You Are Here: Home » Featured, Happenings » இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் - இணைத்து வைத்த நூல்!

சில நாட்களுக்கு முன்பு நம் நண்பர் ராஜேஷ் கண்ணன் என்பவர் நமக்கு ஒரு நூலை கூரியர் அனுப்பியிருந்தார். அதில் இணைக்கப்பட்ட கடிதத்தில், “சுந்தர், உங்களுக்கு என் அன்புப் பரிசு இது. இந்நூலில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. பார்த்துவிட்டு நம் தளத்தில் பகிர்ந்து கொள்ளவும்!” என்று எழுதியிருந்தார்.

பார்சலை மிகவும் ஆவலாக பிரித்து பார்த்ததில், ஹார்ட்-பைண்ட் செய்யப்பட்ட நூல் ஒன்று இருந்தது. சென்னையின் பாரம்பரியமிக்க கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா, கண் மருத்துவத்திலும் சமூக சேவையிலும் கடந்து வந்த பாதையை போற்றும் விதமாக புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நூலைத் தான் நண்பர் அனுப்பியிருந்தார்.

(Double Click the Image to ZOOM & READ the text)

நூலை ஒரு அலசு அலசியதில், சூப்பர் ஸ்டார் திறந்து வைத்த இம்மருத்துவமனையின் கண் வங்கி பிரிவு ஒன்றைப்  பற்றிய செய்தியும் புகைப்படமும் இருந்ததை காண முடிந்தது. மேலும், இம்மருத்துவமனைக்காக சூப்பர் ஸ்டார் நடிப்பில் திரு.எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கண் தானம் பற்றிய டாக்குமெண்டரி உருவான விதம் பற்றிய செய்தியும் இடம்பெற்றிருந்தது.

இது பற்றி தான் நண்பர் கூறுகிறார் என்று நினைத்தேன். “நம்ம கிட்டயேவா… கண்டு பிடிச்சிட்டோம்ல!” என்று எனக்கு நானே தட்டிக்கொடுத்துக்கொண்டு நண்பரை தொடர்பு கொண்டு, நான் கண்டுபிடித்த விஷயத்தை பற்றி கூறி, “சரி தானே?” என்றேன். “அது சரி தான். ஆனா புக்கோட அட்டையை கவனிச்சீங்களா?” என்றார்.

“பார்த்தேனே… அதுல என்ன இப்போ…?”

“அதுல தலைவர் எழுதிய லெட்டர் வந்திருக்கு பார்த்தீங்களா?”

அப்போது தான் எனக்கு உரைத்தது. நான் அதை கவனிக்க தவறியது.

இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடியலைவது தானே மனித சுபாவம். அவசர அவசரமாக புக்கை பார்த்தால், அருமையான ஆங்கிலத்தில் சூப்பர் ஸ்டார் இந்நூலை பற்றி கூறிய வரிகள் பின்னட்டையில் இடம்பெற்றிருந்தன. இதில் என்ன சிறப்பு என்றால்…. இந்நூலுக்கு சான்றளித்த வேறு இரு பிரபலங்களின் கடிதங்களும் பின் அட்டையில் இடம்பெற்றிருந்தன. அவர்கள் : இன்போசிஸ் குழுமத் தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் டாக்டர். டாட்சுவோ ஹிரோஸ், (ஹார்வார்ட் மருத்துவ பல்கலைக்கழக கண் மருத்துவ பேராசிரியர் இவர்!).

இரு பெரும் சிகரங்களுக்கிடையே நமது சூப்பர் ஸ்டாரின் மேற்கோள் இடம் பெற்றிருப்பது உண்மையில் - அதுவும் இது போன்ற ஒரு சிறந்த புத்தகத்தில் - நமக்கு பெருமை தான்.

தலைவர் பற்றி இதில் கூறியிருப்பதை கவனியுங்கள் : Film, Media & Cultural Icon Rajinikanth. (டிகர், தலைவர் என்பதை தாண்டி சூப்பர் ஸ்டார் எங்கேயோ போயிட்டார்!!!)

இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பத்ரிநாத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கு இம்மருத்துவமனை சார்பாக சில மாதங்களுக்கு முன்பு சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டதும், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

திரு.வி.வி.ரங்கநாதன், திரு.ஜார்ஜ் சகாரியா, திரு.மீரா பிரசாத் ஆகியோர் எழுதியுள்ள இந்த நூல் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மொத்தம் 350 பக்கங்களை கொண்டுள்ளது.

தலை சிறந்த சிந்தனையாளர்களான திரு.கோபால கிருஷ்ண காந்தி, திரு.ஏ.எம்.நாயக், திரு.தீபக் பரேக், திரு.என்.முரளி, திருமதி.மல்லிகா ஸ்ரீனிவாசன், டாக்டர் பி.சி.ரெட்டி, திரு.ராகுல் பஜாஜ், திரு.ராகேஷ் பாரதி மிட்டல் ஆகியோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ளார்.

இந்நூலின் விலை : ரூ.1000/- (இந்நூலின் விற்பனையில் கிடைக்கும் லாபம் முழுவதும் ஏழைகளின் கண் மருத்துவத்திர்க்கே செலவிடப்படும்!)

இந்நூலை வாங்க விரும்புபவர்கள், கீழ்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்.

http://www.sankaranethralaya.org/book-on-sankaranethralaya.html

நிகழ்ச்சிகளில் மற்றும் திருமண வைபவங்களில் பரிசளிக்க ஏற்றது இந்நூல். தரமான நூலை படிக்க விரும்புபவர்களுக்கு பொக்கிஷம் இந்த நூல்.

சூப்பர் ஸ்டார், போலியோ விழிப்புணர்வு பற்றிய டாக்குமெண்டரியில் நடித்தது நினைவிருக்கலாம். கண் தானம் பற்றிய டாக்குமெண்டரி இதோ. (உங்களில் சிலர் இந்த வீடியோவை ஏற்கனவே பார்த்திருக்ககூடும். பார்க்காதவர்கள் விழிப்புணர்வு பெற இது உதவக்கூடும்!).

கண் தானம் பற்றிய டாக்குமெண்டரியில் சூப்பர் ஸ்டார் ரஜினி - வீடியோ

(குறிப்பு : சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது துணைவியார் லதா ரஜினியும் சி.யூ.ஷா கண் மருத்துவமனையில் தங்கள் கண்களை தானம் செய்து எழுதி கொடுத்துள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான ரசிகர்களும் கண் தானம் குறித்த படிவத்த்தில் கையெழுத்திட்டனர்.)

[END]

12 Responses to “இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் - இணைத்து வைத்த நூல்!”

  1. ஈ. ரா ஈ. ரா says:

    ஜி,

    இன்றைக்கு பல மீடியாக்களும் தொலைக்காட்சிகளும் உள்ள நிலையில் இந்த விளம்பரத்தை (தற்போதைய தொடர்பு எண்களை கொடுத்து ) எல்லா இடங்களிலும் வெளியிட்டால் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

    நீங்கள் முயற்சி செய்தால் இது நடைபெற வாய்ப்புள்ளது.

    அன்புடன்

    ஈ. ரா

  2. s.vasanthan s.vasanthan says:

    தலைவர் கண்தானம் டக்குமன்றியில் நடித்தது தெரியும் ,ஆன பார்க்கவில்லை ,இன்று சுந்தர் தயவில் பார்த்து மிகவும் சந்தோசம் அடைந்தேன் ..நன்றி நன்றி ……..

    ———————————————————-
    //இன்று சுந்தர் தயவில் பார்த்து மிகவும் சந்தோசம் அடைந்தேன்//
    அடடா… நமக்கும் உங்களை மாதிரி ஒரு நண்பர் REFER பண்ணியதுதாங்க இந்த வீடியோ. அதை நான் உங்ககிட்டே ஷேர் பண்ணிகிட்டேன். அவ்வளவு தான்.
    - சுந்தர்

  3. amar amar says:

    http://www.historyindia.com/TGI/know-more/51

  4. amar amar says:

    The Greatest இந்தியனே vote for ரஜினி :
    http://www.historyindia.com/TGI/know-more/51

  5. murugan murugan says:

    மிக்க நன்றி சுந்தர் ஜி !!!

    முதன் முறையாக இந்த வீடியோ வை காணும் வாய்ப்பு !!!

  6. rajinivenu rajinivenu says:

    http://www.historyindia.com/TGI/profile?title=ர
    ப்ளீஸ் vote போர் our thalaivar

  7. winston winston says:

    ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. http://www.historyindia.com/TGI/ ..

    இந்த இணையதளத்துக்கு சென்று நம் தலைவருக்கு வாக்கு அளியுங்கள்..

    நம் படையை உலகுக்கு காட்டுங்கள்…!!.

    சுந்தர் சார், ப்ளீஸ் write an article and spread this news among our thalaivar fans, and ask them to vote

  8. Karthik Karthik says:

    Thanks for sharing this rare video sundarji

  9. Maravarman Maravarman says:

    Vote for our thalaivar in http://www.historyindia.com/TGI

  10. BaluMahendran BaluMahendran says:

    superstar ஐ பற்றி தெரிந்தது கை அளவு…தெரியாதது கடல் அளவு என்று இந்த வீடியோ வை பார்த்த பிறகு நான் அறிந்து கொண்டேன்.TFS Sundar gee.

  11. ananth ananth says:

    Super video. Very clear speech by Thalaivar. Watching it for the first time. Thanks. Would like to watch polio documentry as well. Already, i am mentally prepared for donating eyes.

  12. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Nice update Sundar. Very happy to rewind Thalaivar to see in a documentary film after a long span of 25 years. Great work and thanks a million for the update.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates