









You Are Here: Home » Featured, Superstar Movie News » ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’! ஜப்பானியர்கள் கொண்டாட்டம்!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ‘எந்திரன்’ (The Robot) திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனை படைத்ததோடு மட்டோம்ல்லாமல், இதுவரை வெளியான திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து படத்தை வெளியிட்டவர்களுக்கு கௌரவத்தை தேடித் தந்தது. சிறந்த கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது உட்பட படம் பல்வேறு விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் ‘ரோபோ’ கடந்த மாதம் ரிலீசானது. முதலில் ரிலீஸ் செய்யப்பட்டபோது, ஜப்பான் வழக்கப்படி படம் இரண்டு மணி நேரமாக ட்ரிம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சில காட்சிகளும், பாடல்களும் நீக்கப்பட்டன.
ஆனால், படத்திற்கு கிடைத்துள்ள ஏகபோக வரவேற்பையடுத்து, தற்போது படம் முழு நேரத்திற்கும் (அதாவது 3 மணி நேரத்துக்கு) மீண்டும் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஜப்பானில் “ரோபோ” எத்துனை தியேட்டர்களில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் ஜப்பானில் ஒரு படத்தின் அதிக பட்ச ரிலீஸ் சென்டர்களில் “ரோபோ” ஓடுவதாக கருதலாம். அந்தளவு படம் அங்கு வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதில் விசேஷம் என்னவென்றால் நான்கு வாரங்கள் கழித்தும் படம் சக்கை போடு போட்டு வருகிறது. அதுவும் நேரடி ஜப்பான் படங்களுடன் போட்டியிட்டு. படத்தில் வரும் ‘இரும்பிலே இதயம்’ பாடல் ஜப்பானியர்களின் தேசிய கீதம் ஆகிவிட்டது என்றால் மிகையாகாது.
ஜப்பான் நாளிதழ்கள் எங்கும் ரோபோ புராணம் தான். இதன் மூலம் ஏற்கனவே அங்கு புகழ் பெற்றிருந்த சூப்பர் ஸ்டார் இன்னும் பல மடங்கு மேலே சென்றுவிட்டார். தவிர உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு புதிய ரசிகர் வட்டம் உருவாகி இருக்கிறது.
நம் தமிழக (ஸாரி…ஸாரி… இந்திய ரசிகர்களுக்கு) சற்றும் சளைக்காமல் ரஜினி பேனர்கள், தொப்பிகள், ஐஸ்வர்யா ராய் உருவம் பொதித்த பனியன்கள் என்று ஜப்பானியர்கள் கலக்குவதை புகைப்படங்களில் பாருங்கள்.
நமக்கே பொறாமையா இருக்குல்ல… ‘கோச்சடையான்’ வரட்டும்…. கலக்கிடுவோம்ல…!
இந்த நிலையில், படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், இயக்குனர் ஷங்கருக்கும், ஹாலிவுட் தரத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
—————————————————————————————-
Translation
Superstar’s Endhiran becomes a rage in Japan
Sun Pictures produced, Shankar directed Superstar’s ‘Robot’ released in Japan - the motherland of Robots - a few weeks back. The film was initially screened as 2 hours trimmed version excluding some scenes and songs at TIFF (Tokyo International Film Festival) where it received rave reviews.
—————————————————————————————-
—————————————————————————————-
—————————————————————————————-
—————————————————————————————-
Robot Sensation @ Japan - Japan Television news - Video
—————————————————————————————-
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்!!
—————————————————————————————-
NEWS & PHOTOGRAPH COURTESY : PINKVILLA.COM - VAN ITY GIRL
[END]
Allways Thalaivar rocks
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்!!
Wow this is ultimate for all Thalaivar fans!!! Though This rage was already expected but still wen it happens its over the moon joy…superb thalaivaaaa Unna adichika aaley illa….Without going to Hollywood you r a hollywood star…AS sundar says"Kochadaiyaan varatum aparam paarthukalaam!!!
சும்மா ஜப்பான் அதிருதல.
Thanks na for exclusive news
சும்மா அதுருதில்ல.சுந்தர் சூப்பர் அப்டேட்.