You Are Here: Home » Featured, Role Model » மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் — கிரானைட் & ஹோட்டல் அதிபர் ஆர்.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு! — PART II

ண்பர்களே சாதனையாளர்களை தேடி புறப்பட்டுள்ள நமது பயணத்தின் அடுத்த அத்தியாயம் இது. எந்த ஹோட்டலில் உணவை பார்சல் எடுத்துச் சென்றதற்காக அவமானப்படுத்தப்பட்டாரோ பின்னாளில் அதே போல டஜனுக்கு மேற்பட்ட ஹோட்டல்களை நிறுவி, இன்று ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபதியாக இருக்கிறார் திரு.ஆர்.சந்திரசேகரன்.

——————————————————————————-
Check Part 1 @ http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14732
——————————————————————————-

ஹோட்டல் மட்டுமா, கிரானைட் எக்ஸ்போர்ட்ஸ், BAKERY & CONFECTIONARY, என பல்வேறு தொழில்களில் கொடி கட்டிப் பறக்கிறார் திரு.ஆர்.சந்திரசேகரன்.

ரூ.750/- சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய ஒரு மாதச் சம்பளக்காரருக்கு எப்படி இது சாத்தியமாயிற்று? இவர் சாதனை வரலாற்றை சினிமாவாக எடுத்து வெளியிட்டால் கூட நம்புவதற்கு கடினமாக இருக்கும். அந்தளவு, அற்புதங்களும், அதிசயங்களும், திடீர் திருப்பங்களும் நிரம்பியுள்ளது இவரது வாழ்க்கை.

“Our lives are not determined by what happens to us but by how we react to what happens. It is not determined by what life brings to us, but by the attitude we bring to life. A positive attitude causes a chain reaction of positive thoughts, events, and outcomes. It is a catalyst, a spark that creates extraordinary results!!”

இதன் பொருள் : நமக்கு என்ன நேர்கிறதோ அது வாழ்க்கையல்ல. நமக்கு நேரக்கூடிய விஷயங்களுக்கு நாம் எப்படி ரீ-யாக்ட் செய்கிறோம் என்பதை பொறுத்ததே வாழ்க்கை. வாழ்க்கை நமக்கு என்ன கொண்டுவருகிறது என்பதல்ல விஷயம்… நாம் எத்தகைய மனப்பாங்கை கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்ததே அது. எதையும் பாசிட்டிவாக பார்க்கும் ஒரு மனப்பாங்கு பாசிட்டிவான எண்ணங்களையும், நிகழ்ச்சிகளையும், விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த ஒரு வினையூக்கி தான் - அந்த ஒரு தீப்பொறி தான் - அபாரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நமக்கு என்ன நேர்கிறதோ அது வாழ்க்கையல்ல. நமக்கு நேரக்கூடிய விஷயங்களுக்கு நாம் எப்படி ரீ-யாக்ட் செய்கிறோம் என்பதை பொறுத்ததே வாழ்க்கை.

திரு.ஆர்.சந்திரசேகரன் போன்றவர்கள் வெற்றி பெறுவது அங்கே தான். சாதனையாளர்களை அடிக்கடி சந்திக்கிற காரணமோ எண்ணமோ எனக்கும் இதே போன்று ஒரு மனநிலை வந்துவிட்டது. எனக்கு ஏற்பட்ட எதையெல்லாம் நான் துன்பங்களாக கருதினேனோ அவையெல்லாம் எனக்கு தற்போது வரங்களாக காட்சி தருகிறது. இவற்றில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எண்ணிலடங்காது. குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருந்த எனது பயணத்தின் திசையையே அது மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது.

மேலும் நாம் செய்கிற சில விஷயங்கள் தான் சரி என்கிற ஒரு வறட்டு கௌரவம், பிடிவாதம் என்னிடம் உண்டு. ஆனால், இவரை சந்தித்தவுடன், அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது. எதிரியும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் வாழ்க்கையை தான் இறைவன் உயர்த்துவான் என்பதை இவர் எட்டியிருக்கும் உயரத்தை வைத்து புரிந்துகொண்டேன். எனவே, என்னிடம் மிச்சம் மீதியிருந்த ஒரு சில எண்ணங்களும் முழுமையாக அகன்றுவிட்டது.

தற்போது என்னிடம் இருப்பது ஒரே ஒரு எண்ணம் தான்: “நாம் வெற்றியடையவேண்டும். சாதனைகளை படைக்கவேண்டும். இந்த உலகமே நம்மை திரும்பி பார்க்கவேண்டும்.” அவ்ளோ தான். இதற்கான பொறி என்னிடம் ஏற்பட்டதிலிருந்தே வாழ்க்கையே சுவாரஸ்யமாகிவிட்டது.

எதிரியும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் வாழ்க்கையை தான் இறைவன் உயர்த்துவான் என்பதை இவர் எட்டியிருக்கும் உயரத்தை வைத்து புரிந்துகொண்டேன்.

இத்தனை நாள் அனுபவத்துல ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெளிவா புரிஞ்சதுங்க. ஒரு பாசிட்டிவான நல்ல ஸ்டெப்… அதே போன்று நூறு நல்ல விஷயங்களை இழுத்துட்டு வருது. அதே சமயம் ஒரு நெகடிவ்வான ஸ்டெப் (அதாவது பழிவாங்குறது, அவதூறு பரப்புறது, புறம் பேசுவது, அடுத்தவர் முன்னேற்றத்தை தடுக்க முனைவது etc.etc.) போன்ற தவறான செயல்கள் ஆயிரம் கெட்ட விஷயங்களை இழுத்துட்டு வருது. அதுல கான்சன்டிரேட் பண்ணினா நம்மால எந்தக் காலத்துலங்க ஜெயிக்க முடியும்? தவிர நெகடிவ்வா நீங்க ரீயாக்ட் பண்றதுனால உங்க எதிரியைத் தான் நீங்க வளர்த்துவிடுவீங்க. நீங்க வளரனுமா? இல்லே உங்க எதிரி (அல்ல போட்டியாளர்) வளரனுமா? யோசிச்சி பாருங்க.

உதாரணத்துக்கு, இளங்கோ என்ற ஒரு சாதனையாளரை நான் சந்தித்தேன். அவர் மூலமாக திரு.சந்திரசேகரன் நமது தளத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்து இம்ப்ரெஸ் ஆகி இவரது அறிமுகம் கிடைத்தது. அதே போல விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை (சந்திராயன் திட்ட இயக்குனர்) அவர்கள் நமது தளத்தை பார்த்து நமது பணியை மெச்சிய சம்பவமும் நடைபெற்றது. So, ஒரு நல்ல அப்ரோச் ஏற்படுத்தும் சங்கிலித் தொடர் பாசிட்டிவ் விளைவுகளை பார்த்தீர்களா…?

ஒரு தளத்தை எத்தனை பேர் பார்க்கிறாங்க, படிக்கிறாங்க என்பது முக்கியமல்ல… யார் யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்பது நீங்கள் அறியாததா?

பொதுவா இது போன்ற நீண்ட பதிவுகளை எழுதும்போது எனக்கு கொஞ்சம் சலிப்பா இருக்கும். ஆனா இந்தப் பதிவை பொறுத்தவரை… “இன்னும் எழுதணும்… இன்னும் எழுதணும்” என்கிற ஆர்வம் தான் என்னிடம் ஊறியதே தவிர, சலிப்போ களைப்போ சிறிதும் தோன்றவில்லை. காரணம்…?? படியுங்கள் உங்களுக்கே புரியும்!!!

So, ஆர்.சந்திரசேகரன் மாதிரி சாதனையாளர்கள் - நிஜ ஹீரோக்கள் - வாழ்க்கையில் தாங்கள் சாதித்த அந்த தருணங்களை - தங்களுக்குள் ஒரு ஸ்பார்க் ஏற்படுத்திய விஷயங்களை பற்றி கூறுவதை படியுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் அவற்றை அப்ளை செய்யுங்கள். அப்புறம் என்ன? நீங்களும் சாதனையை நோக்கி பயணத்தை ஸ்டார்ட் பண்ணின மாதிரி தான்.

நீங்க சாதிக்கணும் அப்படின்னு நினைக்க வேண்டியது நீங்க ஒருத்தர் தாங்க. அப்படி நீங்க நினைச்சி கிளம்பிட்டீங்கன்னு வையுங்க, உலகமே நினைச்சாலும் உங்களை தடுக்க முடியாது.

நீங்க சாதிக்கணும் அப்படின்னு நினைக்க வேண்டியது நீங்க ஒருத்தர் தாங்க. அப்படி நீங்க நினைச்சி கிளம்பிட்டீங்கன்ன் வையுங்க, உலகமே நினைச்சாலும் உங்களை தடுக்க முடியாது.

திரு.ஆர்.சந்திரசேகரன் அவர்களுடனான நமது உரையாடல் துவங்குகிறது…

நாம் : தினசரி தேவைகளுக்கே கூட போராடவேண்டிய மிகவும் வறுமையான சூழலில் துவங்கிய உங்கள் வாழ்க்கையில், உங்கள் சாதனைக்கான பயணம் துவங்கியது எப்படி? கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்…

திரு.ஆர்.சந்திரசேகரன் : நான் ஒன்னும் பெரிய சாதனையெல்லாம் இன்னும் பண்ணலை சுந்தர். ஒவ்வொரு மனிதனும் அவனோட சர்வைவலுக்காக ஏதோ பண்ணுவான். நான் பண்றது எனக்கு சாதனையா இருக்கும். நீங்க பண்றது உங்களுக்கு சாதனையா இருக்கும். அவ்ளோ தான். நான் இன்னும் என் பயணத்தை முடிக்கவில்லை. நமக்கு தெரியாது நமது ஜர்னி எந்தளவு எவ்ளோ தூரம் போகும்னு. அன்னைக்கு நினைச்சிருப்போம் ஒரு பென்ஸ் கார் வாங்கினா போதும்னு. ஆனா நாளைக்கு ரோல்ஸ் ராய்ஸே கூட பத்தாம போகலாம். அதனால நமக்குள்ள அந்த ஃபயர் எத்தனை நாளைக்கு இருக்கோ அதுவரைக்கும் தான் நம்ம லைஃப். அந்த ஃபயர் போச்சுனா நமக்கு லைஃப் அவ்ளோ தான். அதுனால் நான் ஏதோ பெரிசா சாதனை பண்ணிட்டேன் அது இதுன்னு நினைக்கலே.

நம்மோட அனுபவங்கள் ஒரு நாலு பேருக்கு லைஃப்ல முன்னுக்கு வர்றதுக்கு உபயோகமா இருக்கும்னா அதைவிட எனக்கு வேற சந்தோஷம் இருக்கமுடியுமா? அதுக்காக தான் உங்களை கூப்பிட்டேன் சுந்தர்.

எனக்கு வேகம் கொஞ்சம் ஜாஸ்தி. காரணம் நான் போகக்கூடிய நீண்ட தூரத்தை நான் வேகமா போனாத்தான் அடைய முடியும்.

எங்கப்பா எங்கம்மா கல்யாணம் நடக்கும்போது ஊர்லயே அது தான் பெரிய கல்யாணம். அந்தளவு வசதியா இருந்தோம். அப்படி இருந்த சூழ்நிலைல, என்னோட தங்கச்சியோட கல்யாணம் பண்றதுக்கே நாங்க எல்லார்கிட்டயும் கையேந்தவேண்டிய ஒரு சூழ்நிலை. காரணம், தவறான குடும்ப நிர்வாகம், தவறான நபர்களை நம்பியது.

என் அப்பா பண்ண தவறுகளை நான் பார்த்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். நான் படிச்சது சாதாரண கார்பரேஷன் ஸ்கூல் தான். அப்புறம் டிகிரி வந்து கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா காலேஜ்ல படிச்சேன். வாழ்க்கைல ஒவ்வொரு விஷயமும் நான் அடித்தளத்துல இருந்து தான் ஆரம்பிச்சேன். ஆகையால, பட்ட கஷ்டங்கள் எனக்கு ஒரு வைராக்கியத்தை கொடுத்தது. நாமளும் மேல வரணும் அப்படிங்கிற எண்ணம் தோணிச்சி.

நாம் : உங்களோட இந்த வெற்றிக்கு காரணம் என்னன்னு நினைக்கிறீங்க சார்?

திரு.ஆர்.சந்திரசேகரன் : என்னோட எதிரிகள் தான் சுந்தர். எதிரிகள் இல்லேன்னா வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையை என்னை விட பத்திரமா பாத்துகுறது என் எதிரிகள் தான். கண்ணுக்கு தெரிஞ்ச, தெரியாத எதிரிகள் இப்படி நிறைய பேர்.

நாம் : நீங்க எதிரிகள் என்று இங்கே சொல்வது உங்கள் துறை சார்ந்த போட்டியாளர்களையா?

திரு.ஆர்.சந்திரசேகரன் : கூட இருக்குறவங்க தான். எதிரிகள் என்பவர்கள் பெரும்பாலும் கூடவே தான் இருப்பாங்க. துறை சார்ந்தவர்களுக்கு என்னுடைய வளர்ச்சி மேலோட்டமா தான் தெரியும். டீப்பா தெரியாது. இப்போ பென்ஸ் கார் நான் வாங்கியிருக்கேன்னா, அதை வாங்குறதுக்காக நான் பஷ்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். ஆனா கூட இருக்குறவங்க அதைப் பார்த்து பொறாமைப்படுவாங்க. “பாரு பென்ஸ் கார் வாங்கிட்டான்”னு.

நான் ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்றேன் சுந்தர். ஒரு மனுஷனுக்கு சாகுற வரைக்கும் எதிரி இருக்கணும். அதாவது CRITICISER என்பவன் இருக்கணும். முக்கியமா நாம் எதை செய்தாலும் விமர்சிப்பவர்கள் நமது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். So, அவங்களை வெறுக்காதீங்க. அவங்க உங்களுக்கு நன்மையைத் தான் பண்றாங்க. ஆனா துரோகியை பக்கத்துல்  வெச்சுக்க கூடாது. ஏன்னா துரோகி எப்போ குத்துவான்னு தெரியாது.

நாம் : “நேற்றைய நண்பன்… இன்றைய துரோகி… நாளைய எதிரி” அப்படின்னு ஆகிப் போச்சு சார் வாழ்க்கை. பல சமயங்கள்ல இதை நினைக்கும்போது வெறுப்பா இருக்கும். சரி… எல்லாம் நன்மைக்கேன்னு என்னை சமாதானப்படுத்திகிட்டு போய்கிட்டே இருப்பேன். ஆனா, நண்பர்கள் எதிரிகளா மாறுவதோ அல்லது துரோகிகளோ மாறுவதோ ரெண்டுமே நம்ம கையில இல்லையே சார். பெரும்பாலும் நம்ம கண்ட்ரோலுக்கு அப்பாற்பட்ட விஷயமாச்சே இது…

திரு.ஆர்.சந்திரசேகரன் : கடவுள் மேல தீவிரமா நம்பிக்கை வெச்சிருங்க. அப்போ உங்க கன்ட்ரோலுக்குள்ளே அது வரும். எல்லாத்தையும் ஆண்டவன் கிட்டே விட்டுடுங்க. நடப்பதெல்லாம் ஆண்டவனோட சித்தம் அப்படிங்கிற எண்ணம் வந்துடுச்சுன்னா அப்புறம் வாழ்க்கைல இருக்குற கஷ்டங்கள் தெரியாது. பயணம் ரொம்ப சுலபமாகும்.

பொதுவாகவே மனுஷனுக்குள்ள ஒரு குணம் என்னன்னா, நல்லது நடந்தா அதுக்கு நாம காரணம் என்கிற நினைப்பும், அதுவே கெட்டது நடந்தா அதுக்கு பழியை அடுத்தவங்க மேல போடுறதும் வழக்கம். அந்த இன்னொருத்தரா கடவுள வெச்சிருங்க. அதுனால நிறைய நன்மைகள் இருக்கு. ப்ராக்டீஸ் பண்ணி பாருங்க புரியும்.

ஒரு விஷயத்துல தடங்கல் நமக்கு ஏற்படுதுன்னா, கடவுள் நம்மளை ஏதோ காரணத்துக்காக நிறுத்துறார்னு புரிஞ்சிக்கணும். நாம அப்படியே அந்த வேலையை விட்டுட்டு போய்டனும்கிறதுக்காக  அவன் தடங்கல் ஏற்படுத்துறதில்லே. நம்ம கிட்டே சுதாரிப்பு உணர்வு வரும். ஒரு விஷயத்தை சால்வ் பண்றதுக்கான நாலேஜ் இம்ப்ரூவ் ஆகும். இதுக்கெல்லாம் தான் அவன் தடைகளை ஏற்படுத்துவான்.

ஒரு விஷயத்துல தடங்கல் நமக்கு ஏற்படுதுன்னா, கடவுள் நம்மளை ஏதோ காரணத்துக்காக நிறுத்துறார்னு புரிஞ்சிக்கணும்.

நாம் : அப்போ கடவுளை நம்பி தான் வாழனும்… நம்மால எதுவும் பார்த்துக்க முடியாதா?

திரு.ஆர்.சந்திரசேகரன் : அப்புறம் இன்னைக்கு இருக்குற உலகத்துல நம்மால நிச்சயம் எதுவும் பார்த்துக்க முடியாது. ஒரு மணி நேரத்துல தாம்பரத்துல இருந்து செங்கல்பட்டை தாண்டி இன்ன இடத்துக்கு போகணும்னு நினைக்கிறோம். போக முடியுறதில்லையே. பென்ஸ் கார் இருக்கு. நாலு வழி லேன் இருக்கு. 125 km/hr ஸ்பீட்ல அதுல போகலாம். ஆனா அன்னைக்குன்னு பார்த்தா ரோட்ல ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். டிராபிக் ஸ்லோவாக போகும். திட்டமிடுவது மட்டும் தான் நம்ம கிட்டே இருக்கு. ஆனா, முடித்து வைப்பது அவன் கிட்டே இருக்கு.

நாம் : நீங்க சொல்வது கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஓகே. கடவுள் நம்பிக்கையே இல்லாதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு தாட் கஷ்டம் தானே…?

திரு.ஆர்.சந்திரசேகரன் : அப்படி யாரும் இருக்க முடியாது சுந்தர். கடவுள் நம்பிக்கை என்பது எல்லாரிடமும் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கு. அதுக்கு அவரவர் அவரவர் நம்பிக்கைப்படி விதி, இயற்கை, ஜோதிடம், என்று வெவ்வேறு பெயர்கள் வைத்திருக்கிறார்கள். நமக்கு மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை எவரும் மறுக்கவில்லையே…

கடவுள் என்பது என்ன? கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி. கண்ணுக்கு தெரியாத அந்த சக்தி இருக்கிறதென்ற அந்த பயம் இல்லையென்றால் நாம் தைரியமாக தவறுகள் செய்வோம். எனவே மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு சொல்லப்பட்ட விஷயம் தான் இது.

நாம் : சார் இதே கருத்தை தான் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட ஒரு பேட்டியில  சொல்லியிருந்தார். நான் சொல்றது 1998 இல். அப்பபோ ‘அருணாச்சலம்’ ஷூட்டிங் போய்க்கிட்டுருந்துச்சு. குமுதம் இதழுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், “நாத்திகர் என்று இந்த உலகத்தில் எவருமே இல்லை. விதியை நம்புகிறவர்களுக்கு விதி தான் கடவுள். இயற்கையை நம்புகிறவர்களுக்கு இயற்க்கை தான் கடவுள். ஜோதிடத்தை நம்புகிறவர்களுக்கு ஜோதிடம் தான் கடவுள். இப்படி ஒவ்வொருவரும் அவரவர்க்கு நம்பிக்கை உள்ள ஒரு சக்தியை தான் கடவுள் என்று அழைக்கிறார்கள். கடவுள் என்ற ஒருவர் இல்லை என்று கூறுவதை நான் ஒருவேளை நம்பிவிட்டால் அடுத்த நொடி இந்த உலகத்தில் என்னால் உயிர் வாழ முடியாது” அப்படின்னு சொல்லியிருக்கிறார். நீங்கள் அந்த பேட்டியை படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க அதே போன்ற ஒரு கருத்தை நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

திரு.ஆர்.சந்திரசேகரன் : அதுக்காக நான் ரஜினியாகிட முடியாது… (சிரிக்கிறார்).

நாம் : அப்படியில்லை… LIKE MINDED PEOPLE LIKE MINDED THOUGHTS என்ற அடிப்படையில் சொல்கிறேன் சார். வேற ஒண்ணுமில்லை. நீங்க லைஃப்ல கஷ்டப்பட்டு மேல வந்திருக்கீங்க. அவரும் ரொம்ப கஷ்டப்பட்டு மேல வந்திருக்காரு. அவருடைய ஸ்டேஜ்க்கு அவர் எவ்ளோ கஷ்டங்களை அனுபவித்திருப்பார்…?

திரு.ஆர்.சந்திரசேகரன் : அவர்லாம் ஒரு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்….

நாம் : ஒரு வேளை நான் உங்களுக்கு கீழே பணிபுரிந்துகொண்டு உங்கள் வளர்ச்சியை  பார்த்துக்கொண்டே வந்திருந்தால் நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பீர்கள். ஆனால், நான் பார்த்து வளர்ந்தது ரஜினி சாரைத் தான். எனவே எனக்கு அவர் மிகப் பெரிய PHENOMENON. வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அவரை பார்த்து தான் நான் கற்றுக்கொண்டேன்.

அவர் இத்துனை பேர் புகழை சம்பாதித்தாலும் அவரை எப்போ இடறிவிடுவது என்றே ஆவலுடன் ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது சார். அவரது சின்ன சின்ன அசைவுகளை கூட பூதாகரமாக்கி பார்க்கும் கும்பல் ஒரு புறம், மறுபுறம் அவரை தமிழன் இல்லை என்று கூறிக்கொண்டு, அவரது தாய்மொழியை குறை கூறும் கும்பல் ஒரு புறம் இப்படி பல பலவற்றுக்கிடையே தான் அவர் வாழ்ந்து வருகிறார். மேடைகளில் சிலருக்கு தமிழ் பற்றே ரஜினியை பார்த்தவுடன் தான் ஏற்படுகிறது. அப்படி தமிழ் பற்று கொண்டு மைக்கை முழுங்குபர்கள் அநேகம் பேர் தங்கள் படங்களில் கூட குறைந்த பட்சம் ‘தமிழ் கதாநாயகிகள் தான் வேண்டும்!’ என்று சொல்வதில்லை. ஆனால், தமிழ்ப் பற்றை பற்றி இவர்கள் பக்கமா பக்கமாக பேசுவதை கேட்க காமெடியாக இருக்கும்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : உண்மை… உண்மை…

நாம் : இப்படி ஒரு சூழலில் அவருடைய எண்ணங்களும் உங்களின் எண்ணங்களின் ஒத்துப்போவது எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : உழைத்து முன்னுக்கு வந்தவர்களின் தாட்ஸ் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும் சுந்தர். அது நானாக இருந்தாலும் சரி, ரஜினியாக இருந்தாலும் சரி, இளங்கோவாக இருந்தாலும் சரி… உழைத்து மேலே வந்தர்களின் எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கும். உழைக்காம முன்னுக்கு வரணும் என்று நினைப்பவர்களின் தாட்ஸ் தான் வேறு மாதிரி இருக்கும். நீங்க நல்லதை நினைச்சி பாருங்க… நல்ல விதமாகவே புத்தி போகும். கெட்டது நினைச்சி பாருங்க. மனம் குறுக்கு வழியில தான் போகும். எப்படி குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கலாம், எப்படி தில்லு முள்ளு பண்ணலாம் இப்படி தான் புத்தி போகும்.

நாம் : நீங்க ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர் என்பது எனக்கு தெரியும் சார். உங்களை பற்றி நான் என் தளத்துல ஒரு நல்ல இன்ட்ரோ கொடுக்குறதுக்கு ஏதாவது ஒரு சம்பவம் சொல்லுங்களேன்.

(முன்னோட்டமாக கொடுப்பதற்கு கேட்டேன்!)

திரு.ஆர்.சந்திரசேகரன் : எனக்காக நான் ஒரு பாயிண்ட்டை உருவாக்கி அதை முதலில் சொன்னால் அது சரியாக வராது. செயற்கையாக இருக்கும். நாம் பேசும்போது இயல்பாகவே ஏதாவது ஒரு சம்பவம் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் சொல்லும் இன்ட்ரோவை அமைத்துக்கொள்ளுங்கள்.

நாம் : நீங்கள் கூறுவது தான் சரி சார்! நீங்க மேலே பேசுங்க சார்….!

திரு.ஆர்.சந்திரசேகரன் : நான் படிச்ச காலத்துல ஒரு ஹோட்டல்ல பில் போடுற வேலைக்கு போயக்கிட்டுருந்தேன். சாயந்திரம் 5 மாநில இருந்து நைட் 11 மணி வரைக்கும் வேலை. (சென்ற பதிவில் கூறியதை கூறுகிறார்.)

(மேற்கொண்டு தொடர்கிறார்….)

திரு.ஆர்.சந்திரசேகரன் : எனக்கு வாழ்க்கையில இப்படி ஏற்பட்ட ஒவ்வொரு பாதிப்பும் தான் என்னை மேலே கொண்டு வந்ததுக்கான காரணங்கள். 86 இல் துவங்கிய ஓட்டம்… இன்னமும் ஓடிக்கொண்டு தானிருக்கிறேன். ஓட்டம் நிற்கவில்லை. கார்ல தான் சாப்பிடுறது தூங்குறது எல்லாமே. காலைல 5.30 - 6.00 மணிக்கு எழுந்திரிச்சுடுவேன். நைட் எல்லா வேலையையும் முடிச்சிட்டு படுக்குறதுக்கு 12.00 க்கு மேல ஆயிடும். சில சமயம் 1.00 மணி கூட ஆகுறதுண்டு.

(இந்த ஒரு விஷயத்துல சார் கூட நான் ஒத்துப் போறேங்க. நாமளும் அப்படித்தான். படுக்குறது நைட் 12.30 மணி. எழுந்திருக்கிறது…. காலைல 5.30 மணி. நாளெல்லாம் உழைத்துவிட்டு படுக்கையில் படுத்தவுடனே தூங்கும் சுகமே தனி!)

எல்லா வண்டியும் அந்தந்த ஹோட்டலுக்கு போய் சேர்ந்துதுன்னா தான் எனக்கு தூக்கமே வரும். காரணம்… பணம், மளிகை சாமான்கள் என எல்லாம் அதுல இருக்கும்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : எல்லாரும் என்கிட்டே கேட்பாங்க… “எதுக்கு இவ்ளோ கஷ்டப்படனும்? ஏன் கார்ல எல்லாம் உட்கார்ந்து சாப்பிடனும்? நிம்மதியா சாப்பிடுறதுக்காகத்தானே கஷ்டப்படுறோம்?” அப்படின்னு. நான் சொல்வேன்… “வயித்தையும் மறந்துட்டு நம்ம கஷ்டப்படுறோம்…” அப்படி இருந்தாத் தான் இன்னைக்கு உலகம் இருக்குற சூழ்நிளில் அப்படித் தான் வாழணும்னு தோணுது.

நம்முடைய பேச்சும் செயலும் யாரையும் வாழ்த்துதோ இல்லையோ… யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன் நான்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : நான் மேலே சம்பவம் நடந்தது 1986 இல். நான் எப்போ ஓட்டல் ஆரம்பிச்சேன் 2000 ஆம் வருஷத்துல. 14 வருஷங்கள் எனக்குள்ளே அந்த ‘தீ’ எரிந்துகொண்டே இருந்தது. அந்த பில் போடுற வேலையை பார்த்தது தவிர எனக்கும் இந்த ஹோட்டல் துறைக்கும் சம்பந்தமே இல்லை. அது ஓட்டல் துறையை பத்தின ஒரு முன் அனுபவமா இருந்தது. இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட அவமானத்துல நாம ஒரு நாள் ஹோட்டல் ஆரம்பிக்கணும்… நாம ஒரு நாள் ஹோட்டல் ஆர்மபிக்கணும் என்கிற அந்த FIRE கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்தது.

அவங்க அன்னைக்கு சொன்னது அப்புறம் நம்மளை யாராவது ரொம்ப கஷ்டப்படுத்தினா, ரொம்ப அசிங்கப்படுத்தினா, கேவலப்படுத்தினா, அது அப்படியே மனசுல தங்கிடும். சில சமயம் மைண்ட்ல தங்குறது மறந்துடும். மனசுல தங்குறது மறக்காது. இந்த மறதி இதெல்லாம் மூளைக்கு தான் உண்டு. இதயத்துக்கு கிடையாது. இதயம் ஒன்னை வெச்சா வெச்சது தான். கல் நெஞ்சுக்காரன்னு தான் சொல்வாங்களே தவிர கல் மூளைக்காரன்னு யாரையும் சொல்லமாட்டாங்க. அது மாதிரி… மூளைல ஒன்னை வெச்சிட்டோம்னா அதை மறந்துடுவோம். ஆனா நெஞ்சுல வெக்கிறது ஆயுசுக்கு மறக்கமாட்டோம். அதை வஞ்சமா வெச்சாலும் சரி… வெறியா வெச்சாலும் சரி. வஞ்சமா வெச்சா அவன் பழி வாங்குற நடவடிக்கையில இறங்கி அவனை அவனே அழிச்சிக்கிறான். வெறியா வெச்சிக்குறவன் வாழ்க்கையில் சாதனை பண்ணி அதன் மூலமா எதிரிகளை ஜெயிக்கிறான்.

இந்த மறதி இதெல்லாம் மூளைக்கு தான் உண்டு. இதயத்துக்கு கிடையாது. இதயம் ஒன்னை வெச்சா வெச்சது தான். கல் நெஞ்சுக்காரன்னு தான் சொல்வாங்களே தவிர கல் மூளைக்காரன்னு யாரையும் சொல்லமாட்டாங்க. அது மாதிரி… மூளைல ஒன்னை வெச்சிட்டோம்னா அதை மறந்துடுவோம். ஆனா நெஞ்சுல வெக்கிறது ஆயுசுக்கு மறக்கமாட்டோம்.

நாம் : நீங்க சொல்வது அனுபவப்பூர்வமான உண்மை சார்…. வாழ்ந்துகாட்டுவதை விட பழி வாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். நாம மேல வந்தமாதிரியும் ஆச்சு. தேவையில்லாத நெகடிவ் விஷங்களுக்கு பதிலடி கொடுக்குறேன் அப்படின்னு நம்ம வேகத்தை நாமளே குறைச்சிக்கிற வேலைல இறங்காத மாதிரியும் ஆச்சு. ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சிக்னல்ல நின்னுகிட்டுருந்த ஒரு ஆட்டோவுல நான் படிச்சது இது. சரியான டயத்துல ஆண்டவன் என்னை அதை பார்க்க வெச்சான். இல்லேன்னா நான் வேற மாதிரி போய் இன்னைக்கு காணாமலே போயிருப்பேன்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : நம்மளை நோக்கி குரைக்குற ஒவ்வொரு நாயையும் அடிக்கிறதுக்காக நாம கல்லை எடுத்தோம்னா நாம் போய் சேர வேண்டிய இலக்கை அடையவே முடியாது. குரைக்கிற நாய் குறைச்சிக்கிட்டே தான் இருக்கும். நாம பாட்டுக்கு நம்ம வேலை என்னமோ அதை பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்கணும்.

1986 இல் நான் அந்த பார்ட் டைம் வேலைக்காக மாசம் ரூ.300/- வாங்கிட்டுருக்கேன். ரூ.300/- ரூபாய் சம்பளம் வாங்குறவனுக்கு ஹோட்டல் வெக்கணும் என்கிற கனவெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அப்போ, என் எதிரியா யார் இருந்தாங்களோ அவங்க தான் என் கடவுள். யாரை விட்டு ஆண்டவன் என்னை திட்ட வெச்சானோ அவன் தான் என் தெய்வம். அவன் இல்லேன்னா இன்னைக்கு இந்த இடத்துல நான் இல்லே.

திரு.ஆர்.சந்திரசேகரன் : அதுனால எப்பவுமே என் எதிரியை தான் நான் வணங்குறேன். சும்மா பேச்சுக்காக சொல்லலே. சத்தியமா சொல்றேன். So, எதிரிகள் நிறைய இருக்காங்களேன்னு யாரும் கவலைப்படாதீங்க. அவங்க தான் உங்களை சுறுசுறுப்பா வெச்சிருக்கிறவங்க. சுத்தமா வெச்சிருக்கிறவங்க.

நாம்: உண்மை தான். சிலருடைய வாழ்வில் ஆயிரம் நண்பர்கள் சாதிக்காததை சில எதிரிகள் சாதிக்க வைத்துவிடுகிறார்கள்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : 1987 இல் எனக்கு மேரேஜ் நடக்குது. ஒரு லெதர் கம்பெனில வேலைக்கு சேர்றேன். மாதம் ரூ.750/- சம்பளம். லெதர் கம்பெனில வேளை பார்த்துகிட்டே இருக்கும்போது ஒரு சிலர் ஐடியா கொடுக்குறாங்க. “நாம ஏன் ஷிப்பிங் கம்பெனி ஒன்னு ஆரம்பிச்சு… CLEARING & FORWARDING பண்ணக்கூடாது? அதை நாமளே பண்ணலாமே”ன்னு ஐடியா கொடுத்தாங்க. “நல்ல ஐடியாவா இருக்கே. ஆளுக்கு ரெண்டாயிரம் மூனாயிரம்னு பணம் போட்டு ஆரம்பிக்கலாமே…!” அப்படின்னு முடிவு செஞ்சி ஒரு நாலஞ்சு பேர் சேர்ந்து SHIPPING CLEARING & FORWARDING வேலை ஆரம்பிக்கிறோம். அப்போ அரூர் மாசின்னு ஒருத்தரோட காண்டாக்ட் கிடைச்சது. நான் நிறைய பேர் கிட்டே என்ன கத்துக்கணும் என்பதை விட, என்ன கத்துக்கக்கூடாதுன்னு தான் யோசிப்பேன். ஏன் இவங்க லைப்ல மேல வர்ற முடியலே… என்ன தப்பு பண்ணினாங்கன்னு பார்ப்பேன். அப்படியிருக்கு சூழ்நிலைல அரூர் மாசி சாரை பார்க்க போறேன்.

அவர் சொன்னாரு… “தம்பி மாசம் நான் ஒரு கண்டெயினரை தான் கொடுக்க முடியும். ஒரு கண்டெயினரை இறக்கி கஸ்டம்ஸ்ல கிளியர் பண்ணிட்டு வந்தா ரூ.1500/- கிடைக்கும். ஆனா இந்த ரெண்டு மூணு வருஷமா உனக்கு 40 கண்டெயினர் கொடுக்குற அளவுக்கு வந்திருக்கோம். நல்ல விஷயம்” என்றார். அவர் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். அவரையே எனக்கு குருவா ஏத்துக்கிட்டு வேலை செஞ்சேன்.

இந்த ரூ.750/- சம்பளத்துல இருந்து SHIPPING CLEARING & FORWARDING பண்றதுக்காக அரூர் மாசிகிட்டே நான் போய் கேட்கிறேன்… “எனக்கு கண்டெயினர்ஸ் கொடுங்களேன்….” அப்படின்னு. அப்போ, என்னோட சுறுசுறுப்பு வேலை இதெல்லாம் பார்த்துட்டு அவர் “நீ என் கிட்டயே வேலைக்கு சேர்ந்துடேன்”னு சொன்னார். எனக்கும் ரூ.750/- சம்பளத்துல குடும்பம் நடத்த முடியலே. So, லெதர் கம்பெனி வேலையை உதறிட்டு அப்புறமா அவர் கிட்டே வேலைக்கு சேருகிறேன்.

அவரோட தி.நகர்ல ஆபீஸ்ல வேலையை துவக்குறேன். அங்கே நான் தான் எல்லாமே… ஆபீசை திறக்குறதுல இருந்து, பேங்க் போறது, தரையை கூட்டி பெருக்குறது வரைக்கும் நான் தான் எல்லாமே. முதலாளி வருவாரு… அவருக்கு தட்டு கழுவி வெச்சி சாப்பாடு போட்டு, பின்னர் தூங்க வெச்சி… எல்லா வேலையும் நான் தான் செய்வேன். அதை பெருமையா செய்வேன். இவ்ளோ பெரிய மனுஷனுக்கு நான் தான் எல்லாமேன்னு நினைச்சு சந்தோஷப்படுவேன். 1989ல் அங்க சேர்றேன். 2004 வரைக்கும் அங்கே இருக்கேன். 14 வருஷம் அவர் கிட்டே இருக்கேன். சூப்பர்வைஸரா இருந்தேன்.

இதுக்கு முழுக்க முழுக்க காரணம், என்னோட திறமை, உழைப்பு. என்ன ஏதுன்னு அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆராய்ச்சி உணர்வு. 2004 இல் தான் வெளியே வந்தேன். அதுல பாருங்க… எனக்கு வாழ்க்கையில ஒரு பயம் இருக்கும். இவர் திடீர்னு என்னை கைவிட்டா என்னாகுறதுன்னு எனக்குள்ளே ஒரு பயம். ஏன்னா எனக்கும் அவருக்கு இடையே எந்த WRITTEN AGREEMENT ம் கிடையாது. ஜஸ்ட் ஒரு ஜென்டில்மேன் அக்ரீமென்ட் தான். வாய் வழி உறுதிமொழி தான். “நீ என்கிட்டே வேலை செய்யுற வரைக்கும் வேற யாருக்கும் நான் இந்த வேலையை தரமாட்டேன். அதே போல நீ இந்த ஷிப்பிங் வேலையை வேற யாருக்கும் செய்யக்கூடது. ஏன்னா யதார்த்தமா என்னோட ஷிப்மெண்ட் நின்னு போச்சுனா கூட காசுக்காக நீ பண்ணிட்டியோன்னு தான் தோணும். So, என்னை நம்பி நீ இரு. நான் உன்னை பார்த்துக்குறேன்” அப்படின்னு சொன்னாரு. வாழ்க்கையோட அத்துனை நெளிவு சுளிவுகளையும் எனக்கு கத்துக்கொடுத்தாரு. அவர் கிட்டே தான் நான் நிறைய கத்துக்கிட்டேன்.

முன் அனுபவம் ரொம்ப முக்கியம்

எல்லாத்துக்கும் ஒன்னு மட்டும் சொல்றேன். ஒரு மனிதனுக்கு தகுதியும் திறமையும் இருக்கணும். எந்த வேலை செஞ்சாலும் அதுல முன் அனுபவம் இருக்கணும். முன் அனுபவம் இல்லாம எந்த வேலைலயும் இறங்கக்கூடாது. முன் அனுபவம் இல்லையா அது கிடைக்குற வரைக்கும் எந்த வித இன்வெஸ்ட்மென்ட்டும் பண்ணக்கூடாது. LEARN, WORK ON OTHERS MONEY IS NO RISK. BUT ON YOUR MONEY IS HEAVY RISK. இன்னைக்கு இந்த கிரானைட் ஃபாக்டரியை என்னால் திறம்பட நடத்த முடியுதுன்னா  அதுக்கு காரணம், அங்கே நான் கத்துகிட்டது தான். 14 வருஷமா படிப்படியா எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அதனால இங்கே ஒன்னொன்னும் இந்த மாதிரி பாத்து பாத்து இழைச்சு வெச்சிருக்கேன். ஒரு ஃபாரினர் பிசினஸ் பேச வந்தா அவனுக்கு இந்த ஃபாக்டரிய பிடிக்கணும். நம்ம நாடு கலாச்சாரம் இதெல்லாம் அவங்களுக்கு பிடிக்கும். அதே சமயம் பிசினஸ் பண்றதுக்கு அது மட்டும் போதாது. So, அவனை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி தான் எல்லாத்தையும் இங்கே பண்ணியிருக்கேன். காரணம் அனுபவம் தான்.

———————————————————————-
எங்கள் சந்திப்புக்கு முன், இவரது ஃபாக்டரியை அலுவலகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கெங்கும் கிரானைட் தான. படிகட்டுகள், டேபிள், சுவர் என எங்கும் கிரானைட் தான்.

வடமாநிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் இருந்து கிரானைட் வெட்டி
எடுக்கப்பட்டு லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இங்கு அவை ராட்சத இயந்திரங்களின் மூலம் துண்டு துண்டாக (பிரட் ஸ்லைஸ் போல) நறுக்கப்பட்டு, பின்னர் ஒரு விசேஷ இயந்திரத்தின் மூலம் பாலிஷ் செய்யப்படுகிறது. பின்னர் விரும்பிய வடிவங்களில் அவை (ஆட்டோகேட்) வெட்டப்பட்டு, வேண்டிய வடிவத்துக்கு இழைக்கப்படுகிறது. இங்கு முழுக்க முழுக்க GRANITE MONUMENTS தான் தயாரிக்கப்படுகிறது. அவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவரது நிறுவனம் 100% EOU (EXPORT ORIENTED UNIT) என்ற பரிசை தொழில் துறை அமைச்சகத்திடம் வருடா வருடம் பெற்று வருகிறது. ஏற்றுமதிக்கான பங்கை சிறப்பாக வகிப்பதன் மூலம் நமக்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறது இவரது நிறுவனம்.
———————————————————————-

தகுதியும் திறமையும் இருந்தா மட்டும் போதாது. முன் அனுபவமும் ஒரு தொழில்ல ஜெயிக்கிறதுக்கு ரொம்ப முக்கியம். சொந்தக்காரரோட ஹோட்டல்ல வேலை செஞ்சேன். அதுல கிடைச்ச அனுபவத்தை வெச்சி ஹோட்டல் ஆரம்பிச்சேன்.

முதலாளிக்காக கிளப்பில் மணிக்கணக்கில் காத்திருந்தேன்

என்னோட முதலாளி, மாசி ஒரு பெரிய கிளப்புல மெம்பரா இருந்தாரு. அடிக்கடி அங்கே போவாரு. 7 மணிக்கு உள்ளே போவாரு. நைட் 1.30 மணிக்கு தான் வெளியே வருவார். அவர் வர்ற வரைக்கும் எப்போ வருவாரு… எப்போ வருவாருன்னு காத்துகிட்டுருப்பேன். வாழ்க்கையில் பார்த்தீங்கன்னா… நாம அம்மா அப்பாவுக்கு கூட அவ்வளவா பயப்படமாட்டோம். ஒரு அஞ்சு பைசா ஒருத்தரு கிட்டே வாங்கிட்டோம்னா அவனுக்கு பயப்படுவோம். காரணம் பணம் தான் இந்த உலகத்துல எல்லாமேன்னு ஆகிப் போச்சு. MONEY ONLY SPEAKS. மத்ததெல்லாம் DOESN’T SPEAK. அந்த பணத்து மேல இருந்த ஆசையினால், என்ன பண்ணுவோம்…. அவர் மேல அளவுக்கு அதிகமான மரியாதை வெப்போம். கோயில்லயே கூட பணம் கொடுத்தாத் தான் மரியாதைன்னு ஆகிப் போச்சு இப்போ. பணம் போடாதவனுக்கு மரியாதை கிடைக்குறதில்லே. அந்த கோவிலோட அறங்காவலர் குழு தலைவரா இருந்தாலும் சரி… பணம் போட்டாத் தான் மரியாதை. அந்த மாதிரி ஒரு காலகட்டத்துல, இங்கே கிளப்புல நான் வெளியே முதலாளிக்காக மணிக்கணக்கா வெயிட் பண்ணிகிட்டுருப்பேன். அப்போ தான் தோணிச்சி… நாமளும் இந்த கிளப்புல ஒரு நாள் மெம்பரா ஆகணும்னு. அங்கே மெம்பராகுறது ரொம்ப கஷ்டம். ஆனா நான் மெம்பரானேன். எந்த கிளப்புல என் முதலாளிக்காக நான் காத்துக்கிட்டுருந்தேனோ அதே கிளப்புல நான் பிற்காலத்துல மெம்பரானேன்.

அது மாதிரி வாழ்க்கையில ஒவ்வொரு விஷயத்தையும் நான் சாலஞ்சா எடுத்தே பழக்கப்பட்டவன்.

எந்த கிளப்புல என் முதலாளிக்காக நான் காத்துக்கிட்டுருந்தேனோ அதே கிளப்புல நான் பிற்காலத்துல மெம்பரானேன்.

நாம் : So, வாழ்க்கையில எங்கெல்லாம் நீங்க அவமானப்படுத்தப்படுவதா உணர்றீங்களோ அங்கெல்லாம் ஒரு சபதம் போடுவீங்க….

திரு.ஆர்.சந்திரசேகரன் : ஆமாம்… அது தான் நம்ம வெற்றிக்கு உரம். அடித்தளம். எங்கெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேனோ அங்கெல்லாம் தான் என் வாழ்க்கை துவங்கியது.

ஹோட்டல், கிளப்ல மெம்பர் இதெல்லாம் ஒரு பக்கம். அப்புறமா, இந்த கஸ்டம்ஸ் CLEARING & FORWARDING வேலை. இதுல வேலை பார்க்கும்போது அடிக்கடி கஸ்டம்ஸ் ஆபீஸ் போகவேண்டி வரும். அங்கே இத்தனை பெரிய பில் இருக்கும். (கைகளை மேலேயிருந்து கீழே வரைக்கும் உயர்த்திக் காண்பிக்கிறார்.) இப்போல்லாம் ரொம்ப சின்னதாயிடிச்சு. இப்போ நான் டெண்டர் எடுக்குறதுக்கு 200 பேப்பர் கையெழுத்து போடுறேன். அன்னைக்கு இந்த 200 பேர்ப்பர்ஸையும் எடுத்துகிட்டு கஸ்டம்ஸ் ஆபீஸ் போறேன். அங்கே போனா, அங்கே இருக்குற ஆபீசர்ஸ் என்னை ரொம்ப இரிடெட் பண்ணுவாங்க. “ஏய்… போய் சிகரெட் வாங்கிட்டு வா… டீ வாங்கிட்டு வா… காபி வாங்கிட்டு வா… சினிமா டிக்கட் வாங்கிட்டு வா… என் ஒய்ப் வந்துக்கிட்டுருக்கா… அவளை ஆட்டோ வெச்சு கூட்டிகிட்டு வா… இங்கே போ… அங்கே போ….” அப்படின்னு இஷ்டத்துக்கு வேலை வாங்குவாங்க. அந்த பார்ம்ல கையெழுத்து வாங்குறதுக்கு ரொம்ப வேதனையா இருக்கும். நாய் பிழைப்புன்னு சொல்வாங்களே…. அதை விட கேவலமான ஒன்னை நான் அனுபவிச்சேன். செய்த வேலையை கீழ்த்தரமா நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. அதுல ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்றேன்.

அங்கே போனா, அங்கே இருக்குற ஆபீசர்ஸ் என்னை ரொம்ப இரிடெட் பண்ணுவாங்க. “ஏய்… போய் சிகரெட் வாங்கிட்டு வா… டீ வாங்கிட்டு வா… காபி வாங்கிட்டு வா… சினிமா டிக்கட் வாங்கிட்டு வா… என் ஒய்ப் வந்துக்கிட்டுருக்கா… அவளை ஆட்டோ வெச்சு கூட்டிகிட்டு வா… இங்கே போ… அங்கே போ….” அப்படின்னு இஷத்துக்கு வேலை வாங்குவாங்க.

இப்போல்லாம் வாரத்துக்கு ஏழு எட்டு வெசல் போகுது. அன்னைக்கெல்லாம் வாரத்துக்கு ஒரே வெசல் தான். வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா “ஐயையோ…சனி ஞாயிறு லீவா போயிடுமே… இன்னைக்குள்ளே எல்லாத்தையும் கிளியர் பண்ணியாகனுமே”னு பதறுவோம். ஆனா அவங்க எங்க கஷ்டத்தை புரிஞ்சிக்கவே மாட்டாங்க. அவங்களுக்கு அது தெரியாது. எங்க உயிரே போய்டும். ஒரு வெசல் கிளியர் ஆகி போச்சுன்னா மாசம் ரூ.1,500/- கிடைக்கும். அதுக்காக நாயா உழைப்பேன்.

அன்னைக்கு ஒரு சபதம் பண்ணேன். இந்த கஸ்டம்ஸ் ஆபீசர்ஸ் எல்லாம் நம்மளை மதிக்கிற மாதிரி இதே துறையில் ஒரு நாள் இல்லே நாள் நாம நம்பர் ஒண்ணா வரணும் அப்படின்னு. (தொடையை தட்டுகிறார்). பிறகு சொந்தமா ஷிப்பிங் கம்பெனி ஒன்னை ஒரு நாள் ஆரம்பிச்சு… மாசம் 40 கண்டெயினர் வரைக்கும் அனுப்பினேன்.. அந்த துறையில நம்பர் ஒண்ணா வந்தேன்.

அன்னைக்கு ஒரு சபதம் பண்ணேன். இந்த கஸ்டம்ஸ் ஆபீசர்ஸ் எல்லாம் நம்மளை மதிக்கிற மாதிரி இதே துறையில் ஒரு நாள் இல்லே நாள் நாம நம்பர் ஒண்ணா வரணும் அப்படின்னு.

CUSTOMS CLEARING & FORWARDING இல் C H A - RULE 9 அப்படின்னு ஒரு எக்ஸாம் இருக்கு. கஸ்டம்ஸ் ஹவுசிங் ஏஜென்ட்களுக்கு என்று ஒரு எக்ஸாம் அது. எப்படி கோர்ட்டுல வாதாடுறதுக்கு வக்கீல் படிப்போ அதே மாதிரி கஸ்டம்ஸ் கிளியரிங் பார்வார்டிங் பண்றதுக்கு உண்டான ஒரு எக்ஸாம் அது. அதை எழுதி பாஸ் பண்ணினேன்.

நாம் : வாவ்… வெரி குட். அது பண்றதுனால் என்ன மெரிட் சார்? (ஆர்வமாக கேட்டோம்)

திரு.ஆர்.சந்திரசேகரன் : அது பண்றதுனால என்ன பெனிஃபிட் அப்படின்னா… அப்போ இருந்த ரூல் படி கஸ்டம்ஸ் கிளியரிங் பார்வார்டிங் ஏஜென்ட்கள் மட்டும் தான் அதை செய்ய முடியும். அவங்க கையெழுத்து போட்டாதான் கிளியரிங் பண்ண முடியும். தனி நபரா பண்ண முடியாது. அதுக்கு CUSTOMS HOUSE AGENT அப்படின்னு ஒரு ALL INDIA EXAM எழுதி பாஸ் பண்ணனும். அப்போ தான் லைசன்ஸ் கிடைக்கும். அந்த எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணினேன்.

So, வாழ்க்கையில நான் சாதிச்ச ஒவ்வொன்னும் நாம பட்ட கஷ்டமும் அவமானமும் தான்.  அன்னைக்கு அந்த ஆபீஸ்ல நம்மளை இன்சல்ட் பண்ணாம நம்மளை ராஜ மரியாதையோட உட்கார வெச்சிருந்தாங்கண்ணா… எனக்கு இந்த லட்சியம் தோன்றியிருக்குமா? இந்த எக்ஸாம் நான் எழுதி பாஸ் பண்ணியிருபேனா? நானும் அவங் கூட ஜாலியா தம் அது இதெல்லாம் அடிச்சிட்டு வாழ்க்கை அப்படியே ஓடிபோயிருக்கும்.

So, வாழ்க்கையில நான் சாதிச்ச ஒவ்வொன்னும் நாம பட்ட கஷ்டமும் அவமானமும் தான்.  அன்னைக்கு அந்த ஆபீஸ்ல நம்மளை இன்சல்ட் பண்ணாம நம்மளை ராஜ மரியாதையோட உட்கார வெச்சிருந்தாங்கண்ணா… எனக்கு இந்த லட்சியம் தோன்றியிருக்குமா?

எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணின உடனே, எந்த கஸ்டம்ஸ் ஆபீஸ் நம்மளை மதிக்கலியோ அதே ஆபீஸ்ல நாம் போகும்போது ராஜ மரியாதை கிடைச்சது - என் வேலையின் காரணமாக. பின்னாளில் அவங்க எல்லாரும் என் நண்பர்களா மாறக்கூடிய நிலை வந்தது.

மனித வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடியது. ஆகவே யாரும் தலைக்கனத்தோடு ஆடக் கூடாது. அப்படி மாறக்கூடிய வாழ்க்கை எப்படியெல்லாம் ஆண்டவனால் சரியா நேர்கோட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்படுகிறது என்பதையும் சொல்கிறேன்.

மனித வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடியது. ஆகவே யாரும் தலைக்கனத்தோடு ஆடக் கூடாது.

சபரிமலை சாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் இவரது வாழ்க்கையில் நிகழ்த்திய அந்த அற்புத அனுபவத்தை நீங்கள் தெரிந்துகொண்டே தீரவேண்டும். இது பற்றிய ஒரு விரிவான பதிவை, கீழ்கண்ட தளத்தில் அளித்திருக்கிறேன். படியுங்க. பயன்பெறுங்கள். படித்து முடித்ததும் கடவுள் நம்பிக்கை உங்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும். வாழ்க்கையிலும் பிடிப்பு ஏற்படும் என்பது மட்டும் உறுதி.

http://www.livingextra.com/2012/05/blog-post_09.html

(அவர் கூறியதை கேட்க கேட்க எனக்கு “ஐயப்பா…………..” என்று கத்தவேண்டும் போலிருந்தது.)

—————————————————————————————————————

இந்த பதிவுக்கு நான் முதலில் வைத்திருந்த தலைப்பு எனக்கு அவ்வளவாக திருப்தியில்லை. இதோ தற்போது  - மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் என்று மாற்றியிருக்கிறேன். இந்த பதிவை நீங்கள் படித்து முடிக்கும் தருவாயில், இந்த தலைப்பு ஆர்.சந்திரசேகரன் அவர்களுக்கு எத்துணைப் பொருத்தம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கு. சரி தானே? உங்களுக்காக அந்த ‘பணக்காரன்’ படப் பாடல்…

மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்… பாடல் - வீடியோ!

(எனக்கு மிக மிக பிடித்த பாடல்களுள் இது ஒன்று. இசைஞானியின் இசையில், நாடி நரம்புகளை ஊடுருவும் வரிகள்!)

பார்த்தீங்கல்ல… நண்பர்களே, பதிவு எவ்ளோ பெரிசா வந்துட்டதுன்னு? ஒரே பாகத்துல இந்த முறை இதை கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா முடியலே. என்னோட சண்டே முழுக்க இதை எழுதுறதுலயே செலவாயிடிச்சு. அடுத்த பாகத்துல தான் மீதியை சொல்ல முடியும். ஏற்கனவே பாதி எழுதிட்டேன். மீதியையும் எழுதி சீக்கிரம் போஸ்ட் பண்ணிடுறேன். மன்னிக்க வேண்டுகிறேன். தவர்க்க இயலாத நிலையில் இந்த பிரேக் விடப்படுகிறது.

அடுத்த (FINAL) பாகத்தில்….

  • பிறந்த வீட்டில் இவர் அம்மா பத்து பத்திரம் தேய்த்த கொடுமை.
  • வறுமை என்றால் என்ன? WHAT IS THE TRUE DEFINITION FOR POVERTY?
  • இவரை அழிக்க நினைத்தவர்களின் குடும்பத்தில் இன்று இவரால் அடுப்பெரியும் நிலைமை!
  • தோல்வியில் முடிந்த முதல் ஹோட்டல் கிளை!
  • “தன் பிறப்பை பற்றி கேள்வி கேட்டு ஜோதிடர்களை சிரச்சேதம் செய்த மன்னன்” - திரு.சந்திரசேகரன் சொன்ன சுவாரஸ்யமான, சிலிர்க்க வைக்கும் கதை!
  • இறைவனிடம் நமது பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும்?
  • இறைவன் ஒருவருக்கு உதவேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வான்?
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி?

—————————————————————————————————————

To be continued in next (final) part soon…

13 Responses to “மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் — கிரானைட் & ஹோட்டல் அதிபர் ஆர்.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு! — PART II”

  1. murugan murugan says:

    வாழ்க்கையில் பிடிப்பையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தக்கூடிய உன்னதமான பதிவு !!!

    இறைவனின் அருளாலும் அயராத உழைப்பினாலும் கிடைத்த வெற்றிக்கனியின் சுவை ஒப்பிடமுடியாதது !!!

    சோதனைக்கு பின் தான் சாதனைனு தலைவர் சொன்னது ஞாபகத்துக்கு வருது !!!

    வாடி வதங்கும் தன்னம்பிக்கை வேருக்கு நீரூட்ட்ரும் உங்கள் முயற்சி தொடரட்டும் !!!

    எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தயும் என்றென்றும் துணை நின்று காக்க தலைவரின் எல்லா ரசிகர்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறோம் !!!

  2. harisivaji harisivaji says:

    எதிரியும் நல்லா இருக்கனும் நினைக்கும் அந்த என்னத்திற்கு முதலில் தலைவணங்குகிறேன். எனக்கு எதிரிகள் இதுவரை கிடையாது (இல்லை அதற்கு தகுதியானவர்களை நான் அப்படி பார்க்கவில்லையோ என்னவோ )

    ஆனால் அவர்கள் இல்லையேல் முன்னேறுவது கடினம் என்றும் ஒருத்தரின் வாழ்க்கை உயர்வுக்கு அவர்களின் பங்கு என்ன என்று எவ்வளவு எளிமையா புரிகிறது எனக்கு இந்த பதிவின் மூலம். அதுவும் மூளைக்கும் இதயத்திற்கு இருக்கும் அந்த எண்ண வேறுபாடு அருமை

    தினமும் நாமும் வெற்றிபெறவேண்டும் என்று சில நிமிடங்கள் நினைபதுண்டு ஆனால் அது மூளையை மட்டுமே சென்று அடைகிறது (அப்புறம் மறந்து போகிறது )
    என்றைக்கு அது இதயத்தை அடைகிறதோ அது வைராக்கியமாக மாறுகிறது என்பதை இங்கு இந்த பதிவை படித்ததின் மூலமாக உணர்கிறேன்.

    தலைவரின் உழைப்பு வெளியில் தெரிந்த ஒன்று அதற்கு காரணம் அவரது தொழில் ஆனால் இவர்களை போல் உழைத்து வெற்றி அடைந்தவர்கள் வெளி உலகில் தெரிவதற்கு வாய்ப்பு கம்மி. அவர்களை இன்று நமக்கு அறிமுகபடுத்திய அந்த ஆண்டவனுக்கு நன்றி

    வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு …அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் …இன்று இப்படி தெரிவது நாளை தலைகீழாக மாறலாம்.

  3. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Kasta padama ethuvum kidaikathu enpatharku thiru.chandrasekar avargal sirantha utharanam

  4. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    எந்த ஒரு மனிதனின் முன்னேற்றதிற்கும் எதிரி வெளியே இல்லை. சோம்பேறித்தனம் முன்னேற்றத்தின் முதல் எதிரி. பொறமை இரண்டாம் எதிரி. நம்மால் முடியாது என்று நினைக்கும் தோல்வி மனப்பான்மை மூன்றாம் எதிரி. அதே போல் துரோகி என்று யாரும் வெளியில் கிடையாது. நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களை குறை சொல்லுவது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம். திரு. சந்திரசேகரன் அவர்கள் இதை புரிந்துகொண்ட வாழ்க்கையில் சாதித்திருக்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

  5. JAYALAKSHMI R JAYALAKSHMI R says:

    அன்புள்ள திரு சுந்தர் அவர்களுக்கு ஏன் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள். நான் நீண்ட நாட்களாக உங்கள் இணையதளதை வாசித்து வருகிறேன். நீங்கள் என் மானசீக குரு (Mr ரஜினி) பற்றி வெளியிடும் செய்திகள் உண்மையில் வாழ்வியல் தத்துவம் என்ன என்பதை மிக எளிமையாக உணர முடிகின்றது. நன்றி உங்கள் படைப்புகள் மேலும் மெருகேற ஆண்டவன் உங்கள் அருகிலேயே இருக்கட்டும்.

    வாழ்த்துகளுடன்

    ஜெயலக்ஷ்மி. ர

  6. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    Hats off to you Sunder , உங்களுடைய முயற்சிகளுக்கு!! உங்களுடைய எண்ணம், பணி ஆகியவை உங்களை உயரத்தில் வைக்கும். வாழ்த்துக்கள்.

  7. **Chitti** **Chitti** says:

    Hi My dear Rajni Aficionados,
    ***********************************
    Hope all of you're fine and doing great.
    ***
    "“நாம் வெற்றியடையவேண்டும். சாதனைகளை படைக்கவேண்டும். இந்த உலகமே நம்மை திரும்பி பார்க்கவேண்டும்.” அவ்ளோ தான். இதற்கான பொறி என்னிடம் ஏற்பட்டதிலிருந்தே வாழ்க்கையே சுவாரஸ்யமாகிவிட்டது."
    - மிக்க நன்று. வாழ்த்துக்கள். சாதரணமான ஒரு வலைதளத்தின் ஆசிரியராக இல்லாமல், வாழ்க்கையில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைய வாழ்த்துக்கள்.
    ***
    மற்றும் இவரின் (கதையின் நாயகன்) பதில்களுக்கு நான் என்னுடைய கருத்துக்களை தெரிவித்தால் அது கண்டிப்பாக அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போகும்.
    ஆனால், இந்த பதிவு, இந்த நாயகனின் பதில்கள் என் மனதோடு ஒன்றி விட்டது. நிச்சயமாக, நான் ஒரு வேளை எதிர் காலத்தில் உயர்ந்த பிறகு (இவர் அளவுக்கு இல்ல விட்டாலும்) என்னை, என் உயர்ந்ததிர்க்கான காரணத்தை கேட்டு இருந்தால் இப்படி தான் சொல்லி இருப்பேன். அந்த அளவிற்கு அவரின் எண்ணங்களும், எனக்கும் ஒத்து போகிறது. கண்டிப்பாக நானும் எதிர்க்காலத்தில் உயருவேன்.
    "இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்".
    ***
    தலைவர் மட்டும் அல்ல, வாழ்க்கையில் வெற்றி பெற்ற எல்லோரின் மன நிலையும் ஒன்று தான் என்று இந்த பதிவு ஆழமாக சொல்கிறது. இந்த பதிவிற்காக பல வகையில் கஷ்டப்பட்டு, முடிவில் நமக்கு அளித்த சுந்தர்ஜி அவருக்கு மிக்க நன்றி!!!
    ***
    "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்; கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்".
    ***
    **சிட்டி**.
    ஜெய் ஹிந்த்!!!
    dot.

    ————————————————————-
    சிட்டி, உங்களுக்கு நன்றி சொல்வது நான் எனக்கே நன்றி சொல்வது போல. இருப்பினும் சொல்கிறேன். "நன்றி!".
    எனது மனதில் எப்போதும் பாசிட்டிவ் சிந்தனைகள் ஊறிக்கொண்டே இருந்ததற்கு நீங்களும் ஒரு விதத்தில் காரணம் என்பதை நான் மறக்கவில்லை. காலமும் நேரமும் கைகூடி வரும்போது என் நண்பர்களின் பெருமையை உலகறியச் செய்வேன். இது சத்தியம்!!
    - சுந்தர்

  8. Anonymous says:

    எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை!!! சார் என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்து விட்டார்!! தலைவர் தான் உழைப்புக்கு உதாரணம் வேறு யாரும் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தேன்!!! என்னுடைய எண்ணம் தவறு; சாதனையாளர்கள் நம்முடனே நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொண்டேன்!!!

    நான் பர்சனலாக கூற விரும்புவது என்ன என்றால் "இது வரை சும்மா வந்தோமா போனோமா சூப்பர்ஸ்டார் வாழ்க என்று கூச்சலிட்டு கொண்டு சுற்றி கொண்டிருந்தோமா என்று இருந்தேன்" இனி நான் நிச்சயம் அப்படி இருக்க மாட்டேன், என்னுடைய கடமைகள் என்ன என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன்!! யாரிடமும் கடன் வாங்காமல் என் தங்கையின் திருமணத்தையும், சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதையுமே குறிகோளாக வைத்து கொண்டேன்!! பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் "கல்யாணத்தை செஞ்சி பார்; வீட்டை கட்டி பார்" என்று ?!!! இந்த ரெண்டையும் செய்ய நான் தயார் ஆகிவிட்டேன் :) இதுவே என்னை பொறுத்தவரை மிக பெரிய சாதனை!!

    இறைவனின் (அப்பா அம்மா) துணையும், என்னுடைய உழைப்பும், தலைவரின் ஆசியும், பெரியவர்களின் அறிவுரையும் எனக்கு போதும்!! நிச்சயம் நான் செய்து முடிப்பேன்!!!

  9. Shoaib Shoaib says:

    As much as I appreciate the efforts put by Sundar on this site I also strongly believe that this site is becoming less and less useful for Global Superstar Rajinikanth's global fan base that does not read Tamil. English more and more should become the language of communication in this site for Rajini is no longer Tamil Superstar but a Global Superstar. Additionally I also feel that the content of this site is going more and more towards matters and issues beyond cinema. What we all need to remember is that Rajini is a moviestar. Cinema is what made Rajini who he is today and therefore this site needs to focus 90% on Rajini's movies for what it is; ENTERTAINMENT. He is along with Will Smith and Jackie Chan among the top three entertainers in world cinema. Hence, whilst it is useful to discuss the message of Rajini's cinematic dialogues and messages of his movies etc, etc it is also important for us to keep things light because this is the entertainment industry we are talking about.

    ————————————————————————————————
    Dear Shoaib,

    I understand your concern and will try to maintain a right balance. At the same time you should understand that whatever i do i have valid reasons.

    Churning out movie news about Rajini sir always (each and every time) is impossible and most times it ends in speculation only. And as a person like me working somewhere else for bread and running this website for passion (even without google ads), is a tough and toughest task for me to get updated in each and every aspects.

    As a fan site, we have limitations for every thing. They - from Superstar's part - used to respect even the strongest criticisers & abusers of Rajini - but we NEVER enjoyed any benefits or respect from Rajini sir's side till now. Put it aside that i don't expect it.

    Everybody here know that we did a splendid job during Sivaji and Enthiran's release with ocean of facts and articles including the interviews of various exhibitors and distributors. But you know even my smallest and smallest concerns (tickets for trailer launch etc. etc) remained unaddressed till the end. I had to take extra ordinary measures for myself to be present there. It was really painful.

    Many still are not aware of the hardships i undergone and still undergoing in running this website.

    At the same time, you should note that i have interviewed prominent cine personalities like Editor Antony, Deva, SPM sir, Panchu Arunachalam, Suresh Krishna, Legendary TMS, Thalapathi Dhinesh, Four Frames Kalyanam etc. etc. over the months. They have shared valuable infos related to Rajini sir's reel life and real life which most of them have not come in any media sources so far. Why not you give a read? (I have provided translations too for some of them. I have mailed you about it. But i couldn't see your repsonse there!)

    You can check the below category to find such news. http://onlysuperstar.tamilmovieposter.com/?cat=853

    Just because you didn't find some news you expected here, i think you have spoken like this. I assume.

    I have been covering up movie news related to Rajini for more than 5 years and it yielded no fruits to me. (in any aspect!). But at the same time, the way i am running this site now, has propelled me to unexpected heights which i am yearning for years.

    Btw, i will attend and rectify your concerns too. Yes… of course with a striking balance.

    As Superstar said in Eeram Audio launch, i have stopped my hard work and just started to work smart. If one go by Rajini sir's nature… this way.. this style… is what he is expecting and also would like to appreciate. I know that.

    Wait and watch. Of course with patience.

    Thanks.

    - Sundar

  10. **Chitti** **Chitti** says:

    My dear Shoaib,
    ********************
    Following is my humble reply for you and for others who feel the same like you.
    ***
    your first part is right - I mean, this site should give the articles in English as well since we're all global super star’s fans.
    I DON'T EVEN WOULD BE SPENDING MY TIME FOR JUST MERE TRANSLATION WORK OF SOME ARTICLES WHICH THEMSELVES WILL TAKE SO MANY HOURS.
    NO ONE IS READY TO HELP IN THIS BUSY WORLD IN ASPECTS OF TIME.
    I would like to list out elaborately the hardships he’s facing in running this website. (You know he doesn’t have even a good pc). But he would definitely chop off my words. I know that. So I stop here.

    *******************************************************************************
    Response to your second question is as follows:
    Rajni might have come and known well to us by cine industry. But only because of his good will nature and motivational character and his fiery nature towards self-improvement and personal expansion to spiritual, he is staying with us as a ruler of the box office and king maker of the country, may be the world.
    Think how many good actors have stayed more than 35 years as a (MORE IMPORTANTLY) SUPER STAR in this cine field. You name some body like him please. Since I don't know much actors who stayed like him so far as RULER OF BOX OFFICE OF THE COUNTRY (EVEN, IN SOME PARTS OF THE WORLD). This is all because of his good will nature only. Being merely as an actor for running the movie, no. he has come so far from the stage. HE IS BEING VIEWED AS DEMI-GOD IN OUR COUNTRY now only because he has so many inspirational qualities which are well beyond the cine industry to be learned by us to get success in our lives. WE LOVE RAJNI SIR MOSTLY NOW BECAUSE OF THAT ONLY.
    ***
    WE LOVE RAJNI SIR MORE BEYOND HIS STYLE, ACTING AND HE IS A DEMI-GOD NOW BECAUSE OF HIS ALL INSPIRATIONAL QUALITIES ONLY. So by looking in that point of view, sundar is bringing more and more life time real heroes in this world - for example, Mr. ILANGO. He is the starting point for all this change. I don't know whether you have read two articles about him or not. But if you would have read, you would come to know how all people who have won their lives have common fiery attitude towards the life like our SIVAJI. It's really appreciable and laudable thing. That's why we have got GOOD responses in comment section from great people like Mr. Mylsamy Annadurai.
    ***
    Even rajini also would love to know that these kinda things have been done by his fans. He would be proud to know all this. His motive is, to up-lift the people to get more success in our lives. That's why he does more motivational things in his films for over the past twenty years. Each of his first song would clearly indicate that. First let’s understand what Rajini is telling us and what he wants us to do – that’s nothing but to succeed in our own life. (I am telling this for only those who yet to succeed in their life)
    ***
    so, nothing wrong in going beyond the entertainment.
    **********************************
    that's my reply to your both questions. if any of my point hurts you, I am very sorry for that.
    *****
    I AM PROUD TO BE THE FAN, ADMIRER, AFFECTIONATE AND TRYING-TO-BE-FOLLOWER OF THE MAN 'SIVAJI RAO' THAN (REEL CINEMA) SUPER STAR 'RAJINIKANTH'….
    ***
    **Chitti**.
    Jai Hind!!!

  11. Sakthivel Sakthivel says:

    Eagerly waiting for final part..

  12. Anonymous says:

    மனதில் சோர்வும், பயமும் இருந்த எனக்கு இந்த பதிவு ஒரு உற்சாக டானிக்……தளர்ந்து கிடந்த என் நெஞ்சிற்கு புது உத்வேகம் கிடைத்த உணர்வு….நினைத்தது நடக்காமல் கடவுள் மேல் இருந்த நம்பிக்கை கரைய இருந்த நேரத்தில் சந்திரசேகர் சாரின் வார்த்தைகள் என் நம்பிக்கையை அதிகரித்துவிட்டன….! ஆண்டவன் கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது…தடுப்பதற்கும் காரணம் இருக்கிறது….!

    -

    என்னை தட்டி எழுப்பி, புது உணர்வு ஊட்டிய சந்திரசேகர் சாருக்கும், சுந்தர் அண்ணாவிற்கும் நண்றிகள் !

    "மூன்றாம் பிறை மெல்ல மெல்ல

    முழு நிலவாய் மின்னுவதை

    மின்மினிகள் தடுத்திடுமா ! ""

    -

    "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  13. Saravanan Saravanan says:

    சுந்தர் அண்ணா,

    இப்பொழுது தான் இந்த பதிவினை நன்றாக படித்தேன்,, இனிமேல் தான் இவருடைய கடைசி பகுதியை படிக்க போகின்றேன்..

    வெறித்தனமாக மனமும் மூளையும் கொதிக்கின்றது..

    கஷ்டபடனும், கை நிறைய சம்பாதிக்கணும் என்று..

    தாய் தந்தையரை கவனிக்க வேண்டும் என்று..

    நன்றி..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates