You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘சிவாஜி’ 3D செய்யப்பட்ட காட்சிகள் - Excl.Pics & ‘சிவாஜி’ படைத்த பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள்!

‘சிவாஜி’ திரைப்படத்தின் 3D செய்யப்பட்ட காட்சிகளின் பிரத்யேக புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளன. புகைப்படங்களை ஆப்டிமைஸ் செய்யாது HI-RESOLUTION இல் நீங்கள பார்த்து ரசிக்கவென்றே அப்படியே இணைத்துள்ளேன். கூடவே படத்தின் சாதனைத் துளிகளையும் தந்துள்ளேன்.

தமிழ் திரையுலகில் அதிக பட்ச பாக்ஸ் ஆபீஸ் வசூல் மற்றும் RUNNING சாதனைகளை நிகழ்த்தியவை சூப்பர் ஸ்டாரின் படங்களே. அவரது ஒவ்வொரு படத்தின் சாதனையையும் அவரின் படம் தான் அடுத்து வந்து அந்தந்த காலகட்டங்களில் முறியடிக்கும்.

பாட்ஷாவின் சாதனையை முத்து முறியடித்தது. முத்துவின் சாதனையை அருணாச்சலம் உடைத்தது. அடுத்து வந்த படையப்பாவின் சாதனையை சந்திரமுகி முறியடித்தது. சந்திரமுகியின் சாதனையை சிவாஜி முறியடித்தது. சிவாஜியின் சாதனையை எந்திரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

சிவாஜி படைத்த பாக்ஸ் ஆபீஸ் சாதனைத் துளிகளை பார்ப்போம்.

2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி ரிலீசான ‘சிவாஜி’ திரைப்படம் தமிழ் திரையுலகில் வரலாற்று காணாத ஒப்பனிங்கை பெற்று உலகம் முழக்க பாக்ஸ் ஆபீசை அதிர வைத்தது. படம் வெளியாக 5 ஆண்டுகள் கழிந்துவிட்ட சூழலில் செப்டம்பர் மாதம் இதன் 3D பதிப்பு வெளியாகவிருக்கிறது.

* 1000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசான முதல் திரைப்படம் சிவாஜி தான்.

* சென்னையில் மட்டும் 16 தியேட்டர்களுக்கு மேல் ரிலீசாகி, அதில் 13 தியேட்டர்களில் 50 நாள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* மதுரையில் முதன் முறையாக 13 தியேட்டர்களில் ரிலீசாகி அதில் 6 தியேட்டர்களில் 50 நாள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* திருச்சியில் ரிலீசான அனைத்து சென்டர்களிலும் 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* வேலூரில் 5 தியேட்டர்களில் ரிலீசாகி அதில் 3 தியேட்டர்களில் 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* கோவை மாவட்டத்தில் முதன் முறையாக 54 தியேட்டர்களில் ரிலீசாகி அதில் 39 தியேட்டர்களில் 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* திருப்பூரில் ரிலீசான (8) அனைத்து சென்டர்களிலும் 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் தலா 2 மற்றும் 3 திரையரங்குகளில் ரிலீசாகி 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* சேலம் நகரில் 7 தியேட்டர்களில் ரிலீசாகி அதில் 4 தியேட்டர்களில் 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* வடசென்னையில் ஒரே நேரத்தில் இரண்டு திரையரங்கில் ரிலீசாகி இரண்டிலும் 50 நாட்கள் கண்ட ஒரே படம் சிவாஜி.

* சென்னை மாயாஜால் திரையரங்கில் முதல் இரு வாரங்களில் மொத்தம் 350 ஹவுஸ்புல் காட்சிகள் கண்ட முதல் படம் சிவாஜி.

ஆந்திராவைப் பொறுத்தவரை

* 207 திரையரங்குகளில் 50 நாட்கள்
* 140 திரையரங்குகளில் 75 நாட்கள்
* 13 திரையரங்குகளில் 100 நாட்கள்

* ஹைதராபாத்தில் மட்டுமே 40 திரையரங்குகளில் ரிலீசாகி சாதானை படைத்தது.

அது மட்டுமா,

* மலேசியாவில் முதன்முறையாக 76 திரையரங்குகளில் ரிலீசான படம் சிவாஜி.

* UK TOP 10 க்குள் நுழைந்த முதல் தமிழ் படம்

* 4K Resolution இல் ப்ராசஸ் செய்யப்பட்ட முதல் தமிழ் படம்

* 80 கோடிகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட முதல் தமிழ் படம்

* முதன்முறையாக சென்னை விநியோக உரிமை அதிகபட்ச தொகையான 6.5 கோடிக்கு பெறப்பட்டது. (இரு மடங்கு வசூல் செய்தது).

* பிரிட்டனில் ஒரு வாரத்தில் 7000 பவுண்டுகள் வசூலித்த முதல் படம் சிவாஜி.

* 4 சென்டர்களில் வெள்ளிவிழா கண்டது.

* மும்பையில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

* சிவாஜி திரைப்படம் இதுவரை 25 விருதுகளுக்கு மேல் பல்வேறு துறைகளுக்காக குவித்துள்ளது.

* மொத்தம் 101 திரையரங்குகளில் 100 நாட்கள் கண்டது.

*  2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான BUSINESS TODAY இதழின் கணிப்புப்படி சிவாஜியின் மொத்த வசூல் 350 கோடிகளுக்கும் மேல்.

Note : மேற்கூறியுள்ள பாயிண்ட்டுகள் சிவாஜியின் சாதனை சமுத்திரத்தில் சில துளிகள் தான். முழுவதையும் கூற ஒரு பதிவு போதாது.

[END]

14 Responses to “‘சிவாஜி’ 3D செய்யப்பட்ட காட்சிகள் - Excl.Pics & ‘சிவாஜி’ படைத்த பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள்!”

  1. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    அடேங்கப்பா இவ்வளவு சாதனைகளா?

    சுந்தர் நீங்கள் மேலே கொடுத்த சில துளிகளே இவளவு இருக்கிறதே இன்னும் ஒட்டு மொத்த சாதனைகளை கூற கண்டிப்பாக இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் தேவை படும்.

    இப்போதிருக்கும் இளம் நடிகர்களில் (சிலர்) தலைவரின் சாதனையை முறி அடித்துவிட்டதாக கூறி கொள்கிறார்களே அவர்கள் தான் முதலில் இந்த பதிவை படிக்க வேண்டும்.

    அப்பொழுதாவது திருந்துவார்களா அந்த செத்த குருவியும், சகுனியும்?

    விரைவில் சந்திப்போம் சிவாஜி அதிரடியில்….

    என்றும் தலைவர் பக்தன்
    விஜய்

  2. harisivaji harisivaji says:

    மேற்கூறியுள்ள பாயிண்ட்டுகள் சிவாஜியின் சாதனை சமுத்திரத்தில் சில துளிகள் தான். முழுவதையும் கூற ஒரு பதிவு போதாது.///
    வெளிவந்த சாதனைகள் கை அளவு வெளியில் தெரியாதது கடலவு

  3. Ashwin Ashwin says:

    சும்மா அதிறிசில்ல. மறுபடியும் அதிறுமில்ல.

  4. senthil senthil says:

    விரைவில் சந்திப்போம் சிவாஜி அதிரடியில்….
    என்றும் தலைவர் பக்தன்
    senthil

  5. RAJA RAJA says:

    தலைவா கலக்குங்க தலைவா இந்த படத்தோடு தங்கள் படத்தை வெளியிட்டு நாங்கள் சிவாஜி திரைபடத்தின் சாதனையை முறி அடித்து விட்டோம் என்று யாராவது தம்பட்டம் அடித்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை

  6. Naveen Naveen says:

    Hi Sundar, u forgot to mention the biggest achievement of sivaji:the boss “1st Tamil movie ran for 100 days concsecutively in Toronto, Canada”. How can u ignore this:(!?

    —————————
    அறியாப் பையன் ஏதோ தெரியாம பண்ணிட்டேன். மன்னிச்சிடுங்க சார்.
    - சுந்தர்

  7. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    It could have been nice if you scan and upate the news paper cutting which was done by you at the appropriate time of 50, 100 & 175 days. Because we don’t need to talk about Thalaivar’s historical achiivements and the paper cutting has more visibility. Hope you have not mistaken. Thanks a ton for summarising all memorable and unbreakable records set by Thalaivar.

    ————————————————————
    Actually my intention was not to speak Sivaji records. Because it is a big work. My aim was just to showcase the Sivaji 3D scene photographs. Rather than posting simply the photographs i decided to put some records.
    that’s it.
    - Sundar

  8. kumaran kumaran says:

    தமிழகம் அதிரபோகும் நாள் செப்டம்பர் -?

  9. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    சொன்ன சாதனைகள் கையளவு மட்டும் தான்… இன்னும் சொல்வதற்கு கடலளவு சாதனைகள் உள்ளது.. பட்டிய கிளபிடீங்க சுந்தர் அண்ணா..

    என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ்.குரூப்..

  10. Ramarajan Ramarajan says:

    தலைவரை 3D இல் பார்க்க காத்திருக்கிறேன்

  11. R.Gopi R.Gopi says:

    //* பிரிட்டனில் ஒரு வாரத்தில் 7000 பவுண்டுகள் வசூலித்த முதல் படம் சிவாஜி.//

    Sivaji – The Boss’has debuted at No. 9 position. In its opening weekend, the film has collected £ 167,607 [approx. Rs. 1.36 crores] from 12 screens, with the per screen average working out to £ 13,967.

  12. vasantan vasantan says:

    தகவல் அனைதும் சூப்பர் ,சுவிசில் 50 நாள் ஓடிய முதல் படம் .,அதன் பிறகு என்திரன்தன் 50 நாள் ஓடிய கடைசி படம் ,..

  13. murattukkaalai murattukkaalai says:

    தலைவர் முத்தூக்காளைடா..

  14. r.muthu r.muthu says:

    திருநெல்வேலி சிட்டி இல் மூன்று திரை அரங்குகளில் ரீலீஸ் ஆகி மூன்றிலும் 100 நாட்கள் கண்ட ஒரே படம் ஒரு திரை அரங்கில் ( PVT ) 153 நாட்கள்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates