You Are Here: Home » Featured, Happenings » THE GREATEST INDIAN முதல் சுற்று வாக்கெடுப்பு முடிந்தது — சில சந்தேகங்களும் விளக்கங்களும்!

ஹிஸ்டரி  டி .வி. & சி.என்.என்- ஐ.பி.என். மற்றும் அவுட்லூக் இதழ் இணைந்து நடத்தும் “மிகச் சிறந்த இந்தியர்” பட்டத்துக்கான வாக்கெடுப்பு, முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.

தொலைபேசி மற்றும் ஆன்லைன் வாக்கெடுப்பில் சுமார் 25,383 வாக்குகள் பெற்று அகில இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

கவனிக்க - இது தொலைபேசி மிஸ்டு கால் மற்றும் ஆன்லைன் (பேஸ்புக்) மூலம் அளிக்கப்பட வாக்குகள் மட்டுமே. இதைத் தவிர ஏ.சி.நீல்சன் நிறுவனம் நடத்தும் நேரடி வாக்கெடுப்பு மற்றும் நடுவர் குழுவினர் இறுதி செய்யும் பட்டியல் உள்ளது. அதில் அளிக்கப்படும் மதிப்பெண்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதன் பின்னரே 10 பேரின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

இப்போதைக்கு  தொலைபேசி மிஸ்டு கால் மற்றும் ஆன்லைன் (பேஸ்புக்) மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள்  அடிப்படையில் முதல் பத்து இடம் பிடித்துள்ள தலைவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு கிடைத்துள்ள வாக்குகளின் விபரத்தை இணைக்கப்பட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் காணவும்.

இரண்டாம் கட்ட ஓட்டெடுப்பு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெறும். அதில் வெற்றிபெருபவரே சிறந்த இந்தியராக அறிவிக்கப்படுவார்.

தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 10 இந்தியர்களுள் வாரம் இருவர் என, ஐந்து வாரங்களுக்கு இவர்களை குறித்த நிபுனர்களின் வாதங்கள் நடைபெறும். (Panel Discussion). வாதங்கள் நடைபெறும்போது, இவர்களுக்கு வாக்களிக்க அதற்க்கான நடை முறைகள் திறந்துவிடப்படும். அடுத்த கட்ட இந்தியர்கள் பற்றிய விவாதத்தை நிபுணர்கள் துவக்கும் முன் (ஒரு மணி நேரத்துக்கு முன்பு) இதற்கான வாக்குப்பதிவு முடிவடையும். நிபுணர்கள் விவாதிக்கும் இரு இந்தியர்களை தவிர வேறு எவருக்கும் அந்த சமயத்தில் வாக்களிக்க இயலாது.

தங்களது தொலைபேசி/மொபைல் எண்ணிலிருந்து குறிப்பிட்ட எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுப்பதன் மூலம், தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். இதே போல, தங்களது ஃபேஸ்புக் ஐ.டி.யிலிருந்தும் வாக்குகளை செலுத்தலாம். குறிப்பிட்ட தலைவரை தவிர மேலும் தான் விரும்புபவர்களுக்கு வாக்குகளை செலுத்தலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு முறை தான் செலுத்த முடியும்.

இதைத் தவிர ஏ.சி.நீல்சன் என்ற மார்கெட் சர்வே நிறுவனத்தின் மூலம், நாடு தழுவிய அளவில், சுமார் 2000 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன் முடிவில்; அதிகபட்ச வாக்குகளை பெறுபவர், ஆகஸ்ட் 15 அன்று சிறந்த இந்தியராக அறிவிக்கப்படுவார்.

குறிப்பு : இந்த வாக்கெடுப்பு குறித்து, நமக்கு பல ஆட்சேபங்கள் இருக்கும்போதிலும், தேசியத் தலைவர்களின் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு திரு.ரஜினி அவர்களுக்கு கிடைத்திருப்பதும், முதல்  10 நபர்களுள் அவர் இடம்பெற்றிருப்பதும் நமக்கு மிக்க மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ரஜினி அவர்களின் நிலைப்பாடு என்ன?

ரசிகர்களும் மக்களும் தம்மீது வைத்துள்ள அன்பையும், தேசிய ஊடகங்கள் அவர் மீது வைத்துள்ள மதிப்பையும் ரஜினி அவர்கள் உணர்ந்துகொள்ள இது மற்றொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இந்த வாக்கெடுப்பு குறித்தோ இதன் வெற்றி தோல்வி குறித்தோ ரசிகர்கள் தான் பதட்டமாக இருக்கிறார்களே தவிர ரஜினி இது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அக்கறை கொள்ளவுமில்லை. ஏனெனில், தம்மினும் தகுதியுடைய பல தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை அவர் உணர்ந்தேயிருக்கிறார். ஆனால், இது அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்ட விஷயம் என்பதால், அவர் என்ன செய்ய முடியும் என்றே அவர் இது குறித்து நினைப்பதாக - நான் கருதுகிறேன்.

மற்றபடி “இந்தபட்டியலில் இடம்பிடித்திருப்பவர்கள் தான் சிறந்த இந்தியர்கள், இதில் வெற்றி பெறுபவர் தான் மிகச் சிறந்த இந்தியர்” என்று கருதத் தேவையில்லை. ஒரு குடிமகனாக தமது கடமைகளை சரிவர செய்துகொண்டு, நாட்டைப் பற்றி கவலையும் அக்கறையும் கொண்டு தேசிய  சிந்தனையுடன் வாழும் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த இந்தியரே!

மேலும் விரிவான விபரங்களுக்கு வாக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்க்கவும். http://www.historyindia.com/TGI/

[END]

12 Responses to “THE GREATEST INDIAN முதல் சுற்று வாக்கெடுப்பு முடிந்தது — சில சந்தேகங்களும் விளக்கங்களும்!”

  1. arun arun says:

    Tamil cinema icon Rajinikanth or fondly known as just Rajini by his crores of fans is a true symbol of India's unity in diversity. His ancestors are from Maharashtra, who settled down in Karnataka. Rajinikanth, whose real name is Shivaji Rao Gaekwad started his career as a city bus conductor in Bangalore in the early 1970s. His father was a head constable with Karnataka police.

    The renowned Tamil film director K Balachander spotted this young talent and took him to Madras (Chennai) to give him a chance. Rest is history. Rajini is the highest paid actor in India. For the outsiders, the popularity he enjoys is difficult to fathom. Superstar Rajini is THE ACTOR with Midas touch. Nobody in Indian cinema can claim the following Rajini has.

  2. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    சூப்பர் சுந்தர் அண்ணா..

    தலைவர் தான் ALWAYS கிரேட் …

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  3. dr suneel dr suneel says:

    சரியான நிலைப்பாடு மற்றும் தெளிவு..

  4. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Thalaivar a jeyika vaipom

  5. k.rajiniprabhu k.rajiniprabhu says:

    வணக்கம் தலைவா

  6. arul dinesh arul dinesh says:

    thalaivar rockzzzzzzzzzzzzzzzzzzzz

  7. soban babu soban babu says:

    Even world knows that thalaivar is been rated low than what he deserved.this is somthing gimmick for media to attract TRP

  8. Srini Srini says:

    Hi all

    I am least bothered about what is the ranking my Thalaiver stands in the list. To me he is the greatest Indian than Mahatma Gandhi.

    Regards

    Srini

  9. raja raja says:

    nalla soneenga natukku nllathu seiyalenaalum oru kettathum seyyama irunthaale avar kooda sirantha indiar thaan

  10. Anbarasu Rajinirox Anbarasu Rajinirox says:

    Am simply said Rajini the God of Indian Cinema………. Thalaivaaaaaa u r Great(GOD)……

  11. M.N. Arun Ganesh M.N. Arun Ganesh says:

    ஆணையிடு மன்னவா அம்பாய் பாய்கிறோம்

  12. saravanan saravanan says:

    நண்பர்களே

    தலைவர் நல்ல மனிதர் தான்

    ஆனால் அம்பேத்கார் அன்னை தெரசா போன்றவர்களிடம் சேர்த்து வைத்து பார்க்கும் அளவுக்கும் ஒன்றும் பெரிதாக நினைத்து பார்க்க கூட முடியாத ஒன்று. அந்த பெரியவர்கள் சாதனையை மறந்தவர்களும் தெரியாதவங்களும் இல்லைஞர்களும் தான் இப்போதைக்கு ஒட்ட போட்டு இருக்கிறார்கள். தலைவர் இதே போன்று அவர்களை போல 20 30 ஆண்டு கழித்து ஒட்டு போட தலைவர் பெயர் வந்தால் அந்த பெரியவர்கள் அளவில் ஒரு 10 சதவிதம் கூட வர மாட்டார் என்பது உறுதி. அவர் சாதனை நிகழ்த்த வேண்டும் சும்மா சினிமா சாதனை போதாது. இது ஒரு தொழில் சாதனை தான்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
  • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
  • Lingual Support by India Fascinates