You Are Here: Home » Featured, Rajini Lead » ஜூலை 13 - கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - என்று உலகிற்கு உணர்த்திய நாள்!

ஜினி ரசிகர்களின் வாழ்வில் இன்று மறக்க முடியாத ஒரு நாளாகும். சென்ற ஆண்டு இதே நாள் - ஜூலை 13 அன்று - சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து தனது டிரேட்மார்க் புன்னகையுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் சுறுசுறுப்பு மற்றும் வேகத்தின் அடையாளமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கடந்த வருடம் ஏபரல் 29 அன்று - ‘ராணா’ பூஜை முடிந்து முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உரிய சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு திரும்பிவிட்டாலும் அவரது உடல் நலத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன. எனவே, சிறப்பு சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் மே 12 அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறப்பான சிக்ச்சை அவருக்கு அளிக்கப்பட போதிலும், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பரபரப்பிலிருந்து விலகி அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து மே 27 அன்று சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார் ரஜினி. அங்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவ மனையில், அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் உடனிருந்து கவனித்துக்கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் நலம் பெற்று விரைவில் நாடு திரும்பவேண்டும் என்று உலகம் முழுக்க ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். ரசிகர்களுடன் பொதுமக்களும் பிரார்த்தனையில் பங்குபெற்றது - ரஜினி என்பவர் தனி மனிதர் அல்ல. அவர் தமிழகத்தின் அடையாளம் என்பதை உலகிற்கு உணர்த்தியது.

ரசிகர்கள் மிகவும் பதட்டத்திலும், மன அழுத்தத்திலும் வேதனையிலும் இருந்த இந்த காலகட்டங்கள் நமக்கும் நமது தளத்திற்கும் மிகவும் சோதனையை தந்தன. இருப்பினும், செய்திகள் அளிப்பதில் அவசரத்தை கட்டாமல் மிகவும் நிதானத்தை கடைப்பிடித்து, அவரது மருத்துவமனை வாசம் மற்றும் உடல் நலன் குறித்த செய்திகளை பக்குவமாக வெளியிட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வந்தோம் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

இந்த காலகட்டங்களில் வதந்திகளை ஏறெடுத்தும் பார்க்காமல் அவரது உடல் நிலை முன்னேற்றம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறிய செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தது அவற்றை மட்டுமே வெளியிட்டு வந்தோம் என்பதை நமது தளத்தின் ARCHIVES பகுதியை சென்று பார்த்தாலே தெரியும்.

நமது தளத்தின் பிரத்யேக ஓவியங்களுடன் நீதிக் கதைகள், மற்றும் வாலி உள்ளிட்ட பிரபலங்கள் பத்திரிக்கைகளில் எழுதிய பிரார்த்தனைகள் இவற்றை நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

எப்படியோ பாலைவனம் போன்ற ஒரு காலகட்டத்தை பக்குவமாக எந்த பாதிப்புமின்றி தாண்ட வைத்த இறைவனுக்கு நன்றி.

மேலும் சூப்பர் ஸ்டாருடன் உறுதுணையாக இந்த காலகட்டங்களில் இருந்து அவரை பார்த்துக்கொண்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சிங்கப்பூரில் அவரது சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து, அது தொடர்பாக பல உதவிகள் புரிந்திட்ட , நடிகை மானு மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி.

அதே போன்று அவர் நலம் பெற்று திரும்ப பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்ட ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.

உடல் மிகவும் நலிவுற்று, பாதிப்படைந்து, சக்கர நாற்காலியில் சிங்கபூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட திரு.ரஜினி - கிளம்புவதற்கு முன்பு உடைந்த குரலுடன் அவர் ரசிகர்களுக்கு அளித்த ஒலிப்பதிவு செய்தியை கேட்டு கண்கலங்காதவர்களே இருக்க முடியாது. உடல் நலம் பெற்று மீண்டு வருவதே கேள்விக்குறி என்று பேசப்பட்ட சூழ்நிலையில்,  இதோ ஒரு வருடம் ஓடிவிட்டது. முன்பை விட சுறுசுறுப்பாக நம் முன்பு தற்போது வலம் வரும் சூப்பர் ஸ்டார், இந்த ஒரு ஆண்டு இடைவெளியில் ஒரு படத்தையும் அறிவித்து அதில் வெற்றிகரமாக நடித்தும் முடித்துவிட்டார்.

வாழ்க்கை பல அற்புதங்கள் நிறைந்தது. நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்பவர்களுக்கு அது என்றுமே துணை நிற்கும்.

WHAT YOU THINK YOU BECOME!

[END]

12 Responses to “ஜூலை 13 - கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - என்று உலகிற்கு உணர்த்திய நாள்!”

  1. Sankaranaryanan Sankaranaryanan says:

    God is Great…….

  2. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    A very positive looking article. Thanks for recalling unforgettable day for all of us Sundar.

  3. BaluMahendran BaluMahendran says:

    காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது சுந்தர் gee . இந்த நாளை என் வாழ் நாளில் மறக்க முடியாது.ஒவ்வொரு மணித்துளியும் என் நினைவுகளில் நீங்காது இருக்கிறது.தலைவரை பார்த்த பொழுது தான் ஒரு திருப்தி.கடவுளை நம்பினோர் கைவிடப்படார் – என்று உலகிற்கு உணர்த்திய நாள்!

  4. kumaran kumaran says:

    மறக்க முடியாத, இரவு முழுவதும் தூங்காத, சந்தோஷமான நாள்.

  5. harisivaji harisivaji says:

    வாழ்க்கை பல அற்புதங்கள் நிறைந்தது….
    Inru nadapathum nalai nadakka irupatharkum oru kaaranam undu….

  6. சிதம்பரம் சிதம்பரம் says:

    ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.

  7. bijan bijan says:

    Historic day for all thalaivar fans..:) Cheers all Thalaivar fans!!!

  8. devaraj devaraj says:

    Thankyou ALMIGHTY GOD.

    Dev,

  9. MURUGAN MURUGAN says:

    தலைவருக்கு மாத்திரமல்ல அவரது ரசிகர்களான ஒவ்வொருத்தருக்குமே இது மறு பிறவி தான் !!!
    எங்கள் உயிரை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி !!!
    அந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களை வழி நடத்தி சென்ற எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி !!!

  10. RAJA RAJA says:

    NAAM seitha prathanaigal veen pogavillai,engal THALAIVARAI meendum athai vida athiga surusurupudan valangia KADAVULUKKU aayiram kodi nandri

  11. B. Kannan B. Kannan says:

    //வாழ்க்கை பல அற்புதங்கள் நிறைந்தது. நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்பவர்களுக்கு அது என்றுமே துணை நிற்கும்.

    WHAT YOU THINK YOU BECOME!//

    Very true.. GOD is always The Greatest..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates