









You Are Here: Home » Featured, Happenings » மனிதனின் அகம்பாவம் அடங்குவது எப்போது? சொன்னாங்க… சொன்னாங்க… (2)
கேள்வி: எம்.ஜி.ஆரின். இன்னும் மாறாத இவ்வளவு புகழுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள் ? (தேவி. சென்னை - 37).
வாலி : ஏழை எளியவர்களின் பங்காளனாக - மிகமிக வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஜனசமூகம் அவரை ஏற்றுக் கொண்டிருப்பதால் தான். அவர் - உண்மையிலேயே உழைக்கும் வர்க்கத்தோடு தான் அதிகம் உறவாடினார். ‘ஈ’ என்று வந்தோர்க்கெல்லாம் ஈந்தவர் அவர். நான் நேரில் கண்டதைத் தான் இங்கு எழுதுகிறேன்’
(விகடன் மேடையில் கவிஞர் வாலி கூறியது)
கேள்வி : உங்க ஒர்கிங் ஸ்டைல் என்ன?
எஸ்.எஸ்.ராஜமௌலி பதில் : என் மூணாவது படமான ‘சை’ ரக்பி விளையாட்டை மையமா வெச்சு பண்ண படம். எனக்கு ஒரு கொள்கை உண்டு. ஒரு படத்துக்கு எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணலாம். அது அந்த படத்தோட பிசினஸ்குள்ளே இருக்கணும். அந்தப் படத்துக்காக நான் ஷூட் பண்ண ஒரு சீன் எனக்கே பிடிக்கலே. திரும்ப ஷூட் பண்ணா பட்ஜெட் பிசினஸை தாண்டிடும். அதுக்காக அப்படியே அந்த சீனை வேக்கவும் மனசில்லே. என்ன பண்றது? தயாரிப்பாளர் கிட்டே போய், “25 லட்ச ரூபாய் கொடுங்க. அந்த சீனை திரும்ப எடுத்துடுறேன். என் சம்பளத்துல கழிச்சிக்கோங்க” அப்படின்னேன். அவர், “உங்க மேலே நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் பணத்தை கடனா தர்றேன். படம் ரிலீசாகி நான் போட்ட பணத்தை விட லாபம் தந்துச்சுன்னா அந்த 25 லட்ச ரூபாயை கழிக்கமாட்டேன். உங்க முழு சம்பளத்தையும் தருவேன்” அப்படினார். படம் ரிலீசாகி மூணே நாள்ல முழு சம்பளத்தையும் எனக்கு கொடுத்தார். அந்த 25 லட்ச ரூபாயை கழிக்காம. வொர்கிங் ஸ்டைல்னா என்ன? வேலை பார்த்துட்டே இருப்பேன். எனக்கு வேற எதுவும் தெரியாது.”
(கேள்வி பதில் ஒன்றில் ராஜமௌலி)
கும்பிடும்போது சில முறைகள் இருக்கின்றன.
இறைவனை நாம் கும்பிடும்போது இரு கைகளையும் இணைப்பது, பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை குறிப்பிடுவது.
* தெய்வங்கள், மகான்கள், சித்தர்கள், இவர்களை தலைக்கு மேல் கரங்கைள உயர்த்தி கும்பிட வேண்டும்.
* ஆசிரியரையும் குருவையும் கும்பிடும் போது, குவித்த கரங்கைள உயர்த்தி கும்பிட வேண்டும்.
* தாயை வயிற்றின் முன் கரம் கூப்பி வணங்க வேண்டும்.
* தந்தை, அரசன் இவர்கைள நம் வாய்க்கு நேராக கைகளை இணைத்து கும்பிடேவண்டும்.
* மற்றவர்கைள, நாம் நம் மார்பு கரம் சேர்த்து கும்பிடவேண்டும்.
சிதம்பரநாதன் @ vanavil7.blogspot.in
(நாம பொதுவா இடது கையை அந்த விஷயத்தை தவிர வீர எதுக்கும் யூஸ் பண்றதில்லே. ஆனா பார்த்தீங்கன்னா கோவிலுக்கு போய் ஆண்டவனோட சந்நிதியில் அவனை வணங்கும்போது ரெண்டு கைகளையும் சேர்த்து வெச்சு தான் வணங்குறோம். ஆண்டவன் முன்னாடி எல்லாரும் சமம் என்பதை உணர்த்த இதை விட ஒரு அருமையான விஷயம் வேண்டுமா என்ன? அடுத்து, சிதம்பரநாதன் யார் யாரை எப்படி கும்பிடவேண்டும்னு சொல்லியிருக்கிறார். அது கூட இதையும் சேர்த்துக்கலாம். “தகுதியற்றவர்களை கும்பிடவே கூடாது!”)
* எதையும் செய்துவிடும் சக்தி தனக்கு உண்டு என்று மனிதன் பெருமையடித்துக் கொள்ளும் நேரத்தில், கடவுள் அவனுடைய அகம்பாவத்தை அடக்கி விடுகிறார்.
* ஆணவக்காரர்களின் போற்றுதலுக்கும், தம்முடன் ஒன்றை விரும்பிப் பேரம் பேசுவோரின் பிரார்த்தனைக்கோ ஆண்டவன் ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை.
- மகாத்மா காந்தி கூறியதாக http://www.dinamalar.com/
என்ன ஏது என்று தெரியாமலேயே, வாழ்ந்து முடித்து விடும் அளவுக்கு - வாழ்க்கை ஒரு அற்ப விஷயமா? ஒரு ஜென்ம வாய்ப்பு அல்லவா? அதை நாம் உணருகிறோமா..? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நாம் இப்போது வாழும் வாழ்வில் - எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்…? அந்த விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தவையா..? பக்குவம் என்ற பெயரில், இன்று அதி முக்கியமாக இருக்கும் விஷயமே, சில வருடம் கழித்து - ஒன்றும் இல்லாத விஷயமாக தோன்றுகிறதே…? எது நமக்கு நிரந்தரம்..?
எண்ணங்கள் - எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர முடிகிறதா? சின்ன சின்ன விஷயங்களில் நம் ஆற்றல் வீணடிக்கிறோமே..! எத்தனை கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்வு , அதை ஒட்டிய நம் நேர விரயம், சக்தி விரயம்..! அவசரம், பதட்டம்..!
ரிஷி @ www.livingextra.com
….அதாவது நம்மில் பெரும்பாலனர்கள் வாங்கும் சம்பளமே போதும்! என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கவே மாட்டார்கள். காலம் முழுவதும் ஒரே நிலையில் இருந்து, அதே நிலையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வார்கள். எப்பப்பார்த்தாலும் பஞ்சப்பாட்டாகவே இருக்கும். இதை எப்படி கடந்து வருவது?
முதலில் நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு பொறுப்பில் இருக்கிறீர்கள், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு Certification / மேல் படிப்பை முடிக்க வேண்டியது இருக்கும். அப்படி என்றால், நாம் அந்தப் படிப்பை முடிக்க என்ன செய்யலாம் என்பதை யோசித்து அதை நோக்கி நமது திட்டங்களை வகுக்க வேண்டும்.
குண்டு சட்டியிலே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கக் கூடாது. குண்டு சட்டி குதிரை அப்படின்னா என்ன? என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.
இதற்கு முதல் எதிரி சோம்பேறித்தனம், முயற்சியின்மை. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காதுங்க… நாம ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், அதற்கு கடுமையா உழைக்கணும். நம்ம ஆளுங்க முயற்சியும் செய்ய மாட்டாங்க.. பணமும் நிறைய வேண்டும் என்பார்கள். இது எப்படிங்க நடக்கும்? அதிர்ஷ்டம் இருந்தால் நடக்கும் ஆனால், அது நிரந்தரம் அல்ல. எனவே எப்போதுமே ஒரு நிலையில் இருப்பதை தொடராமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி? என்பதை யோசித்து அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபடலாம். இப்பச் சொல்லுங்க ஆசை படுவதில் தவறில்லை தானே! அளவோடு ஆசைப்படுங்க.. அளவுக்கு மீறினால் என்ன ஆகும் என்பதை பல செய்திகளில் படித்து இருப்பீர்கள்.
கிரி @ www.giriblog.com/2012/07/middle-class-expenses-savings.html
————————————————————————————————-
படித்ததில் பிடித்தது
தவறுகளை விட சந்தேகத்துக்காக சிலுவை சுமந்தவர்கள் இந்த உலகில் அதிகம்!
twitter.com/tparavai
————————————————————————————————-
[END]
வாவ்.. ஆறு பகுதிகளுமே அருமை.. அதுவும் 3 4 6 சூப்பர்..
கீப் இட் அப்.. நாம் அனைவருமே அனுபவித்து அப்படியே நல்ல விதத்தில் நடந்து கொள்ள எதுவாக இருக்கும்..
சியர்ஸ்..
Thx for ur updates. Well said .
படித்ததை பகிர்ந்ததற்கு நன்றி சுந்தர் அண்ணா…. அனைத்தும் முத்துக்கள் ….
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
Thanks Sunder nice tidbits.
Dev.
அட்டகாசம்
Great collection thanks na. Thalaivar namala thalaiku mela kai koopi kumbudurar.
ஒவ்வொரு பதிவும் மிக அருமை. குரு வாரத்தில் நல்ல சிந்தனை தூண்டும் செய்திகளை தந்த எங்கள் சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி….
சூப்பர் ,,,,,,,,,
ரொம்பவே நல்லா இருந்தது இந்த பகுதி….அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் பற்றி வாலி அவர்கள் சொன்ன “‘ஈ’ என்று வந்தோர்க்கெல்லாம் ஈந்தவர் அவர்.” வரியை மிகவும் ரசிச்சேன்…தமிழ் என்னமா விளையாடுகிறது வாலியிடம்…!
-
இயக்குனர் ராஜமௌலி-யின் “வொர்கிங் ஸ்டைல்” புது “ஸ்டைல்”-ஆக உள்ளது,,கண்டிப்பா நல்லா “வொர்க்” ஆகும்..!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
-
விஜய் ஆனந்த்
அருமையான தகவல்கள் சுந்தர் ஜி !!!
ஒவ்வொன்றும் 100 % ஆணித்தரமான உண்மை !!!
மனிதனின் அகம்பாவம் அடங்குவதற்கு ஆன்மிகம் உதவியாக இருக்கிறது. ஆனால் கடவுளே இல்லை எல்லாமே மனித சக்தியால்தான் முடியும் என்று நினைத்தால் அகம்பாவமும் ஆணவமும் அடங்குவதற்கு வழியே இல்லை. காலம்தான் அந்த ஆணவத்தை அடக்கும். இதை புரிந்துகொண்டு கடவுளிடம் தன் வாழ்கையை ஒப்படைத்துவிட்டு ஒரு எளிய மனிதராக வாழ்ந்துகொண்டிருக்கிறார் நம் தலைவர். நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
சொன்னாங்க சொன்னாங்க - பயனுள்ள பகுதி. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
புரட்சி தலைவர் - நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும், நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும், ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் - உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும். ஊர் இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறது, இனிமேலும் சொல்லும்.
—————————————————-
///ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்///
ஸ்ரீராம், அருமையான பாடல். எத்தனை அர்த்தமுள்ள வரிகள். மனதை அப்படியே உருக்கி விட்டது. வாலியின் க்ரீடங்களில் ஒரு வைரம் இந்த பாடல். டி.எம்.எஸ்.க்கும் அப்படியே.
- சுந்தர்
Wat a crowd for MGR….!
//தவறுகளை விட சந்தேகத்துக்காக சிலுவை சுமந்தவர்கள் இந்த உலகில் அதிகம்!// சூப்பர்.
அருமையான வார்த்தைகள். அருமையான பதிவு .
Hi Sundar, This is something interesting and more informative.Great work.
அனைத்தும் அருமையாக உள்ளது.. நமது தளம் விவேகானந்தர், காந்தி, திருவள்ளுவர், சித்தர்கள், மகான்கள், சாதனை படைத்த மனிதர்கள் கைக்கு போய்விட்டது. பெருமை பெருமை..
இந்த ஆன்றாய்டு காலத்தில், இப்படி மனிதர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல பெறும் பாலமாக உள்ளது உங்கள் அனைத்து பதிவுகளும்..
நிறைய விஷயங்களை ஏற்றுக்கொள்வது கடினம்.. இருந்தும் நல்ல வழிதான் நமக்கு உகந்தது.. ஒவ்வொன்றும் மூளையை வேலை செய்யவைக்கின்றது, சிந்தனை சிற்பியாக ஆக்கிவிடுகின்றது..
சொன்னாங்க சொன்னாங்க பதிவுகள் போல நிறைய என் போன்ற இளைஞர்களுக்கு தேவை..