









You Are Here: Home » Featured, Happenings » தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்துள்ள “வழக்கு எண் 18/9″! பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ! முழு புகைப்படங்கள்!!!
பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகி தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் ‘வழக்கு எண் 18/9′ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ஃபோர் பிரேம்ஸ் ப்ரீவ்யூ திரையரங்கில் பார்த்து பாராட்டி படக்குழுவினரை பரவசப்படுத்தினார்.
தரமான படங்களையே இது வரை தந்துள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேலின் மற்றுமொரு தரமான படைப்பு இந்த “வழக்கு எண் 18/9″.
தரமான படங்களை என்றுமே நம் தலைவன் பாராட்ட தவறியதில்லை எனும்போது, தமிழ் சினிமாவின் தரத்தை தலையில் குட்டி அனைவருக்கும் தெரிவித்திருக்கும் இந்த அற்புதமான ப(பா)டத்தை மட்டும் பார்க்காது - பாராட்டாது விட்டுவிடுவானா?
லிங்கு சார், உங்கள் நல்ல முயற்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் இந்த வெற்றி.
உங்கள் நல்ல நட்பிற்கு தலைவர் கொடுத்த்ள்ள ஒரு சின்ன பரிசு இந்த வருகை.
உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் கொடுத்துள்ள மிகப் பெரிய கொடை தான் இவை அனைத்தும்.
நீங்கள் இது போன்று மேலும் பல தரமான படங்களை தயாரித்து தமிழர்களை தலைநிமிரச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக.
ஒட்டுமொத்த மீடியாவும் சிலாகித்து பேசும் இந்தப் ப(பா)டத்தை பற்றி கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் இதை பார்க்க தமது விருப்பத்தை தெரிவிக்க, உடனே தயாரிப்பாளர் லிங்குசாமி, சூப்பர் ஸ்டார் மற்றும் அவர்களது நண்பர்க்ளுக்கென்ன ஸ்பெஷல் காட்சி ஒன்றை ஃபோர் பிரேம்ஸ் ப்ரீவ்யூ திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்.
படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்துள்ள படம் என்று பாராட்டினார்.
டீன் ஏஜ் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. குறிப்பாக எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கும் டீன் ஏஜ் பெண்களின் பெற்றோர் அவசியம் பார்க்கவேண்டிய படம் இது.
(குறிப்பு : லிங்குசாமி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். சூப்பர் ஸ்டாரின் மிகப் பெரிய அபிமானி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். எந்த சூழ்நிலையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை இவர் விட்டுகொடுக்க மாட்டார். ரஜினி மீது மிகப் பெரும் மரியாதையும் உண்மையாக வைத்துள்ள திரையுலக முக்கியஸ்தர்களுள் ஒருவர். பல்வேறு பேட்டிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் பற்றி அற்புதமான கருத்துக்கள் கூறியிருக்கிறார் லிங்கு!)
புகைப்படங்கள்
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
———————————————————————————————-
[END]
தலைவர் செம்ம ஸ்மார்ட் ஆ இருக்கார்..
சூப்பர் பாஸ்ட் சுந்தர் ….. தலைவர் ஜொலிக்கிறார் .
லிங்குசாமி முகத்தில்தான் எத்தனைப் பரவசம் ! ரசிகனால் மட்டுமே இதனை உணரமுடியும்
நீண்ட நாட்களுக்கு பிறகு நமது தலைவரின் முகத்தில் ஒரு வித்தியாசத்தை பார்க்க முடிகிறது … தலைவரின் பழைய… மின்னல் தோற்றம், வசீகரமும் மீண்டும் தெரிகிறது. இறைவா இந்த ஒரு மாற்றத்திற்காக தான் நாங்கள் எத்தனை நாள் காத்து கிடந்தோம்.
மிக்க நன்றி சுந்தர்
இப்பல்லாம் தலைவரை பார்த்தாலே கண் என்னை அறியாமல் கலங்குகிறது
தலைவர் back to his usual appearance after hospitalization..He looks smart..and hopefully let we hear the announcement of his next with Shankar(????)…fingers crossed.
நீ ஒருவன் தான் அழகு ,,,,, தலைவா கொச்சடயான் ஒரு motion capturing film nu சொலுரங்க ,,,, நாங்க எல்லாம் c class crowd,,, ஏன்களுக்கு எல்லாம் புரிற மாதிரி ஒரு படம் ஏடு தலைவாஆ
தலைவர் வரும் போது எதிர் கட்டிடத்தில் வெளிய கேட் வாசல ஒருத்தர் நிக்குறார் பாருங்க அவரு எவ்ளோ கொடுத்து வச்சவர்
தலைவா என்ன அழகு கலக்குங்க தலைவா
தான் விரும்பும் ஒருவரே வந்து பாராட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாது. இது லிங்குசாமி அவர்களின் முகத்தில் நன்றாகத் தெரிகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
Charming , young super Thalaivaa…
என்ன சொல்வது இந்தப் படத்தை பார்த்த அனைவருமே, அவசியம் சென்று பார்க்கவும். "Don't miss!" என்று தான் சொல்கிறார்கள். இப்படி ஒரு POSITIVE WORD OF MOUTH எந்த படத்திற்கும் நான் கேட்டதில்லை.
மக்களுக்கு பிடிக்கிறது நாங்கள் கொடுக்கிறோம் என்ற எந்த வித கமர்சியல் காம்ப்ரமைஸ்களும் இன்றி, உண்மையாகவே மக்களுக்கு பிடித்ததை தந்து மக்களை கௌரவப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
இந்தப்படத்தை தயாரித்த லிங்குசாமி சாரை எவ்ளோ பாராட்டினாலும் தகும். HATS OFF TO YOU LINGU SIR.
சூப்பர் ஸ்டாரின் மிடுக்கான நடையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம் போல அப்படி ஒரு அழகு.
நீ நடந்தால் நடை அழகு!
நல்ல திரை படங்களை தலைவர் பாராட்டாமல் இருந்தது இல்லை என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு..
தலைவர் படங்களில் - கூல்..
Superb ! தலைவா ..
சூப்பர் ஸ்டாரின் பன்ஞ், டயலாக்குகள் பகுதி 5
http://vanavil7.blogspot.com/2012/05/5.html
Like us on Facebook
http://www.facebook.com/Vanavil7
Follow us on Twitter
https://twitter.com/#!/vanavil7
தலைவருக்கு சுத்தி போடுங்கப்பா ..,. என்னா ஸ்மார்டா இருகார்ப்பா…
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
தலைவர்
என்னா ஸ்மார்டா இருகார்ப்பா…
தலைவர பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு - enna ஒரு தேஜஸ் !!!
சும்மா சிங்கம் மாதிரி இருக்கார் தலைவர்…
Thalaivaa,
Next to you is the Alex Pandian Poster… How can one forget that role you made it your own…
Looking forward for Kochadaiyaan… Wow great looks
Ever green snaps. Thanks a million Sundar for the update. Where are you getting these nice snaps?
சிறந்த படம் அல்ல பாடம்
அதுவும் இதை இவளவு இயல்பாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் இரண்டு விருது பார்சல்
தலைவரின் கம்பீரம் ஒவ்வொரு புகைப்படத்திலும் மிளிர்கிறது. லிங்குவின் பரவசம் கண்டு தலைவரின் முகத்தில் ஒரு தாய்மையின் புன்னகை. நம்மோடு இந்த பதிவை பகிர்ந்தமைக்காக சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல.
வழக்கு எண 18 /9 படம் இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை வெளிச்சமாய் காட்டி இருக்கிறது. ! நடிகர்கள் அனைவரும் புதுமுகம் என்ற அடையாளம் இல்லாமல், எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியது அழகு..! கவர்ச்சி, ஆபாசக் காட்சிகள் ஏதும் இல்லாமல், அந்த மாதிரியான காட்சிகள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் கூட அவற்றை தவிர்த்தது ரசிப்பு, சிறப்பு,,,,!
-
இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கும் , லிங்குசாமிக்கும் எத்துனை நன்றிகள் சொன்னாலும் தகும்….!
-
பாலாஜி சார் தலைவரை வைத்து எப்ப படம் எடுக்க போறீங்க….??!!!
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
தலைவர் சும்மா "நச்"சுன்னு இருக்கார்…..4 -ஆவது போட்டோ-ல அந்த சின்ன பையன் பாக்குறத பாருங்களேன்…வச்ச கண்ணு எடுக்காம பாக்கறான்…..!
அதற்க்கு அடுத்த போட்டோல "அலெக்ஸ் பாண்டியன்" பட போஸ்டர்..பக்கத்துல நிஜ "அலெக்ஸ் பாண்டியன்"……..!
-
வருடங்கள் கூடக் கூட ஜொலிக்கும் வைரம் போல் வயது கூடக் கூட இளமை மெருகேறிக் கொண்டே இருக்கிறது நம் தலைவருக்கு…..! மொதல்ல சுத்திப் போடணும் !
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்