









You Are Here: Home » Featured, Rajini Lead » ரஜினி தலைமைப் பண்புகள் நிரம்பிய ஒரு கார்பரேட் லீடர் — கார்பரேட் தளத்தில் வெளியாகியுள்ள சூப்பர் கட்டுரை!
சூப்பர் ஸ்டாரை பற்றி எத்துனையோ கட்டுரைகளை, விமர்சனங்களை படித்திருப்போம்.
அவற்றை கூறுவது யார், எங்கு என்பதை பொறுத்து அதன் மதிப்பு அமைகிறது. ரஜினி அவர்களை பற்றி உயர்வாகவோ அல்லது மதிப்பாகவோ அவருடன் பணிபுரிந்த திரைக் கலைஞர்கள், சக நட்சத்திரங்கள், அவரால் ஏதோ ஒரு வகையில் பலனடைந்தவர்கள், அவரது அபிமானிகள், ரசிகர்கள், ஆகியோர் கூறுவதற்கும் அவருக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒருவர் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
அதுவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு தகுதியான நபர்களை பணியமர்த்தும் ஒரு நிறுவனத்தின் பயிற்சியாளர்
கூறுவதற்கு நிறைய நிறைய வித்தியாசம் உள்ளது. அதுவும் www.itsmyascent.com போன்ற ஒரு கார்பேரேட் மனிதவள செயல்பாடுகள் பற்றிய தளத்தில் அதை கூறுவதற்கு இன்னமும் வித்தியாசம் உள்ளது.
கீழ் கண்ட கட்டுரையின் ஆசரியர் அபர்ணா மாத்தூர், கார்பரேட் பணியாளர்களுக்கு தலைமைப் பண்பு, உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சியளிக்கும் ப்ரேர்னா பயிற்சி மையத்தில் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் ஆவர். www.itsmyascent.com தளத்தில் சூப்பர் ஸ்டாரை பற்றிய இவரது கட்டுரை வெளியாகியுள்ளது.
ஆங்கிலத்தில் இருந்த கட்டுரையை நமது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன்.
ரஜினி தலைமைப் பண்புகள் மிக்க ஒரு உண்மையான கார்பரேட் தலைவர்!
2010 ஆம் ஆண்டு இந்திய சினிமா, 375 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்த ஒரு மகத்தான திரைப்படத்தை கண்டது. ரஜினி நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் தான் அது. ரஜினியின் தீவிர ரசிகர்கள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் தியேட்டர்களில் க்யூவில் நின்று அந்தப் படத்தை கண்டுகளித்தனர். இந்திய சினிமா ஒரு சினிமா நடிகருக்கு இந்தளவு இப்படியொரு ரசிகர் கூட்டத்தை கண்டதில்லை.
பிராந்திய, கலாச்சார, மன எல்லைகளை தாண்டி இப்படி ஒரு வரவேற்ப்பை ரஜினி எப்படி பெறுகிறார் என்று நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு சூப்பர் ஸ்டாரின் நட்சத்திர அந்தஸ்த்துக்குரிய அத்துனை சம்பிரதாயங்களையும் அவர் உடைத்தும் கூட இந்த வரவேற்ப்பை அவர் பெறுகிறார் என்பது தான் இன்னமும் ஆச்சரியம். ரஜினியை பற்றி ஒரு தினசரி நாளிதழின் கட்டுரையாளர் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது, “உங்களுக்கு வயது 50 தாண்டிவிட்டது, சாதரணமாக காட்சியளிக்கிறீர்கள், தலையில் முடி கொட்டிவிட்டது, சிக்ஸ் பேக் பாடி போன்றவை இல்லை என்று வருத்தமா? நீங்கள் ஏன் உங்களை ரஜினி போல என்று நினைத்துக்கொள்ளகூடாது?” என்று எழுதியிருந்தார். (தனது தோற்றத்துக்காக ரஜினி எந்த மெனக்கெடலும் செய்யவில்லை. இயல்பாகவே இருக்கிறார். அப்படி இருந்தும் கோடிக்கணக்கான மக்களை வசீகரிக்கிறார் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் புரிகிறதா?)
ஒரு தனியார் தொலைகாட்சி நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் பேசியதை கேட்டேன். அவர் மீதிருந்த வியப்பு மாறி எனக்கு அவர் மீது பெருமதிப்பும் மரியாதையுமே வந்துவிட்டது. அவர் அங்கு நடந்துகொண்ட விதம், நமக்கு பல நூறு புத்தகங்களை போடுமளவிற்கு விஷயத்தை போதித்தது. “இப்படி ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, பலத்த கைதட்டல்களுக்கிடையே அவர் கூறிய பதில், என்னை யோசிக்க வைத்தது. “நான் என்ன சொல்வது. என் பணியை நான் செய்கிறேன். அவ்வளவே!” என்று அவர் கூறினார். அவர் அப்படி சொன்னது எனது மனதை தொட்டதை மறுக்க முடியாது.
அவர் அங்கு நடந்துகொண்ட விதம், நமக்கு பல நூறு புத்தகங்களை போடுமளவிற்கு விஷயத்தை போதித்தது.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களிடமோ அல்லது மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களிடமோ இந்த குணம் - அடக்கம் - மிகவும் அரிதாகிவிட்டது. ‘நான்’ ‘எனது’ என்ற சொற்களுக்கிடையே மாட்டிக்கொண்டு அவர்களுடைய வறட்டு கௌரவத்திற்கிடையே இந்த அரிதான குணம் காணாமலே போய்விட்டது.
இந்த மாயையான உலகத்தில் இருந்துகொண்டு, எல்லாவற்றுக்கும் காரணம் ‘நான்’ அல்ல என்ற எண்ணம் கொண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. வெகு சிலரிடம் மட்டுமே இந்த அரிதான குணம் தென்படுகிறது. அதாவது ஒரு வித பற்றற்ற நிலை.
இந்த மாயையான உலகத்தில் இருந்துகொண்டு, எல்லாவற்றுக்கும் காரணம் ‘நான்’ அல்ல என்ற எண்ணம் கொண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. வெகு சிலரிடம் மட்டுமே இந்த அரிதான குணம் தென்படுகிறது.
இந்த எண்ணம் இல்லாத காரணத்தினால் தான்…. வாழ்க்கை சில சமயங்களில் நமக்கு மிகப் பெரிய சுமையாக மாறிவிடுகிறது. அடக்கமும் நன்றியுணர்வும் போய், ‘நான்’ என்ற ஒரு பிம்பத்தை காப்பாற்ற படாத பாடு படுகிறோம். நமது தலைவர்களிடம் இத்தகு குணங்கள் இல்லை என்பது மிகவும் வருத்ததிற்குரியது. லௌகீக வாழ்க்கையில் தான் அடையக்கூடிய சுகங்கள் மற்றும் பலன்கள் பற்றியே ஒரு சிந்திப்பதால் அதை ஈட்டுவதற்கு தவறான வழிகளை மனம் தேடுகிறது. முதல் என்பதே ஒருவருடைய வெற்றி மற்றும் அதிகாரத்தை வைத்தே அமைகிறது. நாமும் இவை இருப்பவர்களை தான் மதிக்க பழகிக்கொண்டு விட்டோம். மனிதர்களை குணத்தையோ மனதையோ பார்ப்பதில்லை.
ஒரு சாதார பஸ் கண்டகடரில் இருந்து ரஜினி இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்பது உண்மையில் ஒரு ஏழை சினிமாவில் பணக்காரனாகும் கதை போன்றது தான். ஆனாலும் யதார்த்தத்துடன் உண்மையாக அவர் வாழும் ஒரு வாழ்க்கை எந்த நிலையிலும் மாறவில்லை. எந்த ஒரு ரஜினி ரசிகருடன் நீங்கள் பேசினாலும், அவரை அவர்கள் தங்களுள் ஒருவராக பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை என்பது அவர் மீதான மதிப்பை அவர்களுக்கு அதிகரிக்க செய்கிறது என்பதே நிஜம். காமிராவுக்கு பின்னால் உள்ள அவரது மானரிசங்களே அவரை அதிகம் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் நடிகாராக மாற்றியிருக்கிறது. அதே சமயம் ரஜினியின் திறமையையும் எந்த ஒரு தருணத்திலும் ஒருவர் குறித்தும் மதிப்பிட முடியாது. “ரஜினியால் முடியாதது என்று எதுவுமில்லை!” என்று ஒரு சின்னக் குழந்தையை கேட்டால் கூடா சொல்லும்.
தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை என்பது அவர் மீதான மதிப்பை அவர்களுக்கு அதிகரிக்க செய்கிறது என்பதே நிஜம். காமிராவுக்கு பின்னால் உள்ள அவரது மானரிசங்களே அவரை அதிகம் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் நடிகாராக மாற்றியிருக்கிறது.
திரையிலும், நிஜத்திலும் காணப்படும் அவரது பிம்பத்தின் ஒரு சிறந்த கலவையே அவர் தற்போது எட்டியிருக்கும் ஒரு ஸ்டேட்டஸ் என்றால் மிகையாகாது.
மக்களை அவர்கள் சிந்திக்கும் விதத்தில் இருந்து மாற்றி உயர்வாக சிந்திக்க வைக்க சமுதாயத்திலும் சரி தலைமை பதவியில் பணிபுரிவதற்கும் சரி நமக்கு இன்று நிறைய ரஜினிக்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்… அரசியல், அதிகாரவர்க்கம், சமுதாயம், கார்பரேட் உலகம் இங்கெல்லாம் அனைவரும் ரஜினி போன்றே மாறிவிடுகிறார்கள். எப்படி இருக்கும்!!! சினிமாவில் அவரை போன்ற உருவத்தை குளோனிங் செய்து நூற்றுக் கணக்கான ரோபோக்களை உருவாக்க முடிகிறது. நிஜத்தில் முடியுமா?
அற்புதமான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் அபர்ணா அவர்களே!
——————————————————————————————————-
Rajinikanth, the corporate leader
At a staggering 375 crores, 2010 saw one of the biggest blockbusters of Indian cinema- Rajinikanth’s ‘Endhiran’. Frenzied followers of the Rajini cult queued up at theatres in Chennai for a 4am show. In the history of film-screening, this level of adulation for one star alone has been unheard of. Cutting effortlessly across all kinds of demographics, psychographics and geographies, one wonders what really makes him the rage that he is. Adding further to the enigma is that he seems to be defying all conventional norms of stardom; almost as if it were with a vengeance! As a columnist who was trying to decipher the Rajinikanth phenomenon remarked, “If you are middle aged, don’t have great looks, or a six-pack to flaunt, you could aspire to be Rajinikanth!”
My own state of bewilderment shifted to respect and admiration when I heard him speak at a recently concluded award ceremony that bestowed upon him the ‘Entertainer of the decade’ title. His demeanor spoke volumes of his humility that one has often heard of. When asked on how he feels to be such a megastar, his response floored the crowd, “What can I say. I am just doing my work.” A ring of deep conviction in what he’d said was palpable.
What struck one instantly was how rare such a quality is among people, in particular those who have achieved success or for that matter are in positions of authority. What one sees in great measure is the sense of “I” or “me” factor that is so predominant that they have somewhere lost themselves behind this fabricated veneer. The ability to live in this illusory world and yet see oneself as separate from it is to my mind indicative of high strength of character. One sees very few people who portray this sense of attached yet detached state of being. Come to think of it, it is not that difficult to see ourselves as a microcosm of a larger macrocosm; yet the ability to be in constant awareness of it as we carry on with our lives seems to be difficult. The dilution of this belief, is leading us away from the manifestation of humility and other such sterling qualities that the human being is capable of. Fighting to protect a false sense of the “I” there is a greater tendency to resort to tactics that are more fear- and greed-based rather than those of humility and gratitude. A dearth of such qualities in our leadership clearly explains the spate of corrupt practices that we see in our institutions and society today. When the mind is obsessed with materialistic benefits, then it’s bound to adopt devious measures in amassing more for the self. Strangely enough, capital seems to be directly proportional to success and power. To make matters worse, society adds to a compounding cycle of high respect for people with wealth and power; with absolutely no regard to the substance of their being.
Rajini’s rise to stardom from that of a bus conductor is akin to rags to riches story. Yet, his ability to remain in touch with that reality hasn’t diminished over the years. A conversation with any Rajini fan will get them to recount instances where the star has made an effort to mingle and be just like them. The fact that he brushes off his shoulder; his star status is what further increases his appeal factor. At no point in time is there an effort to minimize Rajini’s talent. His ability to expand the world of possibility in the most comical manner makes him the most sought-after entertainer. Any child will tell you that there is nothing in the world that ‘Rajini can’t do’! It’s very clearly the potent combination of onscreen and off-screen persona that has thrust him to the ‘boss’ status.
We need more Rajinikanths in our society today and in leadership roles, to help people shift the way they think and act. Imagine the world of politics, bureaucracy, social and corporate bodies replete with Rajinikanths. It was easy to make clones of him in the movie Robot; can we do the same in real life too?
The author is Aparna Mathur, consultant and executive coach with the Prerna Centre of Learning.
http://www.itsmyascent.com/web/itsmyascent/career-advice/-/asset_publisher/W3x7/content/rajinikanth-the-corporate-leader
——————————————————————————————————-
[END]
Kochadaiyaan audio lunch june
Cheak kochadaiyaan wikipedia
கிரேட் சுந்தர் அண்ணா.. அழகான இந்த கட்டுரையை தேடி பிடித்து நமது தளத்தில் பதிவிட்டதற்கு… தலைவர் ஒரு கார்பரேட் லீடர் மட்டும் அல்ல .. எல்லாவற்றிற்கும் அவரே லீடர்…
"பேனர் வாசகங்கள் அருமை" - தலைவா " ஏற்றி இறக்கும் திரையுலக ஆடுபுலி ஆட்டத்தில் என்றுமே நீ பாயும் புலி "
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
மிக சிறப்பான கட்டுரை..பகிர்ந்தமைக்கு நன்றி ஜி
அருமை அருமை மிக மிக அருமை.
மனதிற்கு மிக்க மகிழ்வாக இருக்கிறது. இவ்வளவு சிறந்த தலைவருக்கு ரசிகராக நாம் இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
Thanks na for giving. World la Thalaivar pola avara thavira yarum iruka mudiyathu
சூப்பர்
அருமையான கட்டுரை !!!
வாழ்த்துக்கள் அபர்ணா!!!
அதிலும் FINAL டச் சூப்பர் !!!
உண்மையான கட்டுரை ,இந்த கட்டுரயை எங்களிடம் கொண்டுவர்ந்து சேர்த்த சுந்தருக்கும் நன்றி ..
Awesome article Sundarji!!! Each & every word is true abt Thalaivar, He has been a cult icon for so many years still he carries his stature in a amazing way….Even today people from 6-60 across the globe watch his movie same interest & excitement. Only Thalaivar can pull off this, He is the one & only Superstar…
"சினிமாவில் அவரை போன்ற உருவத்தை குளோனிங் செய்து நூற்றுக் கணக்கான ரோபோக்களை உருவாக்க முடிகிறது. நிஜத்தில் முடியுமா?" - - - சத்தியமாய் முடியாது !!
Summa Summa Superstar sollyyyyy….yerukaaaa vendaaammmm..
leave the title yaarrr….
he is in our heart,air,soul,blood……..everything…
thatz enough…….that superstar title only makes fight with other fans….
v know our strength.
நிதர்சனமான உண்மை.. கட்டுரை மிக அருமை..
நன்றி சுந்தர்..
Awesome post..Our Thalaivar is alway the Bosss…..
உண்மையின் உண்மை.
எல்லா தலைமை பண்புகளையும் உடையவர் தலைவர்
இன்று இவர்களுக்கும் புரிந்து விட்டது!!! கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்கள் எல்லோரும் தலைவராகவும் தலைவியாகவும் இருக்கிறார்கள்
எல்லா தகுகளையும் தன்னிடம் வைத்து கொண்டு இறைவனின் பதிலுக்காக காத்து கொண்டிருக்கும் தலைவர் எங்கே இவர்கள் எங்கே!! இந்த கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வரியும் சூப்பர்!! இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த "சுந்தர்" அண்ணனுக்கு என் நன்றிகள் பல
WOnderful article sundar thanks