You Are Here: Home » Featured, Happenings » நமது நண்பர் பிரபல புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன் சென்னையில் காலமானார்!

மிழ்த் திரையுலகின் மூத்த புகைப்படக் கலைஞர் திரு.சித்ரா சுவாமிநாதன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். பல்வேறு விழாக்களில் நிறைய நடிகர்களை நடிகைகளை அழகாக புகைப்படமேடுத்துள்ளார்.

எப்போதும்  தொப்பியுடன் காணப்படும் இவரை “தொப்பி” என்ற அன்புடன் குறிப்பிடுவார்கள் சீனியர்கள். தொப்பி அணியாவிட்டால் இவரை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், வியாழக்கிழமை கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

திரைத்துறையைச் சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.  சித்ரா சுவாமிநாதனுக்கு மனைவி, மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். பகுதியில் தனியாக வெளிவந்துள்ளது.

நமது தளம் முதன் முதலில் BLOG SPOT டாக செயல்படத் துவங்கிய காலகட்டத்தில் நமக்கு சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட  நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தந்தது இவர் தான். நமது தளத்திற்க்கென்று பிரத்யேக புகைப்படங்களை நான்     பயன்படுத்த  ஆரம்பித்தது இவரது அறிமுகம் கிடைத்த பின்னர் தான்.

உடல் நலம் குன்றியி காரணத்தால் கடந்த ஓராண்டாக நிகழ்சிகள் எதிலும் இவர் கலந்துகொள்ளவில்லை. முழு ஓய்வில் இருந்தார்.

சூப்பர் ஸ்டாருக்கு மிக நெருக்கமானவரான இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது, சூப்பர் ஸ்டார் இவருக்கு ரூ.50,000/- தந்து உதவியது குறிப்பிடத்தக்கது. அதே போல, அஜீத்தும் உதவியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் பற்றி இவர் நம்மிடம் கூறிய அனுபவங்கள், நமது தளத்தில் “கலியுக கர்ணன்” பகுதில் வெளிவந்துள்ளது. தவிர, தினமலர்-வாரமலர் இதழில், இவர் எழுதிய திரையுலக அனுபவங்கள் குறித்த தொடரில் சூப்பர் ஸ்டார் பற்றி சில வாரங்கள் சூப்பராக எழுதினர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இவரை இவரது வீட்டில் இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். நேற்று இவர் காலமான செய்தி கேள்விப்பட்டதும், நமது தளம் சார்பாக அஷோக் நகரில் உள்ள இவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றேன். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன்.

அங்கே நான் இருந்தபோது சுவற்றில் சித்ரா சிரித்துக்கொண்டிருந்த புகைப்படம்… பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தது.

என்ன சொல்வது….

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (குறள்)

பொருள் : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

Also check :
——————————————————————————————-
புகைப்படக்காரருக்கு நேர்ந்த அனுபவம் – கலியுக கர்ணன் சூப்பர் ஸ்டார் – Short Series 3
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=3879

“வள்ளல் என்றால் எம்.ஜி.யாருக்கு பிறகு ரஜினி தான்” – அனுபவஸ்தர் கூறும் ருசிகர தகவல்கள் – கலியுக கர்ணன் ரஜினி – Short Series # 11
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=6636

“சாப்பாடை நாம தான் சாப்பிடனும்; அது நம்மை சாப்பிடக்கூடாது” – கலியுக கர்ணன் ரஜினி – Short Series # 12
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=6817

“நான் பெற்ற விருது… சூப்பர் ஸ்டார் அடைந்த சந்தோஷம்” – நெகிழ்ச்சியில்  பிரபல புகைப்படக்காரர்
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=3415

——————————————————————————————-

[END]

6 Responses to “நமது நண்பர் பிரபல புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன் சென்னையில் காலமானார்!”

  1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    May his soul rest in peace.

  2. Anonymous says:

    சித்ரா சுவாமிநாதன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்….!

    -

    விஜய் ஆனந்த்

  3. B. Kannan B. Kannan says:

    சித்ரா சுவாமிநாதன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..

    May GOD give strength to his family on his demise..

  4. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Hi Sundar, I am able to breath purely because of your daily updates with passion. There is no exaggeration in my statement. You are like a bridge to touch upon Thalaivar in every aspect. May I pray Almighty for ChitraSwaminathan to rest his soul in peace. Nice update with your realistic senitments.

  5. sudhagar_us sudhagar_us says:

    அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

  6. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    May His soul Rest in Peace.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
  • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
  • Lingual Support by India Fascinates