You Are Here: Home » Featured, VIP Meet » “ரஜினியுடன் ஏற்பட்ட பழக்கம் இறைவன் எனக்கு கொடுத்த வரம்!” – 1200 படங்களுக்கும் மேல் நடித்த நடிகர் வினுச்சக்கரவர்த்தியுடன் ஒரு சந்திப்பு – Part I

மீப காலங்களாக நான் நமது தளத்தின் பேட்டிக்காக சினிமாவுக்கும் அப்பாற்ப்பட்டு சாதனையாளர்களை சந்திக்க துவங்கியதிலிருந்து எனது எண்ண ஓட்டமே மாறிவிட்டது. வெற்றிகரமான மனிதர்களை பார்க்கும்போதும் அவர்களுடன் பேசும்போதும் அவர்கள் வெற்றியை பார்த்து பிரமிக்கும் அதே சமயம்… இவர்கள் வெற்றி பெற்றது எப்படி? ஏன்? என்ற கேள்விகள் எழுகிறது. அதற்கு விடையும் கிடைத்துவிடுகிறது.

வினு சக்கரவர்த்தி அவர்களை நீங்கள் ஒரு குணச்சித்திர நடிகராக மட்டுமே அறிவீர்கள். ஆனால்… அவர் கடந்து வந்த பாதை, அவர் தற்போதிருக்கும் நிலை… இனி அவரது லட்சியம் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த மாபெரும் கலைஞன்… நமது வாசகர்களை மிகவும் நெருக்கமாக பாவித்து… தனது வாழ்க்கைப் பாதையை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். அதில் பல பாடங்கள் நமக்கு ஒளிந்திருக்கின்றன. படியுங்கள். பயன் பெறுங்கள்.

நமது FORCE TEAM குறித்தும் அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் நான் அடுத்து அளிக்கப்போகும் பதிவு, இவருடைய வாழ்க்கை முறையிலிருந்து தான் துவங்கும். எனவே, அலட்சியமாக கருதாமல், பொறுமையாக படிக்கவும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் / ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரம் எத்தனை என்று உங்களுக்கு தெரியும். அதை பயனுள்ளதாக இன்று மாற்றிக்கொள்ளுங்கள்.

நமது FORCE TEAM குறித்தும் அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் நான் அடுத்து அளிக்கப்போகும் பதிவு, இவருடைய வாழ்க்கை முறையிலிருந்து தான் துவங்கும். எனவே, அலட்சியமாக கருதாமல், பொறுமையாக படிக்கவும்.

வாழ்க்கை குறித்து நமது கண்ணோட்டம் எப்படியோ அப்படியே நமது வாழ்க்கை முறைகளும் அமைகிறது என்பதற்கு வினு சக்கரவர்த்தி அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கை மிகப் பெரிய உதாரணம்.

படிக்க ஆரம்பித்தவுடன், நேரம் செல்ல செல்ல நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவீர்கள்… சூப்பர் ஸ்டார் பற்றி இவர் சொல்ல ஆரம்பிக்கும்போது… உங்கள் முழு கவனமும் பதிவில் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

படிக்க ஆரம்பித்தவுடன், நேரம் செல்ல செல்ல நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவீர்கள்… சூப்பர் ஸ்டார் பற்றி இவர் சொல்ல ஆரம்பிக்கும்போது… உங்கள் முழு கவனமும் பதிவில் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வினு சக்கரவர்த்தி போன்றவர்களை சந்திக்க நேர்ந்ததற்கும், அவருடன் சில மணித் துளிகள் செலவிட நேர்ந்ததற்கும், அவரின் நட்பு கிடைத்ததற்கும், இறைவனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சரியான நபர்களைத் தான் எனக்கு அவன் தொடர்ந்து  அடையாளம் காட்டி வருகிறான்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால், பல்வேறு கவனச் சிதறல்கள் இருக்ககூடிய இந்த சினிமா என்னும் மாய உலகத்தில் நிச்சயம் எவரும் சாதனையை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபித்தவர்களுள் வினு சக்கரவர்த்தியும் ஒருவர்.

நமது தளத்தின் பேட்டிக்காக அவரை தொடர்புகொண்டபோது, சரியாக இரண்டுவாரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறு சொன்னார். அதே போல, தொடர்புகொண்டோம்… ஒரு நாள் மாலை வருமாறு கூறினார். நண்பர்கள் கண்ணன் மற்றும் குட்டி சந்திரன் ஆகியோருடன் நாம் அவரை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சந்திக்க சென்றோம். நண்பர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன் பொதுவான விஷயங்கள் பேசிய பிறகு… உரையாடலுக்கு தயாரானோம்.

அவர் வீட்டில் இருப்பது போல லுங்கி மற்றும் கை பனியனுடன் இயல்பான ஒரு தோற்றத்தில் இருந்தபடியால், எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

“அட நமக்கு என்னப்பா இருக்கு… நான் ரொம்ப சிம்பிளான ஆளு… இப்படியே பேசுவோமே…!” என்றார்.

இதுபோன்ற திரைத்துறை மூத்தவர்களை சந்திக்கும்போது, அவர்களின் சினிமா அறிமுகம், அவர்கள் வந்த விதம், இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு, இவைகளைப் பற்றி அவர்களை பேசவைத்து, பின்னர் அவர்களுக்கு சூப்பர் ஸ்டாரிடம் உள்ள பழக்க வழக்கங்கள், அனுபவங்களைப் பற்றி கேட்கவேண்டும். அது தான் முறை. மரியாதை. இது நமக்கு தெரியும் என்பதால்… “முதல்ல உங்களை பற்றி, உங்க திரையுலக பயணங்கள் அனுபவங்கள் பற்றி சொல்லுங்க சார்…” என்றேன்.

ஒரு சில நிமிடங்கள் கண்மூடி யோசித்தவர், மடை திறந்த வெள்ளம் போல, தாமாக பேச ஆரம்பித்துவிட்டார். நாமும் குறுக்கே எதுவும் பேசாது கவனமாக கேட்டுக்கொண்டும், குறிப்பெடுத்துக்கொண்டும் இருந்தோம்.

இதை படிச்சி முடிக்கும்போது - சூப்பர் ஸ்டார் ரஜினி கிட்டி சார் கிட்டே ஃபிளைட்ல சொன்னது தான் உங்க ஞாபகத்துக்கு வரும். “வாழ்க்கை என்பது எவ்ளோ சிம்பிள்? நாம ஏன் சார் அதை இவ்ளோ காம்ப்ளிகேட் பண்ணிக்கணும்?”

- சுந்தர்
E : simplesundar@gmail.com | M : +91-9840169215

—————————————————————————————————-

Over to Vinu Chakravarthi sir…

“ரஜினியுடன் ஏற்பட்ட பழக்கம் இறைவன் எனக்கு கொடுத்த வரம்!”

வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். உலகப் பந்திலே எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ எங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

வந்திருக்கும் அன்பர்கள் எனக்கும் திரு.ரஜினி அவர்களுக்கும் உள்ள நடிப்பு ரீதியில் உறவு முறை அல்லது நாங்கள் நடிக்கின்ற இடத்தில் ஏற்படுகின்ற நட்பு ரீதியிலான உறவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அதற்கு முன்பு நான் யார் என்று உங்களிடம் ஆழமாக பதிவு செய்துவிட்டு, அதற்கு பிறகு அவரின் நடிப்பு மற்றும் நட்பு பற்றி சொல்கிறேன்.

திண்ணைப் பள்ளிகூடத்தில் படிப்பு

நான் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவன். அங்கே எங்கள் தாத்தா நடத்திய திண்ணைப் பள்ளிகூடத்தில் படித்தவன் நான். ஒரு மிகப் பெரிய குடும்பத்தில், தோன்றியவன் நான். என் அப்பாவுடன் பிறந்தவர்கள் - ஆண்கள் மட்டுமே மொத்தம் - 12 பேர் அடங்குவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பம் குழந்தைகள் என்று கணக்கிட்டால் என் தம்பிமார்கள் மட்டும் மொத்த 60 பேர். எனவே எங்களுக்கென்றே  தனி பள்ளிக் கூடத்தை எங்கள் தாத்தா நடத்தி வந்தார்.

காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு தயாராகி, விபூதி பூசிக்கொண்டு எங்கள் தாத்தா நடத்தும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆஜராகிவிடுவோம். எங்களுக்கு இந்தப் பக்கம் சாப்பிட பொங்கல் வைப்பார்கள். அந்தப் பக்கம் மாட்டுக்கு தவிடு வைப்பர்கள. இப்படி மாடுகளோடும் மனிதர்களோடும் சேர்ந்து வாழ்ந்தவர்கள் நாங்கள்.

வகுப்புல எங்களுக்கு என்ன சொல்லித் தருவாங்கன்னா….

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் 127)

அப்படின்னு திருக்குறள் பத்தி சொல்லி ஒரு வகுப்பு. இது ஒரு ஏஜ் க்ரூப்புக்கு.

இன்னொரு ஏஜ் க்ரூப்புக்கு அவங்களுக்கு  ஏத்த மாதிரி ஏதாவது விஷயம். இப்படி சின்ன வயசுல தெரிஞ்சிக்கவேண்டிய விஷயங்களை நிறைய தெரிஞ்சிகிட்டோம்.

நாடகத்தில் ஏற்பட்ட ஆர்வம்

நாங்க படிக்கும்போது அங்கே ஒச்சாயி தேவர்னு ஒருத்தர் அறிமுகமானார். ஹார்மோனியப் பெட்டியை கையில் வெச்சிகிட்டு பசங்களை வெச்சிகிட்டு ஊர் ஊரா போய் நாடகம் போடுவார். நாடகம் போடும்போது சின்ன சின்ன வேஷங்களில் நான் போய் தலையை காட்டுவேன். யாராவது நாடகத்துக்கு வரலேன்னா நான் தான் அன்னைக்கு SUBSTITUTE.

எங்க ஊர் - உசிலம்பட்டி - நிறைய விஷயத்துக்கு ஃபேமஸ். அதுல முக்கியமானது சாராயம் காய்ச்சுறது அப்புறம் அருவா செய்றது. நான் அங்கேயே இருந்தா கெட்டுப் போய்டுவேன்னு பயந்து நான் பத்து வயசா இருக்கும்போதே என்னை கூட்டிக்கிட்டு வந்து ராயப்பேட்டை வெஸ்லே ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க என் வீட்ல.

சென்னைக்கு வந்தது

அங்கேயிருந்து வைஷ்ணவா காலேஜ் (Diploma). பின்னே அங்கேயிருந்து ஜெயின் காலேஜ்ல சேர்ந்தேன். அங்கே நான் தான் என்.சி.சி. இன்சார்ஜ். நான் கருகருன்னு முறுக்கு மீசை வெச்சிருப்பேன். அப்போ ஒரு ஃபங்க்ஷனுக்காக வந்த ஒரு போலீஸ் ஆபீசர்…. என்னை கிட்டே வந்து பார்த்துட்டு என் மீசையை தொட்டு பார்த்தாரு. “You are the fittest person to join Police Department. So, come and join in Police” அப்படின்னு சொன்னார்.

அடுத்த நாள் நேரா அவரை பார்க்கப் போனேன்…. ஒரு ட்ரெயினிங்குக்கு அனுப்பி வெச்சார் என்னை. ஆறு மாசம் ஹெவி ட்ரெயினிங். முட்டி போட்டு நடக்கிறது, ஹார்ஸ் ரைடிங், ஃபயரிங், அப்படி இப்படின்னு பயங்கர ட்ரெயினிங்.  ட்ரெயினிங் முடிச்சிட்டு வந்தவுடனே இங்கே போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல ஸ்பெஷல் ஆபீசரா வேலை கிடைச்சிடுச்சு. என் கூட சேர்த்து மொத்தம் 100 பேரை செலக்ட் பண்ணினாங்க.

தேடி வந்த போலீஸ் வேலை

காக்கி ஃபுல் பேண்ட், பிரவுன் ஷூ, வொயிட் ஸ்லாக் ஷர்ட் அப்படின்னு ஒரு ஸ்டைலான யூனிபார்ம் எங்களுக்கு. கூடவே ஒரு புல்லட் வண்டி & ஒரு லோட் பண்ண ரிவால்வர் இதெல்லாம் கொடுத்தாங்க. சென்னையில் டென்ஷனான இடங்கள்ல எனக்கு டூட்டி. திருவல்லிக்கேணி, அயனாவரம் இப்படி பல இடங்கள்ல டூட்டி பார்த்திருக்கேன்.

அப்புறம் ரெயில்வேயில் வேலை கிடைச்சது. இதை விட கூடுதல் சம்பளம், குடும்பத்துக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ், அப்படின்னு பிரமாதமான வேலை. என்னோட உயரதிகாரியை கன்வின்ஸ் பண்ணி அங்கே ஜாயின் பண்ணிட்டேன். திருச்சில வேலை. ஒவ்வொரு ஸ்டேட்லயும் ஒரு ஊர்ல மினிமம் ஒரு வருஷமாவது வேலை பார்க்கணும். அப்போ தான் SUPERINTENDENT ஆகமுடியும். நான் ஏற்கனவே பி.காம் படிச்சிருந்தேன். கூடவே மதுரை காமராஜ் யூனிவர்சிடியில எம்.ஏ. சைக்காலஜி படிச்சேன். அதுனால என்னோட மெரிட் சான்ஸ் அதிகமா இருந்திச்சு.

புட்டண்ணா கனகலுடன் அறிமுகம்

மைசூர்ல கொஞ்ச நாள் ஸ்டேஷன் மாஸ்டரா ஒர்க் பண்ணிட்டுருந்தேன். அப்போ அங்கே அடிக்கடி ஒருத்தர் வருவார். பார்த்தா ராயலா இருப்பார் 555 சிகரெட் டின் அப்புறம் கையில் FILMFARE புக் ஒன்னை எடுத்துட்டு வருவார். அடிக்கடி அவர் வந்து போறதால எனக்கு ரொம்ப பரிச்சமாயிட்டார். என்கிட்டே ஒரு நாள் கேட்டார்… “வினு சக்கரவர்த்தி, உன்னோட பாடி லாங்குவேஜ், உன்னோட அந்த க்ரிப்பான லுக் இதெல்லாம் பார்க்கும்போது நீ வெறும் ரயில்வே ஆபீசர் மட்டுமில்லே… அதையும் தாண்டி உன்கிட்டே ஏதோ ஒன்னு இருக்கு” அப்படின்னார்.

“எஸ்… சார் நான் பேசிக்கலி ஒரு டிராமா ஆர்டிஸ்ட்” அப்படின்னேன். “வெரி குட்… ஐ ஆம்… புட்டண்ணா கனகல்” அப்படின்னார். புட்டண்ணா கனகல் என்பவர் இங்கே பாலச்சந்தர், பாரதிராஜா எப்படியோ அப்போ அங்கே அந்த கிரேட்ல இருந்த ஒரு டாப் டைரக்டர். அவர் பண்ணின படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான்.

“நான் ஈவ்னிங் வண்டி அனுப்புறேன். என்னை வந்து என் ஆபீஸ்ல பாருங்க” அப்படின்னார்.

சினிமாவில் கிடைத்த முதல் அட்வான்ஸ்

ஈவ்னிங் அதே மாதிரி போனேன். அவரோட அசிஸ்டென்ட்ஸ் சுமார் 12 பேர் நிக்கிறாங்க. என்னை மட்டும் உட்கார வெச்சி, “உடனே படமா எடுக்குற மாதிரி ஒரு சப்ஜெக்ட் ஏதாவது உன்கிட்டே இருக்கா?”ன்னு கேட்டார். நான் ‘ரங்கநாயகி’னு ஒரு சப்ஜெக்ட் சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. நான் சொன்ன கதையை மேற்கொண்டு பாலிஷ் பண்ணி அவர் படமெடுக்க அனுமதி கேட்டார். நான் சந்தோஷமா ஒத்துகிட்டேன். உடனே ON THE SPOT எனக்கு என் கதைக்கு ரூ.5000/- கொடுத்தார். நான் சொலறது 1970 கள்ல. அடுத்தடுத்து அவர் கூட படத்துக்கு ஒர்க் பண்ற வாய்ப்பு வந்தது.

எனக்கு சினிமாவுல வந்திருக்குற வாய்ப்பை ரெயில்வேயில எனக்கு மேலே ஜி.எம்.மா இருந்தவரு கிட்டே போய் பார்த்து சொல்லி, “எனக்கு இந்த மாதிரி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு சார். நான் கொஞ்ச நாள் மெடிக்கல் லீவுல போறேன்” அப்படின்னேன். அவர் சந்தோஷமா அனுப்பி வெச்சார்.

அதுக்கப்புறம் நிறைய படங்கள் புட்டண்ணா கூட ஒர்க் பண்ணேன். ‘ரங்கநாயகி’ல ஆரம்பிச்சு, ‘தேவி ஸ்ரீ தேவி’ வரைக்கும் பல படங்கள் பண்ணேன். நாங்க எல்லாம் சேர்ந்து ‘பரசக்கே கண்ட தின்மா’ன்னு ஒரு படம் பண்ணோம். அது பெரிய ஹிட். அதை தமிழ்ல படமாக்குறோம், எங்களுக்கு ரைட்ஸ் கொடுங்கன்னு சொல்லி, திருப்பூர் மணியும் சிவக்குமாரும் வந்து  கேட்டாங்க.

தமிழ் திரையுலகிற்கு வந்தது

அதுக்கு புட்டண்ணா, “இது உங்க ஊர் ஆள் ஒருத்தரோட கதை தான். நீங்க அவரையே அசிஸ்டென்ட் டைரக்டரா வெச்சி தமிழ்ல எடுங்க”ன்னு அவங்ககிட்டே சொல்லி, எனக்கு சம்பளம் முதற்கொண்டு பேசி அனுப்பி வைக்கிறார். எந்த ரைட்டருக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதோ தெரியலே… நான் சென்னைக்கு வந்து இறங்கினதே ஃபிளைட்டுல தான். பாம்குரோவ் எக்சிக்யூடிவ் சூட் போட்டு கொடுத்தாங்க. அதுல தான் தங்கினேன்.

எந்த ரைட்டருக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதோ தெரியலே… நான் சென்னைக்கு வந்து இறங்கினதே ஃபிளைட்டுல தான்.

ரெண்டு நாள் கழிச்சி, சிவக்குமார் சார், திருப்பூர் மணி இவங்கல்லாம் வந்து பார்த்தாங்க. “கன்னடத்துல எடுத்த மாதிரி தமிழ்ல எடுக்க வேண்டாம். தமிழுக்கு ஏத்த மாதிரி நான் கதையை கொஞ்சம் மாத்தி நேட்டிவிட்டியோட தர்ரேன்”ன்னு சொன்னேன். அந்தப் படம் தான் தமிழ்ல “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”ன்னு வந்தது. தமிழ்ல படம் சூப்பர் ஹிட்.

நடிப்பதா இயக்குவதா? பாரதிராஜா சொன்ன அறிவுரை!

அதுக்கப்புறம்… ‘வண்டிச்சக்கரம்’ அப்படின்னு ஒரு படம் பண்ணேன். அதுவும் சூப்பர் ஹிட். ரெண்டு படத்துலயும் நான் நடிச்சிருந்தேன். அதுல என் நடிப்பை பார்த்துட்டு “கோபுரங்கள் சாய்வதில்லை” படத்துல ஒரு அருமையான காரெக்டர் கொடுத்தாங்க. அதுல நான் மோகனோட அப்பாவா வருவேன். ரங்காராவ் லெவல்ல ஒரு காரெக்டர். பாரதிராஜாவோட ‘மண்வாசனை’ படமும் அடுத்து நடிச்சேன்.  ஒரு நாலஞ்சு படம் எழுதினேன். சிவாஜி சார் படம் உட்பட. ஆனா அதுக்குள்ளே ஒரு 10 - 15 படம் நடிச்சு நடிகரா பாப்புலர் ஆயிட்டேன்.

எனக்கு மேற்கொண்டு டைரக்ட் பண்றதா நடிக்கிறதான்னு ஒரு குழப்பம். ஏன்னா நான் பேசிக்கா ஒரு டைரக்டர். அப்படியிருக்கும்போது ஒரு நாள், நான், பாரதிராஜா சார், கலைமணி, தேவராஜ் மோகன், இவங்கல்லாம் ஒண்ணா உட்கார்ந்து பேசிகிட்டிருந்தோம். அப்போ பாரதிராஜா சொன்னார்… “நீ டைரக்ட் பண்றதை 60 வயசுக்கு பிறகு கூட பண்ணலாம். ஆனா இப்போ நீ ஒரு WANTED ARTIST. அதுனால என்னென்ன வாய்ப்புக்கள் வருதோ அத்தனையும் விடாம பண்ணு. டைரக்ஷன், கதைன்னு பின்னாடி வரும்போது பார்த்துக்கலாம்” அப்படினார். சரின்னு சொல்லி அவங்களை கையெடுத்து கும்பிட்டேன். அப்போ எனக்கு வயசு 35.

35 வயசுல ஆரம்பிச்ச அந்த நடிப்பு இப்போ எனக்கு 65 வயசாகுது… ஆயிரம் படம் நடிச்சிட்டேன்.

(கைகளை தட்டுகிறோம்!).

நடுவுலே ஒரு 12 படம் கேரளாவுல பண்ணி பெரிய பெரிய அவார்டெல்லாம் வாங்கினேன். அங்கே இருந்தவங்கல்லாம் நம்மளை பார்த்து மிரண்டாங்க. அப்புறம் தெலுங்குல ஒரு நாலஞ்சு படம்… மொத்தம் 1200 படம் பண்ணினேன்.

வாரிசுகளை நன்கு படிக்கவைத்து செட்டில் செய்தது

200 படம் பண்ணிட்டோமே… நாம் எப்போ டைரக்டாராகுறதுன்னு நினைச்சு கண்ணாடி முன்னே போய் நின்னா மீசை தாடி எல்லாம் வெள்ளை வெள்ளையா மாறியிருக்கு. சரி… பரவாயில்லே… இந்த 1200 படம் பண்ணினதால தான் ஒரு வீடு கட்ட முடிஞ்சுது… மகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி, படிக்க வெச்சு ப்ரொஃபஸராக்க முடிஞ்சுது… மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்க வெச்சு அங்கேயே ஒரு டாக்டராக்க முடிஞ்சுது… அப்படின்னு தேத்திக்கிட்டேன்.

ஆஸ்திரேலியாவுல இருந்த டாட்டர் இன்னொரு ப்ரொஃபஸரை கல்யாணம் பண்ணி, இப்போ யூ.எஸ்.ல இருக்கா. என் மகனையும் ஒரு டாக்டர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு அவங்க லண்டன்லயே செட்டிலாகிட்டாங்க. ரெண்டு குழந்தைகளையும் நல்லபடியா செட்டில் பண்ணியாச்சு. நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். “ஆயிரம் படம் பண்ணிட்டோம்… கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுப்போம்னு சொல்லி, லண்டன்ல மகன் வீட்ல ஒரு வருஷமும், யூ.எஸ்.ல டாட்டர் வீட்ல ஒரு வருஷமும் தங்கி நல்லா ரெஸ்ட் எடுத்தேன்.”

ஒவ்வொரு நாட்டுல இருக்கும்போதும், ஒரு மூணு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். இப்போ மொத்தம் என்கிட்டே ஆறு ஸ்க்ரிப்ட் இருக்கு. இந்தப் பொங்கலுக்கு தான் தமிழ் நாட்டுக்கு வந்தேன்.

எல்லாம் கேட்டாங்க… “என்ன சார் பண்ணப்போறீங்க?”ன்னு. “நான் இனிமே நடிக்க மாட்டேன். இனி டைரக்ஷன் தான் பண்ணுவேன்”ன்னு சொன்னேன். ரெண்டு பேர் என்னை டைரக்டரா போட்டு படமெடுக்க முன் வந்தாங்க. அவங்க கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்காங்க. இந்த இடைப்பட்ட காலத்துல இளையராஜாவை பார்த்து ஒரு படத்துக்கு ஆறு பாட்டு வீதம் மொத்தம் 12 பாட்டு கம்போஸ் பண்ணி வெச்சிருக்கேன். யார் முதல்ல பணத்தை ரெடி பண்ணிட்டு வர்றாங்களோ அவங்களுக்கு அவங்க தயாரிப்பு + என்னோட படம் + இளையராஜாவோட பாட்டுன்னு ஒரு காம்பினேஷன் கிடைக்கும். ஒவ்வொரு படத்தையும் 60 நாள்ல ஃபினிஷ் பண்ணிடுவேன்.

வேலிகாத்தான்

இப்போ உடனடியா பண்ணப்போற படத்துக்கு “வேலிகாத்தான்”ன்னு பேர் வெச்சிருக்கேன்.  வேலிகாத்தான் அப்படின்னா வெளியை காப்பவன்னு அர்த்தம். ஒரு அருமையான லவ் ஸ்டோரி இது. 35 வயசுல “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”ன்னு படம் பண்ணிட்டு இப்போ 65 வயசுல “வேலிகாத்தான்”ன்னு ஒரு படம் மூலமா டைரக்டரா மீண்டும் அறிமுகம் ஆகிறேன். இளையராஜாவை துணையா வெச்சிகிட்டு வர்றதால ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு. இந்த நம்பிக்கையோட தான் இந்த் வீட்டுல வாழ்ந்துகிட்டிருக்கேன்.

இளையராஜாவை துணையா வெச்சிகிட்டு வர்றதால ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு.

இந்த இடைப்பட்ட காலத்துல, சிவக்குமாரோட 10 படம், அப்புறம் மைக் மோகன் கூட 10 படம், பிரபு கூட 10 படம், சத்யராஜ் கூட 10 படம், இருக்குற எல்லா ஆர்டிஸ்ட் கூடவும் பத்து  பத்து படம் பண்ணேன்.

ரஜினி சாரின் பழக்கம்

ஆனா… எனக்கு கடவுளா பார்த்து கொடுத்த வரம் என்னவென்றால் ரஜினி சாரின் பழக்கம் ஏற்பட்டது தான். அது எப்போன்னா… ‘தம்பிக்கு எந்த ஊரு’ன்னு ஒரு படம். ஊட்டியில ஷூட்டிங் நடந்துகிட்டுருக்கு. அதுக்கு வந்து பஞ்சு அண்ணன் தான் கதை வசனம். அதுனால, அவர் “கதை  ஸைட், டயலாக் ஸைட் நீ கொஞ்சம் பார்த்துக்கோப்பா”ன்னு என் கிட்டே சொன்னார்.

ஆனா… எனக்கு கடவுளா பார்த்து கொடுத்த வரம் என்னவென்றால் ரஜினி சாரின் பழக்கம் ஏற்பட்டது தான்.

நான் போனேன். அவர் எனக்கு பழக்கமில்லேன்னாலும், அவர் பெரிய சூப்பர் ஸ்டாராச்சே. விஷ் பண்ணினேன். அவர் உடனே “வாங்க சார்… நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க…” அப்படின்னு கைகொடுத்தார்.

“சரி… எங்களுக்கு இன்னக்கு லீவ் மாதிரி… நாங்க எல்லாம் இந்த ஓரமா உட்கார்ந்திருக்கோம்.. நீங்க உங்க சீனை எல்லாம் இன்னைக்கு பண்ணுங்க” அப்படின்னு சொல்லிட்டு ரஜினி சார் வெளியே ஓரமா போய் உட்கார்ந்துட்டார்.

நான் போய் நான் நடிக்க வேண்டிய போர்ஷனை எல்லாம் பண்ணிகிட்டே இருக்கேன். வெளியே சிரிப்பு சத்தம் கேட்குது… கைதட்டல் சத்தம் கேட்குது… ஜனகராஜ் கூட ரஜினி உட்கார்ந்து பேசிக்கிட்டுருக்கார். கடைசீயல ஏழுமணிக்கு என் ஷாட்ஸ் எல்லாம் முடியுது பயங்கர கிளாப்ஸ். விஷயம் என்னன்னா… நான் அப்போ கொஞ்சம் பிசியான ஆர்டிஸ்ட். நிறைய படம் பண்ணிட்டுருக்கேன். ஏழு நாளும் ஷூட்டிங்குக்கு லேட்டா தான் வந்தேன். ஆனாலும் அந்த ஏழுநாள் நான் நடிக்க வேண்டிய போர்ஷனை எல்லாம் ரீ-டேக்கே இல்லாம ஏக்தம்ல முடிச்சிட்டேன். அதுக்கு தான் அந்த கைதட்டல்.

மாதவி கூட ஒரு சீக்வென்ஸ், ஜனகராஜ் கூட ஒரு  சீக்வென்ஸ், ஸ்ரீகாந்த் கூட ஒரு சீக்வென்ஸ்….இப்படி ஒரு ஆறேழு சீக்வென்ஸ் எடுக்கவேண்டியிருந்தது. “ஏழு நாள் பண்ண வேண்டிய சீனை எல்லாம் நம்மாளு ஒரே நாள்ல அடிச்சி தூள் பண்ணிட்டாரு”ன்னு பஞ்சு அண்ணன் வந்து பாராட்டினாரு. ரஜினி என்னை கட்டிபிடிச்சி, “காமெடி சீன்லாம் செம ஹைலைட்” அப்படின்னு சந்தோஷப்படுறார்.

“ஏழு நாள் பண்ண வேண்டிய சீனை எல்லாம் நம்மாளு ஒரே நாள்ல அடிச்சி தூள் பண்ணிட்டாரு”ன்னு பஞ்சு அண்ணன் வந்து பாராட்டினாரு. ரஜினி என்னை கட்டிபிடிச்சி, “காமெடி சீன்லாம் செம ஹைலைட்” அப்படின்னு சந்தோஷப்படுறார்.

யூனிட்காரர்களை எல்லாம் போகச் சொல்லிட்டு, நானும் ரஜினியும் நட்ராஜ் ஓட்டலுக்கு நடந்தே வர்றோம். அது அங்கேயிருந்து சுமார் 3 கி.மீ. இருக்கும்.

ரஜினியும் நானும் பேசிகிட்டே நடந்து வர்றோம், “நீங்க வரும்போதே தெரிஞ்சுது. உங்க கண்கள்ல ஒரு பவர். இவர் ஒரு பிறவிக் கலைஞன்னு உங்க மானரிசங்கள் உணர்த்திச்சு. நீங்க சிகரெட் பிடிக்க மாட்டீங்க… ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டீங்க அப்படின்னு சொன்னாங்க. இந்த இண்டஸ்ட்ரியில இருந்துகிட்டு இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லே. நீங்க உண்மையில் ரொம்ப கிரேட். அதெப்படி சார்… காமெடி சீன்ல எல்லாம் நீங்களா டயலாக்ஸ் எடுத்து அள்ளிவிடுறீங்க? அதுவும் அந்த சீனோட பொருந்திப் போகுது?” எப்படி இது?” ஆச்சரியமா என்னை கேட்க்குறார் ரஜினி.

“அது ஒண்ணுமில்லே சார்… நேச்சுரலி நான் டிராமா ஆர்டிஸ்ட். நாடகங்கள்ல நடிக்கும்போது நடிக்கிற பொண்ணுக்கு டயலாக் மறந்துபோய், கையை தேய்ச்சுகிட்டு நின்னா உடனே, “ம்மா.. ரொம்ப கையை தேய்க்காத. ரேகை அழிஞ்சிடப்போகுது. அதுவும் தன ரேகை ரொம்ப முக்கியம். அழிஞ்சிடப்போகுது.” அப்படின்னு ரெடிமேடா டயலாக்ஸ் எடுத்துவிடுவோம். கூடவே அவளோட க்யூ டயலாக்கையும் எடுத்துவிடுவோம். அதை பிடிச்சிட்டு அந்த பொண்ணு பேசிடும்.  ஆக, எங்க கூட நடிக்கிற ஒருத்தரோட தவறு கூட ஸ்டேஜுக்கு அந்தப் பக்கம் போகக்கூடாதுன்னு சொல்லி, உள்ளுக்குள்ளேயே அதை மெருகேத்தி விடுவோம். அதை பசைன்னு சொல்வோம்.” அப்படின்னேன்,

“ஆஹா… அப்போ நீங்க மிகபெரிய எழுத்துலக ஜாம்பவான்… டைரக்டர்” அப்படின்னு ரஜினி தன்னோட ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். “உங்களை மாதிரி ஆளு தான் சார் எனக்கு வேணும். வெறும் காமெடி பண்றவங்களை விட, என் கூட இருந்து என் காரக்டர்ஸை கொஞ்சம் டெவலப் பண்ணி தர்றவங்க என் கூட இருந்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.”

“உங்களை மாதிரி ஆளு தான் சார் எனக்கு வேணும். வெறும் காமெடி பண்றவங்களை விட, என் கூட இருந்து என் காரக்டர்ஸை கொஞ்சம் டெவலப் பண்ணி தர்றவங்க என் கூட இருந்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.”

“ஒ… தாராளமா” அப்படின்னு சொல்லி அவரோடவே அந்த படத்துக்கு நான் மொத்தம் 40 நாள் அவர் கூட இருந்தேன். நான் இருக்கவேண்டியது மொத்தம் 12 நாள் தான். இதுக்காக பஞ்சு அண்ணன் கிட்டே ரஜினி, “இவர் ஷூட்டிங் முடியுற வரைக்கும் என் கூடவே இருக்கட்டும்”ன்னு சொல்லி இருக்க வெச்சார். அதுனால எனக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் கூட கொடுத்தாங்க. ரஜினி சார் ரெகமெண்டேஷன் தான் காரணம் அதுக்கு. எனக்கு அப்போவே ஒரு லட்சம் சம்பளம் பேசியிருந்தாங்க. ஒன்னரை லட்சம் கொடுக்கவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா… ரஜினி எந்த டைரக்டரோட படத்துல எந்த ஹீரோயின் கூட, நடிச்சாலும், அவர் படத்துக்கு பூஜை போட்டா சரி.. அதுல என் பேர் இருக்கும். என்ன ரோல்… எத்தனை நாள் எதுவும் தெரியாது. “நீங்க அவரை புக் பண்ணிடுங்களேன். நான் மத்ததை பார்த்துக்குறேன்” அப்படின்னு சொல்லிடுவார் ரஜினி சார். அதுல இருந்து கிட்டத்தட்ட நிறைய ரஜினி படங்கள்ல நான் வர ஆரம்பிச்சேன். அப்படியே சுமார் 20 படங்கள் அவரோட நடிச்சிட்டேன்.

அதாவது.. ‘தம்பிக்கு எந்த ஊருல’ ஆரம்பிச்சு… அதுக்கு பிறகு சுமார் 20 படம் நடிச்சிட்டேன். 20 படமும் சில்வர் ஜூப்ளி தான். உள்ளே கூட அத்தனை படத்தோட ஷீல்ட்ஸ்  இருக்கு. இப்போ கூட ரஜினி என்னை பார்த்தா ஹானர் பண்ணுவார். “நீங்க கூட இருந்து, சும்மா 20 படம் சில்வர் ஜூப்ளி கொடுத்துட்டோம்” அப்படின்னு.

மத்த ஆர்டிஸ்ட் கூடவெல்லாம் பத்து பத்து படம் பண்ணவன், ரஜினி சார் கூட மட்டும் 20 படம் பன்னேன்னா அதுக்கு காரணம் எங்க பழக்கம் தான். அவர் கிட்டே எப்பவும் ஒரு DISTANCE மெயின்டெயின் பண்ணுவேன். ரொம்பவும்  ஒட்டிக்கிறதில்லே.

மத்த ஆர்டிஸ்ட் கூடவெல்லாம் பத்து பத்து படம் பண்ணவன், ரஜினி சார் கூட மட்டும் 20 படம் பன்னேன்னா அதுக்கு காரணம் எங்க பழக்கம் தான். அவர் கிட்டே எப்பவும் ஒரு DISTANCE மெயின்டெயின் பண்ணுவேன். ரொம்பவும்  ஒட்டிக்கிறதில்லே.

(அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். -குறள் 691

பொருள் : மன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதே சமயம் அதிகமாக நீங்கிவிடாமலும் இருந்தால் அதனால் அவர்களுக்கு என்றும் மரியாதை உண்டு.)

அதே போல, இந்த தண்ணி பார்டி, PUB, அது இதெல்லாம் நான் போனது கிடையாது. மிகப் பெரிய நடிகர்களுக்கு கூட சில சமயம் அது தவிர்க்க முடியாம இருக்கும். போய் ரெண்டு சிப் டேஸ்ட் பண்ணிட்டாவது வருவாங்க. நான் அதுக்கு கூட போனதில்லை. ஆனா… நடிகர்கள் திரையுலகப் பிரமுகர்கள், மற்றும் அவர்கள் வீட்டு நல்லது கெட்டது இதிலெல்லாம் கலந்துகொள்வேன். ஆனா பார்ட்டி அது இதென்று நான் இதுவரை தலையை காட்டியதில்லை. காரணம்… என் ஒரே லட்சியம் இயக்குனராவது என்பது தான். ஆகையால், என் கவனத்தை சிதறடிக்கக் கூடிய எந்த விஷயத்திலும் நான் ஈடுபட்டதில்லை.

ஆனா பார்ட்டி அது இதென்று நான் இதுவரை தலையை காட்டியதில்லை. காரணம்… என் ஒரே லட்சியம் இயக்குனராவது என்பது தான். ஆகையால், என் கவனத்தை சிதறடிக்கக் கூடிய எந்த விஷயத்திலும் நான் ஈடுபட்டதில்லை.

ஆக… அந்த 20 படங்களல்ல நாங்க நடிக்கும்போது, பேசாத விஷயம் கிடையாது. சினிமாவைப் பத்தி, அகில உலக அரசியலைப் பத்தி, ஆன்மீகத்தை பத்தி… இப்படி நாங்க பேசாத விஷயங்களே கிடையாது. நிறைய விஷயம் பேசுவோம். அவரும் நிறைய கேள்வி கேட்பார். நானும் அதுக்கு பதில் சொல்வேன்.

SURVIVAL OF THE FITTEST

அதுக்கு காரணம் என்னன்னா… இங்கிலிஷ்ல SURVIVAL OF THE FITTEST ன்னு ஒரு வாக்கியம் உண்டு. அதுக்கு என்ன அர்த்தம்னா … IF YOU ARE FIT, YOU WILL SURVIVE என்பது தான். நீ நடிகனா இருந்தாலும் சரி… டைரக்டரா இருந்தாலும் சரி…  YOU MUST BE A FITTEST PERSON TO SURVIVE. இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்.

இங்கிலிஷ்ல SURVIVAL OF THE FITTEST ன்னு ஒரு வாக்கியம் உண்டு. அதுக்கு என்ன அர்த்தம்னா … IF YOU ARE FIT, YOU WILL SURVIVE என்பது தான். நீ நடிகனா இருந்தாலும் சரி… டைரக்டரா இருந்தாலும் சரி…  YOU MUST BE A FITTEST PERSON TO SURVIVE. இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்.

ஆக… நாம் நிறைய படிச்சி…. நிறைய விஷயங்களை தெரிஞ்சி வெச்சிருந்து… அதை அவர் கிட்டே சொல்லும்போது, அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்.

வினு சாரும் ரஜினி சாரும் சேர்ந்தாங்கன்னா

டைரக்டர்ஸ் கூட சொல்லுவாங்க… “வினு சாரும் ரஜினி சாரும் சேர்ந்தாங்கன்னா… அவங்க பாட்டுக்கு பேசிகிட்டுருப்பாங்க. அவங்களை பேச விடுங்க. நாம லைட்டிங், காமிரா எல்லாம் செட் பண்ணி வெச்சிட்டு “ஷாட் ரெடி”ன்னு சொன்னாப் போதும்… அடுத்த செகண்ட் நடிகனா மாறி நம்ம முன்னாடி வந்து நிப்பாங்க… அந்த மாதிரி ஆளுங்க அவங்க” அப்படின்னு.

அவர் கூட நடிச்சதுனால சம்பளம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைச்சது. அதனால தான் எனக்குன்னு ஒரு வீடு, ஒரு கார், மகளையும் மகனையும் நல்லா படிக்கவெச்சு நல்ல வேலைல உட்காரவைக்க முடிஞ்சுது. அவங்களை செட்டில் செய்ய முடிஞ்சுது. இப்படி இந்த 30-35 வருஷ சினிமா வாழ்க்கைல என்னல்லாம் கத்துகிட்டேனோ அதையெல்லாம் கத்துகிட்டு எங்க உட்கார்ந்திருந்தேனோ இதோ இதே ரூம்ல தான் இப்பவும் உட்கார்ந்திருக்கேன். காலைல எழுந்து பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறதுல இருந்து, அன்னன்னைக்கு என்ன புக் வருதோ அதெல்லாம் படிப்பேன்.  அது தவிர நான் தனிப்பட்ட முறையில் படிக்கிற புக்ஸ் உண்டு. அதுல குர்ரான் இருக்கு, கீதை இருக்கு, புத்த மதம் பத்திய புக்ஸ் இருக்கு. காரணம்… அது என்னைக்காவது அது ஒரு நாள் சினிமாவுல எனக்கு உதவும் என்கிற எண்ணம் தான்.

அவர் கூட நடிச்சதுனால சம்பளம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைச்சது. அதனால தான் எனக்குன்னு ஒரு வீடு, ஒரு கார், மகளையும் மகனையும் நல்லா படிக்கவெச்சு நல்ல வேலைல உட்காரவைக்க முடிஞ்சுது. அவங்களை செட்டில் செய்ய முடிஞ்சுது.

ஆக… என்னுடைய நாற்பது வருஷ சினிமா… இது தான் இது தான் என்னுடைய வாழ்க்கை. என்னுடயை வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுறேன். சினிமாவுக்கு போனாலும் என்னோட வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவேன். இருந்தாலும் சில சமயம்  விருது அது இதுன்னு வற்புறுத்துனாங்கன்னா … வெளி சாப்பாடு சாப்பிடுவேன். கொஞ்சம் தன்மானத் தமிழன் நான். யார் கிட்டயும் ரொம்ப இறங்காம… யார் கிட்டயும் ரொம்ப கெட்டப்பேர் வாங்காம… வாழ்ந்துட்டு வர்ரேன். இந்த நாற்பது வருஷ திரையுலக வாழ்க்கையில என்னோட சாதனை என்னன்னா… என்னைப் பத்தி நெகடிவ்வா எந்த செய்தியும் வந்ததில்லே. வினு சக்கரவர்த்தி அப்படி… வினு சக்கரவர்த்தி இப்படின்னு யாரும் சொன்னதில்லே.

இந்த சிலுக்கு ஸ்மிதாவை மையமா வெச்சி வந்த ‘டர்டி பிக்சர்’ படம் பத்தி என்கிட்டே கேட்டாங்க… சிலுக்கு ஸ்மிதாவை நான்  அறிமுகப்படுத்தினது உண்மை… அப்படி ஒரு காரெக்டரை கூட்டிகிட்டு வந்து ஷேப் பண்ணினது உண்மை… அவளுடைய IN & OUT கதைகள் எனக்கு தெரியும், அவ ஏன் செத்துப்போனான்னு கூட எனக்கு தெரியும். ஆனா… அதையெல்லாம் சொல்லி நான் வியாபாராம் பண்ண விரும்பலே.

யாராவது இஷடப்பபட்டா நீங்க பண்ணிக்கோங்கன்னு விட்டுடேன். அவங்க ரூ.10 கோடி செலவு பண்ணி இன்னைக்கு  ரூ.60 கோடி ரூபாய் அந்தப் படத்துல சம்பாதிச்சிருக்காங்க. எல்லாம் என் கிட்டே கேட்டாங்க…”இது உங்க சிலுக்கோட கதை தானே… நீங்க ஒரு லாயர் நோட்டீஸ் கொடுத்தாக் கூட போதும்…. ஆறு கோடி ரூபாய் கொண்டு வந்து கொடுத்துடுவாங்க” அப்படின்னு.

நான் என்ன சொல்றேன்… “என்னுடைய உழைப்பு இல்லாம ஒரு சின்ன பருக்கை எனக்கு கிடைச்சாலோ ஒரு துளி இரத்தம் வந்தாலோ அது எனக்கு விஷம் மாதிரி. எனக்கு அப்படி வேண்டாம்.  நான் அப்படி வாழ்ந்தவன்.  என்னுடைய உழைப்புல எனக்கு சாப்பாடு வந்தா போதும். இந்த பாலிசியோட வாழ்ந்து, இதோ இந்த இடத்துல அடங்கி ஒடுங்கி உட்கார்ந்திருக்கேன்.

என்னுடைய உழைப்பு இல்லாம ஒரு சின்ன பருக்கை எனக்கு கிடைச்சாலோ ஒரு துளி இரத்தம் வந்தாலோ அது எனக்கு விஷம் மாதிரி. எனக்கு அப்படி வேண்டாம்.

ரொம்ப பேர் கேட்கிறாங்க… “எங்கே ரெண்டு மூணு வருஷமா ஆளைக் காணோம்”னு? “போதும் சினிமான்னு ஒதுங்கிட்டாருப்பா வினு சக்கரவர்த்தி” அப்படின்னு சொல்ல வெச்சிட்டு இதோ உட்கார்ந்திருக்கேன். அனேகமா இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்குள்ளே… ஒரு படம் ஸ்டார்ட் பண்ணிடுவேன்….இந்த வருஷத்து முடிவுக்குள்ளே… அதை ரிலீஸ் பண்ணிடுவேன். உங்க முன்னால நல்ல டைரக்டர்னு பேரேடுப்பேன். “பரவாயில்லேய்யா..1000 படம் நடிச்சார். ஒரு படம் டைரக்ட் பண்ணாலும் நல்லா பண்ணிருக்கிறார்”ன்னு சொல்ல வெப்பேன். அப்படியே வருஷத்துக்கு ஒரு ரெண்டு மூணு படம் பண்ணிட்டு… ஒரு 10 - 15 படம் பண்ணினதுக்கப்புறம் ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டு ஒதுங்கிடுவேன்.

இது தான் சார் என்னோட திரையுலக வாழ்க்கை.

நாம் : “சார்… நீங்க சொன்ன வார்த்தைகள் முக்கியமா ‘என்னோட உழைப்பு இல்லாம… எனக்கு ஒரு பருக்கை கிடைச்சாக் கூட அது எனக்கு ஒட்டாது. அது எனக்கு வேண்டாம்’ மிகப் பெரிய வார்த்தைகள் சார் இது. சிந்திக்க தூண்டும் வார்த்தைகள்.

வள்ளுவர் இதைத் தான் அழகா சொல்றார்…

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (குறள் 376)

பொருள் : தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

வினு சக்கரவர்த்தி : சமீபத்துல துபாய் போயிருந்தேன்… குர்ரான் பத்தி என்னை பேசச் சொன்னாங்க… குர்ரான் பத்தி பேசணும்னா ஒரு மாசம் என்னால தொடர்ச்சியா பேசமுடியும். நான் ஒன்னே ஒன்னு சொல்றேன். “Daane daane pe likha hai khane wale ka naam” அப்படின்னு சொன்னேன். அதுக்கு அர்த்தம் என்னன்னா… “நாம் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு பருக்கையிலும் கூட நமது பெயர் எழுதப்பட்டிருக்கும்” என்பது தான்.

நாம் : இதைத் தான் சார் ரஜினி சார் கூட ‘எந்திரன்’ ஹிந்தி ஆடியோ லான்ச்ல சொன்னார்.

வினு சக்கரவர்த்தி : “பார்த்தீங்களா?…. அவருக்கு கூட இது தோணியிருக்கு….! அதான்!!”

நாம் : சார்… இப்போ ரஜினி சார் கூட நீங்க நடிச்ச படங்கள்ல இருந்து சில ஹிஸ்டாரிகல் சீன்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க…

‘குருசிஷ்யன்’ல உங்க காம்பினேஷன் ரொம்ப சூப்பரா பேசப்பட்டது. இப்போ பார்த்தாக்கூட அலுக்கலை… அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?

[END OF PART I]

—————————————————————-
அடுத்த பாகத்தில் :

  • இசைஞானி இளையராஜாவுடன் இவரின் நட்பு!
  • “வினு சக்கரவர்த்தி - ரஜினி” கலக்கல் காம்பினேஷன் அமைந்த ‘குருசிஷ்யன்’ பட அனுபவங்கள்
  • “பிள்ளைன்னு பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெறனும்மா” - ‘அண்ணாமலை’ பட ஷூட்டிங் சுவாரஸ்யங்கள்
  • “அதிசயப்பிறவி” படப்பிடிப்பில் எமதர்மராஜன் வேடத்தில் இருந்தபோது சூப்பர் ஸ்டார் இவரிடம் ஆசிபெற்றது!
  • “மாப்பிளளை” பட டிரங்கன் & மங்கல் ஃபுட் கம்பெனி கலாட்டா
  • ‘ராஜாதி ராஜா’ - படத்தின் “மாமா உன் பொன்னைக் கொடு” பாடல் காட்சி!
  • வீரா படப்பிடிப்பில் வெளிப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மனித நேயம்!
—————————————————————-

…. TO BE CONTINUED IN PART II SOON

40 Responses to ““ரஜினியுடன் ஏற்பட்ட பழக்கம் இறைவன் எனக்கு கொடுத்த வரம்!” – 1200 படங்களுக்கும் மேல் நடித்த நடிகர் வினுச்சக்கரவர்த்தியுடன் ஒரு சந்திப்பு – Part I”

  1. Chithamparam Chithamparam says:

    ஒவ்வொரு வார்த்தையும் பொன் எழத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது

  2. Srikanth Srikanth says:

    Hi Sundar,

    If possible record interview as Videos it will be as a treasure forever. If people don't know to read Tamil, but can understand will be more helpful. And it will reach to so many.

    My thought would be Videos would be more powerful and edit it as anyways..

    Srikanth

    • Definetely… we will do it one day when our position permits it.

      Presently it will be expensive. Who will record it? And who will edit the videos and who will upload it? We need some industrious professionals to do that or at least volunteers to take care of that. I don’t want to do that in an amateur way. We shall climb the ladder of perfection step by step. But surely.

      Thanks for your suggestion anyway!

  3. Suresh Kumar Suresh Kumar says:

    Really nice interview worth to treasure

  4. Suresh Suresh says:

    நீங்க சொன்ன மாதிரி அலட்சியமா படிக்க ஆரம்பிச்சு… கடைசீயில நிமிர்ந்து உட்கார்ந்துட்டேன். நல்லா பதிவு. நன்றி.

  5. Suresh Suresh says:

    Really wonderful interview. thanks for your effort.

  6. Suresh Suresh says:

    Really a wonderful interview to treasure. Thanks for your effort.

  7. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    கலக்கல் சுந்தர் அண்ணா.. வினு சக்கரவர்த்தி யை ஒரு வில்லனாக மட்டும் தான் எனக்கு தெரியும்… உண்மையில் எவ்வளவு பெரிய நல்ல மனிதர் என்பது தெரிகிறது… அவரது உழைப்பு, தலைவருடனான நட்பு , திரைத்துறை அனுபவம் மற்றும் அவரது தனிப்பட்ட பல நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன்… கலக்கல் கலக்கல் கலக்கல்…. இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர் நோக்கி …

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  8. billa billa says:

    english plz…really want to read it..plz rajini fans and i want basha silver jubilee function video if its possible

  9. கிரி கிரி says:

    சுந்தர் ரொம்ப நன்றாக இருந்தது.. சொல்லப்போனால் விரைவில் முதல் பாகம் முடிந்து விடுமே என்ற கவலையில் தான் படித்து கொண்டு வந்தேன். என்னால வினுச்சக்கரவர்த்தி அவர்களின் "இப்ப என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவே" காமெடியை மறக்கவே முடியாது. அந்த காட்சியில் தலைவரும் கலக்கி இருப்பார்.

    ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்துல "மாற்றம் என்பது நடந்தே தீரும் அதை யாரும் தடுக்க முடியாது.. ஊருக்குத் தான் கட்டுப்பாடு போட முடியும் உலகத்துக்கேவா போட முடியும்" என்று இவர் கூறுவது எனக்கு ரொம்பப் பிடித்த வசனம்.

  10. Manoj Rox Manoj Rox says:

    வாவ் மிகவும் சுவாரஸ்யமான பேட்டி!! நீங்கள் சொன்னது போல, படிக்க நிமிருந்து உட்கார்ந்துவிட்டேன்.

    வாழ்க்கைக்கு தேவையான எவ்வளவு பெரிய விஷயங்களை வினு சார் சர்வ சாதரணமாக சொல்லிக்கொண்டே போயிருக்கிறார்… :)

    இவர் கூறியுள்ள நல்ல விஷயங்களை பின்பற்றுவது நமது கடமை என்பதைவிட நமக்கு நல்லது என்று சொல்வேன்!!

    தலைவரும் வினு சாரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆனாலும் அவர்கள் நினைப்பது எல்லாம் ஒன்றாக தான் இருக்கிறது ” “Daane daane pe likha hai khane wale ka naam” என்று இருவரும் எப்படி ஒரே மாதிரி பேசுவார்கள்?? பெரியவங்க பெரியவங்க தான்!!!

  11. PREMANAND RAMARAJU PREMANAND RAMARAJU says:

    Sundarji

    Gopurangal Saivadhillai direct seidhavar Manivannan.

  12. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

    புகைப்படத்தில் சுந்தர், வினு சக்ரவர்த்தி உடன் நிற்கும் கருப்பு
    டி-ஷர்ட் நண்பர் யார்? இந்த வலையில் எழுதி இருக்கிறாரா? நன்றி.

    -==மிஸ்டர் பாவலன்==-

  13. Bharathi Bharathi says:

    Appreciate your efforts!
    The new look on comment section is also great!

  14. vkgkumaran vkgkumaran says:

    fantastic 1 part, now i m egarly waiting for ANNAMALAI experience,

  15. raja raja says:

    Thalaivar eppothume nalla nadigargala kooda vechukuvaar,athu ivarukkum porunthum,athe pol than sambantham illamal oru paisa kooda thoda maten endru cinema ulagil sollubavargal romba konjam thaan,hats off VINU sir

  16. MURUGAN MURUGAN says:

    ARUMAIYAANA SANDHIPPU!!!
    ADUTHTHA PADHIVIRKKAAGA KAATHTHIRUKKIRYN!!!
    VAALTHTHUKKAL SUNDAR JI!!!
    VAALGA VALAMUDAN!!

  17. Aby Aby says:

    Really good work Sundar, i have made it a point of visiting your website everyday and it is so enlightening to know more about these legends and their relationship with our Thalaivar and to learn from their wisdom. Thank you so much for giving us all this treasure.

  18. B. Kannan B. Kannan says:

    நேரில் மீண்டும் ஒரு முறை பார்த்த மாதிரி இருந்தது உங்கள் வர்ணனையை படிக்கும் போது..
    ஹாட்ஸ் ஆப் சுந்தர்..
    திடீர் என்று ஒரு நாள் சுந்தரிடம் இருந்து ஒரு அழைப்பு, நேரில் ஒருவரை பார்க்க வருமாறு..
    யாரை எங்கே என்று எதுவும் தெரியாமல் தான் நான் வடபழனி SFX முன்பு வந்தேன்..
    அப்போதும் சுந்தர் யாரை பார்க்க போகிறோம் என்று சொல்ல வில்லை..
    ஒரு வீட்டுக்கு முன் சென்று நின்று விட்டு பின் தான் இது வினுச்சக்கரவர்த்தி வீடு என்று சொன்னார்..
    நான் தலைவரோடு நடித்தவர், பெரிய ஆர்டிஸ்ட் எப்படி receive செய்வாரோ என்று தான் யோசித்தேன்..
    ஆனால் மிக தன்மையாக நடந்து கொண்டார்..

    அதுவும் அவருடைய சிறிய வயது அனுபவங்கள், புட்டண்ணாவுடன் அனுபவம், ரோசாபூ ரவிக்கை காரி படம்அதன் பின்னணி பின் தலைவர் அவர்களோடு பணி புரிந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிகஅருமையாக விவரித்தார்..தலைவருடன் அவருடைய அனுபவங்கள் ஆஹா சூப்பர்..அதுவும் தலைவர் சொன்னது போல வினு அவர்கள் இந்த சினிமா துறையில் இருந்து கொண்டு எந்த கேட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பது, கிரேட்..I will share other things in your next part sundar..சியர்ஸ்..பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,பா. கண்ணன்.

  19. **Chitti** **Chitti** says:

    By coming to know the life history of vinu sir's is really great.

    I really like his qualities - perfection, expanding knowledge and talents, confidence that even at this age, he could direct - not only direct the movie but he is confident of making them all are successful (just for making some worthless films, we can do at any age), respect and 'knowing- how-to-maintain-relationships' with big shots and all people, avoiding bad things like cigarattes, drinks in this industry, the way he was brought up, dedication and perfect focus towards to direct films, accepting only for his work and not even paisa coming through other matters.

    Waiting eagerly for second part.

    And new look is good and better. keep going. all the best.

    by,
    Chitti.
    jai Hind!!!
    Dot.

  20. B. Kannan B. Kannan says:

    அதுவும் அவருடைய சிறிய வயது அனுபவங்கள், புட்டண்ணாவுடன் அனுபவம், ரோசாபூ ரவிக்கை காரி படம்அதன் பின்னணி பின் தலைவர் அவர்களோடு பணி புரிந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிகஅருமையாக விவரித்தார்..தலைவருடன் அவருடைய அனுபவங்கள் ஆஹா சூப்பர்..அதுவும் தலைவர் சொன்னது போல வினு அவர்கள் இந்த சினிமா துறையில் இருந்து கொண்டு எந்த கேட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பது, கிரேட்..I will share other things in your next part sundar..சியர்ஸ்..பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,பா. கண்ணன்.

  21. R O S H A N R O S H A N says:

    wow…..superb article sundar……..following the words of these successful people, we also get some cue to fine tune ourselves……..our site is becoming super day by day with so many good thought provoking articles………and especially i love this comment section very much ji……

  22. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி, சில நாட்களாக கமென்ட் போட இயலவில்லை; மன்னிக்கவும். எப்பொழுதும் போல நீங்க கலக்குறீங்க!! வாழ்த்துக்கள்.

    தலைவருடன் காம்பினேஷனில் நடித்த பல நடிகர்களில், நமது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் வினு சக்ரவர்த்தி அய்யா அவர்கள். கரடுமுரடான தோற்றம் கொண்டாலும், மிகவும் இனிமையான மனம் கொண்டவர். சிறுவயதில் அவரை பார்க்கும் பொழுது மிகவும் பிடிக்கும். அந்த அளவுக்கு சிறுவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்.

    அவரின் வார்த்தைகளில் அனுபவ படம் நிறைதுள்ளது.

    நிச்சயம் அவரின் சந்திப்பின் இரண்டாம் பாகம் எதிர்பார்கிறோம் சுந்தர்ஜி.

    rajnikanth will rule tamil nadu

  23. kanan kanan says:

    translate in english plz sundar sir

  24. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Excellent compliation Sundar. Great show !

  25. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    Thank you very much for the interview with Mr. Vinu Chakravarthy.. He is one of the senior most actors in the industry who is known for his natural acting. In my opinion, after SSR, he is the best in dialogue delivery, perfection diction, voice modulation and most importantly very natural & casual acting. I always had an inclination that he should be very close to our Thalaivar. Though we would have seen a number of movies of Vinu with Thalaivar, till date my favourite is "Chinna Thaayi" in which he played the role of village priest to perfection. He is too good in light comic roles like Sundara Travels, Guru Sishyan etc. May God bless Vinu Sir in all his future endeavours.

  26. ALAGAN.RAJKUMAR ALAGAN.RAJKUMAR says:

    dear sundar arumaiyaana pathivu

  27. Kameswararao Kameswararao says:

    Sundar,
    Nice interview… nice thoughts and good presentation by you. Vinu Chakravarthy is a very good character artiste his small cameo in Annamalai and hilarious comedy in Guru Sishyan is always worth a watch. Waiting for the Second Part and his inputs about SS.

  28. vasanthan vasanthan says:

    vinusakkaravarththi enakkuppidiththa kuna sithra nadikar ,avarai peddi kandathu namathu thalaththitku perumaiye,sundar unkalai aduththa kilamai santhipen ena ninaikkiren..

  29. Devaraj Devaraj says:

    Thanks Sunder
    Great interview.
    Wonderful work by you and your team.
    Cheers
    Dev.

  30. Veera Veera says:

    http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul...

  31. Leo Leo says:

    அண்ணா, வாழ்க்கைக்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது.
    இந்த மாதிரியான நிறைய பல நல்ல விசயங்களை எங்களோடு பகிர்ந்து, அதன் மூலம் எங்களையும்
    நல்ல மனிதர்களாக , வெற்றியாளர்களாக பார்க்க விரும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ///ஆனா பார்ட்டி அது இதென்று நான் இதுவரை தலையை காட்டியதில்லை. காரணம்… என் ஒரே லட்சியம் இயக்குனராவது என்பது தான். ஆகையால், என் கவனத்தை சிதறடிக்கக் கூடிய எந்த விஷயத்திலும் நான் ஈடுபட்டதில்லை.///

    ///இங்கிலிஷ்ல SURVIVAL OF THE FITTEST ன்னு ஒரு வாக்கியம் உண்டு. அதுக்கு என்ன அர்த்தம்னா … IF YOU ARE FIT, YOU WILL SURVIVE என்பது தான். நீ நடிகனா இருந்தாலும் சரி… டைரக்டரா இருந்தாலும் சரி… YOU MUST BE A FITTEST PERSON TO SURVIVE. இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்.///

    - இந்த வார்த்தைகள் மிக மிக வலிமை வாய்ந்தது. அர்த்தம் மிக்கது. பின்பற்றவேண்டியது.

    இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

  32. rameesh rameesh says:

    thanks for sharing this interview

  33. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    12varusam munnadi Vinu chakravarthy sir a Meenakshi koil la pathen. Arunachalathail vara mari udampu full la santhanathoda vanthar. Ivar aramba kaalathil police, railway la work pannathu engum padikathathu.
    Intha interview ku romba naal wait pannen. Thanks na . Waiting for 2nd part and force team article.

  34. harisivaji harisivaji says:

    Nicely Narrated with real feel of meeting him in person….
    Eagerly waiting for the next part

    //எனக்கு கிடைச்சாலோ ஒரு துளி இரத்தம் வந்தாலோ அது எனக்கு விஷம் மாதிரி. எனக்கு அப்படி வேண்டாம்//

    இப்போலாம் அடுத்தவங்க உழைப்பை சர்வ சாதரணமா உறிஞ்சு எடுத்து அவுங்க சாபிட்டு போய்றாங்க… நாம நம்ம உழைப்பின் பலனை கூட பாதுகாத்து அனுபவிக்க வேண்டி உள்ளது
    இப்படி ஒரு எண்ணத்தை இத்தனை காலமாய் கடைபிடிப்பது ரொம்ப கஷ்டம்.

    தலைவர் கூட நடித்த குரு சிஷ்யன் ,,,அண்ணாமலை அருணாசலம் மறக்க முடியாத முக்கியமான காட்சிகள் உண்டு
    அதிலும் அண்ணாமலையில் சொல்லும் “புள்ளன்னு பெத்தா இப்படி ஒரு பிள்ளையை தான் பெக்கணும் ” இந்த வசனத்தை மறக்க முடியாது எந்த ஒரு ரஜினி ரசிகர்களாலும்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates