You Are Here: Home » Featured, Superstar Movie News » ஜப்பானில் ‘ரோபோ’ உண்மையில் எத்துனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது? முழு பட்டியல்!!

ப்பானில் சூப்பர் ஸ்டாரின் ‘ரோபோ’ சக்கை போடு போடும் விபரம், இணையத்திலும்  - ஊடகத்திலும்   ஹாட் டாபிக்காகிவிட்டது. தமிழகத்தில் நமது தளத்தில் முதன் முதலில் வெளியான அந்த செய்தி, விரைவில் இணையம் முழுதும் பரவி (அதற்கு நாம் காரணமல்ல. சூப்பர் ஸ்டாரின் பெயருக்கே உரிய அந்த பரபரப்பு தான் காரணம்) கடைசியில் சன் டீ.வி. செய்திகள் வரை இடம் பிடித்துவிட்டது.

ரோபோவின் தாயகமான ஜப்பானில் நம் சூப்பர் ஸ்டாரின் ரோபோவுக்கு கிடைத்த வரவேற்ப்பு உண்மையில் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயம். இதற்க்கு முழுமுதற்க் காரணம், சூப்பர் ஸ்டாரின் வசீகரம் தான் என்றாலும், இயக்குனர் ஷங்கரின் அபாரமான இயக்கம் மற்றும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மொழிகளின் எல்லையை கடந்த இசையும் காரணம் என்பதை நாம் மறுக்கக்கூடாது. இவற்றுக்கெல்லாம் திலகமிட்டாற்போல, உலக அழகி ஐஸ்வர்யா ராயின் பேரழகு படத்திற்கு கூடுதல் பலாமாய் அமைந்தது.

மேற்படி செய்தியை நாம் அளித்த போது, நண்பர்கள் அதில் இடம்பெற்றிருந்த திரையரங்கங்களின் எண்ணிக்கையை (1300) குறித்து தங்களது சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். அத்தனை சிறிய ஒரு நாட்டில் அத்துனை திரையரங்கங்களில் ரோபோ ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தனர். அவர்கள் கூறுவதில் உள்ள நியாயம் நமக்கு புரிந்ததால், அடுத்த சில மணிநேரங்களில்  பதிவில் மாற்றங்கள் செய்து   திரையரங்கங்களின் எண்ணிக்கை குறித்து சரியாக தெரியவில்லை என குறிப்பிட்டேன்.

இதற்கிடையே ஊடங்கங்களில் ஜப்பானில் 1300 திரையரங்கங்களில் ‘எந்திரன்’ ஓடுவதாக செய்திகள் பரவியது. சன் டீ.வி. சினிமா செய்திகளிலும் அது அப்படியே இடம்பெற்றுவிட்டது.

இதற்கிடையே ஜப்பானில் உண்மையில் எந்திரன் எத்துனை திரையரங்களில் ‘ரோபோ’ (எந்திரன்) ஓடுகிறது என்பதை நாம் அரிய முற்பட்டோம். கடைசியில் நமக்கு அது குறித்து உண்மையான தகவல் கிடைத்துள்ளது.

கீழ்காணும் அட்டவணையில், ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் விநியோக வட்டத்திலும் எந்திரன் எத்துனை திரையரங்கில் ஓடுகிறது என்ற விபரம் அந்தந்த தியேட்டரின் பெயோரோடு தரப்பட்டுள்ளது. இதன் படி பார்த்தால், ‘ரோபோ’ தற்போது அங்கு 69 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜப்பானை பொறுத்தவரை இது மிக மிக அதிகமாகும். அதுவும் சப்-டைட்டிலுடன் ஓடும் வேற்று மொழி படம் ஒன்றிற்கு இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.

இந்த செய்தியை நாம் இங்கு பதிவு செய்வதன் நோக்கமே, சூப்பர் ஸ்டாரின் திரைப்பட வெற்றி குறித்த தவறான செய்தி பதிவு செய்யப்படக்கூடாது என்பதே. இன்றைக்கு நாம் இதை அப்படியே விட்டுவிட்டால், நாளை வெளியாகும் ‘கோச்சடையான்’ உள்ளிட்ட வேறு படங்கள் இதே போன்று  ஜப்பானில் வெளியாகி - அப்போது திரையரங்குகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலில் - அதில் “ஜப்பானில் 70 / 80 திரையரங்குகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பிராமாண்ட வெற்றி!” என்று கூறினால், அதை இதனுடன் ஒப்பிட்டு “படம் சரியா போகலை போலிருக்கு. அதான் 1300 ல இருந்து 80 ஆ தியேட்டர்ஸ் சுருங்கிடுச்சு” என்பார்கள். அது நமக்கு தேவையா? இதையெலாம் யோசித்து தான் இந்தப் இந்தப் பட்டியலை வெளியிடுகிறேன்.

இந்த செய்தியை நாம் இங்கு பதிவு செய்வதன் நோக்கமே, சூப்பர் ஸ்டாரின் திரைப்பட வெற்றி குறித்த தவறான செய்தி பதிவு செய்யப்படக்கூடாது என்பதே.

அடுத்து, உண்மை தெரிஞ்ச பிறகும் அதை மறைக்க எனக்கு மனசு இல்லீங்க. (நான் இல்லேன்னாலும் வேற யாராச்சும் இதை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கு என்பது வேறு விஷயம்). அப்போ நீங்க என்ன நினைப்பீங்க? நம்ம மேல வெச்சிருக்குற அந்த நம்பகத்தன்மையில் லேசா கீறல் விழுறதை கூட நான் விரும்பலேங்க. அதுனால தான் உண்மையை சொல்கிறேன்.

மறுபடியும் சொல்கிறேன்… ‘ஜப்பானை’ பொறுத்தவரை அந்த சிறிய நாட்டிற்கு இது அதிகபட்ச எண்ணிக்கை.

மறுபடியும் சொல்கிறேன்… ‘ஜப்பானை’ பொறுத்தவரை அந்த சிறிய நாட்டிற்கு இது அதிகபட்ச எண்ணிக்கை.

Total theatres where Robot is currently running in Japan is as follows…. (Total 69 screens)

Kanto – Koshinetsu region - 26

District Theatre name Japanese version Full version
Tokyo TOEI shibuya
Tokyo Shinjuku world 9
Tokyo Cinema city
Tokyo Kichijoji bausushiata
Tokyo Ikebukuro cinema rosa
Tokyo Ginza shinepatosu
Tokyo Omori kineka
Kanagawa 13burg yokihama
Kanagawa 109 cinemas kawasaki
Kanagawa 109 shonam cinemas
Kanagawa TOHOcinemas lalaport, yokohama
Chiba Soga T Joy
Chiba Chiba new town cinemas
Chiba Ichikawa myoden worner mycal cinemas
Saitama Cineplex, Niiza
Ibaraki Cineplex, Mito
Ibaraki Cineplex, Tsukuba
Tochigi Nasushio bara forum
Tochigi Koyoma shinemarobure
Gunma ISESAKI theatre, Purebi
Gunma Niigata Bandai T Joy
Shizuoka Cine gallery, Shizuoka
Shizuoka Cinema era
shizuoka Fujieda cine, Prego
Yamanashi Isawa theatre
Yamanashi Cinema treasures party






Hokkaido region – 3

Hokkaido Sappora cinema fortfier
Hokkaido Cineplex asahikawa
Hokkaido Cinema forum

NorthEast - 8

Aomori Corona world, Aomori
Aomori Hachinohe forum
Iwate Morioka forum
Yamogata solaris
Yamogata Higa shine forum
Miyagi Tomiya cinemas 109
Miyagi chineravuita
Fukushima Fukushima forum

Middle  - 11

Aichi Fushimi million seat
Aichi Nagoya airport midland cinema
Aichi Corona world komoki
Aichi Cineplex, okazaki
Aichi United cinemas, Toyohashi
Gifu Ogaki corona world
Kanazawa World cinema corona, Kanazawa
Fukui Corona world, Fukui
Toyoma Forza sogawa
Nagano Saku amushinema
Nagano Eye cinema city

Kansai region – 8

Osaka Umeda burg 7
Osaka Cinemart shinsai bashi
Osaka 109cinemas miroh
Osaka Cineplex, Hirakata
Osaka Apollo cinema 8
Kyoto T Joy , Kyoto
Hyogo logHAT kibe cinemas
Hyogo Kobe art village center

Shikoku region – 7

Hiroshima Baltic11, Hiroshima
Hiroshima Cinema salon, Hiroshima
Hiroshima Fukuyoma corona world
Okayama Claire cinema
Ehime Cinema eye Imabani
Kagawa Hall soleil
Tokushima Ufotable cinema

Kyushu – Okinawa region – 6

Fukuoka Hakata T Joy
Fukuoka T Joy kumme
Fukuoka United cinemas fellow
Oita Park place oita T Joy
Kagoshima 10 kagoshima Miitte
Okinawa Sakurazaka theatre

[END]

20 Responses to “ஜப்பானில் ‘ரோபோ’ உண்மையில் எத்துனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது? முழு பட்டியல்!!”

  1. dr suneel dr suneel says:

    சரியான தகவலுக்கு நன்றி..ஜி..உண்மை நிலவரம் என்னவோ அது தான் முக்கியம்..இதுவே அங்கு மகத்தான வெற்றி தான்..துணிவுடன் இந்த தகவலை வெளியிட்டம் உமது நேர்மை பாராட்ட தக்கது..

  2. rajinirasigan rajinirasigan says:

    unmaiyana thagavaluku nanri ….:)

  3. Ashwin Ashwin says:

    Excellent News Sundar. I always wonder how can you do lot of research and post such wonderful articles and updates amid your busy schedule. But it is good for die hard fans like me who always search for some news about namma Thalaivar. Keep up the good work.

    Aanalum neenga romba thaan thalaivar rasigara irukeenga. :-)

  4. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    உண்மை நிலவரத்தை மறைக்காமல் வெளியிட்ட சுந்தருக்கு பாராட்டுக்கள். அடிக்கடி நிகழும் பூகம்பங்களின் பாதிப்புகளை எந்திரன் சற்றே மறக்கச்செய்து ஜப்பானிய மக்களை மகிழ்விக்கிறான். கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள் நம் தலைவரை இந்த அளவிற்கு நேசிப்பது எதனால்? ரஜினி என்கின்ற கலைஞன் மொழி, மதம், நாடு போன்ற பேதங்களை கடந்து ரசிகர்களை மகிழ்விப்பதால்தான் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. எந்திரன் போன்ற தரமான படத்தை கொடுத்த ஷங்கருக்கு நன்றி.

  5. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    World SUPERSTAR's ENTHIRAN rock again. Cheers. Nama enna oru theatre la film festival la pota patha, enamo china fulla release ana mari advertise pannalaye.

  6. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Intha news, japan release photo news paper la vanthurukanum

  7. Hemanth Hemanth says:

    Great news sir… nothing worng in issuing honest news… Even THALAIVAR wont accept the exaggeration news… 69 is not a less count and more other Indian actor or his fans no right to comment on this count for those who dont any fame on JAPAN other than our THALAIVAR Super Star… Surely Kochadaiyaan will Break this…

  8. harisivaji harisivaji says:

    1300… சற்று அதிகம் தான்

    நம்ம பொய் சொல்லி ஜெய்க்க வேண்டிய அவசியம் இல்லை

    உண்மையை சொன்னாவே யாராலயும் கிட்ட நெருங்க முடியாது

  9. chithamparam chithamparam says:

    சில நடிகர்களின் படங்கள் இத்தனை நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கூட 60-70 தியெட்டர்களில் ஓடுவது கடினம்

    யப்பானில் இப்படி ஓடுவதே பெருமைப்பட வேண்டிய விடயம்.

    இதனை சூப்பர் ஸ்டாரின் வெற்றியாகவோ இயக்குனர் ஷங்கரின் வெற்றியாகவொ மட்டும் பார்க்கக் கூடாது

    ஒட்டு மொத்த உலகத்தழிழர்களுக்கும் உலகழவில் கிடைத்த வெற்றியாகக் கருதவேண்டும்

  10. siva siva says:

    இதுதான் தலைவர் நமக்கு கற்றுத்தந்த பாடம்…… ரசிகர்கள் இப்படிதான் இருக்க வேண்டும்…….

  11. Sankaranarayanan Sankaranarayanan says:

    உண்மையான தகவலுக்கு நன்றி!

  12. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    I admire your honesty. Truth alone triumphs. This is always true in everybody's case and particularly Thalaivar proves very many times in reality.

  13. s.vasanthan s.vasanthan says:

    சுந்தர் ஒரு தகவல் வெளியிட்ட அது கண்டிப்பா சரியாயிருக்கும் ,அது பொய்க்க கூடாது என்பதற்காக சுந்தர் இவ்வளவு தெளிவா வெளியிட்டது மிகவும் பெருமையாக உள்ளது .நன்றி சுந்தர் ,தலைவர் சாதனை தொடரும் ,,,,,,

  14. S.Vijay S.Vijay says:

    //அப்போது திரையரங்குகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலில் – அதில் “ஜப்பானில் 70 / 80 திரையரங்குகள் ஓடிக்கொண்டிருக்கிறது. பிராமாண்ட வெற்றி!” என்று கூறினால், அதை இதனுடன் ஒப்பிட்டு “படம் சரியா போகலை போலிருக்கு. அதான் 1300 ல இருந்து 80 ஆ தியேட்டர்ஸ் சுருங்கிடுச்சு” என்பார்கள். அது நமக்கு தேவையா? இதையெலாம் யோசித்து தான் இந்தப் இந்தப் பட்டியலை வெளியிடுகிறேன்.//

    :) ) அதான் சுந்தர் :)

  15. Anonymous says:

    சுந்தர் அண்ணா :) உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!!!

  16. Ashraf Ali Ashraf Ali says:

    எப்பவுமே உண்மை தான் நீடித்து இருக்கும் . . .

    ——-

    உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு; சுந்தர் ஜி …

  17. Plz vote for superstar Rajinikant " The Greatest Indian" after Mahatma just one missed call to this No 08082891024.Plz forward…

  18. Anandkumar Anandkumar says:

    சுந்தர், நாம தலைவரோட ரசிகர்கள் என்று பெருமையுடன் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்… உங்களது சரியான தகவல்களுக்கு எனது பாராட்டுக்கள்…

    ஆனந்தகுமார்.மு
    நாமக்கல்
    9443706957

  19. கிரி கிரி says:

    You have done a good job Sundar.

  20. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    அற்புதம் ! அற்புதம்!! அற்புதம்!!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates