









You Are Here: Home » Fans' Corner, Featured » ‘ரஜினி’ - பெயரை உச்சரித்ததும் மலர்ந்த முகங்கள்! தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற இனிய நிகழ்வு!!
சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற நமது பிரார்த்தனை நிகழ்ச்சி, இனிதே நடைபெற்றது. தலைவர் சம்பந்தமா இது போன்று நான் எத்தனையோ பிரார்த்தனை நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். ஆனால் நேற்றைய நிகழ்ச்சி தந்த மனநிறைவு எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. இது மாதிரி எளிமையா நான் இதுவரை பண்ணதில்லே. ஆனா இதைப் போல எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்பட்டதில்லே.
“ஜூலை 13 அன்று நிச்சயம் நாம் இந்த கோவிலுக்கு போகனும்”னு என்று நான் எப்போவோ முடிவுசெய்துவிட்டேன். காரணம், சென்ற வருடம், தலைவர் சென்னை திரும்பிய ஜூலை 13 அன்று மாலை அந்த பரபரப்பான நொடிகளில் நான் இந்த கோவிலில் தான் நண்பர் மாரீசுடன் இருந்தேன். (நான் ஏர்போர்ட்டுக்கு போகலை!)
எத்தனையோ கோவில்கள் சென்னையிலிருக்க நான் ஏன் அப்போ இந்த கோவிலை செலக்ட் செஞ்சி போனேன்னா… தலைவர் திரும்புறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான்… நான் திருமலை திருப்பதி போயிட்டு வந்தேன். (அதாவது ஜூலை 10, 2011 அன்று நான் ஏழுமலையானை தரிசித்தேன்.)
எனவே இந்த வருடம் மேற்படி கோவிலில் விசேஷ பிரார்த்தனை மற்றும் அர்ச்சனை செய்து, அப்புறம் வரும் பக்தர்களுக்கு இனிப்பு ஏதாவது கொடுக்கணும் என்று முடிவு செய்து கோவில் அலுவலகத்தில் விசாரித்து அதற்க்கான வழிமுறைகளை தெரிந்துகொண்டு வரும்படி நண்பர் விஜய் ஆனந்தை கேட்டுக்கொண்டேன். அவர் நேற்றைக்கு காலை அங்கு போய், பேசி விபரங்களை கேட்டுக்கொண்டு வந்தார். அனைத்தையும் ஓரளவு ஏற்பாடு செய்துவிட்டு நம் தளத்தில் இது பற்றிய பதிவையும் அளித்துவிட்டு நான் அலுவலகத்துக்கு போய்விட்டேன்.
சாயந்திரம் ஆனவுடன், வேலைகளை முடித்து தி.நகரில் ஒரு பிரபல இனிப்பகத்திற்க்கு போய், இனிப்புக்கள் வாங்கிக்கொண்டு, மற்ற ஏற்பாடுகளை செய்ய கோவிலுக்கு போய்விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் நண்பர் விஜய் ஆனந்த் கிட்டேயிருந்து ஃபோன் வந்தது. “ஸாரிண்ணா என்னால வர முடியாது” அப்படின்னார். “என்னாச்சு?”ன்னு நான் கேட்க, “நம்ம அர்ச்சனை பற்றி இங்கே நம்ம விசாரிக்க காலைல வரும்போது, ஏழுமலையானை அப்படியே தரிசனம் பண்ணேன். எனக்கு வரவேண்டிய ஒரு ப்ராஜக்ட் ஒன்னு ரொம்ப நாளா இழுத்துகிட்டுருக்கு. அது வந்தா ஒரு பத்து நாளுக்கு வேலை டைட்டா இருக்கும், கம்பெனிக்கு ஓரளவு வருமானமும் கிடைக்கும். அது கிடைக்குறதுக்கு நீ தான் வழி பண்ணனும்னு கேட்டுக்கிட்டேன். மதியமே அந்த ப்ராஜக்ட் பண்றதுக்கு க்ளையன்ட் கிட்டே இருந்து அப்ரூவல் மெயில் வந்துடுச்சு. So, அதுல உட்கார்ந்துட்டேன்! ” என்றார்.
“வாவ்.. வொண்டர்ஃபுல். செய்யும் தொழிலே தெய்வம். நான் இதை இங்கே சமாளிச்சிக்கிறேன். நீங்க அந்த வேலையை முதல்ல முடியுங்க. CONGRATULATIONS!” அப்படின்னு சொல்லிட்டு நான் வேலைகள்ல இறங்கினேன்.
போன தடவை ஜூலை 13 அன்னைக்கு இந்த கோவிலுக்கு பிரார்த்தனைக்காக வந்தப்போ கூட நண்பர் மாரீஸ் கண்ணன் இருந்தாரு. நானும் அவரும் மட்டும்தான் அப்போ. ஆனா, இந்த முறை அவர் ஆபீஸ் விஷயமா ஹைதராபாத் போய்ட்டதால வரமுடியலே. பிரார்த்தனை நல்லபடியா நடக்க வாழ்த்து சொல்லி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதே போல, மனோஜ், கண்ணன் வைரமணி, ராஜா, குட்டி சந்திரன், உள்ளிட்ட நண்பர்கள் சொந்த அலுவல்கள் காரணமா வரமுடியலே. எனக்கு முறைப்படி தகவலும் அனுப்பிட்டாங்க.
இங்கே நான் கோவில்ல வெயிட் பண்ணிகிட்டிருந்த கொஞ்ச நேரத்துல நண்பர் பாலு மகேந்திரன் வந்தாரு. நாங்க கிருஷ்ணா சுவீட்ஸ்ல காபி சாபிட்டுட்டு பேசிகிட்டு இருந்த கொஞ்ச நேரத்துல ஹரி சிவாஜி வந்துட்டாரு. பின்னாலயே நண்பர் கண்ணன் வந்துட்டாரு.
நான் எப்பவுமே என்னுடைய நிகழ்ச்சிகள்ல தலையை எண்ணுவதில்லை. மனசைத் தான் எண்ணுவேன். (I always count hearts in my events not heads!)
இதுக்கு மேலே யாருக்கும் வெயிட் பன்னவேண்டியதில்லேன்னு அப்புறம் அர்ச்சனை தட்டு வாங்கிகிட்டு கோவிலுக்கு உள்ளே போய்ட்டோம். வெள்ளிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். அர்ச்சனை செய்ய க்யூவில் நின்றோம். எங்கள் முறை வந்தவுடன், அர்ச்சகரிடம், முழு விபரத்தையும் எடுத்துக்கூறி, “போனவருஷம்… ரஜினி சார் சிங்கபூர்ல இருந்து திரும்பி வந்த அன்னைக்கு இங்கே தான் சார் அர்ச்சனை பண்ணினேன். அதுனால இந்த வருஷம் இது ஒரு நன்றி அறிவிப்பு மாதிரி”ன்னு சொல்லி, தலைவரின் பெயர் ராசி, நட்சத்திரம், மற்றும் எங்கள் குடும்பத்தினரின் பெயர் ராசி நட்சத்திரம் ஆகியவற்றை கூறி சங்கல்பம் பண்ணோம்.
அர்ச்சகர் ரொம்ப சந்தோஷமா அர்ச்சனை பையை வாங்கிகிட்டு மந்திரங்களை சொல்ல ஆரம்பிச்சார். அர்ச்சனை பையிலே இருந்து தேங்காய், பூ, பழம் இதெல்லாம் ஒண்ணா எடுக்க எடுக்க, அதுல வெச்சிருந்த நம்ம வெப்சைட் விசிட்டிங் கார்ட் அப்படியே ஏழுமலையான் பாதத்துல போய் விழுந்தது. எனக்கு ஒரு கணம் சிலிர்த்துடிச்சு. “நான் கூடவே இருக்கேன். கவலைப் படாதே”ன்னு சொல்ற மாதிரி இருந்திச்சு.
அர்ச்சகர் ரொம்ப சந்தோஷமா அர்ச்சனை பையை வாங்கிகிட்டு மந்திரங்களை சொல்ல ஆரம்பிச்சார். அர்ச்சனை பையிலே இருந்து தேங்காய், பூ, பழம் இதெல்லாம் ஒண்ணா எடுக்க எடுக்க, அதுல வெச்சிருந்த நம்ம வெப்சைட் விசிட்டிங் கார்ட் அப்படியே ஏழுமலையான் பாதத்துல போய் விழுந்தது. எனக்கு ஒரு கணம் சிலிர்த்துடிச்சு.
அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை பண்ணிகிட்டே இருக்கார்… எங்களுக்கு பக்கத்துல இருந்த ஒருத்தரோட சின்ன குட்டீஸ் ஒருத்தன், (ஒரு 5 வயசு இருக்கும்) அந்த அமைதியை உடைக்கிற மாதிரி பலமா சிரிச்சிகிட்டே இருந்தான். எல்லாரும் திரும்பி பாக்குறாங்க. அவன் அப்பா எவ்ளோவோ அதட்டுறார்…. அவன் நிறுத்துற மாதிரி தெரியலே. குழந்தை சிரிக்கிறதுக்கான அர்த்தம் அவ்ளோ சீக்கிரம் நமக்கு புரிஞ்சிடுமா என்ன? அவன் பாட்டுக்கு சிரிச்சிகிட்டே இருக்கான். ஒரு கட்டத்துல எல்லாரும் அவனை ஒரு DISTURBANCE மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா… நான் அந்த சிரிப்பை ரசிச்சேன். எதிரே பார்க்கும் கருங்கல் விக்கிரஹத்துல கடவுள் இருக்கார் என்பது எந்தளவு உண்மையோ அதே அளவு இந்த குழந்தையின் சிரிப்பிலும் இறைவன் இருக்கிறான் என்பது எனக்கு தெரியும். So, கடவுள் நம்ம கூடவே இன்னும் பக்கத்திலேயே இருக்கார் அப்படின்னு நினைச்சுகிட்டேன். அவன் தலையை தடவிக் கொடுத்து, செல்லமா கன்னத்தை தட்டிகொடுத்தேன்.
அர்ச்சகர், அர்ச்சனையை முடித்துவிட்டு, நிறைய பூ, ஒரு சின்ன மாலை இதெல்லாம் எங்களுக்கு கொடுத்தார். அப்புறமா வாங்கிட்டு போயிருந்த சுவீட் பாக்ஸ்களை அவர்கிட்டே கொடுத்து, “சுவாமி பாதத்துல வெச்சி அவனுக்கு சமர்பிச்சிட்டு கொடுங்க. வெளியே பக்தர்களுக்கு கொடுக்க வாங்கிட்டு வந்திருக்கோம்”னு சொன்னேன். அதே மாதிரி சுவாமி பாதத்துல வெச்சு அதுல பூக்களை போட்டு ஆசீர்வாதம் பண்ணிகொடுத்தார்.
தரிசனம் முடிச்சுட்டு, வெளியே வர்ற வழியில ரெங்கநாதர் சிலை ஒன்னு இருக்கும். அதுக்கு பக்கத்துல பிரசாதம் கொடுக்குறதுக்குன்னே ஒரு டேபிள் இருக்கும். சுவாமியை பார்த்துட்டு வெளியே வர்றவங்க அப்படியே பிரசாதம் வாங்கிட்டு போய்டலாம். அதுக்காகவே டேபிள் இருக்கும். அங்கே நின்னு சுவீட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி அங்கே நின்னோம்.
பாக்ஸ்கள் எல்லாத்தையும் பிரிச்சு, ஒவ்வொரு சுவீட்டா எடுத்து அதை ஒரு டிஸ்யூ பேப்பர்ல வெச்சி கொடுக்க ஆரம்பிச்சோம். நான் அதை டிஸ்யூ பேப்பர்ல வெச்சி கொடுக்க, பக்தர்களுக்கு பாலுமகேந்திரன் கொடுத்துகிட்டு வந்தாரு. சுவாமியை பார்த்துட்டு வரும்போது சுவீட் கிடைக்கவே எல்லாருக்கும் சிம்பாலிக்க செண்டிமெண்ட்டா ஒரு சின்ன சந்தோஷம். ஒரு பத்து பேருக்கு கொடுத்திருப்போம். பதினோறா வந்தவரு கேட்டார், “என்ன விஷேஷம்? எதுக்கு கொடுக்குறீங்க?” அப்படின்னு.
விஷயத்தை சொன்னோம்… “வாவ்… எவ்ளோ நல்ல விஷயம். ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதை சொல்லி கொடுங்க. அப்போ தானே எதுக்கு கொடுக்குறீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்?” அப்படின்னார்.
அவர் சொல்றது உண்மை தான். ஆனா பிராக்டிகலா பார்த்தீங்கன்னா… சுவீட் வாங்க வரிசையில நிக்குறவங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் விஷயத்தை சொல்லிகிட்டே கொடுக்க முடியாது.
“வாவ்… எவ்ளோ நல்ல விஷயம். ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதை சொல்லி கொடுங்க. அப்போ தானே எதுக்கு கொடுக்குறீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்?” அப்படின்னார்.
இருந்தாலும், பத்து பேருக்கு ஒருத்தர் வீதமா, “ரஜினி சார் சிங்கபூர்ல் இருந்து பரிபூரண ஆரிக்கியத்தோட திரும்பி இன்னையோத் அஒரு வருஷம் ஆகுதுங்க. போன வருஷம் இதே நாள் இங்கே தான் அவருக்காக வேண்டிகிட்டோம். அதுக்காகத் தான் இந்த சுவீட்” அப்படின்னு சொன்னேன்.
“ரஜினி சார்” அப்படின்னு சொன்னவுடனே ஒவ்வொருத்தரு முகமும் சந்தோஷத்துல மலர்ந்துச்சு பாருங்க…. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்ளோ சந்தோஷமா நாங்க விபரத்தை சொன்ன பிறகு அந்த சுவீட்டை எல்லாரும் வாங்கிட்டு போனாங்க. ரொம்ப ரொம்ப மன நிறைவா இருந்துச்சு. சந்தோஷமாகவும் இருந்துச்சு.
“ரஜினி சார்” அப்படின்னு சொன்னவுடனே ஒவ்வொருத்தரு முகமும் சந்தோஷத்துல மலர்ந்துச்சு பாருங்க…. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்ளோ சந்தோஷமா நாங்க விபரத்தை சொன்ன பிறகு அந்த சுவீட்டை எல்லாரும் வாங்கிட்டு போனாங்க.
தலைவர் பேருக்கு வந்திருந்த பக்கதர்கள் மத்தியில் ஏற்பட்ட ரீயாக்ஷனை பார்த்தவுடனே, அதுவரைக்கும் கொஞ்சம் அலட்சியமா நின்னுக்கிட்டுருந்த ஹரியும் கண்ணனும் சுவீட் வாங்குறவங்க முகத்தை நோட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பார்க்க பார்க்க அவ்ளோ சந்தோஷம் அவங்களுக்கு.
குட்டீஸ்கள் வரும்போது அவங்க கையில், கொடுத்தோம். ஒரு வயசு ரெண்டு வயசு குழந்தைகளுக்கு அவங்க வாயில ஊட்டிவிட்டோம். ஒரு சின்னக் குழந்தை (ஒரு 6 வயசு இருக்கும்) என்ன பண்ணிச்சுன்னா… சுவீட் கொடுத்தா வாங்கிக்கலை. “எனக்கு இது வேண்டாம்.. இது தான் வேண்டும்!”னு சொல்லி, எங்களோட அர்ச்சனை பையில இருந்த மாலையை காண்பிச்சா. சுவீட் வேண்டாம் பூ கொடுங்கன்னு கேட்குதே இந்த குழந்தை… அப்படின்னு ஆச்சரியப்பட்டுகிட்டே அதை அப்படியே எடுத்துகொடுக்க, “வேண்டாம் வேண்டாம்…. எனக்கு ஒரு பூ மட்டும் கொடுங்க”ன்னு ரோஜாப்பூவை காண்பிச்சு கேட்டா. சரி… ஏழுமலையான் இந்த குழந்தை மூலமா ஏதோ கேட்குறான்னு அந்த நொடியில தோணிச்சு. அந்த பூவை மட்டும் உருவி அந்தக் குழந்தை கையில் கொடுத்தேன். அவங்க அப்பா அம்மாவே அதை அதிசயமா பார்த்தாங்க.
சுவீட் வேண்டாம் பூ கொடுங்கன்னு கேட்குதே இந்த குழந்தை… அப்படின்னு ஆச்சரியப்பட்டுகிட்டே அதை அப்படியே எடுத்துகொடுக்க, “வேண்டாம் வேண்டாம்…. எனக்கு ஒரு பூ மட்டும் கொடுங்க”ன்னு ரோஜாப்பூவை காண்பிச்சு கேட்டா.
அடுத்து ஒரு பெரியவர் வந்தார். அவர் கிட்டே விஷயத்தை சொன்னவுடனே, ரொம்ப சந்தோஷமாகி, “ஓ … ரஜினி கொடுக்குறாரா இந்த சுவீட்டை?” அப்படின்னு கேட்டார். “இல்லே சார்… நாங்க அவரோட ஃபேன்ஸ். நாங்க தான் இதை அவருக்காக கொடுக்குறோம். ஏதோ எங்களால முடிஞ்சா ஒரு எளிய முயற்சி” அப்படின்னேன் சற்று சங்கடத்துடன். (சங்கடம் ஏன்னா இப்படி ஒரு வரவேற்பும் கூட்டமும் எங்களால் கணிக்க முடிந்திருந்தால் இன்னும் பெரிய அளவில் செய்திருக்கலாமே என்றுதான். இதையே முதல்ல இங்கே திட்டமிட்ட ஒழுங்கா செய்ய முடியுமா? அப்படின்னு எல்லாமே எங்களுக்கு முதல்ல சந்தேகம் இருந்திச்சு”)
“இல்லே சார்… நாங்க அவரோட ஃபேன்ஸ். நாங்க தான் இதை அவருக்காக கொடுக்குறோம். ஏதோ எங்களால முடிஞ்சா ஒரு எளிய முயற்சி” அப்படின்னேன் சற்று சங்கடத்துடன்.
என் சங்கடத்தை என் முகத்தை பார்த்து புரிந்துகொண்டார் அவர். உடனே, “நோ… நோ… இதுவே எவ்ளோ பெரிய விஷயம். நல்ல விஷயம். ஐ ஆம் வெரி ஹாப்பி” அப்படின்னார். உடனே, அவரோட பேரக்குழந்தைகளை கூப்பிட்டு சுவீட்ஸ் வாங்கிக்கச் சொன்னார். தன்னை ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். பக்தர்கள் வரிசையில் இருந்ததால் என்னால் அவரிடம் மேற்கொண்டு ஃப்ரீயாக பேசமுடியவில்லை. என் கார்டை கொடுத்து “அப்புறமா நான் உங்ககிட்டே பேசுறேன் சார்”னு சொன்னேன்.
அதற்கு பிறகு லேடீஸ் ஒரு பெரிய குடும்பமாக வந்தார்கள். அவர்களிடம் விஷயத்தை கூறி அனைவரிடமும் சுவீட்டை கொடுத்தோம். அவர்கள் முகத்துல தான் எத்தனை சந்தோஷம்.
அடுத்த சில நிமிடங்களில் மொத்தம் இனிப்புக்களும் காலியாகி கொஞ்சம் தான் இருந்ததுள். அதுனால சின்ன குழந்தைகளுக்கு மட்டும் கொடுத்துட்டு வந்தோம். அதுவும் தீர்ந்துவிட அதற்கு மேல வந்தவங்களுக்கு கொடுக்க முடியலே. அது ரொம்ப வருத்தமா இருந்திச்சு. இவ்ளோத்தையும் கொடுக்க முடியுமான்னு நினைச்ச இடத்துல, எங்களுக்கு கூட சாப்பிட ஒரு பீஸ் இல்லாம எல்லாத்தையும் வந்தவங்களுக்கு கொடுத்து முடிஞ்சுது ஒரு பக்கம் சந்தோஷமா வந்தோம்.
ஏழுமலையானுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.
(உடன் வந்த நண்பர்களுக்கும், வர விரும்பிய நண்பர்களுக்கும், வர இயலாததை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!! மற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்தத் கூறிய & எஸ்.எம்.எஸ். அனுப்பிய அனைவருக்கும் நன்றி!!!)
வெளியே வந்தவுடனே, நண்பர் சுரேஷ் ஆத்ரேயா கிட்டேயிருந்து ஃபோன் வந்தது. “எப்படி போச்சு ப்ரோக்ராம்ன்னு கேக்கலாம்னு தான் ஃபோன் பண்ணேன் சுந்தர்” அப்படின்னார்.
எல்லாத்தையும் விரிவா சொல்லிட்டு, எளிமையாகவும் அதே சமயம் மிக மிக நிறைவாகவும் எல்லாம் நடந்துச்சுன்னு சொன்னேன்.
“அவரை யாருன்னு நினைச்சீங்க நீங்க? திருப்பதில இருக்குறவருக்கு என்ன சக்தியோ அதே அளவுக்கு இந்த சுவாமிக்கும் உண்டு. ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தவர். நினைத்ததை நடத்தி தருபவர்” அப்படின்னார். நான் நண்பர் விஜய் ஆனந்துக்கு ப்ராஜக்ட் கிடைச்ச விஷயத்தை சொன்னேன். “பார்த்தீங்களா? நான் சொன்னது சரிதானே?” அப்படின்னார்.
“திருப்பதிக்கு எப்படி அவர் கிட்டேயிருந்து அழைப்பு வந்தா மட்டும் போகமுடியுமோ அதே போலத் தான் இவரும். இதே சென்னையில் நீங்க எத்தனை வருஷமா இருக்கீங்க. எத்தனை தடவை இந்த கோவிலுக்கு போயிருப்பீங்க?” என்று என்னை என்னை அவர் கேட்க்க, சிந்தனையில் ஆழ்ந்தேன்.
“உங்க கூட வந்தவங்க எத்தனை தடவை போயிருப்பாங்க? So, உங்களுக்கு ப்ராப்தம் இருந்திருக்கும். அதன்படி நடந்திருக்கு” என்றார். முடிக்கும்போது சொன்னார்… “போன வருஷம் ஜூலை 13 அன்னைக்கு இதே தி.நகர் திருப்பதி கோவிலுக்கு போனேன்னு சொன்னீங்க. இந்த வருஷம் உங்க பேர் டெக்கான் குரோனிக்கல்ல வந்திருக்கு. இவர் சக்தியை சொல்ல இதை விட வேறு என்ன வேண்டும்?” என்றார்.
உண்மை தான்.
GOD’S MILL GRIND SLOW BUT SURE.
[END]
Hi Sundar,
Awesome & hats off to you.
Could i know the exact location of this temple.
Tirumala Tirupati Devasthanam Information Centre
50 Venkatanarayana Road, T. Nagar
Chennai 600017.
(Nearest Landmark: Natesan Park, Panagal Park, Pondy Bazaar)
முத்து படத்தில் முத்து என்றவுடன் எல்லோரும் alert ஆயிடுவாங்க, அது நிஜத்திலும் நடக்கிறது. மேலும் உங்கள் நற்சேவை மேலும் மேலும் விரிவடைய ஆண்டவன் உங்களுக்கு துணைபுரிவான்.
Great . SUPERSTAR pera sonna nimirnthu elunthidum thullum.
Hats off Sundar, Thalaivar Vazhga……….
மனதிற்கு மிக்க மகிழ்ச்சி! எப்படித்தான் இருக்கிற கஷ்டங்களில் இந்த மாதிரி செயல்களை செய்றீங்கன்னு தான் தெரியலை! (தயவு செய்து இதை எடிட் செய்ய வேண்டாமே).
***
வாழ்க வளமுடன்!!!
கடவுள் இருக்காருங்க…அவர் நம்ம எல்லோரையும் பார்த்துட்டு தான் இருக்கிறார்…கடந்த ரெண்டு மாசமா வராம இருந்த ப்ராஜக்ட் கிடைக்கணும்-ன்னு ஏழுமலையான் கிட்ட மனமுருகி சொல்லிட்டு வந்தேன்…என்ன ஆச்சர்யம்…அன்று மதியமே ப்ராஜக்ட் என் கையில்….உண்மையான பக்திக்கு ஆண்டவன் எப்பவுமே செவி மடுப்பான் என்பது உண்மை…..!
-
நேத்து நடந்த நம்ம பிரார்த்தனை இனிப்பாகவும், மனநிறைவாகவும் இருந்தது — நீங்கள் வழங்கிய இனிப்பைப் போல….!
-
நம்ம "ஆறு"படையப்பருக்கு அந்த "ஏழு"மலையானின் ஆசி எப்பவுமே இருக்குங்க…தலைவர் வாழ்வாங்கு வாழ்வார் !
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
விஜய் ஆனந்த்
அற்புதம் சுந்தர்…நான் மிஸ் பண்ணிட்டேன் சுந்தர்….சென்ற வருடம் உங்களுடன் கலந்த கொண்ட என்னால் இந்த வருடம் முடியவில்லை….அது அந்த ஆண்டவன் கணக்கு…
.
இந்த கோவிலின் வழியாகத்தான் நான் தினமும் எனது அலுவலத்துக்கு செல்கிறேன்……நண்பர் கூறியதுபோல்…திருமலையில் உள்ள பெருமாளுக்கும் இவருக்கும் ஒரே சக்திதான்…அதை உணந்தவர்களுக்கு தெரியும்…
.
மாரீஸ்
இவர் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்
ஓம் நமோ நாராயணா
good job ரஜினி - சுந்தர் ஜி
அருமையான பதிவு சுந்தர் ஜி !!!
வாழ்த்துக்கள் !!!
vaalthukkal,thavirkka mudiatha kaaranathaal vara mudia villai,aanal oru santhosam antha naalil naan irunthathu THALAIVARUKKU migavum piditha ninaitha vudan mukthi thara koodia ANNAMALAYAAR irukindra THIRUVANNAMALAYIL irunthen,thiru sundar avargal alaitha pothu naan angu thaan irunthen,athanaal vara iyalavillai endru pathil thanthu vittu inge nam saarbaaga vendi konden
Great sundar. Nice work. Hats off.
Thanks Prabhu.
super sundar
திருப்பதிக்கு எப்படி நான் போகணும் நினச்சாலும் ஆண்டவன் விருப்பபட்டால் தான் அங்கு போக முடியும் சொல்வாங்க …அது எனக்கும் நடந்திருக்கு
பல வருடம் முயற்சி செய்து தோற்றது என் முயற்சி
அனால் அதற்க்கு பின் தானாக என்னை தேடி வந்தது
அதே போல் தான் இந்த கோயிலுக்ம் இங்க சென்னை வந்து பல வருடங்கள் இருந்தும் இவளோ நாள் முடியவில்லை அனால் இப்படி இந்த நாளுக்காக செல்வேன் என்று எதிர்பாகவில்லை (சுந்தர் இரண்டு மெசேஜ் அனுப்பினார் அவளவே ,,,எப்போதும் வரும் இடைஞ்சல்களும் அன்று வரவில்லை,,எல்லாம் சாதகமாகவே மாறியது .) ஒன்று புரிந்தது கடவுள் என்னை பார்க்க விரும்புகிறாரோ என்று மனதில் தோன்றியது
கோயில் பிரகாரத்தில் ஸ்ரீரங்கத்தில் உள்ள விஷ்ணு பகவான் போல ஒரு விக்ரகம் பார்த்துடன் உடலில் எதோ ஒரு சிலிர்ப்பு என்னை அறியாமல்
இந்த கோயிலில் எதோ ஒன்று இருக்கிறது அதானால் தான் சில நிமடங்கள் இனிப்பு வழங்கும் போது என் கவனம் அங்கு இல்லை
இவளோ நாள் கிட்டாத இந்த வாய்ப்பு தலைவர் மூலமாக கிட்டியுள்ளது
எல்லாம் நன்மைக்கே
எதோ என் வாழ்க்கையில் நல்லது நடக்க போகிறது
Great Sundarji……
எதிர் பாராமல் ஒரு நிகழ்ச்சி நடந்தால் ,அதுவும் மனதிற்கு நிறைவை கொடுத்தால் மனிதனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தரும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.வாழ்க தலைவர் பல்லாண்டு .
நானும் போயிருக்க வேண்டியது. ஆனால் அலுவலக சூழல் காரணமாக முடியவில்லை.
இந்த அருமையான பதிவை படித்தவுடன் மனதில் தோன்றியது: அடடா அந்த நேரத்தில் இறைவனின் சந்நிதானத்தில் நம்மால் இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம். பதிவை படித்துவிட்டு அது ஏற்படுத்திய பிரமிப்பை பாதிப்பை அசைப்போட்டுக்கொடிருந்தேன். ஆனால் என்ன ஆச்சர்யம் பாருங்கள், அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, இந்தாங்க சார் திருப்பதி லட்டு நேற்றுதான் தரிசனம் செய்தேன்”" என்கிறார்.
இறைவனின் கருணைக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும். இந்த பிரசாதம் எனக்கு மட்டும் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. நம் தள நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் நம் தலைவருக்கும் கிடைத்த ஆசிர்வாதமாக நான் கருதுகிறேன். நம் தலைவரின் நட்சத்திரம் திருவோணம் (பெருமாளின் நட்சத்திரம்). அவரது திருமணம் நடந்ததும் திருப்பதி பெருமாளின் சன்னதியில்தான். ரஜினி என்ற பெயரை சொன்னதும் மக்களின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியின் காரணம் இப்போது புரிகிறதா.
படிக்கும்போதே சிலிர்க்கிறது ஸ்ரீராம். சோதனைகளை தந்துவிட்டு, உடனே "போனா போகுது போடா" என்று ஒரு மிகப் பெரிய சாதனயை தருவார் இந்த பெருமாள். (இவர் என்றில்லை… எல்லா கடவுள்களுமே அப்படித்தான் இருக்காங்க!).
i இறைவன் நடத்தும் ஒரு ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதற்கு இதுவும் ஒரு சான்று …எல்லாம் நன்மைக்கே (ஒன்று இப்போ நன்மைக்கு இல்லை நாளை நமது நன்மைக்கு )
Nice Shriram.. That's God….
சுந்தர் சொன்னது போல நானும் கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை ஒன்று வந்தது..
நான் மனதிற்குள் நிச்சயம் ஆண்டவன் நம்மை பார்க்க அனுமதிப்பார் என்று எண்ணி கொண்டேன்..
சில நிமிடங்களில் நான் கோவிலுக்கு போக ஏதுவாக என் வேலை சீக்கிரம் முடிந்து சரியான நேரத்தில் கோவிலில் இருந்தேன்..
மிக அருமையான தரிசனம்.. எம்பெருமாளிடம் ஒன்று வேண்டி கொண்டேன்.. அவர் அருளோடு அது கண்டிப்பாக நடக்கும்..
நாங்கள் ஸ்வீட் விநியோகிக்கும் போது எல்லோர் முகமும் தலைவர் பேரை
சொன்னவுடன் மலர்ந்ததை பார்த்த எங்களுக்கு பரம திருப்தி..
கோவிலுக்கு அனைத்து தட்டு மக்களும் வருவார்கள் இல்லையா, அதனால் அவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று தான் முதலில் நினைதேன்..
ஆனால் எல்லோரும் மிக திருப்தியுடன் சிரித்துக்கொண்டே வாங்கியது மற்றும் சில பேர் நமக்கு வாழ்த்து சொன்னது எல்லாம் எங்களுக்கு சிலிர்க்க வைத்து விட்டது..
We really felt proud of Thalaivar's reach beyond any boundries..
நாங்கள் அனைவரும் மிக நிறைவாக சுவாமி தரிசனம் முடித்து வீடு வந்தோம்..
சியர்ஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
Hi Sundar, While reading this article I felt as if that I participated in the activity. Thanks a million for your untiring eforts without any expectations. May I pray Lord Venkatramana to give good peace of mind and energy to Thalaivar. May God bless you. All the very best.