









You Are Here: Home » Featured, Happenings, Top Stories » Tidbits # 71: தலைவர் உட்கார்ந்த ‘CHAIR’டா இது & ரஜினி (கோவை) ஆனைகட்டியில் செட்டிலாகிறாரா…? உண்மை என்ன!!
1) கலைஞரை சந்தித்த ‘கோச்சடையான்’!
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சனிக்கிழமை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்றும் முன்னாள் முதல்வரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவே ரஜினிகாந்த் அங்கு சென்றார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ரஜினி அப்போது பெங்களூரில் இருந்தபடியால், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்துவிட்டபடியால் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கருணாநிதியை சந்தித்தாராம். அப்போது தளபதி முக.ஸ்டாலின், திருமதி.தயாளு அம்மையார் உடனிருந்தனர் (இந்த செய்தியும் புகைப்படமும் நமத்து டுவிட்டரில் - twitter.com/thalaivarfans - நேற்றே வெளியிடப்பட்டுவிட்டது!)
சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சென்னை திரும்பியதிலிருந்து கருணாநிதி அவர்களை நேரில் சந்திக்கவில்லை. தற்போது இந்த சந்திப்பின் மூலம் தமது உடல் நலம் பற்றி விசாரித்ததற்கு ரஜினி நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வெற்றியிலும் சரி… தோல்வியிலும் சரி… உடனிருக்கும் உற்ற தோழன்!
போனஸ் புகைப்படம் : இதே போல, 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற போது தேர்தலில் தி.மு.க. தோற்று கலைஞர் கட்சிப் பணிகளை கவனித்த போது சூப்பர் ஸ்டார் சந்தித்திருக்கிறார். இணைக்கப்பட்ட புகைப்படத்தை காண்க.
(தலைவரைப் பொறுத்தவரை மனிதர்களை தான் பார்ப்பாரே ஒழிய அவர்கள் பதவியை அல்ல! ஆண்டவர்கள் ஆள்பவர்கள் எல்லாரும் அவருக்கு முன்னால ஒன்னு தான்!!)
2) “ரஜினியும் நானும் நடித்தால் எங்கள் சம்பளம் போக பட்ஜெட்டுக்கு என்ன இருக்கும்?” - கமல் கேள்வி!
‘விஸ்வரூபம்’ படத்தை promote செய்வதில் பிஸியாக இருக்கும் கலைஞானி கமல் அவர்கள், சமீபத்தில் TIMES OF INDIA நாளிதழுக்கு விரிவான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
‘விஸ்வரூபம்’ படம், அது குறித்த எதிர்பார்ப்பு, தனது 40 ஆண்டு கால திரையுலக பயணம், மகள்கள் என இதில் கலந்து கட்டி அடித்துள்ளார்.
இவ்வளவு கேட்கும்போது அவரோட நண்பர் கம் போட்டியாளர் சூப்பர் ஸ்டாரைப் பற்றி கேட்காது இருக்க முடியுமா? என நினைத்து பேட்டியாளர் ரஜினி அவர்களை பற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு கமல் அளிதுதுள்ள பதில் :
கேள்வி : நீங்களும் ரஜினியும் இனைந்து நடிப்பீர்களா?
பதில் : ரஜினியும், நானும் சேர்ந்து நடித்தால் அந்த படத்துக்கு வர்த்தகம் வானமே எல்லையாக இருக்கும். ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர்களுக்கு பட்ஜெட்டுக்கு என்ன மிச்சம் இருக்கும்??
(ரெண்டு பேரும் கொஞ்சம் சம்பளத்தை விட்டுக்கொடுத்து எங்களுக்கு விருந்தை தரக்கூடாதா?)
3) ரஜினி கோவையில் செட்டிலாகிறாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினி, கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆஷ்ரம் அருகே பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டிவருவதாகவும், மன அமைதிக்காக அங்கு செட்டிலாகவிருப்பதாகவும் ‘குமுதம்’ வார இதழ் pugaippadangaludan செய்தி வெளியிட்டது.
நடந்தது என்ன ?
ஒன்னுமில்லேங்க. தலைவர் கட்டுற வீட்டு ஃபோட்டோஸ் ரெண்டு கிடைச்சிருக்கு. அதை வெச்சு சாமர்த்தியமா - “அமைதி, இரண்டு மகள்களுடன் பிரச்னை, நிம்மதி தேடி” - போன்ற வார்த்தைகளை வைத்து ‘குமுதம்’ ஒரு கவர் ஸ்டோரி ரெடி பண்ணிடுச்சு. ரஜினி ரசிகர்கள் பற்றி அவங்களுக்கு தெரியாதா? அவங்க எதிர்பார்த்த மாதிரியே ரசிகர்கள் உடனே கலவரமாயிட்டாங்க!
ரஜினி ஆனைக்கட்டி பங்களாவில் செட்டிலாகிறாரோ இல்லையோ… நம் ரசிகர்கள் மேற்படி செய்தி குறித்து தீவிரமாக பேசிப் பேசிப் அவரை அங்கு செட்டில் செய்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.
கோவை மாவட்டம் ஆனைகட்டியில் - சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஹர்ஷ வித்யா ஆஸ்ரமம் உள்ளது. அதன் அருகே தலைவர் வீடு கட்டி வருவது உண்மை தான். ஆனால், அது எங்கு செட்டிலாவதற்கு அல்ல. செல்வாக்கு பெற்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இடம் வாங்கி வீடு கட்டுவது வழக்கம். அது எதற்கு? அங்கு சென்று தங்கள் வாழ்நாளின் இறுதியை கழிப்பதற்க்கா? இல்லையே…! (ஆனைகட்டி மட்டுமில்லே… ரிஷிகேஷ்ல கூட தலைவர் ஒரு வீடு கட்டியிருக்கிறார் தெரியுமா?)
ஜஸ்ட் எப்போவாவது டைம் கிடைச்சா கொஞ்ச நாள் இந்த நகரத்து பரபரப்புக்களிருந்து விடுபட்டு குடும்பத்தோட அங்கே போய் ஸ்பென்ட் பண்றதுக்கு தானே? அது போலத் தான் இதுவும். இதுக்காக அவர் அங்கேயே மன அமைதி தேடி செட்டிலாகுறார் என்று சொல்வதெல்லாம் ஓவர்.
சரி.. இதுக்கு தலைவரோட பதில் என்ன?
1996 ஆம் ஆண்டு சென்னைப் பலகலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற தமிழக அரசு திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் சொன்னதையே பதிலாக தருகிறேன்.
“நான் இந்த இமயமலை அங்கே இங்கே வெச்சு போறதை வெச்சு, “ரஜினிக்கு வீட்டுல அமைதியில்லே. அதனால தான் இமயமலைக்கெல்லாம் போறாருன்னு சொல்றாங்க. அப்படியில்லேங்க. ஒருத்தனுக்கு வீட்டுல நிம்மதியில்லே… அமைதியில்லேன்னு சொன்னா… அவன் உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் அவனுக்கு நிம்மதி கிடைக்காது. நான் தேடிப் போறது நிம்மதியை இல்லே. தனிமையை தேடி. தனிமை எதுக்குன்னா… என்னை நான் புரிந்துகொள்வதற்கு. நான் யார் என்று தெரிந்துகொள்வதற்கு. அதற்கு இந்த பணம், பேர், புகழ் இதிலிருந்தெல்லாம் சில நாட்கள் விடுபட்டு தனியாக இருப்பது உதவும்!” இவாறு பேசினார் ரஜினி.
(“ஒருத்தனுக்கு வீட்டுல நிம்மதியில்லே சொன்னா… அவன் உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் அவனுக்கு நிம்மதி கிடைக்காது.” - தலைவா நீ ஒருதரம் சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!)
4) நான் ரஜினி ரசிகன் - சனத் ஜெய சூர்யா!
சூப்பர் ஸ்டாருக்கு திரைத் துறைக்கு அப்பால் பல்வேறு துறைகளில் வி.ஐ.பி. ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக கிரிக்கெட் துறையில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். இந்திய அணியின் கேப்டன் டோனி முதல் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி வரை ரஜினி ரசிகர்கள் தான். இந்நிலையில் இவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யா.
“நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன்!” என்று தெரிவித்துள்ளார் சனத் ஜெயசூர்யா. டெல்லியில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்று நடைபெற உள்ளது. இதில், சினிமா உள்ளிட்ட பல துறைகளிலும் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவும் இதில் பங்கேற்கிறார்.
டெல்லி வந்துள்ள அவர் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓய்வுக்கு இடையே பேட்டியளித்த ஜெயசூர்யா கூறுகையில், ரஜினிகாந்த் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் நடித்துள்ள சில படங்களை பார்த்திருக்கிறேன். அவரது நடிப்பும், ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். இந்தி சினிமா உலகில் மாதுரி தீட்சித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தி சினிமாவை பார்க்காத போதும் மாதுரி நடித்த ஒரு படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன். (செய்தி உதவி : க்ரிஷ்)
(நமக்கு தீப்ஸ் தாங்க ஆல்-டைம் ஃபேவரைட்!)
5) “அவனை கவனிங்க விஜயகுமார்….” — ரஜினி!
திரையுலகில் சூப்பர் ஸ்டாரின் நண்பர் மற்றும் நலம் விரும்பிகளில் ஒருவர் நடிகர் விஜயகுமார். இருவரும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்து, ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பின்னர் இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எந்த நிலையிலும் ரஜினி மீது இவர் பொறாமை கொண்டதில்லை. ரஜினியின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாகவே பார்த்து சந்தோஷப்பட்டவர் விஜயகுமார். ஹொகேனக்கல் உண்ணாவிரதத்தின் போது, சூப்பர் ஸ்டாரை தனிமைப்படுத்தும் விதமாக பலர் பேச, அதற்க்கு ஈடு கொடுக்கும் விதமாக இவர் ரஜினி பற்றி அசத்தலாக பேச, அதற்கு கிடைத்த கைத்தட்டல்கள் தான் சிலரை வேறு மாதிரி பேச தூண்டியது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
சரி… விஷயத்துக்கு வருவோம்…. இவரது மகன் அருண் விஜய் சமீபத்தில் நடித்து வெளியான “தடையறத் தாக்க” பாக்ஸ் ஆபீசை தடையற தாக்கி அதிர வைக்க, உற்சாகத்தில் இருக்கிறார் அருண் விஜய். 1993 இல் ‘முறைமாமன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் மூலம் அறிமுகமான அருண் விஜய்க்கு 15 வருடங்கள் கழித்து சரியான பிரேக் இப்போது தான் கிடைத்துள்ளது.
“நிறைய நேரங்கள்ல மனசு உடைஞ்சி போயிருக்கேன். ஒட்டுமொத்த குடும்பமும் நமக்காகவே சிரமப்படுறாங்களே இவங்களுக்காக நாம என்ன செஞ்சிருக்கோம்னு மனசுக்குள்ளே தவிப்பேன். மாமனார் கூட சொந்தமா தயாரிச்சு நம்மளை நிலை நிறுத்த முயற்சி பண்றார். நாம செய்றது சரியான்னு தோணும். இதுக்காகவே கடுமையா உழைக்கனும்னு தோணும். இப்போ எனக்கு 34 வயசு. 19 வயசுல ‘முறைமாமன்’ படத்துல அறிமுகமானேன். அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு நாள் கூட உடற்பயிற்சி செய்றதை நிறுத்தியது கிடையாது. கிட்டத்தட்ட மனசும் உடம்பும் இறுக்கிக் கிடந்தேன். ரஜினி சார் கூட அப்பாகிட்டே, “அவனை கொஞ்சம் கவனிங்க விஜயகுமார்”ன்னு சொல்வாராம். சினிமாவைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சண்டைக்காட்சிகளில் வில்லனை நான் அடிக்கிற மாதிரி பாவ்லா பண்ணினேன். ஆனா, அவர் என்னை அடிக்கிற மாதிரி நடிச்சது நிஜம். அப்போ சிந்திய ரத்தமும் வியர்வையும் தான் கிப்போ கைதட்டல்களா மாறியிருக்கிறது. இந்த சூழலில் இந்த வெற்றி எங்க மொத்த குடும்பத்துக்கும் சந்தோஷத்தை தருது!” - என்கிறார் அருண் விஜய்.
ரஜினி பற்றி இவர் சொன்ன ஒரு வார்த்தைக்கு மட்டுமில்லேங்க. கடின உழைப்புக்கு - தாமதமானாலும் - ஒரு நாள் பலன் கிடைத்தே தீரும் என்பதை அருண் விஜய்யின் இந்த வெற்றி நமக்கு உணர்த்தும் பாடத்தையும் நாம் மறக்கக்கூடாது என்பதற்காகவும் இந்த செய்தியை தருகிறேன்.
(வாழ்த்துக்கள் அருண் விஜய் சார். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்!)
6) “ஹலோன்னு கூட சொல்லமாட்டார் ரஜினி” - டிஸ்கோ கிங் கூறும் சுவாரஸ்யமான தகவல்!
பாலிவுட்டின் பரபரப்பான சீனியர் இசையமைப்பாளர்களில் ஒருவர் பப்பி லஹரி. இவரை ‘டிஸ்கோ கிங்’ என்றே அழைப்பார்கள். அந்தளவு டான்ஸ் சம்பந்தப்பட்ட பாடல்களை பின்னி பெடலெடுத்துவிடுவார். அவருடைய விகடன் பேட்டியிலிருந்து….
கேள்வி : “ரஜினிக்கு நீங்க ஃப்ரெண்ட்… இப்போவும் டச்ல இருக்கீங்களா?”
பதில் : “என்ன இப்படி கேட்டுடீங்க? ரஜினிகாந்த் பாய் என் குளோஸ் தோஸ்த். அவர் நடிச்ச ‘தாய் வீடு’ படத்துக்கு நான் தான் மியூசிக் பண்ணினேன். அதுல வர்ற “அன்னை என்னும் ஆலயம்” பாட்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் மோஸ்ட் ஃபேவரைட் சாங் அது. சென்னை வந்தா ரஜினி வீட்டுக்கு போவேன். இப்போவும் திடீர் திடீர்னு ரஜினி ஃபோன்ல பேசுவார். ஹலோன்னு கூட சொல்லாம இடி இடின்னு சிரிச்சுட்டு, அப்புறம் தான், “நான் ரஜினி பேசுறேன்… தாதா ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் லைப்?’ அப்படின்னு பாசமா கேட்பார். நைஸ் பர்சன்!” என்கிறார் பப்பி லஹரி.
(‘தாய் வீடு’ படத்துல வர்ற “அழகிய கொடியே ஆடடி” பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்!)
7) தலைவர் உட்கார்ந்த ‘CHAIR’டா இது!
பிரபல புகைப்பட நிபுணர் ஜி.வெங்கட்ராம் விகடனில் கூறியதிலிருந்து….
“சிவாஜிக்காக ரஜினி சாரை வெச்சு ஷூட். அதுல ஒரு போட்டோவுல ரஜினி சார் சேரில் உட்கார்ந்து திரும்பிப் பார்ப்பார். அவர் உட்கார்ந்திருந்த அக்ரிலிக் சேர் என் ஆபீசில் இருந்தது. அந்த ஸ்டில் விகடனில் வந்த பிறகு என் ஆபீசுக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஆசை ஆசையா அது தொட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
என் ஆபீஸ்ல அடிக்கடி கார்பென்டரி வேலை நடக்கும். ‘ டேய் மச்சி இது தான் தலைவர் உட்கார்ந்த சேர். விகடன்ல வந்துச்சுல்ல” என்று பேசிக்கொள்வார்கள். கேட்க ஆச்சரியமா இருந்திச்சு.
(ஹூம்… நாங்க நினைக்கிற சேர்ல அவர் உட்கார மாட்டேங்கறாரே…!)
[END]
//இன்னும் அவர் உட்காரப் போற சேர் நிறைய இருக்கு!///
ஹி..ஹி..ஹி..ஹி..
-பாவலன்
———————————————————-
உங்க சிரிப்புக்கு அர்த்தம் எனக்கு தெரியும் பாஸ்!
இப்போ பாருங்க… ஒ.கே.வான்னு..?
- சுந்தர்
//ரஜினியும், நானும் சேர்ந்து நடித்தால் அந்த படத்துக்கு வர்த்தகம் வானமே எல்லையாக இருக்கும். //
//ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர்களுக்கு பட்ஜெட்டுக்கு என்ன மிச்சம் இருக்கும்??//
அவர் கேள்விக்கான பதில் முதல் வரியில் உள்ளது . அப்புறம் என்ன செய்ய வேண்டியது தானே ..
அவர் நடிக்கிறார் என்று படத்தின் வசூல் குறித்து பயந்து விட்டார் போல .. பயம் வேண்டாம் . தலைவர் இருக்கிறார் . கொஞ்சம் தலைவர் பட வசூல் விவரம் பார்க்கவும். உங்கள் பயம் நீங்கி விடும்.
Very good update Sundarji!!! Thalaiva neenga thaniyaaga nadichaaley porum..becoz neenga mattum nadichavey padam minimum 200cr edukum so we always want you to be the only hero.. we want more films like Robot frm u..becoz nwadays u hav become more global, Kochadaiyaan s surely a global film no doubt in tat..Sundarji- Unga kitta oru question kekalaama? Thalaivar next yaaru kuda atleast 80% chance iruku?? A.Shankar B.Rana C.KV Anand…3 in 1 la yaaruku adhiga chance?
————————————
According to me he is waiting for Maatran's result. Let's see.
- Sundar
நன்றி !
சுந்தர் அவர்களே:
'முரட்டுக் காளை' படத்தின் போஸ்டர்களைப் பார்த்தேன்.
சுந்தர்,சி.-சினேஹா ஜோடி ரஜினி படத்தின் ரீமேக்.
தலைவர் இதற்கு எப்படி சம்மதித்தார்? ரஜினி ரசிகர்கள்
இந்தப் படத்தை ஒதுக்கித் தள்ளினால் நல்லது!
சுருளி கேரக்டரை விவேக் சின்னாபின்னமாக்கி விட்டார்
அப்படீன்னு கேள்வி! ரதி அக்னிஹோத்ரி டீசன்ட்டாக செய்த ரோலை ஸ்னேஹா கவர்ச்சி ஆக்கியிருக்கிறார்.
In case இது வெற்றிப் படமானால் சுந்தர்.சி. மற்ற
ரஜினி படங்களையும் remake செய்யும் அபாயம்
இருக்கிறது! நண்பர்களே..ஜாக்கிரதை!!!!
-பாவலன்
—————————————————
சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெற்று அதற்குரிய விலையை கொடுத்து தான் ரீ-மேக் செய்கிறார்கள். இதற்க்கு ரஜினி என்ன செய்ய முடியும்? அதை தடுக்கும் உரிமை அவருக்கில்லை. தடுக்கவும் மாட்டார்.
மேலும் தமது படத்தில் நடிப்பதன் மூலம் ஒருவருக்கு பேரும், புகழும், வருவாயும் கிடைக்கும் என்றால் சந்தோஷப்படும் முதல் நபர் அவராகத் தான் இருப்பார். மற்றபடி இதன் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் அவர் அலட்டிக்கொள்ளவே மாட்டார். ஆர்வம் காட்டவும் மாட்டார்.
- சுந்தர்
Nice அர்டிச்லே…..
வில் ரஜினி sir resume his acting…
I wan him in screen always.
Malaysian fans awaited for that…..
Munnaal mudalvarai santhita,
ennaalum makkalai aalum mudalvar.
அருமையான தொகுப்பு நன்றி சுந்தர்.
தகவல்களுக்கு மிக்க மன்றி சுந்தர் ஜி !!!
Thalaivar udan kamal nadika marupatharku karanam, THALAIVAR pera thatiduvar la athan.
Vikatanuku kolupu thaan ennamo ivanunga book la vanthathala antha chair famous ana mari potrukanga
Sundarji,
How do you collect all these information? Sometimes I feel envy of you.
Regards
Manoj
—————————————
It's just a law of Attraction.
The Law of Attraction simply says that you attract into your life whatever you think about.
Here i am not only thinking but breathing.
- Sundar
According to an interview given by Dr. Murali of EROS, Katrina will be Rajini's pair in his next film after Kochadiyaan.
தொகுப்பு மிக அருமை. உங்கள் சுவாசிப்பை நாங்கள் உணர்கிறோம், மதிக்கிறோம்.