









You Are Here: Home » Fans' Corner, Featured » அதிசயம் ஆனால் உண்மை — செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம்!
“தாய் தந்தையரை துதியுங்கள், வாழ்க்கையில் நீங்கள் உயர்வீர்கள்….! பொன், பொருள், புகழ் உள்ளிட்ட அனைத்தும் உங்களை தேடி வரும்!!!” என்பதை விளக்கும் வகையில், ஒரு கதையை கூறி சில நாட்களுக்கு முன்பு (அன்னையர் தினத்தன்று) ஒரு பதிவை அளித்திருந்தோம். அதை எத்துனை பேர் முழுமையாக படித்திருப்பீர்கள் என்று தெரியாது.
சரி…. கொஞ்ச நாள் முன்னாடி நான் கேள்விப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை சொல்றேன்.
என் நண்பரோட நண்பருங்க இவர். கால் டாக்ஸி டிரைவரா வேலை பார்க்குறார். பேர் கார்த்திகேயன். அவர் அவங்க அம்மா. ரெண்டே பேர் தான் அவங்க ஃபேமிலில.
புறநகர்ப் பகுதியில வீடு இருக்குது அவருக்கு. சிட்டிக்கு அவுட்டர்ல வீடு இருக்குறதால அவரால் டூட்டி முடிஞ்சி வீட்டுக்கு சரியான டயத்துக்கு போகமுடியலே. வீட்டுல வேற அம்மா தனியா இருப்பாங்க. அதுனால, சமீபத்துல ஒரு நாள், நகருக்குள்ளே வீடு மாற விரும்பி, சிட்டிக்கு உள்ளே வீடு தேடி அலைஞ்சிருக்கார்.
சென்னையின் முக்கியப் பகுதியான தி.நகர்ல ஒரு குடியிருப்பு பகுதி ஒண்ணுல, அவர் தேடிகிட்ருக்குற மாதிரி வீடு ஒன்னு மனசுக்கு நிறைவா, எளிமையா கிடைச்சது. அவருக்கு வீடு ரொம்ப பிடிச்சி போச்சு.
வீட்டுக்காரரிடம், “சார்… நாளைக்கு வந்து அட்வான்ஸ் பண்ணிடுறேன்” என்கிறார். அதற்கு அந்த ஹவுஸ் ஓனர், “ஏற்கனவே ஒருத்தரு பார்த்துட்டு, சீக்கிரம் அட்வான்ஸ் கொடுக்குறேன்னு சொல்லியிருக்கார். அதனால் நீங்க உடனே அட்வான்ஸ் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வீடு. இல்லேன்னா யார் முதல்ல அட்வான்ஸ் கொடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் வீடு. அட்லீஸ்ட் டோக்கன் அட்வான்சாவது பண்ணனும்….!” அப்படின்னு கறாரா சொல்லிடுறாரு.
“காலைல வந்து மொத்த அட்வான்சும் பண்ணிடுறேன் சார்….!” இவர் சொல்ல, “சரி… நாளைக்கு எனக்கு கொஞ்சம் பக்கத்துல போகவேண்டிய வேலை இருக்கு. வீட்டுக்கு வந்தவுடனே ஃபோன் பண்றேன். நீங்க உடனே வந்துடுங்க” என்கிறார் ஹவுஸ் ஓனர்.
இவர் சரியென்று கூறிவிட்டு, தனது மொபைல் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். வீட்டில் அவரது அம்மாகிட்டே சொன்னவுடனே, “வேற யாராவது முந்திக்க போறாங்க. நான் கூட அவசியம் இல்லே. நீ நாளைக்கே போய் அட்வான்சை கொடுத்திட்டு வந்துடுறா” என்று சொல்லிவிடுகிறார்கள்.
மறுநாள் காலை, இவர் டூட்டியில் இருக்கும்போது ஹவுஸ் ஒனரிடமிருந்து ஃபோன் வருகிறது. இவருக்கு போன் செய்த வீட்டு முதலாளி… ஒரு சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. பின்னர்….”சரி… நீ வாப்பா… அட்வான்ஸ் கொடுத்திடு!” என்கிறார்.
அட்வான்ஸ் கொடுக்கப் போனவரிடம் அந்த ஹவுஸ் ஓனர் சொன்னதை கேட்டு இவருக்கு கடும் அதிர்ச்சி. சாதாரண அதிர்ச்சி அல்ல. இன்ப அதிர்ச்சி.
“நீ இந்த வீட்டுக்கு வாடகையே தரவேண்டாம்பா. அட்வான்ஸ் மட்டும் போதும். எவ்வளவு நாள் இருக்கணும்னு ஆசைப்படுறியோ அவ்ளோ நாள் இருந்துக்கோ. ஒரு நையா பைசா கூட வாடகை வேண்டாம்……” என்கிறார்.
“என்ன சார் சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலே…”
“நீ உன் செல்போன் காலர் டியூனா வெச்சிருந்த பாட்டை கேட்டேன். என்னமோ தெரியலே. எனக்கு அதுக்கு பிறகு தோணிச்சி இது. அதான் உடனே உன்கிட்டே சொல்லிட்டேன்.”
நண்பருக்கு லேசில் அவர் வார்த்தைகளில் நம்பிக்கை வரவில்லை. இருந்தாலும் அந்த ஹவுஸ் ஓனர் உறுதியாக சொல்லிவிட்டாராம் வாடகையே வேண்டாம். இருக்குற வரைக்கும் இருங்கன்னு.
அப்படி என்ன பாட்டை தான் அவர் வெச்சிருந்தார் காலர் ட்யூனா?
“தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…” என்கிற ‘அகத்தியர்’ பட பாட்டை தாங்க.
“அப்பா அம்மாவை வணங்குங்க. வாழ்க்கையில் நீங்க ஓஹோன்னு வருவீங்க. எல்லாம் உங்களை தேடி வரும்!”னு போன பதிவுல சொன்னேன். இங்கே பாருங்க ஒருத்தர் சும்மா காலர் ட்யூன்ல அந்த பாட்டை வெச்சதுக்கே அவருக்கு வாடகையே இல்லாம ஃப்ரீயா வீடு கிடைச்சிருக்கு. அப்போ மனப்பூர்வமா அப்பா அம்மாவை வணங்கிட்டு வந்தா எவ்ளோ சிறப்புக்கள் கிடைக்கும்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
சென்னையில், அதுவும் இன்னைக்கு வாடகை இருக்குற ரேஞ்சுல - அதுவும் - தி.நகர்ல நடந்த உண்மைச் சம்பவங்க இது. (முடிஞ்சா சம்பந்தப்பட்ட ரெண்டு போரையும் பேட்டி எடுத்து போடமுடியுமான்னு பார்க்குறேன்.)
அற்புதங்களோ அதிசயங்களோ அவங்கவங்க வாழ்க்கையில அவற்றை நம்புறவங்களுக்கு தான் அது சாத்தியமாகும். அப்பா அம்மாவை வணங்கினா நல்லது நடக்கும்னு மனப்பூர்வமா நம்புங்க. நல்லதே நடக்கும்!
சரி… அந்த ஹவுஸ் ஓனருக்கு இப்படி தோன்ற வேண்டிய அவசியம் என்ன?
அவர் வாழ்க்கையில் அவரது பெற்றோருக்கான கடமைகள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகள் உள்ளிட்டவற்றில் அவருக்கு ஏதாவது சந்தேகங்கள் நீண்டகாலமாக இருந்திருக்கலாம். மேற்படி பாடலை கேட்டவுடன் அவருக்கு அதற்கான பதில் கிடைத்திருக்கலாம். (சில நீண்ட கால சந்தேகங்களுக்கு பதில் எங்கே எப்போ கிடைக்கும்னு சொல்லமுடியாதுங்க!) உடனே அதற்கு வெகுமதியாக நம்முடைய நண்பரின் நண்பருக்கு வாடகையின்றி வீட்டை அளித்துவிட்டார். அவ்வளவே!
(மேலே இணைக்கப்பட்டுள்ள படம், திருவள்ளூர் அருகேயுள்ள பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு ‘மே 5 - நரசிம்ம ஜெயந்தி’ அன்று நான் சென்ற போது எடுத்தது. கோவிலுக்கு சற்று முன்பாக ரம்மியமான இந்த காட்சியை கண்டவுடன், மனதுக்கு இதமாக இருக்க, உடனே நமது காமிராவில் க்ளிக்கியது. கோவில் கோபுரமும், மேலே கதிரவனின் ஒளியும் - அன்னையின் பெருமை பற்றி கூறும் ஒரு பதிவிற்கு இதை விட சிறந்த புகைப்படத்தை போடமுடியுமா என்ன?)
நல்ல பாடலின் வீடியோவை இன்னொரு முறை இங்கே ரிபீட் செய்கிறேன்….!
தாயிற் சிறந்த கோவிலுமில்லை… பாடல் வீடியோ…
Our Mother’s Day special article:
—————————————————————————
உலகமே உங்க காலடியில் கிடக்கணுமா?
இதோ அதுக்கு ஒரு எளிய வழி! — அன்னையர் தின ஸ்பெஷல்!!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14781
—————————————————————————
[END]
நல்ல மனம் உள்ள ஒரு சில பேர் தான் இப்படி செய்வார்கள்.
இந்த செயல் மூலம் அந்த வீட்டுகாரர் ஓர் VIP ஆகி விட்டார்.
அவருக்கு எல்லா நலமும் நிம்மதியும் அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஒரு கிரேட் சல்லுட் அந்த ஹவுஸ் ஓணர்-க்கு. வாடகை இல்லாமல் வீடா.. அதற்க்கு எல்லாம் பெரிய மனது வேண்டும்… கிரேட் சுந்தர் அண்ணா அருமையான இந்த பதிவிற்கு..
போட்டோ சூப்பர்… ணா..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
இந்தக்காலத்திலும் இப்படி நல்ல உள்ளங்கள் வாழ்வதை நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது .நல்லதை நினைப்பதை போன்றுதான், நல்ல பாடல்களை கேட்பதும் ,இவைகளால் நமக்கு நன்மைதான் ஏற்படும் .
நல்லவங்களுக்கு எப்போதும் ஆண்டவன் துணை இருப்பான்………….
நல்ல அதிர்வுகளுக்கு (Positive energy) எப்போதும் நன்மையே தரும்
படிக்கும்போது என்ன்வோபண்ணுது….சொல்லவர்த்தைகள் இல்லை…
.
அம்மா அப்பா இருவரும் இருக்கும்போது யாருக்கும் எதுவும் தெரியாது…அவர்களில் யாராவது ஒருவர் இல்லைஎன்றாலும் அதன்வலி மிகவும் கொடுமையானது…
.
மாரீஸ் கண்ணன்
Antha house owner mathiri karunai ullam kondavanga irupathu atcharyam. Pirarin Thai pasathai mathichathu great yen na athu ellorin kadamai.
இதே போல் இன்னொரு பாடலும் உண்டு. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை - TMS அவர்கள் பாடியது. உண்மையான தாய் பாசம் உள்ளவர்கள் கேட்டால்
உருகிவிடும் அளவிற்கு TMS உணர்வுடன் பாடியிருப்பார். இந்தமாதிரி பாடல்களும் பாடகர்களும் இனி நமக்கு கிடைக்குமா ?
இதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த வீட்டு உரிமையாளருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
***
இதை எங்களுக்கு தெரிவித்த சுந்தர்ஜி அவருக்கு நன்றி.
***
**சிட்டி**.
ரொம்ப அருமையான பதிவு . உங்களுடைய இந்த பதிவு பலருடைய அறிவுகண்ணை திறக்க என் வாழ்த்துக்கள்.
மனதிற்கு இதமான பதிவு !!!
படித்தவுடன் நம்மையும் அறியாமல் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கிறது !!!
கலி காலத்தில் கல்லுக்குள் ஈரம் இருப்பதை கண் முன்னே காணும் வாய்ப்பை அளித்த சுந்தர் அவர்களுக்கு நன்றி !!!
சுந்தர் ஜி
ரொம்ப நல்ல பதிவு. உண்மையில் சொல்கிறான் இது போன்ற பதிவுள்கள் படிக்கும் எங்களிடம் சில நாட்களாவது மாற்றத்தை உருவாக்கும் நன்றி sundar
சுந்தர்ஜி நாளுக்கு நாள் நமது தளத்தின் தரம் உயர்ந்து கொண்டே வருகிறது. மிக்க மகிழ்ச்சி…..
கடமையை செய்… பலனை எதிர் பார்…..!