You Are Here: Home » Fans' Corner, Featured » நம் தள வாசகரும் நண்பருமான ரஜினி மனோஜின் தந்தை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மரணம் - நம் கண்ணீர் அஞ்சலி!

ம் தள வாசகரும் நமது டீமில் மிகவும் துடிப்பான நண்பர் ரஜினி மனோஜ். எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். ஆனால் நல்லவர். யாருடனும் எந்த பேதமுமின்றி ஒரு நல்ல நட்பை பராமரித்து வருபவர். அவரின் தந்தை திரு.ஷங்கர். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் சூப்பர்வைசராக உள்ளார். தீவிர ரஜினி ரசிகர் இவர்.

அவரின் தந்தையை நான் நேரில் பார்த்ததில்லை என்றாலும்  அடிக்கடி ஃபோனில் பேசுவதுண்டு. மனோஜின் சில நடவடிக்கைகள் இடையில் எனக்கு அதிருப்தியை தந்த சமயம் இரண்டு முறை அவரின் தந்தையுடன் பேசியிருக்கிறேன். “நீங்கள் தான் சுந்தர் அவனுக்கு புத்திமதி கூறி யதார்த்த உலகை அவனுக்கு புரியவைக்கவேண்டும்” என்று என்னிடம் அப்போது கேட்டுக்கொண்டார். ஒரு பக்கா ஜென்டில் மேன்.

அவர் நேற்று (வெள்ளி) இரவு பணி முடித்து தனது டூவீலரில் திரும்பிக்கொண்டிருக்கையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்துவிட்டார். உடலில் காயங்கள் எதுவும் இல்லையென்றாலும் விழுந்த வேகத்திலும் அதிர்ச்சியிலும் தலைக்கு உள்ளே காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துவிட்டார். மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. இத்தனைக்கும் அவர் ஹெல்மட் அணிந்திருந்தார். (ஹெல்மட் இல்லையென்றால் அடி மிக மிக பலமாக இருந்திருக்கும்.)

இரு மணிநேரத்துக்கும் மேல் சாலையில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் சென்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி தான் அளிக்கப்பட்டதே தவிர, பிற சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படவில்லை. மிகவும் சீரியஸான கண்டிஷன் என்பதால் BLOOD RELATIVES யாராவது வந்து கையெழுத்திட்டால் தான் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் ஸ்டிரிக்டாக கூறிவிட்டனர். மனோஜ் மற்றும் அவரது அம்மா, தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனை செல்ல அதிகாலை ஆகிவிட்டது. அதுவரை, அவர் உயிர் பிழைத்திருந்ததே இறைவன் கருணை தான்.

இன்று காலை அவரது தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டுவிட்டாலும் இன்னும் கோமாவில் தான் இருக்கிறார். “இன்னும் 72 மணிநேரம் கழித்தே எதுவும் சொல்ல முடியும். இருப்பினும் நம்பிக்கையுடன் இருங்கள். கடவுளை நம்புங்கள். நல்லதே நடக்கும்” என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

(1986 ஆம் ஆண்டு மனோஜின் தந்தை திரு.ஷங்கர் சூப்பர் ஸ்டாரை சந்தித்தபோது எடுத்த படம்!)

அவருக்காக உங்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். பிரார்த்தனையைவிட வலிமையான ஒன்று வேறு எதுவும் இல்லை.

மனித உயிர் இங்கு எத்துனை மலிவு என்று நேற்று நடைபெற்ற சம்பவத்தை மனோஜ் என்னிடம் விளக்கும்போது தெளிவாக புரிந்தது.

சென்னை-ஸ்ரீ பெரும்புதூர் சாலையில் இரவு சுமார் 10 மணியளவில் விபத்து நடைபெற்றுள்ளது. அந்த நேரம் லாரி போக்குவரத்து அந்த சாலையில் அதிகபட்சம் இருக்கும். இவர் விழுந்தவுடன் சம்பந்தப்பட்ட வண்டி தப்பி சென்றுவிட்டது. ஆனால் விழுந்த இவரை எவரும் காப்பாற்ற முன்வரவில்லை. கீழே விழுந்து கிடந்த தோரனையை பார்த்து பலரும் வேறு மாதிரி நினைத்து போய்விட்டனர். (பகல்லயே இங்கே யாரும் எதையும் கவனிக்கமாட்டாங்க). அப்புறம் அந்த வழியே வந்த ஈரமுள்ள ஒருவர் தனது பைக்கை நிறுத்தி 108 க்கு தகவல் சொல்லி, பின்னர் அவர் தந்தை பணிபுரியும் அலுவலகத்துக்கு தகவல் சொல்ல, அவர்கள் உடனே காரில் கிளம்பி மனோஜின் வீட்டை தேடி கண்டுபிடித்து நள்ளிரவுக்கு மேல் விஷயத்தை சொல்லியிருக்கின்றனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தபோதும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. (அவங்களுக்கு மரத்துப் போயிருக்கும்).

மனோஜ் அதிகாலை ஃபோன் செய்து என்னிடம் விஷயத்தை கூறியபோது, எனக்கு என்ன சொல்லி தைரியம் கொடுப்பது என்று ஒரு கணம் புரியவில்லை. நிலைமையின் தீவிரம் எனக்கு புரிந்தபோதும் அதை காட்டிக்கொள்ளாமல், மன தைரியம் கொடுக்கும் விதமாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை ஸ்மரித்துக்கொள் என்றும் அப்பா நல்லபடியாக குணமாகி வீடு திரும்பினால் குடும்பத்துடன் மந்திராலயம் வருவதாக வேண்டிக்கொள் என்றும் கூறினேன்.

ஏற்கனவே தாம் “பூஜ்யாய ராகவேந்திராய” என்ற மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வருவதாக கூறினார்.

ராகவேந்திர சுவாமிகள் மேல் பெரிதாக அவருக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் இரண்டு மாதத்துக்கு முன்பு தான் முதல் முறையாக மனோஜ் மந்திராலயம் சென்றுவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கையில், ராகவேந்திரர் படம் ஒன்றை பார்க்க, “உன்னை பார்க்க என்னை மந்திராலயத்துக்கு எப்போ கூப்பிடுவே?” என்று இவர் விளையாட்டாக கேட்டு வைத்தார்.

அதிசயமாக அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் பகுதியை சேர்ந்த சிலர், ஒரு குழுவாக வேனில்  மந்திராலயம் செல்லவிருப்பதாகவும், வண்டியில் இடமிருப்பதாகவும் வர விருப்பமா என்றும்  மனோஜிடம் கேட்க, அந்த நேரம் வேறு ஏதோ முக்கிய வேலை இருந்தபடியால் சட்டென்று முடிவெடுக்க இயலாமல் “அண்ணா என்ன செய்ய?” என்று என்னை கேட்டார்.

“நீ சொல்லும் மற்ற வேலையை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் மந்திராலயம் செல்லும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிட்டாது. மேலும், ராகவேந்திரரே உன்னை அழைப்பதால் ஏதோ காரணமிருக்கும். தட்டாமல் போய் வா” என்றேன்.

போய்விட்டு வந்து பல விஷயங்களை என்னிடம் கூறி நெகிழ்ந்துபோனார்.

இந்தநிலையில் இவரது தந்தைக்கு தற்போது இப்படி ஒரு சம்பவம். இதை பற்றி கூறியபோது “சாலையில் விழுந்து கிடந்த என் அப்பா குறித்த தகவலை 108 க்கு சொல்லி, மருத்துவமனையில் சேர்க்க முயற்சி எடுத்த அந்த டூ-வீலர் நண்பர் யாரென்றே கடைசி வரை தெரியவில்லை அண்ணா… அவருக்கு நன்றி சொல்லக்கூட என்னால் முடியவில்லை” என்று இன்று மருத்துவமனையில் நான் ஹரியுடன் சென்று சந்தித்தபோது கண்கலங்கியபடி கூறினார் மனோஜ்.

“அப்படி ஒரு நபரை அங்கு அந்த சமயத்தில் அனுப்பியது ஸ்ரீ ராகவேந்திரரை தவிர வேறு யாராக இருக்கும்?” என்றேன் நான். பதில் பேச முடியாது விக்கித்துபோய் நின்றார்.

என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்குமாறும் நாங்கள் உடனிருப்பதாகவும் தைரியம் கூறிவிட்டு வந்தோம்.

அவர் தந்தை பரிபூரண குணம் பெற்று ஆரோக்கியத்துடன்  விரைவில் வீடு திரும்ப நம் தள வாசகர்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முக்கிய செய்தி :
August 12, ஞாயிறு காலை சுமார் 5.00 மணியளவில் மனோஜ் அவர்களின் தந்தை திரு.ஷங்கர் சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். ஸ்ரீ ராகவேந்திரர் அவரை தன்னுள் அழைத்துக்கொண்டார். தந்தையை இழந்து வாடும் நண்பர் மனோஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மனோஜ் அவர்களுக்கு இனி அனைத்து விதங்களிலும் நாமும் நம் தளவாசகர்களும் உறுதுணையாய் இருப்போம். - சுந்தர்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

58 Responses to “நம் தள வாசகரும் நண்பருமான ரஜினி மனோஜின் தந்தை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மரணம் - நம் கண்ணீர் அஞ்சலி!”

 1. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

  மனோஜ் எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் ஆசிர்வாதத்தால் உனது தந்தை பரிபூரண குணம் அடைத்து சீக்கிரம் வீடு திரும்புவர்…
  .
  இறைவா அவருக்கு எந்தவித குறையும் இல்லாமல் சீக்கிரம் வீட்டுக்கு அனுபவேண்டும்…

  மாரீஸ் கண்ணன்

 2. Jegan Jegan says:

  Dnt wory friend
  good things ll happen.

 3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  “பூஜ்யாய ராகவேந்திராய” நமது தள நண்பர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்யுங்கள்.. நமது டீம் இல் எனக்கு மிக மிக பிடித்தது மனோஜ் அண்ணா தான்.. அணைத்து கடவுள்களின் துணையுடன் பரிபூரணதுடன் தந்தை வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்…

  -ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ் குரூப்

 4. **Chitti** **Chitti** says:

  அவரின் தந்தைக்காக நான் என் மனதார பிரார்த்திக்கின்றேன்.
  ***
  மிகவும் எளிதில் எல்லோரிடமும் பழகிவிடுபவர், மனோஜ். அவருக்காக நான் ஸ்ரீ ராகவேந்த்ரரிடம் பிரார்த்திக்கின்றேன்.
  ***
  சிட்டி..

 5. Devaraj Devaraj says:

  Will pray, God Almighty will help.

  Dev.

 6. vel vel says:

  we pray to god to soon recover,he wil be always with u…

 7. Raja Raja says:

  I will pray for manoj’s father, he will get well soon.

 8. சிதம்பரம் சிதம்பரம் says:

  எதுக்கும் கவலைப்படாதீங்க மனோஜ் அண்ணா ஆண்டவன் காப்பாத்துவான்
  நானும் ஆண்டவன்கிட்ட வேண்டிக்கிறன்.

  உங்க அப்பா நாளைக்கு காலையிலயே குணமாயிடுவாருன்னு என் மனசுக்கு தோணுது.

  சுந்தர் அண்ணா அவங்க அப்பா குணமானதும் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
  எதுக்கும் கவலைப்படாதீங்க நாளைக்கு காலைல குணமாயிடுவாரு

 9. Rajkumar.V Rajkumar.V says:

  God surely save Manoj’s Father.

 10. GET WELL SOON FRIEND.GOD WITH HIM.DONT WORRY.

 11. rajini rasigan rajini rasigan says:

  எனக்கு அழுகய் தான் வருகிறது …நண்பா மனோஜ் உன் தந்தையை ராகவேந்திரர் காப்பாற்றுவார் …!!! நான் கண்ணீர் மல்க வேண்டிகொள்கிறேன் !!! GOD BLESS U DEAR !!!

 12. Mohamedamhar Mohamedamhar says:

  Manoj…
  Ungal
  Thanthai Seekkiram
  Kunamadainthu
  Palaya
  Nilaikku
  Thirumba
  Iraivanidam
  Piraarthikkiren…

 13. R.Ramarajan- Madurai R.Ramarajan- Madurai says:

  Manojin thanthai kunam petru veedu thirumba ellam valla kadavulai pirathikiren.

 14. Jaikumar Jaikumar says:

  நம்ம அப்பா-கு ஒன்னும் ஆகாது மனோஜ் கவலை படாதீங்க ….நம்ம அம்மா-கு தைரியம் சொல்லுங்க…..ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ,ஆனா கை விட மாட்டன் !!!

 15. sureshkumar sampath sureshkumar sampath says:

  we pray to god , for speedy recovery for our friend health,

  Regards
  SH Kumar,Venkat Somu,SureshKumar,GK Kumar ,VR Kannan,Logu c,Koti B,Karuna,Pkp Arumugam,C venkatesh,G Sudhakar
  Team Rajini fans
  Gandhi Road,Vellore :632004 Mob:9360506630
  Vellorerajinifans

 16. Arunkumar Arunkumar says:

  Very sorry to hear. I will surely pray. His Father will recover soon with God’s blessings….

 17. dr suneel dr suneel says:

  அன்பு நண்பர் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இந்த சூழலை கடந்து வாழ்வில் முன்நகர இறைவன் துணை புரியட்டும்..தேவையான அமைதியையும் ஆன்மபலத்தையும் அந்த இறைவன் வழங்கட்டும்..மனோஜின் தந்தையின் ஆன்மா சாந்தி அடையட்டும்..அவர் தன் மகனை பற்றி கண்ட கனவுகளை நினைவாக்குவதே அவருக்கு மனோஜ் செலுத்தும் ஆகா சிறந்த அஞ்சலி..

  • Sairam Sairam says:

   மனோஜின் தந்தையின் ஆன்மா சாந்தி அடையட்டும்..அவர் தன் மகனை பற்றி கண்ட கனவுகளை நினைவாக்குவதே அவருக்கு மனோஜ் செலுத்தும் ஆகா சிறந்த அஞ்சலி..

 18. sudhagar_us sudhagar_us says:

  மனோஜ் உங்களுக்கு இப்படி ஒரு கொடும் சோகம் நடந்திருக்க கூடாது. இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பக்கபலமாக இருக்கட்டும். அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.

 19. murugan murugan says:

  நண்பர் மனோஜ் அவர்களுக்கு
  உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை
  மேலே இந்த செய்தியை படித்த நான் கீழே குறிப்பிட்டுள்ள முக்கிய செய்தியை படிக்கவில்லை
  ஏனேனில் எனது அறையில் தங்கியிருக்கும் ஆனது நண்பரின் தந்தையும் நேற்று இரவு அவரது சொந்த ஊரான ராஜபாளையத்தில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்தார் ( இப்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் )
  இரவு அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு படுக்கைக்கு சென்றேன்
  இன்று காலை அதே போன்ற ஒரு சம்பவத்தை இங்கே படிக்க நேர்ந்தவுடன் நண்பர் மனோஜ் அவர்களின் தந்தையும் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் மேலுள்ள செய்தியை முழுவதுமாக படிக்காமல் எனது முதல் கருத்தை பதிவு செய்தேன்
  சில சமயங்களில் இறைவன் நமக்கு அளிக்கும் சோதனை மிகவும் வேதனை தரக்கூடியதாக உள்ளது
  அந்த வேதனையின் வலி சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமே உணரக்கூடியது
  நண்பர் மனோஜ் அவர்களே உங்கள் தந்தை இறைவனோடு சேர்ந்த போதிலும் என்றென்றும் அவரது ஆன்மா உங்களோடு இருந்து உங்களுக்கு வழிகாட்டும்
  உங்களுக்கு இப்போதைய தேவை இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான மன வலிமையையும் தைரியமும் தான்
  தலைவரின் ரசிகர்கள் என்ற மிகப்பெரிய குடும்பம் உங்களுடன் உள்ளது
  மனம் தளராமல் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான அடியை எடுத்து வையுங்கள்
  உங்கள் தந்தை உங்களுக்குள் இருந்து உங்களை வழி நடத்துவாராக !!!

 20. T.JAWAHAR T.JAWAHAR says:

  மனோஜின் தந்தையின் ஆன்மா சாந்தி அடையட்டும்..அவர் தன் மகனை பற்றி கண்ட கனவுகளை நினைவாக்குவதே அவருக்கு மனோஜ் செலுத்தும் ஆகா சிறந்த அஞ்சலி..

 21. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Very sorry to hear. May his soul rest in peace. Time only can answer. My deepest condolences to his family members.

 22. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை
  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அந்த இறைவனை பிரார்திக்கிறேன் ,அவர்கள் குடும்பத்திற்கு நம் தளம் சார்பாகவும் ரஜினி ரசிகர்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் .

 23. S.Vijay S.Vijay says:

  I pray God to rest his soul in peace.

 24. vasanthan vasanthan says:

  இதுவும் கடந்து போகும் ,வேறு எதை சொல்ல நண்பா,

 25. Veera Veera says:

  May his soul rest in peace.

 26. Sakthivel Sakthivel says:

  நண்பர் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தந்தையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 27. VIJI VIJI says:

  May his soul rest in peace. Deepest condolences to his family members

 28. Senthilmohan K Appaji Senthilmohan K Appaji says:

  May his soul rest in peace :-(

 29. harisivaji harisivaji says:

  இரண்டு நாள் முன்பு நம்மிடம் உறவாடி உரையாடிய சொந்தம் இன்று நம்மிடம் இல்லை. இதான் வாழ்கை என்று பலபேர் ஆறுதல் கூறினாலும் இதை அனுபவிப்பவர் இடத்தில இருந்தால் தான் அதன் வலி தெரியும் …அப்படி தெரிந்தாலும் அதை யாராலும் குறைக்க முடியுமா முடியவே முடியாது. இழப்பு என்பது இயற்கையாக வந்தாலே ஏற்றுகொள்ள முடியவில்லை …ஆனால் இப்படி யாரோ ஒருவரின் அவசரத்திலும் ஒரு சிலரின் அலட்சியத்திலும் வந்தால்
  ஒரு ஒரு நாளும் எத்தனை செய்திகள் நாளிதை திறந்தால் குறைந்தது நான்கு செய்திகள் இப்படி அங்கு விபத்து இங்கு விபத்து ஆனால் இது குறைந்த பாடில்லை ஏதோ வேகமா ஒட்டி மெடல் வாங்குவோரை போன்று எண்ணம் நமக்கு … நாம் இப்படி செல்வதால்,,, தவறு செய்யும் நமக்கு ஏதும் நடந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை என்று நினைத்து கொள்ளலாம் ஆனால் எதுமே அறியாமல் பல கனவுகளோடு கவலைகளோடு அடுத்த நிமிடம் நம் பையனுக்கு அது செய்யணும், மகளுக்கு இது செய்யணும் மனைவி சொன்ன பொருளை வாங்கி கொடுக்கணும் என்று கனவுகளை சுமந்து சென்ற தந்தை, தாய், தன் குடும்பத்திற்கு தன் கடமையாற்ற இலட்சியத்தை சுமந்து சென்ற மகன் மகள் என்று நம் அவசரத்திற்கு அலட்சியதிற்கும் சமந்தமே இல்லாத ஒரு உயிர் நம்மால் பறி போய்விடுமே என்ற எண்ணம் இருந்திருந்தால் இப்படி பட்ட விபத்து மரணங்கள் நடப்பது குறைந்திருக்கும் இப்போது பெரும்பாலும் வாகனம் ஓட்டுவது என்பது பெரிய கவுரவம் போல தன்னை யாரும் மிந்தி சென்றிட கூடாது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது …அப்படி மிந்திட்டா…மற்றவரை ஏளனாமாக பார்த்து அதில் ஒரு சந்தோஷ படுற கேவலமான எண்ணம் மனிதர்களிடம் மேலோங்கிவிட்டது …இந்த போட்டி மனப்பான்மை பலி யார் …சிறு நொடி மாறினால் ஒரு குடும்பத்தின் தலைஎழுத்து மாற்றி எழுதபடுகிறது என்பது உணராதவர்களா இவர்கள்…தெரியும் அனால் சாமர்தியாமாக ஓட்டும் திறமை என்னிடம் உள்ளது என்று ஒரு பைசாவுக்கு ப்ரோயோஜனம் இல்லாத அந்த வெட்டி பந்தா அந்த கேவலமான எண்ணமே இதற்கு காரணம் அங்கு நம்கூட வண்டி ஓட்டுவது நம் சொந்தம் என்பதை போல உணர்ந்திருந்தால் நாம் இப்படி செய்வோமா…அந்த ஒரு நொடி நம் குடும்பத்தை அண்ணனை தம்பியை அக்கா அம்மா அப்பாவை கண் முன் நினைத்து பார்த்திருப்போமேஅனால் .இப்படி நடக்குமா .. வெளியே சென்ற நீ எப்போ வருவாய் என்று காத்திருக்கும் உன் மனைவி, சாக்லேட் வாங்கி வாருவார் அப்பா என்று காத்திருக்கும் உன் மகன் மகளை போல தானே ..எதிரே வரும் ஒருவருக்கும் இருக்கும் என்பதை ஏன் யாரும் யோசிபதில்லை
  ???…அந்த ஒரு நொடி நாம் நிதானத்தோடு வேகமாக செல்லாமல் வழிவிட்டு அவர்களை வெற்றியடை செய்தால் தான் என்ன ??? அப்படி செய்தால் அப்போ நாம் தோழ்வி அடைந்தாலும் …வாழ்கையில் வெற்றி பெறுவோம் ….இதில் நாம் செய்யும் தவறு நம்மை பாதிக்காமல் எதிரே வருவோரே பாதித்தால் ….
  அன்று ஒரு நாள் நான் GH இல் சில மணிநேர இருந்த போது எவளோ ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்திற்கு ஒரு அலறல் சத்தம்….
  அப்பாவை இழந்த ஒரு மகளின் கதறல்
  தன்னுடன் வண்டியில் வந்த தாயை இழந்த மகன் கதறியது …(பேருந்திற்கும் தனக்கும் ஏற்பட்ட போட்டியில் இன்று அவன் தன தாயை இழந்து ..அம்மா நானே உன்ன கொன்னுட்டேன் என்று கதறியது)
  இன்றும் மனதை பிசைகிறது

  நாம் சரியாக சென்றாலும் எதிரே வருவோர் செய்யும் தவறில் அவரது வேகத்தில் இருந்து நமக்கு வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்கிறதுக்கு…நம் நிதானம் பெரும் உதவி செய்யும்

  எடுத்த பிறவியை இப்படி அல்பாய்ஸில் இழக்காமல், அவசரத்துக்கும் அலட்சியதிருக்கும் பலியாகமால் ….நாமும் நம் சுற்றமும் உற்றமும் மகிழ்ச்சியாக வாழவைத்து இயற்கையான முறையில் கவுரமாக உயிர் பிரிந்தால் அதுவே பெரிய வெற்றி
  …நமக்கு ஏதும் ஆகலை என்றால் அது போதும் என்ற என்னத்தை தூர எரிந்து
  என்னால் மத்தவங்களுக்கும் ஏதும் ஆகலை ஆகக்கூடாது என்று மனசாட்சியுடன் (வாழ்ந்தால்) வாகனம் ஓட்டினால்
  மனிதம் வாழும்
  ===
  ஹரி.சிவாஜி

 30. Arunkumar Arunkumar says:

  Very sad to hear… Deepest condolences… May your Dad’s soul rest in peace…

 31. Dhanasekar Dhanasekar says:

  Deepest condolences Manoj, my heartfelt prayers for you and your family. May his soul rest in peace!.

 32. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  அண்ணன் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தந்தையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 33. RAJNIhari RAJNIhari says:

  Guru raghavendra is with you Manoj Anna…have faith because “FAITH IS GOD”..the upcoming time is what will determine who you become…u have 2 options-get dejected and give up OR get inspired,live with the values thought by your father and MAKE HIM PROUD..!!HE is still WITH YOU..he will watch you every second,HE can listen u speak..!!!THE DIVINE SOUL has not gone anywhere…its just the body!!take your time…and bounce back in our THALAIVAR way!!!THALAIVAR is with U…

 34. BaluMahendran BaluMahendran says:

  நண்பர் மனோஜ் அவர்கள் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ,இறப்பு இழப்பை ஈடு செய்ய முடியாது. மனோஜ் க்கு அவரது குடும்பத்திற்கும் மனதைரியத்தை அந்த ஆண்டவன் வழங்க நாம் பிரார்த்திக்கிறேன்.

 35. vasi.rajni vasi.rajni says:

  ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் அன்மா சாந்தி அடையட்டும்.

 36. Leo Leo says:

  திரு மனோஜ் மற்றும் அவர் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தந்தையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

  அந்த ஆண்டவனின் ஆசிர்வாதமும் / துணையும் என்றும் அவர்களோடு இருக்க பிராத்திகிரேன்.

 37. sakthivel sakthivel says:

  mana uruthiudan yeerungal

 38. Elango Elango says:

  Deepest condolences to Manoj & his family.

 39. raajeshtve raajeshtve says:

  மனோஜின் தந்தை மறைவுக்கு வருந்துகிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். இனி மனோஜ் தன தந்தை இடத்திலிருந்து அத்தனை பொறுப்புகளையும், கடமைகளையும் தன் தந்தையின் ஆசியுடன் செவேனே நிறைவேற்றுவார்.

 40. subbhhu subbhhu says:

  மனோஜ் அவரது தந்தை ஆத்மா ஷாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் !!!! சாலையில் செல்லும் பொழுது மிகவும் எச்சரிக்கை ஆக அனைவரும் செல்ல வேண்டும் .

 41. Mahalingam.s Mahalingam.s says:

  அன்பு சகோதரனின் தந்தை உடல் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

 42. rajini venu rajini venu says:

  May the almighty give manoj and family courage and peace to bear this great loss. really sorry mate.

 43. B. Kannan B. Kannan says:

  My deepest condolense to Manoj and family..
  May GOD give strength to Manoj, his mom and sister to bear this huge loss and come over from this disaster..
  No words might console you..
  You have to be strong to console your sister and mom..
  We are here for you Manoj..
  To two-wheeler drivers and one who drive vehicles in general, pl drive carefully.. Avoid rash driving..
  Dont race.. Few micro-second mistakes might change your
  whole life..
  Your family is waiting for you at home.. Your children might be waiting and expecting something from you while you return..
  Keep these things in mind before racing your vehicle..

 44. balaji balaji says:

  May his soul rest in peace. My deepest condolences to manoj family…
  Don’t worry manoj……I pray to God…

  Ur friend,
  Balaji .V

 45. RAJA RAJA says:

  உண்மையில் மிகவும் வருத்த பட வேண்டிய விஷயம் அதே போல் இந்த பாழாய் போன டாஸ்மாக் கால் ஒருவர் அடிபட்டோ ,இல்லது சுயநினைவு இழந்தோ கிடந்தால் கூட இன்று மக்கள் அவர சரக்கு மப்பில் இருகிறார்கள் என்று தான் நினைகிறார்கள் ,நான் ஒரு முறை அலுவலக வேலையாக வெளிஊர் சென்று இருக்கும் பொழுது அங்கு வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி ஓடு ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார்,எல்லோரும் போதையில் இருக்கிறார் என்று தான் நினைத்தார்கள் ,நானும் கூட சில நிமிடம் அப்படி நினைத்து தான் கண்டுகொள்ளாமல் ஆனால் அவரை பார்த்து கொண்டே இருந்தேன் ,எனக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டு கிட்ட பொய் பார்த்தால் அவர் வாயில் எந்த மது வாடையும் வரவில்லை அதன் பின்பு கொஞ்சம் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து ,அவரை தெளிய வைத்து டீ வாங்கி கொடுத்த பொழுது தான் தெரிந்தது அவர் லோ bp ஆள் மயக்கம் அடைந்து உள்ளார் என்று ,அன்று முதல் முடிவு செய்தேன் எவராது மயங்கி இருந்தால் அருகில் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்,குடித்து இருந்தால் வாடை கண்டிப்பாக வரும்,அப்படி இல்லை என்றால் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று,நண்பர்களும் தயவு செய்து கடைபிடியுங்கள் .

  —————————————————————————

  மனோஜ் கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை ,நான் அலுவலக வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்தேன் ,அதனால் அவர் அடிபட்டது தெரியாது ,அது தெரியாமல் ஞாயறு காலை கும்கி இசை வெளியீடு நிகழ்ச்சியில் தலைவரின் நடை அழகை பத்தி மனோஜ்,சுந்தர் அவர்களுக்கும் குறுந்தகவல் அனுப்பினேன் ,சிறிது நேரம் கழித்துதான் சுந்தர் அவர்கள் மனோஜ் அவர்களின் தந்தை இறந்த செய்தி எனக்கு அனுப்பினார் ,எனக்கு தூக்கி வாரி போட்டது ,இந்த கடினமான நேரத்தில் மனோஜ் கூட இல்லையே என்ற கவலை ஒரு புறம் இந்த விஷயம் தெரியாமல் குறுந்தகவல் அனுபிவிட்டோமே என்று மறுபுறம் ,பின்பு தான் மனோஜ் கு போன் பண்ணி ஆறுதல் கூறினேன்

  ——————————————————————————-

  சுந்தர் அவர்களே உங்களுக்கும் நம் குழுவுக்கும் இனி மனோஜ் மேல் தனி அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஏன் என்றால் அவன் இன்னும் சிறு பிள்ளையாக இருக்கிறான் யார் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறான் ,இனி தந்தை இல்லாமல் குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது (மனோஜ் கு அண்ணன் இருகிறார என்று தெரியவில்லை ) இருந்தாலும் மனோஜ் கு பொறுப்பு கூடி உள்ளது ,அவனுக்கு நீங்களும் நம் குழுவும் நல்ல வழிகாட்டியாக இருந்க்க வேண்டும் அது தான் அவனது தந்தைக்கு நாம் செய்யும் மிக சிறந்த அஞ்சலி ஆக இருக்க முடியும்
  ———————————————————————————
  மனோஜ் அவர்களின் தந்தையை பார்த்து ஆம்புலன்ஸ் கு தகவல் சொன்ன அந்த முகம் தெரியாத நபருக்கு கோடான கோடி நன்றி ,அதே போல் அவரை யாரவது முன்னமே சேர்த்து இருந்தால் பிழைத்து இருப்பாரோ என்னவோ

  ————————————————————————-
  திரு ஷங்கர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன் ,மனோஜ் கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை ,நீ தான் தைரியமாக இருந்து உன் தாயாருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் ,நாங்கள் இருக்கிறோம் உனக்காக முடிந்த உதவியை செய்ய

 46. Sathish Sathish says:

  Please know that our thoughts and prayers are with you during this tragic time.

 47. தூத்துக்குடி M.விஜய் ஆனந்த் தூத்துக்குடி M.விஜய் ஆனந்த் says:

  நண்பர் மனோஜ் அவர்கள் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மனோஜ் அவர்களின் தந்தை திரு.ஷங்கர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 48. ஈ. ரா ஈ. ரா says:

  நெஞ்சார்ந்த இரங்கல் மனோஜ்.

 49. m.manickavasagam975@yahoo.com m.manickavasagam975@yahoo.com says:

  my deepest condolences to monoj family i pray god with him sundar sir your helth comforttablly sir your mobile no please my mail replay me thank you m.maanickavasagam

 50. மாரீஸ் மாரீஸ் says:

  இந்த இழப்பை ஈடு செய்ய எதுவும் இல்லை மனோஜ். உனது தந்தை உன்னுடன் இல்லாவிட்டாலும் உன்னக்குமேல் இருந்து உன்னை வழிநடத்துவார்.

 51. Manikandan Bose Manikandan Bose says:

  கஷ்டமான செய்தி. மனோஜ்க்கு தந்தை இழந்த சோகத்தை தாங்கும் மன தைரியத்தை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்..

 52. sadique sadique says:

  நண்பர் மனோஜ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்… அவரது தந்தையின் ஆன்மா பூரண சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்… மனோஜ் அவர்களை எனது திருமணத்தின் போது, உங்களுடன் சேர்த்து சந்தித்தேன்.. ஆனால் நிறைய பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதன் பிறகு என் குடும்ப சூழ்நிலை மற்றும் வேலை டென்ஷன் காரணமாக நமது தளத்திற்கும் வர இயலவில்லை… அவ்வப்போது தங்கள் பதிவுகளை படித்து மனதை உற்சாகப்படுத்தி கொள்வேன்.. ஆண்டவனின் அருள் மனோஜ் அவர்களை சாந்தபடுத்த பிரார்த்திக்கிறேன்!
  ——————————————————————————————
  சுந்தர் அண்ணா சில நாட்களாக தொடர்பு இல்லாமல் இருப்பதற்காக மன்னிக்கவும்… மீண்டும் வருவேன்..
  ——————————————————————————————
  - சாதிக் (மதுரை)

 53. napoleon.s.kumar napoleon.s.kumar says:

  This is a shocking news to me. may god give strength to manoj’s family. My Hearty condolences to Manoj and his family.

 54. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

  அப்பா நலம் பெறவும் அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி. இந்த பாவப்பட்ட பூமியில் அப்பா இருக்க வேண்டாம் என்று எண்ணி தான் கடவுள் அப்பாவை அழைத்து கொண்டார் போல. எனக்கு பொறுப்பு கூடி இருப்பது தெரிகிறது. அதே சமயம் கஷ்டமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. கடந்த சில நாட்கள் இந்த உலகை பற்றி புரிந்துகொள்ள எனக்கு பெரும் உதவியாக இருந்தது. என்னை சுற்றி நல்ல நண்பர்களும் நலம் விரும்பிகளும் உள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி. கடந்த காலங்களில் நான் உங்கள் எவருக்கேனும் எனது நடவடிக்கைகளால் சங்கடத்தையோ கஷ்டத்தையோ ஏற்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  எப்போதும் சுந்தர் அண்ணாவிடம் எதிர்கால திட்டங்களை பற்றியோ கேளிக்கைகளைப் பற்றியோ நான் பேசும்போதெல்லாம் “அடுத்த நொடி மனித வாழ்வில் நிச்சயமில்லை. எனவே அது பற்றி விவாதிக்க இப்போ என்ன அவசியம்? இதைப் பற்றி அப்போது பார்த்துக்கொள்ளலாம்.” என்று கூறுவார். அதன் பொருளை நான் இப்போது தான் உணர்ந்துகொண்டேன்.

  உடனிருந்து இறுதிவரை அனைத்தையும் கவனித்துக்கொண்ட நம் தளத்தின் நண்பர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாது போயிருந்தால் இந்த கடினமான காலகட்டத்தை என்னால் தாண்டி வந்திருக்கவே முடியாது.

  உங்கள் அத்தனை பேரின் அன்பிற்கும் எனது நன்றி!! நிச்சயமாக நீங்கள் எல்லோரும் அறிவுரை கூறிய படி நடந்து கொள்வேன்.

  - மனோஜ்

 55. Mettustreet K.muthu Mettustreet K.muthu says:

  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது தளத்திற்கு அருமைத் தம்பி மனோஜ்க்கு எனது வருத்தத்தைத் தெரிவிக்கவே வந்துள்ளேன்.

  பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளினாலும் இரண்டு முறை தொலைந்து விட்ட மொபைலினாலும் எவருடையத் தொடர்பும் இல்லாமல் போய் விட்டது, facebook தொடர்பும் சில காலம் அவ்வளவு கிடையாது, எதேச்சையாக ஞாயிறு மாலை facebook ல் பார்த்துத் தான் இந்தத் துயரச் செய்தி அறிந்தேன், மிகவும் அதிர்வடைந்தேன், அந்தச் சூழ்நிலையில் மனோஜுடன் இருக்காததை எண்ணி மிகவும் வருத்தமுற்றேன், எந்த ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் இழப்பின் வலி அந்தக் குடும்பத்துக்குத் தான் தெரியும், இருப்பினும் கவலைப்படாத மனோஜ் உன் தந்தை உங்களுடன் இல்லாவிட்டாலும் ஆண்டவனாய் இருந்து நீ செய்யவிருக்கும் அனைத்து நல்விசயங்களுக்கும் உறுதுணையாய் இருப்பார், வெற்றிப் பெற செய்வார்.

  உன் துக்கத்தில் அன்று பங்கெடுக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன், மன்னிக்கவும் தம்பி மனோஜ்.

 56. Baskar Baskar says:

  Hai Manoj,
  My deepest condonlences to you and your family. May your dad rest in peace. Dont worry, we all are there with you.

 57. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  நம் தள வாசகர் மனோஜ் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  திரு ஷங்கர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..

  மனோஜ் நங்கள் இருக்கிறோம் உனக்காக கவலை வேண்டாம்.

  விஜய்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates