









You Are Here: Home » Featured, Happenings » ரஜினி தந்த லைப் டைம் ரீசார்ஜ் — உருகும் நடிகர்!
நடிகர் பிருத்விராஜை உங்களுக்கு தெரிந்திருக்கும். ‘மொழி’, ‘ராவணன்’ உள்ளிட்ட படங்களில் கலக்கியவர். கே.வி.ஆனந்தின் முதல் படமான ‘கனா கண்டேன்’ல் வில்லனாக கலக்கியிருப்பார். மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர்.
தன்னை பேட்டி எடுக்க வந்த ஆங்கில டி.வி. சானல் ஒன்றின் நிருபரான சுப்ரியாவை காதலித்து சென்ற வருடம் மணந்துகொண்டார். தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராணி முகர்ஜியுடன் ‘அய்யா’ என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி மீது பெரு மதிப்பு வைத்துள்ள இவர், சென்ற ஆண்டு மலையாள டெலிவிஷன் சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “மேக்கப் இன்றி வெளியே வரும் ரஜினியின் துணிவு வேறு யாருக்கு இங்கே வரும்?” என்று கூறி, பரபரப்பை கிளப்பியவர். (அவரது அந்த பேட்டியின் முழு எழுத்துரு + வீடியோ கீழே தனியாக தரப்பட்டுள்ளது).
சமீபத்தில் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…
“சினிமாவில் உங்களால் மறக்க முடியாத பாராட்டு எது?”
“நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஆராதிச்சதைவிட இப்போ அதிகமா வியக்கும் ரஜினி சாரோட பாராட்டு. ‘தளபதி’ படத்துல ஒரு ஸீன் வரும். அரவிந்த்சாமி கிட்டே “தம்பி நீ போயிடு”ன்னு சொல்வார் ரஜினி சார். “தம்பியா? என் அம்மா மட்டும் உன்னை பெத்திருந்தா உன்னை பெத்த அன்னைக்கே குப்பைத் தொட்டியில வீசியிருப்பா…”னு அரவிந்த்சாமி சொல்வார்…. அப்போ ரஜினி சார் ஒரு ரீயாக்ஷன் காட்டுவார் பாருங்க. சான்சே இல்லே. அப்படிப்பட்ட ரஜினி சார், ‘மொழி’ படத்தை பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணி ஒரு 20 நிமிஷம் பாராட்டிப் பேசிக்கிட்டே இருந்தார். நான் சினிமாவில் இருக்குற வரைக்கும் எனக்கு அந்த ரீ-சார்ஜ் போதும்.”
———————————————————————————————-
பிருத்விராஜ் சொல்லியது போல, ‘தளபதி’ திரைப்பாடம் சூப்பர் ஸ்டாரின் நடிப்புத் திறமை பிரமாதமாக - பிரம்மாண்டமாக - வெளிப்பட்ட படங்களில் ஒன்று.
படம் வெளிவந்து 22 வருஷத்துக்கு மேல ஆகுது. ஆனாலும், இப்போ டி.வி.யில் பார்த்தாலும், ரிமோட்டை தூக்கி மூலையில் வைத்துவிட்டு, பார்க்கும் படமாக அது இருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படங்களில் ஒன்று.
மணிரத்னத்தின் அற்புதமான இயக்கத்தில், இசைஞானியின் ஊணை ஊடுருவம் இசையில், சூப்பர் ஸ்டார் நடித்த இப்படம் சூப்பர் ஸ்டாரின் கேரியரில் மிக மிக முக்கியமான படம்.
ஹப்பா….. என்னா நடிப்பு…. என்னா வசனம், என்னா பி.ஜி… என்னா ஸாங்ஸ்… என்னா லைட்டிங்….
ஒவ்வொரு முறை இந்த படத்தை பார்க்கும்போதெல்லாம், மறுபடியும் ‘ராஜா-மணிரத்னம்-ரஜினி’ கூட்டணி வராதா என்று ஏங்க வைத்துவிடுகிறது.
அப்படி ஒரு கூட்டணி அமைந்து அதற்க்கான அறிவிப்பு வந்தால், அந்த நாள் இந்திய சினிமாவின் பொன்னாளாக இருக்கும். ஹூம்…
(நடிகர் பிருதிவிராஜ் சொல்லியிருக்குற ஸீனை பார்க்கணும்போல இருக்குமே… இதோ அந்த காட்சி!)
Thalapathi movie scene mentioned by Actor Prithviraj
————————————————————————
Also check :
மேக்கப் இன்றி வெளியே வரும் ரஜினியின் துணிவு யாருக்கு இங்கே வரும்? வியக்கும் பிரபல நடிகர்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=8002
————————————————————————
[END]
Thalapahty Thalaivar's classic mass.
தலைவரோட முகபாவனைகள் எப்பவுமே பக்காவா அந்த சீனுக்கு பொருந்திப் போய்டும்……சண்டை, சிரிப்பு, காதல், கோபம், நக்கல், குழந்தைத்தனம் என்று எல்லா உணர்ச்சிகளையும் தன் முகபாவனைகளில் வெளிப்படுத்தும் திறமை நம் தலைவருக்கு உண்டு…அதற்கு இந்த தளபதி சீன் ஒரு உதாரணம்….!
-
தலைவர் ஸ்க்ரீன்-ல எதிரியை வீழ்த்தும்போது ஏதோ நாம் நம் சொந்த எதிரியை வீழ்த்தியது போன்ற எண்ணம் வரும்…ஸ்க்ரீன்-ல தலைவர் அழுதா நமக்கும் அழுகை வரும்…அந்த மாதிரியான ஒரு காந்தசக்தி தலைவருக்கு உண்டு….!
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
விஜய் ஆனந்த்
unmayil enna padam pa ,THALAIVAR summa kalakki iruppar,eyes la enna neruppe ,face la enna reaction,RAJINIKANTH ku style mattum than varum,nadikka varathunu solra sila athiga prasangigal intha padam,johny,mullum malarum ippadi niraya padam irukku atha konjam paarunga sir
THALAPATHY - Thalaivaroda ever green CLASSY movie!!!
Eththana thadava veynumunnaalum paakkalaam!!!
Hi Sundar ! Already we are waiting for the announcement of K V Anand & Thalaivar combo. You are tempting us further more. If Maestro Ilayaraaja does the music, it will be excellent. Let us always hope for the best.
Anathainu Sollura yellarukkume Thalaivaroda Intha padam oru munmathiri,Sontha panthamnu Irukuravanthan Anathai,Nalla Nanbarkal, Yezhaiullankal vazhthu Irukkum yarume Anathai Illainu Thalaivaroda Nadipatral moolama Unarthiya Paadam.
'thalapathi' is one of the best performance based film of thalaivar,
Hi Sundar ji,
Your words are going to come true!! Hindu newspaper reporter grills director KV Anand in this video about directing Superstar Rajnikanth's next film.Almost he came to accept that he will be directing Superstar's next. As u pointed out previously, Once Maatran results are out, Superstar's next film announcement will be made. If they announce it now, it might create lot of problems, so they are waiting patientlly
http://www.thehindu.com/news/cities/chennai/artic...
Please see the video mentioned in this link
Thank you!
Ya Mr.Karthik Even I saw that video, KV Anand mudinjaalavu maluppararu…so i definitely think there s a possibility of this combo..:) hello sundarji if at all come to knw abt this news(kv+thalaivar) update us immediately!!!
Its a Classic Film….
At those days…i didnt like this (Compared to other Masalaa Films) though i was saying to friends the film was super….
Now…after watching multiple times…and one time when they released this in AGS
in big screen…
I dont know how i was thinking like that….A small simple reactions to the core has so much meaning
I was thinking The scenes between Rajini and SriVidya was the best earlier after watching again again closely watching the scenes frame by frame
My opinion changing…Everytime i am watching it,,new scenes are been added again
Now after watching this particular scene again changed
Simple Silent Reactions………………
He didnt act…he lived as with his real character
Dear sundar and my friends…please read this week CINEMA EXPRESS -Tamil (dtd-july 15-30 )…Topic—TAMIL CINEMA OPENING RECORDS…Dont forget…