You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 69: இசைஞானி இளையராஜாவின் நூல் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்? & ரஜினி தந்த பரிசு - பூஜை அறையில் வைத்த நண்பர்!

1) புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ரஜினி மன்றத் தலைவர் போட்டி — சரியா?

விரைவில் வாக்குப்பதிவு (?!!) நடைபெறவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ரசிகனி ரசிகர் மன்றத் தலைவர் போட்டியிடுகிறார்.

பிரதான அரசியல் கட்சிகள் கூட போட்டியிட ஆர்வம் காட்டாத நிலையில், களத்தில் ஆளும்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான தேமுதிகவும் மட்டுமே போட்டியிடுகின்றன. இந்த நிலையில், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் களம் இறங்கியிருப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

இது குறித்து தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீதர் கூறுகையில், “ரஜினியின் அனுமதி இல்லாமல் தான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இது முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முடிவு. ரஜினிக்கோ தலைமை மன்றத்தை கவனித்து வரும் சுதாகருக்கோ இதில் தொடர்பில்லை. ரஜினியின் அரசியல் தொடர்பான அறிவிப்புக்கு நாங்க நீண்ட காலமாக காத்திருக்கிறோம். ஆனால் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதோ நாங்கள் போட்டியிட்டு எங்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை அனைவரும் பார்க்கட்டும். இது எங்கள் நீண்ட கால கனவு” என்கிறார்.

1983 ஆம் ஆண்டில் மன்றத்தில் சேர்ந்த ஸ்ரீதர் 1998 ஆம் ஆண்டு முதல் தலைமைப் பொறுப்பை கவனித்து வருகிறார்.

“தமிழக மக்களை பொறுத்தவரை ரஜினிக்காக வாக்களிக்க அவர்கள் எப்போதுமே தயாராகத் தான் இருக்கிறார்கள். இங்கு நாங்கள் பல்வேறு நலத் திட்ட பணிகளை செய்திருக்கிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு ரஜினி அவர்களின் ஆசி கிடைத்தல் ரசிகர்களுக்கு அது ஒரு மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்,” என்று கூறுகிறார் ஸ்ரீதர்.

தவறான முன்னுதாரணம்!

நண்பர்களே, இது மிக மிக தவறான ஒரு முன்னுதாரணம் ஆகும். ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் பலவித அத்துமீறல்கள், மாய் மாலங்கள் செய்து எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்து, பிரதான கட்சிகளே ஒதுங்கி உள்ள நிலையில் இது தேவையற்றது. இது தலைவருக்கு தான் அவப் பெயரை தேடித் தரும். ரஜினி அவர்களே அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், ரசிகர் மன்றத்தினர் இது போன்று அவரது விருப்பத்திற்கு மாறாக செயல்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இவர்கள் ஒருவேளை சொற்பமான வாக்குகளே வாங்கி தோல்வியை தழுவினால் அதனால் எழப் போகும் அவப் பெயர் யாருக்கு? சிந்திப்பீர் ரசிகர்களே!!

(ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க கூடாதோ?)

2) கோச்சடையான் தெலுங்கில் விக்ரம் சிம்மா!

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஜப்பானீஸ் உட்பட மூன்று மொழிகளில் வேயயாகவிருக்கிறது. ‘கோச்சடையான்’ தூய தமிழ் பெயர் என்பதால், தெலுங்கிற்கும் ஹிந்தி பதிப்பிற்கும் புதிய பெயர்களை பரிசீலித்து, விக்ரம் சிம்மா என்ற ஒரு அசத்தலான பெயரை இறுதி செய்துள்ளனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் மூன்று பாத்திரங்களில் ஒரு பாத்திரத்துக்கு விக்ரம் சிம்மா என்ற பெயர் உண்டு என்பது தான் இங்கே விஷேஷ தகவல்.

அதே சமயம், தமிழிலும் தெலுங்கிலும் ‘கோச்சடையான்’ என்ற பெயரிலேயே வெளியிடப்படும். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், கம்ப்யூட்டர் CG பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

(ஆடியோ ரிலீஸ்க்கு வெயிட் பண்ணிக்கிட்டுருக்கோம். சீக்கிரம் தலைவா… சீக்கிரம்!)

3) ரஜினி ரசித்த கப்பார் சிங்!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கப்பார் சிங்’. சல்மான் கான், சொனாக்ஷி சின்ஹா நடித்து 2010 ஆம் ஆண்டு வெளிவந்த டப்பாங் திரைபப்டத்தி தெலுங்கு பதப்பு தான் இந்த கப்பார் சிங். படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் முழுக்க புரட்டி போட்டிருக்கும் இந்த படத்தை, சூப்பர் ஸ்டார் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் காண விரும்பினார். இதையடுத்து, சென்னையில் இருக்கும் ப்ரீவ்யூ திரையரங்கம் ஒன்றில், அவருக்காக படத்தின் தெலுங்கு விநியோகஸ்தர் ஒருவர் மூலம் திரையிடப்பட்டது. தந்தது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் சுமார் 22 பேருடன் சூப்பர் ஸ்டார் இந்த படத்தை கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை வெகுவாக ரசித்த சூப்பர் ஸ்டார் பின்னர் பவன்கல்யானை தொடர்புகொண்டு தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.

(தமிழில் இந்த படம் வெளிவந்ததாக கூறுகிறார்கள். யார் நடித்து வெளியானது என்று யாராவது கூறினால் நன்றாக இருக்கும்!!)

4) இளையராஜா நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி?

குமுதம் குழுமம் இசைஞானி இளையராஜா பற்றிய நூல்களை ஜூன் முதல் வாரம், சென்னையில் வெளியிடவிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சி, சென்னை ம்யூசிக் அகாடமியில் நடக்கும் என தெரிகிறது.

விழாவில் கலந்துகொள்ள, பல்வேறு திரையுலகப் பிரமுகர்களுக்கும் முக்கிய நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூல்களை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் வருவதாக ஒப்புக்கொண்டு விட்டார் என்றே தகவகள் கூறுகின்றன.

இளையராஜாவும் சூப்பர் ஸ்டாரும் படங்களில் இணைந்து வெகுகாலம் ஆகிவிட்டாலும், இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் இன்னும் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறது என்பது தான் விசேஷம்.

(பெரியவங்க பெரியவங்க தான்!)

5) ரஜினி தந்த பரிசு - பூஜை ரூமில் வைத்த நண்பர்!

சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் இவர். வயதிலும் அறிவிலும் சூப்பர் ஸ்டாரை விட பன்மடங்கு மூத்தவர். சமீபத்தில் ஒருநாள் தனது வீட்டுக்கு இவரை வரவழைத்த ரஜினி, ஒரு அழகிய கைத்தடி ஒன்றை பரிசளித்தாராம்.

“அண்ணே இதை வெச்சிக்கோங்க. இதை பிடிச்சி நடக்கும்போது என் தோளை பிடிச்சி நடக்குற மாதிரி நினைச்சிகோங்க!” என்று கூறி அதை கொடுக்க, வாங்கிய அந்த நண்பரோ கண்கலங்கிவிட்டாராம்.

இதுல என்ன விசேஷம்னா, அந்த நண்பர் அதை யூஸ் பண்ணாம, பூஜை ரூம்ல வெச்சிட்டாராம். “இது தலை சிறந்த  அன்புப் பரிசு. இதுக்கு இந்த உலகத்துல ஈடு இணை இருக்குமா? இப்போ எனக்கு இது தேவையில்லை. ஒரு வேளை எதிர் காலத்துல தேவைப்பட்டால், யூஸ் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் இது என்னோட பூஜை ரூம்லயே இருக்கட்டும்” என்று தனது பூஜை ரூமில் பயபக்தியுடன் வைத்துவிட்டாராம்.

(தலைவா… உங்க நண்பருக்கு ஊன்றுகோல்வாங்கி கொடுத்துட்டீங்க. தமிழ்நாட்டுக்கு எப்போ செங்கோல் தரப்போறீங்க?)

[END]

13 Responses to “Tidbits # 69: இசைஞானி இளையராஜாவின் நூல் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்? & ரஜினி தந்த பரிசு - பூஜை அறையில் வைத்த நண்பர்!”

 1. vasi.rajni vasi.rajni says:

  நமது ரசிகர்களின் இந்த செயல் நமக்கு ஒரு வித excitement கொடுத்தாலும், அதன் இறுதியில் நிச்சயம் சந்தோசத்தை தராது என்பதை நாம் உணரவேண்டும் .
  .
  நமது மன்றத்தினரின் நோக்கத்தையும் நாம் அனைவரும் அறிவோம். அவர்களின் இந்த துணிச்சல் பாராட்டத்தக்கது. தலைவரின் கவனத்தை பெறுவதே இதன் நோக்கமாக கருதுகிறேன்.
  .
  புரட்டு தமிழன் சத்யராஜ் "சினம்" திரைபடத்தில் கூறிய வசனங்கள் நமது ரசிகர்களை நெஞ்சில் சென்று கிறுவது போல் உள்ளது. ரசிகர்களின் மனம் மிகவும் புண்பட்டுள்ளது.நமது ரசிகர்களும் மிக மிக பொறுமையாகவே உள்ளனர்.

  தலைவர் நமது ரசிகர்களின் மனநிலையை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். ரஜினிகாந்த் என்பவர் தனிமனிதர் அல்லர் .தலைவரின் முடிவை எதிர்பார்த்து இன்னமும் லட்சகணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்கள் காத்திருகின்றனர்.
  .
  தலைவர் விரைவில் ரசிகர்களை சந்தித்து, வெளிபடைய பேசவேண்டும். ரசிகர்களின் உணர்வுக்கு இட்டம் தரவேண்டும் .
  .
  தனது மக்கள் பலத்தை நிச்சயம் அவர் வினாடிக்க கூடாது. இது புதுகோட்டை ரசிகர்களின் ஆசை அல்ல!! அனைத்து தமிழர்களின் ஆசை.
  .
  rajni will rule tamilnadu

  ——————————————————————
  இன்று காலை கிடைத்த செய்தி : மேற்படி ரசிகர்களை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் வாபஸ் பெறும்படியும் தலைவர் பணித்திருக்கிறார். அவர்கள் தேர்தலிலோ ஜனநாயக அமைப்புக்களிலோ பங்கு பெறலாம். ஆனால் அவரது பெயரையோ, படத்தையோ, மன்றத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று திரு.சுதாகர் மூலம் மேற்படி ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  //புரட்டு தமிழன் சத்யராஜ் "சினம்" திரைபடத்தில் கூறிய வசனங்கள் நமது ரசிகர்களை நெஞ்சில் சென்று கிறுவது போல் உள்ளது.//

  வஸி… இப்படி ஒரு படம் வந்ததும் சரி… அதுல இப்படி ஒரு நடிகர் நடிச்சதும் சரி… நீங்க சொல்லித் தான் எனக்கு தெரியும். படத்தை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும்போது இந்த மாதிரி அதிமுக்கியத்துவம் வாய்ந்த விபரங்கள் எல்லாத்தையும் எங்கே படிக்கிறீங்க?

  - சுந்தர்

 2. Sankaranarayanan Sankaranarayanan says:

  தலைவா… உங்க நண்பருக்கு ஊன்றுகோல்வாங்கி கொடுத்துட்டீங்க. தமிழ்நாட்டுக்கு எப்போ செங்கோல் தரப்போறீங்க?

  பலரது ஏக்கத்தினை பறை சாற்றிய இந்த வரிகள் மிகவும் சரியானது.

 3. murugan murugan says:

  தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி !!!

  ஒவ்வொரு பகுதியின் final டச் சும்மா நச்சுன்னு இருக்கு !!!

 4. B. Kannan B. Kannan says:

  வழக்கம் போல் டிட்பிட்ஸ் சூப்பர் சுந்தர்..
  //(தமிழில் இந்த படம் வெளிவந்ததாக கூறுகிறார்கள். யார் நடித்து வெளியானது என்று யாராவது கூறினால் நன்றாக இருக்கும்!!)//
  இது உங்க trademark குசும்பு..
  //சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஜப்பானீஸ் உட்பட மூன்று மொழிகளில் வேயயாகவிருக்கிறது. //
  நான்கு மொழிகள் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்!

 5. vasi.rajni vasi.rajni says:

  தலைவரின் இந்த உத்தரவை ரசிகர்கள் ஏற்க்க வேண்டும்.தலைவர் இந்த விஷயத்தில் react செய்துள்ளது மகிழ்ச்சியே.ஆனால், தலைவர் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். நமது மன்றத்தினர்

  .

  2008 சந்திப்பின் போதே சொல்லிவிட்டனர், எதை செய்தாலும் உங்கள் வழியில் தான் செல்வோம் என்று. தலைவர் இதனை சற்று யோசிக்க வேண்டும்.காலம் அக அக ரசிகர்கள் மனதில் பல்வேறு சஞ்சலங்கள் நிகழ்கின்றது.

  .

  கடந்த கல நிகழ்வுகளை வைத்து பார்க்கும் பொழுது ரஜினி எனும் சக்தியை தமிழக அரசியலிலிருந்து பிரிக்கவே முடியாது. அவரே ஒதுங்கினாலும் அது அவரை துரத்தி கொண்டே இருக்கும். அவரை துரட்டவிட்டலும் ரசிகர்களை தினம் தினம் துரத்துகிறது என்பதே உண்மை.

  .

  அப்படி தலைவர் இனிமேல் அரசியலின் இடுபட போவதில்லை என்றல் அவர் அதனை நிச்சயம் வெளிபடைய அறிவிக்க வேண்டும். அதனை திறந்த மனதுடன் ஏற்க்க நாம் அனைவரும் எப்போதோ தயாராகிவிட்டோம்.

  .

  பல்வேறு மனநிலைகளில் வாழும் மக்களுக்கு மத்தியில் தலைவர் இனிமேலும் இறைவன் வழிவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்று எல்லாம் கூறகூடாது.உயர்ந்த ஆன்மிக நிலைகளில் வாழும் மக்களால் இதனை புரிந்துகொள்ள முயற்சித்தாலும் பாமர மக்கள் இதனை நிச்சயம் உணர முடியாது.

  .

  "கடமையை செய் பலனை எதிர்பார்" என்று கீதையின் தத்துவத்தை பட்டறிவு மக்களுக்காக திருத்திகூரிய தலைவர், தன்னுடைய அரசியல் முடிவையும் இது போன்று பட்டறிவுக்கு எட்டும் படி அறிவிக்க வேண்டும்

  .

  தலைவர் நிச்சயம் இந்த ஆண்டுக்குள் தனது முடிவை அரிப்பார் என நம்புவோம்.

  .

  rajini will rule tamilnadu

 6. Seerethran Seerethran says:

  கப்பார் சிங்க் இன் தமிழ் இஸ் ஒஸ்தி…தாபங் ரீமேக்…

  ———————————-
  ஓ…. அப்படி ஒரு படம் வந்ததா என்ன? எனக்கு தெரியாதுங்க !!!
  - சுந்தர்

 7. Sambath Sambath says:

  சுந்தர்,
  இன்று பொதிகை சேனல் நியூஸ் இல்,உங்களை பார்த்தேன்(you received some gift from chennai mayor) really i was Exited!!!,ஆனால் சில காரணங்களால் சேதியை கேட்க முடியல. என்ன நிகழ்ச்சி அது?

  Sambath

  ———————————————————-
  Oh… Thank you. That was one of the proudest moments. I am not aware of the Doordarshan news telecast. Anyway, i am very happy that you spotted me there right.

  I will brief about the event later. Herewith i have given the link. Please check it.
  http://yfrog.com/3t0u94j

  - Sundar

 8. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  //தலைவா… உங்க நண்பருக்கு ஊன்றுகோல்வாங்கி கொடுத்துட்டீங்க. தமிழ்நாட்டுக்கு எப்போ செங்கோல் தரப்போறீங்க?)//

  ஒவ்வொன்றும் அருமை…

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 9. Anonymous says:

  புதுகோட்டை ரசிகர் மன்ற தலைவர் "இந்த" சமயத்தில் எடுத்த முடிவு மிகவும் தவறானது!! கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்!! 36 வருடங்கள் ஒரு தவம் போல் காத்துகொண்டிருந்த ரசிகர்களே!! ஆனது ஆகட்டும் இன்னும் 4 வருடங்கள் தான்!! கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும், தலைவர் ரசிகர்களை கை விட மாட்டார் :) பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற வள்ளுவர் வாக்கு பொய்யாது :) ஆண்டவன் இருக்கார் :) எதை பற்றியும் கவளி படாதிர்கள், உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்காதிர்கள்!!!

  "விக்ரம் சிம்மா" ஜான் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் "சும்மா நச்சுனு இருக்கு"

  "இசை கடவுளும், கலை கடவுளும்" ஒன்றாக இதுவரை நான் மேடையில் பார்த்ததில்லை, இனியும் இப்படி பட்ட மேதைகளை உலகம் பார்க்க போவதும் இல்லை!!! தலைவர் தரிசனம் அடுத்த மாதம் ரெடி :) :) :)

 10. s m mubarak nagore s m mubarak nagore says:

  மனிதனின் வாழ்நாள் சுருங்கி கொன்டு இருக்கு ,நம்ம தலைவருக்கு இது மறு பிறவி ,தலைவர் இதை உணரவேண்டும் வாழ்ற கொஞ்ச நாட்கள்ல தமிழ் மக்களுக்கு சேவை செய்து இளைய தலைமுறை மக்கள் மனதில் நம் தலைவர் வாழவேண்டும் ,அதற்கு தலைவர் வெளி உலகுக்கு வரவேண்டும் ,மக்களை சந்திக்க , அப்போது தான் ரஜினி என்ற மனிதர் வாழ்ந்த வாழ்கை நிறை வடையும் .

 11. GokulDass GokulDass says:

  யாரு சுந்தர் அந்த பெரியவர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates