You Are Here: Home » Featured, Happenings » புழதி பறக்க செல்லும் கார்கள் உணர்த்தும் உண்மை என்ன? சொன்னாங்க சொன்னாங்க - 1 (புதிய பகுதி)

ம்ம தளத்துல இது ஒரு புது பகுதி. படிக்க ரொம்ப சுவாரஸ்யமா அதே சமயம் வித்தியாசமா இருக்கும். காமெடி, ஆக்க்ஷன், செண்டிமெண்ட் எல்லாம் உண்டு இந்த பகுதியில.

சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய செய்திகளுக்கு அப்பாற்ப்பட்டு ஒரு நாளைக்கு எத்தனையோ பத்திரிக்கைகள், புதுப் புது வலைப்பதிவுகள் நான் படிக்கிறதுண்டு. அதுல சில சமயம் சிந்திக்க தூண்டும் விஷயங்களை படிப்பதுண்டு. அப்படி படிக்கும்போது “அட… நல்லாயிருக்கே இது!” அப்படின்னு எனக்கு தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் இங்கே பகிர்ந்துகொண்டுள்ளேன்.

இது ஜஸ்ட் ஒரு லைட்டான - நொறுக்குத் தீனி போன்ற பதிவு தான். உங்கள் கருத்துக்களை கூறவும்.

——————————————————————————-

புழதி பறக்கும் கார்கள் உணர்த்தும் உண்மை

இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்த விகடனில் கேள்வி ஒன்றிற்கு கூறியுள்ள பதில்:

“எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தின் செயல்பாடுகள் எப்படியிருக்கு?”

“ஐயோ பாவங்க! தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருந்திருந்தா, விஜயகாந்த் மாதிரி ஆளுங்க எல்லாம் இங்கே வந்திருக்க முடியுமா? எல்லாமே இங்கே சீர்கேடுங்க. பாருங்க, ஒவ்வொரு அரசியல் தலைவர் வரும்போதும் போகும்போதும் விர் விர்னு அம்பது அறுபது காருங்க கூடவே பறக்குது. அந்த கார்கள்ல இருக்குற மூஞ்சியை பாருங்க, அவங்களைப் பார்த்தா ஜனங்களுக்கு நல்லது பண்ற மாதிரியா தெரியுது? அஞ்சு வருஷத்துக்கு ஒரு கட்சியை பாதாளத்துக்கு தள்றாங்க. இன்னொரு கட்சியை அரியணை ஏத்திவிடுறாங்க. அப்படி இல்லாம எதிர்கட்சிகளுக்கு சம பலம் இருக்கணும்”

ஹீரோக்களின் பரிணாம வளர்ச்சி

நம்முடைய ஹீரோக்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறார்கள். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே அதி உத்தமனமாக இருந்த ஹீரோ, சுதந்திரத்துக்கு பிறகு லட்சிய வீரர்களாகி எம்ஜிஆர் காலத்தில் நாலு பேருக்கு நல்லது செய்கிற, நாட்டுக்காக போராடுகிற, தீயவர்களை புத்திமதி சொல்லி திருத்துகிறவனாக, மக்களை காக்கிற நீதிகாவலனாக இருந்திருக்கிறான்.

அதற்கு பிறகு ரஜினி கமல் காலத்தில் (எமர்ஜென்ஸி!) அவன் கோபக்கார இளைஞனாகவும், பழிவாங்குபவனாகவும் புரட்சியாளனாகவும் குடும்பத்தை நேசிக்கிறவனாக இருக்கிறான். உலகமயமாக்கல் உள்ளே நுழையத்தொடங்கிய தொன்னூறுகளின் ஹீரோ நேர்மையாக போராடி வெற்றிபெற தொடங்கினான்.

இது மங்காத்தா காலம். நாம வாழணும்னா எத்தனை பேர வேணாலும் கொல்லலாம், கொள்ளையடிக்கலாம், பித்தலாட்டம் பண்ணலாம், காதலித்த பெண்ணை ஏமாற்றலாம், குடித்துவிட்டு கற்பழிப்பதுகூட ஹீரோயிசம்தான்.. எல்லாமே ஹீரோயிசமாக மாறத்தொடங்கிவிட்டது. இந்த ஆன்ட்டி ஹீரோயிசம்தான் இப்போதைய டிரென்ட்! மக்களும் அதைத்தான் ரசிக்கிறார்கள். விசிலடிக்கிறார்கள் ரசிக்கிறார்கள். சுறா வேட்டைக்காரன் ராஜபாட்டை மாதிரியான எம்ஜிஆர் காலத்து ஹீரோயிசத்தை பின்னால் தட்டி பரணில் போட்டாகிவிட்டது!

அவர்களுக்கு தேவை எப்படியாவது வெற்றிபெறுகிற ஹீரோயிசம். அவன் நல்லவனாகவோ நாட்டை காப்பவனாகவோ புரட்சி வீரனாகவோ இருக்கத்தேவையில்லை, யாருக்கும் எந்த அறிவுரையும் சொல்லத்தேவையில்லை. அவனுக்கு அடையாளமோ குடும்பமோ கூட அவசியமில்லை. நூறு பேரை அடிக்க வேண்டும், கதறகதற கவர்ச்சி கன்னிகளோடு குத்தாட்டம் போடவேண்டும்.

- அதிஷா @ http://www.athishaonline.com


வாழ்க்கை ஒரு (குறுகிய) வட்டம்டா….

எந்தவித திட்டமிடலுமின்றி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டுஇருக்கிறது.

சம்பளம் வாங்குவதும், அதை செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காக காத்திருப்பதும், என்று வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள்ளே சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

இதுதான் சரியான பாதையா…? என்ற கேள்வி ஒரு அலைபோல மனதிற்குள் மோதியபடியே இருக்கிறது.

எப்போதும், என்னேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாக சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப் பட்டதுதான் அதிகமாக இருக்கிறது.

“செய் ஏதேனும் செய்!” என்ற மனதின் கூக்குரலுக்கு இந்த சாமானிய சம்சாரியிடம் பதில் இல்லை!.

இந்த வாழ்க்கை நம்மை முழுமையாக தின்று தீர்க்கிறது. நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என்று நமது வாழ்வின் பாதையில் உள்ள அனைத்தயும் அது தின்று தீர்க்கிறது. வாழ்க்கை தின்று தீர்த்த ‘மிச்சங்கள்’ பெரும் பாறையாக உருவெடுத்து நம் கால்கள் மீது பிணைக்கப் படுகிறது.

எப்போதும், என்னேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காக கை தட்ட வேண்டியிருக்கிறது. வேறொருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நமது புரங்கையின் மீது தடவப் படுகிறது. நீ வேண்டாம் என்று முகம் திருப்பினாலும் நீ நக்கித்தான் ஆகவேண்டும் என்று போதிக்கப்படுகிறது.

‘இலக்கு டார்கெட்’ அப்ரைசில்,  பிளான் ஆப் ஆக் க்ஷ ன்  , என்று பலவாறு, பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் ‘நுகத்தடி’ என்பதை மறந்துவிடவேண்டாம். அதை தூக்கி உன் கழுத்தில் வைத்து கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப்பையும் வைத்து விடுவார்கள்.

தோழன் மபா @ http://tamilanveethi.blogspot.in

(இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ பிடிக்காம தான் FORCE TEAM என்ற ஒன்றை துவக்கியிருக்கிறேன்!)

காமெடி நடிகர் சந்தானம் விகடன் மேடையில்

கேள்வி : நிஜ வாழ்க்கையில் நீங்க மொக்கை வாங்கின அனுபவம்?

சந்தானம் : காலேஜ் டைம்ல வி.ஜி.பி.ல ஷோ பண்ண வாய்ப்பு கிடைச்சது. மூணு மணிக்கே மேடையேறி தயாரானோ. ஒருத்தரு கூட வரலை. திடீர்னு ரெண்டு பஸ் கூட்டம் வந்தது. இங்கிலாளுக்கு ஒரே குஷி. “மச்சான் இவங்களை சிரிக்கவெச்சு ஷோ பண்ணிடுவோம். அப்போ தான் இன்னொரு நாள் ப்ரோக்ராம் தருவாங்க” என்று பேசி வெச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சோம். எதிர்ல இருக்குற அத்தனை பேரையும் அப்படி கலாயக்குறோம். எல்லாம் போனம் மாதிரியே உட்கார்ந்திருந்தாங்க. ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. நான் மேடையை விட்டு இறங்கி, அவங்களோட சேர்ந்து கைதட்டுரேன். அப்பாவும் பய புள்ளைங்க ஒருத்தன் கிட்டேயிருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லே. ஒரு கட்டத்துல ரொம்ப கடுப்பாகி, “யோவ் கைதட்டுனா என்ன கொறைஞ்சா போய்டுவீங்க?”ன்னு திட்டுனா, “ஏண்டி… பாபு… ஏனு சேஸ்தானு?”ங்கிறானுங்க. எல்லாம் ஆந்திரா கோஷ்டி. வாழ்க்கையில் நாங்க வாங்குன பிரம்மாண்ட மொக்கைங்க அது.

_______________________________________________________
படித்ததில் பிடித்தது

கண்ணீருக்கான காரணத்தை யாரை நம்பிச் சொல்கிறோமோ, அவர்களே அதை உபயோகப் படுத்தி ஒருநாள் நம்மை கதறி அழ வைத்து விடுகிறார்கள்.!

https://twitter.com/minimeens

_______________________________________________________

[END]

17 Responses to “புழதி பறக்க செல்லும் கார்கள் உணர்த்தும் உண்மை என்ன? சொன்னாங்க சொன்னாங்க - 1 (புதிய பகுதி)”

  1. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    Dear Sundar,
    This new post is interesting and it is a welcome "move". Each and every word of Director Thankarpachan is 100% correct. We can really understand his genuine feelings and sentiments. The second article on a routine and monotonous life is also very true which exactly reflects the life style of so many of us. Your comment for this by mentioning about FORCE TEAM is very apt. Good work Sundar!

  2. Jegan Jegan says:

    Regarding the 2nd article,
    not only in cinema, in real life also it is same,nowadays in this generation, those who never takes drinks, etc etc were cornered and considered as wastes.

  3. Jegan Jegan says:

    Regarding the 2nd news piece, not only in cinema, in real life also it is same,nowadays in this generation, those who never takes drinks, etc etc were cornered and considered as wastes.

  4. MURUGAN MURUGAN says:

    arumaiyaana padhivu sundar ji !!!
    thangal pudhiya padhivirkku enadhu manamaarndha vaalththukkal!!!
    thodarndhu KALAKKUNGAL!!!

  5. Suresh Elmalai Suresh Elmalai says:

    what is force team? how i can join in that?

  6. Sankaranaryanan Sankaranaryanan says:

    Super ji.. thank for your sharing… Please post more articles like this….

    yours
    P.Sankaranarayanan

  7. vasanthan vasanthan says:

    nice article sundar ji,,,,,,,,,

  8. KannanV KannanV says:

    கண்ணீருக்கான காரணத்தை யாரை நம்பிச் சொல்கிறோமோ, அவர்களே அதை உபயோகப் படுத்தி ஒருநாள் நம்மை கதறி அழ வைத்து விடுகிறார்கள்.!

    Superb Sundar

  9. tve tve says:

    Dear Sundar

    I like the below content Padithathil Pidithathu. It is true and had a bitter experience on this in my life.

  10. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Good post. apdiye General issues, news pathi podunga

  11. சிதம்பரம் சிதம்பரம் says:

    //கண்ணீருக்கான காரணத்தை யாரை நம்பிச் சொல்கிறோமோ, அவர்களே அதை உபயோகப் படுத்தி ஒருநாள் நம்மை கதறி அழ வைத்து விடுகிறார்கள்!//

    கிளிச்சிட்டிங்க தலைவா Superb quote

    இந்த மாதிரி பதிவுகள் வலைப்பதிவில் எழுதுபவர்களை ஒரு விதத்தில் ஊக்குவிக்கும்

    நாமும் நல்ல பதிவு எழுதி ”சுந்தர் ரசித்த பதிவு” என்று இந்தத்தளத்தில் பிரசுரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது

  12. Hi Sunder sir,
    It's nice to see such a new things in our site. Best wishes for you and force team. I'm waiting for a article about force team.

    You are one of the ICON of thalaivar's fans.
    Hats off to you
    For your involvement, hardwork that u r spending ur valuable time
    For your commitment that you are putting more effort to posting news very quickly.
    For your responsibility that you are having to post only correct, true and confirmed news.

    Keep it up :)

  13. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

    நொறுக்குத்தீனி சுவையாகவே இருந்தது..அதிலும் குறிப்பாக அதிஷா அவர்களின் ஹீரோக்கள் பற்றிய பதிவு அருமை…இப்ப வருகிற படங்களில் ஆபாசம், வன்முறை இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்…குடும்பத்துடன் பார்க்க முடிகிற மாதிரியான படங்கள் மிக மிக குறைவு…சமுதாய கருத்துக்கள் கொண்ட படங்கள், தேசபக்திப் படங்கள் இப்போதெல்லாம் வருவதேயில்லை என்று கூட சொல்லலாம்…அப்படியே ஒரு படம் வெளியானாலும் அதற்கு கிடைக்கும் வரவேற்பு குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை….இருந்தபோதிலும் சில தரமான படங்களும் நம்மை ரசிக்க வைக்கின்றன…"அங்காடித்தெரு, வாகை சூட வா, ஆரண்யகாண்டம், எந்திரன், வழக்கு எண் 18 /9 " போன்றவை மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவின் மதிப்பை உயர்த்திப் பிடித்திருக்கின்றன…! இந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து வருமேயானால் தமிழ் திரைத்துறை உலக திரைத்துறையில் ஒரு முக்கியமான இடத்தை பெறும் என்பது திண்ணம் !
    -
    "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
    -
    விஜய் ஆனந்த்

  14. raja raja says:

    But one THANGARBACHAN what told was true,but cant accept from his mouth,first he should be correct,turning his speech every time

  15. harisivaji harisivaji says:

    Good Attempt…

    now the path will get wide opened

    ThangarPachan….

    100% correct….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates