You Are Here: Home » Featured, Happenings » ராம் சரண் தேஜா - உபாசனா திருமணம் : சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து! (புகைப்படங்கள் கிடைக்காது திணறிய முன்னணி தெலுங்கு இணைய தளங்கள்!!)

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் இயக்குனர் பிரதாப் ரெட்டியின் மகள் உபாசனாவுக்கும் இன்று ஐதராபாத்தில் திருமணம் நடந்தது.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர், நடிகர் அம்பரீஷ் தம்பதியினர், நடிகர் சூர்யா, ஸ்ரீதேவி, ஜூனியர் என்டிஆர், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது நண்பர் மோகன் பாபுவுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். வெளிர் சந்தன நிற சட்டையும், கிரே கலர் பேண்ட்டும் அணிந்திருந்த ரஜினி மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

திருமணத்தையொட்டி ஐதராபாத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுவாக இது போன்ற நட்சத்திர திருமணங்களை போட்டி போட்டுக்கொண்டு கவர் செய்து, முதலில் புகைப்படங்களை வெளியிட்டுவிடும் முன்னணி தெலுங்கு இணைய தளங்கள் கூட இம்முறை புகைப்படங்கள் கிடைக்காது திண்டாடின.

காரணம், பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களை கருத்தில் கொண்டு, ஒரு பிரபல புகைப்பட நிறுவனத்துக்கு மட்டும் திருமணத்தை கவர் செய்ய அனுமதித்திருந்தனர். ஊடகங்களுக்கு புகைப்படங்கள் மேற்படி புகைப்பட நிறுவனமான ROOSHAD.COM நிறுவனத்தால் தான் வழங்கப்பட்டது.

மேற்படி நிறுவனத்தினரை தவிர வேறு எவரும் புகைப்படம் எடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது. மீறி எடுத்தவர்களின் காமிராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் திருப்பித் தரப்பட்டன.

ஆகையால் மேற்படி திருமண புகைப்படங்களை காண உலகம் முழுவதும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். (நாமும் தான். ஹி..ஹி..!)

எனினும் வீடியோ காட்சிகள் முதலில் வெளியிடப்பட்டுவிட்டன என்பது தான் இதில் ஆறுதல். சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஆகியோரின் ரசிகர்களின் வலைத்தளங்களில் மேற்படி வீடியோக்களில் இருந்து ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுக்கப்பட்டு அவை புகைப்படங்களாக அப்டேட் செய்யப்பட்டன.

ணமக்களை நமது தளம் மற்றும் அதன் வாசகர்கள் சார்பாக பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

[END]

9 Responses to “ராம் சரண் தேஜா - உபாசனா திருமணம் : சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து! (புகைப்படங்கள் கிடைக்காது திணறிய முன்னணி தெலுங்கு இணைய தளங்கள்!!)”

 1. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Hi Sundar ! Absolutely brilliant and excelllent compilation with snaps. Thalaivar's stills are amazing, as usual and particcularly the last still

  folding both the hands (PANIVU ANNAN, PANIVU). - glittering. We can see the happiness in the face of Sumalatha, actress.

 2. karthik karthik says:

  தலைவர் சென்னையை விட்டு கோவையில் குடியேறுகிறார் என்ற செய்தி உண்மையானதா ??? திரு சுந்தர் அண்ணா…

  ———————————————-
  Will explain about that in Tidbits soon. Never get carried away by such sensational headlines on thalaivar. They are just business gimmicks those magazines.
  - Sundar

 3. Anonymous says:

  மாஸ் போடோஸ்!! மணமக்களுக்கு தலைவரின் ஆசிர்வாதமே கிடைத்து விட்டது பின்பு என்ன!! இனி கலக்கல் தான்

 4. நேத்தே நானும் வீடியோ பர்துட்டேன்ல

 5. Happy married life to the couples. Thalaivar thirumba meesai eduthutare..

 6. Murugan Murugan says:

  Kochadaiyaan

  Rana

  Sulthan the warrior

  ?? ?? ?? ?? ?? ??

 7. Praba Praba says:

  Guys please vote or give Missed call to 08082891024
  http://www.historyindia.com/TGI/leaderboard lets show our love by promoting our thalaivar ranking in top 5 greatest indians

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates