You Are Here: Home » Featured, Role Model » “ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல் அவசியம்!” - சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள்! TRANSLATION ADDED !!

ம் தளத்தில் சமீபத்தில் நாம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை பெரும்பாலானோர் வரவேற்றாலும் ஒரு சிலருக்கு நாம் நம் பாதையிலிருந்து விலகிச் செல்வதாக தோன்றுகிறது.

வாழ்க்கையை சிலர் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி போராட்டமும் தேடலும் உள்ளவர்களுக்காக மட்டுமே இனி இந்த தளம் இயங்கும்.

(அதே சமயம் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் தொடர்பான தரமான நம்பகமான செய்திகளும் இடம்பெறும்! அதில் எந்த மாற்றமும் இருக்காது!!)

என் வாழ்வில் சமீப காலங்களாக தீவிர நேர்முகச் சிந்தனையை (Positive Attitude) நான் செயல்படுத்தியதன் விளைவாக கண்டுகொண்டிருக்கும் பலன்கள் எண்ணற்றவை. வாழ்க்கையில் அனைத்தையுமே பிரச்னையாகவே பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, மேற்படி பாஸிடிவ் சிந்தனை தோன்றியதில் இருந்து, எங்கெங்கு காணினும் வாய்ப்புக்களாகவே தென்படுகிறது.

இவற்றை ஒருமுகப்படுத்தி, எனது முன்னேற்றத்துக்கும், நமது தளத்தின் முன்னேற்றத்துக்கும், என் நண்பர்களின் முன்னேற்றத்துக்கும் & நாம் வாழும் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் ஏதுவான ஒரு திட்டத்தை செயல்படுத்த எண்ணியிருக்கிறேன். திருவருள் துணைபுரியட்டும்.

இதற்கிடையே…. சூப்பர் ஸ்டாரின் சினிமாவைப் பற்றி நாம் ஆண்டுக்கணக்கில் பேசிப் பேசி அலசித் தீர்த்தாகிவிட்டது. அவரும் கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி பெற்று எங்கோ சென்றுவிட்டார். அரசியல் பற்றி அவர் வெளிப்படையாக அவரது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், நாம் அதை பற்றி அதிகம் பேசவேண்டாம் என்று கருதுகிறேன்.

எனவே, திரையில் நிஜ வாழ்வில், சூப்பர் ஸ்டார் பல்வேறு தருணங்களில் கூறிய வாழ்வியல் கருத்துக்கள், அவரது குணாதிசயங்கள், அவரது கொள்கைகள், அவர் கூறிய அறிவுரைகள், எந்த விஷயத்திலும் அவரது அணுகுமுறை இவற்றை தீவிரமாக ஆராய்ந்து, அதன் தாக்கத்தை நம்மிடமும் நம்மை சார்ந்தவர்களிடம் ஏற்படுத்தி நாம் ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த துறைகளில் சாதனையாளர்களாக உயர்வேதே இனி நமது நோக்கம்.

இதற்காக ஒரு குழு (FORCE TEAM) ஒன்றை ஏற்படுத்த முனைந்திருக்கிறேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், முன்னுக்கு வரவேண்டும், எல்லோர் முன்பும் வாழ்ந்து காட்டவேண்டும், என்ற அடங்காத லட்சியத் தீ பற்றி எரிபவர்கள், தொடர்ந்து நமது தொடர்பில் இருக்கவும். தங்களை என்னிடம் அறிமுகம் செய்துகொள்ளவும். நீங்கள் வாழ்க்கையில் மிகவும் அடித்தளத்தில் இருந்தால் அது மிகவும் கூடுதல் தகுதி. அத்தகையோர் தான் தேவை. உங்களிடம் எதிர்பார்ப்பது, ஒன்றே ஒன்று தான். “ஜெயித்தே தீரவேண்டும்” என்கிற அந்த வெறி மட்டும் தான். வேறு எதுவும் இல்லை.

இதற்காக ஒரு குழு (FORCE TEAM) ஒன்றை ஏற்படுத்த முனைந்திருக்கிறேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், முன்னுக்கு வரவேண்டும், எல்லோர் முன்பும் வாழ்ந்து காட்டவேண்டும், என்ற அடங்காத லட்சியத் தீ பற்றி எரிபவர்கள், தொடர்ந்து நமது தொடர்பில் இருக்கவும். தங்களை என்னிடம் அறிமுகம் செய்துகொள்ளவும். நீங்கள் வாழ்க்கையில் மிகவும் அடித்தளத்தில் இருந்தால் அது மிகவும் கூடுதல் தகுதி.

இந்த விஷயத்தில் நம்மிடம் கைகோர்க்க விரும்புபவர்களிடம், சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் தொடர்பான ஈர்ப்பை தவிர மேலும் வாழ்க்கை குறித்த உண்மையும் நேர்மையான ஒரு துடிப்பும் இருப்பது அவசியம். (என்னோட இப்போதைய நண்பர்கள் வட்டத்திலேயேயே சாதிக்கவேண்டும் என்ற அந்த வெறி யாரிடம் இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆகையால், இந்த வட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஃபயர்  இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்).

சமீப காலங்களாக நான் பல்வேறு துறைகளில் சோதனைகளை கடந்து சாதனை புரிந்துகொண்டிருப்பவர்களை பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறேன். சாதனையாளர்களை தேடி அவர்கள் அனுபவத்தை அறிந்துகொள்ள புறப்பட்டுள்ள நமது இந்தப் பயணம் எந்தளவு முக்கியத்துவம் பெற்றது என்பதை கீழ்காணும் வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

“உங்களுக்கு என்று ஒரு ரோல் மாடல் வைத்துக்கொள்ளுங்கள்!” - ரஜினி

http://www.youtube.com/watch?v=hSntjkleu7M

Text of Video Content above:

“இங்கு வருகை தந்திருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு நம் கருணை இல்லத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” கருணை இல்லத்தின் மதர் கூறுகிறார்.

ரஜினியிடம் பொக்கே கொடுக்கப்படுகிறது.

(கைத்தட்டல்)

ரஜினி தொடர்ந்து குழந்தைகள் மத்தியில் பேசுகிறார்.

“இந்த கருணை இல்லத்து மதர் அவர்களுக்கும், வந்திருக்கிற குழந்தைங்க எல்லாருக்கும், மற்றவர்களுக்கும் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்ல நாள்ல உங்களுக்கு தெரிவிச்சிகிறது என்னன்னா… உங்களுக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லே… இப்போ ஒரு படி அரிசி விலை… நாலு ரூபா அஞ்சு ரூபா. நீங்க எல்லாம் வளர்ந்து பெரியவங்க ஆகுறதுக்கு 20 ஆண்டுகள் ஆகும். அப்போ ஒரு படி அரிசி விலை ஐம்பது ரூபா, அறுபது ரூபா ஆனாலும் கூட ஆச்சரியப்படுறதுக்கில்லே. அந்த சூழ்நிலையில் நீங்க எதிர்க்கிறதுக்கு, அதுல வாழறதுக்கு நிக்கிறதுக்கு நீங்க பழகிக்கணும். அதுக்கு உங்களை தயார் படுத்திக்கணும். அதுக்கு இந்த பள்ளிக்கூட படிப்பு மட்டும் பத்தாது. ஆகவே நான் என்ன சொல்ல விரும்புறேன்னா நீங்க எல்லாரும் ஒரு லட்சியத்தை வெச்சிக்கணும். நம்ம நாட்டுல எத்தனையோ பேர் நல்லா வாழ்ந்துட்டு போயிருக்காங்க. வாழ்ந்துக்கிட்டுருக்காங்க. அவங்கள்ள யாராவது ஒருத்தரை உங்களுக்கு பிடிச்சவரை நீங்க லட்சியமா வெச்சு அவங்களை பின்பற்றனும். அது தான் என்னுடைய ஆசை!”

(மீண்டும் கைத்தட்டல்).

நண்பர்களே என்ன ஒரு தீர்க்க தரிசனம் பார்த்தீங்களா? உண்மையில், இந்த படம் வெளிவரும்போது அதாவது 20 / 25 ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு படி சாப்பாட்டு அரிசி விலை ரூ.5/- தான். இப்போ உண்மையில்… ரூ.50/-!!!

(இப்போ பேசியிருந்தார்ணா… “இப்போ ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78/-. அடுத்த அஞ்சு பத்து வருஷத்துல அது ரூ.200/- அல்லது ரூ. 500/- ஆகலாம்…” அப்படின்னு பேசியிருப்பாரோ தலைவர்?)

——————————————————————-
E-mail: simplesundar@gmail.com | Mobile : 9840169215
——————————————————————-

Translation :

“Everyone definitely needs a role model!”- Listen to what Superstar Rajnikanth has to say!

Reasonably, many have shown tremendous response for the few changes which have been made in our website’s way of functioni and its appearance. However, a few feel that we are digressing from our path.

While some are enjoying the life, many are searching for it and struggling in it. Hereafter, our website will cater to the needs of such struggling persons alone.

(At the same time, authentic news and updates regarding Superstar’s movies also will be shared as well. There will never be a change in that!)

In recent times of my life, as a result of my POSITIVE THINKING I have reaped many benefits. As someone who had been accustomed to everything in life being a problem, I began noticing opportunities anywhere and everywhere after displaying positive thinking.

I have decided to bring all my thoughts together for the betterment of myself, our website, my friends and the very society we live in. May our endeavours be blessed by the ALMIGHTY.

In between this, we have spoken and spoken about our Superstar’s cinema for decades without saying. He too has reached greatest heights with his utmost hard work and dedication, touching success after success. In the event that he has not spoken straight-forwardly about his political ventures, I feel that we should not be talking about it too much as well.

Thus, hereafter our aim is to further research into the the many dialogues that our Superstar has delivered in various moments, his objectives, advices he has given abd how he approaches any issue. Our aim is to apply all these effectively on our lives and create a positive impact on our lives, whatever our various careers may be and taste success in them!

I have set off on creating a FORCE TEAM specially for this. Those who have a burning fire in them to achieve something in life, to prove their worth to others and reach pinnacle, please do keep in touch us. If you are at the lowest part of your life, all the more the better! It is such people that we need. There is only one thing we expect from you. And that is the passion to “win in any circumstance”. Nothing else!

It is necessary and encouraged for those who wish to join hands with us on this to have a truthful and honest attitude towards life, apart from having an attraction towards our Superstar’s movies. (I am very aware of those who have a thirst to achieve in my current circle of friends. Therefore, I urge all of those who wish to join, to share the HONEST fire!)

In recent times I have released interviews of many a few who have created big time achievements in their respective professions. ( To realize how important our journey on finding achievers and learning more about their experiences is, please do watch the video below.)

Text of video content above:

“I welcome Mr Rajnikanth who has graced us with his presence, on behalf of Karunai Illam.”

A bouquet is given to Mr Rajnikanth.

(applause)

Mr Rajni continues to speak amongst children.

“My greetings to the Mother of Karunai Illam, all the children who have come and to everyone else. What I would like to let all of you know on this good day is that… It is not fair for you to have known… Now a handful of rice costs Rs 4 or Rs 5. It is not a surprise if it rises to Rs 50 or Rs 60 in 20 years time when you have all grown up to be adults. You have to get used to being in that situation and living with it. You have to prepare yourself for it. This school’s education itself is not enough for that. What I wish to tell you because of that is, all of you should keep a goal for yourselves. Many in our country have lived great and gone. Many are living such now as well. Keep anyone of such person as your ambition. That is my wish!”

(applause once again)

Friends, have you seen what a foresight it was? In truth, when this movie was released 20-25years ago, a handful of rice was worth Rs 5. However now it is Rs 50!!! (If he had spoken now…”Now a litre of petrol is Rs 78. In the next 5-10 years it may become Rs 200 or Rs500!”… Well, may be Thalaivar would have spoken like this?

Translation by : Durga

———————————————————————
E-mail : simplesundar@gmail.com | Mobile : 9840169215
———————————————————————

[END]

25 Responses to ““ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல் அவசியம்!” - சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள்! TRANSLATION ADDED !!”

  1. Anand Vasi Anand Vasi says:

    Very happy to see that, U have a very clear Mental picture about ur definite vision. Dear Sundar anna, i see you now as you are more than a Thalaivar Fan. Such is your transformation and your approach to life. And deeply interested to join the Force team.

  2. B. Kannan B. Kannan says:

    Congrates buddy.. Good try on forming Force team.. Let this turn out to be a successful one and set an example for others..

  3. Chithamparam Chithamparam says:

    Congratulations for your new vsion

    I am with you

    GOD BE WITH US

  4. Premkumar R Premkumar R says:

    Good One. I would also like to join your team.

  5. Anna you gave what we need at right time. continue Thalaivar's news , real people's life story side by side

  6. Kumar Kumar says:

    Hi Sundar, i am watching our site from last 5 years but commented only twice i believe. By seeing the above initiative , i am forced to write the below to join the team with whole heartedly. I have mailed you my contact details. Keep in touch and lets achieve our goals with positive mind set.

    —————————————-
    Welcome buddy. Note the date today. Your life changes from today onwards.
    - Sundar

  7. Jegan kerala Jegan kerala says:

    Nice try, good efforts,every fan of thalaivar should be succesfull in their profesnl n persnl life like our thalaivar….so that v also ll becme a respectable person in the society…..sundarji, your new route is one which is much needed for the time being…thalaivar also insists this to fans in every occations….god bless.

  8. murugan murugan says:

    அருமையான பதிவு - வழக்கம் போல

    final டச் சூப்பர் !!!

  9. Leo Leo says:

    Anna, tks for the valuable post.

    I too want to become a successful person in my professional as well as personal life in the near future. pls join me in yr crew.

  10. Anonymous says:

    வாழ்த்துகள் சுந்தர்…உங்களுடைய இந்த முயற்சியில் நானும் இருக்க ஆசைபடுகிறேன்,,,

    .

    மாரீஸ்

  11. Sakthivel Sakthivel says:

    I am always with you, sundar :)

  12. k s amarnath k s amarnath says:

    its a very cool but it has lot of message from thalaivar. Now I am bit strong after listening to those encouraging words from thalaivar

  13. **Chitti** **Chitti** says:

    My dear Humane Rajni Aficionados,

    ********

    Hope all of you are fine and doing great.

    ***

    As usual, This article is also super and it tells the same what thalaivar is saying for more than 20years, - "first take care of yourself and your family" - indirectly indicates that every one of us should improve our personal and professional lives.

    ***

    Lets start together and achieve together and LETS MAKE OUR COUNTRY PROUD AND SO OUR 'SIVAJI'…

    ***

    And I really appreciate this effort taken by Sundarji. Hope this continue till the end and not get stopped in the mid way as usual we do always.

    ***

    My final touch from Swami Vivekananda - "ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED".

    "ALL THE POWER IS WITH IN YOU. YOU CAN HAVE, DO OR BE ANYTHING YOU WANT"….

    ***

    by,

    **Chitti**.

    Thoughts becomes things…

    Dot.

  14. **Chitti** **Chitti** says:

    I sincerely appreciate the efforts put by sister Durga for her english translation which will make every fans understand.
    ***
    Since I know that translating the article would take so much time more than hours of time (though not for this article, since its just simple one).
    ***
    And I hope that our fans would understand the real concern of our super star and follow what he says which is nothing to succeed in our own lives.
    ***
    I am proud to be the fan, admirer and trying-to-be follower of 'SIVAJI'…
    ***
    **Chitti**.
    Jai Hind!!!
    Dot.

  15. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Nice recap. Excellent show Sundar. This is true in terms of reality.

  16. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி நீங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதே நேரத்தில், ஒரு சின்ன வருத்தமும் கூட.

    .

    தலைவர் தன்னுடய அரசியல் முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது தலைவரது வாழ்கையில் மிகபெரிய வரலாற்று தவறை உருவாக்குகிறது.

    .

    தலைவரை இங்கு விமர்சனம் செய்ய நமக்கு வயது இல்லை, தகுதியும் இல்லை. ஆனால் ரத்தமும் சதையுமாக நேசிக்கும் ரசிகனாக அவருடைய முடிவை தெரிந்துகொள்ளும் சின்ன உரிமை நம் அனைவருக்கும் உள்ளது.

    .

    இன்று புதுகோட்டை இடைதேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் பெற்றார் மாவட்ட பொறுப்பாளர். அவர் செய்தது மிகவும் சரியே. என்றும் தலைவர் வழியில் வருவோம் என்று கூறியதை அவர்கள் கடைபிடித்து விட்டனர். அவர்களுக்கு சபாஷ்.

    .

    இன்று நமது ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு சென்றுள்ளதை தலைவர் ஒரு signal அக எடுத்துகொள்ள வேண்டும்.இனிவரும் களங்களில் இது போன்று நடக்காமல் இருக்க தலைவர் வெளிபடைய தனது அரசியல் முடிவை அறிவிக்க வேண்டும்.

    .

    சுந்தர்ஜி, இறுதியாக தங்களுடைய முடிவை வரவேற்கின்றோம். நிச்சயம் தலைவரின் ரசிகர்களுக்காக ஒரு படி மேலே நின்று சேவை செய்கிறீர்கள். நிச்சயம் உங்களுடைய படைப்புகள் பல ரசிகர்களின் வாழ்க்கைக்கு துணைபுரியும். நன்றி ஜி.

    .

    rajini will rule Tamilnadu

  17. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    தலைவரை மட்டும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்துவிட்டு மற்ற நடிகர்களை விமர்சனம் செய்யும் ஒரு சராசரி தளமாக இல்லாமல் மிகச்சிறந்த நோக்கங்களுடன் மிகச்சரியான பாதையில் ஆரம்பித்திருக்கும் இந்தப்பயணம் ஆண்டவன் அருளால் வெற்றிகரமாக அமையும் என்பது உறுதி. எந்த ஒரு புதிய முயற்சியும் எதிர் கொள்ளவேண்டிய மூன்று நிலைகள்: ஏளனம், எதிர்ப்பு மற்றும் ஏற்றுகொள்ளபடுதல். அனால் சுந்தரின் இந்த முயற்சி எடுத்த எடுப்பிலேயே பலராலும் ஏற்றுகொள்ளபட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. நம் அனைவரின் ஒத்துழைப்போடு இது போன்ற முயற்சிகள் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

  18. Anonymous says:

    அண்ணா உங்களுடைய இந்ந்த முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது!! "FORCE TEAM" பெயரே அற்புதமாக உள்ளது :) நான் எனது தகுதிகளை வளர்த்து கொண்டு இந்த டீமில் இணைய முயற்சிக்கிறேன் :)

  19. Anonymous says:

    பலரது வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டுவரப்போகும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்…. உங்களுடைய இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்…..

    கடமையை செய்….. பலனை எதிர் பார்…..

  20. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    வாழ்த்துக்கள் சுந்தர்!! மிகவும் அருமையான அற்புதமான சிந்தனை. மிக சிலருக்கே உதிக்கும் இந்த சிந்தனை உங்களுக்கு மிக பெரிய வெற்றியை தேடி தரும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் இருப்பார்.

  21. Anonymous says:

    தலைவர் தன நல்ல குணத்தால் நாளும் நம்மை பெருமைப் படவைத்துக் கொண்டிருக்கிறார்….! அதற்கு கைம்மாறாக நாம் நம் செயல்கள் மூலம் தலைவரைப் பெருமைப் படுத்த வேண்டும்….!
    -
    இது போன்ற ஆக்கப்பூர்வ சிந்தனைகள், செயல்கள் நிச்சயம் நம் தலைவரை சென்றடையும்……! சுருங்கச் சொன்னால் தலைவரின் பிறந்தநாள் அன்று நாம் செய்யும் நல்ல காரியங்களை அனுதினமும் செய்ய முனைவோம்….!

    நான் நிச்சயம் வாழ்க்கையை ரசிப்பவன் அல்ல. வெற்றிக்காக போராடுபவன். ஜெயித்தே தீரவேண்டும் என்கிற அந்த ஃபயர் என்னில் அடங்காது எரிந்துகொண்டே இருக்கிறது. எனவே இந்த "FORCE TEAM "ல் நானும் சேர்கிறேன்.
    -
    இந்த "FORCE TEAM " முயற்சி வெற்றி பெற்று, அவரவர் அவரவர் இலக்கை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    -
    "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"
    -
    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
    விஜய் ஆனந்த்

  22. Anand Vasi Anand Vasi says:

    Wonderful Beginning frm Sundar anna. Lets keep the Fire Glowing ever..

    No Pains, No Gains.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
  • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
  • Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates