You Are Here: Home » Featured, Flash from the Past » நிருபரின் வெள்ளை சட்டை; ரோஸ் பவுடரை அப்பிய ரஜினி! ஆரம்பகால ஆச்சரியங்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியை நாம் இன்று அண்ணாந்து பார்க்கிறோம். ஆனால் இந்த நிலையை அவர் எட்டுவதற்கு முன்பு ஆரம்ப காலத்தில் பட்ட சவால்கள் மற்றும் சங்கடங்கள் எத்தனையோ உண்டு.

இது பற்றி அவர் அரிதாகவே வெளியே கூறியிருக்கிறார். காரணம், சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்பட்டுவிடக்கூடாதே என்று தான். வாலி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில் கூறியது நினைவிருக்கிறதா? அடுத்தவர் உள்ளத்தை அணுவளவும் ஊனப்படுத்த விரும்பாத உத்தமர் ரஜினி என்று!

சரி… ஓ.கே….. விஷயத்துக்கு வருவோம்.

உண்மையாகவே ஆன்மீகத்தில் - கவனிக்க உண்மையாகவே ஆன்மீகத்தில் - கரைகண்டவர்கள் மற்றும் அதில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்கள் கடைபிடிக்கும் ஒரு குணம், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது அவற்றுக்கு மரியாதை கொடுப்பது. அவர்கள் எவ்வளவு சிறியவர்களாயினும் சரி… பெரியவர்களாயினும் சரி. ஏன் எதிரிகளேயானாலும் சரி. அவர்களது உணர்வுகளை ரஜினி புண்படுத்தும் விதமாக பேசியது கிடையாது.

1995 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக சன் டி.வி.யில் தோன்றி பிரச்சாரம் செய்த போது, “சகோதரி ஜெயலலிதா அவர்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. யாரும் என்னை தப்பா நினைக்காதீங்க” என்றார் ரஜினி.

2002 ஆம் ஆண்டு நெய்வேலியில், நடிகர் நடிகர்களை பார்த்த உணர்ச்சிப் பெருக்கில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ரஜினி அவர்களை “கறுப்பு ஆடு” என்று விமர்சித்தபோது, “அது தவறு. பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு கூறுகிறார்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாரே, அந்த பக்குவம் இங்கு எவருக்கேனும் வருமா?

இந்த பக்குவம் - பிறர் உள்ளத்தை புரிந்துகொள்ளுதல் / அதை மதித்தல் - என்பது ஏதோ இன்றோ நேற்றோ ரஜினி அவர்களுக்கு உள்ள குணமல்ல. அது அவரது பிறவிக்குணம்.

—————————————————————————-
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. (குறள் 953)

பொருள் : நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.
—————————————————————————-

ஆரம்பத்தில் ரஜினி அவர்கள் சற்று வேகமிக்கவர்… இப்போதிருப்பதை போல ஒரு நிதானம் அப்போது அவரிடம் குறைவு. சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். ஆனால் தான் செய்தது சரியல்ல என்று தெரியவரும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கு மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டார்.

அப்படி ஒரு சினிமா நிருபர் கம் பி.ஆர்.ஒ. ஒருவருக்கு ரஜினி அவர்களிடம் ஏற்பட்ட அனுபவத்தை விகடன் பக்கத்தில் பாருங்களேன்.

நெகிழ்ச்சியான நாம் கேள்விப்பட்டிராத சம்பவம் இது. விகடனுக்கு நன்றி.

Double-Click to ZOOM the image and READ the text

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

குறிப்பு : சூப்பர் ஸ்டாரின் சிவாஜி தி பாஸ் படத்தின் 3D Version ரிலீஸ் பற்றி நாம் முதலில் அறிவித்தது நினைவிருக்கலாம். திங்களன்று நடைபெறவுள்ள ட்ரெயிலர் ரிலீஸ் & கோச்சடையான் ட்ரெயிலர் ரிலீஸ் பற்றி அடுத்தடுத்து நமது டுவிட்டரில் நாம் அறிவித்துவிட்டாலும் நேரமின்மையால் நமது தளத்தில் நான் இன்னும் அளிக்கவில்லை. எப்பொழுதுமே ஒரு செய்தியை நமது தளத்தில் நான் அளிக்க தாமதமாகிவிட்டால், அந்த செய்தியை கூடுதல் தகவல்களுடம் தருவது நம் பாணி. ஏனெனில், நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா….

Instant செய்திகளுக்கு நமது டுவிட்டர் பக்கமான twitter.com/thalaivarfans என்ற முகவரியை செக் செய்யவும் (அல்லது) ஃபாலோ செய்யவும்! நன்றி!!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

[END]

5 Responses to “நிருபரின் வெள்ளை சட்டை; ரோஸ் பவுடரை அப்பிய ரஜினி! ஆரம்பகால ஆச்சரியங்கள்!!”

 1. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  //ஒரு செய்தியை நமது தளத்தில் நான் அளிக்க தாமதமாகிவிட்டால், அந்த செய்தியை கூடுதல் தகவல்களுடம் தருவது நம் பாணி. ஏனெனில், நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா…. //

  அதற்கு தான் வெயிட் பண்ணிகொண்டிருகிறோம் ….

  //அடுத்தவர் உள்ளத்தை அணுவளவும் ஊனப்படுத்த விரும்பாத உத்தமர் ரஜினி… -வாலி.//

  கலக்கல் வாலி சார் ….

  என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ்…

 2. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

  //“அது தவறு. பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு கூறுகிறார்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாரே, அந்த பக்குவம் இங்கு எவருக்கேனும் வருமா?//

  மிக, மிக உண்மை. இந்த சம்பவத்திற்குப் பிறகு
  பாரதிராஜா அளித்த பேட்டிகளில் அவரிடம் இருந்து ஒரு
  மாற்றம் காணப்பட்டது.“நல்ல மனுஷன்யா அவன்!” என
  ரஜினியைப் பின் பலதடவை பாராட்டிய நினைவு.
  (குமுதம் வார இதழில் வந்த பாரதிராஜா பேட்டிகளில்)

  -== மிஸ்டர் பாவலன் ===-

  ——————————————————————————————-
  அதுமட்டுமா பாவலன் அவர்களே….. இயக்குனர்கள் சங்கத்தின் D40 நிகழ்ச்சியில், “இதோ ரஜினி என்னும் மனிதன் உட்கார்ந்திருக்கிறான். மிகப் பெரிய மனிதன் அவன். இரும்பு மனிதன். ஈர நெஞ்சம் உள்ளவன்” என்று புகழாரம் சூட்டியது நினைவுக்கு வந்தது. இது புகழ்ச்சியல்ல. உள்ளத்தின் நெகிழ்ச்சி என்பது தான் கவனிக்கவேண்டியது.
  - சுந்தர்

 3. dr suneel dr suneel says:

  நிஜமான மனிதர்கள் என்றால் அவ்வபோது தன்னிலை மறக்கவே செய்வார்கள்..போலிகள் மட்டுமே கூடுதல் மிகையுடன் நடந்து கொள்வார்கள்..தலைவர் genuine என்பதை நிரூபிக்கிறது

 4. vasanthan vasanthan says:

  தலைவரைப்போல உண்மையான நேர்மையான மனிதர்கள் சினிமாவில் ,(ஒரு சிலரை தவிர)எனக்கு தெரிந்து யாருமில்லை..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
 • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
 • Lingual Support by India Fascinates