You Are Here: Home » Featured, Happenings » பிரசன்னா - சினேகா தம்பதியினரை நேரில் வரவழைத்து வாழ்த்தி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!

மீபத்தில் நடைபெற்ற நடிகர் பிரசன்னா - சினேகா திருமணத்தில் சூப்பர் ஸ்டார் தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக இது போன்ற சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட மணமக்களை நேரடியாக தனது இல்லத்திற்கு வரவழைத்து அவர்களை வாழ்த்தி பரிசு வழங்குவார்.

பெரும்பாலும் அது ஸ்ரீ ராகவேந்திரர் படமாகவே இருக்கும்.

பிரசன்னா - சினேகா தம்பதியினரை இதே போன்று அவர் தமது இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்தி பரிசு வழங்கியுள்ளார்.

இது குறித்து பிரசன்னா கூறுகையில், “ஒரு இனிய துவக்கத்திற்கு சூப்பர் ஸ்டாரிடமிருந்து ஒரு அற்புதமான பரிசு. மறக்க முடியாத தருணம்” என்று கூறியுள்ளார்.

மணமக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

7 Responses to “பிரசன்னா - சினேகா தம்பதியினரை நேரில் வரவழைத்து வாழ்த்தி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!”

  1. Sankaranarayanan Sankaranarayanan says:

    வெள்ளை மனசுக்காரர் வெள்ளை உடையில் மன நிறைவோடு வாழ்த்தி உள்ளார். நாமும் அவரோடு புதிய தம்பதியரை வாழ்த்துவோம்.

  2. murugan murugan says:

    மணமக்கள் இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடனும் நல் ஆரோய்க்கியதுடனும் மன அமைதி பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம் !!!

  3. KUMARAN KUMARAN says:

    தலைவரின் ஆசி கிடைத்து விட்டது வேறென்ன வேண்டும் .தலைவரின் ஆசி தாயின் ஆசி போல .

  4. s.vasanthan s.vasanthan says:

    பொதுவாக கருப்பு உடைகளை விரும்பி அணியும் தலைவர் வெண்மை உடையில் ,அசத்தல் .இனி இந்த உடை தொடருமா ,,தொடர்ந்தால் நம் நாடும் வெண்மையடையும்,தம்பதியர்க்கு வாழ்த்துக்கள் ..

  5. Anonymous says:

    தலைவர் சும்மா சூப்பரா கிண்ணுனு இருக்கார் :)

    மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்

  6. Anonymous says:

    மணமக்கள் இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடனும் நல் ஆரோய்க்கியதுடனும் மன அமைதி பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம் !!!

    .

    சுந்தர், தலைவர் ஹாங்காங் போகுமுன் எடுகபட்டதா இல்லை அதற்கு பின்பா?

    .

    மாரீஸ் கண்ணன் .

  7. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் …

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates