









You Are Here: Home » Featured, Happenings » ஹி..ஹி.. நம்ம தொழில்ல இதெல்லாம் சாதாரணமப்பா…
முக்கியப் பிரமுகர்களை அரிதாகவே சந்திக்கும் ரஜினி சமீபத்தில் அரசியல் விமர்சகரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியருமான சோவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுவும் சோவை அவர் வீடு தேடி சென்றது பல கேள்விகளை எழுப்புகிறது.
இது குறித்து சுவாமி கப்ஸானந்தா திரட்டிய(?!) தகவல் உங்களுக்காக.
“ரஜினி சோவை சென்று திடீரென்று சந்தித்திருக்கிறாரே… இதற்கு பின்னணி ஏதும் உண்டா?”
“என்ன இப்படி கேட்டு விட்டீர்? சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பராச்சே சோ. இவர் ஆரம்பகாலத்தில் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். அப்போதெல்லாம் வறுமையின் காரணமாக ரஜினி மதிய உணவு சாப்பிடுவதில்லை. சோ தான் தனது உணவில் பாதியை ரஜினிக்கு தருவாராம். அதிலிருந்தே சோவின் நெருங்கிய நண்பராகிவிட்டார் ரஜினி. இந்த நெருக்கத்தால் தான், பிற்பாடு சோவின் யோசனையின் பேரில் ஏற்பட்ட தி.மு.க.-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார் என்று இப்போது தெரியவந்துள்ளது.”
“அட… இது புது விஷயமா இருக்கே. உம்ம வாய்க்கு சர்க்கரை தான் போடணும். சரி… விஷயத்துக்கு வாரும்” என்று நாம் கூற, சுவாமி கப்ஸானந்தா… “சற்று பொறும்…” என்று கூறி, தனது ஜோல்னாப் பையில் இருந்து வாட்டர் பாக்கெட்டை எடுத்து அதை உடைத்து குடித்தார்.
“ரஜினி ஏன் சோவை வீடு தேடி சென்று சந்தித்தார் என்று நான் விசாரித்துவிட்டேன்.”
“ஏன்?”
“அதாவது கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு முன்பு ரஜினி செலுத்திய தனது வீட்டுவரியில் ரூ.50/- பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லையாம். சரி..நேரடி நடவடிக்கையில் இறங்குவது என்று மாநகராட்சி மன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான கோப்பு முதல்வர் மற்றும் மேயர் டேபிளில் கடந்த ஒரு மாதமாக இருந்ததாம். முதல்வர் கொடநாடு செல்வதற்கு முன்பு இந்த கோப்பில் கையெழுத்திட்டுவிட்டதாக கூறப்படுகிறது.”
“ஆ… அப்புறம்?”
“இது எப்படியோ ரஜினிக்கு தெரிந்துவிட, அவர் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக துக்ளக் ஆசிரியரை சந்தித்ததாக கூறப்படுகிறது.”
“ரஜினிக்காக சோ இதில் தலையிடமாட்டாரா என்ன?”
“அப்படியல்ல விஷயம்… தான் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நலம் விசாரித்த முதல்வரையும், கலைஞரையும் நேரில் சென்று முதலில் சந்தித்த ரஜினி, ராமச்சந்திராவுக்கே சென்று சந்தித்த தன்னை இரண்டாவதாக சந்தித்தது சோவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது”
“அச்சச்சோ…!”
“இதனால் தான ரஜினி ஒவ்வொருமுறையும் தனது வீட்டுக்கு வரும்போதும் தரும் கும்பகோணம் ஃபில்டர் காபியை இம்முறை சோ தரவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ரஜினி பயங்கர அப்செட்டாம்”
“இருக்காதா பின்னே?… சரி…. மாநகராட்சி நோட்டீஸ் விஷயத்துக்கு வாரும்”
“அவசரப்படாதீர். இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே நடந்ததாம்.”
“என்ன அது?” நாம் சேரின் நுனிக்க வர…
கப்ஸானந்தா மீண்டும் ஒரு முறை தனது பையில் இருந்து வாட்டர் பாக்கெட்டை எடுத்து குடித்தார். பின்னர் தொடர்ந்தார்… “சோவின் நாடகக் குழுவில் அவருக்கு உதவியாக இருந்த ஒருவர் அப்போது சோவின் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சினிமா தயாரிக்கும் கனவில் இருந்த அவருக்கு “நான் ரஜினியின் கால்ஷீட்டை உனக்கு ஒரு நாள் வாங்கித் தருகிறேன்” என்று பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அவருக்கு சோ உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதை அவர் சந்திப்பின்போது சோவுக்கு ஞாபகப்படுத்த, சோ இது குறித்து ரஜினியிடம் பேசினாராம். ஆனால், ரஜினி இதற்க்கு பிடிகொடுக்கவில்லை போலிருக்கிறது.”
“ஃபில்டர் காபி கிடைக்காத வருத்தம் அவருக்கு”
“ரஜினி கால்ஷீட் தருவதாக இருந்தால் அவருக்கு நூறு கோடிவரை சம்பளம் தந்தது ஐநூறு கோடி வரை செலவு செய்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமெடுப்பதாக இருந்தாராம் அந்த உதவியாளர்.”
“வட போச்சே. சரி இயக்குனர் யாராம்?”
“ஷங்கரிடமும் முருகதாஸிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல். இதற்கிடையே கமல் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதால் அதற்கு போட்டியாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் யாரையாவது போடலாமா என்றும் யோசனை உள்ளதாம்!”
“அடி சக்கை. சரி.. மாநகராட்சி நோட்டீஸ் விஷயத்தில் என்ன தான் செய்யப்போகிறாராம் ரஜினி?”
“சோவே கைவிரித்துவிட்டபிறகு வேறு யாரிடம் போவார்? அமைதி தேடி இப்போதைக்கு கோவை - ஆனைகட்டியில் தயாராகிவரும் பிரம்மாண்டமான வீட்டில் சில காலம் ரகசியமாக ஓய்வெடுத்துவிட்டு வரக்கூடும். அதற்குள் மாநகராட்சி இந்த விஷயத்தை மறந்துவிடும் என்று நினைக்கிறாராம்”
“சரி.. உண்மையில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது ஏனாம்?”
“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு சென்றால் அதை சமாளிப்பதற்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைக்கவே இந்த நோட்டீஸ் விவகாரத்தை கையில் எடுத்தார்களாம்!”
“சபாஷ்…. நம் அரசியல்வாதிகள் சாமர்த்தியசாலிகள்”
———————————————————————————————————
என்ன நண்பர்களே ஒன்னும் புரியலியா?
தி.மு.க.தலைவர் கலைஞரை சூப்பர் ஸ்டார் ரஜினி மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்த ஒரு சிறு விஷயத்தை வைத்து…. “வருமான வரித்துறை ரெய்டு- ரெட் ஜெயண்ட் ரஜினி படம் தயாரிப்பு - அதற்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு” என்ற ரீதியில் அள்ளிவிடும் பத்திரிக்கைகளையும், அதை Ctrl+C, Ctrl+V செய்யும் இணையதளங்களை பார்த்தும் நமக்கு தோன்றியது கற்பனை இது. புலானாய்வு மற்றும் வாரப் பத்திரிக்கைகளுக்கு மட்டும் தான் இது போல எழுத வருமா என்ன?
நாளைக்கே தலைவர் சோவை சந்திச்சார்னா அதுக்கு இப்படியும் ஒரு கவர் ஸ்டோரி + வால் போஸ்டர் வரலாம்! சொல்லமுடியாது… இதைப் பத்திரமா புக்மார்க் பண்ணி வெச்சிக்கோங்க. (இதுல இதைப் பத்தி ரொம்ப கவலையா விசாரித்து நமக்கு நாலு ஃபோன் வரும் பாருங்க… அது இன்னும் காமெடி!)
என்ன செய்வது… பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சம் என்றால் ரஜினியை பிடித்து பிராண்டி பார்ப்பதே பத்திரிக்கைகளுக்கு வழக்கமாக போய்விட்டது. அவர்களுக்கு வசதியாக அவரது மௌனம் வேறு. கேட்கவேண்டுமா என்ன?
ரஜினியை விட்டுவிடுங்கள்… அவர் நிம்மதியாக அவர் வேலையை பார்க்கட்டும்! (இன்னைக்கு வந்த செய்திகளை பார்த்து மெய்யாலுமே நான் டென்ஷன் ஆயிட்டேங்க. எது கூட எதை முடிச்சு போடுறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாம போச்சு!)
பத்திரிக்கை + இணைய செய்திகளை படியுங்க. வேண்டாம்னு சொல்லலே. ஆனா அதை அப்படியே நம்புறதுக்கு முன்னாடி ஒரு நாலு செகண்ட் யோசிச்சி பாருங்க. (இந்த பத்திரிக்கைகளைப் பத்தியும் நமக்கு தெரியும். தலைவரைப் பத்தியும் நமக்கு தெரியும் தானே?)
[END]
I was Shocked after reading the first part,then only cme bck to normal after reading the later half.
ரெம்போ சரியா சொன்னிங்க சுந்தர்……அதுலயும் அந்த ஐம்பது ரூபாய் மேட்டர் கொஞ்சம் ஓவர்…என்ன பண்ண நம்ம பத்திரிகைகாரங்க இதையும் தலைப்பு செய்தியாக வெளியிடலாம் …
.
மாரீஸ் கண்ணன்
மேகம் மிதந்தாலும், காகம் பறந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு …….
விடுங்க பாஸ் எழுதறவன் 1000-மும் எழுதுவான் 1001-ம் எழுதுவான் அதெல்லாம் நம்புறத்துக்கு நாம் என்ன முட்டாளா ….
Semma kalaai anna
Thaaru maaru!!! Mukkiyama WATER PACKET thaan ULTIMATE
நீங்க ஆரம்பிக்கும் போதே எனக்கு தெரியும்… ஹீ ஹீ ஹீ… கலக்கல் சுந்தர் அண்ணா…
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
ஹா ஹா ..கொடுமை ..:):):)
சுந்தர் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிவிட்டு மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விற்பனை செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள நம் பத்திரிக்கைகள் இந்தமாதிரி ஒரு செய்தியை வெளியிடுவதற்கு நிறைய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் சுந்தரின் கற்பனை வளமும் அதேசமயத்தில் அவருடைய ஆதங்கமும் நமக்கு புரிகிறது. "நாலு படி மேலேபோனா நல்லவனா உடமாட்டாங்க, பாடுபட்டு பேர சேத்தா பல கதைகள் சொல்லுவாங்க". தலைவரின் இந்த பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
Hello Sundar,
It'd be nice if you/someone could translate just the gist of the article in English. I can't read Tamil and so are many out there who cannot but are very eager to read about Thalaivar.. thanks for the already wonderful work you're doing.
- Harish
———————————————
Ya.. Time is the only constraint. Anyway will try.
thanks.
- Sundar
படிச்ச உடனே ஷாக் ஆயிட்டேன்…கடைசில சிரிப்பு தான் வருது……! இந்த மாதிரி எழுதுறவங்க எழுதிட்டே தான் இருப்பாங்க….அது கடைசில பெரிய காமெடி ஆகுதுங்கறது எழுதுறவங்களுக்கு தெரிவதில்லை…..!
-
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார்"
-
விஜய் ஆனந்த்
செம கட்டுரை . இத குமுதம் , ஆனந்தவிகடனுக்கு அனுப்பனும்
மெய்யாலுமே நான் இது எதுலயோ வந்திருக்குன்னு நினைச்சு தான் படிக்க ஆரம்பிச்சேன். நீங்க உண்மையை சொல்லலேன்னா ஏதோ பத்திரிக்கைல வந்திருக்குன்னே நினைச்சிருப்போம் போல.
சுந்தர் , சூப்பர். ஆனால் "நச்" பத்தலை
))
"ரஜினியின் இந்த ரூ.50/- பாக்கியினால் தான் அரசுக்கு வருமானமே குறைந்து போய்விட்டது" என்று பிராந்திய மக்கள் கட்சி அறிக்கை என்று முடித்திருக்கலாம்.
சுந்தர் சீரியஸா வாசிக்க தொடங்கிய போது, தலைவர் பாக்கியெல்லாம் வைக்கிற ஆள் இல்லையே என மனதிற்குள் நினைத்துக்கொண்டே வாசித்தேன் (எழுதினது சுந்தர் அதுதான்). பின்புதான் தெரிந்தது, இது கப்ஸாகாரர்களுக்கு சுந்தரின் கலாய்ப்பு என்று… சூப்பரப்பு…. சூப்பர்!!
adingada adingada valachu valachu adingada yaar kekka pora
டியர் சுந்தர் ஜி,
நிஜத்தில் சோ-ரஜினி சந்திப்பு நடந்தால் நிச்சயமாக இந்த மாதிரி ஒரு கப்சா ரிப்போர்ட் எதாவது ஒரு புலனாய்வு பத்திரிகையில் வரும்.
—-
Tail piece:
—-
உங்களோட இந்த கற்பனை திறமையை பார்த்துட்டு ஏதாவது புலனாய்வு பத்திரிக்கை ஆசிரியர் உங்களை ரிபோர்ட்டர் வேலைக்கு உடனே செலக்ட் பண்ண போறாங்க .. . என்ஜாய் .
——
சூப்பர் சுந்தர் அண்ணா
படிக்கிற எங்களுக்கே சிரிப்புச் சிரிப்பா வருதுண்டா எழுதின சுந்தர் அண்ணாக்கு எப்பிடியிருந்திருக்கும்.
(அடிச்ச கைப்புள்ளைக்கே சட்டை கிளிஞ்சிருக்கே அடிவாங்கினவங்க நிலைமை எப்பிடியிருக்கும்)
இத படிக்கும் போது, நெஜமாலுமே இது குமுதம்,விகடன் போல எதோ புக்ல வந்துருக்குதுன்னு நெனச்சுகிட்டே படிச்சேன்…….அப்புறம் தான் தெரிஞ்சுது இது உங்களோட லீலைன்னு…….பரவால ஜி……..வார பத்திரிக்கைகளுக்கு பெரிய போட்டிய குடுப்பீங்க போல……ஹி ஹி……
TRANSLATION
Just an imagination!
THALAIVAR MEETS CHO… WILL IT ESTABLISH A POLITICAL SHAKE IN TN ?…
Thalaivar recently met his friend Cho Ramaswamy who is also said to be the editor of Tughlaq magazine. He is also said to be a political critic as you all know. Thalaivar is a good friend of Cho and Cho is said to have provided his afternoon lunch many times to our Thalaivar during his early days of struggle as he had no money for the lunch. We met our Gapsananda who told us in detail about the meet that happened between Cho and Thalaivar recently.
Gapsananda taking his water packet out of his bag drinking the same says Thalaivar met Cho recently over his property tax problem that was present in the corporation. It is said that Thalaivar missed to pay Rs 50/- for his house property tax last year , when there was a change in the ruling party in TN and as Thalaivar also suffered health issues. It is said that those papers have reached the counsellor and the counsellor is said to have signed the papers and submitted to Jayalalithaa.. So, Thalaivar has approached his friend Cho to help solve this - who is also a supporter and friend of AIADMK Chief Jayalalithaa. It is said that AIADMK are making use of it, so that they can use the actor in their next election campaign to oppose the DMK. Thalaivar who was aware of all that has approached Cho to sort the issue immediately says our Gapsananda.
But, Cho who did not provide Thalaivar's favourite Kumbakkonam coffee when he had come home has expressed his unwillingness to help Thalaivar in this issue. Because when Cho approached Thalaivar for his friend's sake who had requested him to somehow make Thalaivar agree to do a movie and that he is ready to do a big budget movie of budget Rs 500 crores and is ready to pay Rs 100 crores as salary to Thalaivar. But Thalaivar did not agree or talk much on that which did upset Cho. Then Thalaivar went on to meet Jayalalithaa and Kalaingar first after he returned from an hospital from Singapore. And then only met Cho, which made him secondary felt Cho. These things did upset Cho which has not allowed him to help Thalaivar in this Corporation tax issue. So, Thalaivar has decided to take a land and build his new house and stay there in Coimbatore till the next elections atleast till there is a change in the ruling party - after which it would be forgotten says our Gapsananda.
—————————————————————————————————————————————————————————————————————————
We know who is Thalaivar ! Who these media ppl are ! Look at how they build these things and how they make it just to make their news circular. And some websites even copy them and paste it into theirs without even knowing the truth. We felt it funny , so we shared this as a joke. I think i might receive 4-5 calls too from a few people who are going to ask me is it true Sundar Sir ?.. Its going to be real fun if they do so.
——————————————————————————————————————————————————————————————————————————-
grt work praveen.
thanks a ton.
- Sundar
Hi Sundar,
Any news on Hindi release of baasha? Didnt hear anything after trailer release!
Rgds
Swami.
good
WOW!! super sunder.
Mr.Sundar dont become a conventional crowd puller,
Friend, i don't know under what context you have said like this. But my intention was truly not that. Trust me. I was really irritated by the way some magazines carried the article of Rajii's meet with Kalaignar.