்கும் தான். மற்றும், உங்களின் இந்த பதிவு போன்ற தன்னலம் இல்லாது பல நல்ல விஷயங்களை சொல்வதால் தான், பேரும், புகழும் உங்களை தேடி வர ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு, மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!!!

    ***

    உண்மையில், என் தாய் தந்தையரிடம் வருடத்தில், ஒரு நாள் தான் விழுந்து கும்பிட்டு உள்ளேன். மற்ற நாட்களில் இல்லை.

    ஆனால், நான் எனது தாயை பற்றி நினைக்காத நாளில்லை. எப்படி மகா பாரதத்தில், கிருஷ்ணன் வேண்டுமா அல்லது அவனின் படைகள் வேண்டுமா என்றால், கிருஷ்ணனுடன் இருப்பதுதான் நல்லது என்பது போல் (ஆயினும், துரியோதனன் கிருஷ்ணனின் படைகள் தான் வேண்டும் என்று, அதை பெற்றுக்கொண்டதாக ஞாபகம். தவறு இருந்தால் மன்னிக்கவும்) நாம் நம் தாயுடன் இருப்பது தான் நல்லது.

    நீங்கள் சொல்வது போல், பெற்றோர்களின் காலில் விழுவது பெருமைப்பட கூடிய செயல்தான் என்றாலும், நான் அந்த செயலை நீங்கள் சொல்வது போல் வெட்கப்பட்டு செய்வதில்லை. ஆயினும், என் மனதில், அந்த ஒரு தருணத்தில் இருக்கும் அன்பினை விட, நாள் தோறும் மனதார அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயம் என்று இருந்துவிடுவது.

    ***

    ஒன்று மட்டும் நிச்சயம், சமீப காலங்களில் (முன்பு இருந்ததை விட மாறி விட்டேன்), எனது தாயாருக்கு நல்லதே நடக்க வேண்டும், இனி வரும் காலங்களில் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றேன். அதற்கு ஒரு சில கடமைகள் நான் செய்து முடிக்க வேண்டும். அதை முடிப்பேன். அதற்க்கான செயல்களில் இறங்கி உள்ளேன்.

    ***

    Btw, Wish all you very happy mother's day (to all mothers) and more over to gents, take care of your mothers. there is nothing more valuable than her care and love.

    ***

    Lovely Thanx for publishing this article today Sundarji.

    ***

    **Chitti**.

    Jai hind!!!

    Dot.

  3. Amma perumai solum Arumaiyana kathai. Happy mothers day to all . Superb article thanks na

  4. chithamparam chithamparam says:

    I wish to publish this article on my blog http://www.vanavil7.blogspot.com

    ——————————
    Thanks.
    - Sundar

  5. chithamparam chithamparam says:

    ஒரு பொண்ணை பார்த்தவுடன் நீ நேசிக்கின்றாய்.. இங்கு உன்னை பார்க்காமலே நேசித்தவள் அம்மா..

    அவளைநேசிக்க மறந்து விடாதே மனிதா…

  6. B. kannan B. kannan says:

    அன்னையர் தினத்தன்று இந்த கதையை படித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நமது டீமில் இருக்கவும் பெருமைப்படுகிறேன்.

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

  7. swami swami says:

    Nice article Sundar! This really made me cry! Good luck to you on publishing this!

  8. Krishnakumar- Russia Krishnakumar- Russia says:

    நீ மகன் என்றால் உன் தாயை மதிச்சா தான் மதிப்பு …………இது என் தலைவன் வழி……….நானும் அவ்வழியே …………..

  9. Anonymous says:

    தாய் என்பவள் உன்னதமானவள்…..என்னையும் தன சொந்த பிள்ளை போல் பாவிக்கும் என் நண்பர்களின் அம்மாக்கள் எத்தனயோ பேர் உண்டு…உங்களுக்கும் இருப்பார்கள்….! அவர்களும் நம்மக்கு தாய் தான்…..நம் சொந்த அம்மாவிற்கு தரும் அதே மரியாதையும், அன்பையும் அவர்களுக்கும் தருவோம்….நம் வாழ்வின் வளம் இரட்டிப்பாகும்…..!

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா ……உங்களை வணங்குகிறோம்…….!(என் அனைத்து தள நண்பர்களின் அம்மாவிற்கும் சேர்த்து…)

    “தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு !

    நீ தனிதனியா கோவில் குளம் அலைவதும் எதற்கு?

    அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து !

    ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நடத்து ! ”

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  10. s.vasanthan s.vasanthan says:

    தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்!இதை யார் மறுக்க முடியும், மறுப்பவன் மனிதன் இல்லை ,சூப்பர் சுந்தர் ,நன்றி ..

  11. Sankaranarayanan Sankaranarayanan says:

    சூப்பர் சுந்தர்ஜி…..

    என் நண்பன் ஒருவரின் அம்மா எனக்கு இதே அறிவுரையை 28 வருடங்களுக்கு முன்னதாக சொன்னார்கள். அன்றில் இருந்து இன்று வரை நன் என் அம்மாவுடன் இருக்கும் நாட்களில் அவர்கள் பதம் தொட்டு வணங்காது வெளியில் போவதில்லை. உண்மையில் பெற்றோர் ஆசி இருந்தால் நாம் வாழ்வில் நிச்சயமாக எல்லாம் அடையலாம். அதற்க்கு இரையும் துணை இருக்கும்.

    நன்றி.

  12. harisivaji harisivaji says:

    உலகத்தில் உள்ள எந்த மூலையிலும் ஒத்து போகும் ஒரே விஷயம் அம்மா

    நம் டீம் இல் இருகிறதுக்கு முதல் அடிப்படையான தகுதி பெற்றோரை மதித்து அவங்களுக்கு உதவி அவர்களை சந்தோஷ படுத்பவர்களே …அப்படி இல்லாமல் அவர்களே மதிக்காதவர்களை நம்மிடம் சேர்ந்த பின் தானாக மாறிடுவார்கள்

  13. Somesh Somesh says:

    Good article Sundarji.. Thanks for sharing with us

  14. C.D.Gangaa C.D.Gangaa says:

    தாய் தந்தையரை துதியுங்கள்….

    சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    gangaa

  15. Saravanan D M Saravanan D M says:

    Good Article.

  16. Venky Venky says:

    ஜி…ரொம்ப நல்ல article…சூப்பர்..

    I was telling about this article to my friends…one of my friend was reading thru the HARI story…suddenly his grandmother came near his computer desk and started telling the remaining story…I surprised to hear this…

    This shows how much time and effort you are taking to update one article with true information…This is making our site more interesting and worthy…Really 'beyond the entertainment with true values'…

    Great Work Sundarji..Thanks for continuously giving us worth reading articles….

  17. KannanV KannanV says:

    உண்மையான வார்த்தைகள் "தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்!".

    அன்னையர் தின வாழ்த்துகள்.

    கண்ணன் வை

  18. RAJA RAJA says:

    கடவுள் எல்லோருடனும் இருக்க முடியாது என்று படைத்த ஒரு உறவு தான் "அம்மா ".

  19. Mohamedamhar Mohamedamhar says:

    Naan suvasittha moonrelutthu ''AMMA''

  20. Saravanan Saravanan says:

    சுந்தர் அண்ணா,

    இப்பொழுது தான் இந்த பதிவினை படிக்கின்றேன். என் உடல் கூசுகின்றது. என் தலையில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. வெட்கப்படுகின்றேன் நான். இனிமேல் முயற்சி செய்கின்றேன்.
    தத்துவவாதி போல் நீங்கள் கூறும் ஒவ்வொன்றையும் மூளையில் எற்றிக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி சுந்தர் அண்ணா.

    ———————————————-
    நன்றி சரவணன். தாய் தந்தையரை துதிப்பதன் பலன் எண்ணிலடங்காது. புகழ் பெருமை அனைத்தும் உங்களை தேடி வரும். இந்தப் பதிவை அலட்சியமாக நினைத்தவர்கள் அனைவரும் - மீண்டும் ஒரு முறை இந்த பதிவை முழுமையாக படிக்குமளவிற்கு - ஒரு உண்மை சம்பவத்தை விரைவில் கூறுகிறேன்.
    - சுந்தர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
  • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
  • Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates