









You Are Here: Home » Fans' Corner, Featured » “சூப்பர் ஸ்டாரை நமக்கு மீட்டுத் தந்தது எது?” — டெக்கான் குரோனிக்கல் நாளிதழில் வெளிவந்துள்ள நமது சிறு பேட்டி!
சூப்பர் ஸ்டார் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டபோது ரசிகர்களுக்கு அவர் தன் சொந்தக் குரலில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட செய்தியை கேட்டபோது, எண்ணற்ற ரசிகர்கள் கலங்கித் தான் போனார்கள்.
பலர் நம்மிடம் ஃபோன் செய்து கண்ணீர் வடித்த அந்த நொடிகளை என்னால் மறக்க முடியாது. செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது - என்பதைப் போல, ரசிகர்களுக்கும் ரஜினி அவர்களுக்கும் உள்ள பந்தத்தை அந்த கண்ணீர் பறைசாற்றியது.
அந்தளவு உடல் நிலை மோசமடைந்திருந்த ஒரு சூழ்நிலை அது. அதற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் அவரது உடல் நலம் தொடர்பாக வதந்திகள் எழுந்த வண்ணமிருந்தன. அவர் நலம் பெற்று திரும்பினாலும், இனி அவர் நடிக்க முடியாது என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.
அவர் நலமுடன் திரும்பி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்ட சூழ்நிலையில் அத்தனை ஆரோடங்களையும் முறியடித்துவிட்டு, இன்று ஒரு படத்தில் கூட நடித்துவிட்டார். இதற்க்கு பின்னணியில் இருந்த இரண்டு முக்கிய காரணிகள் என்னவென்றால்: ஒன்று ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களின் பிரார்த்தனை, அடுத்து அவருக்கு அந்த சூழ்நிலையிலும் இருந்த தன்னம்பிக்கை & தெய்வ பக்தி.
இது தொடர்பாக நமது கருத்துக்கள் இன்றைக்கு வெளியான டெக்கான் குரோனிக்கில் நாளிதழில் வெளியாகியுள்ளன. கீழே தரப்பட்டுள்ள நாளிதழ் ஸ்கேனிங் பக்கத்தை பார்க்கவும். (Double click on the image to ZOOM & READ)
News URL: http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/red-letter-day-millions-rajini-fans-165
சூப்பர் ஸ்டாரின் துணைவியார் லதா ரஜினி இது பற்றி கூறுகையில்: “உலகம் முழுதும் ஒரு தனி மனிதருக்காக பிரார்த்தனை செய்த நிகழ்வு அது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். எனவே சோதனைகள் வந்தால் கலங்கக்கூடாது. அதை துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும்.” என்பதை வலியுறுத்தும் விதமாக - ஒரு விழாவில் சூப்பர் ஸ்டார் : “சாதனை எப்போ வரும்? சோதனை வந்தா தானேய்யா சாதனை வரும். அதுக்காக சோதனையை தேடி நீங்க போகணும்னு நான் சொல்லலே. அது உங்களை தேடி வந்தா கலங்கிடாதீங்கன்னு தான் சொல்றேன். வாழ்க்கையில எல்லாம் ஸ்மூத்தா இருந்தா என்ன சுவாரசியம் இருக்கும்? உங்களோட குழந்தைகள் கிட்டயோ இல்லே பேரக் குழந்தைகள் கிட்டயோ சொல்றதுக்கு சுவாரஸ்யமான கதை இருக்குமா?” - என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேற்படி விசேஷ செய்திக்கும் நமது கருத்துக்களையும் சிறப்பான முறையில் வெளியிட்டமைக்கும் DECCAN CHRONICLE நாளிதழுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Our prayer today evening after 7.00pm @ Tirumala Devasthanam, Venkatnarayana Road, T.Nagar
சென்ற வருடம் ஜூலை 13 அன்று சூப்பர் ஸ்டார் சென்னை திரும்பிய அந்த நேரத்தில், நாம் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனையில் இருந்தோம். (நான் விமான நிலையம் செல்லவில்லை). என்னுடன் நண்பர் மாரீஸ் கண்ணன் உள்ளிட்ட நண்பர்கள் இருந்தனர். (அதற்கு முந்தைய தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள GUILD OF SERVICE - HOME FOR DIFFERENTLY ABLED CHILDREN காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மத்தியில் சூப்பர் ஸ்டாரின் வருகையை அக்குழந்தைகளுடன் கொண்டாடினோம்.)
இந்த ஒரு வருட நிறைவை கொண்டாடும் விதமாக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துளால் திருப்தி தேவஸ்தானத்தில் இன்று மாலை, நமது தளம் சார்பாக சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் எளிமையாக நடைபெறும் இந்த பிரார்த்தனை மற்றும் அர்ச்சனையின் முடிவில், பக்தர்களுக்கு இனிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள நண்பர்கள் மற்றும் நம் தள வாசகர்கள் மாலை 7.00 - 7.30 க்குள் மேற்கூறியுள்ள ஆலயத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- சுந்தர்
E: simplesundar@gmail.com | M : +91-9840169215
[END]
Great simply! yes, it is his self confidence and his spirituality pays him to re-LIVE and to give back much more to the people who believe him than what he had done in his previous life.
***
And congo to sundar! for coming up to Deccan chronicle. great.
***
WHAT WE THINK, WE BECOME.
***
**Chitti**.
Thoughts becomes things.
Jai Hind!!!
Dot.
////செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது////
எங்கள் தலைவனை மீட்டு தந்த ஆண்டவனுக்கு எண்களின் நன்றி…
.
சுந்தர்…இந்த நாளை என்வாழ்வில் இல்லை நம் வாழ்வில் மறக்கமுடியாத நாள்தான்…… இன்றைய பிர்தனையில் நான் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் நான் அந்த நேரத்தில் நான் இருக்கும் இடத்திலே பிரத்தனை செய்கிறேன்….
.
டெக்கான் குரோனிக்கில் - நமது தளத்தின் மற்றும் ஒரு மைல் கல்..
.
மாரீஸ் கண்ணன்
This is a very proud moment for every body.
Thalaivar shud be hale and hearty forever…love him to the core…more than oursleves…
thumps rajini-sundar ji
thalaivar vaazhga
Congrates buddy.. This is only the first stepping stone.. Many more to come..