









You Are Here: Home » Featured, Flash from the Past » இன்று அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்!
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று.
ஒருவர் எத்தனைக் காலம் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதைவிட, மறைந்த பிறகு எத்தனை பேர் இதயங்களில் குடியிருக்கிறார் என்பதை வைத்தே ஒருவரது சிறப்பை பற்றிய முடிவுக்கு வந்துவிடலாம். அந்தவகையில், சிவாஜி கணேசன் அவர்கள், இன்னும் பல கோடி இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவரை போன்ற தொழில் பக்தி மிக்க நடிகரையும், பல் துறை அறிவைப் பெற்ற நடிகரையும் பார்ப்பது அரிது.
சிவாஜி அவர்களை பற்றிய பல அரிய தகவல்கள் வெளியுலகிற்கு கொண்டு போய் சேர்க்கப்படவில்லே என்பதே என் கருத்து.
சிவாஜி அவர்கள் நடித்த திரைக்காவியங்கள் சாகாவரம் பெற்றவை, வினையற்ற செல்வத்தை தரக்கூடியவை என்பதை ‘கர்ணன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த உலகிற்கு உணர்த்தியது.
சிவாஜி அவர்களின் மேலும் பல தரமான படைப்புக்கள் இதே போன்று நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகி இன்றைய தலைமுறையினரை சென்று சேருமானால், அதை விட சிறப்பு எதுவும் இருக்க முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிவாஜி அவர்கள் மீது பெரு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். திரையுலகில் ரஜினி அவர்களை ‘டா’ போட்டு அழைத்தது, அவரது குருநாதர் பாலச்சந்தருக்கு பிறகு சிவாஜி அவர்கள் தான். தன்னுடைய ஒரு மகன் போலவே ரஜினியை பாவித்து வந்த சிவாஜி அவர்கள், ரஜினி அவர்கள் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக ‘படையப்பா’ படத்தில் நடிக்க சம்மதித்தார்.
சென்னை கடற்கரை அருகே, கடற்கரை சாலையில், 2006 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் சிவாஜி அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சூப்பர் ஸ்டார் ஆற்றிய உரையின் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
வாழக சிவாஜி அவர்களின் புகழ்!
From our archives
‘சிவாஜி’ அவர்களின் நினைவு நாளையொட்டி 2009 ஆம் ஜூலை மாதம் 21 ஆம் தேதி, நாம் வெளியிட்ட பதிவை அனைவரும் அவசியம் கீழ்கண்ட லின்க்கை க்ளிக் செய்து காணவும்.
சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வல புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=4152
—————————————————————————————————-
சூப்பர் ஸ்டார் ரஜினி, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற செவாலியே சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் பேசிய உரையின் வீடியோவை இதனுடன் வெளியிட எண்ணியிருந்தேன். ஆனால், YOUTUBE இல் அது கிடைக்கவில்லை. நண்பர்கள் அதன் லிங்க் இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி.
—————————————————————————————————-
[END]
I like most of his movies .Legend forever. A big salute Sivaji sir.
அந்த மாபெரும் நடிப்புலக சக்ரவர்த்திக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்பது தான் ஒரு மாபெரும் வருத்தம்.
தேசிய விருதை விட பெரிதாக அவர் சாகா வரம் பெற்று நம் மனதில் நிலைத்து கொண்டு இருக்கிறார் ,இருந்தாலும் ஒரு சிறிய வருத்தம்
Shivaji sir is one of the greatest actors the world has ever seen.
I agree with Sunder there are at least 30 - 40 old classic Shivaji movies that could be digitalised and re-released as Karnan. This will make the younger generation aware of the great acting skills this great actor possessed.
Cheers
Dev.
நடிப்பின் பல்கலைகழகம் சிவாஜி ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நமது தளத்திற்கு முதல் நன்றி!
-
எல்லாவிதமான உணர்ச்சிகளையும் முகபாவனைகளில் வெளிப்படுத்தும் திறமை ஐயாவிற்கு உண்டு….சமீபத்தில் மெருகூட்டப்பட்டு வெளிவந்த "கர்ணன்" திரைப்படத்தில் சிவாஜி அவர்களின் நடிப்பாற்றலை திரையில் கண்டு பிரமித்துப் போனேன்…! என்ன ஒரு நடிப்பு !! இவருக்கு தேசிய விருது வழங்காததால் "தேசிய விருது" ஒரு மணிமகுடத்தை இழந்துவிட்டது….!
-
நம் தலைவர் சிவாஜி அவர்களின் மீது வைத்துள்ள அன்பு நாடறிந்தது…விஜய் தொலைக்காட்சியில் சென்ற வருடம் தலைவருக்கு "செவாலியே சிவாஜி கணேசன்" நினைவு விருது வழங்கப்பட்ட போது தலைவர் சிவாஜி ஐயாவை பற்றி நினைவு கூர்ந்து, நெகிழ்ந்து கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது..!
-
"கடமையஈச் செய்; பலனை எதிர்பார் "
-
விஜய் ஆனந்த்
படையப்பா திரைப்பட சமயத்தில் தலைவருக்கும் திரு.சிவாஜி அவர்களுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்கள் சம்பவங்கள் பற்றி தெரிந்தால் அது பற்றி ஒரு தனிப் பதிவு எழுதவும்
நன்றி
சிவாஜி சார் நடிப்பில் இமயத்திற்கே இமயம்!! அவரை பற்றி பேச கூட எனக்கு தகுதியும் வயதும் அனுபவமும் இல்லை!! வாங்குகிறேன்
nadippukku ilakkanam vaguththaa maameydhai thiru sivaji ganesan avargal ivvulai vittu maraiyalaam aanaal makkalin idhaya simmaasanaththil avar enrendrum vaalvaangu vaalndhu kondu dhaan iruppaar - avarai pol oru eedu inaiyattra kalaignan pirandhadhumillai ini pirakka povadhum illai - nadippulagin sakkaravarththi enrendrum SIVAJI avargal mattumey!!!
GREAT SIVAJI SIR….!!!!!!!!! HATS OFF…..!!!!!!!!!
தலைவர் ஸ்டைலில் சொன்னால் "ஹாட்ஸ் ஆப் சிவாஜி சார்"..
வாழ்க அவரது புகழ்..