You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘கோச்சடையான்’ இசை உரிமையை தட்டிச் சென்ற சோனி மியூசிக் நிறுவனம் கூறுவதென்ன?

ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘கோச்சடையான்’ ஆடியோவின் உரிமையை சோனி நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. (இது தொடர்பாக கடந்த சில நாட்கள் முன்பாகவே நமது டுவிட்டரில் தெரிவித்திருந்தோம்.).

உலகம் முழுதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படத்தின் ஆடியோ உரிமையை பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்

இந்த டீல் குறித்து சோனி மியூசிக் நிறுவனத்தின் மார்கெடிங் பிரிவு இணை இயக்குனர் அஷோக் பர்வானி கூறுகையில் : “தென்னிந்தியா மட்டுமல்ல… உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படத்தின் இசை உரிமையை பெற்றிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். படு ரகளையான ஒரு நட்சத்திர பட்டாளத்துடன், இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் உருவாகியிருக்கும் கோச்சடையான் நிச்சயம் ஒரு தலைசிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.”

இந்த ஒரு வித்தியாசமான அதே சமயம் தனித்துவம் பெற்ற ஒரு படமாகும். இந்த படத்தின் இசையை இன்றைய தலைமுறையினரிடமும், பரந்து விரிந்துள்ள ரசிகர்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க எங்களால் ஆன புதுப்புது உத்திகளை கையாளவிருக்கிறோம்.

விக்ரம் சிம்ஹா என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ‘கோச்சடையான்’ ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஜப்பான், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இதனிடையே ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு பணிகளில் இயக்குனர் சௌந்தர்யா தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்ட ‘கோச்சடையான்’ முழு மூச்சில் இறங்கியுள்ளது. ஜப்பானில் இசை வெளியீடு நடைபெறவுள்ள அரங்கும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

விரைவில் இடமும் தேதியும் அறிவிக்கப்படும்.

What Sony Music says on bagging Kochadaiyaan audio rights?

Sony Music Entertainment has acquired the music rights of superstar Rajinikanth starrer “Kochadaiyaan”, an upcoming Tamil period film.

Directed by Soundarya R Ashwin, the films also stars Deepika Padukone, Shobana, Rukmini Vijayakumar, Jackie Shroff among others.

“We are extremely excited to be associated with one of the biggest projects that not only appeals to the audiences in the south but to fans all over the world. With such an incredible star cast and India’s best music director, the movie positions itself to be a wholesome entertainer,” said Ashok Parwani Associate Director — Marketing at Sony Music Entertainment.

“This is a very special project for us and we will weave in innovative marketing elements into the campaign to connect with the youth and the fans at large,” he added.

“Kochadaiyaan” is shot with motion capture in 3D and the music is composed by AR Rahman. The film will be dubbed in Telugu as Vikrama Simha and will also be released in Hindi, Malayalam, Japanese and English.

“Kochadaiyaan” is slated to hit theatres on Rajinikanth’s birthday on December 12.

Courtesy : The Hindu

[END]

7 Responses to “‘கோச்சடையான்’ இசை உரிமையை தட்டிச் சென்ற சோனி மியூசிக் நிறுவனம் கூறுவதென்ன?”

 1. R.Ramarajan- Madurai R.Ramarajan- Madurai says:

  ENTHIRAN audio sales a beat panna KOCHADAIYAAN ready a irukar

 2. kumaran kumaran says:

  தலைவர் மார்க்கெட் உலகம் முழுவதும் என்பதால், கோச்சடையன் சாதனை படைக்கும்

 3. prakash prakash says:

  Japan audio release konjam over a irrukku..

 4. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  தகவல்களுக்கு நன்றி…

  கோச்சடையன் ஆடியோ ரிலீஸ் பற்றி எதாவது தகவல் உண்டா?

  ஜப்பானில் ரிலீஸ் என்று தெரியும் butஎப்போது ஆடியோ ரிலீஸ் & சிவாஜி 3d ரிலீஸ் தேதி முடிவாகி விட்டதா?

  சிவாஜி 3d முதல் நாள் நம் தள வாசகர்கள் அனைவரும் ஒன்றாக பார்க்க முடியுமா?

  என்றும் தலைவர் பக்தன்
  விஜய்

 5. raja raja says:

  தலைவா காத்து கொண்டு இருக்கிறோம் ஆடியோ வெளியீட்டிற்காக

 6. B. Kannan B. Kannan says:

  ஒரு சில தளங்களில் நம் சிவாஜி 3D படம் தள்ளி போவதாக சொல்கிறதே உண்மையா சுந்தர்?
  கோச்சடையான் ஆடியோ ரிலீஸ் தேதி பற்றி எதுவும் தகவல் உள்ளதா?

  ———————————————————————————-
  அதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.
  கோச்சடையான் இசை வெளியீடு பற்றி சொல்லி சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. தெரிந்தால் சொல்லியிருக்கமாட்டேனா.
  - சுந்தர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates