You Are Here: Home » Featured, Role Model » “ரஜினியைப் போல உண்மையான உழைப்பு & நேர்மையான பக்தி இரண்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!” – கிரானைட் அதிபர் திரு.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு – FINAL PART!!

ண்பர்களே, நான் இது வரை எழுதிய பதிவுகளில் மிகவும் ரசித்து, ஒன்றிப் போய், கண்கலங்கி, எழுதிய பதிவு இது. வாழ்க்கை குறித்த எனது எண்ணவோட்டத்தையே இந்தப் பதிவு மாற்றிவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் குறிப்பாக நமது FORCE TEAM ல் சேரவேண்டும் என்று  நினைப்பவர்கள் அவசியம்  படிக்க வேண்டிய பதிவு.

சற்று பெரிய பதிவு என்பதால், ஒரே மூச்சில் படிக்க முடியாதவர்கள் அவசியம் நேரத்தை ஒதுக்கி நிதானமாக படிப்பது சிறந்தது. படித்துவிட்டு மறக்காது உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

படித்ததோடு நின்றுவிடாமல் இவர் கூறியுள்ள கருத்துக்களை உங்கள் வாழ்க்கையில் அப்ளை செய்யுங்கள். அதற்கு பிறகு பாருங்கள் மேஜிக்கை. நீங்க இது மாதிரி ஒரு நாள் இண்டர்வியூ கொடுப்பீங்க.

ஆரம்பத்தில் நாம் அலட்சியமாக கருதும் விஷயங்கள், போகப் போக முக்கியத்துவம் பெற்று நமது வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடுகின்றது. இவரை சந்திக்க செல்லும் முன், நான் கூட சற்று அலட்சியமாகத் தான் சென்றேன். ஆனால்… இன்று…? எனது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது போன்ற ஒரு உணர்வு எனக்கு. காரணம் எல்லாவற்றிலும் எனது அணுகுமுறை மாறிவிட்டது. அணுகுமுறை மாறினால் வாழ்க்கையே மாறிவிடும். (இவரை சந்திக்க வைத்ததன் மூலம் இறைவன் மிகப் பெரிய மாற்றத்தை என் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறான் என்றால் மிகையாகாது. பொறுத்திருந்து பாருங்கள்!)

ஆனால்… ஒரு மட்டும் உறுதி. இன்று இது போன்ற பதிவுகளை அலட்சியமாக கருதுபவர்கள் எதிர்காலத்தில் இவற்றை தேடித் தேடி படிப்பார்கள். அப்படி தேடும் போது சுலபத்துல கிடைக்கனுமேன்னு தான் இது போன்ற சந்திப்புக்களை ‘ROLE MODEL’ அப்படின்னு ஒரு CATEGORY ல் வைத்திருக்கிறேன்.

உங்களில் யாராவது MANAGEMENT STUDENTS இருந்தீங்கன்னா படிச்சிட்டு உங்க நண்பர்களுக்கு இந்த பதிவை FORWARD பண்ணுங்க. அதேபோல, உங்கள் அக்கா தங்கைகளோ, அண்ணன் தம்பிகளோ நெருங்கியவர்களோ நண்பர்களோ MANAGEMENT படிச்சிட்டு இருந்தாங்கன்னா நிச்சயம் அவங்களுக்கு REFER பண்ணுங்க.

திரு.சந்திரசேகரன் கூறிய வார்த்தைகளில் ஒளிந்துள்ள வாழ்வியல் பாடங்களை தனியே பதிவு முழுக்க ஆங்காங்கே LESSON என்ற பெயரில் கொடுத்துள்ளேன். படிக்கத் தவறாதீர்கள்.

இந்தப் பதிவு, இந்த சந்திப்பு,  உங்களில் யாரேனும் ஒருவருக்கு, உங்கள் உள்ளுக்குள் இருக்கும் அந்த ஃபயரை  தூண்டி, உங்களை வீறு கொண்டு எழச் செய்யுமானால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

மற்றபடி, நல்ல விஷயங்களை கேட்பதற்கும், பார்ப்பதற்கும், ஏன் படிப்பதற்கும் கூட ப்ராப்தம் வேண்டும்.

DAANE DAANE PE LIKHA HAI KHANE WALE KA NAAM.

————————————————————————-

இதை அலுவலகத்தில் முழுவதுமாக படிக்க இயலாதவர்கள், பிரிண்ட் எடுத்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படிக்கவும். பதிவின் கீழே PRINT FRIENDLY ICON இருக்கிறது. அதை தட்டினால், PRINT FRIENDLY PAGE வரும். இதன் மூலம் பிரிண்ட் எடுத்தால் தேவையற்ற மெனுக்கள், தலைப்புக்கள் முதலியவை எல்லாம் பிரிண்டில் வராது. வெறும் பதிவு மட்டுமே வரும். அதை வைத்து இந்த பதிவை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். எப்படியும் மொத்தம் 50 பக்கங்களுக்கும் மேல் வரும்.

அல்லது கீழே உள்ள லின்க்கில் இருந்து இந்த பதிவின் PDF ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ளவும்.

மூன்று பாகங்களின் PDF ஃபைல்கள் இதில் உள்ளது.

http://www.2shared.com/document/5qb2GG_h/OnlySuperstar_Chandrasekaran_I.html

http://www.2shared.com/document/89SfBBJ2/OnlySuperstar_Chandrasekaran_I.html

http://www.2shared.com/document/emsMVKRl/OnlySuperstar_Chandrasekaran_I.html

(இந்த வசதியை பயன்படுத்துவோர் இது குறித்து உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை நமக்கு தெரியப்படுத்தவும். எதிர்காலத்தில் அனைத்து பதிவுகளுக்கும் இதை அமுல்படுத்த யோசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி!)
————————————————————————-

இந்தப பதிவில் :

 • பிறந்த வீட்டில் இவர் அம்மா பத்து பத்திரம் தேய்த்த கொடுமை.
 • வறுமை என்றால் என்ன?
 • இவரை அழிக்க நினைத்தவர்கள் குடும்பம் இன்று இவரால் சாப்பிடும் நிலைமை!
 • தோல்வியில் முடிந்த முதல் ஹோட்டல் கிளை!
 • பதிவிரதையின் கோபம் - பகவான் கிருஷ்ணர் செய்த டெக்னிக்!
 • “ஜோதிடர்களை சிரச்சேதம் செய்த மன்னன்” - திரு.சந்திரசேகரன் சொன்ன சுவாரஸ்யமான, சிலிர்க்க வைக்கும் கதை! (படத்துடன்!)
 • பணத்தை சேர்த்து வைக்க சரியான இடம் எது?
 • ஒரு தொழிலில் இறங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியது என்ன?
 • முதல் முயற்சியில் தோல்வியடைந்தால்?
 • தொழிலில் வெற்றி பெற எது அவசியம்?
 • செய்யும் தொழிலில் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
 • ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை எப்படி நடத்தவேண்டும்?
 • இறைவன் அருளுக்கு பாத்திரமானவர்கள் யார்?
 • இறைவனிடம் நமது பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும்?
 • இறைவன் ஒருவருக்கு உதவேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வான்?
 • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி?

——————————————————————————————
அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்! — PART I
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14732

மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் — PART II
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14936
——————————————————————————————

உரையாடல் தொடர்கிறது :

திரு.ஆர்.சந்திரசேகரன்  : எங்கம்மம கஷ்டம்னு எதையெல்லாம் அனுபவிச்சாங்களோ அதையெல்லாம் கூட இருந்து பார்த்தவன் நான். நாங்க ஸ்கூலுக்கு போகும்போது எங்கப்பாவோட வேஷ்டியை கட் பண்ணி தான் எங்களுக்கு சட்டையே தெச்சு தருவாங்க. அந்தளவு நாங்க இளைமையில வறுமையை அனுபவிச்சோம். நான்லாம் வாட்ச் பத்தாவது படிக்கும்போது தான் கட்டினேன். எங்க அண்ணன் மெடிக்கல் கேலேஜ்ல (நல்லா மார்க் எடுத்து மெரிட்ல) சேரும்போது கட்டினார். ஆனா இன்னைக்கு என் பிள்ளைங்க எல்லாம் பிறந்ததுல இருந்தே ரொம்ப காஸ்ட்லி வாட்ச் தான் கட்டுறாங்க.

நாங்க வளரும்போது வறுமையிலும் செழுமையா இருப்போம். அதாவது சுத்தமா எப்போவும் நீட்டா இருப்போம். யாரெல்லாம் பக்கத்துல வெச்சுக்க கூடாதோ அவங்களையெல்லாம் பக்கத்துல வெச்சிருந்தோம். சொந்தக்காரங்களை அதாவது எதிரிகளை எல்லாம் பக்கத்துலயே வெச்சிருந்தோம். ஆனா இன்னைக்கு அவங்க வீட்டு அடுப்பு என்னால் தான் எரியுது. அவங்களுக்கும் என்னோட நிறுவனங்கள்ல வேலை போட்டு கொடுத்திருக்கேன்.

நாம் : அவங்களை மன்னிச்சிட்டீங்களா?

திரு.ஆர்.சந்திரசேகரன்  :
மன்னிப்பு அப்படி இப்படி எல்லாம் கிடையாது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பது தான் காரணம்.

நாம் : அதை அவங்க உணர்ந்திருக்கிறார்களா?

திரு.ஆர்.சந்திரசேகரன் : அது பற்றி எனக்கு கவலை இல்லை.

நாம் : தாங்கள் செய்த தவறை உணராதவர்களை மன்னித்து என்ன பயன் சார்?

திரு.ஆர்.சந்திரசேகரன்  : அது எனக்கு தேவை இல்லே. யாரெல்லாம் என்னை துடிக்க வெச்சாங்களோ இன்னைக்கு என்னால் தான் அவங்க இதயம் துடிக்குது. ஜீவனம் நடக்குது. கடவுள் அதுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கான் அது போதும் எனக்கு.

எந்தளவுக்கு என்னை எங்க குடும்பத்தை அழிக்கணும்னு நினைச்சி வேலை பார்த்தாங்களோ இன்னைக்கு அவங்க எல்லாம் என்னை நம்பி தான்
வாழ்ந்துக்கிட்டுருக்காங்க. வேலை பார்க்கனும்னு முடிவு பண்ணினா கோடிக்கணக்கான் ஜாப்ஸ் உலகத்துல இருக்கு. ஏன் என் கிட்டே வந்து அவங்க வேலை பார்க்கணும்? ஆண்டவன் ஏன் என்கிட்டயே அவங்களை வேலைக்கு சேர்க்கணும்? ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க.

நாம் : பெரிய விஷயம் சார். தன்னை அழிக்க நினைத்தவர்கள் வயிறும் தன்னால் நிறைகிறது எனும்போது வேற என்ன வேணும் ஒரு மனுஷனுக்கு இந்த உலகத்துல…

திரு.ஆர்.சந்திரசேகரன் : வறுமை என்றால் என்னவென்று எனக்கு தெரியும். வறுமையின் விளிம்புக்கு சென்றவர்கள் நாங்கள். எங்க மாமா நல்ல வேலைல இருக்கிறார். ரெண்டு சித்திங்க எனக்கு. ரெண்டு பேரும் டீச்சர். இன்னொரு மாமா போஸ்ட் மாஸ்டரா இருக்கிறார். ஆனா எங்கம்மா அவங்க வீட்டுல வேலைக்காரி போல இருந்தாங்க. அவங்க வீட்டுல வேலை செஞ்சி பத்து பாத்திரம் தேய்ச்சு தான் எங்களை வளர்த்தாங்க. வேலை செய்ற சொந்தக்காரங்க வீட்டுல போடுற சாப்பாடை எங்களுக்கு போட்டுட்டு அவங்க பட்டினி கிடந்து எங்களை வளர்த்தாங்க.

இன்னமும் எங்கம்மா சொல்வாங்க… என் தங்கச்சி எங்கம்மா வயித்துல (கருவில்) இருக்கு. அன்னைக்கு போய் ஆட்டுக்கல்ல (அப்போதெல்லாம் வீடுகளில் கிரைண்டர் கிடையாது) மாவாட்டி வெச்சாதான் பெத்த தாய் வீட்டுல சோறு கிடைக்கும்னு போய் மாவாட்டி வெச்சு, எங்களுக்கு சாப்பாடை போட்டிருக்காங்க எங்கம்மா. அப்படியெல்லாம் வாழ்க்கையில ஒரு ஆழமான கஷ்டத்தை அனுபவிச்சோம். நாங்க அழிஞ்சி போகணும்னு நினைச்ச எதிரிகளை கூடவே வெச்சிகிட்டு… அந்த கஷ்டத்தை அனுபவிச்சோம். ஏன் கஷ்டப்படுறவங்க கஷ்டப்பட்டுக்கிட்டே தான் இருக்கனுமா? அவங்க மேல வரவே கூடாதா?

நாம் : சார்… நீங்க உள்ளுக்குள்ளே ரொம்ப உணர்சிவசப்படுறது எனக்கு தெரியுது.

(கஷ்டப்படுறவங்க கஷ்டப்பட்டுக்கிட்டே தான் இருக்கனுமா? அவங்க மேல வரவே கூடாதா?  என்ற வாக்கியம் ஒரு கணம் என்னை என்னவோ செய்துவிட்டது.)

(அடுத்து எங்கள் பேச்சு இளங்கோ அவர்களைப் பற்றி பற்றி திரும்பியது.)

திரு.ஆர்.சந்திரசேகரன் :
இளங்கோவுக்கெல்லாம் கண் மட்டும் தான் தெரியாது. ஆனா மத்ததெல்லாம நல்லா தெரியும். ஆனா நமக்கு கண் மட்டும் தெரியும். மத்ததெல்லாம் தெரியாது.

நாம் : நூற்றுக்கு நூறு சரி சார் நீங்க சொல்றது. இதை நானே அவர் கிட்டே பேசும்போது பழகும்போது உணர்ந்திருக்கேன். வெட்கப்பட்டிருக்கேன்.

திரு.ஆர்.சந்திரசேகரன் :
அவர் எல்லாம் வேக நட்சத்திரம். அவரைப் போல வேகமா நம்மால டைப் பண்ண முடியாது. வேகமா மெயில் செக் பண்ண முடியாது. வேகமா எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்லனும்னு ஆசைப்படுறேன்.

குன்னூர்ல ஒரு ப்ரோக்ராமுக்கு அவரை சமீபத்துல கூட்டிகிட்டு போனேன். அங்கே டின்னர் சாப்பிடுறோம். அவரோட கோட்டுல ஒரு பருக்கை விழுந்துடிச்சு. உடனே டிஷ்யூ பேப்பர் கேட்டார். கொடுத்தேன். சரியா அந்த பருக்கையை மட்டும் எடுத்து துடைத்து போட்டுவிட்டார். நம்மளே கூட கொஞ்சம் தடுமாறுவோம்.

நண்பர் பாலாஜி : பொதுவா பார்வையற்ற சிறப்பு திறனாளிகளுக்கு மற்ற நான்கு புலன்களும் பிரமாதமாக வேலை செய்யும்னு சொல்வாங்க.

திரு.ஆர்.சந்திரசேகரன் :
கரெக்ட்… பாலாஜி கரெக்டா பாயிண்ட்டை பிடிச்சிட்டாரு பாருங்க. இப்போ நீங்க திடீர்னு சொல்லிக்காம கொள்ளாமல் இளங்கோ ரூமுக்குள்ளே போங்க. கரெக்டா, “வாப்பா சுந்தர்” அப்படிம்பாரு. உங்க நடையை கரெக்ட்டா கெஸ் பண்ணி வந்திருக்கிறது நீங்க தான்றதை சொல்லிடுவாரு. அதே மாதிரி, அவரோட இன்னொரு சென்ஸ் நுகர்தல். மூக்கு. ஒருத்தர் போடுற  பெர்ஃப்யூமை, பவுடரை வெச்சி வந்திருக்கிறது இன்னார் தான்னு சொல்லிடுவாரு. அவருடைய பேச்சு மிகவும் பவர்ஃபுல்லா இருக்கும்.  ரொம்ப தெளிவா இருக்கும்.

நண்பர் பாலாஜி : மகாபாரதத்துல கூட காந்தாரி இருப்பாங்க. கௌரவர்களோட தாய். தன் கணவன் திருதிராஷ்டிரனுக்கு கண் தெரியாது என்பதற்காக பார்வை நன்றாக தெரியும் தன்னோட கண்களை துணில ட்டி மூடிக்கிட்டுருப்பாங்க. அதுனால் அவங்களோட மற்ற புலன்கள் நல்லா வேலை செய்யும்.

பதிவிரதையின் கோபம் - கிருஷ்ணர் செய்த டெக்னிக்!

நாம் : காந்தாரி சிறந்த பதிவிரதை. கணவனையே தெய்வமாக தொழுது வாழ்ந்து வருபவர்கள். மகாபாரதப் போரில் கௌரவர்கள் தோற்றவுடன், “இது எல்லாத்துக்கும் காரணம் கிருஷணர் தான்” அப்படின்னு  அவங்க கிட்டே பத்த வெச்சிடுவாங்க. அவங்களும் கோபமாக “எங்கே கிருஷ்ணன்? உடனடியாக அவனை வரச் சொல்லுங்கள். நான் பார்க்கணும்”பாங்க.

பரம்பொருளுக்கு தெரியாதா என்ன…. அவன் உடனே தனது பணியாட்களிடம், “கற்புக்கரசி காந்தாரி என்னை அழைக்கிறார். நான் போயே ஆகவேண்டும். ஆனால், நான் போனால் அவர்கள் கண் கட்டை அவிழ்த்து என்னை கோபமாக பார்ப்பார்கள. அப்படி அந்த பதிவிரதை பார்த்தால் அந்த உக்கிரத்தில் நான் எரிந்து சாம்பலாகிவிடுவேன். எனவே என்னைப் போல ஒரு தோற்றம் கொண்ட ஒரு உலோகச் சிலையை செய்யுங்கள். காந்தாரி முன்பு அந்தச் சிலையை முதலில் வைப்போம். பிறகு நான் அவர்கள் முன்னாடி போய் நிற்கிறேன்” என்பார்.

சொன்னது போலவே, காந்தாரி முன்பு கிருஷ்ணன் தனது உலோகச் சிலையை வைத்துவிட்டு, தான் வந்த தகவலை கூறும்படி செய்வார். பணியாளர்களும் “கிருஷ்ணன் வந்திருக்கிறார் தாயே தங்களை பார்க்க…” என்பார்கள். உடனே காந்தாரி கண்களை திறக்க, அந்த உக்கிரம் தாங்க முடியாது அந்த உலோகச் சிலையே எரிந்து பஸ்பமாகிவிடும். அதற்கு பிறகு தான் கிருஷ்ணர் காந்தாரி முன்பு போய் நிற்பார்.

(அடுத்து எங்கள் பேச்சு நமது தளம், அதன் குறிக்கோள் உள்ளிட்ட விஷயங்களை பற்றி திரும்பியது. சிறிது நேரம் அவேர் மீண்டும் துவக்குகிறார்.)

திரு.ஆர்.சந்திரசேகரன் : நான் ஏன் உங்களை கூப்பிட்டு பேசினேன்னா… உங்க கிட்ட மனசு விட்டு பேசணும்கிறதுல தெளிவா இருந்தேன். அது என்னான்னே தெரியலே. அதான் கூப்பிட்டேன் சுந்தர். அடுத்து சில சமயம் நினைச்சி பாருங்க… நம்ம மனசாட்சியை எப்போவாவது திறந்து பேசனும்னு ஆசைப்படுவோம். அது மனைவியா இருக்கலாம். நம்மோட ஃப்ரெண்டா இருக்கலாம். இல்ல யாராவது நெருங்கியவர்களா இருக்கலாம். இன்னைக்கு எனக்கு அப்படி தோணிச்சி. அதான் உங்களை கூப்பிட்டேன் சுந்தர்.

(இவருக்கு இப்படி தோன வெச்சது வேற யாரா இருக்கும்? அந்த ஆண்டவனை தவிர!)

“ஜோதிடர்களை சிரச்சேதம் செய்த மன்னன்” - கதை

திரு.ஆர்.சந்திரசேகரன் : ஒரு கதை ஒன்னை சொல்றேன். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரு ராஜா இருந்தாரு ஒரு நாட்டுல. அவருக்கு அவரோட பிறப்பை யாராவது சரியா சொல்றாங்களான்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசை. அதுனால் என்ன பண்றாருன்னா, முரசு கொட்டி, நாட்டுல இருக்குற எல்லா ஜோதிடர்களையும் அரண்மனைக்கு வரச் சொல்றாரு.

எல்லாரும் வர்றாங்க. எல்லாருக்கும் முதல்ல வயிறார சாப்பாடு போடுறாரு. வந்தவங்க பலவகை பதார்த்தங்களுடன் கூடிய அரண்மனை விருந்தை ஒரு கட்டு கட்டுறாங்க.

அப்புறம் அவங்க கிட்டே, “என்னோட பிறப்பு மற்றும், என்னோட குலத்தை பத்தி நீங்க சரியா கணிச்சி சொல்லணும். நாளைக்கு காலைல என்னோட ஜாதகத்தின் பிரதி ஒன்றை தருவேன். சரியா கணிச்சி சொன்னீங்கன்னா பொன் பொருளெல்லாம் கொடுத்து உங்களை என் குல குருவாக்கிவிடுவேன். தப்பா சொன்னீங்கன்னா தலையை எடுத்திடுவேன். இதுக்கு சம்மதம் என்பவர்கள் மட்டும் இங்கே இருங்க. மத்தவங்கல்லாம் ஓடிடுங்க!” என்கிறான்.

நிபந்தனையை கேட்டவுடன் வந்திருந்த கூட்டம் தங்களுக்குள்ளே அதிர்ச்சியுடன் பேசிக்கொள்கிறது. “என்ன தான் குல குரு, ராஜ குரு பட்டம் கொடுத்தாலும், தப்பா சொன்ன தலையை எடுத்திடுவேன்னு சொல்றாரே இந்த ராஜா… எதுக்கு வம்பு… ஒரு வேளை நாம தப்பா சொல்லிட்டா, தலை போய்டுமே. நம்ம பெண்டாட்டி புள்ளைங்களை அப்புறம் யார் காப்பாத்துறது….?” அப்படின்னு நினைச்சி நிறைய பேர் வந்த திசையிலயே பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடிடுறாங்க.

மிஞ்சி இருக்கிறது மொத்தம் மூணே பேரு தான். அவங்களை ஆச்சரியமாப் பாக்குறார் ராஜா.

“என்ன என்னோட நிபந்தனை தெரியுமில்லே… வேணும்னா ஒரு தடவை திரும்பச் சொல்றேன். ஜாதகத்தை தருவேன். சரியா சொன்னீங்கன்னா உங்களை என்னோட குருவாக்கிவிடுவேன். தப்பா சொன்னீங்கன்னா தலையை எடுத்திடுவேன்!” என்கிறான்.

மூவரும் அதற்கு தயார் என்கிறார்கள்.

“நாளைக்கு காலைல நீங்க மூணு பேரும் தர்பாருக்கு வாங்க. இன்று இரவு விருந்தினர் மாளிகைல நல்லா ஒய்வு எடுத்துக்கோங்க. உங்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு ஏற்பாடு பண்ணியிருக்கேன். வயிறார சாப்பிடுங்க. ரிலாக்ஸா இருங்க!”

சொன்ன மாதிரி இரவு முழுக்க விருந்தினர் மாளிகைல ராஜ மரியாதையோட தங்குறாங்க. மறுநாள் காலைல மூணு பேரும் சபைக்கு வர்றாங்க…

“என்ன வயிறார சாப்பிட்டீங்களா? வசதியெல்லாம் எப்படி? நல்லா தூங்குனீங்களா? என் ஆளுங்க நல்லா கணிச்சிக்கிட்டாங்களா?” இப்படியாக கேட்கிறார்.

அடுத்து முதல் ஆள் கிட்டே கேட்கிறார். “சொல்லுங்க… என்னோட் பிறப்பு எத்தகையது?”

அதுக்கு முதலாமவன், “ராஜா… உங்க அப்பாவோட அப்பா நிச்சயம் ஒரு மிகப் பெரிய சக்கரவர்த்தியாக இருந்திருப்பார். அதுனால் தான் நீங்களும் ஒரு பேரரசனாக இருக்கீங்க. அவர் ஒரு பெரிய தர்மவானா இருந்திருப்பார். அது தான் நீங்களும் இப்படி இருக்கீங்க!” என்கிறான்.

“யாரங்கே உடனே இவனை இழுத்துச் சென்று சிரச்சேதம் செய்துவிடுங்கள்” என்று கட்டளையிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் முறை… அவனுக்கு லேசாக வியர்க்கிறது. “என்ன விருந்தெல்லாம் பலமா? நன்றாக சாப்பிடீர்களா? சந்தோஷம். பார்த்தாய் அல்லவா? முதலில் தவறாக சொன்னவனுக்கு ஏற்பட்ட நிலையை? நீயாவது சரியாகச் சொல்!” என்கிறான்.

இரண்டாமவன் சற்று யோசிக்கிறான். ராஜாவுக்கு பிள்ளையாக பிறந்தவன் தான் ராஜாவாக இருக்க முடியும். ஆனால் அந்த பதிலை கூறிய முதலாமவன் தலை போய்விட்டது. ஜோதிடக் கட்டத்தினால் கூட இவன் பிறப்பை இத்தகையது என்று கூற முடியவில்லேயயே… என்று பலவாறாக எண்ணி தவிக்கிறான். பின்னர் திக்கி திணறி… “ராஜா.. நீங்கள் ஒரு பெரிய பராக்கிரமசாலிக்கு பிள்ளையாக பிறந்திருப்பீர்கள். உங்க தந்தை ஒரு பெரிய தளபதியாக இருந்திருப்பார்…. ஆகையால் தான் நீங்களும் இப்படி ஒரு பலசாலியாக இருக்கிறீர்கள்…” என்கிறான்.

இவனுக்கும் தலை போய்விடுகிறது.

அடுத்து மூன்றாமவன் முறை… ஆனால் அவனோ பதட்டமின்றி மிகவும் தெளிவாக இருந்தான். அவனிடமும் அதே கேள்வி. அதே உபசாரம்.

இவன் சிறிதும் தயக்கமின்றி ராஜா கொடுத்த ஜாதகத்தை அவரிடமே பார்க்காது திருப்பி கொடுத்தான். ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். “அவங்க எல்லாம் ஜாதகத்தை கொடுத்து கூட கணிச்சி சொல்ல முடியலே. நீ என்னடான்னா திருப்பி கொடுத்துட்டே. எப்படி பலன் சொல்லப் போறே  ?” என்கிறான் வியப்பில்

அதற்கு மூன்றாமவன் சிறிது அலட்டிக்கொள்ளாது, “ராஜா…” அப்புறம் சிறிது தயங்க…. “சொல்லு. தயங்காம சொல்லு”

“நான்… சரியான பதிலை சொன்ன நீங்க என்னை ஒன்னும் பண்ணிடமாட்டீங்களே?”

“நிச்சயம் கிடையாது. நீ தயங்காம சொல்லு”

“ராஜா நீங்க நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்கு தான் பிள்ளையா பிறந்திருபீங்க. அதுவும் நல்ல சாப்பாட்டையே வாழ்நாளில் சாப்பிட்டரியாத ஒரு பிச்சைக்காரனுக்கு தான் பிள்ளையா பிறந்திருப்பீங்க!”

ராஜா உடனே…. உடைந்து அழ ஆரம்பித்து விடுகிறான். சில வினாடிகள் கழித்து கண்களை துடைத்கொண்டு “எல்லாரும் தப்பா சொல்லும்போது… ஜாதகத்தை கூட பார்க்காம நீ மட்டும் எப்படி சரியாய் சொன்னே?” என்று கேட்கிறான்.

“நீங்க வந்ததுல இருந்து… எல்லாரும் சரியா சாப்பிட்டாங்களா? எல்லாரும் சரியா சாப்பிட்டாங்களா? வயிறு நிறைய சாப்பிட்டாங்களா? சாப்பாடு திருப்தியா இருந்திச்சா?” இப்படித் தான் கேட்டுகிட்டு இருந்தீங்க. சாப்பிடுறதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தீங்க. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்ட ஒருத்தனுக்கு தான் பசியோடு கொடுமை தெரியும். அந்த உணர்வையும் புரிஞ்சிக்க முடியும். அதுனால் தான் சொன்னேன்…நீங்க பிச்சைக்காரனுக்கு தான் பிறந்திருபீங்கன்னு!” என்றான்.

(நாம் உடனே கைகளை தட்டுகிறோம்!)

திரு.ஆர்.சந்திரசேகரன் : இந்தக் கதையில வர்ற ராஜா மாதிரி பசியோட கொடுமை எனக்கு தெரியும் சுந்தர். அதனால தான் இன்னைக்கு என் நிறுவனங்கள்ல வேலை பார்க்குற எல்லாருக்கும் தரமான உணவை திருப்தியா கொடுக்குறேன்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : உலகத்துலயே கொடுமை என்ன தெரியுமா? சரி… வறுமைன்னா என்ன? அதை எப்படி DEFINE பண்ணுவீங்க? சரியா டிரஸ் போடமுடியாதது வறுமையா? சரியா தூங்க முடியலேன்னா அது வறுமையா? அக்கா, தங்கச்சி கல்யாணத்துக்கு நாலு பேர் கிட்டே கடன் வாங்க அலையுறது வறுமையா?

நாம் : சரியான டயத்துக்கு சாப்பிட முடியாததே வறுமை சார்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : பசிக்குது. ஆனா சாப்பிட வழி இல்லே அப்படினா அது தான் சார் வறுமை. வறுமையை ஆயிரம் விதங்கள்ல DEFINE பண்ணாலாம். ஆனா வறுமையோட உண்மையாயன அர்த்தம் இது தான்.

நாம் : பசியோட கொடுமை தெரிஞ்சவன் சார் நான். ரொம்ப வறுமையான குடும்பத்துல இருந்து வந்தவன் நான். என் தங்கச்சி கல்யாணத்தையே அங்கே இங்கே அலைஞ்சி திரிஞ்சி கடன் வாங்கி தான் நான் செஞ்சேன். அந்த கடனை எல்லாம் அடைக்கிறதுகுள்ளே என் முதுகெலும்பே உடைஞ்சி போச்சு. (கடன் வாங்கி அக்கா தங்கச்சி கல்யாணம் பண்ணவங்களுக்கு அந்த கஷ்டம் தெரியும்!) எத்தனை அவமானம்… எவ்ளோ அவமரியாதை…  அன்னைக்கு நான் கடன் வாங்க எடுத்த சில முயற்சிகள் - கேட்க கூடாதவங்க கிட்டே எல்லாம் கேட்டது - இன்னைக்கும் என்னை காயப்படுத்துது. இது விஷயமா நிறைய நான் சொல்லவேண்டியிருக்கு. நேரம் வரும்போது - சொல்லவேண்டிய இடத்துல - அதைப் பத்தி சொல்றேன். நிச்சயமா…!!

திரு.ஆர்.சந்திரசேகரன் : நமக்கு கஷ்டம்னு ஒன்னு வரும்போது தான் நம்மளை சுத்தி இருக்குறவங்களை புரிஞ்சிக்க முடியும். ரெண்டாவது நமக்கு நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆண்டவன் அதுக்குள்ளே ஒரு பாடத்தை ஒளிச்சி வெச்சிருப்பான்.

நாம் : உண்மை தான் சார். இப்போ நீங்க விட்ட இடத்துல இருந்து சொல்லுங்க சார்…

திரு.ஆர்.சந்திரசேகரன் : பட்ட கஷ்டத்துலயே பெரிய கஷ்டம் என்னன்னா 100 பேர் 200 பேரை வெச்சு வேலை பார்த்த எங்கப்பா… ரூ.60/- சம்பளத்துக்கு வேலைக்கு போனாரு. அது தான் மிகப் பெரிய கஷ்டம். எங்கம்மா சொல்வாங்க இதை. இப்படி கஷ்டத்தை சொல்லி சொல்லி எங்கம்மா வளர்த்ததுனால என்னாச்சுன்னா எங்களுக்கு சுதாரிப்பு உணர்வு ஜாஸ்தியாயிடுச்சு. எச்சரிக்கை தன்மை அதிகமாயிடிச்சு. அது கடவுள் மேல எனக்கு தீவிர பற்று ஏற்படுறதுக்கு காரணமா இருந்தேன்.

முதல் ஹோட்டல் கிளை துவக்கம்

மாசி சார் கிட்டே வேலை பார்த்துட்டு இருந்தப்போ 2004 இல் மாசி சார் இறந்து போனாரு. அதுக்குப் பிறகு தான் நான் அவரை விட்டு வெளியே வந்தேன். ஆனா அதுக்கு முன்னாடி அவர் கிட்டே வேலைல இருக்கும்போதே - ஈவ்னிங் டயத்துல நான் கொஞ்சம் ப்ரீயா இருந்தேன். ப்ரீயா இருக்கும்போது என்ன செய்றதுன்னு யோசிச்சு டயத்தை உருப்படியா ஏதாவது வழியில இன்வெஸ்ட் பண்ணனுமேன்னு நினைச்சேன். என்னக்குள்ளே ‘ஹோட்டல் ஒன்னை ஆரம்பிக்கணும்னு’ ஒரு ஃபயர் எரிஞ்சிகிட்டிருந்துச்சுன்னு சொன்னேனில்லையா? அதுக்கு செயல் வடிவம் கொடுக்க முடிவு செஞ்சேன். 2000 ஆம் ஆண்டுல என்னோட முதல் ஹோட்டல் மதுரை அப்புவை வளசரவாக்கத்துல ஆரம்பிச்சேன்.

——————————————————————————————————-
LESSON : நேரத்தை பயனுள்ள விஷயங்களில் முதலீடு செய்யுங்கள். நேரத்தை வீணடிப்பவர்களை இறைவன் மன்னிப்பதில்லை. ஏனெனில், இறைவன் கால சொரூபீ. TIME IS GOD. GOD IS TIME.
——————————————————————————————————-

ஹோட்டல் துறையில் முதலில் கிடைத்த தோல்வி

முதல்ல நான் ஹோட்டல் ஆரம்பிச்சது கீழ்பாக்கத்துல என்பது வேறு விஷயம். ஆனா அது தோல்வி. ஆனா தோல்வில மட்டும் எல்லாரும் துவண்டு போய்டுவாங்க. ஆனா எனக்கு தோல்வியில் தான் ஜெயிக்கனும்னே வெறி வந்துச்சு. ஒரு மனுஷனுக்கு தோல்வி வரும்போது தான் ஜெயிக்கணும் என்கிற ஆர்வமே வரும். தோல்வி மட்டும் இல்லாம வெற்றி மட்டுமே கிடைக்குதுன்னு சொன்னா அப்போ கடவுள் கிட்டே விட்டுடுவான். காம்ப்ரமைஸ் பண்ணிக்குவான்.
——————————————————————————————————-
LESSON : இதைத் தான் நண்பர்களே, ஆங்கிலத்தில் PERSEVERANCE என்று சொல்வார்கள். அதாவது வெற்றியாளர்கள் தோல்வியை கண்டு துவண்டுபோவதில்லை. சொல்லப் போனால், தோல்வியையே அவர்களுக்கு உரமாக கொள்கிறார்கள்!)
——————————————————————————————————-
நாம் : தோல்விக்கு பிறகு கிடைச்சாத் தானே சார் வெற்றியின் அருமையே நமக்கு புரியும்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : அதுக்கப்புறம் வளரசரவாக்கத்துல முதல் கடை வெச்சேன். ஆண்டவனோட அருளால…. அது நல்லா பிக்கப் ஆச்சு.

நாம் : அதில் நீங்கள் புகுத்திய புதுமை என்ன?

திரு.ஆர்.சந்திரசேகரன் :
பொதுவா ஹோட்டல்ல வேலை செய்றவங்களுக்கு எல்லாம் சாப்பாடு (staff curry) காலையிலேயே ஆக்கி வெச்சிடுவாங்க. கஸ்டமர்ஸ் எல்லாருக்கும் கிலோ ரூ.40/-  ஒஸ்தி அரிசி. ஆனா வேலை செய்றவங்ககளுக்கெல்லாம் ‘கொட்டை சாதம்’னு சொல்லுவாங்க. அது தான். அதுக்கு உபயோகிக்கும் அரிசி கிலோ ரூ.18/- தான். அந்த அரிசில தான் அவங்களுக்கு சாப்பாடு. குழம்பு எப்படியிருக்கும்னு பார்த்தீங்கன்னா சாம்பாரும் ரசமும் கலந்த மாதிரி தண்ணியா இருக்கும்.

நிறைய ஹோட்டல்கள்ல போய் பார்த்தேன். எல்லா ஓட்டல்களிலும் staff curry இப்படித் தான் இருந்திச்சு. “இப்படித் தான் வேலை பாக்குறவங்களுக்கெல்லாம் பண்ணனும்”ன்னு ஒரு விதி மாதிரி அதை சொன்னாங்க. நான் அதை மாத்தினேன். “நம்ம கிட்டே வேலை பார்க்குறவங்க எல்லாருக்கும் நல்ல அரிசியில் சாப்பாடு போடுங்க!”ன்னு சொன்னேன். அவனும் மனுஷன் தானே. அதே போல சாயந்திரமும் நைட்டும் அவங்களுக்கு சரியான சாப்பாடு கிடையாது. பல சமயம் மீந்து போறதை தான் சாப்பிடுவாங்க. நான் அதையும் மாத்தினேன். நாமெல்லாம் சாயந்திரம் ஆனா டிபன் சாப்பிடுறாங்க. அவங்களுக்கும் அதே மாத்ரி டிபன் கொடுக்க வெச்சேன். நிறைய பேர் சொன்னாங்க… “உங்களுக்கென்ன பைத்தியமா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? கட்டுபடியாகுமா?”னெல்லாம் என்னை கேட்டாங்க. ஆனா நான் சட்டையே பண்ணலை. என்னோட திட்டத்தை செயல்படுத்தினேன்.

——————————————————————————————————-
LESSON : பணியாளர்கள் நலனில் மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை இவர் துணிந்து செய்ததால் தான் இவரது நிறுவனம் இன்று பல்கிப் பெருகி பெரும் விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இது பற்றி ஆங்கிலத்தில் ஒரு புகழ் பெற்ற மேற்கோள் இருக்கிறது. TAKE CARE OF YOUR EMPOYEES. THEY WILL TAKE CARE OF YOUR BUSINESS.
——————————————————————————————————-

நாம் : இந்த முதல் ஹோட்டல் வைக்கிறதுக்கான  ‘முதல்’ (Principle) நிறைய தேவைப்படுமே? அதை எப்படி புரட்டினீங்க?

திரு.ஆர்.சந்திரசேகரன் : அன்னைக்கு 2000 ல அதை வெக்கும்போது எனக்கு வெறும் 6 லட்ச ரூபாய் தான் செலவாச்சு. வேலை பார்த்தப்போ நான் சம்பாதிச்சதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துகிட்டே வந்தேன். கிட்டத்தட்ட 11 வருட சேவிங்க்ஸ் இருந்தது என்கிட்டே. ஆனா இன்னைக்கு அதே போல ஒரு ஹோட்டலை வெக்கணும்னா கோடி ரூபாய்க்கும் மேல தேவைப்படும். 30/08/2000 அன்னைக்கு தான் அந்த ஹோட்டலை வெச்சேன்.

——————————————————————————————————-
LESSON : சேமிப்பு. மனித வாழ்க்கையில் சேமிப்பு மிக மிக அவசியம். அவரவர் வருவாய்க்கு ஏற்றபடி அதில் ஒரு சிறிய தொகையை FIXED DEPOSIT இல் போட்டு வர வேண்டும். ஒரு நாள் அது நிச்சயம் அது கைகொடுக்கும். சொல்றதுக்கு ஈசி. செய்றதுக்கு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், உங்க நன்மைக்கு தானே…. செஞ்சி பாருங்கள்! வாழ்த்துக்கள்!!
——————————————————————————————————-

நாம் : அந்த ஒரு ஹோட்டல் எப்படி பல்கிப் பெருகி பல ஹோட்டல்களாச்சு?

திரு.ஆர்.சந்திரசேகரன் : அது என்னோட முதல் ஹோட்டல் என்பதாலோ என்னவோ என் கவனம் முழுக்க அதுல தான் இருந்திச்சு. வேலை நேரம் போக மீதி எல்லா நேரமும் அங்கே தான் கிடப்பேன். என்னோட ஆர்வமும் உழைப்பும் ஒரே பக்கமா இருந்திச்சு. அதுனால் ஹோட்டல் நல்லா டெவலப் ஆச்சு. அப்போல்லாம் வெஜிடேரியன் ஹோட்டல்ல தான் ரொம்ப காம்பெடிஷன் இருந்திச்சு. அசைவ ஹோட்டலில் போட்டி கம்மி. எனவே அசைவ ஹோட்டல் தான் நமக்கு ஏத்தது என்று முடிவு செய்து அதை துவக்கினேன்.

——————————————————————————————————-
LESSON : இதைத் தான் நண்பர்களே MARKET STUDY & ANALYSIS என்று சொல்வார்கள்! ஒரு பிசினசில் இறங்குவதற்கு முன்பு மார்கெட்டை தீவிரமாக ஆராய்வது, மிகவும் அவசியம். கொல்லன் தெருவில் ஊசி விற்பதை போன்று, தவறான இடத்தில் தவறான பொருளை விற்கக் கூடாது!
——————————————————————————————————-

Non-Veg ஹோட்டலில் ஏதாவது ஒரு ஐட்டத்தை ஸ்பெஷலைஸ் பண்ணினா நல்லாயிருக்கும்னு முடிவு செஞ்சி, பிரியாணியை செலக்ட் செஞ்சேன். “சாப்பாடுன்னா உப்பு. பிரியாணின்னா அப்பு” அப்படின்னு ஒரு ஸ்லோகனை செலக்ட் பண்ணி விளம்பரம் பண்ணேன். அது நல்லா ஒர்க்-அவுட் ஆச்சு. முதல் பிரியாணியை நான் தான் டேஸ்ட் பண்ணினேன். இன்னைக்கு சென்னையில பிரியாணிக்குன்னு நிறைய கடைகள் வந்துடுச்சு. ஆனா அதுக்கான ட்ரெண்டை முதல்ல, 12 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது நான் தான். இன்னைக்கு பிரியாணிக்குன்னே நிறைய கடைகள் வந்துச்சு. அதுக்குன்னே தனி ரசிகர்கள் வந்துட்டாங்க.

——————————————————————————————————-
LESSON : இதைத் தான் நண்பர்களே WINNERS DON’T DO DIFFERENT THINGS. BUT THEY DO THINGS DIFFERENTLY என்று சொல்வார்கள்! வெற்றியாளர்கள் எப்போதுமே எதையுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள்! செயல்படுத்துவார்கள்!!
——————————————————————————————————-

முதல் கிளை வளசரவாக்கம். அப்புறம் முகப்பேர். அப்புறம் ஈ.சி.ஆர். அப்புறம் தி.நிகர். இன்னைக்கு 10 கிளைகளுக்கு  மேல வந்துடுச்சு.

இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்னா உழைப்பு… அதுவும் ஆர்வத்தோட உழைப்பு. வெறும் உழைப்பு வேஸ்டாயிடும். ஆர்வத்தோட உழைச்சா தான் அதுல பக்தி, சின்சியாரிட்டி இதெல்லாம் இருக்கும்.

——————————————————————————————————-
LESSON : வாழ்க்கையில் ஜெயிக்கனுமா? கஷ்டப்பட்டு உழைக்காதீங்க. இஷ்டப்பட்டு உழையுங்க. STOP HARD WORK. LET’S START SMART WORK
——————————————————————————————————-

திரு.ஆர்.சந்திரசேகரன் : அப்போ 2000 த்துல இருந்து 2004 வரைக்கும் மாசி சார் கிட்டே வேலை பார்த்துகிட்டே ஹோட்டலையும் கவனிச்சிக்கிறேன். அவர் தான் ஹோட்டலையே ஆரம்பிச்சு வெச்சார். அவர் பண்ற பிஸ்னஸை தான் நான் வேற யார் கிட்டேயும் பண்ணக்கூடாது என்பது அவர் எனக்கு போட்ட நிபந்தனை. நான் ஹோட்டல் தானே ஆர்மபிச்சேன். 2004 இல் மாசி சார் இறந்து போறார். அவர் பீரியடுக்கப்புறமா இந்த கிரானைட் ஃபாக்டரியை ஆரம்பிச்சேன். இதுல இருக்குற ஒவ்வொரு விஷயமும் என் கற்பனையில் உருவானது. நான் பார்த்து பார்த்து செதுக்கினது. கல்லு எங்கே வரணும்… எங்கே வாங்கணும்…எங்கே அடுக்கனும் இப்படி பல விஷயத்தை பார்த்து பார்த்து செஞ்சேன்.

நாம் : இந்த பிசினஸுக்கு இன்ஸ்பிரேஷன் எது சார்?

திரு.ஆர்.சந்திரசேகரன் : 1989 இல் நான் சேர்ந்த அம்மன் க்ரானைட்ஸ் தான்.

——————————————————————————————————-
LESSON : WE DON’T KNOW WHAT FUTURE HAS IN STORE FOR US! நம்பிக்கையுடன் உழைக்கவும். காலம் உங்களை எப்படி வைக்கும் என்று உங்களுக்கு தெரியாது!
——————————————————————————————————-

நாம் : ஆனா நீங்க லெதர் கம்பெனியில் ஜாயின் பண்ணதா சொன்னீங்க?

திரு.ஆர்.சந்திரசேகரன் : 1986 ல லெதர் கம்பெனில ஜாயின் பண்றேன். அப்போ தான் ப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. சொந்தமா ஷிப்பிங் கிளியரன்ஸ் ஆர்டர் எடுத்து பண்ணலாம்னு. அதுல இருக்கும்போது தான் மாசி சார் பார்த்துட்டு அவரோட கிரானைட் எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனில வேலை பார்க்க என்னை கூப்பிடுறாரு. அங்கே தான் 14 வருஷம் வேலை பார்க்குறேன். ஷிப்பிங் வேலையும் பார்த்துக்குறேன். கிரானைட் கம்பெனியையும் பார்த்துக்குறேன்.

2000 ல ஹோட்டல் ஆரம்பிக்கிறேன். நம்மோட ஆர்வத்துல உழைப்புல ஒன்னு ரெண்டாச்சு. ரெண்டு நாளாச்சு. நாலு எட்டாச்சு. இப்போ பத்து BRANCHக்கும் மேல ஓப்பன் பண்ணியாச்சு. நடுவுல ஒரு ஏமாற்றமும் வந்துச்சு. துபாய்ல ஒரு கிளை ஆரம்பிச்சேன். அதுல பசங்க நம்மளை ஏமாத்திட்டாங்க. கூட இருந்தவங்க தான். அது ஒரு ஏமாற்றம். ஏமாற்றம் இல்லாம ஏற்றம் என்பது இல்லை. வாழ்க்கை என்பது என்னன்னா எதுவுமே ஈஸியா கிடைச்சிடாது. எல்லாத்துலயும் போராட்டம் இருந்திச்சு. அந்த போராட்டம் இருந்தாத் தான் ஜெயிக்கும்போது சுவாரஸ்யமா இருக்கும். நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கும். கஷ்டமே படாம ஜெயிக்கிறதுல என்ன சுகம் இருக்கு? நத்திங்!!!!!!!! ஆனா நான் இன்னமும் ஜெயிச்சிட்டேன்னு நினைக்கலை. இன்னமும் நான் போகவேண்டிய தூரம் இருக்கு. நிறைய இருக்கு.

ஏமாற்றம் இல்லாம ஏற்றம் என்பது இல்லை. வாழ்க்கை என்பது என்னன்னா எதுவுமே ஈஸியா கிடைச்சிடாது. எல்லாத்துலயும் போராட்டம் இருந்திச்சு. அந்த போராட்டம் இருந்தாத் தான் ஜெயிக்கும்போது சுவாரஸ்யமா இருக்கும்.

——————————————————————————————————-
LESSON : THERE’S NO SUCCESS WITHOUT FAILURE. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது! NO PAINS…. NO GAINS…!
——————————————————————————————————-

நாம் : உங்களோட உயரத்துக்கு அதாவது போக வேண்டிய தூரத்துக்கு அளவுகோல் அதாவது DREAM DESTINATION என்று ஏதாவது வெச்சிருக்கீங்களா?

திரு.ஆர்.சந்திரசேகரன் : என்னமோ தெரியலே… என்னோட உயரத்துக்கு அதாவது ‘இவ்ளோ உயரத்துக்கு போகணும்’ என்பது மாதிரி சீலிங் எதுவும் வேச்சுக்களை. நிறைய சாதிக்கணும்கிற லட்சியம் இருக்கு. காரோ வீடோ மனுஷன் எத்தனை வேணும்னாலும் வாங்கலாம். ஆனா ஏதாவது ஒண்ணுல தான் அவன் இருக்கவேண்டியிருக்கும். ஒரு காஸ்ட்லி கார் வாங்குறோம்னு வெச்சிகோங்க. இங்கேயிருந்து பத்து கி.மீ.க்கு ஒரு கார். அதுக்கப்புறம் வேற ஒரு கார். அதுக்கப்புறம் இன்னொரு கார்னு போகமுடியுமா? ஆனா வேலையாட்கள், தொழில்கள் என்பது அப்படிப்பட்டதில்லை. எத்துனை வேண்டுமானாலும் இவைகள் இருக்கலாம். திறம்பட நிரவகிக்க தெரிந்தால் போதும்.

ஆயிரக் கணக்கான பேர் என்கிட்டே வேலை பார்க்கனும்கிற ஆசை இருக்கு. ஆனா நிச்சயம் இது பணத்தாசையின் காரணமாக இல்லை. இந்த ஆசையை எப்படி சொல்றதுன்னே தெரியலே.

திரு.ஆர்.சந்திரசேகரன் :
அப்புறம் வாழ்க்கையில் ஜெயிக்கிறது கடினமோ இல்லையோ அது வேற விஷயம். படுத்தா நிம்மதியா தூங்கிடுவேன். காரணம் வீட்டுக்கு போகும்போது மனசுல எதையும் வெச்சிக்கமாட்டேன். வீட்டுல மெத்தையில் தான் என்றில்லை. எங்கே படுத்தாலும் தூங்கிடுவேன். யாரையும் அழ வெச்சிட்டு நான் தூங்கப் போகமாட்டேன். அதே மாதிரி மனசுல VENGEANCE வெச்சிகிட்டும் தூங்கப் போகமாட்டேன். யாரையாவது சத்தம் போட்டிருந்தா கூட அவங்களை அன்னைக்கு சமாதானப் படுத்திவிட்டு தான் தூங்கப் போவேன். எனக்கு யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது. வதைக்கக்கூடாது. யாரையும் மனசாலயோ  உடலாலயோ வதைக்கிறதுக்கு ஆண்டவன் நமக்கு அனுமதி கொடுக்கவேயில்லே. அதை அவன் சகிச்சுக்கவும் மாட்டான். நாமெல்லாம் சிருஷ்டி. ஒரு சிருஷ்டி என்னொரு சிருஷ்டியை அழிக்க நினைக்கூடாது.  அதுனால் என்னாகும்னு அப்படி நினைக்கிறவங்க தான் அழிஞ்சி போவாங்க. எனக்கு என்னன்னா ஒரு மன நிறைவு. மன நிம்மதி இருக்கு. படுத்தா நிம்மதியா தூங்க முடிகிறது. வாழ்க்கையில இன்னமும் நான் நிறைய சாதிக்க வேண்டியிருக்குது.

——————————————————————————————————-
LESSON : படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் கவலைகளை கழட்டி வைத்துவிட்டு செல்லுங்கள்! குழந்தை மனதுடன் வஞ்சமின்றி உறங்கச் செல்லுங்கள். ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதியதாய் பிறக்கிறோம்!
——————————————————————————————————-

நாம் : உங்களுக்கு ஐயப்பன் அருள் புரிந்த அந்த அற்புத சம்பவத்தை பத்தி சொன்னீங்க. அதுக்கு பிறகு சபரிமலைக்கு போனீங்களா?

திரு.ஆர்.சந்திரசேகரன் : என்ன இப்படி கேட்டுடீங்க? அதுக்கு பிறகு நிறைய தடவை சபரிமலை போயிட்டு வந்துட்டேன். “எல்லாமே ஐயப்பன் தான்!” என்கிற அதி தீவிர பக்தனாயிட்டேன். மூன்று வருஷம் தொடர்ந்து மாசா மாசம் போயிட்டு வந்தேன். 26 வருஷம் போயிருக்கேன். அதுவும் 48 மைல் பாதையில நடந்தே பலமுறை போயிருக்கேன்.

(சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் இவரது வாழ்க்கையில் நிகழ்த்திய அந்த அற்புத அனுபவம்…. http://www.livingextra.com/2012/05/blog-post_09.html)

நாம் : விரிவாக சொல்லுங்க…

திரு.ஆர்.சந்திரசேகரன் : எரிமேலியில இருந்து பம்பா வரைக்கும் நடந்தே போற பாதை அது. 48 மைல் தூரம் இருக்கும். இது ஜனவரி 1 திறந்து ஜனவரி 14 க்ளோஸ் பண்ணிடுவாங்க. ஏன்னா காட்டு விலங்குகள் ஜாஸ்தி இருக்கும் அந்தப் பாதையில. அப்படி ஒன்னாம் தேதி போயிட்டு நாலாம் தேதி வந்துட்டு திரும்பவும் 11 ஆம் தேதி போறேன். அப்போ தான் புரிஞ்சது எனக்கு. ஐயப்பன் மேல பக்தியைவிட காதல் ரொம்ப ஜாஸ்தி எனக்கு. அதனால அவர் பண்ற எல்லாமே எனக்கு நன்மையில் தான் முடியும். எத்தனையோ தடவை எனக்கு வேற வேற ரூபத்துல தரிசனம் கொடுத்திருக்கார். சபரிமலைக்கு போய், சுவாமியை பார்த்து, “ஐ” அப்படின்னு சொல்லி “யப்பா”ன்னு முழுசா முடிக்கிறதுக்குள்ளே இழுத்துவிட்டுடுவாங்க. கூட்டம் அங்கே அந்தளவு இருக்கும். கடவுள் கிட்டே வேண்டுறதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு.

“அவனுக்கு அதை செய், இவனுக்கு இதை செய், எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க அவங்களை பார்த்துக்கோ, எனக்கு வஞ்சம் பண்ணிட்டாங்க அவங்களை தண்டி” இப்படியெல்லாம் வேண்டக்கூடாது. தப்பு பண்றவங்களை அவன் தண்டிப்பான் அது வேற விஷயம். ஆனா நாம் அதை வேண்டுறது தப்பு. சாட்டையை எடுத்து சுழற்றும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. அதை எப்போ எப்படி சுழற்றனும் என்பது அவனுக்கு தெரியும். அவனுக்கு அதை நாம் நினைவுபடுத்தகூட வேண்டியதில்லை. ஒருத்தன் நாசமாப் போகணும்… அவன் குடும்பம் அழிஞ்சி போகணும்னு நாம நினைச்சா… நமக்கு அந்த நிலைமை வந்துடும். கெடுவான் கேடு நினைப்பான். அதை நாம எந்த நிலையிலும் மறக்ககூடாது.

——————————————————————————————————-
LESSON : பகைவனும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களையே இறைவன் விரும்புவான். அத்தகையவர்களே இறைவனின் அருளுக்கு பாத்திரமாக முடியும். அந்த மனநிலைக்கு நீங்கள் மாறிவிட்டால், நீங்கள் யாரை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களை உங்கள் காலடியில் வைப்பான் இறைவன்! சந்திரசேகரன் சாரை விடுங்க… நம்ம சூப்பர் ஸ்டாரை விட மிகப் பெரிய LIVING EXAMPLE வேணுங்களா இதுக்கு? அவரை எத்துனை பேர் எத்தனையோ காலகட்டத்துல எப்படியெல்லாம் தூற்றியிருப்பார்கள்? இக்கட்டான நேரத்தில் கூட இது தான் சாக்கு, நாமளும் நம்ம பங்குக்கு கல்லால அடிக்கலாம் என்று கருதி செயல்பட்டவர்களை கூட தன் படத்தில் நடிக்க வைத்து அழகு பார்க்கிறார் என்றால்… அவரது மனதை என்னவென்று சொல்வது? வஞ்சத்தை மறக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்… அது இருந்த சுவடே தெரியாம துடைச்சி போடுறது… எவ்ளோ பெரிய குணம்? இப்படி இருக்குற ஒருத்தரை எந்த நோய் என்ன செய்ய முடியும்? இல்லே அந்த எமன் தான் என்ன செய்ய முடியும்?
——————————————————————————————————-

நாம் : சார்… நீங்க சொல்றது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். கடவுள் கிட்டே நம்ம பிரார்த்தனை எப்படித் தான் சார் இருக்கணும்? அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…. எனக்கு தெரிஞ்சு என்னோட பிரார்த்தனைகளை முடித்துவிட்டு கடைசீயில நான் மறக்காம் சொல்லும் ஒரு வரி… சர்வ ஜனோ சுகினோ பவந்து. எல்லாரும் நல்லா இருக்கணும் என்பது தான். அதுவும் இப்போ கொஞ்ச நாளா தான் சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி எல்லாம் வெறும் புலம்பல்ஸ் தான்....

திரு.ஆர்.சந்திரசேகரன் : எந்தக் கடவுள் கிட்டயும், நாம் வேண்டுவது ஒன்றாகத் தான் இருக்கவேண்டு. 1) அமைதியான வாழ்க்கையை கொடு 2) நிம்மதியான வாழ்க்கை கொடு 3) பிறருக்கு உதவும்படியான வாழ்க்கையை கொடு. இது மட்டும் தான் நாம் இறைவனிடம் வேண்டக்கூடியது. இது மூன்றையும் வேண்டினாலே எல்லாம் வந்துடும்.

அமைதியான வாழ்க்கை எப்படி வரும்? குடும்பத்துல எந்த சண்டை சச்சரவும் இல்லாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா அமைதி தானா வரும். நிம்மதி எப்போ வரும்? நாம் செய்யும் காரியத்துல ஒரு தன்னிறைவு நமக்கு ஏற்பட்டா நிம்மதி தானே வந்துவிடும். பிறருக்கு உதவக்கூடிய வாழ்க்கை எப்போ வரும்? பொருளாதார ரீதியாக நாம தன்னிறைவு பெற்று நம்மகிட்டே எக்ஸசா பணம் இருக்கும்போது தான் பிறருக்கு உதவமுடியும்.

So, மேலே சொன்ன மூன்றும் வேண்டிப் பாருங்க…. வாழ்க்கையில உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். நிறைவான வாழ்க்கை என்பது தான்.

“கேளுங்கள் கொடுக்கப்படும்…. தட்டுங்கள் திறக்கப்படும்….” அப்படின்னு சொன்னது உண்மை. கடவுளுக்கு இப்போல்லாம் நேரம் இல்லே. பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாயிடிச்சு. So, நம்ம ப்ரேயர் எப்பவுமே ஷார்ட் & ஸ்வீட்டா இருக்கணும்.

——————————————————————————————————-
LESSON : பிறர் நன்மைக்காக பிரார்த்திப்பவன் தனக்காக எதுவும் கேட்க்கும் நிலை வரவே வராது!
——————————————————————————————————-

திரு.ஆர்.சந்திரசேகரன் :
கடவுள் எப்பவுமே ஒருத்தனுக்கு உதவனும்னு நினைச்சா நேரடியா உதவமாட்டார். மனுஷங்களை தான் தேர்ந்தெடுப்பார். அதாவது AUTHORIZED ஏஜண்ட்கள். “நீ ஒரு ஆயிரம் பேருக்கு சாப்பாட்டை போடு. நீ இவங்களுக்கு உதவி செய். நீ அவனுக்கு வேலை கொடு. நீ அந்த கல்யாணத்துக்கு ஹெல்ப் பண்ணு. நீ அந்த ஏழைகளை வெச்சு காப்பாத்து. நீ அந்த ஊனமுற்ற குழந்தையை காப்பாற்று. உன் சொந்தக்காரங்க கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு உதவி செய்” அப்படின்னு சொல்லி நம்ம எல்லாருக்கும் அவங்கவங்க கடமையை ஒதுக்கி தந்துடுவாரு. நீங்க இதெல்லாம் செய்றவரைக்கும் அவன் உங்களை பார்த்துக்குவான். உங்கள் தேவைகளை கவனிச்சிக்குவேன். நீங்க இதை செய்ய தவறும்போது அவன் உங்களை கைவிட்டுடுவான்.

——————————————————————————————————-
LESSON : தேவானாம் மானுஷ ரூபாம். இறைவன் பல சமயங்களில் சக மனிதர்களை கருவியாக்கித் தான் நமக்கு உதவுவான். எனவே அடுத்த முறை உங்களுக்கு யாராவது உதவினால், அவருக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் நன்றி சொல்லுங்கள்!
——————————————————————————————————-

நாம் : ரஜினி சார் நடிச்ச ‘அதிசயப்பிறவி’ படத்துல கூட இது பத்தி ஒரு டயலாக் வரும். “பிறருக்கு கொடுக்கணும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கு
ஆண்டவன் அள்ளிக்கொடுக்கமாட்டான். கொட்டிக் கொடுப்பான்” அப்படின்னு.

திரு.ஆர்.சந்திரசேகரன் :
ஆமாம்… அது மாதிரி நம்மோட கடமைகள் இன்னின்ன என்பதை கடவுள் நிர்ணயித்துவிடுகிறார். இன்னின்னாரையெல்லாம் நாம காப்பாத்தணும் என்பதை அவன் நிர்ணயித்து விடுகிறான். IT IS A PRE-LOADED SOFTWARE. இந்த வேலைகளை நாம கரெக்டா செய்றவரைக்கும் நமக்கு எந்த பாதிப்பும் வராது. வாங்கி வாங்கி உள்ளே போட்டுக்குறது, தவறான வழியில சொத்து சேர்க்கிறது, சொந்த அண்ணன் தம்பிகளுக்கே துரோகம் பண்றது, இதெல்லாம் பண்ணப் பண்ண என்னாகும்னா…. கடைசீயில துன்பம் தான்.

ரஜினிகாந்த் சொன்னதுலயே அருமையான வார்த்தைகள் சொன்னாரு. “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறையா கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்!” அப்படின்னு. நூத்துல ஒரு வார்த்தை அது. ஆண்டவன் எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் தர்றான். அதை யாரு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அது நிரந்தரமா அல்லது தற்காலிகமா என்பது முடிவு செய்யப்படும். கடவுள் நமக்கு கொடுப்பதே பிறருக்கு செய்வதற்காகத் தான் என்று நினைத்து செயலாற்றவேண்டும். பதவி, பணம், இதெல்லாம் ஆண்டவன் நமக்கு கொடுக்குறதே மத்தவங்களுக்கு செய்றதுக்காகத் தான்.

நாம் : இதைத் தான் சார் வள்ளுவர் அழகா சொல்லியிருக்கார்….

“தாளாற்றி தந்த பொருள்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற்
பொருட்டு” என்று!!

திரு.ஆர்.சந்திரசேகரன் : நாமே மேலே சொன்ன மாதிரி நினைச்சாத் தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும். நான் எல்லார்க்கு சொல்றது என்னன்னா… நம்மால யாருக்காவது
உதவமுடியும்னா… நல்ல விஷயங்களுக்கு உதவ முடியும்னா ஒரு நிமிஷம் கூட யோசிக்க கூடாது. உடனே “நான் செய்றேன்”னு சொல்லிடனும். நான் என்பது இங்கே கடவுள் தான். அவன் மேல பாரத்தை போட்டுடுங்க. ஆண்டவனே கூட இருந்து செய்து வைப்பான். “ஐயப்பா, உன்னை நம்பி நான் ஒரு வாக்குறுதி கொடுத்துட்டேன். நான் பொய்யானாலும் நீ பொய்யாகக் கூடாது!” அப்படின்னு ஐயப்பன் கிட்டே வேண்டிகிட்டு அவன் மேல பாரத்தை தூக்கி போட்டுடுவேன். மத்ததெல்லாம் அவன் தான் முடித்து வைப்பான்.

நாம் : நாம் நமக்காக இறைவனிடம் வேண்டுவதை விட, அடுத்தவங்களுக்காக கேட்பது உடனே கிடைக்கும். அப்போ…. நமக்கு கிடைக்காதா என்றில்லை… யார் யாருக்கு எப்போ எதை கொடுக்கணும்னு அவனுக்கு தெரியாதா?

நண்பர் பாலாஜி : நான் ஒரு விஷயத்தை படிச்சிருக்கேன். பிரார்த்தனைகளில் தனக்கென்று எதுவும் கேட்க்காது பிறருக்காக கேட்பது ஒருவகை. அடுத்தது ஒன்னு உண்டு. அது சராசரி. அதாவது தனக்காக தன்னுடைய தேவைகளுக்காக வேண்டுவது. இதில் ஆண்டவனுக்கு பிரியமானவன் பிறருக்காக வேண்டும் முதல் வகை பக்தனே.

நாம் : தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை…

நடிகர் திலகம் நடிச்ச ‘அன்பு கரங்கள்’ படத்துல வாலி சார் எழுதியிருப்பார் மேற்படி பாடலை. என்ன அர்த்தம்….வாவ் !!

திரு.ஆர்.சந்திரசேகரன் : சுந்தர், அடுத்தவங்க கஷ்டத்தை கேட்கும்போது ஒரு நொடி கண்ணீர் சிந்துறான் பாருங்க….அவன் தான் உண்மையான மனுஷன். மத்தவங்கல்லாம் ஜடம் தான்.

நாம் : ‘மனிதன்’ படத்துல கூட அற்புதமான வரிகள் வரும்… “பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் எவனோ அவனே மனிதன்…” அப்படின்னு.

திரு.ஆர்.சந்திரசேகரன் : மேலே நீங்க சொன்ன ரெண்டுமே அருமையான பாட்டு. அற்புதமான வரிகள். சரியான இடத்துல சொல்லியிருக்கீங்க. ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க. பிறருக்காக வேண்டுபவர்கள், தனக்கென்று எதுவும் கேட்கும் நிலையில் இறைவன் அவர்களை வைக்க மாட்டான்.

நாம் : ‘பாட்ஷா’ படத்துல கூட ஒரு டயலாக் வரும் சார்… “என்னப்பா மத்தவங்க வாழ்க்கையில எல்லாம் விளக்கேத்தி வெக்கிறே. உன்னோட வாழ்க்கையை பத்தி கவலைப் படமாட்டியா?” அப்படின்னு அம்மா கேட்ப்பாங்க. அதுக்கு ரஜினி சொல்லுவார், “என்னோட வாழ்க்கை விளக்கை அந்த ஆண்டவன் ஏத்தி வைப்பான் அம்மா” அப்படின்னு.

திரு.ஆர்.சந்திரசேகரன் : நம்மோட பெரியவங்க முன்னோர்கள் தாங்கள் வாழ்க்கையில் அனுபவித்த நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிட்டு போயிருக்காங்க. நாம தான் அதையெல்லாம் சட்டை பண்றதில்லை. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளை தானே வளரும்” அப்படின்னு சொல்லியிருக்காங்க.

நாம் : உங்களோட CHARITY side பற்றி சொல்லுங்களேன்…

திரு.ஆர்.சந்திரசேகரன் : நான் சொல்ல விரும்பலே. இருந்தாலும் ‘மத்தவங்களுக்காக நாம செஞ்சா ஆண்டவன் நம்மளை நல்லா வெச்சிக்குவான்’னு எல்லாரும் தெரிஞ்சிக்கணும் என்பதற்காக சொல்கிறேன். அன்னதானங்கள் நிறைய பண்ணிக்கிட்டு இருக்கேன். குன்னூர்ல என் ஹோட்டலோட ஒரு கிளை ஆரம்பிச்சேன். அங்கே ஒரு மாரியம்மன் கோவில் ஒன்னு இருக்கு. நாலு வருஷமா அங்கே அன்னதானம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த ஊர்ல இதுனால ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டேன்.

அன்னதானம் என்பதை நான் எங்கிருந்தாலும் செய்வேன். பல கோவில்களில் அன்னதான திட்டத்தில் நான் முக்கிய பங்கு வகிக்கிறேன். இதற்கு மேல் இதைப் பற்றி வெளியே நான் சொல்ல விரும்பவில்லை. அந்த கதையில் கூறியபடி பசியோட கொடுமை தெரிஞ்சவன் நான்.

——————————————————————————————————-

LESSON

பணத்தை சேர்த்து வைக்குமிடம் எது?

பணத்தை சேர்க்க வைக்க சரியான இடம் எது தெரியுமாங்க? சுவிஸ் பேங்க்கோ, அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் பேங்க்கோ இல்லை. வள்ளுவர் சொல்ற பேங்க் எதுன்னு பாருங்க! இதுல போடுற பணம் தான் ஆபத்து சமயத்துல உங்களை, உங்க குழந்தைகளை, குடும்பத்தினரை காப்பாத்தும். நீங்க மேலே போனா கூட கூடவே வரும்!

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.(குறள் 226)

பொருள் : ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

——————————————————————————————————-

நாம்: ஏழைகளின் பசியை போக்க நீங்க மேற்கொண்ட முயற்சிகள் மிக்க மகிழ்ச்சி சார். இது தவிர வேறு ஏதாவது ?

திரு.ஆர்.சந்திரசேகரன் : FORCE 27 என்ற அமைப்பை சமீபத்தில் துவக்கியிருக்கிறேன். அதோட கான்சப்ட் என்னன்னா POOR to POWER என்பது தான். கடவுள் எனக்கு கொடுத்துட்டான். அதை நாட்டுக்கு நல்ல வழியில திருப்பி கொடுக்கனும் என்கிற நோக்கத்தில் இந்த அமைப்பை துவக்கியிருக்கிறேன்.

அதோட நோக்கம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வமுடைய ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் நிம்மதியாக படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் பயிற்சியை இலவசமாக அளிக்கிறோம். இதன் மூலம் வசதியற்றவர்களின் ஐ.ஏ.எஸ். & ஐ.பி.எஸ். கனவை நனவாக்குவது தான் என் நோக்கம். ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி என்கிற பயிற்சி நிறுவனத்தை நடத்தும் ஷங்கர் என்பவர் இது வரை 200 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாகியிருக்கிறார். எனவே அவர் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் எங்கள் FORCE 27 சார்பாக தமிழகத்திலிருந்து பலர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.

பணமும் பவரும் ஒருங்கே இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். பணம் சம்பாதித்த நான், அதை வைத்து, தகுதியுடையவர்களை பவர் கொண்டவர்களாக உருவாக்கி, அவர்கள் மூலம் நாட்டுக்கு சேவை செய்வதே என் லட்சியம்.

I WANT TO BRING THE PEOPLES WITH MORAL VALUES. நான் எப்படி மக்களை கொண்டு வரணும்னு நினைக்கிறேன்னா…

நானும் ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியோட ஷங்கர் அவர்களும் இதை இலவசமா தான் செய்றோம். ஷங்கர் அவர்களும் ஒரு பைசா கூட இதுக்காக வாங்கலை.

நாம் : மிகச் சிறந்த பணி இது. உங்களின் இந்த சேவை மூலம், பல குடும்பங்களில் ஐ.ஏ.எஸ். கனவு நனவாகும் என்பது மட்டும் உறுதி. எதன் அடிப்படையில் அந்த மாணவர்கள் இலவச பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அளவுகோல்கள் என்ன?


திரு.ஆர்.சந்திரசேகரன் :
அந்த குடும்பத்தில் அவர்கள் முதல் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் வருடத்திற்க்கு ரூ.1,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான். உண்மையான பயனாளிகளுக்கு இந்த நன்மை போய் சேரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் இந்த விதி முறை வைத்திருக்கிறேன்.

——————————————————————————————————-
LESSON :
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
- பாரதி
——————————————————————————————————-

நாம் : ரொம்ப நல்ல விஷயம். சந்தோஷம் சார்.

நாம் : தொழில் துறையில் நீங்கள் தற்போது இருக்கும் உயரத்தை பற்றி அதி புரிந்துள்ள சாதனைகளை கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்…

திரு.ஆர்.சந்திரசேகரன் : 2004 இல் கிரானைட் கம்பெனி ஆரம்பிச்சேன். படிப்படியா இந்த கம்பெனியை விரிவு படுத்தி, இன்னைக்கு GRANITE MONUMENTS உற்பத்தியில் நம்மளை நல்ல இடத்துல ஆண்டவன் வெச்சிருக்கான். வரிசையாய் மூணு வருஷமா மத்திய அரசுகிட்டேயிருந்து BEST EXPORTER அவார்ட் வாங்கியாச்சு. மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்துற விதமா, மைக்கேல் ஜாக்சன் சிலை ஒன்னை கிரானைட்லயே செஞ்சேன். இது WORLD RECORD. ஒரே க்ரானைட்ல செஞ்சது இது. வெளியே கார்டன்ல கூட பார்த்திருபீங்க.

நாம் : ஆமா சார்… வொண்டர்புல்லா இருந்திச்சு. நானே கூட அதை பத்தி கேட்கனும்னு இருந்தேன்.

திரு.ஆர்.சந்திரசேகரன் : எனக்கு எப்பவுமே ஒரு கிரியேட்டிவ் மைன்ட் உண்டு. எது செஞ்சாலும் வித்தியாசமா செய்யனும் அப்படிங்கிற எண்ணம் எனக்கு உண்டு. சென்னையில் ஒரு கிரானைட் எக்ஸிபிஷன் நடந்துச்சு. அதுக்கு ஒரு க்ரானைட்லயே எலும்புக்கூடு செஞ்சேன். அதுக்கு DON’T SMOKE அப்படின்னு பேர் வெச்சேன். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதை பாராட்டி விருது கொடுத்தது. மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில், உலக சுகாதார நிறுவனம் (W H O) எங்களுக்கு சான்றளித்தது.

இது பண்ணியாச்சு… அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ தோணினது தான் இந்த மைக்கேல் ஜாக்சன் சிலை. 10 அடி உயரத்துல சிங்கிள் ஸ்டோன்ல பண்ணோம். அதுல என்ன விசேஷம்னா அவர் போட்டிருக்குற கோட் பறக்குற மாதிரி அதை செஞ்சோம்.

இதுக்கு INDIA BOOK OF RECORDS விருது கிடைச்சது. கமர்ஸியலா நிறைய பேர் இதை விலைக்கு கேட்குறாங்க. ஆனா இதை விற்க எனக்கு விருப்பமில்லே. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினருக்கே நேரடியா இதை அனுப்ப முடிவு செஞ்சிருக்கேன். அமெரிக்க தூதர் கிட்டே கூட இது பற்றி பேசியிருக்கேன். விரைவில் இது ஜாக்சன் குடும்பத்தினருக்கே நமது நாட்டின் சார்பா அனுப்பப்படும்.

நாம் : நீங்க மைக்கேல் ஜாக்சன் ரசிகரோ?


திரு.ஆர்.சந்திரசேகரன் :
நான் வித்தியாசமா ஏதாவது செய்யனும்னு நினைச்சது ஒரு பக்கம். அவரை எனக்கு பிடிக்கும் என்பது இன்னொரு பக்கம். எல்லாத்துக்கும் மேல அவர் இறந்து போனது. நாம செய்றது அவருக்கு நாம் கொடுக்குற ஒரு மிகப் பெரிய TRIBUTE ஆக இருக்கணும். அந்த TRIBUTE நம்ம நாடு சார்பா அவருக்கு கொடுக்கணும் என்பதால இதை செஞ்சேன்.

——————————————————————————————————-
LESSON :
FREQUENT INVENTION OF NEW IDEAS IS A KEY TO PROSPERITY IN ANY BUSINESS. புதப் புது யோசனைகளை சிந்தித்து செயல்படுத்துவதே ஒரு வணிகம் செழித்து வளருவதற்கு நாம் செய்ய வேண்டிய தலையாய பணியாகும்!
——————————————————————————————————-

நாம் : நாம் பெருமைப்படத்தக்க, சர்வதேச அரங்கில் நமக்கு பெருமிதம் ஏற்படுத்துகிற ஒரு முயற்சி. வாழ்த்துக்கள் சார்.

நாம் : அடுத்து… கடைசீயா எங்களோட இன்ஸ்பிரேஷன், சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பற்றி சொல்லுங்களேன். உங்களை மாதிரி பெரிய மனிதர்கள் அவரை பற்றி வைத்துள்ள கருத்தை அரிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

திரு.ஆர்.சந்திரசேகரன் :
ரஜினியை எல்லாருக்கும் பிடிக்கும். ரஜினியை பிடிக்காத ஆளு யாருமே இருக்க முடியாது சார். ஏன்னா… அவரோட ஸ்பீட் மற்றும் தனித்தன்மை. அடுத்து அவரை பத்தி ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் என்னன்னா: வாழ்க்கையில கஷ்டப்பட்டா ரஜினி மாதிரி வரலாம்னு ஒரு உதாரணம் இருக்கு. நானும் கஷ்டப்படுறவன். ஆன்மீகத்துல ஈடுபாடு உண்டு. ஆனா அவர் அளவுக்கெல்லாம் ஆன்மீகத்துல உயரத்துக்கு போகவே முடியாது. இவ்ளோ பெரிய ஸ்டேட்டஸ்ல அவர் இருந்தாலும் அந்த பாபாஜி குகைக்கெல்லாம் காட்டுல மேட்டுல அலைஞ்சி திரிஞ்சி நடந்து போகவேண்டிய அவசியம் என்ன? அவருக்குள்ளே இருக்குற அந்த  ‘தேடல்’  தன் அப்படி போகவைக்குது. நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்

கஷ்டப்பட்டா வாழ்க்கையில் நிச்சயம் முன்னுக்கு வரலாம் அப்படி என்பதற்கு நேரடி உதாரணம் அவர். வேற எங்கேயும் நாம உதாரணத்தை தேடி அலைய வேண்டியதில்லை. நம்ம கண் எதிராவே இருக்குற மிகச் சிறந்த உதாரணம் ரஜினி.

சும்மா பகட்டுக்காக இல்லாம நேர்மையா இருக்குற அவரோட பக்தி. அந்த நேர்மை இல்லேன்னா அவரால நடந்தெல்லாம் பாபாஜி குகைக்கு போகமுடியாது. அதையெல்லாம் பார்க்கும்போது நாமல்லாம் ஒன்னுமே கிடயாது. தமிழ்த் திரையுலகில் ரஜினி மிகப் பெரிய புரட்சி. அவருடைய வருகைக்கு பிறகு தானே தமிழ் திரையுலகின் போக்கே மாறியது. பவர், ஸ்டைல், ஆக்ஷன், ஸ்பீட் இப்படி எல்லத்த்துக்கும் உதாரணம் அவர்.

நாம் : அவரை சிலர் மொழி ரீதியில் தனிமைப்படுத்த முயற்சிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும் ?

திரு.ஆர்.சந்திரசேகரன் :
மொழி, இனம், ஜாதி இதெல்லாம் யாரும் யாருடைய சேர்ந்ததும் இல்லே. ஒருவன் இன்னின்ன இடத்தில் இன்னின்ன இனத்தில் இன்னின்ன மொழியில் பிறக்கவேண்டும் என்பதெல்லாம் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்து ஒருவரை தூஷிப்பதெல்லாம்  படைத்தவனுக்கு எதிராகவே செய்யும் செயல்கள் தான். அவை ஒரு போதும் வெற்றி பெறாது. இத்தனை செஞ்சும் ரஜினியை யாரலாயவது ஜெயிக்க முடியுதா பாருங்க? முடியாது. ஏன்னா அதெல்லாம் ஆண்டவன் தீர்மானிச்ச விஷயங்கள். .

ஒருவன் இன்னின்ன இடத்தில் இன்னின்ன இனத்தில் இன்னின்ன மொழியில் பிறக்கவேண்டும் என்பதெல்லாம் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்து ஒருவரை தூஷிப்பதெல்லாம்  படைத்தவனுக்கு எதிராகவே செய்யும் செயல்கள் தான். அவை ஒரு போதும் வெற்றி பெறாது.

யாதஊம் ஊரே யாவரும் கேளீர்….! அவரைப் பற்றி பேசுறதுக்கோ அவரடோ வாழ்க்கை முறைகளை விமர்சிக்கவோ நமக்கு உரிமை கிடையாது. தகுதியும் கிடையாது. வாழும் முறைகளிலாகட்டும், ஆன்மீகத்திலாகட்டும் அவர் எங்கேயோ இருக்கிறார்.  அவரை நடிகர் என்ற முறையை விட ஆன்மீகவாதியாக எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

நாம் : சார்… எங்கள் தள வாசகர்களுக்கு ரஜினி ரசிகர்களுக்கு உங்களோட மெசேஜ் என்ன?

திரு.ஆர்.சந்திரசேகரன் :
ரஜினியைப் போல உண்மையான உழைப்பு, நேர்மையான பக்தி இது ரெண்டும் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லாரும் சாதிக்கலாம்.

ரஜினியைப் போல உண்மையான உழைப்பு, நேர்மையான பக்தி இது ரெண்டும் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லாரும் சாதிக்கலாம்.

நாம் : எனக்கு இறுதியாக உங்களின் வாழ்த்துக்கள் ஆசிகள் வேண்டும் சார்…

திரு.ஆர்.சந்திரசேகரன் :
நான் வேண்டும் என் ஐயப்பன் உங்களோட நல்ல முயற்சிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்று உங்களை வழி நடத்துவான். இனிமே பாருங்க… நீங்க எங்கே போகப்போறீங்கன்னு…!

(ஐயப்பன் எப்படி என் ரூட்ல வந்தாரு? அவரோட அப்பா நரசிம்மர் தானே வந்திருக்கணும் நியாயப்படி பார்த்தா? ஆனா அதுக்கும் ஒரு காரணம் இருக்குங்க. அப்புறம் சொல்றேன்!)

நாம் : எல்லாப் புகழும் இறைவனுக்கே!! எங்களுக்காக உங்க பிசியான ஷெட்யூல்ல கூட நேரம் ஒதுக்கி உங்க வெற்றியின் ரகசியத்தை, பார்முலாவை எங்களிடம் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. உங்களது இந்த பேட்டியை படிப்பவர்கள் நிச்சயம் தங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையை காண்பார்கள்!!

சந்திப்பு நிறைவடைந்து நாங்கள் கிளம்புவதற்கு முன்பு, அவருக்கு ‘ரஜினியின் பன்ச் தந்திரம் நூலை பரிசளித்தேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

(சந்திப்பு முடிந்ததும் மறக்காது சாப்பிட்டுவிட்டு போகச் சொன்னார். அவரது கேண்டீனில் தயாரிக்கப்பட்ட டிபன் தான் தரப்பட்டது. அத்துனை டேஸ்ட்… அத்துனை தரம். ஹோட்டல் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தனது ஃபாக்டரி தொழிலாளர்களுக்கு கூட தரமான உணவை வழங்கும் அவரது நல்லெண்ணத்தை என்ன சொல்ல? இறைவன்  அவருக்கு என்றும் துணையிருப்பானாக. இறுதியாக எங்களை அவரது காரிலேயே செங்கல்பட்டிலிருந்து அழைத்து வந்து சென்னை நகருக்குள் டிராப் செய்தார்!)

[END]

17 Responses to ““ரஜினியைப் போல உண்மையான உழைப்பு & நேர்மையான பக்தி இரண்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!” – கிரானைட் அதிபர் திரு.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு – FINAL PART!!”

 1. harisivaji harisivaji says:

  உழைத்து முன்னேறிய பின் மற்றவர்களுக்கு அதற்கான வழிகாட்டும் அந்த எண்ணமே இவரது இந்த வெற்றிக்கும் இனி பெறப்போகும் வெற்றிக்கும் காரணம்

  ….

  இந்த காலத்தில் கொஞ்சம் நல்ல வந்துட்ட ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் என்ணம் அதிகம் உள்ளது …ஆனால் தன்னை கஷ்ட படுத்திய எதிரிகளை இன்று வாழவைத்து அவர்களை கவனிதுகொள்ளும் இவரது மனது …என்ன சொல்றதுனே தெரியல

  இவரை பாராட்டும் அளவுக்கு எனக்கெல்லாம் தகுதியில்லை …இந்த ஒரு என்னத்தை மனதில் பதித்து கொண்டால் எல்லாரும் நிமதியா வாழலாம்

  தோழ்வியில் துவளும் போது இந்த பதிவை படித்தால்

  வெற்றி உறுதி

  திரு.ஆர்.சந்திரசேகரன் அவர்களுக்கு ஒரு royal salute

 2. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

  அண்ணாமலை படத்தில் வரும் "வெற்றி நிச்சயம் அது வேத சத்தியம்" பாடல் காட்சியின்போது நாம் ஒவ்வொருவரும் கை வலிக்க எவ்வளவு கை தட்டியிருப்போம், எவ்வளவு விசில் அடித்திருப்போம். அது நம் தலைவருக்காக மட்டும் அல்ல. ஒரு சாதாரண பால்காரன் பெரிய அளவில் முன்னேறுவதை பார்த்து நமக்கு ஏற்பட்ட சந்தோஷமும் ஒரு காரணம். அப்படிப்பட்ட ஒரு முன்னேற்றத்தை தன் வாழ்க்கையில் சாதித்த திரு. சந்திரசேகரன் அவர்களின் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு, ஒரு பெரிய விருட்சத்திற்கு சுந்தர் விதை போட்டிருக்கிறார். இது வளர்வதற்கு நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை செய்வோம். நம் தளத்திற்கும் தலைவருக்கும் பெருமை சேர்ப்போம். நிச்சயம் இந்த பதிவை படித்தால் தலைவர் ரஜினி சந்தோஷப்படுவார்.

 3. sAKTHIVEL sAKTHIVEL says:

  MIKKAA MAKILCHIII…..MIKAAAAAA ARUMAYANAAA PATHIVUUU…

  MANY TIMES I CRITICIZED RAJINI NOT FOR COMING TO POLITICS DUE TO FANS WISHES…..NOT FOR ME…..

  CRITICIZING OTHERS IS A CANCER ………WHICH KILLS US…

  I'LL TRY TO STOP CRITICIZING NOW ONWARDS…REST IN GOD(AMMA)HANDS……….

  MANY TIMES I CRIED WHEN I STUDY UR ARTICLE……..

  BUT THIS ARTICLE IS TRULY FANTATSTICS…..WHICH MADES ME TO THINK……….

  I NEED GOD BLESSING TO CHANGE MYSELF…….(OTHERS BLESSING I WILL GET SOON)………..

  I WANT TO SAY MANY THINGS………………..FIRST I'LL TAKE STEPS…………….YELLAM AMMAV(GOD)IN SEYAAALLLLL…..

  NANDRI…………

  Sakthivel.D

 4. Rabeek Rabeek says:

  உண்மையான உழைப்பு, நேர்மையான பக்தி இது ரெண்டும் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லாரும் சாதிக்கலாம்.

  எல்லாப் புகழும் இறைவனுக்கே. எங்களுக்காக உங்கள் நேரத்தை கொடுத்து இந்த பதிவை செய்தமைக்கு நன்றி. இந்த பேட்டியை படிப்பவர்கள் நிச்சயம் தங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையை காண்பார்கள்.

 5. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Sir sonna kadavulidam vendavendiya murai, panam semikum bank , avarathu serving mind ellarukum inspiration.
  Intha pathivuku neenga romba kasta paturinga na. Periya idam ungaluku kathuruku.thanks na for ur effort

 6. Ashraf Ali Ashraf Ali says:

  Dear Sundar ji,

  Excellent article; Hats of to your hard work …

  (How much time you have taken for typing this interview ??)

  *******

  Ashraf Ali.

 7. Chithamparam Chithamparam says:

  //உண்மையான உழைப்பு, நேர்மையான பக்தி இது ரெண்டும் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லாரும் சாதிக்கலாம்

  Really true

 8. napoleon.s.kumar napoleon.s.kumar says:

  //உங்களோட நல்ல முயற்சிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்று உங்களை வழி நடத்துவான். இனிமே பாருங்க… நீங்க எங்கே போகப்போறீங்கன்னு…!// உண்மையான வார்த்தைகள். வாழ்த்துக்கள் சுந்தர்.

 9. Sakthi Sakthi says:

  மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொரு lesson க்கும் மேற்கோள் காட்டுவதற்கு நிறைய தமிழ் இலக்கியங்களை பயன்படுதியிருக்கிங்க. இதிலிருந்தே இந்த பதிவு எவ்வளவு முக்கியமானதுன்னு தெரியுது. சந்திரசேகரன் sir சொன்ன மாதிரியே ரொம்ப இஷ்டப்பட்டு எழுதியிருக்கிங்க. மிகவும் பயனுள்ள நேர்மறை எண்ணங்களை தூண்டி விடும் பதிவு இது. இன்னும் நிறைய ROLE MODEL சந்திப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

 10. vasi.rajni vasi.rajni says:

  தமிழகத்தில் உள்ள பிரபலங்களில் நான் அதிகம் கவனிப்பது அவர்களின் இறைமறுப்பு கொள்கை தான். இவர்களின் இறைமறுப்பு கொள்கைக்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை, ஒரு ஜாதி system மா அல்லது மனித மனதின் அகங்காரமா என்று.

  .

  ஆனால், திரு சந்திரசேகர் அவர்களுடன் நான் வியந்தது அவரின் தீராத இறை பக்திதான்.அவரின் வாழ்கையின் இளமையில் நிகழ்ந்த கண் சம்மந்த பட்ட நோயை நிவர்த்தி செய்த விதம் நம்மை சிலிர்க்க வைத்தது. அவரின் வாழ்கை ஒரு சினிமா போல உள்ளது.

  .

  கண்டிப்பாக அவரின் வாழ்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை நமது வாழ்க்கைக்கு ஒரு சிறந்த பாடம்.கஷ்டபடுவது பெரிதல்ல, அப்பொழுது நாம் ரியாக்ட் செய்வதே நம்மை உயர்த்துகிறது என்பதற்கு திரு சந்திரசேகர் சிறந்த உதாரணம்.

  .

  சுந்தர்ஜி, இந்த கட்டுரையை படைக்க தங்கள் செலவு செய்த நேரத்தை நினைக்கும் பொழுது எனக்கே களைப்பு வந்து விட்டது. தங்களுடைய உழைப்பிற்கு தலைவணங்குகிறோம்.

  .

  rajini will rule tamilnadu

  .

 11. **Chitti** **Chitti** says:

  மன்னிக்கறது தவறு செய்தவர்களுக்காக மட்டும் அல்ல, நமக்கும் தான். மனதில் ஒரு அமைதி கிடைக்கும்.

  ***

  இவருடன் நீங்கள் சந்தித்தது, கண்டிப்பாக உங்களின் இறையருள் தான்.

  ***

  ஐயப்பன் படம் மிகவும் அருமை.

  ***

  Force27 - poor to power is really super. Hope our 'force' team also would do some great things in future.

  ***

  மேற்படி, பதிவில் உள்ள அனைத்தும் சூப்பர். somewhere I read that something which we learn newly to be tasted, something to be chewed and something to be digested. And this one comes under last category. Good!

  ***

  அது மட்டும் இல்லாமல், அறிந்து கற்க வேண்டியதை தனி, தனியாக குடுத்து அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  ***

  இப்படி ஒரு அருமையான பதிவு அளித்ததற்கு மிக்க நன்றி!!!

  ***

  'சிவாஜி' என்னும் மாமனிதனுக்கு ரசிகனாக இருப்பதில் பெருமைபடுகிறேன்!

  ***

  **சிட்டி**.

  ஜெய் ஹிந்த்!!!

  Dot.

 12. RAMEESH RAMEESH says:

  Excellent Article Sundar, My living inspiration is my uncles (My mother brothers), My mom only take care of them from their childhood. They all grown from Poor to Rich thru their Hard work. One of my uncle "Sambath" he did lots of hard work and with that he has 100% failth with god and he has reached far higher then ayone in my entire village. Still he is the same simple person and belive in God. When I happen to read this article I could see the co-inside of the good people. This is true article with good intension and now I have more respect to you then I had earlier. I wishing you to continue do this and God should should give you all the power to achieve that. Thanks again… and this article definitely affected me and it will affect many more Rajini Sir Fans and all the good hearted people….

 13. RAMEESH RAMEESH says:

  Missed to mention… Everyone at my home is Rajini Sir Fan and we always think him as our family member.

 14. BaluMahendran BaluMahendran says:

  வெரி வெரி nice சுந்தர் gee . அண்ட் என்னையும் தங்களது force டீமில் இணைத்துகொள்ளவும் :) இது போன்ற படைப்புகள் இன்னும் நிறைய வரவேண்டும்.நிச்சயம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

 15. Ashok Ashok says:

  அருமையான பதிவு.நன்றி!

 16. Anonymous says:

  நம் தளத்தில் இதுவரை நான் படித்த பதிவுகளில் என்னை மிகவும் பாதித்த, ஆழமாக என்னுள் ஊடுருவிய பதிவுகளில் ஒன்று….! திரு.சந்திரசேகர் சாரின் வாழ்க்கை பற்றிய இந்த பதிவு ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய ஒன்று…பிறருக்கு தெரியப்படுத்த வேண்டிய ஒன்று….! தன்னம்பிக்கை இழந்து சோர்ந்து போய்க் கிடப்பவர்களுக்கு இது உன்னத மருந்து….!

  -

  முயல்பவர்கள் யாரும் தோற்கமாட்டார்கள்…..முயற்சியை பாதியில் விட்டவர்கள் வெல்ல மாட்டார்கள்….. இதுதான் இந்த பதிவில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்……வெற்றிக்கான தூரம் பற்றி கவலை கொள்ள வேண்டாம்……முயன்று தோற்பது கூட வெற்றி தான்…..முயலாமல் வெல்வது கூட தோல்வி தான்….!

  -

  இந்த நாள் வரையில் நம் தளம் பற்றியோ, நம் செயல்கள் பற்றியோ என் பெற்றோரிடம் நான் அவ்வளவாக சொன்னதில்லை…..ஆனால் சந்திரசேகர் சாரின் இந்த மொத்த பேட்டியையும் என் அம்மா, அப்பாவிற்கு நான் பிரின்ட் செய்து கொடுக்கப் போகிறேன்…..கண்டிப்பாக அவர்கள் மகிழ்வார்கள்…..!

  -

  "சோதனை வரும்; சாதனை எப்போ ஆகும்

  சோதனையை சந்திச்சா தான் சாதனை ஆகும் "

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 17. Saravanan Saravanan says:

  சுந்தர் அண்ணா,

  இரண்டு மணி நேரமாக படித்தேன்.. மனம் நிறைய கனவுகளை காண்கின்றது..

  பதிவின் இடையே பாடம் (Lesson) குறிப்பு அருமை..

  கஷ்டபடாம வெற்றியை அடைய முடியாது.. நிறைய விஷையங்களை கற்றுக்கொண்டேன்.

  காலேஜில் பாடம் நடத்தும் போது ஐந்து நிமிடத்துக்கு மேல் கவனிக்காமல் தூங்குவேன் அல்லது விளையாடுவேன் அல்லது மொபைலில் சாட் செய்வேன்..

  இந்த பதிவினை முதலில் படிக்க ஆரம்பிக்கும்போது குனிந்து, சுவற்றில் சாய்ந்து படிக்க ஆரம்பித்தேன்..

  படிக்க படிக்க, முதுகுதண்டு தானாக நேராகி, சேர் நுனியில் உட்கார்ந்து, மானிட்டருக்கு அருகில் வந்துவிட்டேன்..

  பாடம் கற்றுக்கொண்டேன்.. பள்ளியில், காலேஜில் படிப்பதெல்லாம் பாடம் இல்லை..

  இப்படி மற்றவர்களின் உழைப்பும், உண்மையும், வெற்றிகளையும் படிக்கும்போது தெரிந்துகொள்ளும் பாடம் தான் என்போன்றவர்களுக்கு பட்டம்.. (Degree or Certificate Courses)..

  இந்த பதிவில் திரு. சந்திரசேகரன் அவர்களின் வாழ்க்கையையும், பட்ட கஷ்டங்களையும், அடைந்த வெற்றிகளையும், நிறைய பாடங்களையும் கற்றுக்கொண்டேன்..

  கூடவே திரு.சுந்தர் அண்ணா அவர்களின் வெற்றியையும், முயற்சியையும், தலைவரின் ரசிகர்கள் நல்ல முறையில் வெற்றியடைய செய்யும் நுணுக்கங்களையும், ரசிகர்கள் தலைவரை மட்டுமல்லாது தங்களையும் ஒரு மனிதனாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் அன்பான எண்ணத்தையும் அறிந்து கொண்டேன்..

  நானும் சாதிப்பேன்..

  முயற்சி ஆரம்பம்..

  நன்றி.

  உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.. உங்களையும் வேறு வலைதள பிரமுகர்கள் பேட்டி காணக்கூடும்..

  வணக்கம்.. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
 • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
 • Lingual Support by India Fascinates