You Are Here: Home » Featured, VIP Meet » “ரஜினி வாழ்வாங்கு வாழ்வார்; கொடிகட்டி ஆள்வார்!” – நடிகர் திரு.வினு சக்கரவர்த்தியுடன் ஒரு சந்திப்பு – Part II

டிகர் திரு. வினு சக்கரவர்த்தி அவர்களை பொருத்தவரை  மிக மிக பாஸிட்டிவ்வான ஒரு மனிதர். அவரது பேட்டி முழுக்க அவர் எவரைப் பற்றியும் கம்ப்ளெயின்ட் செய்யவில்லை. சலித்துக்கொள்ளவில்லை. நாம் எப்படி வாழ்வோம் என்பதை நாமே தீர்மானிக்கிறோம் என்பதை அவர் உணர்ந்து, அதை அப்ளை செய்து வெற்றிபெற்ற மனிதர் அவர். எண்ணம் போல் வாழ்வு என்பார்களே… அது இது தான்!

——————————————————————————————-
“ரஜினியுடன் ஏற்பட்ட பழக்கம் இறைவன் எனக்கு கொடுத்த வரம்!” – 1200 படங்களுக்கும் மேல் நடித்த நடிகர் வினு சக்கரவர்த்தியுடன் ஒரு சந்திப்பு – Part I

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15466
——————————————————————————————-

எதிலும் நேர்த்தி, அறிவை பெருக்கிக்கொள்ள ஆர்வம், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது திறமையை பக்குவமாக வெளிப்படுத்துவது,  இந்த வயதிலும் படத்தை இயக்க மட்டுமல்ல அதை வெற்றி பெறச் செய்யவும் வைக்க முடியும் என்று நம்புவது, பிறரிடம் மரியாதை, பெரிய மனிதர்களுடன் எப்படி பழகவேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது, மது-புகைப்பழக்கம் இல்லாதது, அவர் வளர்க்கப்பட்ட விதம், தன் வாரிசுகளை அவர் வளர்த்த விதம்… இது எல்லாவற்றையும் விட பிறர் பொருளுக்கோ பணத்துக்கோ ஆசைப்படாதிருத்தல்… இப்படி நாம் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

இவரது நல்ல கொள்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களால் தான் இவருக்கு ஒரு நல்ல குடும்பம் அமைந்தது என்பது திண்ணம்.

நல்ல மனைவி & குடும்பம் அமைவதன் பற்றிய முக்கியத்துவத்தை பற்றி சொல்லும்போது வள்ளுவர் கூட “ஒருத்தருக்கு எல்லாம் இருந்தும் மனைவியோ மக்களே சரியில்லேன்னா அதுனால என்ன பிரயோஜனம்?”னு சொல்லியிருக்கிறார்.
——————————————————————————
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (குறள் 52)

பொருள் : நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
——————————————————————————

இவரிடம் உள்ள மிகப் பெரிய ஸ்பெஷாலிட்டி, இவரது கணீரென்ற தமிழ் உச்சரிப்பு.
இவரது படங்களில் இவர் உச்சரித்த வசனங்கள் எதுவும் இதுவரை புரியாமல் போனதில்லை.  தமிழை உச்சரிக்கும்போது அதை சிதைப்பதையே ஃபாஷனாக கருதும் ஒரு காலகட்டத்தில், அட்சர சுத்தமாக வெளிப்படும் இவரது டயலாக்…. கேட்க கேட்க ஆனந்தம்.

முதல் பாகத்தில், திரைத்துறையில் தான் பிரவேசித்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அறிமுகம் ஏற்பட்டது, என பல முக்கிய விஷயங்களை கூறியிருந்தார். இரண்டாம் பாகம் முழுக்க சூப்பர் ஸ்டாருடன் தான் பல்வேறு படங்களில் பணிபுரிந்த காலகட்டத்தில் நடைபெற்ற பேக்ரவுண்ட் விஷயங்களை பற்றி கூறியிருக்கிறார்.

இறுதியில், அவர் நமக்கு கூறும் அறிவுரைகளையும், சூப்பர் ஸ்டாரைப் பற்றி அவர் கூறும் விஷயத்தையும் நன்கு மனதில் பதியவைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் முயற்சிக்கிறேன்.

திரு.வினுச்சக்கரவர்த்தி அவர்களுடன் நமது சந்திப்பு தொடர்கிறது.

நாம் : ‘குருசிஷ்யன்’ல உங்க காம்பினேஷன் ரொம்ப சூப்பரா பேசப்பட்டது. படம் வந்து எத்தனையோ வருஷம் ஆகிட்டாலும், இப்போ அந்த காமெடிக் காட்சிகளை பார்த்தாக்கூட அலுக்கலை… அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்….

வினுச்சக்கரவர்த்தி : அது பார்த்தீங்கன்னா… ‘குருசிஷ்யன்’ல நான் கள்ளத் தனமா ஊழல் பண்ணி சேர்த்து வெச்ச பணத்தையெல்லாம் ஐ.டி. ஆபீசர்ஸ் வேஷத்துல போய் சுருட்டிட்டு அதை ஒரு லிஸ்ட் போட்டு என் மனைவி கிட்டயே “அதெல்லாம் நான் கெட்ட வழியில சம்பாதிச்சது”ன்னு எழுதி வாங்கி, அதை என் கிட்டே காட்டி காட்டி பிளாக்மெயில் பண்ணுவாங்க. நான் என்ன பண்ணுவேன்… சட்டுன்னு அவங்க அசந்த நேரம் பார்த்து அதை வாங்கி கிழ்ச்சி வாய்க்குள்ளே போட்டுட்டு  “இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?” அவங்களை பார்த்து டான்ஸ் ஆடி நையாண்டி பண்ணுவேன்.

இந்தக் ஸீனை ஷூட் பண்ணப்போ செட் முழுக்க ஒரே சிரிப்பு. ரஜினி சார் பார்த்தாரு… “வினு சார்… இந்த சீன்ல மொத்தம் மூணு ஹீரோஸ். நாங்க ரெண்டு பேரும் படத்துல ஹீரோன்னாலும், இந்த காட்சியில நீங்களும் ஒரு ஹீரோ. நீங்க இப்போ கிளாப்ஸ் வாங்கிட்டீங்க… எங்களுக்கும் கிளாப்ஸ் வேணுமே? அதுக்கு ஏதாவது ஐடியா பண்ணுங்க!” அப்படின்னு கேட்டுக்கிட்டார்.

அவ்ளோ தானே…. அப்படின்னு சொல்லி… அவர் ரெண்டு மூணு முறை கையை சுத்தினா அந்த பேப்பர் மேஜிகல அவர் கையில வர்ற மாதிரியும், நான் கிழிச்சிப் போட்டது DUPLICATE COPY தான். ஒரிஜினல் லெட்டர் பேங்க் ஜாக்கட்ல இல்லே இல்லே லாக்கர்ல இல்லே இருக்குன்னு சொல்லிட்டு, அவங்க ரெண்டு பேரும் “இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?”ன்னு பதிலுக்கு என்னை டீஸ் ஆடுற மாதிரி ஒரு சீன் வெச்சோம். படத்துல ரொம்ப நல்லா வந்துது அந்த சீன்.

நாம் : ‘அண்ணாமலை’ படத்துல நீங்க நடிச்சதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்… ஏன்னா… ரஜினி சாரோட கேரியர்ல மிகப் பெரிய திருப்புமுனை அந்தப் படம்… உங்க காம்பினேஷனும் மிக மிக சிறப்பா வந்த படங்கள்ல அதுவும் ஒன்னு.

வினுச்சக்கரவர்த்தி : நான் ஒரு எம்.எல்.ஏ. நான் அவரோட இடத்துல குடிசை போட்டுட்டேன்னு சொல்லி பதிலுக்கு என்னோட வீட்டுக்குள்ளேயே ரஜினி மாடுகளை ஓட்டி வந்து கட்டி வைப்பார். “ஏன்யா… இப்படி பண்ணனே?ன்னு  கேக்குறதுக்கு, “நீங்க என் இடத்துல குடிசை போட்டுக்கோங்க. நான் உங்க இடத்துல மாடு கட்டிக்கிறேன்”ன்னு சொல்வார். நான் கோபப்பட்டு அவரை அடிச்சவுடனே, அவர் குட்டிகரணம் போட்டு அந்தப் பக்கம் விழுவார். அதுக்கப்புறம் சண்டை நடக்கும். “பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் தொழில் இருக்கு. இந்த அரசியலை ஏன்யா பயன்படுத்துறீங்க?ன்னு கேட்டு என்னை வார்ன் பண்ணிட்டு போய்டுவார். இது தான் படத்துல ஆக்சுவல் காட்சி.

இதை நடிச்சி முடிச்சவுடனே… “நாம பாட்டுக்கு இப்படி நடிச்சிருக்கோமே.. நாளைக்கே படம் ரிலீஸ் ஆகி ரஜினி ரசிகர்கள் யாராவது என்னை பார்த்து ஏதாவது ஏடாகூடமா கேட்டாலோ சவுண்ட் விட்டாலோ என்ன பண்றது? அவங்க நம்மளை பார்த்தா கையெடுத்து கும்பிடவேண்டாமா? அதுக்கு ஏதாவது செய்யணுமேன்னு தோணிச்சி..

“நாம பாட்டுக்கு இப்படி நடிச்சிருக்கோமே.. நாளைக்கே படம் ரிலீஸ் ஆகி ரஜினி ரசிகர்கள் யாராவது என்னை பார்த்து ஏதாவது ஏடாகூடமா கேட்டாலோ சவுண்ட் விட்டாலோ என்ன பண்றது? அவங்க நம்மளை பார்த்தா கையெடுத்து கும்பிடவேண்டாமா? அதுக்கு ஏதாவது செய்யணுமேன்னு தோணிச்சி..

நேரா… ரஜினி சார் கிட்டே போனேன். “சார்… அந்த சீனோட தொடர்ச்சியா நான் ஒரு ஸீன் சொல்றேன். அதை ஷூட் பண்ணலாம். அப்போ இன்னும் நல்லாயிருக்கும்.” அப்படின்னேன். “ஓ…தாராளமா…” அப்படின்னார் ரஜினி சார்.

“காலைல நீங்க என் வீட்டுக்கு வந்து சண்டை போட்டுட்டு என்னை நாலு கேள்வி கேட்டுட்டு போறீங்க… அடுத்த சில மணி நேரம் கழிச்சி சாயந்திரம் நான் உங்களை தேடி உங்க இடத்துக்கே கார்ல வர்றேன். குடிசையெல்லாம் பிரிச்சிக்கிட்டுக்காங்க. நான் சொல்றேன்… “என்ன அண்ணாமலை பார்க்குறே? இன்னைக்கு நீ கேட்டியே ஒரு வார்த்தை “பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. ஆயிரம் தொழில் இருக்கு. அதுக்கு ஏண்டா இந்த புனிதமான அரசியலை பயன்படுத்துறீங்க?”ன்னு. அது என்னை ரொம்பவே மாத்திடிச்சுப்பா. இதே கேள்வியை இந்த ஏகாம்பரத்தை பார்த்து யாராவது ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி கேட்டிருந்தாங்கன்னா…. நான் என்னைக்கோ மாறியிருப்பேன். இப்பவும் ஒன்னும் கெட்டுபோயிடலே. இன்னைல இருந்து இந்த தொகுதி மக்கள் ஒரு புது ஏகாம்பரத்தை பார்க்கப் போறாங்க. ஒரு தொண்டனை பார்க்கபபோறாங்க.” அப்படின்னு சொல்றேன் சார். அப்புறம் என்னோட அசிஸ்டென்ட் கிட்டே சொல்லி, “நம்ம சார்பா வேற எங்கெல்லாம் குடிசை போட்டிருகான்களோ அங்கெல்லாம் அதை எடுத்துடுங்க அப்படின்னும் சொல்றேன். எப்படி?” அப்படின்னு கேட்டேன். ரஜினி சாருக்கு ஒரே சந்தோஷம்.

நான் சொன்னமாதிரியே அந்த சீனை ஷூட் பண்ணினோம். மேலே சொன்ன வரைதான் ஒரிஜினலா பிளான் பண்ணியிருந்தோம். ஆனா அந்த டயலாக்கை பேசிட்டு கார்ல ஏறும்போதும் தோணிச்சி… உடனே மனோரமாவை பார்த்து, ஒரு செகண்ட் நின்னு… “பிள்ளைன்னு பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெறனும்மா”ன்னு அவங்க கிட்டே சொல்லிட்டு கார்ல ஏறுவேன்.  ஷாட் முடிஞ்சதும் எல்லாரும் வந்து கட்டிபிடிச்சிகிட்டாங்க. படத்துல அது ரொம்ப நல்லா வந்துச்சு.

SURVIVAL OF THE FITTEST ன்னு சொல்லுவாங்களே… அது மாதிரி… இது மாதிரி சீன்ஸ் & டயலாக் இதெல்லாம் நேச்சுரலா வரணும். நம்மளை அறியாம வந்து விழனும். அப்போ தான் ஜனங்களும் ரசிப்பாங்க. நாமளும் இங்கே நிலைச்சி நிக்க முடியும். நான் வாங்குற சம்பளத்துக்கு தான் நான் வேலை செய்வேன். அதுக்கு மேலே எதுவும் என்கிட்டே எதிர்பார்க்காதீங்கன்னு சொல்றவன், முன்னுக்கு வர்றது கஷ்டம்.

நான் வாங்குற சம்பளத்துக்கு தான் நான் வேலை செய்வேன். அதுக்கு மேலே எதுவும் என்கிட்டே எதிர்பார்க்காதீங்கன்னு சொல்றவன், முன்னுக்கு வர்றது கஷ்டம்.

நாம் : ‘மனிதன்’ படத்துல நீங்க நடிச்ச அனுபவத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்… குறிப்பா சேரில ஓட்டு கேட்குற ஸீன் பத்தி…

வினுச்சக்கரவர்த்தி : ‘மனிதன்’ படமே ஒரு பணக்காரன் அப்புறம் அவனோட பையன் ரெண்டு பேரும் செய்யுற தப்பு இப்படித் தான் போகும். அதுல நாம என்ன பண்ண முடியும்னு யோசிச்சி பார்த்தேன்…  அந்த பணக்காரனுக்கு சேரி ஜனங்க மேல அக்கறையோ அன்போ இல்லே. இருந்தாலும் ஓட்டு கேட்குறதுக்கு குடிசைகள் வழியா நடந்து வர்றான். அப்போ… “ஐயோ… ரூ.350/- கொடுத்து இந்த செருப்பு வாங்கினேன். இதெல்லாம் சேராகிப் போகுதே”ன்னு சொல்லி புலம்புவேன். ஓட்டுக்காக இதெல்லாம் இவனுங்க கிட்டே இதெல்லாம் பண்ண வேண்டியிருக்கேன்னு சொல்லிகிட்டே நடப்பேன். அப்படி நடக்குறதை ஜஸ்டிஃபை பண்ணனும் இல்லையா… நான் தயங்கும்போது உடனே ரஜினி “1000 வோட்டு இருக்கு இங்கே…!” அப்படிம்பார். இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு கவுண்டர் கொடுக்கிறது… பதில் சொல்றதுன்னு போகும் அந்த ஸீன்.

ரஜினி கூட, “எப்படி சார்… ஒண்ணுமேயில்லாத அந்த ஸீனை இப்படி ரசிக்க வெச்சீங்க? யூ ஆர் ரியல்லி கிரேட்” அப்படின்னார்.

ரஜினி கூட, “எப்படி சார்… ஒண்ணுமேயில்லாத அந்த ஸீனை இப்படி ரசிக்க வெச்சீங்க? யூ ஆர் ரியல்லி கிரேட்” அப்படின்னார்.

நாம் : ‘அதிசயப்பிறவி’ படத்துல எமதர்மன் காரெக்டர் பண்ணியிருப்பீங்க.. அதை பத்தி சொல்லுங்களேன்… அந்த  காரெக்டருக்கு உங்க தோற்றம் ரொம்ப பொருந்திச்சு. ரெண்டாவது ரஜினி சார் எமலோகத்துல பண்ற அலப்பறை பயங்கரமா இருக்கும்.

வினுச்சக்கரவர்த்தி : அந்த படத்துக்கு முதல்ல எமதர்மராஜனா நடிக்கிறதுக்கு என். டி.ஆர். மாதிரி யாரையாவது கேட்கலாமான்னு இருந்தாங்க. டேட்ஸ் ப்ராப்ளம் அது இதுன்னு அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகலை. கடைசீயில என்னை செலக்ட் பண்ணினாங்க. என்னை கூட்டிகிட்டு போய், எமதர்மாராஜன் வேஷமெல்லாம் போட்டுவிட்டு ஒரு ஷூட்டிங் பங்களாவுல உட்கார வெச்சிட்டாங்க.

ஷூட்டிங்கிக்கு ரஜினி சார் அங்கே வந்தார். “ஹாய்… ஹாய்” அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டே வந்தாரு. நான் இங்கே எமதர்மன் வேஷத்துல உட்கார்ந்திருக்கிறதை பார்த்து, “சாமி… வினு சக்கரவர்த்தியா இது?” அப்படின்னு ஆச்சரியமா கேட்க… “ஆமாங்க…” அப்படின்னு சொன்னார் எஸ்.பி.எம். அந்த கெட்டப்ல அச்சு அசல் எம தர்மராஜன் மாதிரியே இருந்தேன்னு பாக்குறவங்கல்லாம் வேற சொல்லியிருந்தாங்க.

அப்படியே வந்து என் கால்ல விழுந்தாரு ரஜினி. “எம தர்மனை பாக்குறதுக்கு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. நான் வாழும்போதே எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க!” அப்படின்னு சொல்லி என் கால்ல விழுந்து என் கிட்டே ஆசி கேட்டாரு. நானும் அவருக்கு ஆசி சொன்னேன்.

படம் முழுக்க அதே மிடுக்கை மெயின்டெயின் பண்ணினேன். தவிர, எமதர்மராஜன் கூட ஜோக்கெல்லாம் பண்ணுவாரான்னு கேட்க்குற மாதிரி ஆங்காங்கே கொஞ்சம் மைல்ட் ஜோக்ஸ் அது இதுன்னு பண்ணி அந்த பாத்திரத்தை சுவாரஸ்யமா செஞ்சிருப்பேன்.

“எமதர்மனை மட்டும் பாக்குறதுக்கு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே பார்த்தாலும் அவங்க மறுபடியும் இந்த பூலோகத்துக்கு வர முடியாது. நான் வாழும்போதே எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க!”

நாம் : “ராஜாதி ராஜா” படத்துல எலியும் பூனையுமா இருப்பீங்க ரெண்டு பேரும். அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…

வினுச்சக்கரவர்த்தி :
அந்த படத்துல நான் ரஜினிக்கு மாமா. அவரோட காதலியோட அப்பா. அவருக்கு என்னைக் கண்டாலே ஆகாது. அவங்க கல்யாணத்துக்கே என்னை வரக்கூடாதுன்னு சொல்லியிருக்குற சூழ்நிலை, அவர் கல்யாணத்துக்கு வந்து நிப்பேன். அப்போ என்னை வெறுப்பேத்தனுமேன்னு “மாமா உன் பொன்னைக் கொடு” அப்படின்னு ஒரு பாட்டு வெச்சோம். அதுல அவர் தான் ஆடுவார். ஆடனும். ஆனா நான் பார்த்தீங்கன்னா.. அந்த படத்துல அவர் ஆடும்போது பதிலுக்கு பின்னாடி போறது… முன்னாடி வர்றது…. அப்படியே ஆடுறதுன்னு கவுண்டர் கொடுப்பேன். ரஜினி சார் பார்த்தாரு… டான்ஸ் மாஸ்டரை கூப்பிட்டார்… “பாட்டுல நான் தான் ஆடனும்… ஆனா வினு சார் பார்த்தீங்கன்னா அவரும் ஆடுறார்” அப்படின்னார். “அவர் கிட்டே நான் எப்படி சார் வேண்டாம்னு சொல்றது….” டான்ஸ் மாஸ்டர் இழுக்க… “நோ.. நோ… வினு சாரை பொறுத்தவரை அவர் எது வேண்டும்னாலும் செய்யட்டும். அது நமக்கு தான் பெனிபிட். நீங்க அவரோட மூவ்மென்ட்ஸை RESTRICT பண்ணாதீங்க!” அப்படின்னார். அவரும் அப்படியே விட்டுவிட அந்த பாட்டு பிரமாதமா வந்தது.

மொத்தம் ரெண்டே நாள் தான்.. ஏ.வி.எம்.ராஜேஸ்வரில அந்த  ஸாங்கை ஷூட் பண்ணினோம். எடிட்டிங் பண்ணும்போது ரஜினி சார் சொல்லிட்டார்… “வினு சார் என்ன பண்ணியிருக்கிராரோ அது அப்படியே வரட்டும்… அதை எடிட் கிடிட் பண்ணிடாதீங்க!”ன்னு.

நாம் : “மாப்பிள்ளை” படத்துல இந்த டிரங்கள் & மங்கள் ஃபுட் கம்பெனி கலாட்டா. சூப்பர். எப்படி…தோணிச்சி…அது பத்தி?

வினுச்சக்கரவர்த்தி : படத்துல நடிக்கும்போது எஸ்.எஸ்.சந்திரன் கொஞ்சம் விந்தி விந்திதான் நடப்பார். அன்னைக்கு ஷூட்டிங் முடியுது… என்கிட்டே வந்து பிரேக்ல ரஜினி சார் கேட்டார்…. “சார்…. இன்னைக்கு லாஸ்ட் டே ஷூட்டிங்.. அடுத்த சீனோட எஸ்.எஸ்.சந்திரன் சார் காம்பினேஷன்ஸ் முடியுது. அவர் கிளம்பிடுவாரு..? என்ன செய்யலாம்?” அப்படின்னு கேட்டார் ரஜினி சார். நான் சொன்னேன்…”சார் அவர் வளைஞ்சி வளைஞ்சி நடப்பார். அதே மாதிரி நீங்க கடைசீயில நடந்து எங்களை கலாட்டா பண்ணுங்க!” அப்படின்னேன். “இது நல்லாயிருக்கே”ன்னு சொல்லிட்டு, ரஜினி சார் அதே மாதிரி நடந்து எஸ்.எஸ்.சந்திரனை கலாட்டா பண்ணார். தியேட்டர்ல அந்த சீனுக்கு செம கிளாப்ஸ்.

படத்தோட ப்ரீவ்யூ ஷோவப்போ எஸ்.எஸ்.சந்திரன் வந்து என்னை கட்டி பிடிச்சிக்கிட்டார். “வினு சார்… ரஜினி சாரும் நீங்களும் படத்துல பண்ற காமெடியில எங்கே என் காரெக்டர் காணாம போய்டுமோன்னு பயந்தேன். ஆனா உங்களால எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு” அப்படின்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்னொரு காரெக்டரை டாமினேட் பண்ணியோ, இன்சல்ட் பண்ணியோ நான் ஐடியா கொடுக்குறதில்லே. படத்துல நல்லாயிருக்கும். அதுவும் ரஜினி சார் அதை செய்தா நல்லாயிருக்கும் என்பதால அந்த  ஸீனை சொன்னேன். கடைசீயில அந்த ஸீன் ரஜினி சார் நடிச்சதுனால - கரெக்ட்டான ஒரு சென்ஸ்ல - நல்லாவே ஒர்க்-அவுட் ஆச்சு. ஜனங்களும் அந்த கிண்டலை ரசிச்சாங்க.

இன்னொரு காரெக்டரை டாமினேட் பண்ணியோ, இன்சல்ட் பண்ணியோ நான் ஐடியா கொடுக்குறதில்லே. படத்துல நல்லாயிருக்கும். அதுவும் ரஜினி சார் அதை செய்தா நல்லாயிருக்கும் என்பதால அந்த  ஸீனை சொன்னேன்.

நாம் : வீராவுல கூட நடிச்சிருப்பீங்க…. ஹீரோவோட அம்மாகிட்டே (வடிவுக்கரசி) அறை வாங்குவீங்க…. அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்….

வினுச்சக்கரவர்த்தி : அந்த படத்துல நானும் ஒரு வில்லன் தான். என் பசங்க ரஜினி கூட சண்டைப் போட்டு தோற்று போனபிறகு, விரக்தியில சொல்லுவேன்… “உங்களையெல்லாம் பெத்ததுக்கு நாலு எருமைகளை வாங்கி விட்டிருக்கலாம். பாலாவது கிடைச்சிருக்கும்” அப்படின்னு. அந்த சீன் படத்துல ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்ல கிடையாது. நான் சொன்னதை ரஜினி சார் தூரத்துல இருந்து பார்த்துக்கிட்டுருந்தார். “வினு சார்… படத்துல இது இருக்கட்டும்…. மிஸ் செய்யவேண்டாம்”ன்னு சொல்லி அதை சேர்த்துட்டார்.

தவிர, படத்துல அவங்கம்மா (வடிவுக்கரசி) என் கிட்டே பட்ட கடனுக்கு, அவங்களை கூப்பிட்டு அவமானப்படுத்தி அனுப்பி வைப்பேன். என்னோட் கடனை செட்டில் செய்றதுக்கு தான் ரஜினி சார் மீனா கிட்டே பாட்டு கத்துகிட்டு மெட்ராஸுக்கு வந்து பாட்டுப் போட்டியில கலந்துகிட்டு அதுல ஜெயிச்சி… ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டு ஊருக்கு வருவார். வர்றவர் நேரா அம்மாவை கூட்டிகிட்டு என்னை பார்க்கத்தான் வருவார். பணத்தை என் கிட்டே கொடுத்துட்டு, அவங்கம்மாவை விட்டு என் கன்னத்துல அறையச் சொல்லுவார். ஆக்சுவலா கதைப்படி ரஜினி தான் என்னை அறையணும்… அவர் அறையாம வடிவுக்கரசியைவிட்டு அறையச் சொன்னது ஏன்னு கேட்டேன்… அதுக்கு சொன்னார்…. “இல்லே…இல்லே… வினுச் சக்கரவர்த்தி - ரஜினிகாந்த் அப்படின்னு சொன்னா…ஒரு அப்பா - பையன் உறவு போல அது. அதுல தான் நாம இத்தனை படங்கள் ஜெயிச்சிட்டு வர்றோம். நான் உங்களை அறைஞ்சா நான் கெட்டவனாயிடுவேன். வில்லனாயிடுவேன். அதுனால தான் வடிவுக்கரசியைவிட்டு அறையச் சொன்னேன்.” அப்படினார்.

நான் ஒரு நிமிஷம் ஸ்டன்னாயிட்டேன். அவர் சொன்னது எத்தனை பெரிய விஷயம் - ஆனா எவ்ளோ நுணுக்கமான விஷயம். அவர் இடத்துல வேற யார் இருந்திருந்தளும் இப்படி யோசிச்சிருப்பாங்களான்னு எனக்கு தெரியாது. அது தான் ரஜினி சார்.

“இல்லே…இல்லே… வினுச் சக்கரவர்த்தி - ரஜினிகாந்த் அப்படின்னு சொன்னா…ஒரு அப்பா - பையன் உறவு போல அது. அதுல தான் நாம இத்தனை படங்கள் ஜெயிச்சிட்டு வர்றோம். நான் உங்களை அறைஞ்சா நான் கெட்டவனாயிடுவேன். வில்லனாயிடுவேன். அதுனால தான் வடிவுக்கரசியைவிட்டு அறையச் சொன்னேன்.”

நாம் : படங்கள்ல… அவங்க ஒரிஜனலா வைக்கிற காட்சிகள்ல எப்படி உங்களால எக்ஸ்ட்ரா விஷயங்களாய் சேர்க்க முடியுது? அது உங்க வேலை இல்லையே?

வினுச்சக்கரவர்த்தி : எனக்குள்ளே பேசிக்கலா ஒரு ரைட்டர் இருக்கான். ரெண்டாவது… வந்தோமா நடிச்சோமா சம்பளத்தை வாங்கி பாக்கெட்ல போட்டுகிட்டோமன்னு இல்லமா…. நமக்கு தெரிஞ்ச நாலு விஷயத்தை அவங்களுக்கு சொல்லி அந்த படம் நல்லா வர்றதுக்கு ஹெல்ப் பண்ணுவோம்னு நினைக்கிறேன். அவ்ளோ தான்.

வினுச்சக்கரவர்த்தி : இப்போ கூட ரஜினி சார் கூப்பிடத்தான் செய்றார்… நான் தான் கொஞ்சம் விலகியிருக்கிறேன்.

நாம் : இசைஞானி கூட உங்க பழக்கத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

வினுச்சக்கரவர்த்தி : (எதரே சுவற்றில் மாட்டியிருந்த படத்தை படத்தை காண்பிக்கிறார்.) இளையராஜா யாரையும் அந்த மாதிரி சேர் போட்டு உட்கார வெச்செல்லாம் பார்க்க முடியாது. ஸ்நாப் எடுக்க கூட விடமாட்டாரு. அன்னைக்கு நான் போயிருந்தப்போ… “யோவ் இதை எடுத்துகோய்யா”ன்னு சொல்லிட்டு, ஃபோட்டோல்லாம் எடுக்க வெச்சார். நான் சொன்னேன்… “நீங்க மேலே உட்கார்ந்து உங்க எதிரே நான் கீழே உட்கார்ந்து தான் போட்டோ எடுக்கணும். உலகத்துக்கே தெரியும்… டைரக்டர்ஸ் எல்லாம் உங்களுக்கு அப்புறமா தான்!” அப்படின்னேன்.

அதுக்கு இளையராஜா சொன்னார் “வினுச்சக்கரவர்த்திக்கு இளையராஜா கொடுத்த சிம்மாசனம் இது. ஒரு டைரக்டரா நீங்க ஜெயிக்க போறீங்க. ஒரு படத்து டைரக்டருக்கு வேண்டிய மரியாதை இது!” அப்படின்னார்.

நாம் : இசைஞானி மனசுல அவ்ளோ சுலபத்துல ஒருத்தருக்கு இடம் கிடைக்காது. கிடைச்சா அவரை அவர் எங்கேயோ வெச்சி பார்ப்பார்.

நாம் : இறுதியாக ஒரு கேள்வி… பல படங்கள் ரஜினி சாரிடம் ஒர்க் பண்ணியிருக்கீங்க. சூப்பர் ஸ்டாரிடம் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய நல்ல விஷயங்கள் என்ன? அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.


வினு
ச்சக்கரவர்த்தி : நீங்க என்றில்லை… இளைஞர்கள் எல்லாரும் அவர்கிட்டே கத்துக்கவேண்டிய விஷயம்: அவர் தினமும் ஏதாவது நாலேட்ஜ் கெயின் பண்ணிகிட்டே இருக்கார். புக்ஸ் படிச்சிகிட்டே இருப்பார். அப்படி கெயின் பண்ண நாலெட்ஜை, தன்னோட பேச்சின்போது பயன்படுத்தி எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்றார். கிளாப்ஸ் வாங்குறார். நிறைய படிக்கணும்… நிறைய உழைக்கணும் அதுக்கு.

இளைஞர்கள் எல்லாரும் அவர்கிட்டே கத்துக்கவேண்டிய விஷயம்: அவர் தினமும் ஏதாவது நாலேட்ஜ் கெயின் பண்ணிகிட்டே இருக்கார். புக்ஸ் படிச்சிகிட்டே இருப்பார். அப்படி கெயின் பண்ண நாலெட்ஜை, தன்னோட பேச்சின்போது பயன்படுத்தி எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்றார்.

இடையில அவருக்கு உடல் நலமில்லாம போனது… இது எல்லாம் ஒரு திருஷ்டி மாதிரி தான். இதெல்லாம் சரியான பிறகு… இன்னமும் ஒரு இருபது முப்பது வருஷம் அவர் வாழ்வார். கொடிகட்டி ஆள்வார். அப்புறம்… அவர்கிட்டே இருக்கும் இன்னொரு குணம் :அடக்கம் & மரியாதை. காரைவிட்டு இறங்கி… நாம வணக்கம் சொல்வதற்கு முன்னே… அவர் சொல்லிடுவார். “வணக்கம் சார்” அப்படின்னு. அவருக்கு முன்னாடி நாம சொல்லிடணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்திருக்கேன்.

அந்த மரியாதை பழக்கம் வழக்கங்கள், அப்புறம் தான் எப்படி வந்தோம்.. என்னென்ன தப்புக்கள் செஞ்சோம்… அதெல்லாம் மத்தவங்க செய்யக்கூடாது என்கிற நல்ல எண்ணம் இருக்கு. அவர் என்ன ஃபிலிம்  இன்ஸ்டிட்டியூட்டா? ஆனா பாருங்க… அவர்கிட்டே இருந்து வர்றவங்க எல்லாம் டைரக்டர்ஸா  தான் வர்றாங்க. ஐஸ்வர்யா.. சௌந்தர்யா ரெண்டு பேரும் டைரக்டர்ஸ் ஆயிட்டாங்க. தனக்கு கிடைக்காத ஒரு நல்ல வாய்ப்பு தன் மகள்களுக்கு கிடைத்திருக்கு. அதை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி சொந்தமா முன்னேறனும் என்று ஆசைப்படுகிறார். ரெண்டு பேரும் நிச்சயம் நல்லா வருவாங்க.

நான் : உங்களைப் போன்ற நல்லவர்களின் ஆசி நிச்சயம் பலிக்கும். எங்கள் தள வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வினுச்சக்கரவர்த்தி : ரஜினி சாரோட வாழ்க்கையை மோட்டிவேஷனா எடுத்து, அவரோட வாழ்க்கை முறைகள், மற்றும் கருத்துக்கள் இதையெல்லாம் எடுத்துக்கூறி, நாலு பேருக்கு நல்லது சொல்ல முற்படும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. விவேகானந்தர், போன்றவர்கள் ஆன்மிகம் வளர்த்தார்கள் என்றால் அவர்கள் அதற்க்கென்றே இருப்பவர்கள். ஆனா ரஜினியை பொறுத்தவரை சினிமாவுக்குள் இருக்கும் ஒரு சாமியார் அவர். உண்மையான ஆன்மீகவாதி. இத்தனை உயரத்தை தொட்டபோதும் எந்த சபலமும் இல்லாம…. அடக்கமா பேசி… வாழ்ந்துட்டு வர்றது என்பது மிக மிகப் பெரிய விஷயம். அவரைப் பற்றி நீங்கள் கொடுக்கும் இது போன்ற சந்திப்புக்கள்; விஷயங்கள் இவை உணர்த்தும் நீதிகள் உங்கள் வாழ்க்கையிலும் அப்ளை செய்து… நல்லா நீடீழி வாழவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ரஜினி சாரோட வாழ்க்கையை மோட்டிவேஷனா எடுத்து, அவரோட வாழ்க்கை முறைகள், மற்றும் கருத்துக்கள் இதையெல்லாம் எடுத்துக்கூறி, நாலு பேருக்கு நல்லது சொல்ல முற்படும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது

நாம் : ரஜினி சாரை எப்போ லேட்டஸ்ட்டா பார்த்தீர்கள்?

வினுச்சக்கரவர்த்தி : நான் கடைசீயா பேசியது… ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னே தான். லண்டன்ல இருந்து வந்தேன். மண்டபத்துக்கு கூப்பிட்டுருந்தார்…. உடம்பு சரியானதுக்கு பிறகு போய் பார்த்தேன். “கவலைப் படாதீங்க சார்… உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு எதுவும் வராது”ன்னு சொன்னேன். அப்படியே நாட்டு நடப்புக்கள், சினிமா, அரசியல், ஆன்மிகம், என்று எல்லா விஷயங்கள் பற்றியும் பேசினோம். இனிமையான ஒரு சந்திப்பு.

நாம்: உங்களின் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம், மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த எளியவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி, வாழ்க்கைக்கு பயன் உள்ள பல நல் நல் விஷயங்களை பகி ர்ந்துகொண்டதர்க்கு நன்றி சார்.

வினுச்சக்கரவர்த்தி : வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.

“போகவேண்டிய தூரம், செய்ய வேண்டிய சாதனைகள், அடைய வேண்டிய இலட்சியங்கள் நிறைய இருக்கு… ஆசீர்வாதம் பண்ணுங்க சார்….” என்று கூறி அவரது கால்களில் விழுந்து ஆசிபெற்றேன்.


இறுதியாக “ரஜினியின் பன்ச்தந்திரம்” நூலை அவருக்கு பரிசளித்தேன். மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். படித்துவிட்டு அனைவரிடமும் ஃபீட்பேக் கொடுப்பதாக சொன்னார்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Photographs : OnlySuperstar.com Photo Bureau
Ilayaraja photo courtesy : Mr.VinuChakravarthy
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

—————————————————————————————————————-
என்ன நண்பர்களே… மேற்படி காட்சிகளை எல்லாம் ஒரு தடவை பார்த்தா நல்லாயிருக்கும்னு தோணுமே…?

Check the videos below now…
—————————————————————————————————————-

Rajini - Vinuchakravarthi Superscenes - Video 1
Rajadhi Raja, Gurusishyan, Adhisyap Piravi


Rajini - Vinuchakravarthi Superscenes - Video 2
Veera, Annamalai

Video Editing by : Kodambakkam Naveen

———————————————————————————————
உங்கள் கமெண்ட்டை தற்போது தமிழிலேயே அளிக்கலாம்

நமது தளத்தில் கமெண்ட் பகுதியில் தமிழில் டைப் செய்ய வசதி செய்யப்பட்டுவிட்டது. கர்சரை கீழே உள்ள COMMENT FIELD ல் வைத்து Ctrl+G யை கீ போர்டில் பிரஸ் செய்தால், தமிழில் டைப் செய்யலாம். ஆங்கிலத்தில் டைப் செய்ய மறுபடியும் Ctrl+G யை பிரஸ் செய்யவும்.
———————————————————————————————

[END]

18 Responses to ““ரஜினி வாழ்வாங்கு வாழ்வார்; கொடிகட்டி ஆள்வார்!” – நடிகர் திரு.வினு சக்கரவர்த்தியுடன் ஒரு சந்திப்பு – Part II”

  1. கிரி கிரி says:

    சுந்தர் சூப்பர் :-)

    பேட்டி ரொம்ப நல்லா இருந்தது. அண்ணாமலை குரு சிஷ்யன் யில் கடைசி நேரத்தில் சேர்த்த காட்சிகள் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது ரொம்ப ஆச்சர்யம். அதுவும் புள்ளைன்னு பெத்தா இந்த மாதிரி பெக்கணும் என்று சொல்லும் வசனம் இன்று வரை ரசிகர்களிடையே பிரபலம். படத்துலயும் ரொம்ப பொருத்தமாக இருந்தது. அவர் சொல்வது போல அவர் கிட்ட ஒரு ரைட்டர் இருப்பதால் தான் இது போல வசனங்கள் வருகிறது. உண்மை தான்.

    ரகுவரன் மாதிரி வினு சக்கரவர்த்தி சாரும் ரஜினி ரசிகர்களின் பிரியமானவர்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாத ஒன்று. பேட்டிக்கு நன்றி.

  2. MURUGAN MURUGAN says:

    அருமையான சந்திப்பு சுந்தர் ஜி !!!
    திரு வினு சக்கரவர்த்தி அவர்களை பற்றி இவ்வளவு விஷயங்களை அறிய உதவிய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் !!!
    தொடர்க உங்கள் நற்பணி !!!

  3. kila kila says:

    translate pannage pa

  4. MuthuKumar MuthuKumar says:

    எனக்கும் வினுச்சக்கரவர்த்தியை ரொம்பப் பிடிக்கும். கிரி போன பதிவின் கமெண்ட்டுல சொன்னா மாதிரி "இப்ப என்னா பண்ணுவ" காட்சி கலக்கலா இருக்கும்.
    வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகாராக மட்டுமே அவரை எனக்குத் தெரியும். அவரது இயக்குனர், எழுத்தாளர் திறமைகள் பற்றி அறியும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இயக்குனராக மாபெரும் வெற்றிப் படங்ககளை கொடுக்க வாழ்த்துக்கள்.
    அந்த காட்சிகளுக்கு பின்னாடி இவ்ளோ இருக்கா? இவர் சொன்ன அத்தனை காட்சிகளும் அந்தந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். வினு சார் உண்மையிலேயே திறமைசாலிதான். அதான் அவரை சூப்பர் ஸ்டார் அவரோட எல்லா படத்துலயும் பயன்படுத்தி இருக்கார். வேற எந்த ஹீரோவும், கூட நடிக்கிற ஒரு நடிகருக்கு இவ்ளோ முக்கியத்துவமும் அன்பையும் கொடுப்பாங்களா என்பது நிச்சயம் கேள்விக்குறிதான்.
    அவரது பெயரில் இருக்கும் "வினு" என்பதன் அர்த்தம் தெரிந்துகொள்ள ஆசை.
    சுந்தர், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை, அசத்தல் பேட்டிகள் தொடரட்டும்.

  5. **Chitti** **Chitti** says:

    ரஜினியின் பல படங்களில் (இவருடன் இணைந்து நடித்ததில்) வரும் பல வெற்றி காட்சிகளில் இவரின் மிக பெரிய பங்களிப்பு இப்போதுதான் தெரிகிறது. அதற்காக பதிவு ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல!!!
    ***
    இவர் சொல்கின்ற மாதிரி ரஜினியும் சரி, இவரும் சரி பல பல புத்தகங்கள் படித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டு, தேவையான இடத்தில தெளிவாக பயன்படுத்துகின்றார்கள். (நாம் பல விஷயங்கள் படிப்பது மட்டும் முக்கியம் அல்ல, அதனை சந்தர்ப்பர்த்திர்க்கு தங்குந்தவாறு உயபோகித்து அதன் மூலம் பயன் பெற தெரிந்து கொள்ளல் வேண்டும். அது தான் படித்ததற்கு பயன்). அந்த வகையில் திரு. வினு சக்கரவர்த்தி அவர்கள் மிகவும் திறமைசாலி. இவர் இயக்க போகும் படம் வெற்றி பெரும் என்பதில் ஐயமில்லை.
    ***

  6. **Chitti** **Chitti** says:

    இவரின் வார்த்தைகள் பலிக்க வேண்டும் (இன்னமும் ஒரு இருபது முப்பது வருஷம் அவர் வாழ்வார். கொடிகட்டி ஆள்வார்). நல்லவங்க வாக்கு கண்டிப்பா பலிக்கும்.தமிழ் நாட்டிற்க்கு விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.
    ***
    இவர் கூறிய (நேரிடையாகவும், மறைமுகமாக வாழ்ந்து காட்டியும்) அனைத்தும் நல்ல விஷயங்கள். பின்பற்ற முயற்சிக்கிறேன்!. திரு. வினு சக்ரவர்த்தி அவர்களுக்கும், திரு. சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல!!!
    ***
    சிவாஜியே!, உனது ரசிகனாக, உன்னை பின்பற்ற முயற்சிக்கும் மனிதனாக இருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்!
    ***
    **சிட்டி**.
    ஜெய் ஹிந்த்!!!
    Dot.

  7. சிதம்பரம் சிதம்பரம் says:

    /* போகவேண்டிய தூரம், செய்ய வேண்டிய சாதனைகள், அடைய வேண்டிய இலட்சியங்கள் நிறைய இருக்கு… ஆசீர்வாதம் பண்ணுங்க சார்….” */

    வாழ்க்கையின் எமக்கிருக்கும் பணிகளை சரியான வரிகளில் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்

  8. Balaji Balaji says:

    Everybody should follow his good principles and improve themselves.
    Very Excellent post……tks a lot sundar…tc

  9. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thanks for the excellent compilation. I felt as if that your text message is so powerful than video.

  10. manojscen manojscen says:

    Thanks a lot for this article!!

  11. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    சுந்தர், வினு அவர்களின் கணீரென்ற குரலில் அழுத்தந்திருத்தமான தமிழ் உச்சரிப்பைப்பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. வாயை திறக்காமலேயே பல்லை கடித்துக்கொண்டு பேசும் சில முன்னணி(?) நடிகர்கள், தயவுசெய்து வினு அவர்களின் வசன உச்சரிப்பை கேட்டு தமிழ் கற்றுக்கொள்ளலாம். வினு அவர்கள் நடித்த சின்னத்தாயி படத்தில் சாமியாடி கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருப்பார். அவருக்கு ஏதாவது விருது கிடைத்ததா என்று எனக்கு தெரியாது. இசைஞானி அந்தப்படத்தில் ஒரு இசை சாம்ராஜ்ஜியத்தையே நடத்தியிருப்பார். குறிப்பாக கோட்டயவிட்டு வேட்டைக்கு போகும் சொடலமாடசாமி பாட்டுல பல்லவிக்கும் சரணதுக்கும் நடுவில் சேர்த்திருக்கும் இசை பல ஆஸ்காருக்கு சமம். வினு அவர்கள் இயக்குனராக மேலும் சாதிக்க இறைவனை வேண்டுகிறேன்.

  12. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

    திரு.வினுச்சக்ரவர்த்தி சாருடைய பேட்டி படிக்கும் போது ஒரு வித அமைதி பேட்டி முழுவதும் இருந்தது போல் உணர்ந்தேன்…யார் பற்றியும் குறை சொல்லாமல், புறம் கூறாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் ஆன வார்த்தைகள் தான் பேட்டி முழுவதும் நிறைந்திருந்தது..! சிலருக்கு மட்டுமே இது சாத்தியம்..! இதனால் தான் நம்ம தலைவருக்கு வினுச்சக்ரவர்த்தி சாரை ரொம்ப பிடித்திருக்கும் போல…!
    -
    உண்மையா சொன்னா, வினுசக்ரவர்த்தி சாரை எங்க தலைமுறைக்கு ஒரு வில்லன் நடிகராத் தான் அதிகம் தெரியும்..,.ஆனா அவர் ஒரு நல்ல மனிதர் என்பது பேட்டி மூலம் தெரிந்து கொண்டோம்…அவர் மேல இருக்கிற மரியாதையை இன்னும் அதிகப்படுத்தி விட்டது !
    -
    "பேட்டி-ன்னு எடுத்த இப்படி ஒரு பேட்டி தான் எடுக்கணும் " — (வினுச்சக்ரவர்த்தி சார் ஸ்டைல்-ல)
    -
    "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"
    -
    விஜய் ஆனந்த்

  13. Anand Vasi Anand Vasi says:

    Lovely lovely…..Vinu Uncle is loved by most people as our Superstar… want Thalaivar - Vinu Combo again…Wishing him Good health n Prosperity. As usual Sundar anna…Lovely work. :D

  14. RAJA RAJA says:

    உண்மையில் எமதர்மராஜா வேஷத்தில் இருந்த திரு வினு சார் அவர்கள் வாழ்க பலாண்டு என்று வாழ்த்தி இருப்பார் அதுவும் சேர்த்து தான் இன்று நம் தலைவரை நமக்கு திருப்பி கொடுத்து உள்ளது எமனே வாழ்த்திய பிறகு என்ன தலைவா வாழ்க பல்லாண்டு

    ஒரே ஒரு வருத்தம் திரு வினு சார் அவர்கள் சிவாஜி படத்தில் நடித்த காட்சிகள் படத்தின் நீளம் கருதி வரமால் போனது தான்

  15. Selvam Selvam says:

    Hi Sundar,

    What a lovely article, Mr.vinu is a legend on his own merits. I wish him all the best. Rajinikanth sir and vinu sir combo has never failed. Long live both, thanks for a true article.

    Regards
    Selvam (UK)

  16. mano mano says:

    நன்றி சுந்தர் சூப்பர் பேட்டி

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates