You Are Here: Home » Featured, Happenings » பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. காலமானார்; ரஜினி நேரில் அஞ்சலி!

முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் பிரபல தயாரிப்பாளருமான திரு.கே.ஆர்.ஜி. சென்னையில் புதனன்று காலை (20/06/2012) மாரடைப்பால் காலமானர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள், ‘ஜானி, கலை ஞானி கமல் நடித்த ‘சிவப்பு ரோஜாக்கள், ‘கடல் மீன்கள், விஜய் நடித்த ‘மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களை இவர் தயாரித்துள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலை வைத்தும் படங்கள் எடுத்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக 4 வருடங்கள் பதவி வகித்தார். பிலிம்சேம்பர் தலைவர் பொறுப்பிலும் இருந்தார்.

தியாகராய நகரில் உள்ள பாகீரதி அம்மாள் தெருவில் வசித்து வந்த கே.ஆர்.ஜி.க்கு நேற்று இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

மரணம் அடைந்த கே.ஆர்.ஜி.க்கு சாந்தா என்ற மனைவியும், ராதா என்ற மகளும் உள்ளனர். கே.ஆர்.ஜி. மறைந்த செய்தி கேள்விபப்ட்ட ரஜினி நேரில் சென்று அவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர்கள் கவுண்டமணி, பாபுகணேஷ், நடிகை பூர்ணிமா ஜெயராம், டைரக்டர் பாலுமலர்வண் ணன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, பிரமிட் நடராஜன், கோவைத்தம்பி, மோகன் நடராஜன், தேனப்பன், முருகன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் மீது பெரு மதிப்பும், மரியாதையும் பாசமும் கொண்டிருந்த கே.ஆர்.ஜி. ‘ராணா’ துவக்க விழாவிற்கு வருகை தந்தது வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதே போன்று, சென்ற வருடம் மத்தியில் ரஜினி அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், சூப்பர் ஸ்டார் பற்றி மிக உருக்கமான பேட்டி ஒன்றை இவர் நமது தளத்திற்கு அளித்திருந்தார். நாம் சூப்பர் ஸ்டார் பற்றி பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன், இன்முகத்துடன் ஒப்புக்கொண்டு, பாசாகின்ரி பேசினார் இந்த எளிய மனிதர்.

அன்னாரது ஆன்மா சாந்திய சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

(ரஜினி அவர்கள் அஞ்சலி செலுத்தும் புகைப்படங்கள் பின்னர் வெளியிடப்படும்).

————————————————————-
சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி நமது தளத்திற்கு திரு.கே.ஆர்.ஜி. சென்ற வருடம் அளித்த பேட்டி :

“முடிவற்ற ஆயுளை ரஜினிக்கு வழங்கியிருக்கிறான் இறைவன்!” – ரஜினி குறித்து மூத்த தயாரிப்பாளர் புகழாரம்!

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11129

————————————————————-
[END]

3 Responses to “பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. காலமானார்; ரஜினி நேரில் அஞ்சலி!”

 1. arun arun says:

  கே.ஆர்.ஜி சார் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்

 2. dr suneel dr suneel says:

  may his soul rest in peace..

 3. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Genre of Johnny & Thudikkum Karangal - Totally different. Both the films of KRG-Thalaivar combo will stay in our hearts forever. May KRG's soul rest in peace.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
 • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
 • Lingual Support by India Fascinates