









You Are Here: Home » Featured, Moral Stories » பலியாடுகளும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்களும் - நினைத்தேன் எழுதுகிறேன் - 4 (Friendship Day Special 2)
நட்புக்குரிய இலக்கணமே இன்னைக்கு மாறிப்போச்சுங்க. டாஸ்மாக்ல ஒண்ணா உட்கார்ந்து தண்ணியடிக்கிறதும், மாமூ மச்சின்னு கூப்பிட்டுக்கிறதும், சமூக வலைத்தளங்களில் நம்மளை TAG பண்றதும் தான் நட்பு அப்படின்னு நிறைய பேர் நினைச்சிகிட்டிருக்காங்க. வலையுலகையும் தாண்டி நிஜ உலகம்னு ஒன்னு இருக்கு அப்படிங்கிறது நிறைய பேருக்கு இப்போ தெரியலே. தெரிஞ்சிக்கவும் அவங்க விரும்பலே. ஆனா காலம் தெரிஞ்சிக்கவும் புரிஞ்சிக்கவும் வைக்கும். இது ஆண்டவன் மேல ஆணை.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் எந்தளவு எச்சரிக்கையுடன் இருக்கிறோமோ அதே அளவு நட்பை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையா இருக்கணும்.
பல்லிளிக்கிறவன் எல்லாம் நண்பன் நினைச்சு அவனை நோக்கி ஓடுனா, கடைசீயில நீங்க நிக்கிற இடம் சுடுகாடா தான் இருக்கும்.
சரியான நட்பை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி என்னோட குரு திருவள்ளுவர் ‘நட்பாராய்தல்’ அப்படின்னு ஒரு தனி அதிகாரமே கொடுத்திருக்கிறார். அதை படிச்சா ஓரளவு நட்பை தேர்ந்தெடுப்பது பற்றி புரியும். எல்லாத்தையும் கடைபிடிக்க முடியலேன்னாலும் ஒரு சிலதை நிச்சயம் நம்மால் கடைபிடிக்க முடியும்.
(நட்பின் ஆழம் பள்ளத்தில் விழும்போது தெரியும். https://twitter.com/naiyandi)
நம்மில் நிறைய பேர் ஒரு புது நட்பை தேர்ந்தெடுக்கிறது எதை அடிப்படையா வெச்சின்னு பார்த்தீங்கன்னா புகழ்ச்சியை அடிப்படையா வெச்சி தான் அது இருக்கும். ஆனால் அது சரியான முறையா? மனித மனம் புகழ்ச்சிக்கு ஏங்கும் ஒரு பலவீனங்க. ஒருத்தரு நம்மளை புகழ்ந்து நாலு வார்த்தை பேசிட்டா போதும். நமக்கு தலை கால் புரிவதில்லே. காதலியோ அல்லது மனைவி கிட்டேயோ கூட ஷேர் பண்ணிக்காத விஷயங்களை எல்லாம் அவங்க கிட்டே ஷேர் பண்ண ஆரம்பிச்சிடுவோம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க… வாழ்க்கையில் நீங்க கண்ணீர் சிந்திய பல தருணங்கள் இது போல உங்களை ஒரு காலத்தில் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தவர்களால் தான் இருக்கும்.
லேனா தமிழ்வாணன் சாரோட ஒரு பக்க கட்டுரைகள் தொகுப்பை நான் இப்போ படிச்சிட்டு வர்றேன். அதுல படிச்ச ஒரு விஷயத்தை உங்க கிட்டே பகிர்ந்துக்குறேன். உங்களில் நிறைய பேர் கண்ணை இது திறக்கும்னு நம்புறேன். என்னோட கண்களை திறந்த மாதிரி.
- லேனா தமிழ்வாணன்
அழகாகப் பாராட்டித் தான் ஒருத்தியின் காதலைப் பெறுகிறான் ஒருவன். ஒரு குழந்தையை கூட அதன் செயலை பாராட்டி தான் நாம் நம் காரியத்தை சாதித்துக் கொள்ளமுடிகிறது. அம்மாவைப் பாராட்டித்தான் தன் சிறுசிறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார் அப்பா.
பாராட்டு என்பது ஒரு மாயவலை. அதில் சிக்காதவர்கள் என்று விதிவிலக்காக ஒருவர் கூட இருக்க முடியாது. முற்றும் துறந்த முனிவர் உட்பட.
“இவருக்கு பாராட்டினால் கட்டோடு பிடிக்காது” என்று ஒருவரையும் உதாரணம் காட்ட முடியாது. அப்படி யாராவது கிடைத்தால், “இது ஒரு அபூh;வமான பண்பு சார்!” என்று அவரைப் பாராட்டுங்கள். அவ்வளவு தான்! அந்த மனிதர் ‘தடால்’ என்று விழுந்து விடுவார்.
ஒரு மனிதனுக்குப் பாராட்டுத் தேவைதான். அது அளவான ‘டோஸ்’ வரை கிடைத்தால் போதுமானது. அளவுக்கு மீறுகிற போதும், தகுதியற்ற பாராட்டை நாம் எதிர்பார்க்கிற போதும் நமக்கே அது வினையாகி விடுகிறது.
ஓன்று மட்டும் உறுதி. நம்மைப் பாராட்டுகிறவர்கள் 100க்கு 90 பேர் காரியவாதிகளே. எனவே கவனம் தேவை.
விளக்கொளிக்கு ஆசைப்படுகிற விட்டில்பூச்சி அதிலேயே உயிரை விடுவதைப் போல, கவர்ச்சி மிகுந்த இந்தப் பாராட்டு நம்மைக் கவிழ்த்து விடவும் செய்கிறது. பாராட்டு என்பது விண்ணப்ப மனு. இவற்றை வாங்கிப் போடப் போடப் பலருக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாகி விடுகிறோம்.
இத்தனைக் காலமாய்ப் பாராட்டை ஒரு தூண்டுதல் கண்ணோட்டத்திலும் உற்சாகம் தரும் விஷயமாகவே சிந்தித்துப் பார்த்திருக்கிறோம். இது ஒரு மகாப் பலவீனம் என்று எண்ணிப் பார்த்தது இல்லை. இனி நம் கண்ணோட்டம் மாறட்டும். கவனம் சேரட்டும்.
பலிகடா, வெட்டப்படுவதற்கு முன்பு, குளிப்பாட்டப்படுகிறது. மஞ்சள் பூசப்படகிறது. குங்குமம் தடவப்படுகிறது. மாலையிடப்படுகிறது. கடா நினைக்கிறது, ‘ஆகா! நமக்குத்தான் இந்த மனிதர்கள் எப்படிப்பட்ட சிறப்பைச் செய்கிறார்கள் என்று. இத்தகைய பேதமை தான், பாராட்டைக் கேட்டு நாம் உருகிப் போவதும்!
- லேனா தமிழ்வாணன்
———————————————————————————-
இதை அனுதாபம் தேடுறதுக்கோ பரபரப்புக்கோ சொல்லலே. அப்படி சொல்லனும்னா நிறைய விஷயம் என்கிட்டே இருக்கு. எனக்கு நேர்ந்த இந்த அனுபவம் உங்களுக்கு ஒரு பெரிய பாடமாக அமையும் என்று எண்ணி தான் இதை சொல்கிறேன். தலைவர் சொன்ன மாதிரி நமக்கு உண்மையான எதிரி நாம தான். நம்ம செயல்கள் தான் அப்படின்னு நீங்க தெரிஞ்சிக்கணும். அது தான் என் நோக்கம்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (குறள் 792:)
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
———————————————————————————-
Also check
கொஞ்சம் உண்மை + கொஞ்சம் நம்பிக்கை = மாபெரும் நிகழ்வு! – நினைத்தேன் எழுதுகிறேன் – 3
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14089
[END]
தலைவர் சொன்னது போல
உன் வாழ்கை உன் கையில்;
நம்மை பற்றி நமக்கு தெரியும் ஒருவன் புகழும் போது எது அளவுக்கு நாம் இந்த புகழ்ச்சிக்கு தகுதியானவன் என்று சற்று யோசித்தோம் என்றால் விழித்துக்கொள்வோம்.
எப்பவோ தலைவர் பாட்ஷாவுல சொல்லிட்டாரு : என்னக்கி ஒருதான் ரொம்ப புகழ்ரானோ,,அன்னைக்கே புரிஞ்ச்கனும் அவன் கூடிய சீக்கிரம் குழிபறிக்க போறான் என்று.
மிக சரியான பதில் அண்ணா!!
Really true….Hats off for presenting such a nice article! Words by Leka Tamilvanan sir are a soul touching one…Time to introspect on ourselves …Thanks again.
Liked ur article very much. Thx for sharing
//பல்லிளிக்கிறவன் எல்லாம் நண்பன் நினைச்சு அவனை நோக்கி ஓடுனா, கடைசீயில நீங்க நிக்கிற இடம் சுடுகாடா தான் இருக்கும்.//
எல்லாம் அனுபவம் தான்..
எல்லோரும் அவசியமாக படிக்க கூடிய பதிவு இது!!! பாட்ஷாவில் “ஜனகராஜ்” சார் சொல்லுவாரு “ஒருத்தன ஜால்ரா அடிச்சே சாவடிசிருவீங்கலே
புகழும் போது முதுகுக்கு பின்னாடி பொய் புகழுங்க; தப்பு ஏதாவது இருந்த முகத்துக்கு முன்னாடி வந்து சொல்லுங்க” என்று !!! எத்தனை உண்மை இது !!! தலைவர் படத்தில் கூற படாத தர்மங்களே இல்லை!! படத்தை வெரும பார்க்காம அதில் சொல்லும் சில விஷயங்களை பின்பற்ற பாருங்கள்!!
Good post about choosing friends.
அருமையான கட்டுரை !!!
பகிர்வுக்கு மிக்க நன்றி !!!
வெளியில் நண்பர்களை தேடுவதற்கு முன் நம் வீட்டில் உள்ளவர்களோடு நட்புடன் இருக்கவேண்டும். பெற்றவர்களோடும் உறவினர்களோடும் பகைமை இருந்தால் அவனுக்கு நல்ல நண்பர்கள் இருந்தாலும் அவற்றால் எந்த பயனும் இல்லை. எனக்கு யாரும் வேண்டாம் நண்பர்கள் இருந்தால் போதும் என்று சொல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. முதலில் குடும்பத்தை நட்புடன் பார்த்துவிட்டு பிறகு நண்பர்களை தேடலாம்.
அருமையான கட்டுரை ,
திரு சுந்தர் அவர்களே ஏன் நமது தளத்தில் தினம் ஒரு திருக்குறள் விளக்கத்தோடு போட கூடாது,போட்டால் நன்றாக இருக்குமே
That is why thalaivar said in JAGUBAI POSTER
‘Iraiva nanbarkalidamirunthu ennai kapatru pagaivarkalai naan parthukolkiren’
சூப்பர் பதிவு. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான். ஆனா கைவிட்டுடுவான். இன்றைய தினத்தில் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
மிகவும் நல்ல பதிவு. இப்போ உலகமே (நான் உள்பட) - எழுபத்தைந்து சதவீதம் சுயநலமாகதாங்க இருக்கு, அதுக்கு என்ன செய்றது.
***
“முகஸ்துதி பாடரவங்களை இந்த பாட்ஷாவுக்கு பிடிக்காது”.
***
அதே சமயத்தில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மேன்மையான பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளலாம்.
***
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!
dot .
// நம்மைப் பாராட்டுகிறவர்கள் 100க்கு 90 பேர் காரியவாதிகளே. எனவே கவனம் தேவை.//
மிக சரி..
// தலைவர் சொன்ன மாதிரி நமக்கு உண்மையான எதிரி நாம தான். நம்ம செயல்கள் தான்//
அக்மார்க் உண்மை..
இதை தெரிந்தும் புரிந்தும் சில இடங்களில் சறுக்கி விழுகிறோம்..
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் எந்தளவு எச்சரிக்கையுடன் இருக்கிறோமோ அதே அளவு நட்பை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையா இருக்கணும்.
- Excellent Fact. Your writing skill is improving day by day. I guess I am one of the many who has been following your blog from the beginning. keep it up.
ரொம்ப நல்ல கருத்து சுந்தர். எனது கண்ணை திறந்ததற்கு மிக்க நன்றி. - பிரகாஷ்.
உத்தமர்களை மோசப்படுத்தி , பொல்லாத வழியிலே நடத்துகிறவன், தான் வெட்டின குழியில் தானே விழுவான் ; உத்தமர்களோ நன்மையை சுதந்தரிப்பார்கள்.
-நீதிமொழிகள் 28 :10
மிகச் சரியாக சொநீர்கள் சுந்தர் அண்ணா … காலம் அப்படி தான் இருக்கிறது.. என்ன செய்வது..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
\\வாழ்க்கையில் நீங்க கண்ணீர் சிந்திய பல தருணங்கள் இது போல உங்களை ஒரு காலத்தில் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தவர்களால் தான் இருக்கும்.\\
முற்றிலுமான உண்மை ஜி