









You Are Here: Home » Featured, Rajini Lead » “கடலளவு இருந்தாலும் மயங்கமாட்டார். அதுவே கையளவே ஆனாலும் கலங்கமாட்டார்” - ரஜினி பற்றி அவரது நெருங்கிய நண்பர்! - Friendship Day Special 1
ஆகஸ்ட் 5 - இன்று நண்பர்கள் தினம்.
நட்புக்கும் நண்பர்களுக்கும் சூப்பர் ஸ்டார் அளித்துவரும் முக்கியத்துவம் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்றைக்கு அவருடன் இருப்பவர்கள் அனைவரும் அவரது ஆரம்ப காலகட்டங்களில் அவருடன் இருந்தவர்களே. அதாவது ரஜினியுடன் அல்ல. சிவாஜி ராவுடன்.
நண்பர்கள் தினத்துக்கு பொருத்தமாக அதே சமயம் நறுக்கென்று விஷயத்தை சொல்வது போல ஒரு பதிவை அளிக்கவேண்டும் என்று விரும்பியபோது கண்ணில் பட்டது தான் இன்றைய பதிவாக மாறியிருக்கிறது.
சமாதனா வெங்கட ஜெகனாத வேணுகோபால் விட்டல் பிரசாத் ராவ். இவ்வளவு நீளமான பேருக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரும், படையப்பா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான விட்டல் தான். தனது ஆரம்பகால நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம் தான் ‘படையப்பா’. அவரது நண்பர்களுள் ஒருவர் தான் இந்த விட்டல்.
இவர் வள்ளி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஸ்டாருடன் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் பிலிம் இன்ஸ்டிட்ட்யூட் நண்பர்களில் ஒருவர்.
1999 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு ரஜினியுடனான தனது நட்பை பற்றியும், நண்பனாக இருந்த தன்னை தயாரிப்பாளர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது பற்றியும் திரு.விட்டல் அளித்த பேட்டி ஒன்றிலிருந்து…
“1973 ல் ஃப்லிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் நான் நடிப்பு கோர்ஸ் படிச்சிக்கிட்டுருந்தேன். ரஜினி அப்போ அங்கே படிச்சிக்கிட்டுருந்தார். நானும் அவரும் ஆனா வேற வேற பேட்ச். அப்போப்போ ஹலோ சொல்லிக்குவோம். லைட்டா ஒரு ஹை. அவ்ளோ தான். கோர்ஸ் முடிஞ்சதும் அவர் ஊருக்கு போய்ட்டார். நான் இங்கே வேலை தேடிகிட்டுருந்தேன்.
அந்த நேரத்துல தான் பாலச்சந்தர் சார் அபூர்வ ராகங்கம் படத்துல ரஜினியை புக் பண்ணியிருந்தார். அந்தப் பட ஷூட்டிங்கிற்காக தன்னோட கண்டக்டர் வேலையை ராஜினாமா செஞ்சிட்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் பல இடங்கள்ல தங்கியிருந்தாரு. எந்த இடமும் செட் ஆகலை. கடைசீல ராயப்பேட்டையில எங்க வீட்டுல மாடியில தங்கினாரு. ஏதோ என்னால முடிஞ்சா அளவுக்கு உதவியா இருந்தேன்.
நான் அப்பா என்னோட அப்பா அம்மாவோட இருந்தேன். எனக்கு கல்யாணமும் ஆகலை. எனக்கு யாரும் பொண்ணு கொடுக்கவும் முன்வரலே. ஏன்னா சினிமாக்காரன்னாலே ஊதாரிப்பயன்னு நினைச்சிட்டாங்க. ரஜினி நடிச்ச ‘அபூர்வ ராகனங்கள்’ முதல் அடுத்தடுத்து ஒன்னு ரெண்டு படங்கள் ரிலீசாக ஆரம்பிச்சது. “ஏய்… இங்க பாருடா… விட்டல் வீட்டுல தங்கியிருந்தவரு சினிமா நடிகராயிட்டாரு”ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. ரஜினி முகமும் கொஞ்சம் கொஞ்சமா வெளியே தெரிய ஆரம்பிச்சது.
என் மனசுல பட்டதை மறக்காம சொல்லனும்னா, ரஜினி இந்தளவுக்கு பாப்புலரா வருவாருன்னு அப்போ நினைக்கவேயில்லே. ஏன்ன நடிகர்னாலே சிவப்புத் தோலும், வட்ட முகமும், படிச்யச் சீவிய தலைமுடி, அப்படின்னு தகுதி வெச்சிருந்தாங்க. இவரு அதுல எல்லாத்துலயும் நேர்மாறா இருந்தாரு. ஆனாலும் நேர்மையா இருப்பாருன்னு நினைச்சித் தான் அவரை சூப்பர் ஸ்டாரா உயர்த்தியிருக்காங்க. அதுநாள் தமிழக மக்களுக்கு என்னைப் போன்றவர்கள் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ரஜினி புகழை நோக்கி போன பிறகு தான் சினிமாகாரனான எனக்கு பொண்ணை கொடுக்கலாம்னு நினைச்சி பொண்ணு கொடுத்தாங்க. அந்த விதத்துல நான் ரஜினிக்கு நன்றி சொல்லணும். இன்னைக்கு என் குடும்பம் நல்லாயிருக்குன்னா அதுக்கு காரணம் ரஜினி தான்.
நம்ம கையில் 10,000 ரூபாய் இருந்தா தலை கால் தெரியாம ஆடுறோம். கையில 10 காசு இல்லாட்டி தலையே இல்லாதது போல முடங்கி போய் உட்கார்ந்திருப்போம். ஆனா ரஜினியோ கவியரசு கண்ணதாசன் சொன்னமாதிரி, ‘கடலளவு இருந்தாலும் மயங்கமாட்டார். அதுவே கையளவே ஆனாலும் கலங்கமாட்டார்.’ எப்பவும் மாறாத புன்சிரிப்பு அவர் கூடவே இருக்கும். இது தான் தெய்வ கடாட்சம்னு சொல்றது.
நண்பன், உடன்பிறவா சகோதரன், அந்த நிலையிலிருந்து தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். ஒரு தயாரிப்பாளராக இருந்து என்ன பங்களிப்பு செய்ய முடியுமோ அதை ஆத்மா திருப்தியுடன் இந்த படையப்பா படத்துக்காக செஞ்சிகிட்ட்ருக்கேன். வரும் தமிழ்புத்தாண்டு அன்று படையப்பாவின் பலம் தெரியும்” என்றார் விட்டல்.
HAPPY FRIENDSHIP DAY
[END]
Natpuku ilakanam nam Thalaivar thaan. evalo visayam Thalaivar pathi collect panirukinga , great na . Happy friendship day to all. Anna
Kuselan audio release event la ivara thana Thalaivar friend nu introduce pannar?
வரும் தமிழ்புத்தாண்டு அன்று படையப்பாவின் பலம் தெரியும்” என்றார் விட்டல்.////
நெறையபேர் படம் வரதுக்கு முன்னாடி அது இது அளந்து உடுவாங்க ….ஆனா சிம்ப்ள பலம் தெரியும் சொல்லிருக்கார்
அந்த படம் ஏற்படுத்திய அதிர்வு பத்து வருடங்கள் மேல் ஆனாலும் அடங்கல
தலைவர் ரசிகர்களுக்கு அது படத்துக்கு மேல்
திரு விட்டல்…வெளிபடையா இது ரஜினி காரணம் என்று சொல்றார் அதுவே அவர் எபேர்பட்ட நண்பர் என்பதை சொல்லுது
வரும் தமிழ்புத்தாண்டு அன்று படையப்பாவின் பலம் தெரியும்” என்றார் விட்டல். இந்த அடக்கம் தான் எல்லா விதத்திலும் வெற்றிகளை தருகிறது.
இனிய நண்பர்கள் தின நல வாழத்துக்கள் சுந்தர்ஜி. உங்களுக்கும் நம் தள நண்பர்களுக்கும்..
தலைவர் நண்பர்களை எவ்வளவு மதிக்கிறார் என்பது நமக்கு தெரியும் ,அதை விட தலைவரின் நண்பர்கள் எப்படி இருகிறார்கள் என்பது முக்கியம் ,ஏன் என்றால் தலைவரின் ஆரம்ப கால நண்பர்கள் திரு ராஜ் பகதூர் ,விட்டால் அவர்கள் எல்லோருமே தலைவரிடத்தில் மிக அன்பு வைத்துள்ளார்கள் ,ஆனால் தலைவர் பெயரை ஒரு போதும் எங்கும் தவறாக பயன்படுத்தியதில்லை இதுவே தலைவருக்கு பெரிய நிம்மதி வாழ்க அவர்கள் நட்பு
அட நடந்து வர்ற ஸ்டைல பாருங்க……….