You Are Here: Home » Featured, Happenings » அல்டிமேட் ஸ்டார் அஜீத் ரசிகர்கள் கவனத்திற்கு…

ம் தளத்தில் பிற நடிகர்களை பற்றி / பிற படங்கள் பற்றி அரிதாகவே செய்திகள் வரும். அப்படி வந்தா அதுக்கு காரணமும் இருக்கும். ஆனா, இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை அளிப்பதை “அவசியம்” என்று கருதுகிறேன். அல்டிமேட் ஸ்டார் நமக்கு எப்பவுமே ஸ்பெஷலாச்சே. இது நிச்சயம் அவர் ரசிகர்களின் மனக்குறையை போக்கும் & ஒரு மிகப் பெரிய பூஸ்டாக அமையும்.

என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சரி…. மேட்டருக்கு வர்றேன்….

சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் - படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு  பில்லா 2  நல்ல உதாரணம்.

என்  அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.

இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி  எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.

அடடா…  இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).

நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.

மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?

குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.

ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.

எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த ‘பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். ‘பாட்ஷா’ சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.  ரஜினி  ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? “இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!” அப்படின்னு. இது எப்படி இருக்கு? (எந்தப் பத்திரிக்கைன்னு நம்ம ரஜினி ரசிகர்கள் யாராவது கரெக்டா சொல்றாங்களான்னு பார்ப்போம்!)

அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட ‘சந்திரமுகி’ எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா…  ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.

சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?

(ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் இன்னமும் படம் பார்க்கலேங்க. ஆக்சுவலா நேத்தைக்கு நைட் போறதா இருந்திச்சு. ஆனா வேற ஒரு முக்கிய வேலைல மாட்டிகிட்டேன். போகமுடியலே. அடுத்த வாரம் போறேன்!) ஆனா, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.

ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க.  ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.

படத்தோட காமிரா, ஸ்டைலிஷ் சீன்ஸ், ஆக்ஷன், லொக்கேஷன், டயலாக்ஸ் இதெல்லாம் டாப்கிளாஸ்னு   நேற்றைக்கு படம் பார்த்த ப்ரெண்ட் ஒருத்தரு எனக்கு நைட் ஃபோன் பண்ணி சொன்னாருங்க.  சொஸைட்டியில பெரிய ஆள் அவர். ஆனால் ஒரு சராசரி சினிமா ரசிகர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா யார் படமாயிருந்தாலும் முதல் ரெண்டு நாள்ள போய்டுவார். மனசுக்குள்ளே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாம, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவார். அதுக்கு காரணத்தையும் சொல்லிடுவார். அது கரெக்டாகவே இருக்கும். இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு. மீடியா சொல்லியிருக்குற மாதிரி குறைகள் எதுவும் பெரிசா கண்ணுக்கு தெரியலே. படம் ஸ்டைலிஷா சூப்பரா இருக்கு சுந்தர் அப்படின்னு சர்டிபேகெட் கொடுத்திருக்கார்.

So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION!  மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…

(குறிப்பு : “இந்த படம் ஓப்பனிங், எந்திரனை மிஞ்சிட்டதா அஜீத் ஃபேன்ஸ் சொல்றாங்க… சில டி.வி.சானல்ஸ்ல சொல்றாங்க…” அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு, ஒரு சிலர் அஜீத் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்த முனையுறாங்க. என்கிட்டேயே “இதுக்கு உங்க பதில் என்ன?”ன்னு கேக்குறாங்க. நேரம்டா. (இவங்களுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என்பது வேற விஷயம்!) அவ்ளோ ஏன்… ஆஸ்கார் ரவிச்சந்திரனே அதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர்! என்னோட பதில் என்னன்னா…. இதை அஜீத் சொல்லட்டும்… நான் அப்போ பதில் சொல்றேன்! ஓ.கே.?)

——————————————————————-
அன்பு அஜீத் ரசிகர்களுக்கு : நான் உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு அதக்கு தகுதியோ அனுபவமோ இல்லை.  எல்லாம் ஒரு அன்புனால தான சொல்றேன். இந்தப் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனம் தருபவர்களை கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து சில அஜீத் ரசிகர்கள் பேசி வருவதாக அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நீங்கள் அப்படி செய்யும்போது, என்னாகும்னா வேறு யாராவது உங்களின் போர்வையில் நுழைந்து கலகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த முறை, அஜீத்தையோ அவரது படங்களையோ விமர்சிப்பவர்களை பதிலடியாக கடுமையாக பேசுபவர்களை கண்டால், “அது அஜீத் ரசிகரா இருக்காதுப்பா” என்று சொல்லவேண்டும். உங்களிடம் அத்தகைய ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். (இது சில ரஜினி ரசிகர்களுக்கும் சேர்த்துத் தான்).

சரி… இதுக்கு என்ன தான் வழி? எப்படித் தான் பதிலடி கொடுக்கிறது? சிம்பிள். “உங்களுக்கு படம் பிடிச்சிருக்குல்ல? குடும்பத்தோட போய் பாருங்க.” இப்படி எல்லாரும் போனாலே, படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தான் சரியான பதிலடி. அவ்ளோ தான்!

ரெண்டாவது,  விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் வாழ்வில் எதையுமே சாதிக்க முடியாது. அதுவும், அஜீத் அவர்களின் ரசிகராய் இருந்துகொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருப்பது அவரை அவமதிப்பது போலாகும். அதை அவரே விரும்பவும் மாட்டார். இரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதா என்ன? விமர்சனங்களால் ஒருவரை வீழ்த்திவிட முடியும் என்றால் சரித்திரத்தில் சாதனையாளர்களே இருக்கமாட்டார்கள். விமர்சனங்களை வரவேற்க துணியுங்கள்; வாழ்க்கை வளமாகும்!
——————————————————————-

[END]

122 Responses to “அல்டிமேட் ஸ்டார் அஜீத் ரசிகர்கள் கவனத்திற்கு…”

 1. **Chitti** **Chitti** says:

  இந்த பதிவை முதலில் நம்ம தளத்தில் பார்க்கும் போது முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. பதிவை படித்து முடிக்கும் அதற்க்கான அர்த்தம் புரிந்தது.

  எனக்கு, நம்ம சூப்பர் ஸ்டார்க்கு அடுத்து ‘தல’ அஜித்தைதான் மிகவும் பிடிக்கும். அதுவும், அவர் பில்லா படத்தில் நடித்து முதல் தான். போக போக, அவர் நம் சூப்பர் ஸ்டார் சொன்ன புத்தகத்தை படித்து மிகவும் பக்குவப்பட்ட பிறகு மிகவும் பிடித்தது. (என்னங்க பண்றது! நம்ம சூப்பர் ஸ்டார் எல்லார்க்கும் தான் புத்தகத்தை பரிசளிக்கிறார். எல்லோரும் படித்து பயனடைகிறார்கள???) அதுவும் இல்லமால், நம் சூப்பர் ஸ்டார் மாதிரி தனியாளாக வந்தவர்ங்க. எப்படி பிடிக்காமல் இருக்கும்.

  விஷயத்திற்கு வருவோம், படம் வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. ஏன் எனில், ரசிகர்களுக்கு பிடித்து விட்டாலே போதுமே. (அப்படிங்கறது என் கருத்து). இப்படிதான், சிவாஜி படத்திற்கு எழுதினார்கள். படத்தில் முழுதும் ஸ்டைல் தான், கதை ஒன்றும் இல்லை என்று. (அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் …. என்ற மாதிரி). படம் எப்பேர்பட்ட கதையம்சம். நாட்டுக்கு நல்லது செய்ய மக்களை தூண்டிய படம்.

  அது போல், பில்லா-2 வெற்றியை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை. கண்டிப்பாக அவரின் ரசிகர்கள் கண்டிப்பாக வெற்றியடைய வைத்துவிடுவார்கள். அப்பறம் என்ன.? இந்த விமர்சனங்களை எல்லாம் உதறி தள்ளுங்கள். இந்த படம் அவர் தன ரசிகர்களுக்காகவே செய்த படம். (எப்படி சிவாஜி நம்மக்கோ, அப்படி).

  அப்புறம், அஜித் ரசிகர்களின் மீது எனக்கு மிக்க மரியாதையை உண்டு. ஏன் எனில், எத்தனை தொடர் தோல்விகள் அவரின் ஒரு கால கட்டத்தில். அத்தனையும், தாங்கி கொண்டு அவரின் பின்பு பக்கபலமாய் அவரின் ரசிகர்கள் இருந்தார்கள். இதற்க்கு மேல், ஒரு நடிகனுக்கு என்னையா வேணும். அப்படிப்பட்ட பொறுமை உள்ள ரசிகர்கள்.

  அதனால், இந்த காலகட்டத்திற்கும் அஜித் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். எல்லாவற்றிக்கும், மேல் அஜித் அவர்களின் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். அவருக்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். ரஜினிக்கு அடுத்த இடம் ஒருவருக்கு கட்டாயம் தர வேண்டும் எனில், சந்தேகமே இல்லாமல், அது அஜித் தான். *** வாழ்க வளமுடன் அஜித்!!! ***

  தலைவா (சந்தேகமே இல்லமால், ரஜினியைத்தான் சொல்கிறேன்)! உன் ரசிகனாக, உன் வழியை பின்பற்றுபவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். (தக்க சமயத்தில், எல்லோர்க்கும் (அஜித்துக்கும்) உதவுபவனே! உனக்கு நன்றி !!!

  **சிட்டி**.
  ஜெய் ஹிந்த்!!!
  Dot.

 2. Sundar Sundar says:

  //ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க. // - சுந்தர், நீங்க எந்தகாலத்துல இருக்கீங்க? இப்போலாம் சிங்கள் தியேட்டர்ல கூட புதன்கிழமையே முதல் மூணு நாளுக்கு RESERVE பண்ணிடுரங்க..சோ, படம் நல்லாருக்கோ இல்லையோ 3 டேஸ் HOUSEFULL தான்..

 3. subbu subbu says:

  super thala ……….supera sonninga……….

 4. praga praga says:

  Anna this is really an excellent article at the right time .

 5. nanda nanda says:

  Ha ha haaa.. Poda thalaivare namma pakam irukar..
  Thanks super star fans… Billa 2 is super..

 6. sasees sasees says:

  this one is excellent review..! eventhough am a vijay fan i loved to watch Ajith movies..
  critic panrathu easy avanga nilaimaila irunthu partha than theriyum..
  feel pity for immaturistic childish fans..

 7. harisivaji harisivaji says:

  Its good to give Support hands…
  But…
  Many things i will disagree here

 8. karthik karthik says:

  both super star and his fans rockzzzzzzzzzzz ……………Basically am a superstar come thala fan ………… namma kulla oru ottruma iruku…… athavathu varthayila oru unma theriyuthu, poli thanam illa karuthu……….. nallathey nadakum ;) )))))))))))))))))))))))))))))

 9. KUMARAN KUMARAN says:

  நான் தலைவர் fan - இதே மாதிரி விஜய் சூர்யா படங்களையும் நீங்கள் ஆதரித்து எழுத முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் தலைவர் எல்லோருக்கும் பொதுவானவர்.

  • குமரன், ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

   சூப்பர் ஸ்டாரின் ஸ்க்ரீன் மானரிசங்களையும், ஸ்டைலையும், அவரது இன்ட்ரோ பாடல்களையும், நடிப்பையும் மட்டுமே பின்பற்றி அவரது இடத்தை அடையத் துடிப்பவர்கள் மத்தியில், அஜீத் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டாரின் நிஜ பழக்க வழக்கங்களை வாழ்வியல் கொள்கைகளை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்.

   2007 ஆண்டு ‘பில்லா’ என்ற சூப்பர் ஸ்டாரின் நேரடி படத்தின் ரீமேக்கில் அஜீத் அவர்கள் நடிக்கும்போது கூட, சூப்பர் ஸ்டாரின் நடிப்பின் சாயல் அந்தப் படத்தில் துளியும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

   நீங்கள் கூறும் மற்ற நடிகர்களும் சூப்பர் ஸ்டாரின் கொள்கைகளை நிஜ வாழ்வில் பின்பற்றட்டும். அப்பொழுது நான் ஆதரித்து எழுதுகிறேன்.

   • Rajpart Rajpart says:

    /நீங்கள் கூறும் மற்ற நடிகர்களும் சூப்பர் ஸ்டாரின் கொள்கைகளை நிஜ வாழ்வில் பின்பற்றட்டும். அப்பொழுது நான் ஆதரித்து எழுதுகிறேன்/.
    ajith appadi enna pinpatrukirar?

   • raja raja says:

    ARUMAI SUNDAR NAAN SOLLA VENDUM ENDRU NINAITHEN NEENGAL SOLLI VITEERGAL

  • madan madan says:

   after rajini one and only tala

 10. Bala Bala says:

  Poda Aandavane (Rajini) Namma Pakkam irukaru

  by Ajith Fan

 11. sammy sammy says:

  Billa-II Super Duper 'Hit' , we Eagerly Waiting For Billa-III…☻

 12. karthi karthi says:

  Where is the story for Billa 2. Except good scenes and half naked girls and useless punchlines there is nothing in Billa 2………..

  Billa 2 is tail and not thala……………

 13. dhiwahar dhiwahar says:

  first தலைவர் next தல தான் ……….

 14. ragunandan ragunandan says:

  annaa thanks for a great article this gives a boost for thala fans thanks for the support from super star and his fans……………..

 15. ROBINO ROBINO says:

  SERIOUSLY THIS WORDS R COREECT AND EXCELENT..WATEVER WEREVER HE IS THALA…..

 16. தேவா தேவா says:

  மிகவும் சந்தோசமான நாட்கள் இது எங்கள் தல ரசிகர்களுக்கு….படத்தில் அஜித் பேசிய வசனங்களை போல உங்கள் வரத்தை களும் மிகவும் அர்த்தமாக இருந்தது.. ஒட்டு மொத தல ரசிகர் களின் சார்பாக எங்கள் நன்றி யை தெரிவித்து கொளிகிறோம்…தல இன் ஆரம்ப சினிமா படங்களில் இருந்து அவர் பின்னல் நாங்கள் அவர் பின்னால் இருகிறோம்…
  உண்மை வீல்தந்தும் இல்லை வீழ்வதும் இல்லை..நன்றி

 17. RAJA RAJA says:

  first thing -SUNDAR BAASHA pathi sonna pathrikkai ANEGAMA -KUMUTHAM,VIKADAN or NAKEERAN ithulla ethavathu than sure a irukkum,enna ivanga HOLLYWOOD FILM makers pa vidungappa ivangala pathilam naama kavala pattutu

  Secondthing -Naan innaiku noon show than parthen,mathavanga solra alavukku padam onnum mosam illa,oru prequel edukrathu evlo kastam,because current situation na,ippola irunthu saavu varaikkum eduthadalaam,aana prequal ngrathu BILLA voda birth la irunthu MALAYSIA varaikkum thaan edukka mudium,athulla director correct a solli irukkar ,stylish la compare pannum pothu BILLA -1 a vida konjam kammi thaan,but VISHNU ku CHAKRI kum difference irukkupa,its worth watching thats it

 18. vicky.sm vicky.sm says:

  enga thala yevaliyo avvaliye nangal by VICKY.SM (Nellai)

 19. Rajpart Rajpart says:

  hello sundar…this is too much. muthala padathai parunga…kannal parpathum poi khathal ketpathum poi thivera visaripadhe mel..ajith rajiniyin menarisangalai follow pannuvatharkukava intha pasam. naan than adutha super star endru dheena amarkalam hit ku apuram sonnavar ajith. Next Super star yaar enra potiyai uruvakiyavar. maha, anjaneya, ji,jana ponra tholviku piragu sailent ayitaru. rajini evvalavu periya hit koduthalam ore mathiri irupar. anal ajit oru china vetri kitaithavudan vaiku vanthalelam pesi atharku apuram sailenta irukaru. ippo rajini yin real life a follow panni ungakitta nalla pera sampathikirar. ippa makkalai cover panna intha mathi technic use panranga sila per. eppadi kamal rasigar manrankalai narpani manrama mathinar. en rajini manram rasigar manrama mattum irunthucha ivar mattum narpani seiraaram. antha mathri ajit rasigar manram ventaam enkirar. een rasigar manram 50000 ku mela register pannum pothu thonala…appa hit time ippo nalla peru vanguraram. Sundar rajini thakaval mattum podunga
  \இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு.\
  pala nerankala sariyayirukku. intha time thappu ayituchu…..

  • முதல்ல ஒரு விஷயம். என் கருத்தை நீங்க அப்படியே ஏத்துக்கணும் என்கிற அவசியம் இல்லே. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லே. மறுக்குறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு.

   படத்தை நான் பார்த்து அது என்னோட எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற மாதிரியோ அல்லது நான் இங்கே சொல்லியிருக்குற மாதிரியோ இல்லேன்னா அதுனால என்ன இப்போ? அது என்ன கிரிமினல் குத்தமா?

   என்னோட ஃப்ரென்ட் சொன்னதை நான் ஜஸ்ட் ஒரு சாம்பிள் ரிவ்யூவா பாக்குறேன். ஒருவேளை இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் அவர் சொல்றது தப்பாகவே ஆகட்டுமே அதுனால என்ன இப்போ?

   என்னோட பாயின்ட் என்னன்னா…. உங்களுக்கு பிடிச்சிருக்கா.. குடும்பத்தோட பாருங்க. விமர்சனங்களை பொருட்படுத்தாதீங்க. விமர்சனம் பண்றவங்களை திட்டாதீங்க. அவ்ளோ தான்.

   அடுத்து, அஜீத் அவர்கள் எப்போ என்ன சொன்னாருன்னு எனக்கும் தெரியும். என் கிட்டே அவர் அப்படி பேட்டி கொடுத்த புக்ஸ் எல்லாம் கூட இருக்கு. கடந்த காலத்தை நீங்க பாக்குறீங்க. நான் நிகழ்காலத்தை பார்க்கிறேன்.

   • Rajpart Rajpart says:

    Nantri sundar…..விமர்சனங்களை பொருட்படுத்தாதீங்க. விமர்சனம் பண்றவங்களை திட்டாதீங்க. neenga solra intha karuthai rajini fans mattume seikirarkal. enentral nam thalaivarai unnipaga kavanithu avar vazhi natakkirom. anal ajit rasigarkal matra padankalai eppadiyellam vimarsanam panranga enpathu ellorkum theriyum. avarkaluku intha karuthu puriyathu.

  • kavin kumar kavin kumar says:

   nanbaruku vanakam ; neengal solvathu pol (nan than aduthasuper star) ajit oru kalathil kooriyathu unmai than . anal tholvikaluku pin avar amaithi agi vittar enbathu muttal thanam . avar appadi pattavaraga irundirundal meendum billa 1 , mangatha vettriku pin than super star endru solli iruka vendum. anal avaro tahn Ultimate star pattathai thuranthar rasigar mandrangalai kalaithar. mangatha vin vettri yai super star ku samarpanam endru koorinar .

 20. vicky.sm vicky.sm says:

  thala pola varuma

 21. Srinivas Srinivas says:

  superb article :)
  naan first day paathuten :)

  BILLA II - My review !!! Padam technical la chumma kelappirukkaanga. Ajith solra punch dialogue, en vaazhkaila ovvoru naalum ovvoru nimishamum yen ovvoru nodiyum naana sedhukinadhu da, adhu maadhiri ovvoru scene um semaya sedhukkirkkanga. Camera , picturization , locations, costumes , character selection , action sequence , dialogues, Bgm ellaame ellaame sema kalakkal :) But padathula main negative 2nd half la onnume illadha maadhiri oru feeling. Billa previous part kum idhukkum strong link kudukara maadhiri scenes illave illa. BILLA and RANJITH mattum padam fulla sendhu sutharaanga and suttu thallite poraanga.. Padam 1st half s good, interval varum bothe kitta thatta DON aagi Billa theme play panraanga.. So adhukkaparam 1 hour appappo nalla scenes vandhaalum onnume illanu aayduchu. Story and screenplay la konjam concentrate panni irundhirukkalaam.. Manasula nikkara maadhiri Neraya Mass scenes vechurukkalaam.. Too much of violence.. This movie Definitely not for family audience. 2nd half la CM kitta donation, billa's akka n akka ponnu episode laam konjam bore. Interpole officer Jagdeesh aka Rahman Billa vukku kai kuduthu kaanamal poitaaru. Avanga epdi close aananga , Billa 1st part la Malaysian police bayangara build up kuduthu billa va thedinadhu edhukku nu sollave illa..May be Billa 3 nu sequel of prequel eduppangalo ennavo.. Ipdi pala negatives irukku..BUT One MAN .. Idhu ellaathayum odachu Padatha save pannitaaru.. AJITH KUMAR - THALA .. Mankathala vara maadhiri Mass scenes idula neraya illa .Verum Kathi and Gun veche mudichidaraanga.. Konjam clever aa think panra scenes , twist scenes laam vechurundhaa padam kelappalaa irundhirukkum..Overall Movie s good but not best!! Songs nalla iruku . unakulle mirugam different aa try pannirkaanga. Asusual Stylish Ajith + yuvan bgm + hi fi locations = Sucess formula once again worked :)
  Billa2 - Hi fi action masala , Treat for Ajith fans :) sure hit :) Producer Thala THALA yaala thappichuduchu :) Congratz Ajith. good but innum payirchi vendum Chakri toleti !!

 22. harisivaji harisivaji says:

  I am not asking you to write anything against anybody…. or to support vijay surya…or etc….
  When a film doesnt do well or not meet the expectations there will be sufferer
  But the most suffered person would be his fans.(there is no money back guarantee:). .When a hero select the story he should consider this (Just thinking/following of Rajini or whoever ,,just walking in screen here and there with punch dialogues will not make a movie to Run)
  Even theatre owner may get their money…most of the screens have been booked in Advance…so who ever who booked have been forced to go now
  I dont know how As a Rajini fan ajith selected the screenplay narrated by Chakri…
  He has been wasting his Talent and hardwork by selecting a worst director
  Compared to other he is quite and OK but a person with this kind of potential, not able to make it worth means then the mistake is with him
  Moreover as a fan this is just a part in our life…this is not the life why to worry this much
  Even i heard some few hardcore fans are disappointed with the film…then what is the
  point of bringing their own family to screen and forcing them to watch..so that the film will be hit

  This is not only for Ajith for our Thalaivar also but till now When ever he accepted films he will think not only to make his fans happy but also others general audience,,,even small kid should enjoy his film…he will think in all age audience

  Still, Ajith is not able to do a film with any branded director whatever is initiated have been shelved for some reasons…
  A stone will become sculpture when it handed over to a skillfull person

  Above all
  In TV there is a ad where they shows school children has been praised that you are the next Jackson, Next Sachin, Next so and so…then the kid realized and will say…i dont want to be next …i should be First….(Its good message for all,,create a unique identity dont imitate others identity)
  If we are thinking of next ….we will be always next
  Be First

  Thalaivar didnt say i want to be next Makkal Thilagam or Nadigar Thilagam

  I admired Ajith Fans…the way they extending their support in all those failures… but whats the point who suffers…(Ajith will get his salary,, theatres will get their money…but fans ??)

  If there is no need to bother then why the article for Fans in onlysupertar.com

  • Rajpart Rajpart says:

   Super points hari….

  • Krish Krish says:

   hari who says fans are disappointed,its really a worth watching movie…… One man show by Ajith, his screen presence was awesome and dialogue’s are phenomenal. I think u didn’t watch the movie so far.I’ll bet u no ajith fan can be disappointed…….. Some people cant tolerate about ajith b’coz of his growth as every one are saying next superstar his the one nd only ajith, such a wonderful human being……. we need some people to curse him because the more they curse the more he (thala) grow………

  • ஹரி,

   நான் சொல்லியிருக்கும் விஷயம் இது தான்.

   அவர் படம் வெற்றியடையவேண்டும் என்று கருதும் எண்ணற்ற ரஜினி ரசிகர்களுள் நான் ஒருவன். எனக்கென்று நமது கருத்துக்களை வெளியிட தளம் இருக்கிறது. அதில் யாரையும் தாழ்த்தாது, திட்டாது, குறைத்து பேசாது எனக்கு கருத்துக்களை முழுக்க முழுக்க பாசிட்டிவாக பக்குவமாக கூறியிருக்கிறேன்.

   அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதைவிட பிடிக்கும்.

   அவரது படங்களை பற்றி வருகிற எதிர்மறை விமர்சனங்களை கண்டு ரசிகர்கள் சோர்வடைய வேண்டாம். விமர்சிப்பவர்களை திட்டவும் வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

   நான் யாரையும் கண்டிப்பாக போய் படத்தை பாருங்கள் என்று சொல்லவில்லை. பிடித்திருந்தால் - குடும்பத்தோடு படத்தை பாருங்கள் என்று தான் கூறியிருக்கிறேன்.

   என் நண்பர் பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாகவும், காமிரா உள்ளிட்ட டெக்னிகல் விஷயங்களில் படம் ஸ்கோர் செய்திருப்பதாகவும் ஸ்டைலிஷாக இருப்பதாகவும் கூறினார். (நல்ல ஸ்டோரி என்று அவர் கூறவில்லை.) அவருடைய விமர்சனங்கள் இதற்கு முன்பு சரியாக இருந்தது. இதுவும் அப்படியே என்று நம்புகிறேன்.

   ஒரு நடிகரால் தன்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி படம் நடிக்க முடியாது. எல்லாருடைய டேஸ்ட்டும் ஒரே மாதிரி இருக்காது. அதே போல ஒருவருக்கு பிடிக்கவில்லைஎன்றால் மற்றவர்களும் அதே கருத்தை கொண்டிருப்பார்கள் என்று நாம் கூற முடியாது. மங்காத்தாவைப் பற்றி இப்படித் தான் என்னிடம் கூறினார்கள். ஆனால் அது ஓடியதே. எப்படி?

 23. Ram Ram says:

  Mr.Sundar Thank you so much for your article.

 24. vijay anand vijay anand says:

  sir super review.. but unga aalgalile sila peruku pidikala ehtu so yochurukalam podurathuku munadi.. unga aalungale naraiya thituranga…enaku epo than kastama eruy boss..

 25. raghul raghul says:

  thala always rocks
  :*

 26. Suresh Suresh says:

  Suresh Here Sundarji, Rajini padathuku apprum nan 4 mani show ku ponna ahtu billa 2 ajith endra manitharuku than. Padam semaya irunthathu to be very frank innum better a irunthu irukalame thavira kandipa ithu mass film hollywood style with sema vasanam, camera, music etc prequel ku enna venumo athu kandipa irunthathu we all are happy. Vimarsam solra level ku mosama illai. Also neenga correct a oru point a pudichi irunthinga ajith+name nu twitter la create panitu evanachu ethachum pesitu ponalum athuvum ajith fans mela than vilugum so neenga sonnathu 100% correct ji. Sema article in our thalaivar website onlysuperstar.com la ajith pathi vanthae pala peru nala porka mudiyathu :-)

 27. ajith ajith says:

  family oda poi paatha family eh irukadhu.. avlo A scenes

 28. Jagadeesh Jagadeesh says:

  Thank you so much for such a post. I was even frustrated (very much) by seeing the negative reviews. I was just thinking why it happens to Ajith alone. But after reading your post I am seeing no one escapes from Media. They want to criticize when they want & will encourage when they need. This article relieved me so much. It actually helped me a lot.

  I am fan only to his confidence, his truth speech, his character. Then only to his film.

  Nammai Parthu Kathu Pavargalidam Siripai Bathilaga Thara Vendum.
  Puribavargaluku Vilam Kodukalaam, Puriyatha mathiri Nadipavanuku Vilakam alipathu Nammai Naame thiti kolvatharku sammam.

  Thanks again for such a wonderful post. I will sleep peacefully after 2 days because of you. Thanks again…Thanks a lot

 29. Siva Siva says:

  http://sivasjunction.blogspot.in/2012/07/billa-2-…

 30. killivalavan killivalavan says:

  BILLA 2 supera irukku, thala stylela sollanumnna padam paakurathukku entha thakuthiyum vendiyathillai, aana padatha pathi comment kudukkarathukku oru thakuthi venum. ajith rasigarkallukku pidikkum, thevai illatha vimarsanangala kandukkamaattanga.

 31. aswin aswin says:

  thla pola vruma…….

 32. sridhar sridhar says:

  super sir………that is ajith……..billa2 i saw 2 day…….flim very super don……..

 33. lakneswaran lakneswaran says:

  Tnx my mind is clear

 34. சிதம்பரம் சிதம்பரம் says:

  அஜித் அவர்களின் ஒரு படத்தில் கூட சூப்பர் ஸ்டாரின் போஸ்டரை ஒருவர் கிளிக்கும் போது ”இதுவே உனது தலைவனின் போஸ்டரை நான் கிளித்திருந்தால் என்ன செய்வாய்”என்று அஜித் கேட்பார்.அதற்கு தலைவரின் போஸ்டரை கிளித்தவர் சொல்லுவார்”நீ என் தலைவனின் போஸ்டரை கிளித்தருந்தால் உன்னை கொன்றிருப்பேன் ”என்று அதற்கு அஜித் சொல்வார்” நீ என் தலைவனின் போஸ்டரை கிளித்தபோது கூட நான் அமைதியாக இருக்கிறேனே இந்த அமைதியைத்தான் என் தலைவன் தன் ரசிகர்களுக்கு சொல்லி தருகிறான் என்று”

  தல ரசிகர்களே எதற்கும் கவலைப்படாதீங்க நான் படம் இன்னும் பாக்கல ஆனா படம் கண்டிப்பா ஸ்டைலிஸ்ஸா இருக்கும்னு தெரியும்.

  உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த நம் எந்திரனிற்கும் தான் எத்தனை எதிர்மறை விமர்சனங்கள்

  காய்க்கிற மரம் தானே கல்லடி படும்

 35. suresh g suresh g says:

  next movie please ajith sir acting only vishnuwarthan movies for billa 3

 36. Deepak Deepak says:

  Nice article mr.sundar sir…im really lovin it…it ll energetic for ajith fans…thank u thank u so much…………

 37. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Hi Sundar ! Youi evaluation is well balanced. I must say that the purpose of writing this article is ensure that the fans should balance success & failure. A well consolidated one. Needless to say that the entire media ia against Thala like Thalaivar. This is because Thala did not attend any promotional activities for his films and as a result of this, media is not able to generate any money. The other reason is, Bill 2 is not able to satisfy the imaginatory hype/expectations of the fans. I am sure that Thala will overcome all hurdles and prove that Bill 2 is a box office hit.

 38. skr skr says:

  Movie was a very average fare…Lacks story & screenplay. I too like ajith for his self confidence but he should be careful in selecting stories. Even thalaivar said that team is important to make a movie success..Ajith has to start working wth that kind of team…Honestly i didnt like any of his recent movies (mankatha was ok in parts) and he is not living upto his expectation…Billa 2 is like his movie asal…u cant rely on style alone…its wrong to compare thaliavar's movies since each of the movies quoted had a story and keeps you engaged although they were mass entertaintment movies…Rajinis screen presence is something no one can match …I strongly think that ajith should start working with some renowned directors ..Billa 2 again let me down….i was left frustrated and same feeling after i watch most of vijay movies (except pokkiri & kavalan)…i went & watched naan ee for 2nd time to releive the frustration of watching billa 2 …Ajith is stylish and taking huge risks but there is no meat in this movie…

 39. Raja Raja says:

  Nice REview Sundar.. Billa is Really is good movie ..some are trying to spoil it ..

 40. Chozha Rajan Chozha Rajan says:

  Good review.. Unmaiya solli irukeenga.. I am a Superstar fan from my childhood days and later a fan of Ajith from his 'Aasai' days. Both these actors have the same qualities in personality. Its natural that all Rajini fans have become fans of Ajith now.

  • VIJAY KUMAR VIJAY KUMAR says:

   PLEASE STOP COMPARING RAJINI TO OTHER HEROES…
   ORE SOORIYAN
   ORE CHANDIRAN
   ORE THALAIVAN THAAN
   Agreed ajith is a good person by nature in film industry. I appreciate his respect towards thalivar.So what,????? who doesn"t respect,adore thalaivar nowadays ???????
   Be it bollywood ,kollywood,all southern film industry is aware of his qualities.
   BTW A good article for a BAD FILM like billa 2 is not going to work magic…. It has just created big traffic jam(for time being) in this commenting section .Thats it..
   Like to see more and more articles about my thanga thalaivar in this website.NO HARD FEELINGS.

 41. Manoj rox Manoj rox says:

  yenakku idhil udan paadu Illai :( =/

 42. neethan neethan says:

  yes thala is a veryy gud person…but the billa-2 film is not a good one bcoz of its direction

 43. neethan neethan says:

  I've just come from the theatre….the block buster in this year is the one and only """ Billa-II """"

 44. Govind Govind says:

  Seriously, this is one of the worst movie from Ajith. Poor editing and screenplay ofcourse direction. I am die hard fan of Thalivar and like Ajith but coming up with article just to backup Ajith is not required Sundar. We had extraordinary movie which Rajini himself appreciated like Vaagai soodava, Engayum Eppothum etc but we never gave such a opening in our site as we did for Billa 2. Its not offense anyone but all movies other than Rajini's movie should be given same treatment. As you always do, please support new talents and young blood from film industry as it would really makes our site so special.

 45. Sma Sma says:

  Thank you for this encouragement :)

 46. swami swami says:

  Very good article sundar! I think you are also becoming like our OSS, taking criticism in your stride! Well, someone wrote that we should give +ve talk about vijay! For what? He is only fit for b'bay city sukka rotti, sutta paru sevatha kutti dance! Somehow he has clicked and is going on! That guy challenged CM with Sachin and was talking ill of our OSS. We must never forgive or say anything +ve about that vijay!

 47. suresh kumar suresh kumar says:

  realy its true

 48. Manikandan Manikandan says:

  சுந்தர் நீங்க இந்த மாதிரி ஒரு கட்டுரையை யாரையும் தாழ்த்தாது, திட்டாது, குறைத்து பேசாது கருத்துக்களை முழுக்க முழுக்க பாசிட்டிவாக பக்குவமாக எழுதியதற்கு மிகவும் நன்றி.. எந்த நடிகர் தலைவரை உண்மையாக நேசித்து பின் பற்றுகிறார் என்றும், எந்த நடிகர் நமது தலைவரை பின் பற்றுவது போல் ஒரு காலத்தில் உண்மையான ரசிகனாக நடித்து இன்று தான் அந்த தலைவரை விட ஒரு பெரிய செல்வாக்கு மிக்க நடிகர் என்று ஒரு முட்டாள் தனமான மமதையில் இருக்கிறார் என்றும் உண்மையான ரஜினி ரசிகனுக்கு நன்றாகவே தெரியும். ( நான் சொல்வது உண்மையான ரஜினி ரசிகனுக்கு தெரியும் ). அது உங்களுக்கும் தெரிந்திருகிறது.

 49. Manikandan Manikandan says:

  ஒரு காலத்தில் எனக்கு தலைவரை தவிர வேறு எந்த நடிகனையும் பிடிக்காது. இன்றும் அப்படி தான் என்றாலும். பெயர் சொல்ல விரும்பாத நடிகரை நான் தலைவருக்கு அடுத்தபடியாக நினைத்து கொண்டிருந்தேன். இதே அஜித்தை நான் வெறுதிருக்கிரேன் காரணம் ஆரம்ப காலங்களில் அவருடைய வெளிப்படையான பேட்டிகள். ஒரு ரஜினி ரசிகனாக எல்லோருமே அவரை அப்பொழுது வெறுதிருபார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு ஒரு பெரிய முட்டாள் தனம் என்று போக போக தான் புரிந்தது. தலைவரின் ஸ்டைலை,மேநரிசங்களை, பஞ்ச் டயலாக்குகளை, காப்பி அடிப்பதோடு. ரசிகர்களை கையாளும் முறை, அரசியலிலும் அரசியல்வாதிகளோடு தலைவரின் அனுகுமுறை, காவேரி நீருக்காக தலைவர் இருந்த உன்னா விரதம் வரை அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து கேவலமான ஒரு விளம்பரம் தேடும் அந்த நடிகர் எங்கே.. மனதில் பட்டதை ஒரு முதல்வர் என்று கூட பார்க்காமல் வெளிப்படையாக பேசி நமது தலைவரிடமே கை தட்டல் வாங்கிய அஜித் எங்கே

  • நண்பரே, யாரையும் நாம குறைசொல்லவேண்டாமே. நீங்கள் குறிப்பிடும் நடிகரை இங்கு விமர்சிப்பது என் நோக்கமல்ல. அப்படி இருந்திருந்தால் இந்தப் பதிவிலேயே அதை செய்திருப்பேன். மத்தவங்களை குறை சொல்லித் தான் தான் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் உண்மையில் ஒரு நல்லவனுக்கு இல்லை.
   - சுந்தர்

  • karthik karthik says:

   Frnd, Copy adikrathu thappu ila. I am die hard fan of Rajini. I hv no regret to admit that almost 60-70% of Rajini's (superhit) films r remade. Most of his style sequences(even his cigarette style) is copied frm another Bollywood super star- Even Rajini admits it. Most of the Rajini movie formula r copied for MGR movies(actually MGR started that hero worship formula). So, there is nothing wrong in anyone trying to copy from our Thalaivar. If thats the only reason for u hate that "partcular" actor, please change ur thought..

 50. Manikandan Manikandan says:

  நீங்கள் அஜித் படத்தின் கட்டுரையை நமது ( ரஜினி ரசிகர்கள் ) தளதில் வெளியிட்டது மிக மிக மிக பொருத்தமான ஒன்றாகும். அஜித் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டாரின் நிஜ பழக்க வழக்கங்களை வாழ்வியல் கொள்கைகளை பின்பற்றும் ஒரு ரசிகரும் கூட. தலைவரையும் அஜித்தையும் நன்றாக அறிந்தவர்கள் யாரும் இந்த கட்டுரையை குறை கூற மாட்டார்கள்.

 51. Lactif Lactif says:

  edhukku indha Jalra post?? Ajith is not the only friend of SSRK. Will you put a similar post if any other actors movie fail?? We all like Rajini. But its not sure everyone of us likes Ajith. This post is something of ur personal interest and not an arrticle to be made public

 52. Raaj Raaj says:

  The truth is that the movie is a very average …Lacks story & screenplay…
  Billa 2 minus Ajith == 0

 53. BEnjamin BEnjamin says:

  Thanx SS Fans
  Mee too SS and Thala fan

 54. sugu sugu says:

  Thank u very much sir.. ore super star rajini dhan.. nan oru thala theeviravadhi.. engaluku enna venumo, adha enga thala koduthirukaru.. not only by billa 2.. by his life style too.. such as confidence, hard working, motivation etc., we wont worry abt others.. vijay'in dance kaga rasipavan nan.. vikram's dedication ah madhipavan nan.. best ah eduthukanum.. thats it.. we wont care abt negative reviews abt our billa 2.. we enjoyed.. we danced.. and we'll wait for next ajith'movie and will give the same mega opening.. but can say onething.. rajini ku appuram, oru nadigaroda movie release ku tamilnadu muludhum paraparappum, edhirparpum egirudhu na adhu thala ku dhan.. we r proud for that.. padhivai padhindhadharku migavum nanri nanbare.. kochadaiyan ku waiting.. :-)

 55. Sankaranaryanan Sankaranaryanan says:

  இரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதா என்ன? விமர்சனங்களால் ஒருவரை வீழ்த்திவிட முடியும் என்றால் சரித்திரத்தில் சாதனையாளர்களே இருக்கமாட்டார்கள். விமர்சனங்களை வரவேற்க துணியுங்கள்; வாழ்க்கை வளமாகும்!

  Great Sundarji… Beautiful words… and real words…..

 56. sudhir sudhir says:

  good review sundar thala rocks

 57. B. Kannan B. Kannan says:

  Ur comments are mostly true and perfect to the current scenario..
  Ajith is duplicating Thalaivar in real life which is good..
  Instead of passing on negative criticism lets wait and watch..
  To me the glaring negative in the movie is half cooked screenplay..
  Could have given some momentum to the movie through some interesting twists
  and scenes.. No take-off at all in the screenplay..
  Sundar its good move to add our Thalaivar still along with ajith..
  Will be liked by hard-core ajith fans.. Dot

 58. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  Hi,

  Good to see that our site also gives this kind of updates and hats off to you sundar for the stunning post about Billa 2.

  In my personal opinion i like Mr.Ajith for his hard work and also i like his quote :Live & Let Live"

  I saw the movie Billa 2 and it is worth watching and i saw it for 2 times in Abirami & Udhayam.

  The fans response was excellent and we do agree that it is not up to the 1st part of Billa but we should also accept that there is a difference between Vishnu & Chakri direction.

  it is also so hard to take a prequel movie like this and chakri had tried a lot to give his best. Hats off to you Chakri and try & try only then you can succeed in this field.

  Yuvan also missed to give his real cream in the movie but not so bad it is average.

  All that i want to say is we always support Ajith sir for ever since he is a man of perfection and also a good human being.

  Endrum Thalaivar Bakthan
  Vijay

 59. amar amar says:

  very clear & cool post by sundar sir. Billa2 wasn't a big let down but few minor hiccups was there in the film but no problem ajith was at his best. just enjoy the film than depending on politically based reviews

 60. N.S.I N.S.I says:

  good afternoon every body…….. i think most of them don't know story of billa2 in that flim rise of billa (Ajith). In that story rise billa is negative roll according to that he was acted. there is so many related scene was there in billa1 and billa2. i thougt they didn't see the full movie. Meantime in negative roll dialogue is more impotant. so he used more dialogue.i didn't found any critics in that film.. its all depend people.. eventhough ajith rocking in billa2

 61. Ram Ram says:

  True - As a Ajith Fan i am satisfied with Billa 2.

 62. neel neel says:

  thevai illatha oru katturai…… super star thaan maaas

 63. ashok kumar ashok kumar says:

  realy super mass movie for billa 2.rajini sir ku 1ru thalapathi mari,kamal sirku 1ru nayagan mari,ajith ku 1ru billa.ajith acting,stunt,dailog are most super.

 64. Marees Marees says:

  நண்பர்கள் ஒரு விஷயத்தை யோசிக்கவேண்டும்….நம் தளமோ அல்லது சுந்தரோ இதுவரை யாரையும் தப்பாகவோ அல்லது இழிவுபடுத்தியோ அல்லது குறைசொல்லியோ பதிவு போடவில்லை..மாறாக நல்ல விஷயங்களையும் நல்ல செய்திகளையும் தொடர்ந்து கூறி வருகிறார்…இந்த பதிவும் நாம் அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்….இது ஒரு அஜித் ரசிகனுக்க மட்டும் இல்லாது பொதுவாக யோசித்தால் இதை நீகள் வெருகமடீர்கள்….படம் வெளியான அன்று காலையே சுந்தர், “வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்ப்பட்ட நடிகர் திரு.அஜீத் அவர்கள் நடித்த பில்லா” என்று கூறி தன் வாழ்த்து செய்தியை நம் தளத்தின் ஹோம் பேஜில் ஸ்க்ராலிங் நியூசாக அளித்திருந்தார். ஆகையால் படம் வெற்றியா தோல்வியா என்ற அலசலே தேவையற்றது.

  பாட்ஷா படத்தை பற்றி சுந்தர் கூறியிருக்கும் இந்த செய்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்…?
  .
  நம் தளத்தை பற்றியும் சுந்தரை பற்றியும் நன்கு தெரிந்தவர்களுக்கு மன்னிக்கவும் புரிந்தவர்களுக்கு இந்த பதிவு நம் தளத்தில் வெளியானதில் எந்தவித வருத்தம் இருக்காது…
  .
  மாரீஸ் கண்ணன்

 65. SivajiRao Veriyan SivajiRao Veriyan says:

  //அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா… ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.//
  Naan Rajini Rasigan/ Veriyan . Idhu anaithum unmai!

 66. saran saran says:

  anna billa 2 padam pathen nan ajith fans than padam nalla than irukku intha vimarsanam ellam thala ah onnum panna mutiyathu enna irunthalum billa 2 super nu sonnalum flop nu sonnalum thala fans eppavom thala fans than ajith eppavom ajith than nangalum maramattom thalaum mara mattar (thala da)………………..

 67. ATTENTION ALL

  Visitors are requested to maintain decency in their words while posting comments. Don't degrade or attack other commenters or actors. Such comments will not be published and rejected at once.

  Express your words swiftly without using any harsh words.

  Thanks for your co-operation.

  - Editor

 68. saamsudar saamsudar says:

  Tamil pada rasigargal innum akka, thangai, amma, centiment, comedy, songs ipdiyea parthu palagi adutha generationkku vara matranga, see mugavari film was very nice and real , greedam , varalaaru, ithu ellame nalla film thaan but people wont accept. see ore mathiri film pakkurathukku athe padatha pathutu poidalamla. billa 2 was nice , you must see billa after billa2, you should realise this action movie

 69. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Namma Thalaivar site la Ajith pathi vantha intha article boost for his fans. As a Thalaivar fans we don’t discourage Ajith

 70. vignesh vignesh says:

  thalaivar is common for all so dont support some individuals,enna itha vida kastapatu payangarama edukapatta kamal padangal odama iruntha pothu namma support pannala,ajith onnu kamala vida periya hard worker kidayathu

 71. Pon maheswaran Pon maheswaran says:

  I like your approach…………….
  I like all the dialogue in the movie ………….All the best for Ajith sir………..

 72. srini srini says:

  thala rockzzzzzzzzzz

 73. lakshmi ananth lakshmi ananth says:

  Thanks Sundar. We(Ajith Fans) are now got boost up.

 74. Arjun Rajakutty Arjun Rajakutty says:

  Excellent article sir…superb…

 75. Alex Alex says:

  ஹாய் சுந்தர்,
  வெரி கரெக்ட் statement (கரெக்ட் டைம்) நேற்று வேறு ஒரு website ல பில்லா 2 விமர்சனம் பார்த்தேன் அது படம் பற்றின விமர்சனம் இல்ல அஜித் பற்றிய விமர்சனம்.

 76. ALEX ALEX says:

  THANKS FOR YOUR SUPPORT TO ENGA THALA.

 77. suresh suresh says:

  சுந்தர் சார் உங்களை போன்ற நல்ல மனிதர்களின் சப்போர்ட் என்றும் எங்க அஜித்துக்கு தேவை ..நன்றிகள் பல

 78. lachu lachu says:

  தம்பி அஜீத் ரசிகனா இரு தப்பில்ல…
  பொழப்ப பாக்காம இருப்பது தான் தப்பு….

 79. antony antony says:

  . எனக்கு அஜித்தை ஒரு மனிதனாக பிடிக்கும். ஆனால் நடிகராக அல்ல. அவரின் பல படங்கள் எனக்கு எரிச்சலை தருகின்றன. அவருக்கு பின் வந்த சூர்யா கூட நல்ல வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் போது அஜித் ஏன் இப்படி செய்கிறார்? பில்லா 2 மிக மோசம்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates