









You Are Here: Home » Featured, Happenings » “ரஜினி சாரை ஒரு ரசிகனாக நேரில் சந்திக்க காத்திருக்கிறேன்” - கமர்ஷியல் கிங் ராஜமௌலி நெகிழ்ச்சி!
ஏற்கனவே பல சூப்பர் ஹிட் படங்களை பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி கொடுத்திருந்தாலும், ‘நான் ஈ’ என்கிற ஒரே படம் அவரை எங்கோ கொண்டுசென்றுவிட்டது. படம் குறித்து நமது கணிப்பு மிகவும் சரியாகிவிட்டது. தற்போது எந்த பத்திரிக்கை எடுத்தாலும் ‘நான் ஈ’ புராணம் தான்.
புதுமை, கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, திறமை, கான்சன்ட்ரேஷன், தன்னம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேல் அடக்கம் — இது தான் ராஜமௌளியின் சக்சஸ் ஃபார்முலா.
இவரது முதல் படம் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து இயக்கிய ஸ்டூடண்ட் நெ.1. படம் தாறுமாறு ஹிட். அதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்த ஜூனியர் என்.டி.ஆரால் அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒரு பிளாக்பஸ்டருக்காக ராஜமவுலியை நாடிவந்தார். அப்போது ராஜ மௌலி இயக்கிய படம் ‘சிம்மாத்ரி’. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியின் மூலம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
புதுமை, கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, திறமை, கான்சன்ட்ரேஷன், தன்னம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேல் அடக்கம் — இது தான் ராஜமௌளியின் சக்சஸ் ஃபார்முலா.
இவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே பிளாக் பஸ்டர் ஹிட் ரகம் தான் என்பது ஒரு மிகப் பெரிய ஆச்சரியம்.
‘மஹதீரா’ வெற்றியின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நேரம் இவர் ஒரு விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது. மாஸ் மசாலா ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ரவிதேஜா, ராம்சரண் தேஜா என்று முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து இவரால் ஹிட் கொடுக்கமுடியும் அதை வைத்தே இவரது வண்டி ஓடுகிறது. இவரது படங்கள் ஓடுவது இவரால் அல்ல என்பது போன்ற விமர்சனங்களை சந்தித்தார் ராஜமௌலி.
இப்படியொரு விமர்சனம் கிளம்பியதுமே அப்படி விமர்சித்தவர்களை திட்டாமல், தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள முடிவெடுத்தார். அங்கு தான் ராஜமௌலி உண்மையில் ஜெயித்தார். “உண்மையில் ஹீரோக்களால்தான் தான் ஜெயிக்கிறோமோ?” என்கிற சந்தேகம் அவருக்கே வந்திருக்கும் போல. மாஸ் ஹீரோக்களே இன்றி ஏன் நம்மால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
இப்படியொரு விமர்சனம் கிளம்பியதுமே அப்படி விமர்சித்தவர்களை திட்டாமல், தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள முடிவெடுத்தார். அங்கு தான் ராஜ மௌலி உண்மையில் ஜெயித்தார்.
சிந்தனைக்கு வடிவம் கொடுத்தார். இதோ ‘நான் ஈ’ கொடி கட்டி பறக்கிறது. கோடிகளை அள்ளுகிறது. இந்தியாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனர் என்கிற பெயரை தட்டி சென்றுவிட்டார் ராஜமௌலி.
தற்போது தனக்கு விழும் புகழ் மாலைகளை எல்லாம், அடக்கத்துடன் எதிர்கொள்கிறார். படம் தான் ஹிட்டாகிவிட்டதே நமக்கு என்ன என்று நினைக்காது, படத்தின் சக்சஸ் டூரில் பங்கேற்று ரசிகர்களை, படத்தை வாங்கியவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
தற்போது இவரது அடுத்த ப்ராஜக்ட் பற்றிய எதிர்பார்ப்பு முன்னெப்போதையும் விட இந்தியா முழுதும் ஏன் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ளது. அதை நன்கு புரிந்து வைத்திருக்கும் ராஜமௌலி, மகாபாரதத்தை கையிலெடுத்திருக்கிறார். புத்தம் புது பொலிவுடன் மகாபாரதத்தை ஒரு திரைப்படமாக தருவது தான் இவரது திட்டமாம். ஆனால் அதற்கு நிறைய வருடங்கள் அவகாசம் தேவை என்று கருதுகிறார்.
சரி.. ஓகே. ஆனந்த விகடன் இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி கூறியிருப்பதை படியுங்கள்…
கேள்வி : தமிழில் பிடித்த ஹீரோ யார்?
ராஜமௌலி : “வேற யார். ரஜினி சார் தான். எனக்கு அவரை ஒரு ரசிகனா சந்திக்கனும்னு ரொம்ப நாள் ஆசை. ஒரு நிகழ்ச்சியில அவரை பார்த்தேன். பேசலாம்னு நினைச்சப்போ அவரை சுத்தி கூட்டம் கூடிருச்சு. தயங்கிப் பின் வாங்கிட்டேன். ‘மஹதீரா’ பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டார். ”பெண்டாஸ்டிக் வொர்க் ராஜமௌலி”னு தட்டிக்கொடுத்தார். நான் பார்த்துப் பார்த்து சிலாகிக்கிற ஆர்டிஸ்ட். அவர் பாராட்டினதுல எனக்கு தலைகால் புரியலே. இன்னும் வானத்துல மிதந்துட்டு தான் இருக்கேன்.”
[END]
Iam looking forward for this combination
Friends,
Thalivar+ராஜமௌலி +Thaman How s this combination?
lets wait & see
kalakkal mouli…. Thalaivare Vaalthitaare OSCAR i vida periya viruthu athu….