You Are Here: Home » Featured, Happenings » நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள “சிறந்த இந்தியர்” கருத்துக் கணிப்பு - சூப்பர் ஸ்டாருக்கு வாக்களியுங்கள்!

சி.என்.என்.-ஐ.பி.என். & ஹிஸ்டரி TV 18 தொலைக்காட்சிகள் இணைந்து “சிறந்த இந்தியர் யார்?” என்பது குறித்து கருத் கணிப்பு நடத்துகிறது. இது தொடர்பாக 50 வேட்பாளர்களின் பெயர்களை இவை அறிவித்துள்ளன. இந்தியாவில் பல்வேறு துறையில் தலை சிறந்து விளங்கும் பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதில் கலந்துகொண்டு தங்கள் வாக்குகளை செலுத்த விரும்புபவர்கள் www.thegreatestindian.in என்ற முகவரிக்கு சென்று தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.

நேருவிலிருந்து லதா மங்கேஷ்கர் வரை, விக்ரம் சாராபாயிலிருந்து, புதுடெல்லி மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் ஸ்ரீதரன் வரையில் இந்த பட்டியலில் பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 15 பேர் பாரத் ரத்னா விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  13 பேர் சுதந்திரத்துக்காக போராடியவர்கள். மேலும் 6 பேர் பெண்கள். இவர்களில் பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ்.சுவாமிநாதன், அடல் பிஹாரி வாஜ்பேயி ஆகியோர் மிகவும் மூத்தவர்கள். சச்சின் டெண்டுல்கர் மிகவும் இளையவர்.

BBC யில் ஒளிபரப்பான “சிறந்த இங்கிலாந்து குடிமகன்” என்ற கருத்துக்கணிப்பு, அந்நாட்டில் ஏன் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்த, அதிலிருந்து உருவானது தான் இந்த “சிறந்த்த இந்தியர்” குறித்த கருத்துக் கணிப்பு.

இந்த கருத்துக் கணிப்பில் சூப்பர் ஸ்டாருக்கு வாக்களிப்பவர்கள் 08082891024 என்ற எண்ணுக்கு தங்கள் மொபைளிருந்தோ அல்லது லேன்ட்லைனில் இருந்தோ மிஸ்ட் கால் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது www.thegreatestindian.in என்ற முகவரிக்கு சென்று தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.

இந்த கருத்துக் கணிப்பில் சூப்பர் ஸ்டாருக்கு வாக்களிப்பவர்கள் 08082891024 என்ற எண்ணுக்கு தங்கள் மொபைலிருந்தோ அல்லது லேன்ட்லைனில் இருந்தோ மிஸ்ட் கால் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது www.thegreatestindian.in என்ற முகவரிக்கு சென்று தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.

சூப்பர் ஸ்டார் மட்டுமே…

இந்த 50 பேர் வேட்பாளர் பட்டியலில் மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகிய தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் மட்டுமே.

இந்த வாக்கெடுப்பு முழுக்க, நாட்டின் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைசிறந்த நடுவர் குழுவால் (28 பேர்) கண்காணிக்கப்படும்.

நடுவர் குழு உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் : தேசிய அடையாள அட்டை திட்டத்தின் சேர்மன் நந்தன் நீல்கேணி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் சேகர் குப்தா, மூன்று முறை பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் பெரைரா, முன்னணி வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குப்தா, எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், முன்னணி திரைப்பட இயக்குனர் ராஜு ஹிரானி, நடிகர்-எழுத்தாளர் கிரீஸ் கர்னாட், அரசியல் ஆய்வாளர் - விஞ்ஞானி யோகேந்திர யாதவ், பிரபல நீதிபதி சோலி சோராப்ஜி, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, தேசிய விருதை வென்ற நடிகை ஷபனா ஆஸ்மி, பிரபல நடுவர் ஹரீஷ் சால்வே ஆகியோர் அடங்குவர்.

இந்த மொத்த வாக்கெடுப்பும் அதன் முறைகளும், மிகவும் நுணுக்கமானதும், சிறப்பானதுமாகும். இவற்றை தணிக்கை செய்யப்ப்போவது கிரான்ட் தார்ன்டன் நிறுவனமாகும். தேசிய அளவிலான வாக்கெடுப்பை தவிர, நடுவர்களின் முடிவும் கவனத்தில் கொள்ளப்படும். இதை தவிர, பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான நீல்சன் நிறுவனம் தனியாக ஒரு வாக்கெடுப்பு நடத்தும். அதன் முடிவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவற்றின் முடிவில் - அதாவது முதல் சுற்றில் - 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களிலிருந்து ஒருவர் சிறந்த இந்தியராக தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் 10 பேர் குறித்த விபரம் ஜூலை 1, அன்று அறிவிக்கப்படும். தொடர்ந்து இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் “சிறந்த இந்தியர்” யார் என்பது குறித்த தீர்ப்பு நமது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்படும்.

ரஜினிக்கு இருப்பதை போன்று ரசிகர் கூட்டம் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது!

வாக்கெடுப்பை நடத்தும் CNN -IBN & HistoryTV 18 குழு இவரைப் பற்றிய முன்னுரையில் கூறியிருப்பதாவது :

தமிழ் திரையுலகின் அடையாளம் ரஜினிகாந்த் அல்லது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களால் அன்புடன் ‘ரஜினி’ என்று அழைக்கப்படும் இவர், இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பதத்திற்கு சரியான உதாரணம் ஆவார். இவருடைய மூதாதையர்கள் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவிற்கு வந்து குடியேறியவர்கள் ஆவர். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக 70 களின் துவக்கத்தில் வாழ்க்கையை துவங்கினார் இவர். இவரது தந்தை கர்நாடக மாநில காவல் துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர்.

இவருக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு, இவருக்கு தனது திரைப்படத்தில் வாய்ப்பளித்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். அதற்கு பிறகு நடந்தவை அனைத்தும் வரலாறு. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கு நடிகர் ரஜினி ஆவார். மற்றவர்களுக்கு இவருக்கு இருக்கும் செல்வாக்கு விளங்கிட முடியாத ஒன்றாகும். இவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் பேறு பெற்றவர். (Man with Midas Touch). இவருக்கு இருப்பதை போன்ற ரசிகர் வெள்ளம் இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லை எனலாம்.

——————————————————-

For more info… Please visit http://www.bestmediainfo.com/2012/06/history-tv18-cnn-ibn-kicks-off-nationwide-poll-for-the-greatest-indian/

——————————————————-

Information courtesy : Rajagopal (Infosys), Prakash Srinivasan

40 Responses to “நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள “சிறந்த இந்தியர்” கருத்துக் கணிப்பு - சூப்பர் ஸ்டாருக்கு வாக்களியுங்கள்!”

 1. Anand Vasi Anand Vasi says:

  தலைவா, உங்களுக்கு தான் என் உயிர். After one vote, Wont I? Already voted once. Friends, Please Vote from different Mobile Numbers since we can vote many times frm mobiles. THALAIVA, U r The Greatest Indian.

 2. Ananth Ananth says:

  ரொம்ப பெருமையாக இருக்கு :) I tried calling from overseas but couldn't get this number. Don't know if it should be called only from India.

  ————————————-
  No… it's not like that. May be because of many trying the line same time. Me too didn't get the line. So, i voted using Facebook a/c.
  - Sundar

 3. **Chitti** **Chitti** says:

  I finished voting for our beloved leader…

 4. I love super star…I am Die hard fan of super Star…Great Indianaha super star varuvathatku En Vaaltthukkal…GREAT…GREAT…GREAT…GREAT…GREAT…GREAT…

  ೋ ❤❤❤ ೋ

 5. clemence mohanraj clemence mohanraj says:

  நன்றி சுந்தர் அவர்ககளுக்கு

 6. Anonymous says:

  என் கடமையை செய்து விட்டேன் :) தலைவர் த்ரிரும்பவும் தமிழ்நாடிற்கு பெருமை தேடி தர எல்லாம் வல்ல அந்த இறைவன் துணை புரிவானாக!!!

 7. rajinirasigan