You Are Here: Home » Featured, Rajini Lead » நமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணத் தந்தை - தந்தையர் தின ஸ்பெஷல் 2

மக்கு தெரிந்து நமது தந்தையர்களில் பலர் அவரவர்க்கு ஒரு “எடுத்துக்காட்டு தந்தை”யாக இருக்கக்கூடும். ஆனால் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணத் தந்தை ஒருவர் இருக்கிறார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

ஒரு வெற்றிகரமான நடிகராக மட்டுமின்றி ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக, ஒரு நல்ல கணவனாக, எல்லாவற்றுக்கும் மேல் தனது இரு மகள்களுக்கும் ஒரு நல்ல அப்பாவாக திகழ்ந்து வருகிறார் ரஜினி.

இரு மகள்கள் வளர்ந்து வந்த காலகட்டங்களில், ஒரு வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடித்துக்கொண்டிருந்தார்.
ஓய்வு ஒழிச்சல் பாராது இரவும் பகலும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டிய நிர்பந்தம். அந்த சூழ்நிலையிலும், தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட அவர் தவறியதில்லை. இதை அவரது மகள்களே, சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தனர்.

(சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நாளிதழ் கட்டிங் ஒன்றை பாருங்கள். அதில் கூறப்பட்டுள்ள செய்தியை படியுங்கள்.)

ஒரு தந்தையின் கடமையாக திருவள்ளுவர் கூறுவது எதைத் தெரியுமா?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (குறள் 67).

பொருள் : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

ஆக, தனது மகள்களை கல்வியில் சிறந்து விளங்கும்படி அவர்கள் சுதந்திரத்திற்கு அவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க அனுமதித்திருந்தார். தனது விருப்பங்களை அவர்கள் மீது திணிக்கவில்லை.

அடுத்து, தனது புகழ் வெளிச்சம் அவர்கள் மீது படிந்து எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தங்களது தனித் தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தாங்கள் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள்கள் என்பதை அவர்கள் உணராத வண்ணம், அவர்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டாது வளர்த்தார். அவர்கள் ஓரளவு சொந்தக்காலில் நிற்க தகுதி உடையவர்களாக மாறிய பின்னரே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று வெளியுலகிற்கு தெரிந்தது.

எத்தனயோ சுடுசொற்களுக்கும் வதந்திகளுக்கும் இடையே தனது கொள்கையில் உறுதியாக இருந்து அவர் இதை செயல்படுத்தினார். இன்று திரையுலகப் பிரபலங்கள் பலர், இதை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்கவைப்பதோடு மட்டும் ஒரு தந்தையின் கடமை முடிந்துவிடுவதில்லை.  தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நண்பனாக இருந்து ஒரு தந்தை அவர்களது தேவைகள் மற்றும் எண்ணங்கள் அறிந்து பழகவேண்டும்.

சூப்பர் ஸ்டாரைப் பொறுத்தவரை அவர் எங்களது அப்பா என்பதைவிட எங்களது நல்லா நண்பர்கள் என்பதை அவரது மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் பல முறை பல பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

வளர்ப்பது, நண்பனாக இருப்பது, படிக்க வைப்பதோடு மட்டும் ஒரு தந்தையின் கடமை முடிந்துவிடுவதில்லை. தனது மகனோ மகளோ தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையிலோ தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏதாவது பிரச்னையை சந்தித்தாலோ சிக்கல்களை சனித்தாலோ, தனது அறிவினாலும், சாமர்த்தியத்தாலும் அதை அணுகி, அதை தனது மகளின் பெயரோ புகழோ கெடாமல் தீர்த்துவைக்கவேண்டும்.

இளையமகள் சௌந்தர்யா ‘சுல்தான்’ படம் தொடர்பாக எதிர்பாராத சில பிரச்சனைகளை சந்தித்தபோது, உரிய அறிவுரை கூறி, அந்தப் பிரச்னைகளிலிருந்து அவர் சாமர்த்தியமாக வெளியே வர உதவினார் தந்தை ரஜினி. இது தொடர்பாக அவர் எந்த இடத்திலும் ஒரு சூப்பர் ஸ்டாராக நடந்துகொள்ளாமல் ஒரு பொறுப்புள்ள தந்தையாக மட்டுமே நடந்துகொண்டார். இது அவரது குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.

அடுத்து மூத்த மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷை  அவர் விரும்புவது தெரிந்ததும், தனது மகளை அழைத்து பேசினார். அவரது காதல் வெறும் ஈர்ப்பு மட்டும் தானா? அல்லத உண்மையில் ஆழமானதா என்பதை பரிசோதித்தார். ஆழமானது என்று தெரிந்தபின்னர் அதற்கு பச்சாவ்க்கொடி காட்டி, திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

இவை தவிர, அவரகளது பர்சனல் வாழ்க்கையில் ஒரு தந்தையாக அவரது பொறுப்புணர்வும் பாசமும் எளிப்பட்ட தருணங்கள் பல இருக்கலாம். (ஐஸ்வர்யாவோ, சௌந்தர்யாவோ யாராவது எதிர்காலத்துல அவங்க பயோகிராபி எழதும்போது இதை தெரிஞ்சிக்கலாம்!).

இத்தனை சிறப்பு பெற்ற ஒரு தந்தைக்கு மகள்கள் இருவரும் செய்யவேண்டிய கைம்மாறு எது தெரியுமா?

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)

பொருள் : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

செய்வார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.

இதைப் படிக்கும் மகன்கள் / மகள்கள் தங்கள் தந்தையரின் தியாகத்தை உணர்ந்து, அவரது தேவைகள் எண்ணங்கள் இவற்றுக்கு மதிப்பளித்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (மேற்படி அறிவுரை எனக்கும் சேர்த்துத் தான் சொல்லிக்கிறேனுங்க!)

அடுத்து திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் நண்பர்கள் , ஒரு பொறுப்புள்ள தந்தையாக நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடிய உயர்ந்த பரிசு (இந்த காலத்தில்) அவர்களுடன் நீங்கள் செல்வழிக்ககூடிய நேரமே.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

————————————————————————————-
Also check :

அப்பாவின் அன்புப் பரிசு; உதாசீனப்படுத்திய மகன் — தந்தையர் தின ஸ்பெஷல் 1

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15306

அனைத்திலும் உதாரணமாய் ஒரு தலைவன்

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=666

————————————————————————————-

[END]

8 Responses to “நமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணத் தந்தை - தந்தையர் தின ஸ்பெஷல் 2”

 1. S.Vijay S.Vijay says:

  //செய்வார்கள் என்று நம்புவோம்//

  அப்படியே நடந்து தலைவர் மனம் குளிரட்டும்

 2. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Utharana thanthai, utharana manithan.

 3. mareeskannan mareeskannan says:

  தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை……

  .

  கண்ணன்

 4. Really nice..Thalaivar Eppavum Ethulayum Bestthan Sundar ji…

 5. R.Gopi R.Gopi says:

  சுந்தர் ஜி …..

  கல்யாணத்துக்கு தயார் ஆகி வருகிறார் என்று தெரிகிறது…. வாழ்த்துக்கள் தல….

  ——————————————
  உங்களை மாதிரி பெரியவங்க ஆசி பலிச்சா சரி.
  - சுந்தர்

 6. Anandkumar Anandkumar says:

  கலக்கல் சுந்தர்ஜி…

  அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு…

  ஆனந்தகுமார்.மு
  நாமக்கல்

 7. winston winston says:

  தமிழகத்தின் தலைமகனே..
  தரணி போற்றும் கலைமகனே..!

  உன் எளிமை, உலகுக்கு பெருமை..
  உன் சிரிப்பு, எங்களுக்கு வியப்பு..!

  இமயமலைக்கு நீ சென்றாலும் தனிமை உனக்கு கிடைக்காது..
  காரணம்,
  பனி பாறைகளும் உன் ஆட்டோகிராப் கேக்கும்.,
  உன் கடைகோடி ரசிகனாய்..!

  குமரியின் வள்ளுவர் சிலையானாலும் சரி,
  துபாயின் வானம் தொடும் கட்டிடங்கள் ஆனாலும் சரி,
  உன் புகழ் உச்சியை தொட முடியாது..!

  அமெரிக்காவின் முப்படைகளும் தோற்கும்..
  உன் ரசிகர்களின் பாச படைக்கு முன்..!

  வானில் நட்சத்திரங்கள் போராமை படுகின்றன..
  உன் நட்சத்திர அந்தஸ்தை பார்த்து..
  பிறகு ஏன் நாங்கள் கவலை படவேண்டும்,
  பூமியில் உள்ள உன் நிழல்களை கண்டு..!

  காத்து இருக்கிறோம் உன் கோச்சடையன் காக..
  தரிசனம் தருவாய் என்ற நம்பிக்கையில் மட்டும் அல்ல.
  தமிழகம் ஆள்வாய் என்ற நம்பிக்கையில் கூட…!

  என்றும் அன்புடன்..
  உன் ரசிகன் வின்ஸ்டன் ராஜ்..!!

  ——————————————-

  மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் அபாரமான கவித்துவம் ஒளிந்துள்ளது.
  இதை ஆக்கப்பூர்வமான வழிகளில் மேலும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டுகிறேன்.
  பத்திரிக்கைகளில் வெளிவரும் கவிதைப் பக்கங்களுக்கு உங்களுக்கு பிடித்த தலைப்புக்களில் எழுதி அனுப்பி உங்கள் முயற்சியை தொடங்கவும்.
  வாழ்த்துக்கள்!!!
  - சுந்தர்

 8. winston winston says:

  நன்றி சுந்தர் சார் for encouraging me, i will keep it up….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
 • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
 • Lingual Support by India Fascinates