You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 70: அவுட்லுக் இதழில் சூப்பர் ஸ்டார் ரஜினி & ஃபிரெஞ்ச் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ‘கோச்சடையான்’ வெளியீடு?

1) அவுட்லூக் சினிமா நூற்றாண்டு சிறப்பிதழில் சூப்பர் ஸ்டாரின் அட்டைப் படம்!

பிரபல ஆங்கில வார இதழான ‘அவுட்லுக்’, இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில், சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பல சினிமா விமர்சகர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இதழில், பாலிவுட் கடந்து வந்த பாதை, சூப்பர் ஹிட் மற்றும் பிளாக் பஸ்டர்களின் பட்டியல், நட்சத்திரங்களின் இமேஜ், இப்படி பல விஷயங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளது.

திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்கவேண்டிய பொக்கிஷம் இந்த நூல். அதே போன்று, இந்திய சினிமாவைப் பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தவறாது படிக்கவேண்டிய நூல்.

சூப்பர் ஸ்டார் பற்றி உள்ளே தனியாக கட்டுரை எதுவும் இல்லையென்றாலும், ஒரு சில கட்டுரைகளில் அவரது பாக்ஸ் ஆஃபீஸ் ஆளுமை பற்றி கூறப்பட்டுள்ளது.

ஆமீர், ஷாரூக், சல்மான் கான், அமிதாப் என எத்தனையோ பேர் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி இதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பினும் சிறப்பு. அதுவும் Global Hero Rajinikanth என்ற அடைமொழியுடன்.

(தலைவா… யார் என்ன வாக்கெடுப்பு நடத்தினாலும் எங்களைப் பொறுத்தவரை நீங்க The Greatest Indian தான். அந்த விருதை உங்களுக்கு எப்போவோ கொடுத்தாச்சு!)

2) கே.வி.ஆனந்த் - சூப்பர் ஸ்டார் கூட்டணி குறித்து மேலும் ஒரு செய்தி!

‘கோச்சடையான்’ முடிவடைந்த உடன் ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ராணா’ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சூப்பர் ஸ்டாரும் கே.வி.ஆனந்தும் அடுத்தப் படத்திற்காக இணைகிறார்கள் என்று செய்தி வெளியானது.

இது தொடர்பாக கே.வி.ஆனந்தும் ரஜினியும் இரு முறை பேசி இருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப்பம். இப்போதைக்கும் இவ்விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படி ஆனந்திடம் ரஜினி கேட்டுக்கொண்டாராம்.

கே.வி.ஆனந்த் - எழுத்தாளர்கள் சுரேஷ், பாலா  (சுபா) மூவரும் இணைந்து ரஜினிக்கு ஏற்றவாறு ஒரு பக்கா ஆக்க்ஷன் கதையை தயார் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே ரஜினி - கே.வி.ஆனந்த் கூட்டணித் தகவலை கேள்விப்பட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தினை எப்படியாவது தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில் காய் நகர்ந்தி வருகிறார்களாம். கே.வி.ஆனந்த் தற்போது இயக்கி வரும் ‘மாற்றான்’ படத்தினை இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது போலவே வரிசையாக 6 படங்களை தயாரிக்க இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், கே.வி.ஆனந்தை தங்களது நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தருமாறு கேட்டு வருகிறாராம். அவர் ஒப்புக்கொண்டால் ரஜினி - கே.வி.ஆனந்த் இணையும் படத்தை எத்தனை பெரிய பட்ஜெட் என்றாலும் தயாரிக்க ரேடியம்.

ஆனால் சூப்பர் ஸ்டாரின் விருப்பமோ, மேற்படி படத்தை பாரம்பரியமிக்க நிறுவனங்களான ஏ.வி.எம்.மோ அல்லது சத்யா மூவீஸோ தயாரிக்கட்டும் என்பது தானாம்.

(யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதுன்னு தெரியலியே சொக்கா…)

3) ரஜினியுடன் நடித்தால் போதும் - ஏங்கித் தவிக்கும் அசின்!

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வந்த அசின், தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

இங்கிருந்து முன்பு பாலிவுட் சென்ற ஹீரோயின்கள் எவரும் பெரிதாக ஷைன் ஆகாத நிலையில் (ஸ்ரீதேவி தவிர்த்து) அசின் ஓரளவு கால் ஊன்றிவிட்டார் என்றே சொல்லலாம்.

இவரது நடிப்பில் வெளியான ‘ரெடி’, ‘ஹவுஸ்புல்’ ஆகிய படங்கள் ஓரளவு வசூலை வஞ்சமின்றி கொட்டின என்றே சொல்லலாம்.

இவரைப் பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் பற்றி கேட்டபோது, “மும்பையில் மீடியாக்கள் நிறைய வந்துவிட்டன. ஆகையால் போட்டி போட்டுக்கொண்டு இப்படி எழுதுகிறார்கள். நட்சத்திரங்களும் இதற்கு பழகிக் கொண்டு விட்டனர். எவரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை எனும்போது நான் மட்டும் கவலைப்படுவேனா என்ன?” என்று திருப்பி கேட்கிறார்.

தமிழை பொறுத்தவரை தமது ஒரே இலக்கு ரஜினியுடன் நடிப்பது தான் என்றும் கூறுகிறார். “தமிழ்ல எல்லா பெரிய ஹீரோக்கள் கூடவும் நடிச்சாச்சு. அடுத்து ரஜினி சார் கூட ஒரே ஒரு படத்துல நடிச்சா போதும்!” என்று கூறுகிறார் அசின்.

(அந்த பெரிய ஹீரோக்கள் யார் யாருன்னு சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்கிறோம்ங்க…!)

4) “கோச்சடையான் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” - தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்

கோச்சடையானின் படப்பிடிப்பு முழுக்கவும் நிறைவடைந்து, தற்போது கிராபிக்ஸ், மற்றும் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது.

“தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் - லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாங் காங் - இருக்கும் பிரபல ஸ்டுடியோக்களில் படத்தின் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றது. படத்தை எப்போது வெளியிடுவது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. இந்த வருடத்தின் முடிவிற்குள் படத்தை வெளியிட முயற்சித்து வருகிறோம். ஆனால் இத்தனை தேதிக்குள் படத்தை முடித்துவிடவேண்டும் என்று எந்த DEADLINE ம் குறிக்கவில்லை.” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.முரளி மனோகர்.

படம் சர்வதேச சந்தையில் இப்போதே பெரிய எதிர்பார்ப்புக்களை தூண்டிவிட்டுள்ளது. படத்தை வாங்கி உலக அளவில் வெளியிட பல முன்னணி விநியோகஸ்தர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

“படத்தை ஜப்பானில் வெளியிட வியாபார சம்பந்தமாக சிலர் எங்களிடம் பேசியிருக்கிறார்கள். அதே போல, பிரான்ஸ், மற்றும் ஸ்பெயினிலும் அந்தந்த மொழிகளில் வெளியிட அப்பகுதியிலிருந்து சிலர் பேசியிருக்கிறார்கள்.” என்று கூறுகிறார் முரளி மனோகர்.

படத்தின் பாடல்காட்சிகள் முழுக்க முடிந்துவிட்டன. முன்னணி நடன இயக்குனர்களான சரோஜ் கான், ரேகா சின்னி பிரகாஷ், ராஜு சுந்தரம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். படம் நிச்சயம் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கவேண்டும் என்று மட்டும் உறுதி பூண்டுள்ளோம் என்று கூறுகிறார் முரளி மனோகர் - நம்பிக்கையுடன்.

(ஜப்பான்ல என்ன பேர்? PENANCING MAHARAJA தானே?)

5) கலைஞர் பிறந்த நாள் - வாழ்த்து சொன்ன ரஜினி!

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சமீபத்தில் தமது 89 வது பிறந்த நாளை கொண்டாடினார். கட்சித் தொண்டர்களும் குடும்ப உறுப்பினர்களும் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் இதன் பொருட்டு அவர் இந்த வயதிலும் தேனியின் சுறுசுறுப்பைப் போல கலந்துகொண்டார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது இந்திரனே சந்திரனே என்று துதிபாடிய எவரும் எட்டிக் கூட பார்க்காத நிலையில், பெங்களூரில் இருந்த சூப்பர் ஸ்டார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலைஞர் அவர்களிடம் தமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பதிலுக்கு கருணாநிதி அவர்கள் நன்றி தெரிவித்தார். பேச்சின்போது இருவரும் பரஸ்பரம் மற்றவர் உடல் நலம் பற்றி விசாரித்ததாக தெரிகிறது.

(வாழ்த்துக்கள் கலைஞர் அவர்களே!)

6) இசைஞானி இளையராஜா நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிப் படப்பாடல் ஏற்படுத்திய ஆரவாரம்!

குமுதம் குழுமம் சார்பாக இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழாவும், அவரது இரு நூல்கள் வெளியீட்டுவிழாவும் கடந்த திங்களன்று மாலை சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த விழாவில், சூப்பர் ஸ்டாரும் கலந்துகொள்ளக்கூடும் என்று நாம் நமது முந்தைய Tidbits தொகுப்பில் தெரிவித்திருந்தோம். ஆகையால் மேற்படி நிகழ்ச்சிக்கு நமது நண்பர்களுடன் மிகவும் ஆர்வமாக சென்றிருந்தோம். ஆனால், எங்கள் எதிர்ப்பார்ப்புக்களை பொய்யாக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் வரவில்லை. அன்று அவர் பெங்களூரில் இருந்ததாக கூறப்படுகிறது.

[நமது செய்தி பொய்யானது குறித்து எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சில செய்திகள் உண்மையாவது நமக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று என்பது நீங்கள் அறியாததல்ல!]

நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு, சூப்பர் ஸ்டார் வருவது குறித்து ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவிய போதும், அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை… லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசைஞானி இளையராஜா ஸ்பெஷல் பாடல்களையாவது கேட்கலாம், மேலும் இசைஞானியையும் நேரடியாக தரிசிக்கலாம் என்ற ஒரு மனநிலையுடன் தான் சென்றிருந்தேன். நம்முடன் வந்திருந்த நண்பர்களும் அத்தகைய ஒரு மனநிலையிலேயே இருந்தனர் என்பது ஆறுதல். ஒரு கட்டத்திற்கு மேல் சூப்பர் ஸ்டார் வரமாட்டார் என்று உறுதியாக தெரிந்தவுடன், நிகழ்ச்சியை மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

இசைஞானி அரங்கத்துக்குள் வந்தபோது எழுந்த ஆரவாரம் இருக்கே… வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. வாழ்க இசைஞானி! வளர்க அவரது புகழ்!!

சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் இசைக்கப்பட்டபோது, குறிப்பாக ‘ஜானி’ படத்தின் “ஆசையை காத்துல தூது விட்டு” பாடலின்போது அரங்கமே எங்களின் உற்சாக கூக்குரல்களால் அதிர்ந்தது. சூப்பர் ஸ்டாரின் பாடல் இசைக்கப்பட்டபோதேல்லாம் அரங்கமே மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு நிலைக்கு வந்தது என்றால் மிகையாகாது.

நிகழ்ச்சியில், கமல் அவர்களின் அட்டகாசமான உரை மற்றும் இளையராஜாவிடம் அவர் காட்டிய அன்னியோன்யத்தை பார்த்தபோது, “அடடா… சூப்பர் ஸ்டார் இல்லையே… அவர் இருந்திருந்தால் இதை விட அட்டகாசமாக பேசியிருப்பாரே…!” என்று தான் நாங்கள் பெருமூச்சுவிட்டோம்.

(சித்தர்கள் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், மானசீகமாக பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?)

[END]

14 Responses to “Tidbits # 70: அவுட்லுக் இதழில் சூப்பர் ஸ்டார் ரஜினி & ஃபிரெஞ்ச் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ‘கோச்சடையான்’ வெளியீடு?”

  1. தலைவா… யார் என்ன

    வாக்கெடுப்பு நடத்தினாலும்

    எங்களைப்

    பொறுத்தவரை நீங்க The

    Greatest Indian தான். அந்த

    விருதை உங்களுக்கு எப்போவோ கொடுத்தாச்சு…

  2. venkat venkat says:

    சுந்தர்,.

    your Politcal statment is unwaranted in this website. The same with other website. I spoke to you about one week back. We need to discuss only about thalivar.

  3. dr suneel dr suneel says:

    அவுட்லுக் அட்டைபடம் அருமை..

  4. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியில் இறைஞானி ரஜினிகாந்த் இல்லாதது ஒரு குறைதான். ஆனாலும் ராஜாவுடன் இணைந்து மிக அதிக அளவில் பணியாற்றிய கலைஞானி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது மிகவும் பொருத்தமானது. விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று நினைக்கிறேன்.

  5. Leo Leo says:

    "தலைவா… யார் என்ன வாக்கெடுப்பு நடத்தினாலும் எங்களைப் பொறுத்தவரை நீங்க The Greatest Indian தான். அந்த விருதை உங்களுக்கு எப்போவோ கொடுத்தாச்சு"

    >>>> அருமையான வரிகள்.

    "சித்தர்கள் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், மானசீகமாக பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?"

    >>>> உணர்வுபூர்வமான வார்த்தைகள் அண்ணா.

  6. Sankaranarayanan Sankaranarayanan says:

    நிறைய நிறைவான செய்திகளை தந்த எங்கள் சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி. ராஜா சார் ப்ரோக்ராம்மிர்க்கு தலைவர் வந்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

    சித்தர்கள் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், மானசீகமாக பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?

    உண்மையாக பேசிகொள்வார்கள்……!!!!!!

  7. kabilan kabilan says:

    சுந்தர் அண்ணா,தலைவர் -k .v .ஆனந்த் கூட்டணி எந்த அளவில் உறுதி ஆகயுள்ளது அண்ணா ?

    ———————————————-
    90%
    - Sundar

  8. Rajan Rajan says:

    சுந்தர் நீங்க எப்பவுமே பாஸ்ட் தான் ……

    நேற்று தான் அவுட்லூக் பார்த்து உடனே வாங்கி விட்டு உணகளுக்கு ஸ்கேன் செய்து அனுப்பலாம் என்று இருந்தேன்….

    //சித்தர்கள் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், மானசீகமாக பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?//

    கண்டிப்பாக இவர்கள் இரண்டு பெரும் சித்தர்களுக்கெல்லாம் சித்தர்கள் ஆயிற்றே.

    ராஜன்.

  9. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Global SUPERSTAR outlook still super. Thalaivar greatest human of the world

  10. chithamparam chithamparam says:

    கோச்சடையான Trailer or Still வெளியிடுவது பற்றிய ஏதாவது செய்திகள் உண்டா?

  11. Shoaib Shoaib says:

    It is a real shame that Global Superstar Rajinikanth's global fans have no clue as to what has been written above as it is not in English or at least translated in English.

  12. Pandian Pandian says:

    Dear Friends,

    It is very easy to vote through phone. We can vote using our Mobile No. or Landline No. One vote for one phone number. No need to talk, just dial 08082891024. Our vote will be registered to our Superstar. Every fan of Superstar can vote through this method who have a mobile or landline number. Please take this seriously because it is a prestigious one.

    Regards,
    Pandian

    Dear Sundar, can you help to spread this message to other fan clubs who are not using Internet. Just imagine we can have atleast 1 million fans vote for our beloved Superstar.

    ——————————————-
    I have already SMSed the info to many. Still doing. thanks.
    - Sundar

  13. endhiraa endhiraa says:

    "(சித்தர்கள் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், மானசீகமாக பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?)" —

    கரெக்டா சொன்னீங்க சுந்தர் ஜி ! (ஆனா அசின் பக்கம் தான் கொஞ்சம் ஓவர் சப்போர்ட் மாதிரி தெரியுது ??? !!!)

  14. பாவலன் பாவலன் says:

    //90% - சுந்தர்///

    நண்பர் சுந்தர் அவர்களே.. ரஜினி படம் எடுப்பது
    என்றால் பிரம்மாணடமான pressue இப்போது உண்டு.
    கே.வி. ஆனந்த் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை
    பூர்த்தி செய்வாரா? உங்கள் கருத்து என்ன? நன்றி.

    -பாவலன்

    ————————————————-
    K V Anand will fit the bill 200%.
    - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
  • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
  • Lingual Support by India Fascinates