You Are Here: Home » Featured, Happenings » அத்வானியை கவர்ந்த ரஜினியின் ‘பன்ச்’தந்திரம்!

ரூபா பப்ளிகேஷன்ஸ் என்ற தேசிய புத்தக பதிப்பாளர்கள் ரஜினியின் பன்ச்தந்திரம் நூலை டேக் ஓவர் செய்ததிலிருந்து, அந்நூல் மேலும் பல சிகரங்களை தொட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு தான் கீழே நாம் பார்க்கப்போவது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.எல்.கே. அத்வானி, ரஜினியின் பன்ச்தந்திரம் நூல் தம்மை கவர்ந்ததை பற்றி தனது பிளாக்கான http://blog.lkadvani.in/ ல் எழுதியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அத்வானி அவர்களுக்கும் ஏற்கனவே சிறந்த நட்புறவு இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அத்வானி அவர்களின் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, ரஜினி கலந்துகொண்டு நூலை வெளியிட்டது நினைவிருக்கலாம். அதே போல, சட்டமன்ற தேர்தலின் போது சென்னை வந்திருந்த  பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரியும் சூப்பர் ஸ்டாரை சந்தித்து பேசியது நினைவிருக்கலாம்.

சரி… ரஜினியின் பன்ச்தந்திரம் நூலைப் பற்றி அத்வானி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்….

——————————————————————————————————

புத்தகங்கள் மீது எனக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் பிரியம் பற்றி தெரிந்திருக்கும் எனது நட்பும் சுற்றமும், என்ன மாதிரியான புத்தகங்களை நான் விரும்பி படிக்கிறேன் என்று அடிக்கடி என்னிடம் கேட்பார்கள். ஒரு காலகட்டத்தில் மென்மையான புத்தகங்களையே நான் விரும்பி படித்துவந்தேன். அதற்கு பிறகு திரில்லர் வகை நூல்களை படிப்பது பிடித்துப்போனது.

ஆனால், இப்போது என்னை கேட்டால் என்ன சொல்வேன் தெரியுமா? சுயமுன்னேற்ற புத்தகங்கள் தான்.

நான் கராச்சியில் இருந்த டீன் ஏஜ் காலகட்டங்கில், என்னுடைய ஆர்.எஸ்.எஸ். குரு, ஸ்ரீ ராஜ்பால் எனக்கு டேல் கார்னகியின் How to win Friends and Influence People என்ற அற்புதமான ஒரு புத்தகத்தை பரிசாக தந்து படிக்கச் சொன்னது நினைவிருக்கிறது. அது தான் நான் படித்த முதல் சுய முன்னேற்ற நூல். அந்த வயதில் என்னை அந்த நூல் மிகவும் கவர்ந்தது. அந்நூலில் டேல் கார்னகி குறிப்பிட்ட பல சம்பவங்களை என் நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் நான் பயன்படுத்துவேன். எனக்கு அது பெருமையாக இருக்கும்.

அதற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஸ்டீபன் ஆர்.கோவே. சில வாரங்களுக்கு முன்னர் தான் அவர் காலமானார். அவருடைய புகழ்பெற்ற புத்தகம், The Seven Habits of Highly Effective People 38 மொழிகளில் 25 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்த புத்தகம் அது. அந்த புத்தகத்தின் அபார பாப்புலாரிட்டிக்கு காரணம் character ethic மற்றும் personality ethic இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அது நன்கு எடுத்துரைத்தது தான்.

இந்த வாரம், ரூபா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து (எனது சுயசரிதையை வெளியிட்டவர்களும் இவர்கள் தான்) எனக்கு ஒரு நூல் வந்தது. சுயமுன்னேற்றம் பற்றிய நூல் அது. அதுவும், ஒரு முன்னணி தமிழ் நடிகரை மையமாகவைத்து.

124 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் பெயர் RAJINI’S PUNCHTANTRA. நூலின் பெயரை படிக்கும்போது PUNCHTANTRA என்ற வார்த்தையில் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்துவிட்டார்களோ என்று நினைக்கவேண்டாம். உண்மையில் அதை வேண்டுமென்று தான் செய்திருக்கிறார்கள். அது மிகவும் பொருத்தமாக இருப்பதால். ரஜினிகாந்த் தனது படங்களில் பேசிய முப்பது பன்ச் டயலாக்குகள் பற்றிய அலசல் இந்த நூல். அந்த டயலாக்குகளில் இருந்து நாம் பெறக்கூடிய பிசினஸ் மற்றும் நிர்வாகவியல் பாடங்களை அழகாக விளக்கியிருக்கிறார்கள்.

இந்த நூலின் சப்டைட்டில் என்ன தெரியுமா? ‘பிசினஸ் மற்றும் வாழ்க்கை நிர்வாகம், ரஜினியின் வழியில்’ என்பது தான். நூலாசிரியர் பி.சி.பாலசுப்ரமணியம், மேட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர். மற்றொரு ஆசிரியர் கிட்டி என்கிற ராஜா கிருஷ்ணமூர்த்தி டாலேன்ட் மாக்சிமஸ் என்ற மனித வள சேவைகள் அளிக்கும் நிறுவனத்தின் இயக்குனர். இந்த துறையில் அவருக்கு 33 வருடங்கள் அனுபவம் இருக்கிறது.

எல்.கே.அத்வானி,
புது டில்லி,
29, ஜூலை 2012

_________________________________________________________________
முன்னாள் துணைப் பிரதமரும், தேசிய கட்சி ஒன்றின் மிக பிரபலமான தலைவருமான திரு.எல்.கே.அத்வானி அவர்கள் ரஜினியின் பன்ச்தந்திரம் நூலை பற்றி கூறியிருக்கும் இந்த வார்த்தைகள் உண்மையில், மிக மிக பெருமையான விஷயம். ரூபா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாருக்கும், நூலாசிரியர்கள் திரு.பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நூலுக்கு இன்னும் பல சிறப்புகள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

URL of LK ADVANI’S BLOG ARTICLE ON RAJINI’S PUNCHTANTRA :
http://blog.lkadvani.in/blog-in-english/character-ethic-versus-personality-ethic
_________________________________________________________________

Also check, today’s Deccan Chronicle news:
All praise for Rajinikanth
http://www.deccanchronicle.com/tabloid/chennai/all-praise-rajinikanth-991

[END]

11 Responses to “அத்வானியை கவர்ந்த ரஜினியின் ‘பன்ச்’தந்திரம்!”

  1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Ini north india la Rajini joke pathila punch dialogue kalakum.
    Nama site a padikati antha naal mulumai perathu. Thanks sundar anna for your efforts, time spending for us. Thalaivar fans ku oru palama irukinga. Ungal sevaiyai thodaravum..

  2. kumaran kumaran says:

    இந்த நூலை நான் இன்னும் படிக்காமல் இருப்பது guilty ஆக உள்ளது.

    —————————————————-
    You can order online @
    http://www.landmarkonthenet.com/rajinis-punchtantra-business-life-management-by-p-c-balasubramanian-books-9788129119995-22254935/

    http://www.flipkart.com/rajini-s-punchtantra-8129119994/p/9788129119995?pid=9788129119995&ref=4374379f-9403-4dc2-b11a-1007d76132a3

    For those who are in abroad, can order through Amazon.com
    http://www.amazon.com/Rajinis-Punchtantra-Business-Management-Rajinikanth/dp/8129119994/ref=sr_1_11?s=books&ie=UTF8&qid=1343976198&sr=1-11&keywords=rajini

    Discounted price in booking online.

    thanks.
    - Sundar

  3. harisivaji harisivaji says:

    பழைய கமெண்ட் முறையை மீண்டும் கொண்டுவந்துடீங்க ??
    there is an article regarding this in Deccan CHronicle

    ————————————-
    That comment system swallowing some comments and doesn’t imports comments properly. Have to instal someother plug-ins.
    Ya… i saw that. Will attach shortly.
    - Sundar

  4. Sankaranarayanan Sankaranarayanan says:

    நல்ல ஒரு விமர்சனம் நல்ல ஒரு மனிதரிடம் இருந்து நல்ல நம் தலைவர் பற்றிய நல்ல ஒரு நூலிற்கு கிடைத்துள்ள இந்த அங்கிகாரம் சிறந்த இந்த இரு ஆசிரியர்களுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு.

  5. Sakthi Vinayagam Sakthi Vinayagam says:

    புத்தகத்தின் தமிழ் பதிப்பின் விலை என்ன ?????

    ———————————————————
    Rs.80/-
    You can buy Tamil version at https://www.nhm.in/shop/978-81-849-3574-5.html
    - Sundar

  6. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

    சூப்பர் :) :) :)
    ரஜினி என்றாலே வெற்றி என்று தான் அர்த்தம்!! அது எந்த துறையாக இருந்தாலும் சரி!! பாலா சார்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படி ஒரு புத்தகத்தை உருவாக்கி தலைவருக்கும், ரசிகர்களுக்கும் நல்ல முறையில் பெருமை தந்துள்ளார்!! இளம் தலைமுறையினருக்கு நல் வழி காட்டியுள்ளார்!! அவருடைய சேவை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் :) :)
    பாகம் 2 வருவதற்கு ஏதாவது வாய்ப்புகள் உண்டா??

  7. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    ஒரு நல்ல மனிதரிடமிருந்து இன்னொரு நல்ல மனிதரைப் பற்றிய நல்ல ஒரு நூலிற்கு கிடைத்துள்ள இந்த அங்கிகாரம் சிறந்த இந்த இரு ஆசிரியர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்..
    நன்றி பாலா சார் , கிட்டி சார் மற்றும் ரூபா பப்ளிகேஷன்ஸ் …

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  8. murugan murugan says:

    மரியாதை தானாக கிடைப்பது தலைவருக்கு மட்டும் தான் !!!
    திரு அத்வானி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் !!!

  9. RAJA RAJA says:

    திரு அத்வானி அவர்களே உங்கள் பி ஜே பி யில் இப்பொழுது சரியான பிரதமர் வேட்பாளர் இல்லை என்று நீங்களே சொல்லி விடீர்கள் எங்கள் தலைவர் சிவாஜியில் சொன்னது போல் கண்ணா நான் P .ம நு எங்க தலைவரை பேசாம பிரதமர் ஆகிடுங்க

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates