









You Are Here: Home » Featured, Happenings » “சென்னைல நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பாக்குறோம். ஒ.கே.?” — ராஜமௌலிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி!
இதற்க்கு முன்பு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் “நான் ஈ” என்ற ஒரே படத்தின் மூலம் ஓட்டு மொத்த இந்தியாவிலும் ரசிகர்களை பெற்றுவிட்டார் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜ மௌலி.
கதை சொன்ன விதம், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட், பயன்படுத்திய தொழில்நுட்பம், அதில் காட்டிய நுணுக்கம் மற்றும் நேர்த்தி, இப்படி சகல விஷயங்களிலும் சிக்சர் அடித்து, ஒட்டுமொத்த திரை ஆர்வலர்களையும் திக்குமுக்காட வைத்துள்ளார் ராஜ மௌலி.
பாக்ஸ் ஆபீசில் படம் பல புதிய சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே படத்தை பார்த்து பிரமித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமௌலியை திடீரென்று தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். முன்னதாக படத்தின் வில்லனாக கலக்கிய சுதீப்பை தொடர்பு கொண்டு அவரது நடிப்பை பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அவர் என்னை தொடர்புகொண்டு, இந்த படம் தெலுங்கு படவுலகில் ஒரு சரித்திரப் புகழ் மிக்க படமாக மாறும் என்றும், படத்தின் வில்லன் சுதீப் மிகச் சிறப்பாக தமது நடிப்பை வெளிப்படுத்தியிருபப்தாகவும் சொன்னார்” என்று கூறுகிறார் ராஜமௌலி.
“ரஜினி சாரே கால் பண்ணி என்கிட்டே பேசினதுல என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சென்னை வரும்போது நாம் ரெண்டு பேரும் சேர்ந்து படத்தை பார்க்கலாம்”ன்னு சொல்லியிருக்கார் ரஜினி சார். ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேற சந்தோஷம் என்ன இருக்க முடியும்?” என்கிறார் ராஜமௌலி.
படத்தை பற்றி பல நட்சத்திரங்கள் தங்களது டுவிட்டரில் சிலாகித்து பேசிவருகின்றனர். “படத்தை பாராட்டிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ந்துபோய் கூறுகிறார்.
ஸ்பெஷல் ஸ்கூப் :
“நான் ஈ” பெற்றிருக்கும் இந்த பிராமாண்ட வரவேற்பு மற்றும் அதன் வெற்றி பல இயக்குனர்களை சிந்திக்க வைத்துள்ளது. பெரும்பாலானோர் தங்கள் தற்போதைய ப்ராஜக்டுகளை மறு பரிசீலனை செய்யத் துவங்கியுள்ளனர். ஒரு வகையில் இது ஆரோக்கியமானதே. அவரவரிடம் புதைந்து கிடக்கும் திறமையும் கிரியேட்டிவிட்டியும் வெளிவந்து நம் இந்திய சினிமாவையே தலை நிமிர வைத்தால் சரி. சராசரி சினிமா ரசிகனின் விருப்பம் அதுவே.
Though SS Rajamouli has several super hits in his kitty, it is this “E” has made him most sought director of the country. The man is in euphoric mood these days as his twitter is being flooded with wishes and accloades.
Adding to it - it was a VVIP who called him recently to shower his praising on his part. It is none other than Superstar Rajinikanth.
Rajamouli says in a jubilant mood: “He told me that my film Eega could go down as a landmark film in Tollywood. He also praised Sudeep for his riveting performance,” Rajamouli said.
It is to mentioned here that Superstar watched Eega at a private screening in Chennai.
So impressed was Badhsah of the Indian Box Office, Rajini with the film that he reportedly told Rajamouli, “We’ll watch the film together when you are in Chennai”. “When Rajini sir called, my happiness knew no bounds. I am thankful to Telugu stars for their support and appreciation,” he said. The film has already collected `15 crore and is on its way to breaking box-office records.
Special scoop:
The success and reception that Naan E garnered across the globe has made many directors to rethink about their current projects. This would be healthier for our Indian movie industry as their hidden talents would find a way to take shape. That is a common cine goer’s wish!
English Translation by - Simpe Sundar
————————————————————————————-
Also read :
“நான் தான் சூப்பர் வில்லன்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, நீங்க என்னை மிஞ்சிட்டீங்க!”
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15524
‘நான் ஈ’ பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி விட்டிருக்கும் சவால்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15506
————————————————————————————
[END]
Our thalaivar always Superstar, Super human and Super and Seet heart person in the world.
congrats Raja Mouli Sir!!!
thalaivarey phone panni naama rendu peyrum seyndhu padam paakkalaamunnu solli irukkaarunna - gr8!!!
Hats off to the whole Naan E team!!!
naama rendu perum sernthu padam panrom …enra reethil padichten….
Ini itha copy adichu neraya padam varum.