









You Are Here: Home » Featured, Moral Stories » அப்பாவின் அன்புப் பரிசு; உதாசீனப்படுத்திய மகன் — தந்தையர் தின ஸ்பெஷல் 1
ஜூன் 17 - இன்று தந்தையர் தினம். நமக்கு உடல் கொடுத்தது தாய் என்றால், உயிர் கொடுத்தது தந்தை. தந்தை என்பவர், பெரும்பாலும் தாய் அளவுக்கு பலர் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்குரிய காரணங்கள், அவரவர் சூழலுக்கு ஏற்றவாறு மாறுகிறது. ஆனாலும், நமது முன்னேற்றத்தில் தாய்க்கு இருக்கும் அதே பங்கு தந்தைக்கும் உண்டு. பல சமயங்களில் அது வெளியே தெரிவதில்லை. ஏனெனில், அதை அவர்கள் காட்டிகொள்வதில்லை.
நமக்கு தந்தை என்ற ஒரு பாத்திரத்தை தவிர நண்பனாகவும், சேவகனாகவும், பாதுகாவலனாகவும் திகழும் தந்தையர்களை இந்த இனிய நாளில் போற்றுவோம். அவர்களது தேவைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்றுவோம். (நமது, Force Team நண்பர்கள், முக்கியமாக இதை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!).
தந்தையர் தின சிறப்பு பதிவாக கீழ்கண்ட பதிவை அளிக்கிறேன். நிச்சயம் ஒரு இடத்தில் உங்களின் கண்களில் இருந்து நீர் துளிர்க்கும்.
அப்பாவின் அன்புப் பரிசு; உதாசீனப்படுத்திய மகன் — நெகிழ்ச்சியூட்டும் கதை !!
அந்த இளைஞன் படித்து முடித்து தனது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு தயாராகிக்கொண்டிருந்தான். நீண்ட நாட்களாக அவனுக்கு ஒரு ஆசை. அவன் கல்லூரிக்கு போகும் வழியில் ஒரு பிரபல டூ-வீலர் ஷோரூம் இருந்தது. அந்த ஷோரூமில் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தனது தந்தையால் அதை நிச்சயம் அவனுக்கு வாங்கித் தரமுடியும் என்று கருதிய அவன் தனது தந்தையிடம் போய், தான் விரும்புவதெல்லாம் அந்த பைக் ஒன்றை மட்டும் தான் என்றும் தனது பட்டமளிப்பு விழா நாளுக்கு முன்பு அதை வாங்கி தரும்படியும் கேட்டுக்கொண்டான்.
நாட்கள் ஓடின. அப்பா எப்படியாவது தான் விரும்பிய அந்த பைக்கை வாங்கித் தருவார் என்று அவன் ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அதற்குரிய அறிகுறியே தெரியவில்லை. பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அன்று காலை, அவனது அறைக்கு அவன் தந்தை சென்றார். அவனிடம், “உன்னைபோன்ற ஒரு அருமையான மகனை பெற்றதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் மை டியர் சன்!” என்று கூறுகிறார். பின்னர் தனது மகனிடம் மிக அழகாக கிஃப்ட் பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலை தருகிறார்.
பைக்கை எதிர்பார்த்து காத்திருந்த மகனுக்கு ஏமாற்றம் ஒரு பக்கம் . அந்த கிஃப்ட் பேக்கினுள் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் ஒரு பக்கம். வேகவேகமாக அந்த பேக்கை பிரிக்கிறான். உள்ளே அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு பைபிள் தென்படுகிறது. அதில் இவனது பெயர் தங்க நிறத்தில் எம்பாஸ் (emboss) செய்யப்பட்டுள்ளது. அவனுக்கு கோபம் பொத்திக்கொண்டு வருகிறது, “உன்கிட்டே இருக்குற பணத்துல போயும் போயும் உன்னால எனக்கு பைபிள் தான் வாங்கித் தர முடிஞ்சதா? இதை நான் படிச்சதேயில்லையா?” என்று கத்திவிட்டு பைக் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான்.
“உன்கிட்டே இருக்குற பணத்துல போயும் போயும் உன்னால எனக்கு பைபிள் தான் வாங்கித் தர முடிஞ்சதா? இதை நான் படிச்சதேயில்லையா?” என்று கத்திவிட்டு பைக் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான்.
ஆண்டுகள் உருண்டோடுகின்றன. வீட்டை விட்டு வெளியேறியவன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி நல்ல நிலைக்கு வந்துவிடுகிறான். அவனுக்கென்று அழகான வீடு, அன்பான குடும்பம் அமைகிறது.
அப்போது தான் அவனுக்கு தனது தந்தையின் ஞாபகம் வருகிறது. வீட்டை விட்டு வெளியேரியதிலிருந்து அவன் அப்பாவை பார்க்கவில்லை. “அப்பாவுக்கு இப்போ ரொம்ப வயசாகியிருக்கும். அவரை கூப்பிட்டு வந்து நம்ம கூட வெச்சிக்கணும்” என்று தோன்றுகிறது.
பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும்போதே அவனுக்கு ஒரு டெலிக்ராம் வருகிறது. அவன் தந்தை காலமாகிவிட்டதாகவும், உடனே வீட்டுக்கு வரும்படியும், தனது சொத்துக்களை எல்லாம் இவன் பெயருக்கு அவர் எழுதி வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
சோகம் ததும்ப, நெஞ்சம் அடைக்க உடனே தனது வீட்டுக்கு விமானம் மூலம் விரைகிறான். வீட்டில் தனது தந்தையின் அறைக்கு சென்று அழுதுகொண்டே பார்க்கிறான். அங்கே ஷெல்பில் அந்த பைபிள் தென்படுகிறது. கலங்கிய கண்களுடன் அதை எடுக்கிறான். பக்கங்களை புரட்டுகிறான். ஒரு பக்கத்தில் புக்மார்க் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு வசனத்தை அவன் தந்தை ஸ்கெட்ச் பேனாவில் அடிக்கோடிட்டிருந்தார்.
//நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ? (மத்தேயு 7:11)//
அதை அவன் படித்துக்கொண்டிருக்கும்போதே அந்த பைபிளிலிருந்து சாவி ஒன்று கீழே விழுகிறது. அதில் காணப்பட்ட கீ-செயினில், ஒரு ஷோரூம் முகவரி காணப்பட்டது. இவன் எந்த பைக்கை வாங்க விரும்பினானோ அதே பைக் ஷோரூம் தான் அது. அதில் கட்டப்பட்டிருந்த TAG ல் இவன் பட்டமளிப்பு வாங்கிய அந்த நாள் அதாவது அந்த GRADUATION DAY குறிக்கப்பட்டிருந்தது. அதில் FULLY PAID என்ற வார்த்தைகள் காணப்பட்டது.
“அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா…” என்று கதறியபடியே சுவற்றில் சாய்கிறான்.
கடவுள் நமக்கு அளிக்கும் பரிசுகளை பல சமயம் நாம் இப்படித் தான் நமது அவசர புத்தியின் மூலமும் பேராசை மூலமும் உதாசீனப்படுத்துகிறோம்.
வாழ்க்கை என்பது அழிக்கும் ரப்பர் இல்லாமல் வரையப்படும் ஓவியம் போல. அதை உணர்ந்து உணர்வுகளை மதிப்போம். உறவுகளை காப்போம்.
Let’s start count our blessings; not troubles from today - Father’s Day - onwards.
[END]
Great story Sunder, and fantastic bible verses.
Cheers
Dev.
Really good and a touching one! Tks sundar!
அருமை சுந்தர் gee . உங்களுக்கு எமது தந்தையர் தின நல வாழ்த்துகள்.அம்மா பிள்ளையாகவே வளந்தாலும் நமக்கு அப்பாவின் மீதும் அவருக்கு நம் மீதுமான பாசம் எள்ளளவும் குறைந்தது இல்லை..குறையவும் செய்யாது.வெளிபடையாக சொல்லபடாத அன்பு தந்தைகள் பாசம்.
Excellent one Sundar. Though my job made me to live away (physically) from him for the past 2 years i am looking ahead to rejoin him asap. My Dad is an unsung hero who kept all the bad things with him and gave me all good things in life.
அண்ணா தந்தையர் தின வாழ்த்துக்கள்.
நான் வாழ்த்து சொல்ல என் தந்தை என்னுடன் இல்லை இறந்து 13 வருடங்கள் அயிற்று. அனால் என்னுடைய இந்த 13 வருட வாழ்க்கையில் பல நேரங்களில் என் தந்தை இல்லாததை நினைத்து வருந்தியிருகிரேன்.
எனக்கு இப்பொழுது ஒரு மகன் பிறந்திருக்கிறான், அவனுக்கு பொறுப்புள்ள தந்தையாக நான் இருப்பேன்.
Happy fathers day. vazhkayil pathi varudam namai tholil sumakum Appavirku enrum kadamai patulen
Excellent Story
\கடவுள் நமக்கு அளிக்கும் பரிசுகளை பல சமயம் நாம் இப்படித் தான் நமது அவசர புத்தியின் மூலமும் பேராசை மூலமும் உதாசீனப்படுத்துகிறோம்.\
Really True
அருமையான பதிவு நன்றி சுந்தர் .
Really touching one …I'm moved
நன்றி
அனைத்து பதிவுகளும் அருமை
நட்புடன்
சங்கர் சே
மிகவும் மிகவும் பொருத்தமான… பதிவு…
உணர்வுகளின் முக்கியத்துவம் இப்போ மக்களிடம் கொறைந்து …
கொண்டே இருக்கிறது …
மனதை தொடும் அருமையான பதிவு. தந்தையர் தின வாழ்த்துக்கள்
உங்களுடைய இந்த பதிவு மூலம் நீங்கள் உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.
ரெம்ப நல்ல மனதை தொட்ட பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.