You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 72: நண்பர் உடல்நிலை பற்றி விசாரித்து டிப்ஸ் வழங்கும் ரஜினி & “நான் ரஜினி ரசிகன்!” பெருமையுடன் கூறும் வெளிநாட்டு தூதர்!

(நமது தளத்தில் நாம் அளிக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த ஒரு காலகட்டத்தில், சூப்பர் ஸ்டாரை பற்றி சிறிய சிறிய செய்திகளை ஒரு தனிப் பதிவாக போட முடியாத சூழல் நிலவியது. ஆனால் எக்காரணத்தை கொண்டும் அந்த செய்திகளை நீங்கள் தவறவிட்டுவிடக்கூடாது என்கிற நோக்கில் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரே ஸ்பெஷல் பதிவாக தரும் நோக்கில் இந்த பகுதி தொடங்கப்பட்டது.

இந்த TIDBITS பகுதி விரைவில் நிறுத்தப்படவிருக்கிறது. உங்கள் மேலான ஆதரவிற்கு என்றென்றும் நன்றி!)

1) “நான் ரஜினி ரசிகன்!” - இந்தியாவுக்கான துருக்கி தூதர் பெருமிதம்!

இந்தியாவின் கலாச்சாரம், மிக செழிப்பானது… பரந்து விரிந்தது. அது பற்றி எனக்கு முழுமையாக தெரியும் என்று சொன்னால் அது ஜஸ்ட் நடிப்பே…. என்று கூறுகிறார் இந்தியாவுக்காக துருக்கித் தூதர் புராக் அக்கபர். கடந்த பல ஆண்டுகளாக துருக்கித் தூதராக பல்வேறு நாடுகளில் பணியாற்றியிருக்கும் புராக் அக்கபர், இந்தியாவுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.

பயணத்தில் மிகவும் விருப்பமுள்ள இவர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என ஒரு பெரிய ரவுண்டே அடித்துவிட்டார். “ஒரு தூதராக பல்வேறு தொழில் துறை பிரமுகர்களுடன் பேசுவது மிகவும் முக்கியம். அதே சமயம், அது போன்ற சந்தர்ப்பங்களில் சுற்றிப் பார்ப்பதையும் நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். தெற்கே அனைத்து முக்கிய இடங்களுக்கும் சென்றாகிவிட்டது. தற்போது வடகிழக்கு இந்தியா செல்லவிருக்கிறேன்.”

தென்னிந்தியாவை சுற்றி பார்த்ததில் இவருக்கு மிகவும் பிடித்தது ஆந்திர தான். “ஹைதராபாத் சென்றிருந்தபோது, நிஜாம் குடுமபத்தின் பேரன், (நிஜாமின் கடைசி வாரிசு அவர்) நிஜாமின் தனிப்பட்ட மியூசியத்தை சுற்றி காண்பித்தார். அது மட்டுமல்ல துருக்கியிலும் அவர் பேசினால். காரணம், அவரின் தாயார் துருக்கியை சேர்ந்த வம்சாவளியில் வந்தவர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தியா சரியான உதாரணம் என்று கூறும், புராக் அக்கபர் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் என்கிறார்.

இந்தியா மட்டுமல்ல, இந்தியத் திரைப்படங்களும் மிகவும் பிடிக்குமாம் இவருக்கு. “நான் ரஜினியின் பல படங்களை பார்த்திருக்கிறேன். நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவருக்கு மட்டுமல்ல அவரது ஜோக்குகளுக்கும் தான்.” சிரித்துக்கொண்டே கூறுகிறார் புராக் அக்கபர்.

(அப்போ துருக்கி மொழியில கூட கோச்சடையானை ரிலீஸ் பண்ணிடலாம்னு சொல்லுங்க!)

2) “அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வியே தேவை இல்லை…” - அஞ்சலி

தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. (ஹி..ஹி..!).

பணம் வந்தாப் போதும் என்று கண்ட கண்ட படங்ளை சகட்டுமேனிக்கு ஒப்புக்கொள்ளும் நடிகைகளுக்கு மத்தியில், இவர் சற்று வித்தியாசமானவர். தனது காரகடருக்கு கொஞ்சமாவது வெயிட் இருந்தால் தான் படங்ளை ஒப்புக்கொள்கிறார்.

Slow and steady wins the race என்று சொல்வார்கள் இல்லையா, அந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அஞ்சலிக்கு பொருந்தும். ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி ‘கலகலப்பு @ மசாலா கஃபே’ வரை சுமார் 20 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார்.

தற்போது சுந்தர்.சி. டைரக்ஷனில் விஷால் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.’ படத்தில் நடித்துவருகிறார்.

விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

கேள்வி : தமிழ்ல எல்லாப் படங்களும் பார்ப்பீங்களா? தமிழ் சினிமாவுல அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?

பதில் : அடுத்த சூப்பர் ஸ்டாரா? (ஜெர்க் ஆகிறார்). ரஜினி சார் இருக்குற வரைக்கும் யாரும் அவரை அடிச்சிக்க முடியாதே. அப்புறம் யார் வருவாங்கன்னு இன்னொரு பேட்டியில வேண்ணா யோசிச்சு சொல்றேனே ப்ளீஸ்….

(அந்த பேட்டி எனக்கு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும் அஞ்சலி. ஹி..ஹி…!)

3) நண்பர் உடல்நிலை - அக்கறையுடன் விசாரித்து டிப்ஸ் வழங்கும் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பெரும்பாலும் பத்திரிக்கை பேட்டிகளை தவிர்க்கும் ரஜினி, சத்ருகன் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு பிரபல பாலிவுட் சினிமா இதழுக்கு 2010 ஆம் ஆண்டு இறுதியில் பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவு சத்ருகன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் ரஜினி.

சென்ற ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரது துணைவியார லதா ரஜினியை அவ்வப்போது தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வந்தார் சத்ருகன் சின்ஹா.

சமீபத்தில் சத்ருகன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ரஜினி தனது அனுபவத்திலிருந்து அவருக்கு உடல் நலத்தை பேணுவது, சரியான டயட்டை சாப்பிடுவது குறித்து பல டிப்ஸ்களை ரஜினி அளித்து வருகிறாராம். சத்ருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது மனைவியை தொடர்புகொண்டு அவரது உடல்நிலை முன்னேற்றம் குரித்ஹ்டு அக்கறையுடன் கேட்டபடி இருந்தாராம் ரஜினி. ஜாதகப்படி இருவரும் ஒரே ராசியை சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விரைவில் ரஜினி தனது நண்பரை சந்திக்க மும்பை செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

(நம்ம அடுத்த படத்துல ஒரு சின்ன ரோல் அவரை பண்ணச் சொல்லுங்க தலைவா!)

4) “கோச்சடையானில் எனக்கு சிறிய வேடம் தான்” - ஷோபனா ஏக்கம்!

அனைவரது கவனத்தையும் எங்கு சென்றாலும் ஈர்த்துவருகிறார் கோச்சடையானில் நடித்து வரும் ஷோபனா. இவர் சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே சிவா, தளபதி உள்ளிட்ட படங்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கொச்சிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த ஷோபனாவை செய்தியாளர்கள் மடக்கி பேசியபோது…

“நீங்க என்ன ரஜினி ரசிகரா? அவ்ளோ கரெக்டா கோச்சடையான் பத்தி கேக்குறீங்க….?” (சிரிக்கிறார்)

“நம்மோடது சும்மா சின்ன காரக்டர் தான். ஜஸ்ட் கெஸ்ட் அப்பியரன்ஸ் தான். ம்ம்…. தளபதி படத்துல நடிச்சதை பத்தி சொல்லனும்னா …. ரஜினி சார் தான் என் முழுமுதல் ஹீரோ. அதுனால தளபதியில இருந்து கோச்சடையான் வரைக்கும் அப்படின்னெல்லாம் நான் பில்டப் கொடுக்க விரும்பலே. ஏன்னா, கோச்சடையான் படத்துல எனக்கு ரஜினி சார் கூட ஒண்ணா சீன் எதுவும் கிடையாது.” குரலில் கலவையான ஒரு உணர்ச்சி.

எனக்கு படங்களில் நடிக்க நிறைய ஆஃபர்ஸ் வருது. ஆனா என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டபடியால் இப்போதைக்கு படங்ளை ஒப்புக்கொள்ள ரொம்பவும் யோசிக்கவேண்டியுள்ளது.

(ஷோபனா சூப்பர் ஸ்டாரோட நடிச்ச தளபதி ‘யமுனை ஆற்றிலே’ ஸாங் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க! One of my most favourite song!)

5) சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் என்ன வித்தியாசம்?

ஆனந்த விகடனில் எக்குத் தப்பான கேள்வி-பதில் பகுதி ஒன்றில் டான்ஸ் மாஸ்டர் கலா கூறியிருக்கும் கேள்வி-பதிலிலிருந்து….

சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் என்ன வித்தியாசம்?

கலா : (சின்னதாக குழம்புகிறார்) “ஐயோ… அது எப்டிங்க… ரெண்டு போரையும் எப்படி கம்பேர் பண்ணலாம்? சூப்பர் ஸ்டார் கஷ்டப்பட்டு ஃபீல்டுக்கு வந்தவர். பவர் ஸ்டார் ஃபீல்டுக்கு வந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறவர். எப்படி….?

சும்மா கிழிகிழின்னு கிழிச்சுட்டேடா… அப்படின்னா என்னங்க?

(தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலா அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை இது!)

கலா : “அது ரஜினி சார் டயலாக். அவர்கிட்டே இருந்து பிருந்தா காப்பி அடிச்சா. நான் அவங்ககிட்டே இருந்து பிடிச்சிட்டேன். அப்படின்னா எதிர்பார்த்ததைவிட அதிகமா ஆடிட்டாங்கன்னு அர்த்தம்”

(கிழிகிழின்னு கிழிச்சுடீங்க மேடம்!)

6) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்….

விகடனில் ‘நானே கேள்வி - நானே பதில்’ பகுதியில் படித்த சுவாரஸ்யமான ஒன்று….

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்று எம்.ஜி.ஆர். சினிமாவில் பாடியதை யாராவது அறிந்துள்ளாரா? (அல்லிராஜ், கோவை )

பதில் : “நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றாக அறிந்துள்ளார். நிரந்தர முதல்வர், நிரந்தரத் தலைவர், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று நிரந்தரம் பற்றி ஒப்பிக்கப்படும் இந்த காலத்தில் ரஜினி தான் கலந்துகொண்ட ‘கும்கி’ பட விழாவில் இப்படி சொன்னார்…”

“நோய் எதிர்ப்புச் சக்தி இன்னும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதுவரை பொது நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். மூளையை மட்டும் பயன்படுத்துவதற்கு நான் டைரக்டரோ எழுத்தாளரோ அல்ல. நான் நடிகன். எனக்கு உடம்பு வேலை செய்ய வேண்டும்.”

உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப பிடிச்ச வாத்தியார் பாட்டுங்க இது. இதைத் தவிர அவருக்கு வாத்தியார் பாட்டு இன்னொன்னு ரொம்ப பிடிக்கும். அது பத்தி அப்புறம் சொல்றேன்! அதுக்கு தனி பதிவே போடவேண்டியிருக்கும்! அந்தளவு டாப் டக்கர் பாட்டு அது!)

[END]

11 Responses to “Tidbits # 72: நண்பர் உடல்நிலை பற்றி விசாரித்து டிப்ஸ் வழங்கும் ரஜினி & “நான் ரஜினி ரசிகன்!” பெருமையுடன் கூறும் வெளிநாட்டு தூதர்!”

 1. Jegan Jegan says:

  Kili kilinu kilichitinga

 2. simple fan of Rajni! simple fan of Rajni! says:

  ஹலோ,
  சுந்தர் சார், என்ன சார்,இப்படி ஒரேயடியா இந்த பகுதியை நிறுத்திடுவேன்னு சொன்னா எப்படி அடிக்கடி இல்லைன்னாலும் மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் இந்த பகுதியை தரவேணும் இது பாயசத்துக்கு முந்திரி, ஏலம் மாதிரி.

 3. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

  மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
  மாலைகள் விழவேண்டும் – ஒரு
  மாசு குறையாத மன்னவன் இவனென்று
  போற்றிப் புகழ வேண்டும்

 4. kumaran kumaran says:

  தலைவர் அரசியலில் தான் ஆர்வம் இல்லை என்று தோன்றுகிறது, சினிமாவிலாவது நல்ல போட்டியில் இருக்க வேண்டும், சிவாஜி 3D ய் தீபாவளி race இல் விடவேண்டும்.

 5. raajesh tve raajesh tve says:

  சுந்தர் புள்ளி வைத்திவிட்டீர்கள். விரைவாக கோலத்தை முடித்துவிடுங்கள்.
  உங்கள் நலம் விரும்பி.
  raajesh tve

 6. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  I am sure that Deepika Padukone will be upset about seeing your comment on Anjali. Take care.

 7. raja raja says:

  என்னடா ரொம்ப நாலா ஆச்சே நம்ம சுந்தர் அஞ்சலி பத்தி எந்த செய்தியும் போடலியே நினைத்தேன் ,அவருக்கு ஏத்த மாதிரி மற்ற பத்திரிகைகளில் அஞ்சலியிடம் தலைவரை பற்றி கேள்வி கேட்டு விட்டார்கள் உடனே போட்டு விட்டார் வாழ்த்துக்கள் ஹி ஹி
  —————————————————————————————-
  சூப்பர் ஸ்டார் - தன் படங்களால் மற்றவர்களை சந்தோசபடுதுவார்

  பவர் ஸ்டார் - தன் (புகை) படங்களால் மற்றவர்களை சிரிக்க வைப்பார்

  ————————————————————————————-

 8. R.Gopi R.Gopi says:

  //(அந்த பேட்டி எனக்கு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும் அஞ்சலி. ஹி..ஹி…!)//

  ஏற்கனவே சுந்தர் சி….ன்னு சொன்னாய்ங்களே…!!! அது நீங்களா, இல்ல அவர் வேறயா?

  ———————————————————————————
  இந்த விஷயத்துல முழுத் தகுதி எனக்கு தான் இருக்குங்க. இதுல போட்டிக்கே இடமில்லே. :)
  - சுந்தர்

 9. harisivaji harisivaji says:

  நிறுத்தப்படும் என்ற செய்தி இடி போல இறங்குகிறது
  தலைவரை பற்றி எங்கு என்ன வந்தாலும் இங்கு வந்துவிடும் இதானால் நாங்க எதையும் ரொம்ப காலமாக மிஸ் பண்ணியதில்ல …கஷ்டமா தான் இருக்கு
  ஆனா அதுக்கு எதோ காரணம் இருக்கும்
  கடவுள் விருப்பம் அதுவே என்றால் நடக்கட்டும்

 10. B. Kannan B. Kannan says:

  கண்டிப்பாக நிறுத்தாதீர்கள் சுந்தர்..
  தலைவரின் எல்லா செய்தியும் இங்கு வருவது எங்கள் விருப்பம்.. Pl reconsider ur decision buddy..
  MGR அவர்களின் அந்த பாடல் இப்போதைய கால கட்டத்தில் தலைவரை தவிர வேறு யாருக்கும் மேட்ச் ஆகாது..
  அஞ்சலியையும் விட்டு வைக்க வில்லையா சுந்தர்!!!!!!!!!!!!!!!

  —————————————————————-
  Tidbits பகுதிக்கு நிறைய உழைக்கவேண்டியுள்ளது. ஆனால் அதற்கு வரவேற்பு நம் தளத்தில் (ஹிட்ஸ்) குறைவாகவே உள்ளது. அந்த நேரத்தில் நான் மூன்று நான்கு பதிவு எழுதிவிடுவேன். எனவே தான் Tidbits பகுதியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக சொன்னேன்.
  - சுந்தர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates