









You Are Here: Home » Flash from the Past » சும்மா வந்ததா சூப்பர் ஸ்டார் நாற்காலி?
மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் நடிக்க வந்து தன்னை நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள சூப்பர் ஸ்டார் ஆரம்ப காலங்களில் செய்த முயற்சிகள் எண்ணிலடங்கா. இவற்றில் பல விஷயங்கள் இன்னும் வெளியே தெரியவில்லை. காரணம் அவர் இன்னும் அவற்றை கூறவில்லை. “நான் இப்படி கஷ்டப்பட்டேன், அப்படி கஷ்டப்பட்டேன்” என்று அவர் அவர் இது வரை கூறியதில்லை.
நாம் இதுவரை கேள்விப்பட்டதெல்லாம், அவரது குருநாதர் கே.பாலச்சந்தர் மற்றும் அவருடன் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்த டெக்னீசியன்கள், நடித்த நடிகர் நடிகையர் உள்ளிட்டவர்கள் கூறியது தான். அவர் மனம் திறந்து பேசினால் எத்துனை விஷயங்கள் நமக்கு கிடைக்குமோ.
இதோ அவருடன் பல படங்களில் பணியாற்றிய புகைப்பட கலைஞர் ஒருவர் கோருவதை படியுங்கள்.
சும்மா வந்ததல்ல இந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி என்பது புரியும்.
சாதனையாளர்கள் முதலில் சந்திக்கும் வெகுமதி எது தெரியுமா ஏளனம் தான். அதையெல்லாம் தாண்டி தான் வெற்றிக்கான சிம்மாசனத்தை அடைய முடியும்.
[END]
யாவரும் உழைச்சா உயர்திடலாம் என்று எடுத்து காட்டுவது சினிமா தான்!!
அதுக்கு சாட்சி யாரு தான் அட வேறு யாரு நம்ம "தலைவரு" தான்
அவர் உருவம் பாரு எளிமை அந்த எளிமை தானே அவருக்கு வலிமை!! தலைகனமில்லாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டும் தான்!!!!
கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு…. இஷ்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்.
இது தலைவர் வாழ்ந்து காட்டி நமக்கு சொன்ன அறிவுரை.
இதற்கு முந்தைய பதிவில் வந்த கமெண்ட்க்கு இந்த பதிவு ஒரு நெத்தியடி.
***
என்னமோ, அவர்க்கு மட்டும் வாழ்க்கையில் எதுவுமே கஷ்டப்படாமே எல்லாம் கூரையில் இருந்து கொட்டின மாதிரி தோணுதோ ஒரு சிலர்க்கு???
***
இந்த தன்னடக்கம் உள்ள, புகழை விரும்பாத, தன்னை உயர்த்தி விட்ட மக்களுக்காக, பல நல்லவற்றை செய்யும், செய்ய துடிக்கும் ஒரு 'மனிதனுக்கு' ரசிகனாக இருப்பதில் பெருமை படுகிறேன்!!!
***
இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு.
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!
dot .
முற்றிலும் உண்மை சுந்தர் ஜி !!!
இந்த உலகில் உழைத்து முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலைவர் ஒரு பாடம் !!!
எனக்கு ஒரு ஆசை ,தலைவர் கண்டிப்பாக சுயசரிதை எழுத வேண்டும்,அப்பொழுது தான் நமக்கு தெரியும் யார் உண்மையான நண்பர்கள் ,யார் துரோகிகள் என்று
Hi Sundar,
He is Famous still Photographer Stills Ravi and he worked many movies with thalaivar on 80s and 90s
தலைவரின் இந்த வெற்றி, புகழ், பெயர் எல்லாம் ஒரே இரவில் அவர் சம்பாதித்தது அல்ல……அல்லும் பகலும் பாராமல் சதா சர்வகாலமும் சினிமாவை நேசித்து உழைத்ததே காரணம்……சும்மா யாருக்கும் எதையும் ஆண்டவன் கொடுத்திட மாட்டான்….இந்த உலகில் எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு…!
-
கடந்த 1978 ஆம் வருஷம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களின் எண்ணிக்கை மொத்தம் 21 (பார்க்க : இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழ் 2011 )………இதற்க்கெல்லாம் எத்துனை உழைப்பு தேவைப்படும்……இந்த உழைப்பு, அர்ப்பணிப்பு தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலியை தந்திருக்கிறது…..இந்த நிலைமைக்கு வந்த பிறகும் அவர் உழைப்பதை நிறுத்தவில்லை…எந்திரன் படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பே இதற்கு சாட்சி…!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
தலைவா உன்னை போல் எவரும் இல்லை,இனியும் எவரும் உன்னை போல் பிறக்க போவதும் இல்லை.
சூப்பர் தலைவா