You Are Here: Home » Featured, Rajini Lead » மகளிருக்கு தான் எத்தனை மகிழ்ச்சி, நீ வந்துவிட்டால் — சான்றோர் சபையில் சூப்பர் ஸ்டார் ரஜினி! Excl. Pics – Part 2

சென்னையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கம்பன் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டபோது கண்ட காட்சிகள் தான் இவை.

கம்பன் கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழா திரு.ஆர்.எம்.வீ. அவர்கள் முன்னிலையில் தமிழறிஞர்கள் திரளாக கலந்துகொள்ள, விமரிசையாக நடைபெறும். கம்பனின் படைப்புக்களை வைத்து பட்டி மண்டபம், உரையாடல், கவியரங்கம் என தீந்தமிழ் விருந்து அனைவருக்கும் படைக்கப்படும்.

சற்று விரிவான பதிவு விரைவில் வரும். அதற்கு முன்பு, பொக்கிஷத்தை காண ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக இதோ அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரத்தினங்கள்.

இதில் நீங்கள் காணும் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு சேதி சொல்லும். உன்னிப்பாக பாருங்கள். சூரியனை தவிர்த்து பிற விஷயங்களையும் பாருங்க… புகைப்படங்கள் மேலும் சுவாரஸ்யமாக தெரியும்.

முத்தமிழ் கவியே வருக
முக்கனி சுவையும் தருக

மின்னல் நடை தெரியும்….
மின்னலே நடக்குமா என்ன?
காமிராவின் ஷட்டர் ஸ்பீடை விட ஸ்பீடாக நடக்கிறாரே
வியக்கிறாள் பருவமங்கை பின்னாலே…

மாலைகள் இடவேண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ்த்தாய் நாடு தந்த அன்பு போதுமே


பார்வை திசை மாறினால்
சரித்திரங்கள் மாறுமே தமிழகத்தின் நலன் ஏறுமே!

ராணுவீரனான உன்னை பணக்காரனாக்கி
அழகு பார்த்தவர்,
காவல்காரனாக பார்க்க ஆசைப்பட்டபோது மட்டும்
மறுத்துவிட்டாயே ஏன்?


பாரதி(பாஸ்கர்) கண்ட புதுமைப் பெண்களின் மரியாதை
கலியுக கர்ணனுக்கு கிடைத்ததில் ஆச்சரியமென்ன?


தாய்க்குலத்துக்கு தான் எத்தனை மகிழ்ச்சி
நீ வந்துவிட்டால்….!


கம்பன் கவிச் சோலை சாரலில்
சூரியன் மூழ்கியிருக்கும் அற்புத
க் காட்சி!

உன்னை நல்லா ஆளாக்க
உத்தமனை போலாக்க
எண்ணியவன் யாரென்று
கண்டுகொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை
போற்றும் நாள் வரும்


ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும்
உன் உடன்பிறந்த குணங்கள்
சம்பந்தபட்டவர்களுக்கோ
அவை மறக்க முடியாத தருணங்கள்!

காத்திருக்கும் (காமிராக்) கண்களுக்கு தெரியாதா என்ன…
சான்றோர்கள் வரும் வழியிலேயே நீ செல்ல ஆசைப்படுகிறாய் என்று!

… To be continued in Part 3

Also check…. from our Archives

கம்பன் விழா - முந்தைய ஆண்டுகள் கவரேஜ்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

2009

கற்றோர் சபையில் கலியுக கர்ணன்
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=5159

“ரஜினி இருக்கும் உயரத்திற்கு அவரது எளிமை பாராட்டத்தக்கது” – திரு.சுகி சிவம் – Excl. Picture article
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=5138

2010

“மாபெரும் சபைதனில் நீ நடந்தால்….” கம்பன் விழாவில் சூப்பர் ஸ்டார் – Excl. Pics only @ OnlySuperstar.com
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=8328

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


31 Responses to “மகளிருக்கு தான் எத்தனை மகிழ்ச்சி, நீ வந்துவிட்டால் — சான்றோர் சபையில் சூப்பர் ஸ்டார் ரஜினி! Excl. Pics – Part 2”

  1. kumaran kumaran says:

    தலைவரை நான் பார்த்து ரசிப்பதைவிட மற்றவர் பார்த்து ரசித்தால் நான் மிகவும் உற்சாகம் ஆகிவிடுவேன், அந்த வகையில் மேலே உள்ள படங்கள் அனைத்தும் அற்புதம்.

  2. Gokuldass Gokuldass says:

    Thalaivar rocks sundar.

  3. R.Gopi R.Gopi says:

    //ராணுவீரனான உன்னை பணக்காரனாக்கி
    அழகு பார்த்தவர்,
    காவல்காரனாக பார்க்க ஆசைப்பட்டபோது மட்டும்
    மறுத்துவிட்டாயே ஏன்?//

    அதான் பாட்சா வெள்ளிவிழாவில் ஆர்.எம்.வி.ய மேடையில வச்சுக்கிட்டு மணிரத்னம் வீட்டுல போட்ட குண்டு பத்தி பேசி பத்த வச்சாரே பரட்டை!! அதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்……….. அதனாலன்ன்ன்ன்ன்

    • RAJA RAJA says:

      @ கோபி

      கோபி அவர்களே, வேறெங்கும் காணக்கிடைக்காத தலைவரின் இந்த புகைப்படங்களை பார்க்கும் எந்த ஒரு ரசிகனுக்கும் - அவரது அரசியல் பிரவேசத்தை பற்றி அவர்கள் மாற்றுக்கருத்து கொண்டிருந்தாலும் கூட - பரவசம் தான் தோன்றுமே தவிர இது போன்ற குதர்க்கமான கிண்டலான எண்ணங்கள் அல்ல. பல சமயம் உங்களது கமெண்ட்டுகளை பார்க்கும்போது நீங்கள் உண்மையில் ஒரு ரஜினி ரசிகர் தானா என்ற கேள்வி எனக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

  4. raja raja says:

    தலைவா நீங்கள் விழாக்களுக்கு வருவதால் நடை பெரும் சில நல்ல விஷயங்கள்

    1 . நேரம் தவறாமை - ( ஒரு சில விழாக்களில் சொல்லும் நேரம் ஒன்று தொடங்கும் நேரம் வேறொன்று ஆனால் நீங்கள் சொன்ன நேரத்துக்கு வந்துவிடுவதால் சரியாக விழா ஆரம்பித்து விடும் ) .

    2 . ஒழுக்கம் - தாங்கள் எந்த விழாவுக்கு எப்படி உடை அணித்து செல்ல வேண்டும் என்று உங்கள் உடை மூலமாகவே எல்லோருக்கும் கற்று கொடுப்பது

    3 . விளம்பரம் - இன்றைய வியாபார உலகில் அணைத்து பத்திரிக்கைகளும் எது மக்களுக்கு தேவை என்பதை விட எது பரபரப்போ அதை தான் வியாபாரமாக செய்கிறார்கள் ,ஆனால் நீங்கள் இது போல் விழாக்களுக்கு வருவதால் விழா ஏற்ப்பாடாளருக்கு செலவில்லாமல் விளம்பரம்

    4 . சந்தோசம் - உங்களை எங்காவது தூரத்திலாவது பார்த்து விட மாட்டோமா என்று காத்து கொடு இருப்பவர்களுக்கு இந்த மாதிரி வருகை மிகவும் சந்தோசத்தை கொடுக்கும்

    5 .புது அனுபவம் - கண்டிப்பாக நீங்கள் பேசினால் எதாவது ஒரு புது விஷயம் சொல்லுவீர்கள் அதுவே அங்குள்ளவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்

    இப்படி சொல்லி கொண்டே போகாலாம் தலைவா கலக்குங்க

  5. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    தலைவரை இப்படி கம்பீரமாக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தன்னை சுத்ததமிழன் என்று மார்தட்டிக்கொண்டு மீசையை முறுக்கும் தமிழ் நடிகர்கள் எவ்வளவு பேர் கம்பன் விழா நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை. அதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களுக்கு தமிழ் பற்று குறைவு என்று அர்த்தமில்லை. ஆனால் இது தலைவரின் உண்மையான தமிழ் பற்றை காண்பிக்கிறது. அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு, என்னை வாழ வைத்தது தமிழ் பாலு!

  6. Sankaranarayanan Sankaranarayanan says:

    மன நிறைவோடு சொல்கிறோம்.. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நீங்கள் கொடுத்துள்ள வரிகள் வைரங்களாக நம் தலைவருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.. நன்றி ஜி.

  7. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    தலைவரை இவ்ளவு உற்சாகத்தோடு பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    விரைவில் சந்திப்போம் சிவாஜி 3D அதிரடியில்…

    என்றும் தலைவர் பக்தன்
    விஜய்

  8. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Nice to see Thalaivar with Bharathi Bhaskar folding the hands saying Vanakkam. Many people may not be aware that Bharathi Bhasker is the Vice President for Citi Bank. She is known for her simplicity like our Thalaivar.

  9. சிதம்பரம் சிதம்பரம் says:

    ஊரில இருக்கிற பொண்ணுங்க பூரா உன்னையே பாக்குது தலைவா……..
    திருஷ்டி சுத்திப் போடுங்க

  10. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    சுந்தர்…. அற்புதமான புகைப்படங்கள் அதற்க்கு ஏற்ற அருமையான கமெண்ட்டுகள்.

    நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு புகைப்படமும் சுவாரஸ்யம் தன. தலைவர் பாரதி பாஸ்கருக்கு வணக்கம் சொல்லும் புகைப்படம் அருமையிலும் அருமை. என்ன ஒரு சிரிப்பு அது….
    .
    மாரீஸ் கண்ணன்

  11. R O S H A N R O S H A N says:

    சூப்பர் போஸ்ட் ஜி……..ஒவ்வொரு புகைப்படமும் அதற்க்கு உங்களோட வரிகளும் அருமை அருமை……

    //தாய்க்குலத்துக்கு தான் எத்தனை மகிழ்ச்சி
    நீ வந்துவிட்டால்….!// ரொம்பவே அழகா இருந்தது இந்த வரியை படித்துவிட்டு அந்த புகைப்படத்தை பார்க்கும் போது…….

  12. s maharajan s maharajan says:

    சுந்தர் ஜி அருமையான படங்கள் தலைவரை எப்படி பார்க்கும் போது எவ்வளவு சந்தோசம் தெரியுமா? அருமையான வரிகளோடு ஒவ்வரு படங்களோடும் அருமை.
    அன்புடன்
    சு மகாராஜன்
    நெல்லை மாவட்ட ரஜினிகாந்த
    தன்னார்வ ரத்ததான மன்றம்.

  13. Ram Ram says:

    ஒவ்வொரு படமும் சூப்பர் சூப்பர் சூப்பர் :) வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. உங்கள் தமிழும் கலக்கல்

  14. Dinesh Dinesh says:

    Rajini fans alert: Sundarji this is to inform that Asianet TV is telecasting a show “Superstar’s Himalaya tour” programme at 1.30p.m. on Sunday 19th August, 2011. Ellorukum sollunga..

  15. vasanthan vasanthan says:

    படங்களும் அருமை (சிங்கத்த எப்படி எடுத்தாலும் அழகுதான் ) ,சுந்தரின் வரிகள் எல்லாமே ரசிகர்களின் இதய துடிப்பு …

  16. Arun Hosur Arun Hosur says:

    ரொம்ப சந்தோசமா இருக்கு தலைவரை இப்படி பாக்குறதுக்கு!! மனசு நெறஞ்சி இருக்கு.. கோடி நன்றிகள் சுந்தர் ஜி !!

  17. B. Kannan B. Kannan says:

    //மாலைகள் இடவேண்டாம்
    தங்க மகுடமும் தரவேண்டாம்
    தமிழ்த்தாய் நாடு தந்த அன்பு போதுமே //
    //ராணுவீரனான உன்னை பணக்காரனாக்கி
    அழகு பார்த்தவர்,
    காவல்காரனாக பார்க்க ஆசைப்பட்டபோது மட்டும்
    மறுத்துவிட்டாயே ஏன்?//
    //பார்வை திசை மாறினால்
    சரித்திரங்கள் மாறுமே தமிழகத்தின் நலன் ஏறுமே!//
    சுந்தர் மிக அருமையாக ஒவ்வொரு புகைபடத்தின் கீழும் வரிகளை சேர்த்துள்ளீர்கள்.. ஹாட்ஸ் ஆப்..
    //தன்னாலே வணங்குது ஊரு எங்க எஜமான்
    நடக்கையிலே //
    எஜமான் படத்தின் அந்த பாடலை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள்..

  18. sudhagar_us sudhagar_us says:

    தலைவா உங்கள நிரந்தரமா இந்த getup-ல பார்க்க தான் ஆசை படுறோம் புருஞ்சிகோங்க தலைவரே….. ஒரு மனுசனால ஒரு சபையே சந்தோசபடுதுனா நிச்சயமா அது சூப்பர் ஸ்டார் வந்தா மட்டும் தான்…!!!

  19. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    கலக்கலான படத் தொகுப்பு அதற்கு இணையான அனல் பறக்கும் அழகான , உண்மையான வரிகள்… சூப்பர்..

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ்.குரூப்.

  20. Ramarajan Ramarajan says:

    தலைவர நாள் fulla பதுகிடே இருக்கலாம் .
    சுந்தர் அண்ணா கலக்குங்க
    தலைவா இன்னும் 100 படம் எங்களுக்கு பண்ணுங்க

  21. kumaran kumaran says:

    தலைவர் வேஷ்டி மற்றும் pant இல் தோன்றுகிறாரே இரண்டும் வெவ்வேறு function ஆ ?

    —————————————-
    First day and next day.
    - Sundar

  22. Guhan Guhan says:

    ஹாய் சுந்தர்ஜி,
    ஒவ்வொரு போட்டோவிற்கும் உங்கள் கமெண்ட் சூப்பர்.

    வாழ்க வளமுடன்…

  23. R.Gopi R.Gopi says:

    //சமயம் உங்களது கமெண்ட்டுகளை பார்க்கும்போது நீங்கள் உண்மையில் ஒரு ரஜினி ரசிகர் தானா என்ற கேள்வி எனக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.//

    @ராஜா…..

    -******************

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா….. கலக்கிட்டீங்க…. நீங்க தான் அவரின் ஒரே “ரசிகர்”…..

    • RAJA RAJA says:

      @R.கோபி

      இதில் சிரிக்க ஒன்னும் இல்லை ,அதே போல் உங்களது பதிவில் இருந்தே தெரிகிறது உங்கள மன நிலையை பற்றி.

      தலைவருக்கு எவ்வளவோ கோடான கோடி ரசிகர்கள் இருகிறார்கள் ,அதில் சில பேருக்கு பல மாற்று கருத்து இருக்கலாம். அதையும் மீறி நம்மை ஒன்றிணைப்பது ரஜினிகாந்த் என்ற மந்திர சொல் மட்டும் தான். தலைவரை காண மாட்டோமா என்று அனு தினமும் ஏங்கி கிடக்கும் பல ரசிகர்களுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சயில் தலைவர் வருவது தான் மிகவும் சந்தோஷம். அதே போல் அங்கு பார்க்க முடியாதவர்களுக்கு இந்த மாதிரி புகைப்படம். ஒரு சுவாரஸ்யத்துக்கு தான் சுந்தர் மேற்படி ஃபோட்டோ கமெண்ட்டுகளை அளித்த்ருப்பரேயன்ரி அதில் பெரிய நோக்கம் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. பார்த்தால் சந்தோஷம் தான் வர வேண்டுமே தவிர உங்களை போல் குசும்பு பேச்சு எந்த ரசிகர்களுக்கும் வராது. அதனால் தான் கேட்டேன் நீங்கள் உண்மையான ரசிகர் தானா என்று.

  24. R.Gopi R.Gopi says:

    //பாட்சா வெள்ளிவிழாவில் ஆர்.எம்.வி.ய மேடையில வச்சுக்கிட்டு மணிரத்னம் வீட்டுல போட்ட குண்டு பத்தி பேசி பத்த வச்சாரே பரட்டை!! //

    @ ராஜா - இது உண்மை தானே…. அதனாலேயே ஆர்.எம்.வி. அவர்களின் பதவி கூட பறி போனது… இது நடந்த ஒரு நிகழ்வு தானென்று சிறு குழந்தைக்கு கூட தெரியும்….

    இன்னொரு விஷயம்…. நான் ரஜினி ரசிகனா இல்லையா என்று யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை….

    இந்த விஷயத்தில் என் கமெண்ட் இதோடு கதம் கதம்… நீங்க என்ன வேண்டுமானாலும் இனி பேசலாம்… ஒரு தொல்லையும் இருக்காது….

    • RAJA RAJA says:

      @R.கோபி

      அது உண்மையில்லை என்று யாருமே சொல்ல வில்லை ஆனால் அதை இங்கு இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்பது தான் என் கேள்வி ,தலைவர் உடல் நலம் குன்றி இருந்த போது அவரை பார்க்க மாட்டோமா என்று காத்துகொண்டு இருந்தோம் அப்படி இருக்கும் போது தலைவர் இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வரும் போது அதை பார்த்து நாம் சந்தோஷ பட வேண்டுமே ஒழிய சம்பந்தமே இல்லாமல் பல வருடங்களுக்கு முன் நடந்த விஷயத்தை இதோடு முடித்து போட்டு குசும்பு பேச்சு கூடாது என்ற தான் கூறினேனே ஒழிய யார் மனதையும் காய படுத்தவோ வேற எந்த நோக்கமோ அல்ல .தாங்கள் போட்ட கமெண்ட் கு தான் பதில் கூறினேன் அதே போல் யாரும் யாருக்கும் தான் இன்னாருடைய ரசிகர் என்று புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை

      இதோடு என் கமெண்டும் இந்த விசயத்தில் கதம் கதம்

  25. k.rajiniprabhu k.rajiniprabhu says:

    சூப்பர் ஸ்டார்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates